வியாழன், 18 ஜூலை, 2024

எதிர் இருக்கை யுவதி

 

இதுவரை சாப்பிடாத புதிய உணவகம் ஏதும் கண்ணில் பட்டால் மனதில் குறித்துக் கொண்டு அடுத்த வாய்ப்பில் உள்ளே நுழையும் வழக்கம் எனக்கு.

D Mart டில் ரிட்டர்ன் கிஃப்ட்  ஐட்டம் சிலவற்றை மாடி ஏறி, இறங்கி, அலைந்து திரிந்து பொறுக்கிக் கொண்டு, அதைவிட கடினமான காரியமாய் பில் பே செய்து காரில் ஏற்றிய நேரம் இரவு ஒன்பதைக் கடந்திருக்க, என் சாப்பாட்டு நேரமும் (இரவு 7 மணி) பாஸ் சாப்பாட்டு நேரமும் (இரவு ஏழரை மணி) எப்போதோ கடந்து விட்டிருந்தது.  D  மார்ட் பில்லிங் பற்றி தனியாய் கொஞ்சம் எழுத வேண்டும்.  அது அப்புறம்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மனதில் திட்டமாக கட்டளை இருந்தது (சாண்டில்யன் பாணி)

பக்கத்தில் முதலில் எதிர்ப்படும் ஹோட்டலுக்குள் நுழைய வேண்டும். ("தெரிந்த விஷயம்தானே?  வேறென்ன செய்யப்போகிறாய் நீ?" என்று நினைப்பவர்களை வன்மையாக ஆமோதிக்கிறேன்!) ஏற்கெனவே அங்கு நான் இதுவரை நுழையாத ஹோட்டல் ஒன்று இருந்தது.  வாசன் கஃபே... 


அதன் பெயர் விதிமுறையை மீறி சற்றே பெரிதாகவே இருந்தது அந்த உணவு அகம்!

கீழே உள்ள ஐந்தாறு மேசைகளும் உண்பவர்களால் நிரம்பி இருக்க, எங்கள் கண்கள் AC ஹாலைத் தேடின.  மாடியில் என்ற பரிமாறுபவரிடம்  என் முழங்கால் பிரச்னை  காரணமாக "லிப்ட்?" என்றேன் சுருக்கமாக... அதைவிட சுருக்கமாக அவர் கையை விரித்து விட்டு இடது கையால் படிகளைக் காட்டி வெறுப்பேற்றினார்.

மு.கால் வலி காரணமாக குளத்துக்குப் போகிறவன் போல கால்களை அகல வைத்து படியேறினேன்.

  AC ஹாலும் நிரம்பி இருக்க, வழக்கமான இந்தியக் குடிமகனாக வீட்டில் சாப்பிடாமல் ஹோட்டலில் குடும்பம் குடும்பமாக சாப்பிடும் அவர்களை மனதுக்குள் வைதபடியே அவைலபிளாக இருந்த முச்சீட்டில் இடம்பிடித்தேன் / தோம்...  நான், பாஸ், டிரைவர்.

ஆறு குஷன் இருக்கைகள் கொண்ட அது மூன்று மூன்றாக பிரிக்கப் பட்டிருக்க,  இந்தப்;பக்கம் காலியாயிருந்த மூன்றில் நாங்கள்.  எதிர்ப்பக்கம் ஒரு பேரிளம்பெண்ணும் - அதாவது சுமார் 30 அல்லது 34 வயது மதிக்கத்தக்க பெண்  -ஒரு சிறுவனும் - சுமார் 15 அல்லது 16 வயதிருக்கலாம் - அமர்ந்திருந்தனர்.

சிறுவனை விடுங்கள்..  அவன் எப்படி இருந்தால் நமக்கென்ன...  அந்தப் பெண்ணை நைசாக கவனிப்போம்.  கண்ணில் பட்ட வரை க்ரே கலரில் கறுப்புப் பட்டை இருக்கும்  டீ ஷர்ட் போட்டிருந்தாள்.  கோணல் வகிடு எடுத்த வகையிலும், இன்னும் ஏதோ காரணத்தினாலும் அவள் மலையாளி என்று புரிந்து கொள்ளச் செய்தாள்.  
அவள் கீழே அணிந்திருந்தது பாவாடை போன்ற உடையா, லெக்கின்ஸா, வேறு ஏதாவதா என்று பார்க்க வேண்டுமென்றால் எட்டிப் பார்க்க வேண்டும் என்பதால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்தி அமைதி காத்தேன்.  ஏதுவாய் இருந்தால் என்ன, தெரிந்தவரை நன்றாய் இருக்கிறாள்!

கூட வந்த சிறுவன் அவள் மகனல்ல என்பது வயதின் காரணமாக தெரிந்தது.  தம்பியாயிருக்க முடியாது என்று முகஜாடை முகத்தில் அறைந்து சொன்னது!

பின் யாராயிருக்கும்?  மெல்லிய குரலில் பேசிக்கொண்டார்கள்..."என்ன வேணுமோ...  எவ்வளவு வேணுமோ கேட்டு வாங்கிச் சாப்பிடு..   கூச்சப்படாத..  தயங்காத.." 

அவன் பனீர் பட்டர் மசாலா, மஷ்ரூம் ஃபிரை டிக்கா, பிக்கா என்று ஏதேதோ ஆர்டர் செய்து கொண்டிருந்ததை அந்த அக்கா  கைகளைக் கட்டிக் கொண்டு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்...

பாஸ் என்னை இடித்தாள்.  "என்ன வேணும்..  சீக்கிரம் சொல்லுங்க...  எவ்வளவு நேரமா நிக்கறார் அவர்?" என்று சர்வரைக் காட்டினார்.  குறித்துக் கொள்ள வசதியாக மொபைலை திறந்து வைத்துக் கொண்டு என்னை பார்த்துக் கொண்டிருந்த சர்வரிடம் "முதல்ல ரெண்டு இட்லி" என்று சொல்லி விட்டு  மீண்டும் பார்வையைத் திருப்பி....."இட்லி இல்ல ஸார்" என்ற சர்வரின் பதிலால் மீண்டும் திரும்பி "பொங்கல்" என்றேன்.  "இல்ல ஸார்" என்றார் அவர்.

"என்னதான் இருக்கு?"

"தோசை வகைகள், பூரி, சப்பாத்தி..."

"நூடுல்ஸ்?"

"இல்ல சார்"

"தோசை இருக்குன்னு சொல்றீங்க...  இட்லி இல்லங்கறீங்க" என்று சொல்லி விட்டு வியாபார உத்தி / சிரமங்களை மனதில் ஏற்றி ஒரு ஸ்பெஷல் தோசை சொன்னேன்.

அவர் அகல, என் பார்வை எதிரே திரும்ப, எதிர் யுவதி அதுவரை புன்னகையுடன் என்னைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறாள் என்று புரியும் வகையில் பார்வையைத் திருப்பினாள்.  

அவ்வப்போது மொபைலை பார்த்துக் கொண்டே இருந்தாள் என்பதை நானும் கவனிக்கிறேன் என்பதை அவளும் கவனித்தாள் என்பதை நானும் கவனித்தேன்!  பாஸும் கவனித்திருக்கிறார் என்பதை அவர் குரல் நிரூபித்தது.

"ஏன்...  நம்பர் வாங்கிக்கறதுதானே?"  பாஸ் என் விலாவில் இடித்து ரகசியமாகச் சொன்னதை கேட்டு அவள் இதழோரம் மிகச்சிறிய ஒரு புன்னகை பூத்தது.  ஆம், என் பாஸ் ரகசியம் பேசுவது அப்படிதான்.  சமயங்களில் தெரிந்தேதான் செய்கிறாரோ என்ற சந்தேகம் வருவதையும் தவிர்க்க முடியாதுதான். அவள் இதற்குச் சிரித்தாளா, மொபைல் பார்த்துச் சிரித்தாளா என்று அந்த மலையாள பகவதியைத்தான் கேட்கவேண்டும்.  அவளும் ஸ்பெஷல் தோசைதான் ஆர்டர் செய்திருந்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சோளே பூரி ஆர்டர் செய்திருந்த டிரைவருக்கும், சப்பாத்தி ஆர்டர் செய்திருந்த பாஸுக்கும் அவை வந்து சாப்பிட்டு முடிக்கும் நிலையில் இருக்க, நான் அல்லது நாங்கள் இன்னமும் அந்த ஸ்பெஷல் தோசைக்கு காத்திருந்தோம்.

அப்படிக் காத்திருப்பதைப் பற்றி நகைச்சுவையாய் (என்று எண்ணிக்கொண்டு) நான் அங்கலாய்த்ததை அவளும் கேட்டு இடது இதழோரம் மின்னம்மினி புன்னகையோடு ஆமோதித்ததை நான் ரசித்தேன் என்பதை பாஸும் கவனித்து விட்டார் என்பதை நானும் கவனித்து உஷாரானேன்.



