வியாழன், 10 மார்ச், 2011

பெயர்க்காரணம்

Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்


நாங்க கொஞ்சம் வலைப் பயணம் செய்து, சில பதிவுகளைப் படித்துப் பார்த்தோம். பெயர்க்காரணம் என்ற தலைப்பில் சிலர் அவர்களுடைய இயற்பெயர் காரணம் எழுதியிருந்தார்கள். சிலர் அவர்களுடைய வலைப்பூ பெயர்க்காரணத்தை எழுதி இருந்தார்கள்.

ஆசிரியர்கள் பெயர்க்காரணம் பற்றி எழுதலாமா என்று கேட்டவுடன் ஐந்தில் மூன்று ஆசிரியர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டார்கள்.  எங்கள் கூட்டணியின் பெரும்பான்மை முடிவிற்கேற்ப கூட்டணி தர்மத்தைக் கருத்திற்கொண்டு, நாங்க வலைப்பூ பெயர்க்கான காரணத்தையே எழுதிவிடலாம் என்று முடிவு செய்தோம்.

தரக் குழுக்கள் (Quality Circles) பற்றி பெரும்பாலான வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். தெரிந்திருக்காவிட்டாலும், கூகிள் அடித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுகின்ற வாசகர்கள் எங்கள் ப்ளாக் ரசிகர் மன்றத்தில் அதிகம். வலை உலகில் நாங்கள் உருவாக்கிய தரக்குழு எங்கள் ஆசிரியர் குழு.
    
Team work என்பது எல்லா இடத்திலும் வெற்றி பெறுகின்ற சமாச்சாரம். தனிநபர் யத்தனங்களை விட ஒரு குழுவாக செயல் படுதல் பல வகைகளில் முன்னேற்றத்தை விரைவில் காண வழி வகுக்கும். இதை மனதில் கொண்டுதான், எங்கள் வலைப் பக்கத்திற்கு, எங்கள் Blog என்று பெயர் இட்டோம்.

ENGAL ஐந்தெழுத்து,
எங்கள் ஆசிரியர்கள் ஐவர்.
Engal Blog என்பதை சுருக்கமாக EB என்று சொன்னால் சந்தோசப் படுவார் ஓர் ஆசிரியர். Engal என்பதில் உள்ள Eng  என்ற எழுத்துக்களைப் பார்த்தே சந்தோசப் படுவார்கள் மேலும் இருவர். ENGAL என்பதில் உள்ள AL என்ற எழுத்துகளைப் பார்த்து சந்தோசப் படுவார் ஒருவர். இவர்கள் எல்லோரும் சந்தோசப் படுவதைப் பார்த்தே சந்தோசப் படுவார் மற்றொருவர்.  
      
ஒருவருடைய கருத்து, அதை மற்றவருடைய எழுத்தாக்கம், இன்னொருவரின் பட இணைப்பு, இன்னொரு ஆசிரியரின் உதவியால் வலையேற்றப் படுதல் - இப்படி அடிக்கடி நடக்கும் எங்கள் ப்ளாகில்.

எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவில் இருக்கின்ற ஐவரில் இருவர், அவர்கள் பெயர்களில் ஏற்கெனவே வலைப் பதிவுகள் வைத்திருக்கின்றார்கள். அந்தப் பதிவுகளில், யாராவது அழைத்தால், அவர்கள் தங்கள் வலைப்பதிவு அல்லது அவர்களுடைய பெயர்க் காரணத்தை ஒரு பதிவாகப் போடுவார்கள் என்று நினைக்கின்றோம். (ஆனா ஆடிக்கு ஒரு தடவை; அமாவாசைக்கு ஒரு தடவை பதிவு போடுகின்ற அந்த சோம்பேறிகளை நாங்க தொடர் பதிவுக்கு அழைப்பதாக இல்லை!)  

அப்போ இந்தத் தொடர் பதிவுக்கு யாரை அழைக்கின்றோம்? இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இடுகின்ற, இதுவரையிலும் பெயர்க்காரணம் பதிவு எழுதாத, முதல் பத்துப் பதிவர்களை, தொடர் பதிவிட அன்புடன் அழைக்கின்றோம்.
      

27 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. //இந்தப் பதிவிற்குப் பின்னூட்டம் இடுகின்ற, இதுவரையிலும் பெயர்க்காரணம் பதிவு எழுதாத, முதல் பத்துப் பதிவர்களை, தொடர் பதிவிட அன்புடன் அழைக்கின்றோம்.//

    நான் மறுபடி என்னோட வலைப்பூ பெயர்க் காரணம் எழுதவா ?
    (அதான் என்னோட இயற்பெயர் பத்தி ஏற்கனவே எழுதிட்டேனே ?)

