கொஞ்சம் முன்னாலிருந்து....
அவனா, போனை வைத்து விட்டும் புலம்பலை தொடர்ந்தான். எல்லோரும் A/C ரூமில் சுகமாக இருப்பது போலவும், அவன் மட்டும் உழைக்கும் வர்க்கமாய் கஷ்டப்படுவது போலவும், விடாது அலுத்துப் போகும் அளவு, அரற்றிக் கொண்டே வந்தான். எனது ரத்த அழுத்தம் 80 லிருந்து 90, 95, 98, 100 என்று ஏறிக் கொண்டிருந்தது. சொல்லப்போனால் சமீப காலங்களில் அது மாத்திரை சாப்பிட்டும் 95 லேயே நிலைகொண்டிருக்கிறது! பின்னால் அமர்ந்திருக்கிறவர்களுக்காகவே அவன் உளறுகிறான் என்பது உ கை நெ க யாய் தெரிந்தது. கேட்காமல் இருக்கவும் முடியாத சூழல்.
ஒரு நிலையில் 'ஒழிந்து போகிறான் நாய்' என்று விடவும் விட்டு விட்டேன்.
அப்போது சுகுமாரிடமிருந்து ஃபோன் வந்தது. முதல் நாள் அவருக்கு வாட்ஸாப்பில் ஒரு பார்வேர்ட் அனுப்பி இருந்தேன். தாடி வைத்த ஒரு முஸ்லீம் பெரியவர் இந்து கடவுள், இந்து தத்துவம் பற்றி பேசிய வீடியோ அது.
அதைப்பற்றி அவர் விசாரிக்க போட்ட ஃபோனை அப்போது சட்டென மண்டையில் ஒரு பொறி தட்ட, அதை உபயோகித்துக் கொண்டேன். ஒரு முயற்சிதானே.. நானும் அதே அளவு செய்வேன் இல்லை? விளையாடிதான் பார்ப்போமே...
தொடர்கிறது...
"ஸார்... சொல்லுங்க.." என்றேன்.
"நேத்து அனுப்பி இருந்தியே... என்ன அது?" - சுகுமார்.
"ஓ.. நான் அனுப்பியதை கேக்கறீங்களா? போன மாதம் நாம் ஒன்று ரிஜிஸ்தர் செய்தோமே... கம்ப்ளெயிண்ட் ....அதே போல அடுத்தது.. நம்பர் போட்டு அதை அப்படியே ரெஜிஸ்டர் பண்ணிடுங்க..."
"கம்பிளெய்ண்டா? நம்பரா? பண்ணினோமா? நானுமா? இல்லம்மா..."
பிட் பிட்டாக குழம்பினார்!
"நான் கேட்டது நீ நேத்து அனுப்பி இருந்தியே ஒரு வீடியோ....."
"ஆமாம் அதேதான். அவங்க லிங்க்கும் அனுப்பி இருக்கேன் பாருங்க... ஓபன் பண்ணி போனதரம் செய்த மாதிரியேதான்... அதே மாதிரி பண்ணிடுங்க... (கொஞ்சம் இடைவெளி) எஸ்... எஸ்... நம்பர் போட்டுட்டு அந்த நம்பரை எனக்கும் ஃபார்வேர்ட் பண்ணிடுங்க..."
நான் பேச ஆரம்பித்திலிருந்தே டிரைவர் புலம்பலை நிறுத்தி கவனிக்கிறான் என்பதை கவனித்திருந்தேன். அவன் புலம்பலும் நின்றிருந்தது. லேசாக என் பக்கம் திரும்பிய முகத்தோடு - காதுகளோடு - வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.
நானும் அவனுக்கு கேட்கக்கூடாது, புரியக்கூடாது என்று பேசுவது போல பொதுவில் பேசி, ஆனால் அவன் காதுக்கும் கேட்கும் அளவில் சன்னமாக உரையாடலைத் தொடர்ந்தேன்.
சுகுமார் குழம்பிப்போய் "ஒண்ணும் புரியலைம்மா..." என்றார் பரிதாபமாக.
"ப்ரூஃபா? அனுப்பி இருக்கேனே.. சொன்னேனே... பார்க்கவில்லை?"
"என்னம்மா ஆச்சு? என் கிட்ட தான் பேசறியா?"
"ரெகார்ட் பண்ணி இருக்கேன் ஸார்... ரெக்கார்டிங்கைதான் அனுப்பி இருக்கேன்.. இருங்க பார்க்கிறேன்..."
செல்லை பார்ப்பது போல பாவனை செய்தேன்.
"ஓ... சுத்திக்கிட்டே இருக்கு.. மொபைல் டேட்டாதானே.. மெல்ல வரும்.. ப்ரூஃபோடு அட்டாச் பண்ணி கம்ப்ளைன்ட் ரெஜிஸ்டர் பண்ணுங் க.. காபி எனக்கும் அனுப்புங்க..."
"ஒண்ணும் புரியலை... பாயைப் பிராண்டலாம் போல இருக்கு... நீ ஏற்கெனவே பிராண்டிகிட்டுதான் இருக்கே போல... நான் வச்சுடறேன்மா... முடியல..."
"சரி ஸார்... புரிஞ்சுது ஸார்... டைம் எடுக்கட்டும் பரவாயில்ல.. ஆனா விடக்கூடாது இதை... இறங்கி அரைமணில பேசறேன்... என்ன ஸார்... (கொஞ்சம் குரலைத் தாழ்த்தி, ஆனால் கேட்கும்படியாக) மேப் ஸ்க்ரீன் ஷாட்டா? ஓ எஸ்... அதையும் அனுப்பறேன்... கட்டாயம்.. ஆமாம் டைமும் நோட் பண்ணியே அனுப்பறேன்.. ஓகே ஓகே..."
சுகுமார் ஏற்கெனவே வெறுத்துப்போய் ஃபோனை வைத்திருந்தார். தலையில் சொற்பமாக பாக்கி இருக்கும் முடியை சொரிந்து கொண்டிருப்பார்.
'என்ன ஆச்சு ஸ்ரீராமுக்கு?'
பரவாயில்லை, அவருக்கு அப்புறம் விளக்கிக் கொள்ளலாம்.
ஃபோனை வைத்தபின் அந்த ஆச்சர்யம் நிகழ்ந்திருந்தது. கடுப்பன் அமைதி ஆகி இருந்தான். சுத்தமான அமைதி நிலவியது. நிம்மதி. அப்புறமும் விடாமல் என் நாடகத்தை முழுமையாக்கினேன்.
அதாவது,
நான் ஆப்டாக அட்ரஸ் கொடுக்காமல் நகர் பெயர் மட்டும் போட்டு புக் செய்திருந்தேன். மேப் காட்டும் இடம் முடிந்து நான் போகவேண்டிய இடத்துக்கு முன்னாலேயே இறக்கி விடுவானா என்ன என்று தெரியவில்லை. அந்த பட்சத்தில் இன்னும் கொஞ்ச தூரம் கொண்டு விடு என்று கேட்காமல் அமைதியாக இறங்கி விடுவது என்று முதலில் முடிவு செய்திருந்தேன். இப்போது அதையும் நாடகமாக்கலாம் என்று தோன்றியது.
பின்னாலிருந்து பார்த்தல் தெரியும் வண்ணம்தான் ஒரு ஸ்டேண்டில் அவன் தன் அலைபேசியை வைத்திருந்தான். அதனால்தான் எல்லாவற்றையும் கவனிக்க முடிந்தது.
பார்த்தால்
அவன் அலைபேசி மேப்பில்
நான் இறங்க வேண்டிய இடத்தையும் தாண்டி டெஸ்டினேஷன் காட்டியது. 'நல்லது' என்று மனதில் நினைத்துக் கொண்டு சட்டென ஓங்கி குரல் கொடுத்தேன். "இங்கேயே நிறுத்தப்பா..." என்றேன்.
அமைதிக் குரங்கு திடுக்கிட்டு 'இங்கேயேவா?" என்றான்.
"ஆமாம்.. இங்கேயேதான்" அழுத்தமாக சொன்னேன்.
"இறங்க வேண்டிய இடம் இன்னும் கொஞ்ச தூரம் காட்டுது இல்ல?" என்று கேட்டபடி "மேப்பை ஒரு ஸ்கிரீன் ஷாட் எடுத்துக்கறேன்" என்றபடி அவன் அலைபேசியை ஒரு போட்டோ பிடித்துக் கொண்டேன். "ரோடும் மோசமில்லை.. நல்ல ரோடு தான்" என்றபடி சாலையை (தேவை இல்லாமல்) ஒரு படம் பிடித்துக் கொண்டேன்.
'ஜி பே செய்யவா' என்று நானும் 'கேஷா கொடுத்துடுங்க' என்று அவனும் ஒரே நேரத்தில் பேசி, நான் மறுபடி அதே கேள்வியைக் கேட்டதும் குரலை உயர்த்தி 'கேஷாவே கொடுத்துடுங்கன்னு சொன்னேன்" என்றான்.
பட உதவி Meta AI
"எவ்வளவு?" என்றேன் நானும் அதே டெசிபலில்.
"ஏன், நீங்க புக் செய்யும் போது காட்டவில்லையா?" என்றபடி "151" என்றான்.
"புக் செய்யும்போது காட்டியதையே கொடு க்கவா?" என்றபடி பையில் கைவிட்டேன். (உண்மையில் எனக்கும் அதுதான் காட்டி இருந்தது) "ஃபிராடுங்க... 'ஆப்'பில் ஒரு அமவுண்ட் காட்டும்.. உங்க செல்லில் ஒன்று காட்டும். அதான் கேட்டேன்"
கொடுத்து விட்டு முன்பக்கமாக தாண்டிச் செல்கையில் ஆட்டோ நம்பரை ஒரு போட்டோ எடுத்தேன். பாவ்லாதான். சற்று தள்ளி நின்று அவன் உருவம் தெரியும்படி ஒரு போட்டோ அவன் அறியாமல் எடுப்பது போல எடுத்தேன். அதையும் ஓரக்கண்ணால் கவனித்தான். அவன் முகம் முற்றிலும் மாறி இருந்தது.