நிற்க, அங்கலாய்ப்பு என்பதற்கு நான் உபயோகித்திருக்கும் பொருளை இணையம் காட்டவில்லை என்பதைக் காண்க...  ஒரே ஒரு இடத்தில கொஞ்சம் ஒத்து வருகிறது!

ஒரு வழியாய் அவளுக்கு முதலில் தோசை வர,. என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடியே சாப்பிட ஆரம்பித்தார்.  அப்புறம் எனக்கும் வந்தது.  நானும் பதிலுக்கு அவளை ஒரு கண்ணால் பார்த்தபடியே தோசையில் கைவைத்தேன். 

அரை தோசைக்குத்தான் சாம்பார் வைத்திருந்த நிர்வாகத்தை கண்டித்ததை அவளும் ஆமோதித்தாள்.  எக்ஸ்டரா சாம்பார் இருவரும் ஒரே நேரத்தில் கேட்டோம்!  என்ன சிக்கனமோ...   முன்னர் ஒருமுறை ரோடோரக் கடை ஒன்றில் எக்ஸ்ட்ரா சால்னா பாக்கெட்டுக்காக சண்டை போட்டவன் நான்!  சப்பாத்திக்கு குருமா கூட அப்படிதான் சிக்கனமாக வைத்திருந்தனர் என்பதை பாஸ் சுட்டிக் காட்டினார்.  சாதாரணமாக இது போன்ற சந்தர்ப்பங்களில் எதிரில் அல்லது அருகில் இருக்கும் இதுபோன்றவர்களுடன் பேசும் வழக்கமுடைய பாஸ் ஏனோ இவருடன் பேச முயற்சிக்கவில்லை.

இதையெல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அந்தப் பையன் ஏதேதோ ஆர்டர் செய்து ஒருகை அல்ல பல கை பார்த்துக் கொண்டிருந்தான்!

பில் பே பண்ணும் நேரம் வர, பாஸ் ஃபோனில் மகனுடன் (என்று நினைத்தேன்.  இல்லையாம்.  மாமாவின் மருமகளிடமாம்) பேசிக் கொண்டிருந்தார்  

"விட்டால் ஃபோன் நம்பர் கூட வாங்கிடுவார் போல"

நிஜமாகவே கேட்டு விட்டால் என்ன என்று தோன்றியது!!

டிப்ஸ் வைத்து விட்டு நான் எழ முயற்சிக்கும் நேரம் அந்தப் பெண் என்னை நோக்கி குனிந்தார்.

"எக்ஸ்கியூஸ்மீ...   கொஞ்சம் உங்கள் ஃபோன் நம்பர் கொடுக்கிறீர்களா?"

என் காதுகளை நம்ப முடியாமல் (ஆனந்த) அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தேன்.

"என்ன?"

"உங்க ஃபோன் நம்பர் தர்றீங்களா?"

"இதோ.." தயாராய் அமர்ந்தேன்.  எதற்கு என்றெல்லாம் கேட்கவில்லை. 

அவள் தொடர்ந்தாள்..  

"நீங்க ஜி  பே செஞ்சீங்க,  பார்த்தேன்.  எனக்கு  ஒரு 50 ரூபாய் கொடுங்க..  டிப்ஸ் கொடுக்கணும்..  நான் உங்களுக்கு ஜி பே பண்ணிடறேன்...  அதுக்குதான் நம்பர் கேட்டேன்..."

டிப்ஸ் 50 ரூபாயா?  ஆ.....!

என் அலைபேசி எண்ணையும் 50 ரூபாயையும் கொடுத்தேன்.  உடனே என் கணக்கில் 50 ரூபாய் வந்து விழுந்தது. 


புன்னகையுடன் தலையசைத்து விட்டு வந்தேன்.  புன்னகையுடன் தலையசைத்து உபரியாய் கையையும் அசைத்து அனுப்பினாள் அந்த நங்கை.

பாஸ் ஒரு வித கடுப்புடன் எனக்காகக் காத்திருக்காமல் முன்னதாக இறங்கிச் சென்று விட்டார்..

அந்தப் பெண்ணின் பெயர் வனஜா என்று மட்டும் தெரிந்தது.  நம்பர் XXXXX களால் மறைக்கப்பட்டிருந்ததை பாஸிடம் காட்டினேன்.  புன்னகைத்தவரிடம் சொன்னேன்.

"அவரிடம் என் நம்பர் இருக்கு.  அவராக நினைத்தால் தொடர்பு கொள்ளலாம்"

"தொல்லை விட்டது...  என்னவோ பண்ணிக்குங்க..."

(பின்குறிப்பு  :-  கொஞ்சம் நகாசுவுடன் மானே தேனே சேர்த்து எழுதப்பட்டிருக்கும் இதை நகைச்சுவையாய் மட்டும் எடுத்துக் கொள்ளவும்.  தவறாக நினைக்க வேண்டாம், சண்டைக்கு வரவேண்டாம்...  சம்பவம் நிஜமாக நடந்ததே....)


பின் பின் குறிப்பு  :-  சம்பவம் நடந்து நீண்ட நாட்களாகியும் இன்னமும் ஒன்றும் தகவல் வரவில்லை!!

=================================================================================================================

                                                                     நியூஸ் ரூம் 
                                               பானுமதி வெங்கடேஸ்வரன்   


- சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட உயிருள்ள பாம்புகளை காற்சட்டைக்குள் வைத்து கடத்த முயன்றவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.  ஹாங்காங்கிலிருந்து எல்லை நகரமான ஷென்சென் நகருக்கு செல்ல முயன்ற அந்த நபர் டேப் சுற்றப்பட்ட 6 பைகளை தனது காற்சட்டையில் மறைத்து வைத்திருந்தார்.  அவரைப் பிடித்து சோதனை செய்தபோது ஒவ்வொரு பைக்குள்ளும் ஒவ்வொரு வகையான, ஒவ்வொரு நிறமான பாம்புகள் உயிருடன் இருந்துள்ளன.

புதைக்கப்பட்ட குழாயில் காஸ் கசிவு திடீரென உப்பிய ஆவடி சாலை  வீடுகளுக்கு குழாய் வாயிலாக காஸ் வினியோகம் செய்வதற்காக, சாலைகளில் குழாய் புதைக்கும் பணியை, தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.​  அதன் ஒரு பகுதியாக, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஆவடியில் இருந்து பூந்தமல்லி செல்லும் சாலையில், குழாய் பதிப்பு பணி நடக்கிறது.​  இந்நிலையில், ஆவடி பேருந்து நிலையம், அண்ணாதுரை சிலை அருகே புதைக்கப்பட்டிருந்த காஸ் குழாயில், நேற்று முன்தினம், காஸ் அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அப்போது, குழாயில் காஸ் கசிவு ஏற்பட்டதால், வேகத்தடை அமைப்பு போல், சாலை மேடாக மாறியது.​  பின்னர் சரி செய்யப்பட்டது.

-  மும்பை, மஹாராஷ்டிராவில், வீடு புகுந்து திருடிய திருடன், அது மறைந்த மராத்தி எழுத்தாளரின் வீடு என்பது தெரிந்ததும் திருடிய பொருட்களை மீண்டும் வைத்துவிட்டு மன்னிப்பு கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

69 குழந்தைகளைப் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ரஷ்யப் பெண். வாலண்டினா என்னும் விவசாய குடும்பத்தை ரஷ்ய பெண்ணிற்கு 16 பிரசவங்களில் 32 குழந்தைகள், 7 முறை மூன்று குழந்தைகள் பிறந்தனவாம், அப்படி 21 குழந்தைகள், ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை நான்கு முறை பெற்றிருக்கிறார், அப்படி பதினாறு குழந்தைகள். ஆக மொத்தம் 69 குழந்தைகள். மக்களை பெற்ற மகராசிதான்!

- இந்தியக் குடியுரிமையைத் துறந்து வெளிநாடுகளில் குடியேறும் குஜராத்திகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

- பெற்றோர்களுடன் நேரத்தை செலவழிக்க அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் விடுப்பு. அசாம் முதல்வர் பிசந்த் விஸ்வ சர்மா தனது அலுவலக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மேலும் இந்த விடுமுறையை பெற்றோர்களோடு கழிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்  தனிப்பட்ட கேளிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும், பெற்றோர்கள் இல்லாதவர்களுக்கு இந்த விடுப்பு கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

- புவனேஷ்வர், ஒடிசா: தன்னை வரவேற்க விமான நிலையத்திற்கு சொகுசு கார் அனுப்பா
 காரணத்திற்காக அதிகாரியை அடித்து,உதைத்ததோடு தன் ஷூவை நக்கவும் உத்தரவிட்டிருக்கிறார் அம்மாநில கவர்னரின் மகன் லலித் குமார். இது குறித்து போலீசில் புகார் அளித்தாலும் அது ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரியின் மனைவி தெரிவித்திருக்கிறார்.

