வியாழன், 14 ஜூலை, 2016

வியாழன் வில்லங்கம் 160714 :: எது, எது, எத்தனை? பதில்கள்.


         
    

மாதவன் முதல் ஆளாக வந்து பதில் சொல்லியிருக்கிறார். சினிமா கேள்விகளை ஒதுக்கிவிட்டார். மூன்றாவது கேள்விக்கு  அவர் சொல்லியிருக்கும்  பதில், அவருக்கே உரிய, மாற்றி யோசிக்கும் திறமையை வெளிக்காட்டுகிறது. வாழ்த்துகள். (ஆனா எங்கள் பதில் வேறு.)

ராமாராவ் எல்லா பதில்களையும் சரியாக சொல்லியிருக்கிறார். வாழ்த்துகள். மூன்றாவது  கேள்விக்கு பதிலாக இருபத்தைந்து என்று சொல்லியிருப்பதற்கு  அவர் விளக்கம்  எதுவும்  அளிக்கவில்லை. எங்கள் பதிலைப் பார்த்த பிறகாவது ஏதேனும் சொல்கிறாரா என்று பார்ப்போம்!       
மாடிப்படி மாது ரொம்ப  சுலபமா  பதில்  சொல்லியிருக்கார். வாழ்த்துகள். 
      
ஆ வி  முதல் இரண்டு கேள்விகளுக்கும் டாண், டாண்  என்று  பதில் சொல்லி, மூன்றாவது கேள்விக்கு  டாண்  + டாண்  என்று பதில் சொல்லியிருக்கார். கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சிருக்கார்.  வாழ்த்துகள். 

வல்லிம்மா நாங்க கேட்காத கேள்விக்கு சரியான பதில் சொல்லியிருக்கார்! என்றும் இனிதே வாழவேண்டும்!  
     
அனுராதா பிரேம் கோடிட்ட  இடங்களைப் பூர்த்தி செய்யாமல், மூன்றாவது கேள்விக்கு மட்டும் சுலபமா பதில் சொல்லியிருக்கார். நாங்க அவ்வளவு சுலபமா ஏதேனும் கேள்வி, எப்பவாவது கேட்டிருக்கோமா !  

மாதவன் மீண்டும் முயன்று, Amazing பதில்கள் சொல்லியிருக்கார். எங்கள் கேள்விகளில் Amazon எங்கேயிருந்து வந்தது என்று நான் என்னுடைய (இல்லாத) மூளையைக் கசக்கி ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன். ஏதாவது கிடைத்தால் சொல்கிறேன். 

கீ சா மேடம் பட ஆராய்ச்சி செய்துள்ளார். அந்தப்படத்தில், என்னுடைய கேள்விக்குத் தக்கவிதத்தில் மாற்றங்கள் செய்து வெளியிட்டுள்ளேன். யாரும் அதை கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன். 

ஏஞ்சலின் மேடம் சடார் சடார் என்று இரண்டு பதில்கள் கொடுத்துள்ளார். ஆனந்த ஜோதியை ஏற்றியது சரி .... ஆனால், மூன்றாவது கேள்வியில ஏதோ சூது இருக்குன்னு நீங்க சஸ்பெக்ட் பண்ணலியா மேடம்? 

=======================  

இப்போ எங்கள் பதில்கள் : 

முதல் இரண்டுக்கும் பெருவாரியான வாசகர்கள் சரியான பதில் சொல்லிவிட்டீர்கள். (ஆனந்த ஜோதி, காவல்காரன்)  

மூன்றாவது கேள்விக்கு எங்கள் பதில்:   25 
அது எப்படி என்றால் ......  

போன வாரம் மூன்றாவது கேள்விக்கு என்ன சொன்னோம்? 

......... 
 F உடனே  கோபம் வந்து, அருவாள்  வாங்குவதற்காக அவசரமா கிளம்பிப் போயிடிச்சு.  ......  

அருவாள் வாங்கப்போன F இன்னும் திரும்பி வரலை. So, 26 - 1 = 25. 
     
(எங்கே கிளம்பிட்டீங்க? ஆட்டோ ஸ்டாண்ட் க்கா? ஆட்டோ அனுப்பப் போறீங்களா! எஸ்கேப்) 

Image result for auto rickshaw clipart
      
       
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்! 
            

7 கருத்துகள்:

 1. // எங்கள் கேள்விகளில் Amazon எங்கிருந்து வந்தது //
  எங்கள் கேள்விகளில், சம்பந்தமே இல்லாம
  1. டி. வி. விளம்பரம் வருமாம்... (d க்கு முன்னால e)
  2. அருவா(ள்) வந்து மெரட்டுமாம்...
  3. போனவார பதில் இந்தவார கேள்வியா continue ஆகுமாம்...
  ஆனா Amezon A to Z (available here) லாஜிக் வரமாட்டுதாம்.....
  ஆமாம் 'கலி'முத்தி போய்ச்சிடோய்..

  பதிலளிநீக்கு
 2. மூன்றாவது கேள்விக்கான பதில்??!! நாங்கள் சொன்னதும் தவறோ..ஓ வகுப்பிற்கு லேட்டாக வந்ததால் நாங்கள் என்ட்ரி இல்லை போல...ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 3. ம்ம்ம்ம்ம்,ஏமாத்தறீங்க! இது போங்கு ஆட்டம்! ஒத்துக்க முடியாத்! :)

  பதிலளிநீக்கு
 4. விளக்கமே பதிவாக நன்று தொடரட்டும்....

  பதிலளிநீக்கு
 5. //மூன்றாவது கேள்வியில ஏதோ சூது இருக்குன்னு நீங்க சஸ்பெக்ட் பண்ணலியா மேடம்? // haa haa a:)
  சூது வாது அறியாப்பிள்ளை :) நான் ... இனிமே விழிப்பா இருப்பேன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!