சனி, 9 ஜூலை, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்1)  காலில் விளையாட்டு வீரர்கள் அணியும் ஷூ, தலையில் தொப்பி என்று, 'டிப் டாப்' பாக இருக்கிறார் பாபு.   குறைந்த வாடகை; நாமே கொடுத்தாலும், நியாயமான கட்டணத்தை விட கூடுதலாக ஒரு ரூபாய் கூட வாங்க மறுப்பது; எவ்வளவு நேரம் காத்திருக்க சொன்னாலும், காத்திருப்பு கட்டணம் வாங்க மாட்டார், அசாத்திய பொறுமை, தன்னையும், வாகனத்தையும் சுத்தமாக வைத்திருக்கும் பாங்கு, யாரையும் மரியாதையுடன் அழைத்து பேசும் பண்பு, கடைசி வரை உழைத்து பிழைக்க வேண்டும் என்ற மாண்பு... இவையெல்லாம் தான், அவரை தேட வைக்கும் காரணிகள்........
 


2)  ஊருக்கு உழைப்பவர்... அரசு அலுவலகத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவரான ரமேஷ்க்கு ஊர் பாசம் அதிகம் இதன் காரணமாக கண்மாய் கரையை பலப்படுத்தும் பொறுப்பை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று முன்வந்தார்.
 
 
 

இவர் இந்தப்பகுதியில் சக நண்பரும் ஆசிரியருமான பாண்டியராஜ் என்பவருடன் சேர்ந்து நானுாறுக்கும் அதிகமான மரங்களை நட்டிருக்கிறார்.

3)  மதுரையின் பெருமை.  அர்விந்த் கண் மருத்துவமனை.
 
 


4)  நல்லதொரு வேள்வி.  எல்லோரும் பங்கெடுக்கலாம்.
 
 


5)  இந்த வயதிலும்....லக்ஷ்மி பூஜார்த்தி.
 
 


6)  நம் பதிவர் நீச்சல்காரன் அவர்களுக்கு விருது.  
 
 


7) 
".........வாகனத்தை பறிகொடுத்தவர் போலீசுக்கு தகவல் கொடுத்தவுடன் அங்குவந்த பி4 காவல்நிலைய ஏட்டையா அண்ணாதுரை என்பவர் லத்தியை தூக்கிக் கொண்டு கூட்டத்தை விலக்கிக்கொண்டு கோபமாக அந்த இளைஞரை நெருங்கினார் ஆனால் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை புரிந்தவுடன் லத்தியை எறிந்துவிட்டு பழைய சட்டையை அவனுக்கு அணியசெய்து அவருக்கு உணவும் தண்ணீரும் வாங்கிக்கொடுத்தார். காயம்பட்டு ரத்தம் வழியும் காலை பார்த்துவிட்டு அவரை மருத்துவ மனையில் சேர்க்க அழைத்துச் செல்ல முயற்சித்தபோதுஅந்த வாலிபர் அண்ணாதுரை ஏட்டையா வாங்கிக் கொடுத்த தண்ணீர் பாட்டிலாலேயே அவரை தாக்க முயற்சி செய்தார்.  சிறிதுகூட கோபப்படாமல் அந்த வாலிபரை சமாதானம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது......"
 
 
 

நன்றி வெங்கட்.

12 கருத்துகள்:

 1. #இவ்விருதுடன் வழங்கிய ரொக்கப் பரிசை 'ஹார்வர்ட்' பல்கலையில் துவங்கவிருக்கும் தமிழ் இருக்கைக்கு நன்கொடையாக வழங்கி விட்டேன்#
  ஆகா ,நம்ம நீச்சல்காரனுக்கு எவ்வளவு பெரிய மனசு !மேலும் வெற்றிகள் அடைய வாழ்த்துகள் !

  பதிலளிநீக்கு
 2. எல்லோருக்கும் வாழ்த்துக்கள் . நீச்சல்காரனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. அனைத்தும் நல்ல செய்திகள். பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்ட்டுக்கள், நல்லதொரு வேள்வி நடத்துபவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  லக்ஷ்மி பூஜார்த்தி, நீச்சல்காரன், ஏட்டையா, அரவிந் கண் மருத்துவமனை எல்லோர் சேவையும் பாராட்டப்பட வேண்டிய செயல்கள். அனைவருக்கும் வணக்கங்கள், வாழ்த்துக்கள்.

  உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. நமது பதிவர் நீச்சல்காரன் அவர்களுக்கு எமது சல்யூட்

  பதிலளிநீக்கு
 5. அனைத்தும் அருமையான செய்திகள்..... அனைவருக்கும் பாராட்டுகள்....

  எனது பக்கத்திலிருந்தும் ஒரு செய்தி. நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 6. பதிவர் நீச்சல்காரன் அவர்களுக்கும்
  ஏனைய சாதனையாளர்களுக்கும்
  வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 7. எல்லாமே பொறுக்கிய முத்துக்கள். நீச்சல்காரன் என்றொரு பதிவர் இருப்பதையும் இப்போது தான் அறிந்தேன். அனைவரின் சாதனைகளுமே என்னை வெட்கப் பட வைக்கிறது. நாம இப்படி ஒண்ணுத்துக்கும் ஆகாமா சும்மா இருக்கோமேனு நினைச்சு நினைச்சு வருத்தமா இருக்கு! :(

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான செய்திகள்! சகபதிவருக்கு கிடைத்த விருது கூடுதல் மகிழ்வை அளித்தது! நன்றி!

  பதிலளிநீக்கு
 9. ஸ்ரீராம் உட்பட வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!