- புதுச்சேரியில் குவியும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்து அசத்தல்.

- இத்தாலி பண்ணைகளில் அடிமைகளாக வேலை பார்த்த 33 இந்திய தொழிலாளர்கள் விடுவிப்பு. 15 லட்சம் கொடுத்தால் இத்தாலியில் நல்ல வேலை என்று ஏஜண்டுகளால் ஆசை  காட்டப்பட்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் அங்கிருக்கும் பண்ணைகளில் அடிமைகளாக வேலை பார்த்து வந்திருக்கின்றனர். வாரத்தின் ஏழு நாட்களும் ஒரு நாளைக்கு 12 மணிநேர  வேலை, விடுப்பு கிடையாது. அப்படி வேலை பார்த்தபொழுது விபத்துக்குள்ளான முப்பத்தாறு வயதான சத்தன் சிங் என்பவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் பண்ணை முதலாளிகள் சாலையோரத்தில் கிடத்தி விட்டு சென்றதால் அவர் மரணமடைந்துள்ளார். இது அந்நாட்டில் அதிர்ச்சி அலைகளை எழுப்பி, அரசு நடவடிக்கை எடுத்து அடிமைகளாக இருந்த 33 இந்திய தொழிலாளர்களை மீட்டுள்ளது. அதோடு அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வேலைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

- பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை எட்டியது. எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி முதலிடம்.

- உ.பி., தியோரியா மாவட்டத்தில் உள்ள ஆனந்த் நகர் கிராமத்தில் திருமண விருந்தில் அசைவம் இல்லை என்பதற்காக பெண் வீட்டார்களை தாக்கி திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார். இதைத் தொடரந்து போலீசில் அவர்கள் மீது புகார் அளித்த பெண்ணின் தந்தை இந்த திருமணத்திற்காக மாப்பிள்ளை வீட்டாருக்கு ரூ.4 லட்சம் வரதட்சணை அளிக்கப்பட்டது எனவும், மாப்பிள்ளைக்கு ₹20,000 மதிப்பில் இரண்டு மோதிரங்கள் போட்டிருப்பதாகவும் மணப்பெண்ணின் தந்தை குறிப்பிட்டிருக்கிறார்.

- தமிழ்நாடு: உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தால்  குறுந்தொழில்கள் முடங்கும் அபாயம் - அதனால் என்ன? இலவசங்கள் கிடைக்கிறதே.

- ஒரே நாளில் (24 மணி நேரத்தில்) 11லட்சம் மரக்கன்றுகளை நட்டு இந்தூரில் சாதனை. இதற்கான அதிகாரபூர்வமான சான்றிதழை கின்னஸ் அமைப்பிடமிருந்து மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் பெற்றுக் கொண்டார் - நல்ல விஷயம்தான்,நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படுவது இந்த செயலை அர்த்தமுள்ளதாக்கும்.

-


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\




நுரையீரல் நோய்களுக்கு என்று நிபுணத்துவம் பெற, தனிப்படிப்புகள் உண்டா?

உண்டு.  MD(Chest) படிக்கலாம்.  DTCD (DIPLOMA IN TUBERCULOSIS AND CHEST DISEASES) என்று ஒரு படிப்பு உல்ளது.  இதுபோக D.M (DOCTOR OF MEDICINE) PUMONARY MEDICINE படிக்கலாம்.  மேலும் DNB (Diplomate Of National Board) Pulomonology படிக்கலாம்.  இதெல்லாம் போக, வெளிநாடு சென்றும் படிக்கலாம்.


கேள்வி  :  ஆஸ்துமா என்றால் என்ன?  அது எப்படி ஏற்படுகிறது?

டாக்டர் ராஜ்.பி.சிங்  :  Trachea  எனப்படும் மூச்சுக் குழாய் இரண்டாகப் பிரிந்து பின்பு திராட்சை கொத்தின் கிளைகள் போல சின்ன சின்னதாக 23 முறை கிளைகளை பரப்பி நுரையீரல் முழுக்க ஆக்சிஜனை கொண்டு செல்லும் வகையில் அமையப்பெற்றுள்ளது.  மேலும் ஏராளமான சுரப்பிகள் மூலம் நுரையீரலில் சளி உற்பத்தியாகி கொண்டே இருக்கும். இந்தச் சளியை நாம் நம்மை அறியாமல் உணவு குழாய் மூலம் விழுங்கிக் கொண்டுதான் இருக்கிறோம்.  இந்த சளி நமக்குள் இருப்பதால்தான் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கசடுகள் அழுக்குகள் எல்லாம் நுரையீரலுக்குள் சேராமல் அந்த சளியில் படிந்து உடனுக்குடன் வயிற்றுக்கு அனுப்பப்படுகின்றன.  எப்படி நமக்குள் எச்சில் ஊறுகிறதோ,  அதேபோல சலியும் நாள் ஒன்றுக்கு இரண்டு லிட்டர் வரை ஊறிக் கொண்டுதான் இருக்கும்.  இந்த ஆஸ்துமா நோய் வந்துவிட்டால் நுரையீரலின் உட்புற சுவர்கள் சிவந்துவிடும்.  எரிச்சல் ஏற்படும்.  இதனால் இருமல் உண்டாகும்.  சளி அதிகமாக சுரக்கும்.  மூச்சு குழாய் சுருங்கிவிடும்.  இதனால் மூச்சை இழுக்கும் போதும் சிரமம் ஏற்படும்.

இவைதான் ஆஸ்துமாவினுடைய அறிகுறி இந்த வியாதி எதனால் வருகிறது என்பது இன்று வரை யாருக்கும் தெரியாது.  ஒருவகையான அலர்ஜியால் வரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.  பரம்பரையாகவும் இந்த வியாதி வர வாய்ப்புள்ளது.  பல பேர் தனக்கு ஆஸ்துமா வியாதி இருப்பதாக வெளியில் சொல்லிக் கொள்ள விரும்புவதில்லை.  அதை ஒரு அவமானமாக கருதுகிறார்கள்.  அதையே இஸ்நோபிலியா என்றால் சிரித்த முகத்தோடு ஏற்று கொள்கிறார்கள்.  சில பேர் இதை டஸ்ட் அலர்ஜி என்ற பெயரில் அழைத்துக் கொள்கிறார்கள்.  இப்போது சமீப பத்தாண்டுகளாக வீசிங் ட்ரபுல் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  என்னை பொறுத்தவரை நாம் நமக்கு இருக்கும் நோயை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்.  அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  அப்போதுதான் அதை எதிர்த்து வெல்ல முடியும். நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் முயற்சிகள் இறங்கக்கூடாது.  இப்போதெல்லாம் இன்டர்நெட்டில் நோயின் பெயரை போட்டாலே அதன் தன்மை என்ன, அதன் அறிகுறிகள் என்ன,  அதனுடைய விளைவுகள் என்ன,  அதற்கு என்ன மாதிரியான மருத்துவம் தேவை,  எவ்வளவு நாட்கள் வைத்தியம் பார்க்க வேண்டும் என்ற எல்லா விவரங்களும் கிடைத்து விடுகின்றன.  ஆகவே நோயை பார்த்து பயப்படாமல் அதன் பெயரை மாற்றி சொல்லி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் எந்த நோய் நமக்கு வந்திருக்கிறதோ, அந்த நோயை முழுமையாக அறிந்து அதற்குரிய மருத்துவம் செய்ய நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடிப்பழக்கத்தை நிறுத்தினால் லிவர் தானாகவே சரியாவது போல புகைபிடிப்பதை நிறுத்தினால் நுரையீரல் சரியாகும்?