    பதிலளிநீக்கு
  3. பெயர் காரணம் தெரிந்து கொண்டோம்.

    பதிலளிநீக்கு
  4. //ENGAL ஐந்தெழுத்து,
    எங்கள் ஆசிரியர்கள் ஐவர். //

    திமுக மூன்றெழுத்து; கடமை மூன்றெழுத்து ஞாபகம் வருது!! ;-))))

    (அது யாருப்பா அங்க, ஆட்சியும் மூன்றெழுத்துதான், ஊழலும் மூன்றெழுத்துதான்னு சொல்றது?)

    பதிலளிநீக்கு
  5. //முதல் பத்துப் பதிவர்களை//

    இப்படியெல்லாம் மிரட்டக் கூடாது:)! எனக்கு பாட்டியின் பெயர். மூன்று வார்த்தையில் முடிந்தது கதை.

    @ ஹுஸைனம்மா,
    உங்க பின்னூட்டம்:)))!, இத இத இதத்தான் இன்று வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  6. ENGAL ஐந்தெழுத்து,
    எங்கள் ஆசிரியர்கள் ஐவர்.
    Engal Blog என்பதை சுருக்கமாக EB என்று சொன்னால் சந்தோசப் படுவார் ஓர் ஆசிரியர். Engal என்பதில் உள்ள Eng என்ற எழுத்துக்களைப் பார்த்தே சந்தோசப் படுவார்கள் மேலும் இருவர். ENGAL என்பதில் உள்ள AL என்ற எழுத்துகளைப் பார்த்து சந்தோசப் படுவார் ஒருவர். இவர்கள் எல்லோரும் சந்தோசப் படுவதைப் பார்த்தே சந்தோசப் படுவார் மற்றொருவர்.


    .......ENGAL சந்தோஷப்படுவார்கள். ENGALAI சந்தோஷமாக குழப்பி விட்டீங்க . ஹி,ஹி,ஹி,ஹி...

    பதிலளிநீக்கு
  7. //ராமலக்ஷ்மி said...
    @ ஹுஸைனம்மா,
    உங்க பின்னூட்டம்:)))!,//

    அக்கா, அது வேறொண்ணுமில்லை, வீட்டில அப்படியே எது சொன்னாலும் எடக்காப் பதில் பேசியே பழக்கமாகிடுச்சா, அதான்!! ;-))) ஆனா பாருங்க, நீங்க ரசிக்கிறீங்க, என்னவர் முறைக்கிறார்!!

    :-)))))

    பதிலளிநீக்கு
  8. நான் சோம்பேறியா? கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

    பதிலளிநீக்கு
  9. தனிப பதிவு எதுவும் போடமாட்டேன். இங்கேயே சொல்லிவிடுகிறேன். என்னுடைய பெற்றோருக்கு டபிள் டிஜிட் எண்ணிக்கையில் குழந்தைகள். கோத்திரப் பெயர் வைத்தால், அதற்குப் பிறகு குழந்தைகள் பிறக்காது என்று யாரோ சொல்லியதால், கௌதம கோத்திரத்தில் பிறந்த எனக்கு கௌதமன் என்று பெயரிட்டார்கள்.
    (தொடரும்)

    பதிலளிநீக்கு
  10. குரோம்பேட்டைக் குறும்பன்10 மார்ச், 2011 அன்று PM 3:55

    KAdaindhetuththa SUththa SOmBeriA NAan?

    பதிலளிநீக்கு
  11. ஹையா நான் பன்னிரெண்டு.. இல்லை பதிமூணு.. ஆனா யாரோ என் ப்லாக்கில வந்து இதை எழுத கூப்பிட்டாங்களே போய் பார்க்கணும்.. கருனா .. தெரியலை;;:))

    பதிலளிநீக்கு
  12. //KAdaindhetuththa SUththa SOmBeriA NAan?//

    Kadaintheduththa Sudhdha SOmBeri Agiya NAm

    என்றிருந்தால் உங்களை இன்னும் கொஞ்சம் நன்றாகத் தெரிந்து கொண்டிருப்போமோ ?

    பதிலளிநீக்கு
  13. கோத்திரப் பெயர்களை வைப்பது சாதாரண விஷயமென நினைத்தேன்.
    இப்படிக்கூட உண்டா, நன்றி கௌதமன் சார்.

    உதாரணம் : பரத்வாஜ், காஷ்யப், விச்வாமிச்த்ரா, சாண்டில்ய, கௌஷிக், கெளதம், பார்கவ்,

    பதிலளிநீக்கு
  14. சோம்பேறின்னு சொன்னதால இரண்டு......ஓடி வந்து பெயர்க்காரணம் சொல்லிட்டாங்க.
    இன்னும் 3 பேர் வரணும் !

