ஞாயிறு, 20 மார்ச், 2011

WALK OUT?



சட்ட சபையிலும் ராஜ்ய சபாவிலும் வாக் அவுட் பார்த்திருக்கிறோம். கிரிக்கெட்டில்?

இதோ...டெண்டுல்கரின் புதிய சாதனை...! அதிலும் முதல். சாதனைப் பட்டியலில் மற்றுமொரு இறகு? (ஷார்ஜா மேட்ச் வேறு மாதிரி!)

அவர் வெளிநடப்பு செய்ததற்கு ஊகிக்கப் பட்ட காரணங்கள்...!!!

1) நான் செஞ்சரி அடித்தால் மேட்ச் தோற்று விடும் என்பவர்களுக்கு...இதோ அவுட் ஆகி விட்டேன்...ஜெயித்துக் காண்பியுங்கள்...!

2) அம்பயர் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல. இதோ அவர் நாட் அவுட் என்று தலையாட்டினாலும் நான் வெளி நடப்பு செய்கிறேன்... நாளையே அம்பயர் சொல்வது தவறு
என்று நாங்கள் சொல்லும்போது இந்தக் காரணம் உதவும்...!

3) அம்பயர் அவுட் கொடுத்து உள்ளேயே நின்றால் நடவடிக்கை எடுப்பார்கள்.... நாட் அவுட் என்று சொல்லியும் வெளி நடப்பு செய்ததால் நடவடிக்கை உண்டா... என்று கண்டு பிடிக்கத்தான்...

4) எத்தனையோ வகைகளில் அவுட் ஆகியிருக்கிறார்...ரன் அவுட், ஸ்டம்ப்ட் அவுட், கேட்ச் அவுட், வாக் அவுட் வகையில் முதல் முறையாக....

4) இந்தியப் பெயர் கொண்ட பவுலர் போடுகிறார். பெருமை அவருக்குத்தான் போகட்டுமே.... இந்தியா ஜெயித்தால் என்ன (மேற்கு) இந்தியா தோற்றால்
என்ன...!!!

13 கருத்துகள்:

  1. எனக்கென்னவோ காரணம் (1)-ல் சொன்னது போலத் தோன்றுகிறது!!
    :-))

    பதிலளிநீக்கு
  2. middleclassmadhavi said...

    எனக்கென்னவோ காரணம் (1)-ல் சொன்னது போலத் தோன்றுகிறது!!
    :-))


    உண்மையோ உண்மை.

    பதிலளிநீக்கு
  3. யோசித்த காரணங்கள் எல்லாம் கரெக்டாதான் இருக்கு.. :-)..

    பதிலளிநீக்கு
  4. //
    நான் செஞ்சரி அடித்தால் மேட்ச் தோற்று விடும் என்பவர்களுக்கு...இதோ அவுட் ஆகி விட்டேன்...ஜெயித்துக் காண்பியுங்கள்...!
    //
    இருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  5. மே இ தீவுகள் அணியை ஜெயித்து, அதனால ஆஸ்திரேலியாவை சந்திக்க நேர்வதை விட, மே இ இடம் கௌரவமாகத் தோற்று, இலங்கை அணியை கால் இறுதியில் சந்திப்போம் என்று இந்திய அணியினர் செயல்படுவது போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. இந்தியா வெற்றி பெற்றால், காலிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க நேரிடும்.. அதிலிருந்து தப்புவதற்காகவும் இருக்கலாமே ?

    அப்படித்தான் ' நான் எனது பதிவில் சொல்லி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நீங்களும் நல்லாதான் யோசிக்கறீங்க. மேட்ச் போற போக்கை பாத்தா முதல் காரணம்தான் சரிங்கறது உண்மையாகும் போல இருக்கே!

    பதிலளிநீக்கு
  8. எப்படியோ.. ஜெயிச்சுப் புட்டாங்க..

    பதிலளிநீக்கு
  9. என்னிக்கும் சச்சின் அவுட் ஆனா போய்டுவார். அவர் என்ன பாண்டிங்கா ??

    பதிலளிநீக்கு
  10. அவரின் நோ்மை எனக்கு பிடித்திருக்கிறது..

    பதிலளிநீக்கு
  11. yenga ellarukkum ivalo kola veri ....sachin century adichathu oru thappa...ellarum konjama run adichathan thirruvanga...thalaivar 100 adicha thitringale..ithu nyayamaa

    பதிலளிநீக்கு
  12. எங்கள் தோழி கிருத்திகா! சச்சினை நாங்க திட்டவில்லை. அவருடைய வாக்-அவுட்டைப் பார்த்த உடனே எங்களுக்குத் தோன்றிய சிந்தனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டோம். மற்றபடி சாதனை மனிதர் சச்சினுக்கு நாங்கள் எல்லோரும் ரசிகர்களே!

    பதிலளிநீக்கு
  13. UDRS பிடிக்கவில்லை போல

    விஜய்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!