 டாக்டர் ராஜ் பி சிங் :  புகையினால் நுரையீரல் பாதிப்படைந்து விட்டால் அது மீண்டும் பழைய நிலைக்கு வர வாய்ப்பே இல்லை.  புகைபிடிப்பது சுற்றுச்சூழல் பாதிப்பு போன்றவற்றினால் சிஓபிடி வரும்.  அதிக அளவில் புகைப்பிடிப்பவர்களுக்கு காலையில் எழுந்ததும் ஒரு இருமல் வரும்.  அதன் மூலம் சளி வரும். ம்யூக்கஸ் இன் லங்ஸ் ஆரோக்கியமான மனிதனுக்கு சராசரியாக உடலில் சளி உற்பத்தியாகி மூக்கு மற்றும் தொண்டை மூலமாக வெளியில் வந்துவிடும்.  புகைப்பிடிப்பதினால் ம்யூக்கஸ் மெம்பரையின் பாதிப்படைந்து விடும். இந்த மியுகஸ் மெம்பரின் மட்டுமே சளியை நம்முடைய நுரையீரலில் இருந்து வெளியில் தள்ளும் பணியை செய்யும். இது பாதிப்படைந்து விட்டால் சளி வெளியேறாமல் நுரையீரலிலேயே தங்கிவிடும். இரவு தூங்கும் பொழுது சளி நுரையீரலில் தங்குவதால் தான் புகை பிடிப்பவர்களுக்கு காலையில் இருமல் வருகிறது. சளியை வெளியேற்றும் உறுப்பு புகைப்பிடிப்பதனால் பாதிப்படைகிறது என்பதுதான் உண்மை. எப்படி ஆஸ்துமா நோய்க்கு மூச்சு குழாய் சுருங்கி இருக்குமோ, அதே போல புகைபிடிப்பவர்களுக்கும் மூச்சு குழாய் சுருங்கி இருக்கும். ஆஸ்துமா நோயினால் மூச்சுக் குழல் சுருங்கி இருந்தால் நெபுலைசர் மூலமாக ஒரு அளவிற்கு அதை விரிவுபடுத்த முடியும். ஆனால் புகைப்பிடிப்பவர்களுக்கு அப்படி செய்ய முடியாது. எனவே கிரானிக் பிராங்க்கைடிஸ் நோயைவிட ஆஸ்துமா நோய் சிறியது.  கிரானிக் பிராங்க்கைடிஸ் என்பது புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமே வரும் நோய் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் புகை பிடிப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த நோய் வரும் என்று சொல்லலாம்


- சில வருடங்களுக்கு முன் எஸ் ஜே இதயா ஏற்பாடு செய்து துக்ளக்கில் வந்த கேள்வி பதில்.

===========================================================================================

கோமதி அக்கா தனது பதிவில் பீப்பாய் படம் போட்டு அலிபாபாவும் 40 திருடர்களும் பாடல் போட்டார்கள்.  நான் அதில் கவரப்பட்டு ஓட்டி ஓட்டி முழுப் படத்தையும் ஒருதரம் யு டியூப் சென்று பார்த்தேன்.  அந்தப் படத்தின் டைட்டிலில் வஹீதா ரஹ்மான் பெயர் இருந்தது.  ஏதோ ஒரு நாட்டியக் காட்சியில்தான் வந்திருக்க வேண்டும்.  கண்ணில் படவில்லை.   பின்னர் ஹிந்திப் படங்களில் அவர் கோலோச்சினார் என்பது நீங்களும் அறிந்ததே....



=======================================================================================================

ரசித்த, பழைய புகைப்படங்கள்...

ஹிட்லர் தன்னைப்போலவே ஏழெட்டு பேரை வைத்திருப்பாராம்.  ஆனால் சுபாஷ் கரெக்ட்டாக ஒரிஜினல் ஹிட்லர் வந்தததும்தான் எழுந்து கைகொடுத்தாராம்.  - எங்கோ படித்தது.


செங்கோல் எங்கே பிரதர்....

====================================================================================================


முன்பொரு கவிதை...  





&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பொக்கிஷம்...






114 கருத்துகள்:

  1. மானே தேனே சேர்த்திருக்கீங்க என்பது நீங்க சொல்லாமலேயே எங்களுக்கும் தெரியும் என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. Meta AI யுடன் சம்சாரித்து விளையாடுவதும் தெரியுது.

    இதோடு சேர்த்து இன்னொரு கருத்துக்கு வரேன்...மொபைல் கூகுள் என் ரகசிய குரலை புரிஞ்சுக்க மாட்டேங்குது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   வாய்ஸ் டைப்பிங் சிரமங்களா....   புரிகிறது!

      நீக்கு
    2. ஆமா அப்ப.
      இப்ப கணினியில் அடிப்பதால் அந்தப் பிரச்சனை இல்லை. ஆனா கீகள் துள்ளிக் குதித்து கர்சரை விரட்டும் கர்சர் ஓடி ஒளிந்து கொள்ள முயற்சிப்பதில் கன்னாபின்னானு நிக்கும்!

      ஸ்ரீராம் உங்க பகுதிக்கு போட்டிருக்கும் படம் மீட்டா ஏஐ (மீட்டான்னுதான் சொல்லணும்னு நம்ம கௌ அண்ணா நேத்து சொல்லியிருந்ததில் தெரிந்தது. ஓ அப்ப கண்டிப்பா ஹிந்திக்காரர்தான் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகித்திருப்பார்!!!!! மீட்டா- இனிய ஏஐ!!)

      எதுக்கு கேக்கேறேன்னா....நீங்க ஃபோட்டோ எடுக்க முடியாது புரிகிறது. ஆனா பாருங்க கூகுள்கிட்ட சொன்னீங்கன்னு வைங்க...லூகேஷன்....அது எடுத்துக் கொடுத்திரும்!!!!!

      சமீபத்தில் - பெயர் மறந்து போச்சு - நல்ல தொழில்நுட்ப அறிவு உள்ளவர் பேசிய போது சொன்னார் இந்தியாவில் ஏஐ இன்னும் அவ்வளவாக வரவில்லை, இஞ்சினியரின் பாடதிட்டங்களிலும் கூட இந்த சப்ஜெக்ட் தனியாக இல்லை என்றெல்லாம் பேசியவர் அமெரிக்காவில் புதிய தொழில்னுட்பம் பற்றிய மாநாடு ஒன்றில் கலந்து கொண்டாராம். சும்மா அதை பயன்படுத்தி டெஸ்ட் பண்ணுவோம் என்று தன் மகளின் நம்பரைக் கொடுத்து பார்த்தப்ப அவர் மகள் இன்ன இடத்தில் இந்த உணவகத்தில் இந்த உணவு சாப்பிட்டார் அதுக்கு மசால் தோசைன்னு சொல்லத் தெரியலை ஆனா ஆங்கிலத்தில் விவரித்திருந்திருக்கிறது. இவர் அதிலிருந்து என்று புரிந்து கொள்ளும் அளவு) அந்த இடத்திலிருந்து எந்த வாகனத்தில் தன் இருப்பிடம் சென்றார்...அந்த இருப்பிடத்தின் பெயர்....தன் ரூம் கதவைத் திறக்கும் வரை ஃப்ராக்ஷன் ஆஃப் செகன்ட் வரை அதாவது கதவு திறந்த நிமிடங்கள் நொடிகள் துல்லியமாகச் சொல்லிவிட்டு...இன்னும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவரது லொக்கேஷனை பகிர் என்று கேட்டிருக்கிறது.

      எனக்கு இதில் ஒரு டவுட் வந்தது இத்தனையும் லொக்கேஷன் தெரியாமல் சொல்லியிருக்குமா? ஏன் லொக்கேஷன் கேட்கிறது என்று...ஒரு வேளை அப்பெண் ரூமிற்குள் சென்றதும் நெட்வொர்க் இல்லையோ இல்லை லொக்கேஷன் ஆஃப் செய்துவிட்டாரோ தெரியவில்லை. இல்லை நான் அவர் பேசியதை சரியாக உள்வாங்கலியான்னு மீண்டும் அந்த வீடியோவை தேட முயற்சி செய்கிறேன் முடியலை.

      கீதா

      நீக்கு
    3. ரொம்ப யோசிக்க வைக்கிறது... ரொம்ப சந்தேகப்பட வைக்கிறது!

      நீக்கு
    4. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பும், பல நன்மைகளைக் கொண்டுவரும்போதே தீமைகளையும் கொண்டுவரும். இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை.

      உதாரணமா முதலில் கூகுள் மேப்பிற்காக அவர்கள் சாலைகள் மற்றும் பலவற்றைப் படமெடுத்தபோது நான் அதனால் செக்யூரிட்டி த்ரெட் வரும் என்று நினைத்தேன். ஆனால் கூகுள் மேப் இல்லை என்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர் வீட்டு கிச்சனே எங்கிருக்கு என்பது தெரியாது. ஆனாலும் போர் என்று வந்துவிட்டால், அந்த data நமக்கு ஆபத்துதான்.

      நான் இணையத்தில் எது செய்தாலும், என்ன எழுதினாலும் அதனை பிறர் நிச்சயமாகக் கண்காணிப்பர், கூகுள் சோஷியல் மீடியா போன்றவையும் கண்காணிக்கப்படும். நம் சோஷியல் மீடியா கமெண்டுகளை வைத்து விசா மறுக்கப்பட்ட நிகழ்வுகளைப் படித்திருக்கிறேன்.

      நீக்கு
    5. உண்மை.  இணையத்தில் இலவசமாக தரும் நிறைய ஆப் களுக்கும் இது பொருந்தும்.

      நீக்கு
  3. பாசை பக்கத்தில் வைத்துக்கொண்டே எதிர்த்த ஸீட் பெண்ணை ஆராய முடிஞ்சதா? வீட்டுக்கு போன பின்பு ஏதாவது அர்ச்சனை நடந்ததா? நான் ஹோட்டலில் சாப்பிட்டு பலநாள் ஆகிவிட்டது. அப்படி ஹோட்டல் ஐட்டம் வேண்டுமென்றால் ஸ்விக்கி தான்.

