வியாழன், 11 ஜூலை, 2024

நமக்கெதுக்கு வம்பு!

 காக்கைகளிடம்  எனக்கோர் அனுபவம் உண்டு.  அது கூடு கட்டி இருக்கும் மரத்தின் அருகே சென்றோமானால், 'இத்தனை நாள் இவன்தான் நமக்கு உணவு கொடுத்தான்' என்றும் பாராமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து நம் தலையில் வலிக்குமளவு லொட்டென்று ஒன்று போடும்.

காலை நடைப்பயிற்சி செய்யும் வழியில் ஓரிரண்டு மரங்கள் அருகருகே இருக்கும்.  ஓரிடத்தில் குறுக்கே செல்லும் கம்பியில் ஏழெட்டு காக்கைகள் அமர்ந்து குனிந்து என்னைப் பார்த்து, குழாயடிச் சண்டைக்காரர்கள் போல உரத்த குரலில் கா கா என்று கத்தும்.  என்ன சொல்ல வருகின்றன என்று புரியாமல் எதற்கும் இருக்கட்டும் என்று வலது கையால் தலையைத் தடவியபடியே, அதாவது கையை தலைக்குமேல் ஆட்டியபடியே தாண்டிச் செல்வேன்.

முதல் நாள் பெய்த மழையில் தேங்கி இருந்த தண்ணீரில் காக்கைக் கூட்டம் ஒன்று குளித்துக் கொண்டிருந்தது.  எப்படியும் இருபது காக்கைகள் தேறும்.  நடப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் இந்த  மாதிரி காட்சிகள் கிடைக்கும்போது க்ளிக்கிக் கொள்வதும்!  ஆனால் பாருங்கள் கொஞ்சம் நெருங்கி கிளிக்க முற்படுகையில் காக்கைகள் பறந்துபோய்விட சில காக்கைகள் குளியலை நிறைவு செய்து கொண்டிருந்தன. 


அதிகாலை குளித்தபின்னரே பணிக்கு கிளம்பும் போலும்.  

நடந்து வரும் வழியில் ஒரு நாள் இந்த உடைந்த பிளாஸ்டிக் (பாதி) நாற்காலி போன்ற பொருள் நடு வழியில் கிடந்தது.  தாண்டிச் செல்லும் இரு சக்கர வாகனங்கள்  இதைப் பார்த்து சட்டென ஒதுங்கிச் சென்றன.  எனக்குள் இருக்கும் சமூக சேவகன் விழித்துக் கொண்டான்.  மனதுக்குள்  எவனோ ஒருவன் 'நல்ல சமயம் இது விட்டு விடாதே...  நாலும் தெரிந்த நீ நழுவ விடாதே' என்று டி எம் எஸ் குரலில் பாடலின் வரியை எடிட் செய்து பாடினான்.

[அந்தப் பொருளை சமர்த்தாக போட்டோ  எடுத்து வைத்திருந்தேன்.  தொலைந்து விட்டது!] 

இடது கையால் அதைத் தூக்கி எறிந்த அதே கணம் சட்டென மனத்திரை உயிர்பெற்று அதில் அம்மாவின் முகம் மங்கலாக தெரிந்தது...  


"ரோட்ல ஏதாவது கிடந்தா அத மிதிக்கக் கூடாது,  அதுல கைவைக்கக் கூடாது...  எதையாவது மந்திரிச்சு போட்டிருப்பாங்க..."  குரலும் ஒலித்தது - மனதில்தான்.

"எதுக்கும்மா?" சிறுவயது ஸ்ரீராம் அப்பாவியாய் கேட்டான்.

"அவர்களுக்கோ, அவங்க குடும்பத்துக்கோ பிரச்னை ஏதாவது இருக்கும்.  இப்படி மந்திரிச்சு போட்டா போயிடும்.."

"அதெப்படி போகும்?"

அம்மா சற்று யோசித்து விட்டு "போறவங்க வர்றவங்க கை கால்  அதுல பட்டா அவங்களுக்கு அது ஒட்டிக்கும்"

"ஏம்மா..  இது பாவமில்லையாம்மா?'

"நாமதான் பாவம், இன்னும் சொல்லப்போனா நான்தான் பாவம்...  ஒண்ணை சொன்னா  கேக்கணும்...  கேள்வியா கேட்டுக்கிட்டிருக்கக் கூடாது...  குங்குமம் ஈஷிக்கொண்டோ, சணல், பூ  மாதிரி ஏதாவது சுற்றியோ எது கிடந்தாலும் தொடாதே...   இவ்வளவு ஏன்?  பணம் காசு கிடந்தால் கூட எடுக்காதே...  அது அடுத்தவர் பொருள்"

திரையும் நினைவும் மங்கி ஃபேட்அவுட் ஆகி மறைந்தது.

'ஆங்...  இது மந்திரித்த கயிறு போலவோ, சணலோ, தேங்காயோ, குங்குமமோ எதுவும் இல்லையே...' என்னைநானே தேற்றிக்கொண்ட நேரம் என் மனத்திரையில்  வேறொரு சம்பாஷணை ஓடியது...

இப்போது நெற்றியில் விபூதிம் பயங்கரமாய் ரத்தக் கலரில் குங்குமம், கையில் மண்டை ஓட்டுடனும் ஜடா முடியுடனும் சட்டை போடாத மந்திரவாதி ஒருவரும், இன்னொரு வேஷ்டி துண்டு கட்டிய ஒருவரும் பேசும் உரையாடல்...

"சாமி..  இப்படி மந்திரிச்சு தெருவில் போட்டு என்ன பிரயோஜனம்?  உஷாரா யாரும் அது மேல படாமலேயே போறாங்களே.."

