திங்கள், 18 ஜூலை, 2016

திங்கக்கிழமை 160718 :: ஓட்ஸ் அடை.
          எங்கள் அலுவலகத் தோழி ஹேமா புதுசு புதுசாக நிறைய ரெசிப்பிக்கள் முயற்சி செய்வார்.  எல்லாம் ஆரோக்கிய சமையல்!  இரண்டு நாட்களுக்கு முன் ஓட்ஸ் அடை செய்தேன் என்று கூறி, வழிமுறைகளையும் சொன்னார்.  

          நானும் இந்த சனி, ஞாயிறில் செய்து விடலாம் என்று பார்த்தால் நேரம் அமையவில்லை.  அதற்குள் அவரே கொஞ்சம் அரைத்த மாவைக் கொண்டுவந்து கொடுத்து விட்டார்.  இதை அடை என்று சொல்வதை விட ("ஆமாம், இதை ஏன் அடை என்று சொல்கிறீர்கள், ஹேமா?")  தோசை என்றே சொல்லலாம்.  என்ன பெயரிட்டு அழைத்தாலும் சுவை நன்றாக இருந்தது.  

படத்தில் உள்ள இரண்டு பொருட்களில் எது ஓட்ஸ், எது அவல் என்று கண்டு பிடிக்க முடிகிறதா?!!          ஒரு கப் அவலுக்கு முக்கால் கப் ஓட்ஸ், கால் கப் அரிசி, இரண்டு டேபிள் ஸ்பூன் ரவை எடுத்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.  அரிசிக்கு பதிலாக இரண்டு கரண்டி அரிசி மாவு அல்லது தோசை மாவு கூடச் சேர்த்துக் கொள்ளலாம்.

          4 சின்ன வெங்காயம், (அல்லது ஒரு பெரிய வெங்காயம்) 3 பல பூண்டு, ஓரிரு ஈர்க்கு கறிவேப்பிலை ஆகியவற்றை கொஞ்சம் சோம்பு, பட்டை மிளகாய் (தேவையான அளவு) ஆகியவற்றுடன் முதலில் மிக்சியிலிட்டு அரைத்துக்கொண்டு, அதனுடன் ஊற வைத்திருக்கும் ஓட்ஸ், அவலையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
          தோசையாக அல்லது அடையாக வார்த்து எடுத்துச் சாப்பிட வேண்டியதுதான்.
          தக்காளி சட்னி இதற்கு நல்ல பொருத்தமாய் இருக்கும் என்றாலும், இதற்கும் தொட்டுக்க கொள்ள எதுவும் தேவை இல்லை என்றே தோன்றியது எனக்கு.  எங்கள் வீட்டில் நேற்று காலை டிபனாக வெந்தய தோசை செய்து, அதற்கு தேங்காய் சட்னி அரைத்திருந்ததால், அதைத் தொட்டுக்க கொண்டே சாப்பிட்டோம்.

34 கருத்துகள்:

 1. இங்கே இதெல்லாம் பண்ணினால் நான் மட்டும் தான் சாப்பிடணும்! ரங்க்ஸுக்குப் பிடிக்காது. பாரம்பரிய உணவுகள் தான் பிடிக்கும்.:)

  பதிலளிநீக்கு
 2. வெந்தய தசை - இது என்ன புதுசு! :))

  ஓட்ஸ் தோசை - செய்து பார்க்கத் தோன்றுகிறது - ஞாயிறு வரட்டும்!

  பதிலளிநீக்கு
 3. @வெங்கட், கீதாக்கா...

  மாற்றி விட்டேன்! ஹிஹிஹிஹி...

  பதிலளிநீக்கு
 4. நன்றாக உள்ளதே....செய்து பார்க்கிறேன்..தோசை மாவில் ஓட்ஸை பொடித்து போட்டு வார்த்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 5. நன்றாக உள்ளதே....செய்து பார்க்கிறேன்..தோசை மாவில் ஓட்ஸை பொடித்து போட்டு வார்த்திருக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 6. ஓட்ஸில் தோசையா..? வித்தியாசமாக இருக்கிறதே..! செய்து பார்த்துவிட வேண்டியதுதான்.
  த ம 5

  பதிலளிநீக்கு
 7. ம்ம்ம். பார்க்க சூப்பர். தோசை மாவு மீந்து போனால் செய்யலாம்.
  குழந்தைகளுக்கு நல்லது. நன்றி மா.