    எனக்கு உள்ள நோய் பட்டியலில் இந்த இரண்டு நோய்களும் உள்ளவை தான். COPD, ஆஸ்துமா இரண்டும். வீட்டில் நெபுலைசேர் உண்டு, மருந்தும் ஸ்டாக் உண்டு. முதல் காரணம் நிறைய வருடங்கள் சிகரெட் பிடித்தது. இரண்டாவது காரணம் காற்றில் உள்ள ஈரப்பசை. 40 வருடங்கள் அலுவலகத்தில் ஏ சி யில் வேலை செய்துவிட்டு ஒய்வு பெற்றபின் வீட்டில் ஏ சி இல்லாமல் காற்றில் உள்ள 95% ஈர பசையினால் ஆஸ்த்மா தொந்தரவு.

    பீஹார் சிறுவன் மொழிபெயர்க்கக் கூடிய அளவு மலையாளம் கற்றது மிக மிக சிறப்பு. இங்கு உள்ள மலையாளி பிள்ளைகள் 10 பாஸ் செய்தாலும் பிழை இல்லாமல் மலையாளம் எழுத வராது.

    அவன் என்ற தலைப்பில் எல்லாம் பெண்ணே என்று ஒரு கவிதை. அவன் சொன்னமாதிரி என்று நகுலன் தான் கவிதை எழுதுவார். இந்தக் கவிதையும் நகுலன் எழுதியது போல் உள்ளது., சர்வம் சக்தி மயம் ? கவிதைக்கு பாராட்டுகள்.

    அனுஷ்கா (அனுஷ்கா தானே?) கொண்டு வரச் சொல்வது மைக்ரோ வேவ் அவன் என்று நினைக்கிறேன்..

    மாமனார் ஜோக்குகள் இரண்டும் ஜோக்குகள் அல்லாமல் நடக்கும் கதை யாக தோன்றுகிறது. நானும் மாமனாருக்கு முன் சிகரெட் பிடித்தவன் தான்.

    பா வே நியூஸ்ரூம் கலர் கலராக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.
    கொஞ்சம் சிறிய வியாழன் பதிவானாலும் எல்லா பகுதிகளும் உள்ளன. சிறப்பு.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் கடுப்படிப்பார்...  மற்றபடி ரகளை எல்லாம் பண்ண மாட்டார்...  ரொம்ப நல்ல மாதிரி...!

      நான் ஸ்விக்கியிலும் வரவழைப்பேன், நேரிலும் செல்வேன்!

      என் அப்பா வீசிங் தொந்தரவால் மிகவும் அவஸ்தைப் பட்டார்.  அன்புத் பரிசாக எனக்கும் கொஞ்சம் கொடுத்து சென்றிருக்கிறார்.  பணியின் ஓய்வு பெறும் கடைசி சில வருடங்கள் அவர் ரயிலில் தினசரி வெளியூர் சென்று வேலை பார்த்ததால்தான் தனக்கு அப்படி தொந்தரவு வந்தது என்று சொல்வார்.  மதுரை டு விருதுநகர்.

      தமிழ்சசிறுவர்களும் அங்ஙனமே...!

      அனுஷ் அவன் என்று என்னைதான் குறிப்பிடுகிறார்!!!  

       //கொஞ்சம் சிறிய வியாழன் பதிவானாலும் எல்லா பகுதிகளும் உள்ளன. சிறப்பு.//

      ஆஹா..  நன்றி...

      நீக்கு
    2. // பா வே நியூஸ்ரூம் கலர் கலராக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. //

      ஆனால் முன்னரும் இப்படி கலர் கலராய் கொடுத்திருக்கிறேன் JKC Sir...

      நீக்கு
    3. //பா வே நியூஸ்ரூம் கலர் கலராக அழகாக அமைக்கப்பட்டுள்ளன. // செய்திகளை வண்ணமயமாக்கிய பெருமை ஸ்ரீராமிற்குரியது. முதல் மூன்று செய்திகளும் கூட அவர் உபயம்தான். இதைப்போல பல வாரங்களில் எக்ஸ்ட்ரா செய்திகளை கோர்ப்பார்,ஆனால் தன் பெயரை குறிப்பிடாத தியாகி! எனக்குதான் குறுகுறுக்கும். இன்று சொல்லி விட்டேன்.

      நீக்கு
  4. நடந்த சம்பவத்தை வஷுவலைஸ் பண்ணும்படியாக படத்தைக் கோர்த்தவருக்குப் பாராட்டுகள்.

    நானும் இந்த மாதிரி பொதுவா பார்த்து மனைவியிடம் குறிப்பிட்டாலும், பிறகு மனதுக்குள் வருத்தப்படுவேன், அவங்க மனசுல தவறா நினைச்சுப்பாங்களே, ஆண் என்ற திமிர்ல இப்படியெல்லாம் பண்ணுகிறோமே என்று. (எப்பயாச்சும் சொல்லுவா, கண்ணாடில கொஞ்சம் அப்போ அப்போ பார்த்துக்கோங்க என்று)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // பிறகு மனதுக்குள் வருத்தப்படுவேன், அவங்க மனசுல தவறா நினைச்சுப்பாங்களே, //

      ஹிஹிஹி  நம்பிட்டேன்!  நான் தினசரி கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறேனே..!!!

      நீக்கு
    2. நிஜம் ஶ்ரீராம். என்னை, ஒரு பெண்ணாகப் பிறப்பாய் என்று சொன்னால், தாங்காது கடவுளே... வேற யாரையாவது அப்படிப் பண்ணு என்று சொல்லிவிடுவேன்.

      நீக்கு
    3. 'மங்கையராய் பிறப்பதற்கே பெரும் மாதவம் செய்திட வேண்டுமம்மா' ன்னுல்லாம் பாடி இருக்காங்க..  என்ன இப்படி சொல்லிட்டீங்க?  பயப்படறீங்களா நெல்லை?

      நீக்கு
    4. அவங்களுக்கு ஆண்களைவிட வேலையும் பொறுப்பும் சகிப்புத் தன்மையும் ஜாஸ்தி. அது ஆண்களுக்கு வரணும்னா சின்ன வயசுலேர்ந்து பிராக்டிஸ் பண்ணி, திருமணம் ஆனபின்பு இம்ப்ளிமென்ட் பண்ணி, நம்ம பசங்களும் நாம் நடப்பதை, செய்வதைப் பார்த்துக் கத்துக்கும்படியாக இருக்கணும்.

      நீக்கு
    5. அது அவங்க ஜீன்ல இருக்கு.  ஹார்மோன் உபயம்.  என்ன பிராக்டிஸ் பண்ணினாலும் ஆண்களுக்கு 100 சதவிகிதம் அச்சீவ் பண்ண முடியாது!

      நீக்கு
  5. சு வெங்கடேசனின் கேள்வி, நேரு செங்கோல் வைத்துக்கொண்டதில் அர்த்தம் இருக்கிறது, அதனால் பல அரசியல்வாதிகள் தங்கள் மனைவியுடன் நேரு முன்னால் வருவதைத் தவிர்த்தார்கள், ஆனால் மோதிக்கு எதற்கு செங்கோல் என்று. இப்படித்தான் நான் புரிந்துகொள்கிறேன். வெங்கடேசன் பெண் மேயர் ஒருவருக்கு செங்கோல் கொடுத்த படத்தையும் பார்த்தேன்.

    இவர்களைப் போன்றவர்கள் பேச்சைக் கேட்கும்போது (திமுக அரசியல் தலைவர்கள் உட்பட), தமிழக மக்கள்-தேர்தலின்போது காசு வாங்கி வாக்களிப்பவர்கள், வாழ்க்கையில் எப்போதுமே முன்னேறாமல் அவர்கள் சந்ததிகள் உட்பட அனைவரும் இந்த மாதிரி பிச்சை எடுத்தே வயிற்றைக் கழுவ வேண்டும் என்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவன் (சுவெ ) செங்கோலை எதன் குறியீடாக வைத்திருக்கிறான் பாருங்க...   இவர்கள் பேச்சு எலலாமே மக்களுக்கு உதவரா மாதிரி எதுவும் இருக்காது..  உருப்படாத விஷயங்களை எல்லாம் பேசி உணர்ச்சிவசப்பட்டு உருப்படாமல் போவாங்க..  யாருக்கும் பயனிருக்காது.