"டேய் மாங்கா மண்டையா...   அதனாலதாண்டா எப்பவும் மந்திரிக்கற பொருளெல்லாம் இல்லாம நைஸா இந்த உடைஞ்ச பிளாஸ்டிக் சேரை மந்திரிச்சு தெருவுல போடறோம்...   சமூக சேவை. தேங்கா சேவைன்னு ஏதாவது ஒரு அசடு இதை எடுத்து ரோடோரமா போடாதா...   அட, கொறஞ்ச பட்சம் காலாலயாவது எட்டி உதைக்காதா...  அப்ப ஆப்டுப்பாண்டா...அன்னிக்கி விலகு ம் உன் கஷ்டம்"

என்னை கேட்காமலேயே என் மனம் இப்படி கற்பனை செய்து என்னை பயமுறுத்தியுது.  "ச்சே...   மொத்த ஜனமும் பார்த்து சும்மாதானே போகுது..  உனக்கென்ன சமூக சேவை, புடலங்கா சேவை?' மனக்குமுறல் கோபப்பட்டு அதட்டியது.

வாக்கிங் போனோமா, வந்து சேர்ந்தோமா என்று இல்லாமல் இது என்னடா வம்பு!

கிலேசத்துடனேயே வீடு வந்து ஓரமாக ஒரு கவலையுடனேயே நாட்களைக் கழித்தேன்.  அப்புறம் நடந்த சின்ன விஷயத்துக்கும் 'அதுதான்' காரணமோ என்று லேசாக அவ்வப்போது கவலை கொண்டேன்.

பல நாட்கள் பெரிய சிரம எதுவும் இல்லாமல் கழிந்தபின் நேற்று நடைப்பயிற்சியில்யில் இது கண்ணில் பட்டது.  


நட்ட நடு சாலையில் கிடக்கிறதே என்கிற கவலை மனதில் உதித்த அதே கணம் நடையை எட்டிப்போட்டு விரைவாக அந்த  இடத்தைக் கடந்து விட்டேன்!  

நமக்கெதுக்கு வம்பு!

 ஆனா பாருங்க....   நம்ம செல்லம் இதற்கெல்லாம் பயப்படற ஆளா தெரியவில்லை!


\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\







&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மிகச்சமீபத்தில் Face Book ல் படித்த, ரொம்ப ரசித்த  மோகன்ஜி அண்ணாவின் கவிதை..  

பிள்ளை விளையாட்டு
அர்த்தம் நூற்று அர்த்தம் நூற்று
நமக்கிடையே ஆயிரமாயிரம் வாக்கியங்கள்.
கரும்பிழி சக்கைகள் காய்ந்து கிடக்கின்றன
ஈக்களுக்கேதுமினி மிச்சமின்றி.
புதிதாய்ச் சொல்ல உனக்கோ ஒன்றுமேயில்லை…
கேட்பதற்கும்தான்.
சலிப்பு சிணுங்கலாய், பெருங்குரலாய், ஓலமாய்
பரிணமித்தே ஓய்ந்த நிஜம்.
மாரன்அம்புகள் எரியீட்டிகளாய் மாறி
போர் முடித்த களம்.
மிஞ்சி நிற்கும் மௌனமோ எதிரொலிக்கிறது,
பெரும் மௌனமாய்.
ஒரேகோட்டில் அருகருகே நிற்கும் சாத்தியங்கள்
அருகித் தான் போய்விட்டன.
ஊருக்கென்று ஒட்டாமல் உறவாட்டம்
ஊடல்மீறி உலைக்களனாய் கனன்று புகையும்.
சிறுசிறு விலகல்களில் முன்னும்பின்னுமாய்
மாறிப்போன கோணங்கள்.
அட்டையில் கட்டிய தடுப்பு வேலிகள்
கற்சுவராகும் காலப்பிரமாணம்.
நைந்திடா தெஞ்சிய ஓரிரு பிரிகளில்
ஊசலாடும் தாம்பத்தியம்.
மீண்டும் யாவையும் கலைத்துவிட்டு
புதிதாய் ஆட்டம் துவக்கவேணும்.
தனித்தனியாகவென அனுபவம் சொல்லும்
ஒன்றாக ஆடவோ உள்ளம்கோரும்.
(எனது ‘பரணிலிருந்து பரல்கள்’ தொகுப்பிலிருந்து )

மோகன் ஜி 

\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

நியூஸ் ரூம் 


பானுமதி வெங்கடேஸ்வரன்    

- நிஹாரின் நவாடா மாவட்டத்தில் ஒரு ரயில்வே ஊழியர் தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்ததில் பாம்பு இறந்தது.  அவ்வாறு செய்வது விஷத்தின் தன்மையை மாற்றும், விஷம் பாம்புக்கே திரும்பிச் சென்று விடும்  என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.

... எழுத்தாளர் சிவசங்கரிக்கு, அகில இலங்கை கம்பன் கழகத்தின் கம்பன் புகழ் விருது வழங்கப்பட்டுள்ளது.  இலங்கையில், 44 ஆண்டுகளாக செயல்படும், அகில இலங்கை கம்பன் கழகம், ஆண்டு தோறும் தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்களுக்கு, ஒரு லட்சம் ரூபாயுடன், 'கம்பன் புகழ் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது.  இலங்கை தலைநகர் கொழும்பில், சமீபத்தில் நடந்த விழாவில், இலங்கை கம்பன் கழக தலைவர் நீதிபதி விஸ்வநாதன், சிவசங்கரிக்கு கம்பன் புகழ் விருதையும், ஒரு லட்சம் ரூபாயையும் வழங்கினார்.

129 கோடி நிலுவைத்தொகையைக் கொடுத்தால்தான் கிருஷ்ணா நதி நீர் தமிழகத்திற்கு வரும். தமிழகத்திற்கு ஆந்திரா எச்சரிக்கை.

- பயணிகள் வசதிக்காக அடுத்த இரண்டு ஆண்டுகளில்10000 ஏசி இல்லாத ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே திட்டம்.

- உணவுப் பொருள்கள் பாக்கெட்டுகளில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அளவுகளை பெரிய எழுத்தில் அச்சிடும் திட்டத்திற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்(FSSAI) ஒப்புதல் அளித்துள்ளது.

