விலை மலிவான ஒரு பொருள் உயிருக்கே ஆபத்தான நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்டுள்ளது என்பது மருத்துவ உலகம் வியக்கும் உண்மை.
வாழைத்தண்டு உடல் உபாதையான சிறுநீரக் கல்லினை நீக்கி உடல் உபாதையை நீக்குகிறது என்கின்றனர் மருத்துவர்கள். வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர்ச் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும். சிறுநீரக பிரச்சனை சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதற்கு பதிலாக ரசாயனங்கள் நிறைந்த குளிர்பானங்களையும், துரித உணவுகளையுமே உட்கொள்கின்றனர். இதனால் சிறுநீரக தொடர்பான நோய்களுக்கு ஆளாகின்றனர். அதிக மசாலா சேர்க்கப்பட்ட காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம் போன்றவற்றினால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன. அதேபோல் சரியான நேரத்தில் சிறுநீரை வெளியேற்றாமல் அடிக்கடி சிறுநீரை அடக்குதாலும் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.
வாழைத்தண்டானது உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகக் கல் பிரச்சினை உள்ளவர்கள் தினசரி வாழைத்தண்டு ஜூஸ் பருகலாம். இதனால் சிறுநீரக கல் கரைந்து காணமல் போகும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தென்னிந்தியாவில் பல விதங்களில் வாழைத்தண்டு சமைக்கப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை பச்சடியாகவும், சாறு எடுத்து ஜூஸ் போலவும் சூப் செய்தும் அருந்தலாம். உடல் எடையை குறைப்பதில் டயட் இருப்பவர்கள் அதிக அளவில் வாழைத்தண்டு சேர்த்துக்கொள்கின்றனர். வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும்.
(நன்றி : துணிவான ஆகாயம்.) Read more at: http://tamil.boldsky.com/health/herbs/2012/medicinal-benefits-banana-stem-aid0174.html.
வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி.
வாழைமரத்தின் அனைத்துப் பகுதிகளும் பயன்படும் சமாச்சாரங்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
வாழைத்தண்டு, வாழைமரத்தின் பட்டைகளை உரித்தபின் கிடைக்கின்ற வஸ்து. வாழைமரத்தின் அடிப்பகுதி, மேல்பகுதி விட்டு, நடுவார்ந்த பகுதியில் இருக்கின்ற வாழைத்தண்டு சமையலுக்கு ஏற்றது.
முப்பது சென்டிமீட்டர் நீளமுள்ள வாழைத்தண்டை எடுத்துக்கொண்டு, பட்டைப் பகுதிகளை உரித்து எடுத்துவிட்டு, உள்ளே இருக்கும் அடர்த்தியான பகுதியை, நார் போக்கி, பொடிப்பொடியாக கம்பி போல நீட்ட வாக்கில் (3 mm X 3 mm X 12 mm size) அரிந்து, அரிந்தவற்றை உடனுக்குடன், இருநூறு மில்லி தயிரில் போடவும். (எச்சரிக்கை: வாழைத்தண்டு அரிந்து காற்று_வெளியில் வைத்தால் கறுத்துப் போய்விடும்)
தேவைக்கேற்ப உப்புப் பொடி போடவும்.
பிறகு, ஒரு கைப்பிடி கொத்தமல்லித் தழையை நன்கு கழுவி, பொடிப்பொடியாக நறுக்கி, தண்டுத் தயிர்க் கலவையில் இட்டுக் கலக்கவும்.
இப்போ நீங்க செய்ய வேண்டியது, தாளித்தல் என்கிற நகாசு வேலை. கால் டீஸ்பூன் கடுகு எடுத்து, அரைக்கரண்டி நல்லெண்ணையில் போட்டு, கடுகு வெடித்ததும், இரண்டு மிளகாய் வற்றல் எடுத்து, அவற்றை ஏழெட்டுத் துண்டுகளாகக் கிள்ளிப் போட்டு, அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, பெருங்காயம் அரை சுண்டைக்காய் அளவு எல்லாம் போட்டு, உளுத்தம்பருப்பு பொன்னிறம் வந்ததும், இந்தத் தாளிப்புக் கலவையை அப்படியே எடுத்து, வாழைத்தண்டு தயிர்ப் பச்சடியில் போட்டு, ஒரு கலக்குக் கலக்குங்க.
என்ஜாய்!
அருமையான வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி.
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
நீக்குவாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டுதான்
பதிலளிநீக்குவருகிறோம்
நறுக்கும் அலுப்பு உண்கையில்
தீர்வது நிச்சயம்
ரெஸிபி பகிர்வுக்கும்
தொடரவும் நல்வாழ்த்துக்கள்
நன்றி ரமணி ஸார்.
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குத.ம. வாக்குக்கும் நன்றி ரமணி ஸார்.
நீக்குஉடனே சாப்பிடனும் போல இருக்கே.. நாளைக்கே செய்யப்போறேன்
பதிலளிநீக்குசெய்து பார்த்து சுவைச்சாச்சா சகோத்இ தேன்மதுரத்தமிழ் கிரேஸ்?