  பதிலளிநீக்கு
 8. படம் எதோ சரியில்லை. போட்டிருப்பது எல்லாமே வெள்ளை நிறம் (வெங்காயம், ஒரு ஈர்க்கு கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் தவிர). தோசை மட்டும் எப்படி அடை 'நிறத்தில் இருக்கிறது? இப்போ எல்லாம், மெயின் ingredients மாத்தாம, அதுல ஒரு ஸ்பெஷன் ingredient சேர்த்து அதன் பேரில் தோசை/அடை பெயர் வழங்குவது வழக்கமாயிற்று. இதற்கு இட்லி மிளகாய்ப்பொடி நன்றாக இருக்கும்போலிருக்கிறதே.

  அடுத்த சனிக்கிழமைக்குள் உங்களுக்கு ஒரு ரெசிப்பி படங்களுடன் அனுப்ப முயற்சிக்கிறேன். (ஏதோ நம்மாலானது)

  பதிலளிநீக்கு
 9. இதிலேயும் ஒரு போட்டி வைச்சிருக்கிறதை இப்போத் தான் பார்க்கிறேன். :) இடப்பக்கம் ஓட்ஸ், வலப்பக்கம் அவல்! செரியா?

  பதிலளிநீக்கு
 10. இது உடம்புக்கு நல்லதுன்னு சொன்னா யார் கேட்கிறா ?

  பதிலளிநீக்கு
 11. ஓட்ஸ் தோசை செய்வதுண்டு...இதே சாமான்கள் ஆனால் ப்ரோப்போர்ஷன் வேறு...உளுந்து அரைத்து விட்டு அதில் ஓட்ஸ் போட்டு இட்லி, தோசை செய்வதுண்டு.....இதையும் குறித்த்க் கொண்டேன்..

  கீதா

  பதிலளிநீக்கு
 12. மேற்கொண்டு போடற ஸாமானாலே பார்வைக்கு அடைமாதிரி கலர் வருகிறது. பெரியகுடும்பம் என்றால் ஓட்ஸ் தோசை,அடை எல்லாம் கட்டுப்படி ஆகாது. என்றாவது ஒருநாளுக்கு ஸரி. சிக்கனத்திற்காகச் சொல்லவில்லை. சுடச் சுட சாப்பிட ருசிதான். அன்புடன்

  பதிலளிநீக்கு
 13. நல்ல வித்தியாசமான குறிப்பு! அவசியம் செய்து பார்க்கிறேன்!

  பதிலளிநீக்கு
 14. புகைப்படம் வித்யாசமாகத்தான் தெரிகின்றது.

  பதிலளிநீக்கு
 15. பகவான்'ஜி சொல்லியிருப்பதைப் பார்த்தவுடன் எனக்குத் தோன்றிற்று. ஓட்ஸ் உடம்புக்கு நல்லது என்பதெல்லாம் வெறும் பம்மாத்து. ஓட்ஸ் குதிரைகளுக்கான உணவு. நமக்கு (தென் இந்தியர்களுக்கு) அரிசி. வடவர்களுக்கு கோதுமை. இதைப்பற்றி பெரிய கட்டுரையே எழுதலாம். ஓட்ஸை இந்தியா போன்ற பெரிய நாட்டில் தள்ளிவிடுவதற்காக, மருத்துவர்களுக்கு நிறையப் பணம் கொடுத்து, தனியார் மருத்துவமனைகளுக்கு நிறைய பணம் கொடுத்து, ஓட்ஸ் நல்லது என்று அதை நோயாளிகளிடம் Recommend பண்ணச்சொல்லியுள்ளார்கள். அதேபோன்று, ராகி நல்லது என்று சொல்லி, நமக்கெல்லாம் ராகி போட்டு சாப்பிடச்சொல்வார்கள் உள்ளூர் ஆசாமிகள். ராகி, சூடு. உடலுழைப்பு கொண்டவர்களுக்கு மிகவும் ஏற்றது. இதை, ஆபீஸ் போய் சேரில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் உபயோகிப்பது அர்த்தமில்லாதது. ஓட்ஸ், செரியல் (மக்காச்சோள வகைகள்) போன்றவைகள் நமக்குத் தேவையில்லாமலேயே நம் சமையலறையில் நுழைந்துவிட்டவைகள்.