இதில் என்னுடைய வெற்றி என்பது 25 நிமிட பயணத்தில் சுமார் 12 நிமிடங்கள் விடாமல் கெட்ட வார்த்தைகளால் அலங்கரிக்கப்பட்ட பேச்சை அள்ளித் தெளித்துக் கொண்.........டே வந்தது, எப்போது நிறுத்தினான், அல்லது எதற்குப் பிறகு அது நின்றது என்றால் நான் பேசிய பேச்சுகளை கேட்ட பிறகு!
மறுநாள் சுகுமாருக்கு அலைபேசி நான் சொன்ன விளக்கங்களை அவர் அவ்வளவு சுவாரஸ்யமாக கேட்டுக் கொள்ள்வில்லை. உங்களுக்கும் இது போர் அடித்திருக்கலாம். எனினும் இது இவ்வாறு நடந்தது. அது நிஜம்!
அவன் ஒரேயடியாக நடுங்கி விட்டான் என்றோ, இதனால் தமிழ்ப்பட நல்ல வில்லன் போல மனம் திருந்தி விட்டான் என்றோ சொல்ல மாட்டேன். திருந்துகிற ஜென்மங்களும் இல்லை இவர்கள்.
இத்தனைக்குப் பிறகும் அவன் குரல் உயர்த்தியதில் வேறொன்று செய்தேன். சாதாரணமாக என்னதான் சூடான பேச்சுகள் நடந்திருந்தாலும் கடைசியில் இவர்கள் தண்டத்துக்குக் கொடுக்கும் ஸ்டார் ரேட்டிங்கில் 5 ஸ்டார் கொடுத்து விடுவேன். முதன்முறையாக இவனுக்கு 3* கொடுத்ததும் சப்மிட் ஆகாமல் ஏனென்று காரணம் கேட்டு நான்கைந்து ஆப்ஷன்ஸ் கொடுத்தது. அதில் கடைசி இரண்டு 'ரொம்ப பேசிட்டான்', 'ரொம்ப ரொம்ப பேசிட்டான்'! ஐந்தாவதை டிக் அடித்து மறுபடி சப்மிட் செய்தேன். என்ன செய்வார்களோ... அவனுக்காச்சு, அவர்களுக்காச்சு!
எனக்கும் ஒரு சின்ன திருப்தி. ஈகோ சாடிஸ்ஃபாக்ஷன்!
என்ன சொல்றீங்க...!
================================================================================================
- நிலத்தில் வாழும் உயிரினங்களிலேயே பெரியது யானை. இந்தியா உள்ளிட்ட தென்கிழக்காசியா, ஆப்பிரிக்கா தவிர உலகில் வேறு எங்கும் யானைகள் இல்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா காடுகளில் 11 வகையான யானை இனங்கள் வாழ்ந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இப்போது ஆசியா முழுவதிலும் ஒரே யானை மட்டுமே தப்பி உள்ளது. மீதி இனங்கள் எல்லாம் வேட்டையின் மூலமாக முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டன. இந்த யானை அழிப்பிற்கு முக்கிய காரணம் அதன் தந்தங்கள்.
- "வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" புத்தகத்திலிருந்து...
- உங்கள் வேலையில் நீங்கள் நேர்மையாக இருந்தால் தவறில்லை. கோபமாக இருந்தால் இருந்தால் தவறு என்பது வீரப்பன் கட்சி! ரேஞ்சர் சிதம்பரம் குற்றவாளிகளை மோசமாக நடத்துவார் என்று கேட்டு தெரிந்து கொள்ளும் வீரப்பன், அவரை கொல்ல முடிவு செய்கிறான்.
===============================================================================
இணையத்தில் படித்த வம்பு...
சமீபத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பெரிய சர்ச்சையை ஒன்றில் சிக்கினார். இதில் ஆயிரம் பெண்களுடன் உறவு கொண்டதை டைரியில் குறித்து வைத்து.. ஆயிரமாவது பெண்ணுடன் உறவு கொண்ட பிறகு அதனை ஒரு பார்ட்டி கொடுத்து கொண்டாடி இருக்கிறார். அந்த தகவல் அரசல் புரசலாக இணைய பக்கங்களில் வெளியானது. இந்த விவகாரம் குறித்து நடிகர் மோகன்லால் இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை. மேலும் மறுப்பு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - தமிழ் டாட் காம் தமிழ் சினிமா நியூஸ் பக்கத்தில்
=======================================================================
இணையத்தில்க் பார்த்த வினோத இந்தியா பக்கத்திலிருந்து....
Extremely Risky Train Riding
India has a population of over 1.3 billion, which, putting it lightly, is a lot. That being the case, public transportation can be a serious problem, and it may require some radical solutions. The one you can see in the picture below is such a solution that makes us totally nervous. We get it, India — you have a lot of people. But honestly, this just doesn’t seem safe. Then again, you gotta do what you gotta do even if it looks extremely risky.
இது பழைய படமாக இருக்கலாம். இப்போது எலெக்ட்ரிக் ட்ரெயினில் இதெல்லாம் சாத்தியமில்லை! 75, 80 களில் வத்ராப் பக்கம் T. கல்லுப்பட்டி பக்கம் மக்கள் இப்படிதான் பஸ்ஸிலும் போவார்கள்! பார்த்திருக்கிறேன்.
=============================================================================================
நியூஸ் ரூம்
பானுமதி வெங்கடேஸ்வரன்
- அஹ்சன் என்கிற இளைஞர் ப்ளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்த காலணி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவ்ருக்குக் கிடைத்துள்ளது. ப்ளிப்கார்ட் நிறுவனத்திடமிருந் து அழைப்பு வரும்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை, இது மிகப்பெரிய செய்தியாகும் என்று!
- ரஷியாவால் கடந்த 2022 ஆம் ஆண்டு செயலிழந்ததாக அறிவிக்கப்பட்ட செயற்கைக்கோள் ஒன்று திடீரென உடைந்து நொறுங்கியது. அதன் நூற்றுக்கும் மேற்பட்ட துகள்கள் ரேடாரில் கண்களுக்குத் தெரிந்தன. அந்த செயற்கைக்கோள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அருகே வெடித்ததால் அதன் துகள்கள் அந்த விண்வெளி நிலையத்தைத் தாக்கக்கூடும் என அஞ்சி, அங்கிருந்த விஞ்ஞானிகள் பாதுகாப்பு அறைகளுக்கு அனுப்பப்பட்டனர். பின்னர் ஆபத்து நீங்கியதும் அவர்கள் பணிகளைத் தொடர்ந்தனர்.
- ராஜஸ்தான்: துங்கர்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மாணவனை 300க்கும் மேற்பட்ட முறைகள் சிட் அப்ஸ் செய்யச்
சொல்லியிருக்கின்றனர். இதனால் அந்த மாணவனுடன் சிறுநீரகத்தில் அழுத்தம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்காக ஒரே வாரத்தில் நான்கு முறை டயாலிசிஸ் செய்து கொண்டு குணமடைந்திருக்கிறார். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் ஏழு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 'பெர்வோ எனர்ஜி' என்னும் நிறுவனம் பூமியின் வெப்பத்தில் மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்திருக்கிறது. இந்த முறையில் கார்பன் மற்றும் மீத்தேன் வெளிப்பாடு இல்லாமல் மின்சாரம் தயாரிக்க முடியும்.
- கர்நாடகா,ஹாசன்: ஹாசன் மாவட்ட மருத்துவமனையில் கால் வலிக்கு சிகிச்சை பெற வந்த முதியவரிடம் இரண்டு கிரெப் பாண்டேஜ் மற்றும் மெஹந்தி கோன் வாங்கிவரச் சொல்லி மருந்து சீட்டில் எழுதி கொடுத்திருக்கின்றனர். மெஹந்தி கோனுக்காக பல மருந்து கடைகளில் ஏறி, இறங்கிய விஷயம் சமூக,வலைத்தளங்களில் பரவியது.
இறுதியில் ஹாசன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர்.சந்தோஷ், "அந்த நோயாளிக்கு ரத்த நாளங்களில் பிரச்சனை உள்ளது. சிகிச்சைக்காக மருத்தும மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். காலில் பாதிப்புள்ள இடத்தை அடையாளம் காண, பேனாவால் குறியிட்டால் இரண்டு நாட்களில் அழிந்து விடும், எனவே மெஹந்தி கோன் மூலமாக குறியிடப்படுகிறது" என்று விளக்கமளித்துள்ளார்.
- உத்தரகண்ட் ஹரித்வாரில் கங்கை ஆற்றின் துணை ஆறான சுகி ஆற்றுப்படுகை எப்போதும் வரண்டு காணப்படும் என்பதால் அங்கு வாகனங்கள் நிறுத்துவது வழக்கம். சனியன்று திடீரென்று கங்கையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்,சுகி ஆற்றுப் படுகையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
- ஆப்பிள் ஐ ஃபோன் தயாரிப்பு நிறுவனமான 'பாக்ஸ்கான்' மணமான பெண்களுக்கு வேலை வழங்க மறுப்பதாக குற்றச்சாட்டு.
- திருமணமான இந்திய பெண்களுக்கு வீட்டுப் பொறுப்புகள் அதிகரிப்பது, அவர்கள் அணியும் நகைகள், மற்றும் அணிகலன்கள் ஐஃபோன் உபகரணங்களை பழுதாக்குவது முதலியவை முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
- சென்னை: கலைமாமணி விருது பெற்றவர்கள் 60 வயது நிறைவடைந்திருந்தால் அவரும்,அவரது உதவியாளர் ஒருவரும் அரசுப் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.
- விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசின் விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப் பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் கீழ் குலசேகரன்பட்டினம் சுற்றியுள்ள மதுரை,விருதுநகர்,தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை space bay ஆக அறிவித்து வளர்ச்சியை ஊக்கப்படுத்த முடிவெடுக்கப் பட்டுள்ளது.
- உலகின் சக்தி வாய்ந்த அணுகுண்டை தயாரித்துள்ளது இந்தியா.
-
[ இப்போதெல்லாம் ஸ்ரீராம் வியாழனன்று அனுஷ்கா படம் போடுவதில்லை. அதனால் இந்த படச்செய்தி - பானுமதி வெந்கடேஸ்வரன் ]
அக்கா.. சமீபத்தில் கூட அனுஷ் படம் பகிர்ந்திருந்தேன். நீங்கள் பார்க்கவில்லை!
========================================================================================
2013 ல் நான் எழுதிய (நகைச்சுவை) கவிதை வடிவமும், அதற்கு வந்த சுவாரஸ்யமான கமெண்ட்ஸும்!
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
கோவிலுக்கு நேர்ந்திருந்தேன் அதான் மொட்டை போட்டேன் என்று சொல்வார்கள். முடி வளர்றதலாதானே மொட்டை போட்டிருக்கே... விரலை வெட் டுவியா என்று கிண்டலடிப்பார்கள். ஆனால் முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா?
மகாபாரத போர் நடக்கும் போது இறுதி நாளில் குரு துரோணாச்சாரியாவின் புதல்வன் அஸ்வத்தாமன் திரெளபதியின் ஐந்து குழந்தைகளையும் பாண்டவர்கள் என்று நினைத்து வெட்டி சாய்த்தான். விடிந்ததும் குழந்தைகளைக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்தார்கள் பாண்டவர்கள்.
இத்தகைய கொடூரச் செயலை செய்த பாதகனை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று அர்ஜுனன் சபதமிட்டான். அன்று மாலையே கள்வன் அஸ்வத்தாமன் என்று தெரிந்து இழுத்துவரப்பட்டான்.
குருவின் மகனா என்று பாண்டவர்களும், திரெளபதியும் அதிர்ந்து போனார்கள்.
யாராக இருந்தால் என்ன.. இவன் தலையைக் கொய்யாமல் விடமாட்டேன் என்றான் அர்ஜுனன்.
அர்ஜுனனை யாராலும் தடுக்க முடியவில்லை. அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் “அவன் தலையை எடுக்க வேண்டுமென்பதில்லை அர்ஜுனா.. அவன் சிகையை மழித்துவிடு.. அது அவன் மரணத்துக்கு ஈடானது” என்றார்.
அதற்கு பிந்தைய நம் மூதாதையர்கள் தவறு செய்பவர்களை மொட்டை அடித்து செம்புள்ளி, கரும்புள்ளி வைத்து கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தாலோ... உங்களுக்கு மரணதிசை நடக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டாலோ உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம் மொட்டை போடுவதாக முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
தலை போகும் பேராபத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வீர்கள்.
பிறந்த குழந்தைக்கு 1,3, என்னும் ஒற்றைப்பட வயதில் குலதெய்வ கோயிலில் பூஜை செய்து மொட்டை அடிப்பது வழக்கம்.
விஞ்ஞான ரீதியாக கருவில் இருக்கும் குழந்தை இரத்தம், மலம், சிறுநீர் போன்ற அழுக்குகள் சூழ இருக்கும்.
இந்த கழிவுகள் குழந்தையின் கேசம், மயிர் கால்கள் வழியாக வெளியேறுவதால் மொட்டை போடுவது அவசியமாகிறது. இல்லையெனில் அக்கழிவுகள் வழியாக நோய்கள் பரவும் அபாயமும் உண்டு என்கிறது விஞ்ஞானம்.
விஞ்ஞானத்திலும் மெய்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்யமான வாழ்வுக்காகவே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது! படித்ததில் தெரிந்து கொண்டதை பகிர்கின்றேன்.! Gajendhira Mani
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
'பழைய நெனப்புடா பேராண்டி... பழைய நெனைப்புடா' டைப் புகைப்படங்கள்.
நேரு காலத்திலேயே இந்தியாவில் கம்பியூட்டர்...
ம்...ஹூம்... இப்போ இருக்கும் கச கச சென்னையை நினைக்கும்போது.....
அப்போதிருக்கும் போலீஸ் உடை, அப்போது ரெகார்ட் செய்யும் கேமிரா.. கையெடுத்து வணங்கும் பொதுஜனம்.... சுபாஷின் நடையில் இருக்கும் கெத்தும் கம்பீரமும்.... ஒரு ஃபோட்டோ என்னென்ன விஷயங்களை சொல்கிறது...
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\/////////////////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\///////////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\//////////////////////\\\\\\\\\\\\\\\\\\\\\\\
பொக்கிஷம் :
பிரபலமாக பா டிக்கொண்டிருக்கும் பாடகர் திரு T M சௌந்தரராஜன் கொடுத்துள்ள விளம்பரம்... மற்ற ரேடியோக்களில் கேட்பதைவிட பிலிப்ஸ் ரேடியோவில் TMS பாட்டு இன்னும் துல்லியமாக இருக்குமாம்!
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் அன்பான காலை வணக்கங்கள். அனைவரும் நலமாக வாழ இறைவன் எப்போதும் துணையாக இருக்க வேண்டுமென பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... வணக்கம், நன்றி.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.
முதல் பகுதியில் அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நீங்கள் கொடுத்த அதிரடிகள் சூப்பர். அவர் தன் பேச்சை நிறுத்தி உங்கள் பேச்சை கவனிக்க ஆரம்பித்து விடுவார் என்றுதான் நானும் பதிவை படித்து வருகையில் நினைத்தேன். அது போலவே கவனித்தும், சற்று தன் மனசாட்சிக்கு பயந்தும் விட்டார் போல.. நல்ல பதிலடி. தைரியமாக செயல்பட்டுள்ளீர்கள். அதில் க்ளைமாக்ஸையும் ரசித்தேன். (ஆட்டோ நம்பரை போட்டோ எடுத்ததையும் , அவரையும் போட்டோ எடுத்ததையும் .) இனி அவர் திருந்தினால் சரிதான். உங்கள் இரண்டு வார பதிவையும் படிக்கும் போது நல்ல த்ரில்லர் படம் பார்த்த மாதிரியான உணர்வை பெற்றேன். உங்கள் சமயோசிதமான நடவடிக்கைகளுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா. அவர் மனசாட்சிக்கு பயந்திருக்க மாட்டார். அதுதான் அவருக்கு கிடையாது என்று தெரிகிறதே... நிறுவனம் எடுக்கும் நடவடிக்கைக்கு பயந்திருக்கலாம், தயங்கி இருக்கலாம். மறுநாளே அவர் பழைய குருடி கதவை திறடி ஆகி இருப்பார்!!
நீக்குஆமாம், இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன?!!!
"பழைய குருடி" என்றால் கதவின் தாழ்பாளை பற்றி (கண்டுபிடித்து) திறக்க முடியாமலே மறுபடி, மறுபடி சிரமபடுவாள் போலும்.
நீக்குஒரு செயலை எப்போதும் திறம்பட செய்ய முடியாமல் தடுமாறுபவர்களுக்காக உண்டான வசனம் இது என நினைக்கிறேன். (அது சரி!! உனக்கு மட்டும் அது இருக்கிறதாவென என் மனசாட்சி இடிக்கிறது.)
இருக்கலாம். இத்தனை நாள் பழகிய பழக்கத்தில் மேஜர் சந்திரகாந்த் மாதிரி டக் டக்கென வீட்டுக்குள் வேலைகளை செய்யலாம்!
நீக்குவேறு ஏதாவது அர்த்தம் இருக்குமோ...!!
அது ஒரு பெரிய கதை!
நீக்குபகுதி 1 :
"பழைய குருடி, கதவைத் திறடி".
இந்தச் சொல்லடைவை(முது மொழி) உருவாக்கியவர்
பொய்யா மொழிப் புலவர் ஆவார். இச் சொல் தொடர்
எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டது? இதன் பொருள்
என்ன? போன்றவற்றை விரிவாகப் பார்ப்போம்.
அதற்குமுன் பொய்யா மொழிப் புலவரின் வரலாற்றை
அறிந்து கொள்வோம்.
காஞ்சிபுரத்தை யடுத்த செங்காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்த
அதிகத்தூரில் அமண்பாக்கக் கிழார் மரபில் தோன்றியவர்
பொய்யாமொழிப் புலவர். அவரது இயற்பெயர் சாத்தனார்
என்றும் அம்பலத் தரசன் என்றும் சொல்லப்பட்டன. தொண்டை
மண்டலத்தைச் சேர்ந்த வயிரபுரம் என்னும் ஊரில் கல்வி
பயின்றார். கல்வியில் இவரது திறமையைக் கண்ணுற்ற
ஆசான் இவரைப் பொய்யா மொழிப் புலவர் என்று அழைத்த
தாகச் சொல்லப்படுகிறது. இவரது வாக்கு சத்திய வாக்காகப்
பலித்ததால் ஆசான் அவரைப் பொய்யா மொழிப் புலவர் என்று
அழைத்தார் என்று தோன்றுகிறது.இவரது காலம் பதின்மூன்
றாம் நூற்றாண்டாகும்.
குருகுலத்தில் கல்வி கற்கும் பொழுது ஆசானின் சோளக் கொல்லை
யைக் காவல் காக்கும் கடமை சுழற்சி முறையில் ஒவ்வொரு மாணவருக்
கும் வரும். அன்றைய முறை அம்பலத்தரசனுக்குரியது. காவல் காத்துக்
கொண்டிருக்கும் போது அங்கே வீசிய இதமான காற்றால் அயர்ந்து உறங்கி
விட்டார். விழித்த பொழுது சோளக் கொல்லையைச் சில குதிரைகள் மேயக்
கண்டார். அவைகளை விரட்ட முயன்றார். முரட்டுக் குதிரைகளை அடக்க
முடியாமல் தவித்தார். அருகிலுள்ள காளிகோவூலுக்குச் சென்று மாகாளி
யிடம் முறையிட்டார். அம்மை அவர்மீது பரிவுகொண்டு அவர் சொல்வது
பலிக்குமாறு ஆசீர்வாதம் செய்ததாகச் சொல்வர். கோவிலிலிருந்து
வெளியே வந்த அம்பலத்தரசன் உடனே பாடினார்.