- கேரளாவில் அமீபா நுண்ணுயிரியால் மூளையழற்சி பாதிப்பு பரவி வருவதால் தமிழ்நாட்டில் ஏரி,குளங்களில் குளிக்க வேண்டாம் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல். - தமிழகத்தில் ஏரி, குளங்கள் இருக்கிறதா என்ன?!

- சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'ஆன்க் மிச்சோலி' படத்தில் மாற்றுத் திறனாளிகள் தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதாக சமூக ஆர்வலர் நிபுன் மல்ஹோத்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி சந்திரசூட் தலைமயிலான பெஞ்ச், "மாற்றுத் திறனாளிகளின் தோற்றம், தாழ்வு மனப்பான்மை குறித்து மக்களிடையே இருக்கும் பொது புத்திக்கு எதிராக திரைப்படங்கள் மற்றும் பொது ஊடகங்களில் பல சமயங்களில் நகைச்சுவை என்னும் சக்திவாய்ந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது" என்று சொல்லி இருக்கிறது.  மேலும், திரைப்படங்களில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை சட்டபூர்வமாக பாதுகாக்கும் கமிட்டிகளில் மாற்றுத் திறனாளிகள் இடம்பெற வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

==============================================================================================

இணையத்திலிருந்து..... பாலுமகேந்திராவும், சுகாவும் 

               

ஆனந்த விகடனில் நான் எழுதிய ‘மூங்கில் மூச்சு’ தொடரின் இரண்டாவது வாரத்திலேயே பாலுமகேந்திராவைப் பற்றி எழுதியிருந்தேன். படித்துவிட்டு தொலைபேசியில் பேச முடியாமல் உடைந்து அழுதார். ‘உனக்கெல்லாம் ஒண்ணுமே செய்யாத சாமானியன் நான். என்னைப் போயி இப்படித் தலையிலத் தூக்கி வச்சு எழுதியிருக்கியேம்மா!’ என்றார். அதே விகடனில் நான் எழுதிய ‘சஞ்சீவி மாமாவும், ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையைப் படித்து விட்டும் தாங்க முடியாமல் அழுதார். அந்தக் கதையின் பின்னணியை நாங்கள் இருவரும் அறிந்திருந்ததே அவரது அழுகைக்குக் காரணம். அவர் காலமான அன்று நிகழ்ந்த சில கசப்பான விஷயங்களைக் கண்டும், காணாமல் கண்ணாடிப் பெட்டிக்குள் படுத்திருந்த வாத்தியாரையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். ‘சஞ்சீவி மாமாவும் ஸ்மிதா பாட்டீலும்’ சிறுகதையின் கடைசி வரி, துல்லியமாக வாத்தியாரின் வாழ்விலும் நடந்தேறும் என்று உறுதியாக நம்பினேன். அதுவே நடந்தது.
இயற்கையான தலை வழுக்கையை தொப்பி போட்டு மறைத்தததைத் தவிர, தன்னுடைய எந்த பலவீனத்தையும் அவர் மறைத்ததில்லை. அதையுமே ‘தலைமுறைகள்’ படத்துக்காகத் துறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளையராஜாவைப் பார்க்க காரில் சென்று கொண்டிருந்தோம். செல்லும் வழியில் ‘தலைமுறைகள்’ திரைப்பட போஸ்டர் ஒன்றில் வழுக்கைத்தலையுடன் அவர் இருக்கும் க்ளோஸ்-அப் புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது.
‘இதுக்குத்தான் இத்தன வருஷமா மறச்சு வச்சிருந்தீங்களோன்னு தோணுது’ என்றேன்.
‘Exactly. சொக்கலிங்க பாகவதர் இருந்தாருன்னா அவரத்தான் நடிக்க வச்சிருப்பேன். நானே இதை எப்படி செஞ்சேன்னே தெரியல’ என்றார்.
‘இத செஞ்சது நீங்க இல்ல, ஸார். காலம்’ என்றேன்.
நான் இப்படி சொல்லவும் என் கைகளைப் பிடித்துக் கொண்டவர், ‘நான் முதன்முதல்ல ஷேவ் பண்றத நிறுத்தினவுடனே நீதான் வந்து சத்தம் போட்டே. இப்ப நீதான் இதையும் சொல்றே’ என்றார். மருத்துவமனையில் இளையராஜாவைப் பார்த்தவுடன், ‘என்ன ராஜா, இது! ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துக்கிட்டு! நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் நாலஞ்சு படம் பண்ண வேண்டாமா?’ என்றார்.
‘தலைமுறைகள்’ திரைப்படத்துக்கு அடுத்ததாக ஒரு திரைக்கதையை எழுதும் திட்டத்திலிருந்தார். முழுக்கதையையும் என்னை அழைத்துச் சொன்னவர், ’உன்கிட்ட சொன்னதுக்கப்புறம்தான் ராஜாக்கிட்ட சொல்லணும்னு நெனைக்கிறேன். இன்னும் இதை கொஞ்சம் ஷேப் பண்ணிட்டு, ராஜாவப் போய்ப் பாத்து சொல்லிடலாம். நீயும் வந்திடு’ என்று சொன்னபோது, அது நடக்கும் என்று நம்பினேன்.
கடந்த வியாழனன்று காலை இயக்குனர் வெற்றி மாறன் எனக்கு ஃபோன் பண்ணி, ‘எங்கண்ணே இருக்கீங்க?’ என்றான்.
‘வீட்லதான். ஏன் வெற்றி?’ என்று கேட்டதற்கு,
‘சரி சரி. பதட்டப்படாம கெளம்பி விஜயா ஹாஸ்பிடல் போங்க. ஸார்க்கு ஒடம்பு முடியலியாம். நான் பெங்களூர்ல இருக்கேன். மத்தியானம் வந்துடறேன்’ என்றான்.
விஜயா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் வாசலில் அமர்ந்திருந்த அகிலா அம்மாவைத் தவிர்த்து சற்றுத் தள்ளி வந்தேன். ‘வந்துட்டியா?’ என்று என்னை அடையாளம் தெரிந்து கொண்டு கையை எட்டிப் பிடித்தார், நான் வாழ்க்கையில் முதன் முறையாகப் பார்க்கும் அர்ச்சனா அக்கா. என்னைப் பார்த்ததும், அருகில் வந்து நின்று கொண்ட பாலாவும், நானும் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. இயக்குனர்கள் சீனுராமசாமியும், ராமும் வந்து சேர்ந்தனர். சீனு ‘ஸாருக்கு ஒண்ணும் ஆயிருக்காதுண்ணே’ என்று சொல்லிக் கொண்டே இருந்தான். ராம் தொடர்ந்து என்னிடத்தில் ‘ஸார் நல்லாத்தானே இருக்காரு?’ என்று கேட்டபடி இருக்க நேரடியாக பதில் சொல்லாமல் ஏதேதோ சொல்லி சமாளித்தேன். சைகை காண்பித்து பாலா என்னை வெளியே அழைக்க, இருவரும் விஜயா மருத்துவமனைக்கு வெளியே வந்தோம். பாலா ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து இழுக்கத் துவங்கினார். பாலாவின் முகம் எனக்கு வாத்தியாரின் உடல்நிலை குறித்த உண்மையைச் சொல்லாமல் சொல்லியது.
‘கெளவன் போயிட்டானோ, பாலா?’ கேட்கும்போதே என் குரல் உடைந்தது.
பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு ‘ஆம்’ என்பது போல தலையசைத்த பாலாவிடம் அதற்குப் பிறகு எனக்குப் பேச ஒன்றுமில்லாமல் போனது.
- சுகா
சொல்வனம்