  பதிலளிநீக்கு
 16. கீதா மேடம்.. நானும் இது மாதிரி ஆரோக்கிய ரெசிபிக்களை சாப்பிட விருப்பம் இல்லாமல்தான் இருந்தேன். ஆனால் இதைச் சாப்பிட்டுப் பார்த்தபோது சுவையில் எந்த மாறுபடும் இல்லை. ரசிக்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 17. வெந்தய தோசை வெந்தய தசை ஆகை விட்டது வெங்கட். உடனே மாற்றி விட்டேன். கூகிள் டிரான்ஸிலிட்டரேஷனில் சில மாறுதல்கள் தென்படுகின்றன. முன்னர் q அடித்தால் ஃ மட்டுமே ஆப்ஷனாய் வரும். இப்போது அந்த ஒற்றை எழுத்துக்கு "கிடைக்கும், கிடையாது, கிழக்கு" என்று முழு வார்த்தைகளாய் ஆப்ஷன்ஸ் தருகிறது! அது போல வேறு சில வார்த்தைகளையும் மாற்றி அடிக்க வேண்டி உள்ளது. kelvip (கேள்விப்) என்று அடித்துப்பாருங்களேன். கோபி என்று முதல் ஆப்ஷன் வருகிறது!!

  பதிலளிநீக்கு
 18. நன்றி ராமலக்ஷ்மி. செய்து பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 19. நன்றி வல்லிம்மா. தோசை மாவு மீந்து போனால்தான் செய்ய வேண்டுமா? ஓட்ஸ், அவல் வைத்து எப்போது வேண்டுமானாலும் செய்யலாமே..

  :))

  பதிலளிநீக்கு
 20. நன்றி நெல்லைத்தமிழன். படம் சரியில்லாமல் எல்லாம் இல்லை. அப்படித்தான் வந்தது!! உண்மையில் இதற்கு தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம்!

  தோசையில் எதுவும் சேர்த்து அரைக்க மாட்டோம். வெங்காயம், பூண்டு, மிளகாய் எல்லாம் சேர்த்து அரைப்பதனால்தான் அது அடை ஆயிற்று என்று ஹேமா சொன்னார்!

  உங்கள் ரெசிபியை sri.esi89@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்!

  பதிலளிநீக்கு
 21. ஆமாம் கீதாக்கா... சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள்! இடப்பக்கம் ஓட்ஸ், வலப்பக்கம் அவல் சரி. ஆனால் அது போட்டியல்ல, வெறும் கேள்விதான்!

  பதிலளிநீக்கு
 22. அதானே... யார் கேட்கிறா? நன்றி பகவான்ஜி!

  பதிலளிநீக்கு
 23. நன்றி கீதா. நீங்களும் அல்மோஸ்ட் எல்லாமே முயற்சி செய்து பார்த்திருக்கிறீர்கள். அது வேறொன்றுமில்லை, பெயர் ராசி!

  பதிலளிநீக்கு
 24. சரியாகச் சொன்னீங்க காமாட்சி அம்மா. எப்போதாவதுன்னா ஓகே, அடிக்கடி செய்யக் கட்டுப்படி ஆகாது! நான் நினைத்தேன். நீங்கள் சொல்லி விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
 25. மீள் வருகைக்கு நன்றி நெல்லைத்தமிழன். ஓட்ஸ் பற்றி நீங்கள் சொல்வதை நானும் படித்திருக்கிறேன், கேள்விப் பட்டிருக்கிறேன். எனினும் மீடியாவின் அடிமை போல நான் தினம் காலை ஓட்ஸில் மோர் போட்டு கெட்டியாய்க் கஞ்சியும், பச்சைக் காய்கறிகளும்தான் சாப்பிடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 26. ஆஹா கலர்புல்லா மொறு மொறுன்னு இருக்கே தோசை ...
  டெம்ப்டேஷன் !! ஆகையால்

  கண்ணை மூடிக்கிட்டு உள்ளேன் அய்யா சொல்லிக்கறேன் :)

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!