      நீக்கு
    2. எனக்கென்னவோ கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பாராளுமன்றத்தில் விவாதிக்காமல், அல்லது அது பத்திரிகையில் வராமல் பார்த்துக்கொள்வதற்காக நடத்தப்பட்ட நாடகம் என்றே தோன்றியது. என்ன இருந்தாலும் சொந்தக் காலில் நின்றால் பத்து வாக்குகள் கூட இவனுகளுக்கு வராது என்பது தெரியாதா என்ன? அதனால் ஜால்ரா தட்டிப் பிழைக்கிறார்கள்

      நீக்கு
    3. இது கவன திசை திருப்பல் என்று சொன்னால் சு வெ மகிழலாம், 'அப்பாடி..  நம்ம முட்டாள்த்தனத்தை இப்படி சமாளிக்கலாமே' ன்னு 

      நீக்கு
    4. மேலும் கள்ளக்குறிச்சி மட்டுமா...  இபப்டி ஆரம்பித்தாள் இவர்கள் நிறைய கவன திசை திருப்பல்கள்தான் செய்து கொண்டிருக்க வேண்டும்!

      நீக்கு
  6. கேஜிஜி, அனுஷ்காவின் gif போட்டாலும் போட்டார். மறந்திருந்த ஶ்ரீராமுக்கு, கவிதை, இதைச் சாக்கிட்டு வியாழனில் படம் என்று ஜமாய்க்கிறார். நடத்துங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கணும் நெல்லை...  இது சென்ற வாரமே ஷெட்யூல் செய்யப்பட பதிவாக்கும்!  இந்த அனுஷ் தான் ஃபர்ஸ்ட்!

      நீக்கு
  7. பதில்கள்
    1. அநேகமா அது அவரோட மைண்ட் வாய்ஸாத்தான் இருந்திருக்கும்!!

      நீக்கு
  8. மங்கை அல்லது, கடைசிப் பருவத்தில் இருக்கும் மடந்தையை, யுவதி என்று குறிப்பிட்டிருப்பது, அவள் உங்கள் மனதை விட்டு அகலவில்லை, இனி கவிதைகள் வரும் என்றெல்லாம் எண்ண வைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனாலும் மனசைப் படிக்கறீங்க நெல்லை...   கவிதை எழுததான் நினைக்கிறேன்...  

      நீக்கு
  9. எந்த வியாதி, உடல் குறைபாடுகளைப் பற்றிப் படித்தாலுத் அந்த சிம்ப்டம்ஸ், நமக்கும் இருப்பதுபோலத் தோன்றுவது ஏன்?

    எனக்கு சமீப காலமாக உணவுக் குழாய் சுருங்கிவிட்டது என்று தோன்றுகிறது. எதையும் முழுங்குவதற்கு முன்னால் (சேவை, காஞ்சீபுரம் இட்லி....) பக்கத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது AllheraingIposesstrustophobia என்று சொல்வார்கள்.  நாமெல்லாம் விக்ஸ் , அனாசின் விளம்பரம் அடிக்கடி பார்த்ததால் வந்த வினை!  

      என் அப்பாவுக்கு ஒருவகை விழுங்கும் பய வியாதி உண்டு.  காபி, தண்ணீர் குடித்தால் கூட பக்கத்தில் எதையாவது சப்போர்ட்டுக்கு பிடித்துக் கொண்டுதான் குடிப்பார்.  அதையே திடீரென விழுங்க ரொம்ப சிரமபப்டுவது போல குதித்து அவஸ்தைப் படுவார்.

      அது சரி..  சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது தெரியுமோ...  சாப்பிடுவதற்கு அரைமணி முன், அரைமணி பின் குடிக்கலாம்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. நெல்லை - புதன் கேள்வியா?

      நீக்கு
    4. நெல்லை... அட்டென்ஷன் ப்ளீஸ்...

      நீக்கு
    5. கேஜிஜி இதனை புதனுக்கு எடுத்துக்கொள்வார்.

      பொதுவா எவ்வளவு பெரிய ஆளானாலும், மனைவிக்கு கணவன், ஓகே ஓகேதான், பாராட்டோ அல்லது வியந்து பார்த்தலோ இருக்காது..... என்று கங்கை அமரன் சொல்லியிருக்கிறாரே.. பொதுவாக அப்படித்தானா?

      ஆண்களுக்கு உள்ள சுதந்திரம், பெண்களுக்கு இந்தியாவில் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

      காமராஜரைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதுகிறார்களே.. இன்றைக்கு அவர் உங்கள் தொகுதியில் நின்றால் நீங்கள் வாக்களிப்பீர்களா? தனியாக நின்றால் அவருக்கு டெபாசிட் கிடைக்குமா?

      நீதி பரிபாலனம் செய்பவர்களுக்கு கருணை அவசியமா இல்லை சட்டப்புத்தகத்தில் இருப்பதுதான் வேதமாக இருக்கவேண்டுமா?

      நீக்கு
  10. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  11. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம்
    வாழ்க..

    பதிலளிநீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. மனைவி அருகில் இருக்கும் போது இப்படி எதிரில் இருக்கும் பெண்ணைப் பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான்.
    பயமே இல்லை போலும். போன் எதிர்ப்பார்ப்பு வேறு.

    அது போல இன்னொரு எதிர்ப்பார்ப்பு அனுஷ் அவன் கவிதையை படித்து விட்டு உங்களை அழைத்து வர சொல்வது.

    மருமகள் மாமாவின் இந்த பதிவை படிக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருமகளும், பாஸும், இதை நான் எழுதிய உடனேயே படித்து விட்டார்கள்.  "அவர் உங்களிடம் ஐம்பது ரூபாய் கேட்டார்.  பார்க்க சுமாராய் இருந்தார் என்றீர்கள்.  அதை வைத்து இப்படி கற்பனையை பறக்க வச்சுட்டீங்க" என்று சிலாகித்தனர்! 

      மருமகள் "அப்பா.." என்று கிண்டல் ஆட்சேபணையுடன் படிக்கத்தொடங்கினாலும் ரசித்தார்.

      அனுஷ் அந்த 'அவனை' அப்படி ரசித்திருக்கிறார்!

      நீக்கு
  14. வஹீதா ரஹ்மான் நாட்டியக் காட்சியில் தான் வருவார்.
    "சலாம் பாபு சலாம் பாபு என்னை பாருங்க தங்ககையால் காசை அள்ளி வீசுங்க" என்று பாடி ஆடுவார்.

    தங்கவேலு காசை அள்ளி வீசும் காட்சியில் வருவார், நீங்கள் தான் ஓட்டி ஓட்டி பார்த்து இருக்கிறீர்கள். எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும் இந்த படத்தில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா...  ஆமாம் ஓட்டி ஓட்டி பார்த்ததால் மிஸ் செய்திருப்பேன்..  அந்தப் பாடல் காட்சியை மறுபடி பார்க்கிறேன்!

      நீக்கு
  15. பதில்கள்
    1. காத்திருந்து...? வரும்.. ஆனால் வராது என்கிறீர்களா?!

      நீக்கு
  16. ஆஸ்துமாவுக்கு மூச்சு பயிற்சி தான் சிறந்தது.
    மனவளகலை உடற்பயிற்சியில், கபாலபதி பயிற்சி கற்றுக் கொண்டால் சரி செய்யலாம். பிராணாயமம் கற்று கொண்டு முறையாக செய்தால் சரியாகும். டஸ்ட் அலர்ஜி . அடுக்கு தும்மல் குணமாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே அக்கா..  அந்தப் பொறுமை எல்லாம் இருந்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேனே...

      நீக்கு
  17. நல்ல வேளை...

    வாசிப்பு அனுபவம் மகிழ்ச்சி..

    எழுத்தென்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // நல்லவேளை...//

      எதற்கு?

      நன்றி செல்வாண்ணா 

      நீக்கு
    2. இந்தப் பதிவைப் படித்த வேளை!...

      விவரமாக தட்டச்சு செய்ய இயல வில்லை..

      நீக்கு
    3. உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் செல்வாண்ணா..  சீக்கிரமே தஞ்சைப் பக்கம் வருவேன்.

      நீக்கு
    4. ஸ்ரீராமிற்கு முன்னாலேயே நான் வந்துவிட்டால், ஸ்ரீராம் அகராதியில் 'சீக்கிரம்' என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்துவிடும். ஹா ஹா ஹா

      நீக்கு
    5. எனக்கு இருக்கும் சில குடும்ப கமிட்மென்ட்களைப் பொறுத்தும், மகனின் கார் தேவையைப் பொறுத்தும் என் பயணம் அமையும்!

      நீக்கு
  18. /// இனி கவிதைகள் வரும் என்றெல்லாம் எண்ண வைத்தது///

    இனி
    வரும் காலம்
    கனவு தரும் காலம்
    கவிதை வரும் காலம்..

    நெல்லை அவர்களுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  19. பாஸ் ஒண்ணும் உங்ககிட்ட சண்டைக்கு வந்திருக்க மாட்டாங்க!!! தெரியும்!!!! அவங்களுக்கு இன்னொன்னும் தெரிஞ்சுருக்கும், வியாழன் பதிவுக்கு சப்ஜெக்ட்னு!!