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

நமது வலையுலக நண்பர் பகவான் ஜி முகநூலில் பகிர்ந்திருந்த ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யுஷன் படம்!



\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இதுவும் இணையத்திலிருந்து....



====================================================================================================

முகநூலில் காலச்சக்கரம் நரசிம்மா பகிர்ந்திருந்த நகைச்சுவை... 


=================================================================================================


பொக்கிஷம்  :- 

கட்டாயம் கையிருப்பு குறைஞ்சிருக்கும்!

இவர் என்ன மன்சூர் அலிகான் தாத்தாவா?!

அடடே...  வழக்கு போட்டு வருமானம் பார்க்கும் வராகசாமி!


நியாயமான சந்தேகம்!

'எதிர்பாராமல் நிகழ்ந்த தவறு' என்று டிபார்ட்மெண்ட்டுக்கு விளக்கம் கொடுத்திருக்காராம் அந்த ஊழியர்!

88 கருத்துகள்:

  1. அதிகாலை குளித்த பின்னரே அவை கிளம்பும் போலும்//

    சிரித்து விட்டேன் ஸ்ரீராம் . அது ஒழுங்கா குளிச்சிருக்காதே பாத்தீங்களா நல்லா...ஹிஹிஹி.பழைய நினைவு வந்துருச்சு. இதுதான் காக்கா குளியல்னு சொல்றது. எங்க வீட்ல யாராவது சும்மா குளியலறைபோயிட்டு வந்துட்டு தலைல சும்மா தண்ணி அப்படியே தெளிச்சுட்டு வந்துட்டா காக்கா குளியல். இது போல ஊர்ல இருந்தப்ப குளத்துல குளிக்கும் போது தலையில் முக்காம சும்மா அப்படி ஒரு மூக்கு மாதிரி போட்டு வந்தாலும் காக்கா குளியல்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா...  குளிக்கறா மாதிரி பாவ்லா பண்ணிட்டு கிளம்பும் ஸம்ப்ரதாயக்குளியல் வகையோ அது!

      நீக்கு
    2. கூட அண்ணா மீ டைப்பிங் மொபைல் வழி அதுவும் சிலது வாய்ஸ் ...கூகுளை மன்னித்து விடுங்க ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
    3. ஆமா ஶ்ரீராம்..அதே..அதே...

      கீதா

      நீக்கு
    4. புரிகிறது...   பயண நேரத்தில் எங்களுக்கும் சிறிது நேரம் ஒதுக்குவது மகிழ்ச்சி, நன்றி!

      நீக்கு
  2. எனக்கும் சின்ன வயதில் ரோட்டில் போனா ஓலலை கூடு மாதிரி எல்லாம் இருக்கும் அதெல்லாம் தொடக்கூடாது மிதிக்கக் கூடாது எலுமிச்சம் பழத்தை மிதிக்க கூடாது இப்படி எல்லாம் எங்க ஊர்ல சொல்வாங்க. அதுவும் எங்க ஓர் அமானுஷ்ய பில்லி சூனியம பேசப்படும் ஊராச் சே....

    நானும் இப்படித்தான் கேள்விகள் கேட்பேன்...அம்மா சொன்ன அதே பதில்...எனக்கும் ஃப்ளாஷ்பேக் வந்து fade ஆச்சு!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா.. ஹா... அம்மாக்கள் வாழ்க... ஆமாம் உங்க ஊர் பி. சூ வகையறாக்கள் இன்னும் பயங்கரம்!

      நீக்கு
  3. இப்படியான பல விஷயங்கள் சின்ன வயசுல நம்ம மனசுல பதிய வைக்கிறாங்க..அது பயத்தை ஏற்படுத்தும்...script encrypted at the early age...வளர்ந்து வரும் பின்னாளில் மனோவியாதிக்கு வித்திடும்.

    கீழ கிடப்பதில் சர்வ உச்சாக்களும் இருக்கும் கிருமி இருக்கும். நம்ம நேரம் நம் இம்யூனிட்டி கம்மின்னு வைங்க தொத்திக்கும்...அதுதான் காரணம். நாம என்ன கொரோனா டிரஸா போட்டு தூக்கிப் போடுவோம்??!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்க...    ஆனா ரோட்டுல எதையோ மிதிச்சுட்டான்னு சொல்லி ஒரு மாதிரி ஆனவங்களும் இருக்காங்க!

