எங்கள் பதில்களைச் சொல்வதற்கு முன்பு, உங்கள் பதில்களை ஆராய்வோம்!
ஒரு G, நாலு T.Originality யாமா! :D. பாக்கியெல்லாம் பெப்பே தான்!
கரெக்டு! பாராட்டுகள் அனன்யா !! வெரி குட். கீப் இட் அப்.
முதல் கேள்வியே ஒரே குழப்பம். MC போட்டுட்டு ஒரு டப்பா இருக்கு. இதுல வினாக்குறி இருக்கற இடத்தை கண்டு பிடிக்கணுமாம். கிட்னிய யூஸ் பண்ணனும் போல்ருக்கே?
1. E ஹிஹி
முதல் பதில் ஆறு பத்துக்கு. சரியான பதில் ஆறு பன்னிரெண்டுக்கு. ரெண்டே நிமிஷத்தில் கிட்னிய யூஸ் பண்ணிட்டாங்க. அப்புறம் போட்டிருக்கிற ஹி ஹி தான் எங்களை கொஞ்சம் சிந்திக்க வைத்தது. அவருக்கே அந்த பதில் சரிதானா என்கிற சந்தேகம் வந்திருக்கும் என்று தோன்றியது. மகாதேவர் உதவியிருப்பாரோ?
௧. mca = ? போலருக்கு , d முன்னாடி e அப்போ f முன்னாடி g யா இருக்குமோ
மூன்றாவது கேள்விக்கு விடை காண முயன்ற முதல் வாசகர். பாராட்டுகள். வாழ்த்துகள். விடையை, இவைதான் அந்த இரண்டு எழுத்துகள் என்று அடித்துச் சொல்லியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். (எங்கள் விடை கொஞ்சம் வில்லங்கமானது. பதிவின் கடைசியில் சொல்கிறோம்)
1) X is the answer.
M = 1000.
C = 100
X = 10
Roman numerals.
வித்தியாசமான கோணத்தில் சிந்தித்திருக்கிறார். பாராட்டுக்கள். பிறகு இவரே சரியான பதில் கூறியிருக்கிறார். நன்று.
3) E, F -- Reason, english alphabets in order. even an lkg student can answer this way..
இதையும் பிறகு சரியாக சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன். இன்னும் இல்லை. எங்கள் பதிலைப் படித்துவிட்டு, போர் தொடுக்க, முதல் ஆளாக வருவார் என்று நினைக்கின்றேன்.
3. E F
2. T
1.
முயற்சிக்கு வாழ்த்துகள். இரண்டாம் பதிலை காரணம் கூறியிருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.
அடுத்த வாரம் வெற்றிபெற வாழ்த்துகள். அடுத்த வாரம் எல்லா கேள்விகளும் சுலபமாக பதில் கூறும்படி அமைத்திருக்கின்றேன்.
mc square is equal to E.
ABC E DBC
முதல் பதில் சரியானது.
மூன்றாவது கேள்விக்கு, ஒரு லாஜிக் சொல்லி பதில் கூறியிருக்கிறார். ஏற்றுக்கொள்வோம்.
முதல் புதிர் MC SQUARE= ? SOMETHING TO DO WITH PHYSICS.?
மூன்றாவது abCde FG
இரண்டாவது எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்.
ஒன்று ஓ கே. பழைய பாடங்களை ஞாபகம் வைத்துள்ளார்.
மூன்றாவது a b C d e FG என்று சொல்லியிருக்கிறார். நாங்கள் A B C E D _ _ என்றல்லவா சொல்லியிருக்கோம்.
இரண்டாவது கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அது சரிதான் ! ஆனால் அது எப்படி என்று ஏதாவது ஒரு லாஜிக் சொன்னால் நன்றாக இருக்குமே!
ஜி எம் பி சாரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.
2, T
TTTTT = till they TELL the truth.
நல்ல பதில். லாஜிக் சேர்த்து. வாழ்த்துகள் - புதிய கோண சிந்தனைக்கு.
