திங்கள், 28 மார்ச், 2011

குறுஞ்செய்திக் குறும்புகள்!


தேர்தல் களம்:

ஹூம் - நாம இலவசமா இதைத் தருகிறோம், அதைத் தருகிறோம் என்று கரடியாகக் கத்திக் கொண்டு இருக்கோம். ஆனால் - ஒரு பயலாவது வாயத் தொறந்து நான் இலவசமா வோட்டுப் போடுகிறேன் என்று சொல்றானா பாரு! இவங்களைத் திருத்தவே முடியாது! 

கிரிக்கட் களம்:

இதோ பாரு - இவன் பேரு ஓரம். ஆனால் பந்து போட்டா ஸ்டம்புக்கு நேரா போடுவான். இந்தியாவுல ஒருத்தன் இருக்கான் பாரு - அவன் பேரு நேரா. ஆனால் பந்து போட்டா ஓரமாப் போட்டு ஒய்ட் பால் ஆக்குவான்!
(நன்றி விசு. இந்த நன்றியை, உங்களுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியவருக்கு ஃபார்வர்ட் செய்துவிடுங்கள்!)

சினிமா களம்:

ஜெயலலிதா தலைமையிலான அ தி மு க அணிக்கு ஆதரவாக விஜயின் மக்கள் இயக்கம் பிரச்சாரம்.

ஜெய விஜயீ பவ(ர்)!

பதிவர் களம்:

'இட்லிவடை' இல் 'முக்கிய அறிவிப்பு' தொடர் பதிவில் "......இந்த வருடம் முட்டாள் தினம் ஏப்ரல் 13 அன்று தான் வருகிறது, நாங்கள் செய்த அறிவிப்பு சும்மா முன்னோட்டம் அவ்வளவு தான்........"

வாசகர் களம்:

(என்ன பார்க்கறீங்க? நீங்கதான் பின்னூட்டத்தில் ஏதாவது குறுஞ்செய்தி குறும்பு சொந்தமாகவோ சுட்டோ எழுதவேண்டும்!)
                           

14 கருத்துகள்:

 1. எங்கள் ப்லாக் - ஏப்ரல் ஒன்று முதல், உங்கள் ப்லாக் ஆகிறது. இலவசமாக வந்து பெற்று கொள்ளுங்கள். ஆனால், இன்ட்லியில் வோட்டு போட மறக்காதீர்கள் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறது.

  பதிலளிநீக்கு
 2. இனி எங்கள் ப்ளாகில் பின்னூட்டம் போட்டால் ஆளுக்கு ஒரு மடிக் கணிணி இலவசமாகத் தரப்படும்

  இப்படிக்கு
  எங்கள் ப்ளாக்

  பதிலளிநீக்கு
 3. எங்கள் பிளாகில் ஒரு ஓட்டு இட்டால் உங்கள் பிளாகில் 5 ஓட்டுகள் போடப்படும்!!

  பதிலளிநீக்கு
 4. நேரா னு பேரு..
  அவர் ஓடி வர்றதே 'கோணலாக' நல்லா பாருங்க தெரியும்..

  பதிலளிநீக்கு
 5. குரோம்பேட்டைக் குறும்பன்28 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:23

  கணினி மற்றும் இணையம் பயன் படுத்துபவர்கள் எல்லோருக்கும் இலவச பஸ் பாஸ்:-- கூகிள பஸ்! வாங்க! வாங்க!!

  பதிலளிநீக்கு
 6. middleclassmadhavi said...

  எங்கள் பிளாகில் ஒரு ஓட்டு இட்டால் உங்கள் பிளாகில் 5 ஓட்டுகள் போடப்படும்!!,..////


  இதுக்கு மேல வேணுமா.

  பதிலளிநீக்கு
 7. தவறாமல் படித்து பின்னூட்டமிடுபவர்களுக்கு கூகிள்பஸ் கூகிள் ஜெட்டாக மாற்றப்படும்

  பதிலளிநீக்கு
 8. நான் இரசித்த தேர்தல நகை..

  ஜெ சொல்கிறார்......

  கருணாநிதி பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்..

  ஏனென்றால் அது உங்களுடைய பணம் தான்!!

  பதிலளிநீக்கு
 9. இங்கே தரமான விலைக்கு நயமான ஓட்டுகள் விற்கப்படும்.
  ஏப்ரல் பதிமூன்றுக்குள் சீல்ட் டெண்டர்கள் வரவேற்கப்படுகின்றன. ;-))

  பதிலளிநீக்கு
 10. முனைவர் குணசீலன், நானும் ரசித்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. நல்ல பகிர்வு:)!

  பின்னூட்ட குறும்புகளும் அருமை!!

  பதிலளிநீக்கு
 12. எது சுலபம்ன்னு யோசிங்க.உங்க புளொக்கா,மடிக்கணணியா,
  5 ஓட்டா,இலவச பஸ் பாசா இல்ல கூகிள் ஜெட்டா.ஏப்ரல் 13 க்கு முன்னமே சொல்லிடுங்க !

  பதிலளிநீக்கு
 13. :))

  தேர்தல்களம் நல்ல நகைச்சுவை..!

  இலவசமா மிக்ஸி கிரைண்டர் தர்றாங்க சரி இதுனால கரண்டு பஞ்சம் ஏற்பட்டு மூணு மணி நேரம் கட் பண்ற கரண்ட் அஞ்சு மணி நேரம் கட் பண்ணுவானுங்கன்னு மக்கள் யோசிக்க மாட்டாங்களா?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!