"வாய்த்த வயிரபுர மாகாளி அம்மையே!
ஆய்த்த மணலில் அணிவரையிற்---காய்த்த
கதிரைமா ளத்தின்னும் காளிங்கன் ஏறும்
குதிரைமா ளக்கொண்டு போ"
என்று பாடியவுடனே மேய்ந்து கொண்டிருந்த குதிரை தடாலென்று கீழே
விழுந்து இறந்ததாகச் சொல்லப்படுகிறது. காளிங்கன் அந்த நாட்டுச்
சேனாபதி. அவர் குதிரை மாண்டதால் ஆசான் முதல் மாணவர்கள் வரை
அனைவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் அனைவரும்
வேண்டிக் கொண்டதால் அம்பலத்தரசன் கடைசி அடியை மாற்றிக்
"குதிரைமீ ளக்கொண்டு வா" என்று பாடிக் குதிரையின் உயிரை மீட்டுக்
கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து அம்பலத்தரசன்
பொய்யா மொழிப் புலவராக உருமாறினார். காளிங்கன் தன் மகள் அமிர்தத்
தைப் பொய்யா மொழிப் புலவருக்கு மணம் செய்து கொடுத்தார். சிறிது காலம்
அமைதியாக நடந்த இல்லறம் நாள் செல்லச் செல்லப் பிணக்கும் பூசலுமாகத்
தள்ளாடியது.காரணம், புலவர்களுக்கே உரிய வறுமைதான். ஒருநாள் பொய்யா
மொழிப் புலவர் சினங்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.
புலவர்களுக்குச் செல்வச் செழிப்பு வாய்ப்பது அரிதே; ஆனால் சிறப்புக்கும் பெரு
மைக்கும் எப்போதும் குறை வாராது. பொய்யா மொழிப் புலவர் கால் நடையாக
வந்தாலும் வழிநெடுகிலும் உண்ண உணவும் அருந்தக் குடிநீரும் உறங்கத் திண்ணை
யும் கிடைத்தன. அவர் மனத்தில் பேரவா ஒன்று தோன்றியது. .
பகுதி 2 :
நீக்குமூன்றாம் தமிழ்ச் சங்கம்
மறைந்த பிறகு நான்காம் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் மதுரையில் தோற்றுவிக்க விரும்பி
னார். அதற்குப் பொருள் தேடல் வேண்டும். இப்படியான சிந்தனைகளோடு காளை
யார்கோவில் வந்தடைந்தார். அங்கு ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். வெளியே வந்த
பெண் "ஐயா! நான் கண் பார்வையற்றவள். என் தமக்கையும், தாயும், தாய்வழிப் பாட்டி
யும் அரைக்குருடர்கள். எங்களை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்?" என்று கூறினாள்.
புலவர்" பெண்ணே! உன் பெயர் என்ன?" என்று வினவினார்."என் பெயர் கூத்தாள்"
எனப் பதிலிறுத்தாள். உடனே புலவர் பாடத் தொடங்கினார்.
"கூத்தாள் விழிகளிரு கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்; மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண்(டு) அம்பு."
அவர் பாடியவுடன் கூத்தாளுக்கும் அவள் தமக்கை,
தாய், தாய்வழிப் பாட்டிக்கும் கண்பார்வை கிடைத்த
தாகச் சொல்லப்படுகிறது. கூத்தாள் முதலியவர்கள்
தேவரடியார் தொண்டு செய்பவர்கள். அவர்களும்
அவர்களைப் போலத் தேவரடியார்களும் நான்காம்
தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்கப் பொருள் தந்தார்கள்.
எல்லாப் பொருளையும் ஒன்று சேர்த்துக் கூத்தாளிடமே
ஒப்படைத்து "நான் மதுரைக்குச் சென்றுவரும் வரை
நீயே பத்திரமாக வைத்திரு" என்று சொல்லிவிட்டுச்
சென்றார்.
பாண்டி மண்டல மாறை நாட்டுத் தஞ்சாக்கூரை அடைந்து
அங்கு மாறவர்மன் குலசேகரபாண்டியனிடம் அமைச்சராக
வும் படைத் தலைவராகவும் விளங்கிய மாவலி வாணர்
குலத்தைச் சேர்ந்த சந்திரவாணன் என்பவரின் நட்பைப்
பெற்றார். அவர்மீது தஞ்சை வாணன் கோவை என்ற நூலைப்
பாடி அரங்கேற்றினார். சந்திரவாணன் மனைவி
யார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னாலான தேங்காயைப்
பரிசாகத் தந்தார். ஏனெனில் அந்த அம்மையும் சிறந்த
புலமையும் இரசனையும் உடையவர். சந்திர வாணன்
ஒவ்வொரு தேங்காயின் மூன்று கண்களுக்கும் மூன்று
இரத்தினங்களைப் பொதிந்து புலவர்க்குப் பரிசளித்தார்.
பொய்யா மொழிப் புலவர்க்குக் கிடைத்த அருமையான
அன்பளிப்பு!
இம்மாதிரி தமக்குக் கிடைத்த எல்லா அன்பளிப்பையும்
காளையார் கோவில் கூத்தாளுக்கு அனுப்பி வைத்துப்
பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினார். இடையில்
மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்து
நாலாம் தமிழ்ச்சங்கம் தொடங்கப் போதிய உதவிகள்
செய்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்
பொழுது சோழர்கள் படையெடுத்து வரலாம் என்ற
பேச்சு அடிபட்டதால் தமிழ்ச் சங்க வேலை சுணங்கியது.
பொய்யா மொழிப் புலவர் காளையார்கோவிலை
நோக்கிப் பயணப்பட்டார். ஒருநாள் மாலை வேளை
யில் அவ்வூரை வந்தடைந்தார். கூத்தாள் வீட்டை
நெருங்கிக் கதவைத் தட்டினார். இடையில் கூத்தாள்
மற்றும் அவள் தமக்கை, தாய், தாய்வழிப் பாட்டி
ஆகியோரரின் நல்ல மனம் திரிந்து கபடச் சிந்தனை
குடிபுகுந்தது. பொய்யா மொழிப் புலவர் அனுப்பி
வைத்த பணமும் பொருளும் பலமடங்கு அதிகரித்
திருந்தன.. எப்படியாவது அதை மோசடி செய்யத்
திட்டமிட்டனர். பொய்யா மொழியார் கதவைத் தட்டி
யதும் "இதற்கு முன்பு இவ்வீட்டில் குடியிருந்தவர்கள்
காலி செய்து வெளியேறிவிட்டனர். நாங்கள் புதிதாகக்
குடிவந்துள்ளோம்" என்று வீட்டுக்குள் இருந்தவாறே
கதவைத் திறக்காமலேயே சொன்னார்கள்.
புலவர் மிகவும் சினமடைந்தார். பேராசையினால்
தமிழ்ச்சங்கத்துக்காகத் திரட்டிய பணத்தையும் பொருளை
யும் அபகரிக்கத் திட்டமிடுவதை உணர்ந்து கொண்டார்.
,கோபத்தோடு "பழைய குருடி, கதவைத் திறடி" என்று உரத்துக் குரல்
கொடுத்தார். அவர் வாக்குப் பலித்ததோ இல்லை கூத்தாள்
வகையறாக்கள் மிதமிஞ்சிய அச்சத்தில் இருந்ததாலோ
அந்த நாலு நபர்களுக்கும் கண்பார்வை தெரியாமற் போயிற்று.
நால்வரும் புலவரின் கால்களில் விழுந்து வணங்கி
"பேராசையினால் கபட வேலை செய்தோம். மன்னித்து விடுக"
என்று கண்களில் நீர்வழியக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.
புலவரின் பணத்தையும் பொருளையும் அவரிடமே ஒப்படைத்தனர்.
புலவர் அவர்களை மன்னித்து விட்டுத் தமக்குரிய பணத்தையும்
பொருளையும் எடுத்துக் கொண்டு தமது ஊரான அதிகத்தூர்
வந்தடைந்தார். ஆர்க்காட்டுக் கோட்டம் அரசூரைச் சேர்ந்த சீநக்கன்
என்னும் வள்ளலோடு புலவர் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.
சீநக்கன் இறந்தபொழுது நம் பொய்யாமொழியார் அவர் சிதையில்
பாய்ந்து உடன்கட்டை ஏறினார் எனச் சொல்லப்படுகிறது. கோப்
பெருஞ் சோழனுக்காகப் பிசிராந்தையார் என்ற புலவர், வேள்
பாரிக்காகப் புலவர் கபிலர் உடன்உயிர் துறந்தது போலவே
சீநக்கன் என்னும் வள்ளலுக்காக நம் பொய்யா மொழியாரும்
உடன் உயிர்துறந்தார்
சுட்டி : https://tamilagam52.blogspot.com/2020/07/blog-post.html
நீக்குஆ... எவ்ளாம் பெரிய பதில்!
நீக்குவணக்கம் கௌதமன் சகோதரரே
நீக்குப. கு. க. திறடி. பழமொழிக்கு நல்ல பதில் பொய்யாமொழி புலவரின் வரலாறு ஏற்கனவே எங்கோ படித்த மாதிரி உள்ளது. ஆனால் அவர் அக்கறையுடன் நான்காம் தமிழ்ச்சங்கம் உருவாக்குவதற்காக பாடுபட்ட கதை அருமையாக உள்ளது. அறிந்ததில்லை. அந்தக் காலத்தில் புலவர்களின் சிறப்பான கல்வியும், வறுமையும் என்றும் சேர்ந்தே இருப்பதுதானே..! அவரின் இறுதி தியாகமும் மனதை கலங்க வைக்கிறது. எத்தனை சிறந்த மனிதர்கள் வாழ்ந்த பூமி. பழமொழிக்கு பொருத்தமான கதையை தேடி தந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதில் உங்கள் கவிதை அருமை. அதையொட்டி அதற்கு வந்த கமெண்ட்ஸ்கள் சூப்பர். ரசித்துப் படித்தேன்.