நீக்குகடந்த இரண்டு வாரங்களாக ஒரு நாள் முழுவது தண்ணிருக்க பதிலாக வாழைத்தண்டு ஜுஸ் மறுநாள் வாழைத்தண்டு கறி இப்படியாகத்தான் என் வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கிறது
பதிலளிநீக்குஏன் என்னாச்சு? வருகைக்கு நன்றி அவர்கள் உண்மைகள்.
நீக்குஅறியாதத் தகவல்கள்.. செய்வதற்குத்தான் வழியில்லை... நன்றி!!!
பதிலளிநீக்குநன்றி வலிப்போக்கன்.
நீக்குஅறியாதத் தகவல்கள்.. செய்வதற்குத்தான் வழியில்லை... நன்றி!!!
பதிலளிநீக்குசுவையான வாழைத்தண்டு தயிர்ப் பச்சடி அருமை...
பதிலளிநீக்குநன்றி DD.
நீக்குவாழைத் தண்டில் என்னென்னவோ என் மனைவி செய்வாள். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி சகோதரி சாந்தி மாரியப்பன்.
நீக்குஇதுல நார்போக்கி வாழைத் தண்டை நறுக்குவதுதான் பெரிய வேலை. அது மாத்திரம் இல்லைனா, பண்ணறது ரொம்ப சுலபம்.
பதிலளிநீக்குஇந்தத் திங்கக் கிழமை என்ன போட்டிருக்கிறீர்கள் என்று பார்க்க வைத்துவிடுகிறீர்கள். அதுவே உங்களின் வெற்றி.
நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குஅநேகமா வாரம் மூன்று நாட்கள் வாழைத்தண்டு தான். :) அதிகமாய்ப் பண்ணுவது சாலட்!
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம்.
நீக்குஎனக்கு சிறுநீர் போவதில் கொஞ்சம் தகராறு. வாழைத்தண்டு ஜூஸ் இன்றிலிருந்து குடிக்க ஆரம்பித்திருக்கிறேன். செப்டம்பர் 3 ந்தேதி இதன் பலன்பற்றி ஒரு பதிவு போடுகிறேன்.
பதிலளிநீக்குநன்றி பழனி.கந்தசாமி ஸார்.
நீக்குபய த்தம் பருப்பு சேர்த்துக் கறி, மோர்க்கூட்டு, பச்சடிஅடித்தண்டானால்,பிட்லை,ஸாலட்,புளி வெல்லம் சேர்த்து இனிப்புப் பச்சடி, மோரில் சேர்த்து நீர்மோர், யாவுமே நான் செய்வேன். அரிசி வடாத்தில் இதன் சாறைச் சேர்த்துச் செய்வதும் உண்டு. இஞ்சி பச்சைமிளகாய் தேங்காய் சேர்க்காமல் பெருங்காய வற்றல் மிளகாய் தாளிப்பில் இது வேறு சுவையைக் கொடுக்கும் செய்து பார்க்கிறேன். நல்ல பதிவு. நறுக்கும் பேதே மோரில் தளர்களைப் போட்டு அடிக்கடி கசக்கினாற்போல கலந்து விட்டால் தண்டு கறுக்காது, அன்புடன்
பதிலளிநீக்குநன்றி காமாட்சி அம்மா.
நீக்குபயனுள்ள தண்டுதான் வாழை...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குவாழ வைக்கும் வாழைத் தண்டுக்கு ஜே :)
பதிலளிநீக்குநன்றி பகவான்ஜி.
நீக்குவேக வைக்க வேண்டாமா.. ?
பதிலளிநீக்குநன்றி தேனம்மை.
நீக்குவாழைத்தண்டு அடிக்கடி செய்வதுண்டு! பச்சடியாக, சாலடாக, கூட்டாக என்று பல விதமாய்
பதிலளிநீக்குகீதா
நன்றி சகோதரி கீதா.
நீக்குவாழைத்தண்டு தயிர்ப்பச்சடி நானும் செய்வேன். பிஞ்சாகக் கிடைத்தால் நல்லது. நார் அதிகம் இல்லாமல் இருக்கும். சிறிது வேக வைத்தும் செய்வேன். பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குநன்றி கலையரசி மேடம்.
நீக்குவாழைத்தண்டு பச்சடி குறிப்பு அருமை!
பதிலளிநீக்குநன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஎங்கள் வீட்டிலும் தவறாமல் இடம் பெறும் இந்த வாழைத்தண்டு. நானும் இதைப்போலத்தான் பச்சடி செய்வேன். சப்பாத்திக்குக் கூட சில நாட்களில் இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவோம்.
பதிலளிநீக்குசாப்பிடும்போது ரொம்பவும் ஆரோக்கியமான உணர்வு வரும். வயிறும் நிரம்பிவிடும்.
நன்றி ரஞ்ஜனி மேடம்.
நீக்குநன்றி ரஞ்ஜனி மேடம்.
நீக்கு