      நீக்கு
    2. ஆமா..அது மனோ பயம் ஶ்ரீராம். ஜோஸ்யர்கள், சூனியம் ஒட்டுபவர்கள் என்று சொள்ளப்படுபவர்களுக்குக் கொண்டாட்டம்.

      கீதா

      நீக்கு
  4. கற்பக கணபதி
    கனிவுடன் காக்க..
    முத்துக்குமரன்
    முன்னின்று காக்க..
    தையல் நாயகி
    தயவுடன் காக்க..
    வைத்திய நாதன்
    வந்தெதிர் காக்க..

    இந்த நாளும் இனிய நாளாக இருக்க இரு கரங்கூப்பி
    பிரார்த்திப்போம்..

    எல்லாருக்கும் இறைவன்
    நலங்களைத் தந்து நல்லருள் புரியட்டும்..
    நலம் வாழ்க..

    பதிலளிநீக்கு
  5. தண்செய்யும் வாழ்க.. தஞ்சையும் வாழ்க..
    தளிர் விளைவாகித்
    தமிழ் நிலம்
    வாழ்க..

    பதிலளிநீக்கு
  6. மோகன் ஜி அண்ணாவின் கவிதை சூப்பர்...யதார்த்தம். ரசித்தேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. Optical illusion வாழ்க்கைத் தத்துவம் சொல்லும். இப்படித்தான் நம் மூளை யில் பதிந்தவை பல சமயங்களில் நம்மை தப்பா சிந்திக்க வைச்சு மாற்று சிந்தனை செய்யாம உறவு நட்பு பிரியும் அளவு செல்லும்..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. காலச்சக்கரம் நரசிம்மா பகிர்ந்த நகைச்சுவை...சிரிததுவிட்டென். இவலவுதான் ஶ்ரீராம் முடியுது. கருத்துகள்...டைப்பிங்...வாய்ஸ் டைப்பிங் படுத் துது

    கீதா

    பதிலளிநீக்கு
  9. காக்கா குளியல் பற்றிய கட்டுரை பராசக்தி சினிமாவின் காக்கா பாட்டை நினைவூட்டியது. ஆமாம் தெரியாமல் கேட்கிறேன். நீங்களும் அம்மா படம் என்று ஒரு படம் போட்டிருக்கிறீர்கள். உங்க அம்மாவா அது. அதற்கு பதில் அனுஸ்கா படம் போட்டிருக்கலாம்.
    மோகன்ஜி கவிதை ஒன்றுமே புரியவில்லை.
    //அர்த்தம் நூற்று அர்த்தம் நூற்று
    நமக்கிடையே ஆயிரமாயிரம் வாக்கியங்கள்.
    கரும்பிழி சக்கைகள் காய்ந்து கிடக்கின்றன
    ஈக்களுக்கேதுமினி மிச்சமின்றி.//
    யார் யாரை நோக்கிப் பாடுவது? கரும்பிழி சக்கைகளுக்கும் கேட்பவருக்கும் என்ன தொடர்பு? எதோ தோன்றியதை எல்லாம் அள்ளிப்போட்டு கவிதை என்று சொல்கிற மாதிரி இருக்கிறது.

    ஜெயகாந்தன் கஞ்சா அடிச்சுட்டு தான் கடவுள், கஞ்சா போதை பொன்மொழி உதிர்த்திருப்பார்.
    என்னுடைய கேள்வி 'போதை என்பது அவசியமா? '

    ஜோக்குகள் அந்தக்காலத்திற்கு ஏற்ற கடிகள் தான்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா என்றதும் மெட்டா AI தந்த சித்திரம் இப்படி விசித்திரமாக தோன்றுகிறது!

      அனுஷை அம்மாவாகவா....   சேச்சே....

      கவிதை ஒன்றும் புரியவில்லையா?  அப்போ அது சிறந்த கவிதைதான்!

      நீக்கு
  10. நாய் : இறைவா... என்னை நாய் என்றே கொஞ்சம் மதிப்புக் குறைவாகவே பார்க்கும் மனிதர்கள் என்னையும் மனிதனாக எண்ணக்கூடாதா?

    கடவுள்: வித்தியாசமான வேண்டுகோள். நிச்சயம் இந்த ஜென்மத்திலேயே நடக்கும். என்ன ஒண்ணு... உனக்கு அது தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...   ஆப்டிகல் இல்யூஷன் பற்றியா?!!  உங்களுக்கு தெரிந்தது மனிதனா, நாயா?

      நீக்கு
    2. ஶ்ரீராம், எனக்கு முதலில் டக்கென்று தெரிந்தது மனிதன் அப்புறம் நாய்....

      நெல்லை, பாவம் அதுக்குத் தெரியல மனுஷனா பிறந்தாலும் நாயெண்ணு திட்டுவாங்கன்னு!!!!

      அது மீண்டும் கடவுள் கிட்ட சொல்லும் மனுஷனா பிறந்தாலும் நாய்னு திட்டராங்க....நாய் படும்.பாடு என்னு சொல்றாங்க..நாயாவே இருக்கேன்...கடகடவுள் சொல்வார்...நான் பாரியாதான் கணக்கு போட்டு செய்யறேன் .. நிம்மதியாக இருக்கறதா விட்டு பேராசை...யாரை விட்டுச்சு...!!!!

      கீதா

      நீக்கு
    3. பாரி யாதான் - சரியாத் தான்.....

      கீதா

      நீக்கு
    4. நான் நாயை கஷ்டப்பட்டு பார்வையில் பிடித்தேன்.  என் இளையவன் சட்டென கண்டுபிடித்தான்.  எங்கள் பின் வீடு இரண்டு வீடுகளில் ஒரு பொமாரேனியனும், ஒரு பீகிள் வகையும் வளர்க்கிறேன் என்ற பெயரில் கொடுமைப் படுத்தப்படுவதைக் கண்டால் பாவமாக இருக்கிறது.