    சரி அவங்க இப்படி ஆண்களை ஆராய்ஞ்சுருப்பாங்களா? உங்ககிட்ட சொன்னதுண்டா?

    ஆண்களை நான் பார்ப்பதுண்டு, நோட்டம் விடுவதுண்டு (பெண்களையும் தான்) எழுதறதுக்கு பலதும் உதவுமே என்று. ஆனா வெளில மூச்!!! அதுக்குத் தோதான சகி இல்லை!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆண்களை (கணவர்களை) பாம்பு என்று தள்ளிப் போய்விடவும் முடியாது, பழுதென்று மிதித்துவிடவும் முடியாது. பெண்கள் இந்த விஷயங்களை கணவனிடம் பேசாமல் இருப்பதே உத்தம்ம்

      நீக்கு
    2. ஆமாம்.. தெரிஞ்ச மாதிரி காட்டிக் கொண்டால் குளிர் விட்டுப் போயிடும்!

      நீக்கு
  20. ஆனா அந்தப் பையன் ஆர்டர் பண்ணினது எதுவுமே தட்டில் இல்லையே!! கூகுளோ மீட்டாவோ சரியா கொடுக்கலை போல

    கீதா

    பதிலளிநீக்கு
  21. அப்படினா நாம அங்கலாய்ப்புன்னு சொல்றது சரியான அர்த்தத்தில் இல்லையோ?

    தமிழகராதி கொஞ்சம் கிட்ட வந்து அல்பம்னு சொல்லாம!!!!!!! புலப்பம் னு சொல்லிருக்கு!

    கீதா

    பதிலளிநீக்கு
  22. சீனாக்காரங்களை மட்டும் பாம்பு கொத்தாதா....அதுவும் நம்மளை கொன்னு தின்னுறவங்கன்னு போட்டிருக்க வேண்டாம்!!?

    காஸ் குழாய்கள் அடியில் புதைக்கப்பட்டாலும் பிரச்சனைகள் இருக்குதான்.

    அட! அப்ப எழுத்தாளரின் எழுத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒருவன் தான் என்று நினைக்க வைக்கிறது என்பதோடு மரியாதை கொடுக்கும் அவன் குணமும் வியக்க வைக்கிறது. திருடனிடமும் அறம்.

    சில செய்திகளில் வாக்கியங்கள், சொற்கள் சரியாக அமையவில்லை.

    செய்திகளில் ஆர்யன் தாக்கூர் மகிழ்ச்சியான செய்தி என்பதோடு சாதாரண சூழலில் வளரும் நல்ல திறனுள்ள ஒரு சிறுவன் அவர் திறமை மேன்மேலும் வளர வேண்டும்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சமயங்களில் நீண்ட செய்தியை சுருங்கும்போது அப்படி ஜுனூன் தமிழ் போல ஆகி விடும் போல!

      நீக்கு
  23. ஆஸ்துமா பற்றிய பகுதி நல்ல விவரங்கள். ஆஸ்துமாவிற்கு ஆங்கில மருத்துவம் ஒரு புறம் இருந்தாலும், மூச்சுப்பயிற்சி மிகச் சிறந்த பலனளிக்கும் ஒன்று.

    கீதா

    பதிலளிநீக்கு
  24. நேதாஜி, ஹிட்லர் பற்றி மீட்டா புதியதாக எதுவும் தரலை இல்லையா ஸ்ரீராம்?

    அழகான படங்கள்.

    செங்கோலைப் பார்த்ததும், சுவெ பேசியது நினைவுக்கு வருகிறது. ஹூம் லோக்சபாவில் இப்படியும் .......ஆட்கள் எல்லாம் இருந்தால் என்ன உருப்படியா நடக்கும்!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேத்தாஜி, ஹிட்லர் பற்றி க்ரூப்ல சொல்லி இருந்தேனே..  அம்புடுதேன்!

      நீக்கு
    2. அதை தமிழில் எழுதி எ பி யில் ஸ்ரீராம் வெளியிடலாம் என்றுதான் நானும் நினைக்கிறேன்.

      நீக்கு
  25. கவிதை எனக்குப் பிடித்தது....அனுஷ் விளிக்கும் 'அந்த நபர்' யார்னு எங்களுக்குத் தெரியாதாக்கும்!!!

    "யாரங்கே அவரை அழைத்து வந்து பொற்காசு கொடுங்கள்"

    அப்படியாச்சும் இனி என்னைப் பத்தி எழுதறதையும் என் படத்தையும் போடுறதை நிறுத்துகிறாரான்னு பார்ப்போம்

    "அனுஷ்! அவர் பொற்காசுக்காக எழுதுவதில்லை, படம் போடுவதும் இல்லை"!!!

    அனுஷ் சிலையானார். அதைப் பத்தியும் ஒரு கவிதை வியாழனில் வரு/வந்த-தாம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. பத்துவினாடி கதைகள் சூப்பர். முதல் கதை அணைத்தல்ன்ற சொல்லில் வார்த்தை விளையாட்டு!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. அனைத்தும் நன்று. முதல் பகுதி - ஆஹா...

    பதிலளிநீக்கு
  28. வாசன் கஃபே!!! கதையான உண்மை நிகழ்வு! கதையைச் சொல்லும் நாயகனை, நாயகி மிக அருமையாக நேர்த்தியாகப் புரிந்து கொண்டு கையாண்டதை மிகவும் ரசித்தேன். என் ஓட்டு உங்கள் நாயகி பாஸிற்குத்தான்!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பாஸ் - அதிசயம்.

      துளசிதரன்

      நீக்கு
    2. ஹா... ஹா.. ஹா.. பாஸ் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்...! நன்றி துளசி ஜி.

      நீக்கு
  29. நுரையீரல் பற்றிய துகள் கேள்வி பதில் மிக அருமையான தகவல்களுடனான பகுதி.

    அந்த பீஹார் சிறுவன் மலையாளத்தில் மொழி பெயர்த்தது என்பது மிகவும் ஆச்சரியமான விஷயம் என்பதோடு மிகவும் சிறப்பான விஷயம். மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களே கூட குறிப்பாகப் மாணாக்கர்கள் பிழையில்லாமல் எழுதுவது என்பது குறைவுதான். அச்சிறுவன் மொழிபெர்ப்பு செய்யப்பட்ட கதை பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பதும் நல்ல ஒரு மெசெஜ்.

    துளசிதரன்



    பதிலளிநீக்கு
  30. வஹிதா ரஹ்மான் - கோமதி அக்கா அவர்கள் எழுதியிருந்த பதிவு பார்த்துவிட்டேன் கருத்து கொடுக்கவில்லை என்று நினைக்கிறேன்

    ஓ நீங்கள் யுட்யூபில் பார்த்தீர்களா அந்தப் படத்தை. இப்போது எனக்கும் பார்க்கும் ஆர்வம் வந்துவிட்டது பார்க்க வேண்டும்.

    துளசிதரன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாருங்கள்.  படம் ரொம்ப சுருக்கமாக இருந்ததது போல உனர்வு.  நான் ஓட்டி ஓட்டி தான் பார்த்தேன் எனினும் அப்படி தோன்றியது.

      நீக்கு
  31. சம்பவம் உண்மைதான் ஜூலை 1-ம் தேதி 9:57 pm ஜிபேய் ஆகி இருக்கிறதே ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போ தெரிஞ்சிருக்குமே ஜி..  நான் ஜொள்ளுவதெல்லாம் உண்மைன்னு...!   

      நீக்கு
  32. செய்திகளில் அந்த பாம்பு விஷயம் திகில்.

    திருமணங்களில் கூட இப்படி அசைவம் இல்லை என்று சண்டையா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கெனவே தாலி காட்டும்  மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்து  கல்யாணம் நின்ற நியூஸ் வந்தது நினைவிருக்கிறதா?!!

      நீக்கு
  33. பழைய படங்கள் ரசனை. இந்தச் செங்கோல் மேட்டர்தானே சமீபத்தில் சர்ச்சையானது?

    பொக்கிஷங்களில் 10 நொடிக் கதைகள் மிக அருமை. நல்ல முயற்சி. 10 நொடிகள் கூடப் போது ட்விஸ்டுடன் முடிக்க என்பதை உணர்த்தும் கதைகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செங்கோல் மேட்டர்தான் சர்ச்சையானது.  இது மாதிரி உபயோகமற்ற விஷயங்களைதானே இவர்கள் அங்கே 'விவாதி'ப்பார்கள்!

      ஆம் 10 நொடிகளில் ஒரு ட்விஸ்ட், கதை ஓவர்.  சுஜாதா ஒரே வரியில் ஒரு கதை சொன்னார், நினைவிருக்கா?

      நீக்கு
  34. /// உடல்நிலையை பார்த்துக் கொள்ளுங்கள் செல்வாண்ணா.. ///


    அன்றைக்கு திரு நெல்லை அவர்களும் இப்படிச் சொன்னார்...

