திங்கள், 14 மார்ச், 2011

ஜே கே 13 அன்பு என்பது ...


எங்கு காயம் / புண் படல்  சாத்தியமோ அங்கு அன்பு இராது.

தான் செய்யப் போகும் செயல் தனக்கு நேசமானவர்களைப் புண் படுத்தும் என்று தெரிந்து இருக்கும் போது, தன் மனம் எப்படி சுதந்திரமாக, தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளாமல் செயல் பட முடியும் என்று கேள்வி கேட்பவர் வினவுகிறார்.
         
அன்பு மயமானவராக இருப்பது என்பது, அன்பு செய்பவர் அன்பு செலுத்தப் படுபவர் இருவரும் கட்டுண்டு அல்லாமல் இருப்பதாகும். வலி ஏற்பட்டாலும், அல்லது வலி ஏற்படக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பினும், அது அன்பு அல்ல. ஒருவரைத் தன் உடமையாக வைத்துக் கொள்வதும், ஒருவரை தனக்கு வேண்டிய ஆளாகச் சேர்த்துக் கொள்வதும் மட்டுமே அங்கு இருக்கும். நீங்கள் சரியான ஒன்றை செய்யும்போது, நீங்கள் உண்மையாகவே அன்பு செலுத்தும் எவரையும் புண்படுத்த இயலாது. புண்படல், புண்படுத்துதல் எங்கே நடக்கும் என்றால், நீங்கள் மற்றவர் என்ன செய்ய வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் இருந்தாலோ, அல்லது மற்றவர் நீங்கள் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்புகளை வைத்திருந்தால் மட்டுமே புண்படுதல் உண்டாகிறது.
                        
அதாவது, நீங்கள் இன்னொருவர் உங்களை தன் உடைமையாக வைத்திருப்பதை விரும்புகிறீர்கள். அது பாதுகாப்பாக இருக்கிறது. சௌக்கியமாக இருக்கிறது. அது சாஸ்வதம் இல்லை என்று தெரிந்தாலும், அந்த சுகம், நிரந்தரம் இல்லையானாலும் திருப்தி அளிக்கிறது. இப்படி சுகம், பாதுகாப்பு, ஊக்குவிப்பு இவற்றை நாடி செய்யப் படும் ஒவ்வொரு செயலும் மனதின் வெறுமையைக் காட்டுகிறது. அதனால்தான், இயல்பாக மற்றவர் செய்யும் சரியான செயல் கூட மனதை சஞ்சலப் படுத்துகிறது, துன்பம், வலி உண்டாகிறது. இதே காரணமாக, ஒரு நபர் அடுத்தவரை சரி செய்து கொண்டு போக வேண்டிய நிர்பந்தம் காரணமாக தன் இயல்பில் செயல் புரிய முடியவில்லை. வேறு சொற்களில் சொல்வதானால், இந்த அன்பு என்று நம்பப் படும் உணர்வு காரணமாக, சதா தன்னை அடக்கிக் கொண்டு செயல் படுவதன் மூலம், இரு தரப்பினருமே அழிந்து போகிறார்கள். இந்த 'அன்பி'ல் சுதந்திரம் இல்லை. கண்ணுக்குத் தெரியாத நுட்பமான விலங்குகள் தான் கட்டிப் போடுகின்றன
                   

6 கருத்துகள்:

  1. சரியாக ஆழமாகச் சிந்தித்து எழுதப்பட்ட பதிவாகியிருக்கிறது.
    எதிர்பார்ப்பு எதுவுமில்லாதபோது அன்பு கொடுக்கவும் எடுக்கவும் முழுமையாய் திருப்தியாய் இருக்கிறது.என் அனுபவமும் கூட !

    பதிலளிநீக்கு
  2. அழகாக சொல்லி இருக்கிறார் அன்பு என்பதை.

    பதிலளிநீக்கு
  3. அன்பு என்பது சிறிய வயதில் எதிர்பர்க்கத்தான் கற்றுக் கொடுக்கும். வளர வளர , கொடுக்கும் மனப்பான்மையும் வளரும்.
    இல்லாவிட்டால் வாழ்வில் நிம்மதியே கிடையாது. சீரிய சிந்தனை.

    பதிலளிநீக்கு
  4. முற்றிலும் உண்மை! அற்புதம்! பலமுறை படித்தேன். எவ்வளவு அருமையாக, எளிமையாக சொல்லிவிட்டார். அதை நீங்களும் மிகவும் அருமையாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான பகிர்வு.

    எதிர்பார்ப்பில்லாத அன்பு, தளைகளில்லாத சுதந்திரமான அன்பு...இதெல்லாம் நினைக்கையில் சுகமாக இருந்தாலும் நிஜத்தில் ரொம்ப அபூர்வம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!