"புலி பசித்தாலும் புல்லை திண்ணாது" என்ற பழமொழி யை பொய்யாக்கி விட்டீர்கள். ஆனால் இப்போது அப்படி நடந்திருந்தால் புலி அந்த பிரியாணியும் அடிக்கடி சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும். "வேறு வித்திசாயமாக ஏதாவது வாங்கி வர கூடாதா?" என கேட்டு உறுமியிருக்கும். :)) கவிதை அருமை. பராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
ஹா.. ஹா.. ஹா... நான் நகைச்சுவையாக ஏதோ எழுதப்போக அதைவிட நகைச்சுவையாக கமெண்ட்ஸ் வந்தன.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்று அத்தனைப் பகுதிகளும் அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது.
செய்தியறை பக்கம் பல தகவல்கள் அறிந்து கொண்டேன். சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மிக்க நன்றி.
அதானே..! அனுஷ்காவை அவ்வளவு விரைவில் மறந்து விட முடியுமா என்ன? ஹா ஹா ஹா.
ஆறு மணி கடமை என்னை அழைக்கிறது. (தண்ணீர் வரும் நேரம்) பிறவற்றிக்கு பிறகு வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மெதுவா வாங்க அக்கா.. இவ்வளவு மழை வந்தும் இன்னும் தண்ணீர் கஷ்டம் விடவில்லையா?
நீக்கு//அதானே..! அனுஷ்காவை அவ்வளவு விரைவில் மறந்து விட முடியுமா என்ன? ஹா ஹா ஹா. //
ஹிஹிஹி...
கற்பக கணபதி
பதிலளிநீக்குகனிவுடன் காக்க..
முத்துக்குமரன்
முன்னின்று காக்க..
தையல் நாயகி
தயவுடன் காக்க..
வைத்திய நாதன்
வந்தெதிர் காக்க..
இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
பிரார்த்திப்போம்..
எல்லாருக்கும் இறைவன்
நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
நலம் வாழ்க..
வாழ்க.. வாங்க செல்வாண்ணா... வணக்கம்.
நீக்குதண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
பதிலளிநீக்குதளிர் விளைவாகித்
தமிழ் நிலம் வாழ்க..
வாழ்க.. வாழ்க..
நீக்குஅதானே ஸ்ரீராமை ஏமாற்றமுடியுமா? அதுவும் பாஸ் பக்கத்தில் இருக்கும்போது. நல்ல காமெடி. ஆட்டோ பயணத்தை சொல்கிறேன்.
பதிலளிநீக்குதந்தங்களை வாங்க ஆள் இருந்ததால் தானே வீரப்பன் ஆனைகளை வேடடை ஆடினான். தற்போது யாரும் தந்தங்களை வாங்குவதில்லை. ,தந்தம் இல்லா ஆன் யானைகள் பெருகி விட்டன.
நான் மோகன்லாலுக்கு வக்காலத்து வாங்கவில்லை. ஆயிரம் என்பது நம்பத்தகுந்ததாக இல்லை. ஆயிரம் என்றால் ஏன் ஒருத்தராவது வெளிப்படையாக வெளியில் சொல்லவில்லை (பாவனா போல).
இம்மாதிரி செய்திகள் loaded news வகையைச் சேர்ந்தவை. ஆம் என்றோ இல்லை என்றோ பதில் கூற முடியாது. சும்மா இருந்து விட்டால் தானே மாய்ந்துவிடும்.
Train போட்டோ பங்களா தேஷ் போட்டோ.
உலகின் சக்தி வாய்ந்த அணுகுண்டை இந்தியா தயாரித்துள்ளது என்பது புதிய செய்தி. அமெரிக்கா, போன்ற வல்லரசுகள் செய்யமுடியாததையா!.
புலிசாதம் சூப்பர். அட நீங்களும் பிரியாணி ரசிகரா?
முடிகாணிக்கை மரணத்திற்கு ஒப்பம் என்பது புதிய அனுமானம். முடி சூடிய மன்னர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். மன்னன் முடி துறந்தால் காடு தான்.
பழைய நினைப்புடா பேராண்டி என்று பழைய சென்னை படம் + நேதாஜி படம் இரண்டும் பொக்கிஷங்கள்.
TMS நல்ல பாடகர் தான். ஆனால் கொஞ்சம் கர்வம் கூடுதல்.
மொத்தத்தில் இவ்வார கதம்பத்தில் வாசனை குறைவு. ஆனால் ரோஜா உண்டு. நேருவை சொல்கிறேன்.
Jayakumar
ஆட்டோ விஷயத்தில் ஏமாற்றம் எனக்கும் இருந்திருக்கலாம்! நான் எனது ஈகோவை திருப்பதி படுத்திக் கொள்கிறேன்! அவன் எகிறாமல் அமைதியாக பேஸ்தடித்துப் போய் உட்கார்ந்திருந்ததே திருப்தி!
நீக்குதந்தங்கள் வாங்க அப்போதே கூட தடை விதித்தார்கள். ஆனால் பாருங்கள் அதுதான் பிளாக் மார்க்கெட்டில் விலை ஏற இன்னும் வசதியாகும்!
மோகன்லால் செய்தது அசாத்தியம் என்றுதான் எனக்கும் தோன்றியது. ஆனாலும் இணையத்தில் வலம் வருவதை உங்களுக்கு எல்லாம் காட்ட நான் கடமைப்பட்டிருக்கிறேன்!!! ஹிஹிஹி...
Train போட்டோ இந்தியா என்ற பக்கத்தில் வெளியாகி இருந்தது. போன வார மின் இணைப்பு படமும் அங்கிருந்துதான் எடுத்தேன்.
ஹிஹிஹி பிரியாணிக்கு யார்தான் ரசிகர் இல்லை?
வாசனை குறைவா... அச்சச்சோ....
வெங்கட்ஜியும், ஜெ கே அண்ணாவும் ரயில் படத்தை நல்லா கூர்ந்து பார்த்திருக்காங்க....
நீக்குநான் பொதுவா பெரிசு பண்ணியும் பார்ப்பேன். பாருங்க இத பார்க்கத் தவறியிருக்கிறேன். இப்பல்லாம் வேக வேகமா...
கீதா
ரசித்தேன் நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே... தங்கள் மகள் திருமணத்துக்கு வாழ்த்துகள்.
நீக்குகொஞ்சம் முன்னாலிருந்து....//
பதிலளிநீக்குஹாஹாஹா அதானே! முன்னாடி இருந்துதானே அவன் பேச்சு!
கீதா
ஹா... ஹா.. ஹா.. ஹாமாம்!
நீக்குநான் பேச ஆரம்பித்திலிருந்தே டிரைவர் புலம்பலை நிறுத்தி கவனிக்கிறான் என்பதை கவனித்திருந்தேன். //
பதிலளிநீக்குஹாஹாஹாஹா சிரித்துவிட்டேன் உங்க டெக்னிக்கை வாசித்து. பாவம் சுகுமார் அண்ணன்.
அவன் ஒரேயடியாக நடுங்கி விட்டான் என்றோ, இதனால் தமிழ்ப்பட நல்ல வில்லன் போல மனம் திருந்தி விட்டான் என்றோ சொல்ல மாட்டேன். //
திருந்தினா நல்ல, இல்லைனாலும் நாம என்ன செய்ய முடியும்? உங்க டெக்னிக் இந்த சம்பவம் போர் எல்லாம் அடிக்கலை. அட! நல்ல ஐடியா வா இருக்கே என்று.
பொதுவாக நான் இப்படிக் கடைப்பிடிப்பது தனியாக இரவு நேரத்திலோ இல்லை விடியற்காலையிலோ ஆட்டோவில் செல்ல வேண்டி இருந்தப்ப...மொபைலில் கணவருக்கு அல்லது செல்லும் இடத்து நபருக்கு லைவ் போட்டுவிடுவேன் ஆட்டோ ஃபோட்டோ நம்பருடன் எடுத்து வைத்துக் கொண்டுவிடுவேன்.
இவர்கள் இருவருடனும் அப்பப்ப மெசேஜ் அல்லது பெரும்பாலும் பேசிக் கொண்டு வருவேன். அவங்களும் எங்க இருக்க எங்க இருக்கன்னு கேட்டுக்குவாங்க. சரியான ரூட்லதானே ஆட்டோ போகுது என்றும் கேட்பாங்க நான் சத்தமா சொல்லுவேன்...இப்ப இந்த ரோட்/தெருல போகுது...சரியான ரூட்னுதான் நினைக்கிறேன் இப்படி......
சிலப்ப சும்மா கால் வந்தாப்ல அல்லது பேசறாப்ல ஆக்டிங்க் கொடுப்பேன். ஹிஹிஹிஹி
கீதா
ஏதோ அந்த நேரத்தில் ஒரு சின்ன திருப்தி.. அவ்ளோதான் கீதா...
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குகருத்து முழுசும் அடிச்சு வெளியிடும் முன் வெளியிடு அமுங்கிவிட்டது. அதான் அழிச்சிட்டேன்
பதிலளிநீக்குஈகோ சாடிஸ்ஃபாக்ஷன்!//
அப்படின்னு சொல்ல முடியாது ஸ்ரீராம். இனி அப்படி அவன் மத்தவங்ககிட்டயும் செய்யாம இருக்க ஒரு வாய்ப்பு அவனுக்கு. ரெண்டாவது வேற யாராச்சுமா இருந்தா சண்டையே போட்டிருபபங்க. அல்லது ரைட கேன்சல் பண்ண வைச்சிருப்பாங்க. அவன் கண்டிப்பா யோசிப்பான். நம்புவோம்!