    /// சீக்கிரமே தஞ்சைப் பக்கம் வருவேன்.///

    முன்னதாக தகவல் கிடைக்குமா?!..

    மகிழ்ச்சி..
    நன்றி ஸ்ரீராம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆசை இருக்கு தாசில் பண்ண....   தஞ்சாவூர் வர...   திட்டமெல்லாம் இருக்கு...  நேரம் அமையனும்..  சில வேலைகள் முடியணும்.  நானும் என் அண்ணனும் வருவதாக யோசனை!

      நீக்கு
  35. பீகார் சிறுவன் பற்றிய செய்தியில் அவன் மொழி பெயர்த்த மலையாள கதை யின் தலைப்பு தவறாக கொடுக்கப்பட்டிருக்கிறது. சரியான தலைப்பு ULLITHEEYALUM ONPATHINTE PATTIKAYUM (Paperback, PRIYA A S) உள்ளி தீயலும் ஒம்பதின்டே பட்டிகையும். சின்ன வெங்காய தீயல் குழம்பு + ஒம்பதாம் வாய்ப்பாடு.
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ... அப்படியா? ஞான் மலையாளம் கொறச்சு கூட அறியில்லா...

      நீக்கு
  36. எல்லா மாநிலங்களையும் விட தமிழ் நாட்டில் தான் மின் கட்டணம் குறைவு. வீட்டு மின்கட்டணத்திற்கு
    முதல் 100 அளவை இலவசம் தமிழ் நாட்டில் மட்டுமே. மற்ற மானிலங்களௌயும் ஒப்பிட்டு விவரமான பட்டியல் தரட்டுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பட்டியல் வேண்டாம். பதிவு பற்றி ஏதாவது.....?

      நீக்கு
    2. கர்நாடகாவில் முதல் 200 யூனிட்டுக்கு கட்டணம் கிடையாது. மாதம்தோறும் ரீடிங் எடுக்கிறார்கள்.

      நீக்கு
    3. KGG, நேற்றைய தினமலரில் எல்லா மாநிலங்களுக்குமான மின்கட்டண விவரப் பட்டியல் வெளி வந்திருக்கிறது. அதில் கர்நாடக மானிலத்தில் முதல் நூறு யூனிட்டுகளுக்குக் கூட இலவசம் என்று குறிப்பிடப்படவில்லை. முதல் 100 யூனிட்டுகளுக்கு மிக அதிகக் கட்டணம் ராஜஸ்தானில் அதற்கு அடுத்து கர் நாடகவாவில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
      முதல் நூறு யூனிட்டுகளுக்கு குறைந்த கட்டணம் தெலுங்கானாவில்.
      முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணமே இல்லை என்பது தமிழகத்தில் தான்.
      எந்தத் திட்டமென்றாலும் சாதாரண எளிய மக்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவது தமிழகம் தான். இந்த விஷயத்தில் மற்ற மானிலங்கள் தமிழகத்தைக் காப்பி அடித்தால், இந்திய அளவில் பிரதமர் இதைக் கருத்தில் கொண்டால் எளியோர் வாழ்வில்
      மலர்ச்சி ஏற்படும்.

      நீக்கு
    4. //கர்நாடகாவில் முதல் 200 யூனிட்டுக்கு கட்டணம் கிடையாது. மாதம்தோறும் ரீடிங் எடுக்கிறார்கள்.// - சும்மா தமிழக அரசைக் குறை சொல்லக்கூடாது. தமிழகத்தில்தான் ஆரம்பத்திலிருந்து ரூபாய்க்கு 3 படி அரிசி என்று ஆரம்பித்து இலவச பல்பொடி, செருப்பு, தொலைக்காட்சி, ஆடு, மாடு, சைக்கிள் என்று ஏழைகளுக்காக ஆட்சி நடக்கிறது. குவாட்டர் வாங்க காசு இல்லாமல், கள்ளச்சாராயத்திற்குப் போகக்கூடாது என்று இப்போ 90 மிலி (ஆமாம் குவாட்டர் அளவு என்ன?) டெட்ரா பேக் என்று புதிதாகக் கொண்டுவருகிறார்கள். ஏழை மக்கள் வெட்கப்பட்டுக்கொண்டு டாஸ்மாக்கிற்குப் போகாமல் இருந்துவிடக்கூடாது, சின்னப்பசங்களும் வாங்காமல் இருந்துவிடக்கூடாது என்று இப்போ புதிதா ஸ்விக்கி, ஸொமட்டோ மூலம் ஆர்டர் செய்யும் வசதி கொண்டுவரலாமா என்று யோசனை ஓடுகிறதாம். ஏற்கனவே பெண்களுக்கு இலவச பஸ், மாதம் ரூ 1000 என்று இந்தியா என்ன, அகில உலகத்திற்குமே எடுத்துக்காட்டாக தமிழகம் நடந்துகொண்டிருக்கிறது. இதில் மற்ற மாநிலங்களைப்பற்றி ஒப்பீடு செய்ய வந்துவிட்டீர்களே.

      நீக்கு
  37. தமிழகத்தில் மது என்றால் வடமாநிலங்கஅளில் பான் மசாலா, பான் பராக் (நினைச்ச இடத்தில் 'புளிச்: துப்பல்கள்) போன்ற பான் சமாச்சாரங்கள். அது சரி, பான் வகையறாக்கள் நரம்பு கோளாறுகள் விஷயங்களில் மதுவை விட ஆபத்தானவையாமே? அப்படியா? மக்கள் நல வாழ்க்கையில் அக்கறை கொண்டு
    வட மானிலங்களில் இவற்றின் விற்பனைக்கு தடை கொண்டு வரக் கூடாதோ?
    இப்போ இதெல்லாமே ஓட்டு அரசியல் ஆகி விட்டது என்கிறீர்களா? அதுவும் சரிதான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் இருக்கும் தெரு சுத்தமாக இல்லை என்று கவலைப்பட்டால், பக்கத்து ஊரில் உள்ள தெரு மட்டும் என்ன வாழுதாம் என்று கேட்கலாமா?  இந்தியம் 2 தாத்தா வேற தமிழ்நாட்டுல எல்லோரும் அவங்கவங்க வீட்டுலேருந்து சுத்தம் பண்றதை ஆரம்பிங்க என்று சொல்லி இருக்காராமே....!!

      நீக்கு
    2. அது நெல்லை சொன்னதற்கு பதில்.
      மத்திய அரசின் கொள்கைகள், கோட்பாடுகளில் பல எளிய மக்களுக்கு சாதகமாக இல்லை என்றால் அவர் மாநில
      அரசின் மது வியாபார அவலங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்.
      உங்கள் பின்னூட்டம் நெல்லைக்கான பதில் என்று கொள்கிறேன்.

      நீக்கு
    3. திமுக என்றில்லை தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எளிய மக்களின் பொருளாதார நலன்களுக்கு சாதகமாகத் தான் கொள்கைகளை வகுப்பார்கள். ஏனெலில் தமிழக மக்களின் விழிப்புணர்வு (Awareness) அப்படி!

      நீக்கு
    4. திமுக என்றில்லை தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எளிய மக்களின் பொருளாதார நலன்களுக்கு சாதகமாகத் தான் கொள்கைகளை வகுப்பார்கள். ஏனெலில் தமிழக மக்களின் விழிப்புணர்வு (Awareness) அப்படி!

      நீக்கு
  38. வணக்கம் சகோதரரே

    இன்றைய (ஆனால், நான் பதிவை படித்து கருத்து சொல்லும் நேரம் நேற்றைய என ஆகி விட்டது...)) ) வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    முதல் பகுதியை படித்தேன். ரசித்தேன். ஆனாலும், இப்படி உள்ளதை உள்ளபடி வெளியில் சொல்லக் கூடாது. ஹா ஹா ஹா. சுவாரஸ்யமாக "ரசித்து" எழுதியுள்ளீர்கள். கதம்பத்தின் மற்ற பகுதிகளும் சுவாரஸ்யமாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  39. சில்லறை இல்லையெனில் கடன் வாங்கி ஜிபே செய்கிறார்களா? நல்ல உத்தி! AI படம் நன்று.

    தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவராவது வாங்கி விட்டு செய்கிறார். பல சமயங்களில் நம்மிடம் ரூபாயைக் கொடுத்து விட்டு அவர்கள் சொல்லும் நம்பருக்கு ஜி பே செய்யச் சொல்வார்கள். நான் அலுவலகத்தில் சில முறை செய்திருக்கிறேன். நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
    2. சிறு வியாபாரிகள் கூட ஜி பே பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலத்தில் படித்தவர்கள் தங்கள் அலைபேசியில் நிறுவிக் கொள்ள ஏன் யோசிக்கிறார்களோ?!

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!