      நீக்கு
  11. மாலை மயங்கும் வேளையில் தனியாக ஆளரவமற்ற இடங்களுக்குச் செல்லக்கூடாது, மற்றவர்கள் மூச்சுக்காத்து படாமல் இருக்கணும்.... இவையும் அம்மா எனக்குச் சொல்லிக்கொடுத்தவை.

    மளகாய், எலுமிச்சை, உடைத்த பூசனி-குங்கும்ம் அப்பியது என பலவற்றையும் தாண்டித்தான் செல்வேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதோடு சவ ஊர்வலத்தில் தூவப்பட்ட மலர்கள்...

      நீக்கு
    2. அது என்ன அநாகரீகப் பழக்கம் என்று புரியவில்லை

      நீக்கு
  12. உங்களைப் போலவே வித்தியாசமான காட்சிகளைப் படம் பிடிப்பேன். உதாரணமா எப்படி சாமர்த்தியமா பெங்களூரில் மரங்களை வெட்டறாங்க, அழிக்கறாங்கன்னு. ஆனால் பின்பு கம்பைல் பண்ணுவது மிகவும் கஷ்டம், ஒவ்வொரு படமும் வெவ்வேறு மாதங்களில் அமைந்துவிடுவதால்.

    சமீபத்தில் என் வீட்டின் வேலைக்காக கார்பென்டரை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அடுத்த வீட்டின் வெளியே இருந்த புங்கை மரத்தைக் காண்பித்து, இதை வெட்ட எவ்வளவு காசு ஆகும்னு நினைக்கறீங்கன்னு கேட்டார். நான், ஒரு ஐயாயிரம் ஆகுமா என்றதற்கு, இரண்டரை லட்சம் ஆகும். தெரியாமல் வெட்டினால், சிறைத்தண்டனை, அபராதம் உடனே விதிப்பார்கள், வீட்டு ஓனருக்கும் சேர்த்து என்றார். நடைமுறையில் லஞ்சத்துக்கே இது வழி வகுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புங்கை மரத்துக்கு அவ்வளவு மவுசா?  தேக்கு மரம், சந்தன மரம்தான் அப்படிச் சொல்வார்கள்.

      நீக்கு
    2. நானும் படம்.பிடிக்கிறேன் ...ஆனா இப்ப எழுதுவது இல்லை....மணல் கொள்ளை, ஃப்ரெஷ் ஆற்றுமணல் நம் வீட்டு அருகில் வீடு கட்ட கொண்டுன போ ட்டிருந்தாங்க. இரவில். கடைக்குப் போனப்ப தெரியலை ஆனா திரும்ப வீட்டுக்கு வந்தப்ப அந்த இடம் முழுவதும் தண்ணி ஓடிக் கொண்டிருந்தது..என்னனு பார்த்தா மணல் குவியலில் இருந்து.... கடவுளே ன்னு வீடியோ எடுத்தேன்...இதோ இப்பவும் சில காட்சிகள் எடுக்கிறேன்....

      கீதா

      நீக்கு
    3. சில காட்சிகளை எடுத்தாலும் பகிர் முடியாது.  ஆனாலும் அப்படி ஒன்றை நேற்று ஃபேஸ்புக்கில் பகிர்ந்தேன்.  அங்கு ஒருவர் வந்து 'நான் இதையேதான் கொஞ்ச நாட்கள் முன்பு மதுரையில் படமெடுத்து பகிர்ந்தேன்.  செம திட்டு திட்டினாங்க' என்று சொல்லி இருந்தார்.  அவர் என்ன வார்த்தைகள் உபயோகித்திருந்தாரோ...  நான் பாதுகாப்பான வார்த்தைகளை இட்டிருந்தேன்!

      நீக்கு
    4. பெங்களூரில் எந்த மரம் வெட்டணும் என்றாலும் கார்ப்பரேஷன் அனுமதி, அதிக பணம் கட்டணம் என்ற நடைமுறை உண்டு

      நீக்கு
    5. காலை ஏழு மணிக்குமேல் பதில் வராது. மதியம் சில நிமிடங்களுக்கு வரலாம், இல்லைனா இரவு ஏழு மணிக்கு மேல்தான் என்ற நடைமுறை மாறி, உடனேயே ஶ்ரீராம் பதிலெழுதுகிறார்னா என்ன அர்த்தம்? (என்னைவிட வயசாயிருக்குமோ?)

      நீக்கு
    6. நாராயண, நாராயண ! வாரும் நாரதரே!

      நீக்கு
    7. // இரவு ஏழு மணிக்கு மேல்தான் என்ற நடைமுறை மாறி, உடனேயே ஶ்ரீராம் பதிலெழுதுகிறார்னா என்ன அர்த்தம்? //

      லீவு போட்டிருக்கலாம்...

      நீக்கு
  13. காக்கைகள் நீரில் நன்றாக மூழ்கிக் குளிக்கின்ற தன்மையுடையவை...

    ஏதாவது அவசர வேலை இருந்தால உடம்பை அப்படி இப்படி அலசி விட்டுப் போவது இயல்புதான்..

    பதிலளிநீக்கு
  14. நான் பார்த்த அளவில், சக காக்கை இறந்தால் அவை குளிக்கும் தன்மை உடையவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   ஆனால் நீர் நிலைகளைக் கண்டாலே காக்கைகள் குளிக்கின்றனவே....

      நீக்கு
    2. பழைய தீட்டுக்கு தண்ணீர் கிடைக்கும்போது குளித்து தீட்டைப் போக்கிக்கொள்கிறதோ?

      நீக்கு
  15. வழியில் கிடக்கின்ற பொருளை எடுத்து ஓரமாகப் போடா விட்டாலும் பாவம் என்று சொல்லப்படுகின்றது...