கீதா
அப்படி இருந்தா சந்தோஷம்தான் கீதா!
நீக்குஇன்றைய அரட்டை நன்று. ஊபர் ஓட்டுனர் - திருந்தினால் சரி.
பதிலளிநீக்குஇரயில் படம் - பங்க்ளாதேஷ் படம் - இரயில் எஞ்சினில் இருக்கும் எண்களும், பக்கத்தில் இருக்கும் கிலோமீட்டர் எண்ணும் பெங்காலி மொழியில் எழுதப்பட்டு இருக்கின்றன.
செய்தி தொகுப்பு நன்று.
ஓ.. அதை வைத்து சொல்கிறீர்களா... நன்றி வெங்கட்.
நீக்குயானை இனம் அழிக்கப்படுவதற்குக் காரணமே அதன் தந்தங்கள், யானைப்பல், அதன் குஞ்சத்து முடி, நகங்கள் என்று பல உண்டு. குறிப்பாகத் தந்தம்.
பதிலளிநீக்குவீரப்பன் வேட்டையாடிதுக்குக் காரணம் இந்தத் தந்தத்தின் பின்னில் நிறைய பெரிய தலைகள் உண்டு. அவன் வார்த்தைகளைப் பாருங்க...தவறு செஞ்சாலும் நேர்மையா செய்யணுமாம்!!!
வேலைல மத்தவங்க நேர்மையா இல்லைனா கோபம் வரத்தானே செய்யும்!!! ஓ! புரியுது!! அவனை பல தலைகள் ஏமாத்தியதுல அவன் அவங்களுக்கு நேர்மையா இருந்துருக்கான்னு அவனுக்குக் கோபம் வந்திருக்கும்!
கீதா
அவனால் காட்டுக்குள் அவ்வளவு காலம் வாழ முடிந்தது. நாட்டில் வாழ்பவர்களுக்கு ஒரு மாதம் கூட அங்கே தாக்கு பிடிக்க முடியாது!
நீக்குஇணையத்தில் வம்புக்குக் குறைவேது? காது கொம்பு எல்லாம் வைச்சுப் பேசுவாங்க...அதான் இப்ப யுட்யூப் வேறு இருக்கே. ஒன்னுமே இல்லாத சங்கை ஊதிக் கெடுக்க. இது பொதுவான கருத்து, மோகன்லாலுக்கு வக்காலத்து வாங்கும் கருத்து அல்ல.
பதிலளிநீக்குஇப்பல்லாம் தங்களைப் பத்தி எப்படியான கருத்து மீடியாவில் வந்தாலும் பெரும்பாலான புள்ளிகள் அதைப் பற்றி எந்தக் கருத்தும் சொல்றதில்லை. பேச பேச வம்பு கூடுதல் வளரும் என்பதால். நீ என்ன வேணா சொல்லிக்க நினைச்சுக்க எழுதிக்க அதைப் பத்திக் கவலை இல்லை என்பது போல். ஏன்னா அவங்க அடைய நினைத்த இடத்துக்குப் போயாச்சு.
கீதா
அல்லது அவங்க இருக்கும் இடத்திலிருந்து இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது!
நீக்குஆமாம் அதுவும்....
நீக்குகீழே நெல்லை சொல்லியிருக்கும் கருத்தை வழி மொழிகிறேன் ஸ்ரீராம். நமக்கு இப்படியான வம்பு வேண்டாம். யுட்யூபும், முகநூல் ஆட்களும், சில பத்திரிகைகளும்தான் இதெல்லாம் செய்யறாங்கனா நாம விலகி இருக்கலாம் ஸ்ரீராம்.
கீதா
ok... ok...
நீக்குஆட்டோகாரன் விஷயத்தில் உங்கள் எகிறல் ரொம்ப ஓவராக எனக்குப் பட்டது. அவன் அடங்கி விட்டான் என்று தெரிந்தும் சேற்றில் இவ்வளவு ஆக்ரோஷமாக கல்லெறிந்திருக்க வேண்டாம். "ஏண்டா.. போட்டோவா எடுக்கறே?" என்று தாவி அவன் உங்கள் சட்டைக் காலரைப் பிடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பதட்டம் ஏற்பட்டது.
பதிலளிநீக்குஞாபகம் இருக்கட்டும். நீங்கள் ஆட்டோவில் இல்லை. ரோடில் இருக்கிறீர்கள். அது அவனுக்கு சாதகமான விஷயம்.
அது என்ன குறள்?.. எதிரி வலிமையையும் தன் வலிமையையும் ஆய்ந்து..
அப்படி இல்லை ஜீவி ஸார்... செய்வதை முழுமையாக செய்ய வேண்டும். மேலும் நீங்கள் சொல்வது போல எல்லாம் அவனால் செய்ய முடியாது. அடுத்த விஷயம் என்னுடன் இரண்டு பெண் பயணிகள். அது எனக்கு ப்ளஸ்!
நீக்குவீரப்பனை ஹீரோவாக்கும் வாசிப்புகள் எரிச்சலூட்டுபவை.
பதிலளிநீக்குஉண்மை. சில விஷயங்கள் வாசித்துக் கொண்டே வரும்போது இதெல்லாம் உண்மைதானே என்று நினைக்க வைப்பவை. காடு, விலங்குகள் பொறுத்தவரை அவனுக்கு அபார அறிவு.
நீக்குஆமாம் ....அவனை ஹீரோ ஆக்கியதும் பெரிய புள்ளிகள்தான் ஜீரோ ஆக்கியதும் பெரிய புள்ளிகள்தான். நிறைய பேர் புகுந்து விளையாடியிருக்காங்க.
நீக்குகீதா
முடிந்தவரை உபயோகித்து கதையை முடித்து விட்டார்கள்.
நீக்குபுலிக்கு சுடச்சுட உறிஞ்சும் மனித ரத்தம் தான் பிடித்த விஷயம். கழுத்தைக் குறி வைத்துக் கவ்விக் குதறி உறிஞ்சிய பின் சடலத்தைத் தீண்டக் கூட செய்யாது. பிரியாணிப் பொட்டலம் அதற்கு புல்.
பதிலளிநீக்குபுலி பசித்தாலும்.....
ஜீவி சாரின் இந்த கமெண்ட்....ஐயையோ...
நீக்குஹி..ஹி...
நீக்குதப்போ ரைட்டோ வாசிப்பதில் திகிலூட்ட எதையானும் செய்யணுமில்லையா, நெல்லை!
ரத்தத்தை மட்டுமா உறிஞ்சும்?? சதையைக் கூடத்தான் சாப்பிடும்! இது சும்மா ஜாலியான கற்பனைதானே!
நீக்குபண்டித நேருவுக்குப் பின்னால் இரண்டாவதாக நிற்பவர் யார் தெரியுமா? தெரிந்தவர்கள் பின்னூட்டமிடலாம்.
பதிலளிநீக்குடாக்டர் H J Baba.
நீக்குபுதன் கிழமை நாயகர் வியாழனிலும் ஜொலித்திருக்கிறார்!
நீக்குபதிலுக்கு TIFR தான் க்ளூ.
Homi J. Bhaba
Founding Director of Tata Institute of Funtamental Research (TIFR)
** Fundamental
நீக்குஇந்த பாபா வேற மாதிரி பாபா!
நீக்கு///பேசப் பேச வம்பு கூடுதல் வளரும் என்பதால். நீ என்ன வேணா சொல்லிக்க நினைச்சுக்க எழுதிக்க அதைப் பத்திக் கவலை இல்லை என்பது போல். ஏன்னா அவங்க அடைய நினைத்த இடத்துக்குப் போயாச்சு.///
பதிலளிநீக்குசகோ கீதாவின் கருத்து சிறப்பு..
வழி மொழிகின்றேன்...
சூப்பர்... சூப்பர்..
நீக்குபதிவுக்குள் இருந்து கொண்டு நீண்ட கருத்திடுவது சிரமாக இருக்கின்றது...
பதிலளிநீக்குகமலாஹரிஹரன் கீதா கோமதி அரசு எல்லாம் எத்தனை சிரமப்பட்டு எழுதுகின்றனரோ...
__/\__
நீக்குதுரை அண்ணா நான் கணினியில் தான் தட்டுகிறேன் மொபைலில் அல்ல. மொபைல் என்றால் கருத்திடுவது எனக்கு மிக மிக மிக சிரமம்.
நீக்குஅப்படிப் பார்த்த கமலாக்காவைத்தான் ரொம்பவெ பாராட்டணும். அவங்கதான் மொபைல்ல தட்டுவாங்க!! பதிவே எழுதுவாங்க. நான் அப்பீட்டு!
கீதா
கீதா.. செல்வாண்ணாவும் மொபைலில்தான் சகலமும் என்பது தெரியும்தானே?
நீக்குஸ்ரீராம் நீங்க சொல்றாப்ல அந்த ரயில் படம் பழசுதான். பார்த்திருக்கிறேன், ஸ்ரீராம். பஸ்ல இப்படிப் போறதையும் பார்த்திருக்கிறேன். ரயில் பஸ்ஸ விடுங்க...பைக்லயே கூட இப்படிப் போவாங்க ஒரு குடும்பமே!!!! படம் பார்த்திருக்கமே!
பதிலளிநீக்குகீதா
பைக்ல ஒரு போலீஸ்காரர் தன்னோட மூன்று குழந்தைகளோட போற படம் ஒன்னு தினமலர்ல வந்திருந்தது.
நீக்குஅதாச்சும் ஓகே!!!! வீடு மாறுறப்ப வீட்டையே அதுல கொண்டு போறாங்கப்பா....அம்மா அப்பா, பிள்ளைங்க 5, 6
நீக்குகூடவே சில பைகள்.....
