திங்கள், 8 ஆகஸ்ட், 2011

ஜே கே 16 நம்பிக்கை என்ற திரை


நம்பிக்கை என்ற திரை
                           
நீங்கள் கடவுளை நம்புகிறவர்; மற்றவர் கடவுளை நம்பாதவர். எனவே உங்கள் நம்பிக்கை உங்களை மற்றவரிடமிருந்து பிரிக்கிறது.
                       
உலகெங்கிலும் நம்பிக்கை இந்து, பவுத்தம், கிறித்துவ மதங்களாக அமைக்கப்படுகிறது. எனவே அது மனிதனிடமிருந்து மனிதனைப் பிரிக்கிறது.

நாம் குழப்பம் அடைந்திருக்கிறோம். நம்பிக்கை எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து விடலாம் என்று நினைக்கிறோம். அதாவது நம்பிக்கையை நம் குழப்பங்கள் மீது சாத்துகிறோம். அதன் மூலம் நம் குழப்பங்கள் அகற்றப்படும் என்று நம்புகிறோம். ஆனால் குழப்பம் என்ற நிஜத்திலிருந்து தப்பித்தலே நம்பிக்கை. அது நம்மை குழப்பத்தை எதிர்கொள்ளச் செய்வதில்லை. மாறாக, நாமிருக்கும் குழப்பத்திலிருந்து நம்மைத் தப்பியோடச் செய்கிறது.

குழப்பத்தை அறிய நம்பிக்கை தேவை இல்லை. நம்பிக்கை நமக்கும் நம் பிரச்னைக்கும் நடுவில் ஒரு திரையாக செயல்படுகிறது. எனவே நம்பிக்கையால் அமைக்கப் பட்ட மதம், உள்ளதிலிருந்து, (what is), குழப்பம் என்ற நிஜத்திலிருந்து தப்புவதற்கான வழியாக அமைகிறது.
    
கடவுள், மறுமை வாழ்வு ஆகியவற்றில் நம்பிக்கை உள்ள மனிதன் அல்லது வேறொரு வித நம்பிக்கை உள்ளவன், தான் எதுவாக இருக்கிறானோ அதிலிருந்து தப்புகிறான்.

கடவுளை நம்புகிறவர்கள், பூஜை செய்கிறவர்கள், மந்திரங்களை ஜபிக்கிறவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வில் ஆளுகை செலுத்துபவர்களாக, கொடூரக்காரர்களாக, முன்னேறும் அவா உடையவர்களாக, ஏமாற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் கடவுளைக் கண்டு பிடிப்பார்களா? அவர்கள் உண்மையில் கடவுளைத் தேடுபவர்களா?
             
ஜபிப்பதன் மூலம், நம்பிக்கையின் மூலம் காணக் கூடிய விஷயமா கடவுள்? ஆனால், அப்பேர்ப்பட்ட மனிதர்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள், கடவுளை வழிபடுபவர்கள், தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள், தன்னுடைய நிஜத்திலிருந்து தப்புவதற்கு எல்லாவற்றையும் செய்பவர்கள்.

ஆனால் அப்பேர்ப்பட்ட மனிதர்கள் மதிப்பிற்குரியவர்கள் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்.

ஏனெனில் அவர்கள் நீங்கள்தான். 
                         

10 கருத்துகள்:

  1. //நம்பிக்கையை நம் குழப்பங்கள் மீது சாத்துகிறோம். அதன் மூலம் நம் குழப்பங்கள் அகற்றப்படும் என்று நம்புகிறோம். ஆனால் குழப்பம் என்ற நிஜத்திலிருந்து தப்பித்தலே நம்பிக்கை. அது நம்மை குழப்பத்தை எதிர்கொள்ளச் செய்வதில்லை. மாறாக, நாமிருக்கும் குழப்பத்திலிருந்து நம்மைத் தப்பியோடச் செய்கிறது.//

    குழப்பமில்லாத உண்மை இது.

    தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான். நம்பிக்கைகளும் நமக்கு நம்பிக்கை துரோகம் தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  3. //நம்பிக்கை நமக்கும் நம் பிரச்னைக்கும் நடுவில் ஒரு திரையாக செயல்படுகிறது.// பிரச்னை எது?அறியாமை..அதை எதிர்கொள்ளும் அறிவு /அவகாசம் நம்பிக்கை என கொண்டால் அது திரை என்பது விலகி அழகான பாதையாகி விடும்...

    பதிலளிநீக்கு
  4. நம்பிக்கைகளும் நமக்கு நம்பிக்கை துரோகம் தான் செய்கிறது.

    பதிலளிநீக்கு
  5. //
    ஆனால் குழப்பம் என்ற நிஜத்திலிருந்து தப்பித்தலே நம்பிக்கை. அது நம்மை குழப்பத்தை எதிர்கொள்ளச் செய்வதில்லை. மாறாக, நாமிருக்கும் குழப்பத்திலிருந்து நம்மைத் தப்பியோடச் செய்கிறது//
    Hmmm. . .
    need to think about this!

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்ம்......சிந்திக்க வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  7. //நம்பிக்கை நமக்கும் நம் பிரச்னைக்கும் நடுவில் ஒரு திரையாக செயல்படுகிறது//

    உண்மைதான்.. சிலசமயங்களில் அந்தத்திரையை விலக்க நம்ம மனசே விரும்பறதில்லை :-)

    பதிலளிநீக்கு
  8. மனச்சாட்சியோடு உண்மையாக வாழ்ந்தால் நாம்தான் கடவுள் !

    பதிலளிநீக்கு
  9. தன்னம்பிக்கைதான் மிகவும் முக்கியம், அவசியம் வேண்டும். மனசாட்சியை மதித்து அதன்படி வாழ்வதுதான் உண்மையான வாழ்கை.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!