    பாதையில் எலுமிச்சம்பழம் வெற்றிலை கண்ணாடி காசு பூ கிடந்தால் எடுக்கக் கூடாது.. ஒதுங்கிச் செல்ல வேண்டும் என்பது உண்மை தான்..

    ஆனால் ஆகர்ஷணம் என்ற ஒன்று இருக்கின்றது...

    நாலணா நாணயம் ஒன்றும் சற்று அருகில் நாலு பவுன் சங்கிலி ஒன்றும் கிடக்கின்றன...

    எதை எடுப்பீர்கள்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி  நாலணா நாணயத்தைதான் எடுப்பேன் என்றால் நம்பவா போகிறீர்கள்?  அல்லது எதையும் எடுக்காமல் கடந்து விடுவேன் என்றாலும் நம்பப் போகிறீர்களா?!

      நீக்கு
    2. ரங்கனாதன் தெருவில் 90ல் கட்டாக பெரும் பணக் கட்டு இருந்தது. நான் கடந்து சென்றேன். நமக்குரிமை இல்லாத எதையும் தொடாமல் கடந்து சென்றால் புதுப் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.

      நீக்கு
    3. ஆ... நீங்கள் மகான்...

      சரி, எடுத்து பக்கத்தில் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கலாமே...

      நீக்கு
    4. ஹி ஹி - அதை அவர்கள் லபக்கி விட்டால் என்ன செய்வது!

      நீக்கு
  16. வழியில் கிடக்கின்ற பொன் வெள்ளியைக் கண்டு ஒதுங்கிச் செல்லக் கூடாது என்றும் சொல்கின்றார்கள்

    பதிலளிநீக்கு
  17. /// நான் பார்த்த அளவில், சக காக்கை இறந்தால் அவை குளிக்கும் தன்மை உடையவை ///

    உண்மை தான்..

    பறவைகளில் காக்கையும் விலங்குகளில் குரங்கும் துக்கம் அனுசரிக்கின்ற இயல்புடையவை..

    நான் எழுதுதற்கு நினைத்தேன்... மறந்து விட்டேன்...

    பதிலளிநீக்கு
  18. முதலில் மனிதன்; பிறகு நாய் என் கண்ணில் பட்டது! ஒருவேளை அந்த மனிதர் B A படித்திருப்பாரோ !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'இந்தக் காலத்தில் எந்த நாயும் பி ஏ பட்டம் பெறலாம்' என்று ஆளும் கட்சி பிரமுகர் பேசியது தெரியாதா!

      நீக்கு
    2. அவருக்கு தமிழக முதல்வர் மேல் என்ன கோபமோ? யாருக்குத் தெரியும்?

      நீக்கு
  19. //நான்தான் பாவம்... ஒண்ணை சொன்னா கேக்கணும்... கேள்வியா கேட்டுக்கிட்டிருக்கக் கூடாது... //

    ஹா... ஹா... ஹா... இரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வரி எங்கே என்று தேடி களைத்து விட்டேன் ஜி.

      நீக்கு
    2. இரண்டாவது படத்திற்கு அடுத்து தங்களது அம்மா சொன்ன வாக்கியமாக குறிப்பிட்டு இருக்கிறீர்களே...

      நீக்கு
    3. ஆமாம் ஜி...  நன்றி.  மறந்து விட்டது.  ஷெட்யூல் செய்து சில நாட்கள் ஆனபிறகு மறந்து விடுகிறது!

      நீக்கு
  20. அம்மா சென்றது சரிதான்
    தெருவில் கிடப்பதை சட்டென்று தொட்டு எடுக்க்கூடாது


    காக்காய் குளிப்பதை போட்டு எடுத்தீர்கள் சரி. வேறுயாரேனும் குளிப்பதை போட்டோஎடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிஹிஹி..  அவங்களே தெருவுக்கு வந்து மழைத்தண்ணீரில் குளித்தால் எடுப்பேன்!

      நீக்கு
  21. காக்காவுக்கும் உங்களுக்கும் நல்ல பொருத்தம் குட்டுவதில் :)

    பொதுவாக காக்காக்கள் கூடுகட்டி இருந்தால் குட்ட வரும்.

    செல்லம் சேர்த்து வைத்திருக்கும் சொத்துகள்.... அப்பாடா !

    வழக்குப்போட்டு வருமானம் பார்க்கும், :) எங்களுடைய கூட்டம்தானா சனம் அதிகம் ஹா...ஹா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.  அனுபவம் இருக்கிறது!  அதுவும்   .ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்.  மொட்டை மாடியில் அமர்ந்து புத்தகம் படிக்கும் வழக்கமுடைய என்னை உட்காரவே விடாமல் துரத்தும்!  நன்றி மாதேவி.  ஒருமுறை 'காக்கைகள் ராஜ்யத்தில்' என்று தொடங்கும் கவிதை ஒன்று கூட எழுதி பகிர்ந்து இருக்கிறேன்.

      நீக்கு
  22. ///வழியில் கிடக்கின்ற பொன் வெள்ளியைக் கண்டு ஒதுங்கிச் செல்லக் கூடாது என்றும் சொல்கின்றார்கள்///

    ஸ்ரீராம்.
    /// அச்சச்சோ...   ஏன் அப்படி?. ///

    அவை சுப கரணங்கள்...

    நமக்கு அவற்றின் மேல விருப்பம் இல்லை எனினும் யாரும் விசாரித்து வராத நிலையில் ஏழை எளியோரிடம் கொடுத்து விடலாம்...

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் சகோதரரே

    இன்றைய வியாழன் கதம்பம் எப்போதும் போல் அருமை.

    காக்காய் குளியல், அவற்றின் பழக்க வழக்கங்களை விவரித்தது அருமை. தங்கள் அம்மா சொல்வதைப் போலத்தான் எங்கள் அம்மாவும் சொல்வார்கள் "சாலையில் நடக்கும் போது கீழே ஒரு கண் வைத்து நடக்க வேண்டுமென" என அறிவுரை கூறுவார்கள்.