    பதிலளிநீக்கு
  15. kggouthaman said...
    (தொடரும்)

    தொடரும் !!!

    மேட்டர் ஓவர்.. இனிமே உங்களுக்கு என்ன இருக்கு இந்த தலைப்புல தொடர்ந்து எழுதுறதுக்கு ?

    பதிலளிநீக்கு
  16. :-) @கவுதமன், உங்க பெயர்க்காரணம் அருமை:-)

    பதிலளிநீக்கு
  17. //kggouthaman said... என்னுடைய பெற்றோருக்கு டபிள் டிஜிட் எண்ணிக்கையில் குழந்தைகள்.//

    என்னை தப்பாய் நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் -

    கௌதமன் சார், உங்கள் அப்பா டீச்சரா ?

    ஐயா ஜாலி, நான் பத்தாவது பதிவர்க்கு மேல் தான் !!

    பதிலளிநீக்கு
  18. ஏன் 'தொடரும்' என்று போட்டேன் என்றால், எனக்குப் பிறகு ஒரு தங்கை, ஒரு தம்பி!
    சாய் சார்! என்னுடைய அப்பா டீச்சர் இல்லை; ஆனால் அவருடைய நான்கு சகோதரர்களில் இருவர் பள்ளிக்கூட வாத்தியார்கள். (ஆனால் அவர்களுக்கு சிங்கிள் டிஜிட் குழந்தைகள்தான்!)

    பதிலளிநீக்கு
  19. பின்னூட்டமிட்ட பதிவர்கள்:
    1) Madhavan.
    2) Thamizh Udhayam.
    3) L K.
    4) Hussainamma.
    5) Ramalakshmi.
    6) Chitra.
    7) Kasu Sobhana.
    8) K G Gouthaman.
    9) Thenammai Lekshmanan.
    10) Hema.
    11) Gopi Ramamurthi.
    12) Sairam Gopalan.
    இவர்களில் கோபி இராமமூர்த்தி எங்களை இந்தத் தொடர் பதிவுக்கு அழைத்தவர். பெயர்க்காரணம் பதிவிட்டுவிட்டார்.
    மாதவன் ஏற்கெனவே பெயர் காரணம் பதிவு போட்டுவிட்டதாகச் சொல்கிறார், சுட்டியும் கொடுத்துள்ளார்.
    ராமலக்ஷ்மி, கௌதமன் ஆகியோர் சுருக்கமாக இங்கேயே பெயர் காரணம் எழுதிவிட்டார்கள்.
    எனவே, 12 - 4 = 8. மீதியுள்ள எட்டு பதிவர்கள், தங்கள் பெயர் காரணம் அல்லது அவர்களுடைய வலைப்பதிவின் பெயர் காரணம் பதிவிடலாம்! வலைப்பதிவு இல்லாத வாசகர்கள் தங்கள் பெயர் காரணம் - எங்கள் மின்னஞ்சலுக்கு எழுதலாம்!

    பதிலளிநீக்கு
  20. இல்லை சாய் சார்.. நீங்கள் தப்பிக்கலை..
    எங்கள் லிஸ்டுல 12 ஆவது ஆளு நீங்க தான்..

    பதிலளிநீக்கு
  21. ........
    தொடர அழைக்கிறேன்
    சிரிப்பு போலீசு
    எங்கள் - ஸ்ரீராம்
    எஸ்.கே
    என்று மாதவன் என் பெயர்க் காரணம் சொல்ல அழைத்துள்ள காரணத்தினால் நானும் என் பெயர்க் காரணம் சொல்லி விடுகிறேன். புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்ததால் நான் ஸ்ரீராமானேன்!

    பதிலளிநீக்கு
  22. பெயர் காரணமே பிரமாதமாயிருக்கு! கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  23. No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
    நன்றி

    பதிலளிநீக்கு
  24. அப்பாடா நான் 26 ஆவது ஆள் .
    கௌதமனின் பின்னூட்டமும் சாயின் குறும்பும் ..ரசித்தேன் . இப்போதெல்லாம் டீச்சருங்க பட்ஜெட் போட்டுத் தான் பெத்துக்கிறாங்க.

    பதிலளிநீக்கு
  25. பதிவும், பின்னூட்டங்களும் சூப்பர்! எல்லாரும் 'அபிவாதயே' சொல்லாத குறைதான்! :)
    "எங்கள் ப்ளாக்" என்றும் எங்கள் ப்ளாக்தான்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!