1. Y
2. A
3. F, G
விடை சரியா இருந்தா, விளக்கம் சொல்கிறேன்....!!!
மாது சார்! விளக்கத்தையும் சேர்த்தே கொடுத்திருக்கலாம். நாங்க ஏற்கெனவே சொல்லியிருப்பது போல, சரியான விடை தவறான விடை என்று எதுவும் கிடையாது. நிறைய சரியான விடைகள் உண்டு. அதை நாம் லாஜிக்கோடு சொன்னால் போதும்!
E= m c square..
T
FG.
ஆ வி வித்தியாசமான கோணத்தில் யோசிக்கும் திறன் படைத்தவர். அவர் அவசரமா சிந்தித்திருக்கிறார் என்று தெரிகிறது. முதல் கேள்விக்கு முழு மதிப்பெண்கள்.
இரண்டாம் கேள்வி பதில் வித்தியாசமாக இல்லை. மூன்றும் அப்படியே!
ஆர்வத்துடன் பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள்.
இப்போ எங்கள் பதில்கள். (மீண்டும் ஒருமுறை கூறுகின்றேன். இவைதான் சரி மற்றதெல்லாம் தவறு என்று யாரும் நினைக்கவேண்டாம். லாஜிக்கோடு சொல்லியிருந்தால், உங்கள் பதில்களும் சரியே!)
1) E (Einstein)
2) G (Oru G Naalu T) (Originality)
3) GH
இதற்கு எங்கள் விளக்கம் கொஞ்சம் வில்லங்கமானது. 'டி' க்கு முன்னாடி 'இ' போனதைப் பார்த்த 'F' என்ன பண்ணிச்சுன்னா .... டி கிட்ட போயி, "டி டீ , இ மட்டும் உனக்கு முன்னாடி போயிடுச்சே, என்னையும் முன்னாடி போகவிடு" என்று சொல்லியது.
ஏற்கெனவே இ முன்னாடி போன கடுப்பில் இருந்த டி என்ன பண்ணிச்சுன்னா எஃப் ஐப்பார்த்து, " அது முடியாது போடா @*#$&(beep beep) என்னை டி போட்டு பேசறியா? மடையா Fool.... " என்று திட்டிடுச்சு.
F உடனே கோபம் வந்து, அருவாள் வாங்குவதற்காக அவசரமா கிளம்பிப் போயிடிச்சு.
அதனால, G H இரண்டும் D க்கு அருகே வந்து நின்னுகிட்டு இருக்கு.
(எங்கே கிளம்பிட்டீங்க? ஆட்டோ ஸ்டாண்ட் க்கா? ஆட்டோ அனுப்பப் போறீங்களா! எஸ்கேப்)
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!
இதையே பதிவாக்கி விட்டீர்களே.. ஸூப்பர்
பதிலளிநீக்குகாணொளி நன்று
சூப்பர்... பதில்களைப் பதிவாக்கி அருமை...
பதிலளிநீக்குஅட.... பதிலுக்காக ஒரு பதிவு....
பதிலளிநீக்குமூன்றாவது - வில்லங்கமால்ல இருக்கு! தில்லில இருந்து ஆட்டோ அனுப்பலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்!
Reminds me of an interview.
பதிலளிநீக்குSimilar to second question, In an interview, we were asked to draw a picture before Four 'T'(...TTTT) and form a word. I draw a purse and explained them it is purse nalu T - personality.
Regards
Aarveeyar (from vellore)
For 3, ஒங்க ஸ்டாண்டர்ட், இவ்ளோ தானா... ?
பதிலளிநீக்கு'F' அருவா வாங்கிட்டு ஒரு simple போடு போட்டா, 'D'ய, 'GH'ச்சுல வெச்சுத்தான், ட்ரீட்மெண்ட் பண்ணனும்..
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிறந்த பதிவு
அட, சுவாரசியமா இருந்திருக்கும் போல, என்னாலத் தான் வரவே முடியலை! :(
பதிலளிநீக்கு