    கவிதை, செய்திகள், பொக்கிஷ பகிர்வுக்கு என அனைத்தையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  24. காகம் தலையை தட்டினால் பயப்பட வேண்டாம் அப்படி பயம் இருந்தால் குளித்து விட்டு நம் முன்னோர்களை வணங்கி கொள்ள வேண்டும் என்பார்கள்.
    காகம் கூட்டுக்கு போகும் முன் குளியல் போடுவதை பார்த்து இருக்கிறேன், குழந்தைகள் தண்ணீர் தேங்கி கிடக்கும் மழை நீர் குட்டையில் கால்களை நனைத்தும் குதித்தும் விளையாடும்.அது போல காகங்களுக்கும் தண்ணீரை கண்டால் குளிக்கும் ஆசை வந்து விடும் போல. அத்தனை காக்கைகளையும் குளிக்கும் போது எடுத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

    எல்லா அம்மாக்களும் சொல்லும் அறிவுரைகள் தான்.


    //"டேய் மாங்கா மண்டையா... அதனாலதாண்டா எப்பவும் மந்திரிக்கற பொருளெல்லாம் இல்லாம நைஸா இந்த உடைஞ்ச பிளாஸ்டிக் சேரை மந்திரிச்சு தெருவுல போடறோம்... சமூக சேவை. தேங்கா சேவைன்னு ஏதாவது ஒரு அசடு இதை எடுத்து ரோடோரமா போடாதா... அட, கொறஞ்ச பட்சம் காலாலயாவது எட்டி உதைக்காதா... அப்ப ஆப்டுப்பாண்டா...அன்னிக்கி விலகு ம் உன் கஷ்டம்"//

    ஆனாலும் உங்கள் பயம் அதிகம் தான். நல்லது செய்து இருக்கிறோம் என்ற மகிழ்வு இருந்தால் ஒன்றும் செய்யாது .

    மதுரையில் எங்கள் வளகாத்தில் காலை நேரம் நடைப்பயிற்சி செய்யும் போது ஒரு பொட்டலம் கொஞ்சம் பிரிந்து உள் இருக்கும் காசுகள் தெரிந்தது, சில காசுகளும் கீழே கிடந்தது எல்லாம் ஒரு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயம். அதை எடுத்து வாட்ச்மேனிடம் கொடுத்தேன், யாரவது தேடி வந்தால் கொடுங்கள் என்று.
    பால்காரர், பேப்பர்காரர் , கீரைக்காரர் வருவார்கள் அவர்கள் யாராவது சில்லறை கொடுக்க வாங்கி வந்து இருக்கலாம் இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயம் எல்லாம் அக்கா...  அதாவது சகுன பயம் இல்லை.  ஆனால் தட்டும்போது லொட்டென்று விழும், லேசாய் வலிக்கும்!
      செல்லை ஓபன் செய்து நெருங்கும் நேரம் காக்கைகள் வெட்கப்பட்டு பறந்து விட்டன.  வெட்கமில்லா காக்கைகள் மட்டுமே அங்கு மீதமிருந்தது!!

      மந்திரித்த பொருள் மாதிரி இருந்தால் தொடமாட்டேன்!  ஆனால் இங்கு பதிவு எழுத ஒரு வாய்ப்பாய் அதை பயன்படுத்திக் கொண்டேன்.  அடுத்த வாரமும் இதே போல பதிவு எழுத, கொஞ்சமாய் மசாலா சேர்த்தது,  சில மானே தேனேக்கள் சேர்த்து ஒன்றை தயார் செய்திருக்கிறேன்!

      நீக்கு
  25. //"நாமதான் பாவம், இன்னும் சொல்லப்போனா நான்தான் பாவம்... ஒண்ணை சொன்னா கேக்கணும்... கேள்வியா கேட்டுக்கிட்டிருக்கக் கூடாது//

    அம்மா சொன்னா கேட்கனும், கேள்விகளாக கேட்க கூடாது .

    அம்மா சொன்னது போல நிறைய பார்க்கிறேன் இங்கு எங்கள் வளாகத்தில். இன்னும் திருஷ்டி பூசணிக்காய் மட்டும் வாசல் பக்கம் உடைக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் அம்மா கோபப்பட்டு நான் பார்த்ததில்லை.  எல்லாமே அமைதியாகத்தான் அன்பாய் சொல்வார்.

      நீக்கு
  26. செய்திகள், மோகன் சார் கவிதை மற்றும் பொக்கிஷபகிர்வுகள் எல்லாம் படித்தேன்.

    முதலில் மனிதனை பார்த்தேன், பிறகு கீழே உள்ளதை படித்தவுடன் நாய் தெரிந்தது, பின் நாய் மட்டுமே தெரிந்தது.
    நல்ல படம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோமதி அக்கா.  

      நான் கஷ்டப்பட்டுதான் நாயைப் பார்த்தேன்!  முன்னர் விகடன் அட்டைபபடத்தில் 3D படம் என்று போடுவார்கள்.  ஒருமுறை கூட அவர்கள் சொன்ன உருவங்கள் என் கண்ணில் மாட்டியதில்லை!  என் கண்ணுக்கும் மூளைக்கும் செல்லும் நரம்பில் ஏதோ தடை!

      நீக்கு
  27. வியாழன் கதம்பம் நன்று.

    நாய் படம் - நன்று. பகவான் ஜி முகநூலில் இருக்கிறாரா? இது எனக்கு தகவல்.

    மற்ற துணுக்குகளும் நன்று.

    பதிலளிநீக்கு
  28. காலை நடையும் கண்ட காட்சிகளும் மனச் சித்திரங்களும்.. அருமை:)!

    கவிதை, ந்யூஸ் ரூம், பகிர்ந்த செய்திகள், ஆப்டிகல் இல்யுஷன் படம், புன்னகைக்க வைத்தப் பொக்கிஷம் என.. தொகுப்பு நன்று!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!