கீதா
:((
நீக்கு6 வருஷம் கழிச்சு காலணி வந்ததா? அது சரி காலணி அந்த இளைஞருக்குச் சரியாக இருந்ததோ?
பதிலளிநீக்குஇந்த விண்வெளி சோதனைக் கூடங்கள் அங்கு எப்படி ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க? அவை மிதந்துகொண்டிருக்குமா இல்லை கரையில் கயித்துல கட்டின ஓடம் போல ஆடி மிதந்து கொண்டிருக்குமா? பார்க்கும் ஆசை உண்டு ஆனா!!!!!!!!!!
விண்வெளிக்கூடம் வெடிக்கும் ஆபத்து நீங்கியது ஆனா இப்ப கவலை அங்க போன சுனிதா வில்லியம்ஸ் திரும்ப முடியாம உடல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு இருக்காங்க. இப்படி அங்கு ஏற்கனவே இருக்கறவங்க எவ்வளவு நாள் அங்கு உயிர்வாழ முடியும்? அந்தக் கூடம் இப்படி செயற்கைக் கோள் மாதிரி வெடிக்காம இருக்குமான்ற சிந்தனைகள் எல்லாம் வருது. பூமியில் வாழ்வின் இயற்கைக்குப் புறம்பான இந்தச் செயல்கள் எல்லாம் எதற்கு என்றும் தோன்றும்.
கீதா
// 6 வருஷம் கழிச்சு காலணி வந்ததா? அது சரி காலணி அந்த இளைஞருக்குச் சரியாக இருந்ததோ? //
நீக்குஅதை அங்கே போடவில்லையே! ஒரு ஸ்டேஜுக்கு மேல சைஸ் கான்ஸ்டன்ட்டாத்தானே இருக்கும்!
ஓரு ஸ்டேஜுக்கு மேல சைஸ் அதேதான் ஆனா பாருங்க ஸ்ரீராம் அந்த இளைஞர் எந்த வயசுல ஆர்டர் செஞ்சாரோ!!!!!! டீன் ஏஜ்ல ஆர்டர் செஞ்சுட்டு அதுக்கு அப்புறம்னா!!! வளரும் வயசாச்சே...18க்கும் 24 க்கும் வித்தியாசம் வருமே!!
நீக்குகீதா
:))
நீக்குஇன்னும் ராகின் ஒழியலையா?
பதிலளிநீக்குஅட மெஹந்தி கோனுக்கு இப்படி ஒரு பயன்பாடும் இருக்குது பாருங்க. மாற்று யோசனை அருமை.
//கங்கை ஆற்றின் துணை ஆறான சுகி ஆற்றுப்படுகை எப்போதும் வரண்டு காணப்படும் என்பதால் அங்கு வாகனங்கள் நிறுத்துவது வழக்கம். சனியன்று திடீரென்று கங்கையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால்,சுகி ஆற்றுப் படுகையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.//
நான் ஒடலைனா என் இடம் சும்மா கிடந்தா உடனே ப்ளாட் போட்டுடறதா? அது என் இடம். நான் எப்ப வேணா ஓடுவேன், ஓடாம இருப்பேன், நிப்பேன். என் எல்லைக்குள்ள வராதீங்க மனுஷங்களே!...
மனுஷனுக்கு தம்மாத்துண்டு இடம் கிடைச்சா போதுமே உடனே அதை ஆட்டைய போட்டுடறது. இயற்கையோடு மோதாதீங்கப்பா.
கீதா
முதல்ல மக்கள் தொகை பெருக்கத்தை நிறுத்துங்கப்பா...!
நீக்குயெஸ்ஸு ஹெஸ்ஸு
நீக்குகீதா
ஹவுது !
நீக்கு- விண்வெளித் துறையில் புதுமைகளை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசின் விண்வெளிக் கொள்கை 2024 உருவாக்கப் பட்டுள்ளது. //
பதிலளிநீக்குஇது அடுத்த முதலீடா!!!!!!!! விட்டு வைக்க மாட்டாய்ங்க போல! என்னவெல்லாமோ சொல்லத் தோன்றுது. நமக்கெதுக்கு வம்பு!!
கீதா
எதெதுல எப்படி எப்படி காசு பார்க்கணும்னு அவங்களுக்கு தெரியாதா?!
நீக்குபானுக்கா நீங்கதான் இங்க பார்க்கலை. அனுஷ் வந்து போனாங்களே!
பதிலளிநீக்குகீதா
கவிதை செம ட்விஸ்ட் சிரித்துவிட்டேன் ஸ்ரீராம். நல்ல கற்பனை!
பதிலளிநீக்குஅது அப்ப 2013 ல இப்பவும் பிரியாணி பாக்கெட்டோட போய்ப் பாருங்க! திரும்பியுமான்னு உங்க மேல பாய்ஞ்சிரும்!
அதுக்கு வந்த கமென்ட்ஸ் செம....
கீதா
அம்மாடி.. இப்போ பிரியாணில தரம் இல்லை! அதுல,அஜினமோட்டோ புலி சாப்பிடாதாம்!
நீக்குகஜேந்திர மணி அவர்களின் பகிர்தலான மொட்டை போடுதலின் விளக்கம் தெரியாத தகவல்.
பதிலளிநீக்குபொக்கிஷப் பட
பொக்கிஷப் படங்கள் கறுப்பு வெள்ளை பல விஷயங்களைச் சொல்கின்றன. சென்னை பாருங்க அந்தக்காலத்துல....கூவம் பக்கிங்க்ஹாம் கால்வாய் எல்லாத்துலயும் படகு ஓடியது போக்குவரத்தும் இருந்தது, அதை அப்படியே பாதுகாத்திருக்கலாம் ஹூம் என்ன சொல்ல?
நீக்குகீதா
__/\__
நீக்குஒரு கருத்து ஒளிந்து கொண்டிருக்கு என்று நினைக்கிறேன் ஸ்ரீராம்
பதிலளிநீக்குகீதா
Brought back!
நீக்குயாருடா அவள்? - ஹாஹாஹா எல்லாம் சொல்லிட்டு கடைசில கேள்வி. ஆனா இந்த யாருடா அவள் என்பது உனக்கு அவள் யாருடான்னு!?
பதிலளிநீக்குதனியாவர்த்தனம் பொதுவாகவே சபாவில் கூட பலரும் எழுந்து கேன்டீன் செல்வதை பார்க்கலாம்.
கீதா
/தனியாவர்த்தனம் பொதுவாகவே சபாவில் கூட பலரும் எழுந்து// இசையில் ரசனை இல்லாதவர்களாக இருக்கும். அதனால் செக்குக்கும் சிவலிங்கத்திற்கும்... இல்லை இல்லை.. சங்கீத சபாவிற்கும் சரவணபவனிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களாக இருக்கும்
நீக்கு:-))
நீக்குஇணையத்தில் படித்த வம்பு எல்லாம் எ.பிக்குத் தேவையா?
பதிலளிநீக்குவேணாங்கறீங்களா ?
நீக்குஇது உறுதிப்படுத்தப்படாத ரொம்ப பெர்சனல் விஷயம். அதைத் தெரிந்துகொண்டு என்ன செய்யப்போகிறோம்?
நீக்குசரி, நிறுத்தி விடுவோம்!
நீக்குநேதாஜி சுபாஷின் நடையில் இருந்த கம்பீரம் - நான் சதாம் ஹுசைன் தூக்கில் போடப்படுவதற்கு (அதாவது முகத்தில் கருப்புத் துணியைப்போட்டு மூடி தூக்கிலிடுவதற்கு முந்தைய ஒரு நிமிடம்) முன்பான காணொளியைப் பார்த்திருக்கிறேன் (அந்தக் காணொளியில் தூக்கில் போட்டதும் உயிரிழப்பதும் உண்டு). அவரிடமும் கம்பீரத்தைக் கண்டேன். தாங்கள் செய்தது சரி என்ற திடமனது இருக்கும் தலைவர்களிடம் அந்தக் கம்பீரம் இருக்கும்
பதிலளிநீக்குசதாம் காணொளி நானும் பார்த்திருக்கேன். கம்பீரம்தான்.
நீக்குவனக் கொள்ளையனை ஹீரோவாக்கும் முயற்சிதான் வீரப்பன் பற்றிய புத்தகங்களின் அடிப்படை. ஜாதியைத் தூக்கிப்பிடித்தால் அதன் மூலமாக நமக்கு வாக்குகள் அறுவடையாகும் என்பது கட்சியின் நோக்கம். ஒருவன் கெட்டவனாக வாழ்வதற்குப் பல்வேறு காரணிகள் இருக்கலாம், இருந்தாலும் கெட்டவன் கெட்டவனே. அவனுக்குத் தண்டனை கொடுக்கணும். சமூகத்தினால், போலிஸ் செய்த தவறுகளினால், அரசியல்வாதிகளால் என்று அதனை ஜஸ்டிஃபை செய்ய முடியாது.
பதிலளிநீக்குஅதுவும் சரி. ஆனால் வேறு சில தெரியாத விஷயங்கள் எல்லாமும் தெரிகிறது. நக்கீரன் கோபால் ஒரு உருப்படாத தூதர் என்று தெரிகிறது. வீரப்பனுக்குக் கொடுக்க என்று தந்த பணத்திலேயே காமேஷன் அடித்தவர் என்று தெரிகிறது. வீண் பெருமைக்கு ஆசைப்படுபவர் என்று தெரிகிறது. சுயநலம் என்று தெரிகிறது.
நீக்குவீரப்பனை வைத்து கோடி கோடியாகச் சம்பாதித்தவர் நக்கீரன் கோபால் மற்றும் சன் தொலைக்காட்சி. அதனால்தான் அடுத்த முறை அவரை தன் பக்கத்தில் நெருங்க விடவில்லை.
நீக்குஉண்மை. அரசு 13 கோடி இடத்தில் பத்து கோடியை மட்டுமே வீரப்பனிடம் கொடுத்த கோபால், வீடியோ நன்றாக இருக்கிறது தொலைக்காட்சியில் வெளியிடுங்கள் என்று சொல்லி சன் டிவிக்கு மறைமுக ஆதரவு தந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி , காரில் ஏறி அலுவலகம் வரும் முன்னரே கலாநிதி மாறன் 'தாத்தா சொன்னார்... நீங்க பட்ட கஷ்டம் மக்களுக்குத் தெரியணும்' என்று டயலாக் பேசி வீடியோ கேசட்டை வாங்கி சன் டிவி யில் வெளியிட்டது.... மொத்தத்தில் எல்லோரும் ஃபிராடுகள்.
நீக்குயாரெல்லாம் தங்கள் கையெழுத்துக்குக் கீழே ஒரு கோடிழுத்து அதற்கும் கீழே இரண்டு புள்ளிகள் வைப்பீர்கள் என்று தெரியலே.
பதிலளிநீக்கு43 வயது அனுஷ்காவின் கையெழுத்தும் அப்படித்தான் இருக்கும்.
கீழிருந்து மேல் நோக்கிப் போகும் கையெழுத்தில்
கீழ் புள்ளி இரண்டுக்குக் கீழே அரைச்சந்திர வடிவமொன்று இருக்கும்.
இப்படியானவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தை இயல்பாகவே நேசிப்பவர்கள் கையெழுத்து ஆரூடம் அறுதியிட்டு கணிக்கிறது.
அச்சச்சோ.. நான் அப்படி போடுவதில்லையே...
நீக்குசில பல ஜோசியர்கள், மிதுன ராசி நேயர்களுக்கு அக்டோபர் 12லிருந்து பணம் கொட்டோ கொட்டென்று கொட்டப்போகிறது என்று அடித்துவிடுகிற மாதிரி ஜீவிசார் சொல்றாரா?
நீக்குநானும் இரண்டு புள்ளி வைப்பேன். ஒரு எழுத்தின் மேல் இன்னொரு முறை எழுதுவேன் (எல்லாம் ஏதோ ஒரு ஜோசியர் சொல்லி). வாழ்க்கையில் முன்னேற்றத்தை இயல்பாக நேசிப்பவர்கள் அனேகமாக எல்லாருமே அல்லவா? ஆனால் முன்னேற்றம் வரணுமே.. ஹிஹி
நான் இதிலெல்லாம் நம்பிக்கை வைப்பதில்லை, கேட்டுக்கொள்வதுமில்லை!!
நீக்குஒரு சுலபக் கண்டுபிடிப்பு இதுக்கு இருக்கிறது, நெல்லை.
பதிலளிநீக்குவாழ்க்கையில் நிதானமான தீர்க்கத்துடன் முன்னேற்றம் அடைந்தவர்கள் சிலர் கையெழுத்துக்களை சேகரியுங்கள். சேகரித்தவற்றில் 90℅ கையெழுத்துக்களில் பெயருக்குக் கீழே கோடிழுத்து அதன் கீழே இரு புள்ளிகள் குத்தப்பட்டிருக்கும்.
எல்லாத்துக்கும் முன்னால் அனு கையெழுத்தை ஒரு பார்வை பார்த்து விடுங்கள். ஸ்ரீராம் இன்னேரம் அதைப் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். KGG?
தெரிலே.
அனுஷ் கையெழுத்து இன்னும் நான் பார்க்கவில்லை ஜீவி ஸார். ஆனால் இப்பவும் சொல்கிறேன்... எனக்கு இதில் நம்பிக்கை இல்லை!
நீக்குஎதுக்குமே நம்மளவில் முடிவான முடிவு என்று ஏதும் இல்லை. எல்லாமே ஒவ்வொரு காலத்திலும் மனத்தளவில் மாற்றத்திற்கு உள்ளாவது தான்.
நீக்குஉண்மை ஜீவி ஸார்... அப்புறம் ஒரு குட் நியூஸ்.. அனுஷ் கையெழுத்து பார்த்துட்டேன். தலைமை ஆசிரியர் காட்டிக் கொடுத்து விட்டார்!
நீக்குஊபர் ஓட்டுனர் இனி வார்த்தையில் கவனமாக இருப்பார் என்று நம்புவோம்.
பதிலளிநீக்கு//மறுநாளே அவர் பழைய குருடி கதவை திறடி ஆகி இருப்பார்!!
ஆமாம், இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன?!!!//
உங்கள் பழைய குருடிக்கு சார் நல்ல விளக்கம் தந்து இருக்கிறார்.
நடக்குமா தெரியாது... நம்பிக்கைதான் வாழ்க்கை. நன்றி கோமதி அக்கா.
நீக்குT. கல்லுப்பட்டி பக்கம் மக்கள் இப்படிதான் பஸ்ஸிலும் போவார்கள்! பார்த்திருக்கிறேன்.//
பதிலளிநீக்குT. கல்லுப்பட்டி என்னால் மறக்க முடியாத இடமாகி விட்டது.
இந்த ஊரில் தான் என் அண்ணன் சாலை விபத்தில் மரணம் அடைந்தார் சிறு வயதில். இந்த பேரை கேட்டாலே மனம் பதறும், கண்கள் குளமாகும்.
அடடா... இப்படி ஒரு சோகமா? முன்பு நான் அந்த ஊரைத் தாண்டிதான் வேலைக்குச் செல்வேன். ஸ்ரீவில்லிபுத்தூர், மற்றும் வத்ராப்பில் பணிபுரிந்த நாட்கள். மற்றும் என் அண்ணன் பேரையூரில் இருந்த காலங்கள்!
நீக்குமற்றவைகளை நாளை பார்க்கிறேன்
பதிலளிநீக்கு__/\__
நீக்குஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது, பழைய படங்களும், பொக்கிஷபகிர்வுகளும் அருமை.
பதிலளிநீக்குநன்றி கோமதி அக்கா.
நீக்குஉங்கள் அனுபவம் கதை போன்று சென்ற விதம் நன்றாக இருந்தது. இப்படிச் சிலசமயம் இது போன்றவர்களுக்கு ஒரு சின்ன ஷாக் ட்ரீட்மென்ட் நல்லதுதான். இருந்தாலும் கவனமாகவும் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
இதில் பயம் எதுவுமில்லை. நன்றி துளஸிஜி.
நீக்குமோஹன்லால் பற்றிய செய்தி உண்மையா வதந்தியா என்று தெரியவில்லை. தீ இல்லாமல் புகையாது என்று சொல்வதையும் நாம் ஓரளவு கணக்கில் சேர்க்க வேண்டுமோ?
பதிலளிநீக்குதுளசிதரன்
அவர் உங்கள் ஊர்க்காரர். அங்கு என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று சொல்லுங்களேன்... ஹிஹிஹி... நெல்லைக்கும் கீதாவுக்கும் தெரியாமல் சொல்லுங்கள்...
நீக்குசகோதரி பானுமதி அவர்கள் கொடுத்திருந்த செய்திகளை வாசித்துக் கொண்டேன். சில வாசித்தவை.
பதிலளிநீக்குதுளசிதரன்
__/\__
நீக்குஸ்ரீராம் உங்கள் கவிதை வித்தியாசமாக இருந்தது. சிரிப்பை வர வழைத்தது. குறிப்பாகக் கடைசி வரி. நகைச்சுவையாகவும் கவிதை எழுதுவீர்கள் என்ற உங்கள் திறமையும் தெரிகிறது. அதற்கு வந்திருந்த கருத்துகளும் நல்ல நகைச்சுவை. புளி சாதம்/புலி சாதம் ஆனதால் புலி கவ்விக் கொண்டு போவது இதை வாசித்து சிரித்தே விட்டேன்.
பதிலளிநீக்குதுளசிதரன்
ஆஹா.. தன்யனானேன். நன்றி துளசி ஜி.
நீக்குஅந்த ரயில் படத்தைப் பார்க்கும் வெளிநாட்டவர்கள் இந்தியாவைப் பற்றி பலவிதமாகப் பேசலாம். இப்படி நிகழ்வது வட இந்தியாவில் சில மாநிலங்களில் மட்டுமே. ஆனால் இந்தியாவே இப்படித்தான் என்ற ஒரு கண்ணோட்டம் உலகிற்கு ஏற்பட்டிருக்கும் என்றும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅது கொஞ்சம் வேதனையைத் தருகிறது. ரயில்வே இப்படியான சூழல்களில் கூடுதலாக ரயில்களோ அலல்து இருக்கும் ரயில்களில் பெட்டிகளைக் கூட்டியோ செய்யலாம். பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் விதமாக.
துளசிதரன்
அரசாங்கங்களால் பஸ்ஸையே ஒழுங்காக போதுமான அளவு தரமுடியவில்லை. ரயிலையா? போங்க ஸார்... ஜோக் அடிக்காதீஙக!
நீக்குபொக்கிஷப் பகிர்வும் நன்றாக இருந்தது
பதிலளிநீக்குதுளசிதரன்
__/\__
நீக்குThanks for remembering me in the joke. :)
பதிலளிநீக்குநாங்கள் உங்கள் நினைவாகத்தான் இருக்கிறோம் கீதா அக்கா. உங்கள் சிரமங்கள் புரிந்து 'வாங்க.. வாங்க' என்று தொந்தரவு செய்யாமல் இருக்கிறோம். உண்மையில் நீங்கள் ரெகுலராக வலைப்பக்கம் வந்தால் உங்கள் மனதுக்கும் ஒரு மாறுதலை இருக்கும்.
நீக்குtrying
நீக்கு/என்ன சொல்றீங்க...!/ சரிதான் :).
பதிலளிநீக்குநேதாஜி படம் அருமை.
தொகுப்பு நன்று.
நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குபதிவுக்குப் பொருத்தமாக Meta AI மூலமாகப் பெற்ற படம் அருமை:). அடுத்தடுத்த பதிவுகளிலும் எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குமுயற்சிக்கிறோம்!
நீக்கு