================================================================
"கதைகள் புனையப்படும்போது அதன் பின்னணியில் நாம் சந்தித்த மாந்தர்கள் இருக்கலாம் நம்மை பாதித்த நிகழ்வுகள் இருக்கலாம் நான் அனுப்பிய இந்தக் கதையில் என்னை பாதித்த நிகழ்வு நாய்க்குச் சோறு ஊட்டுவது. என்னை முன்னிலைப் படுத்தி எழுதும்போது கற்பனை கை கொடுக்கிறது கதையைப் படித்த பலரும் இது உண்மை நிகழ்ச்சி பொல் இருப்பதாக அபிப்பிராயப்பட்டார்கள்அதை என் புனைவின் வெற்றியாகக் கருதுகிறேன் நான் எழுதும்போது பெரும்பாலும் என் கற்பனையே என்னை வழிநடத்தும்படியாக இருக்கும்"
======================================================================
ஜி எம் பாலசுப்ரமணியம்
ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன்,பேருக்காக
பேப்பரை புரட்டியபடி.வாசல் பக்கம் யாரோ வந்தமாதிரி
இருந்தது.சடாரென்று எழுந்துபோய்ப் பார்த்தால் அங்கே,
“அங்கிள், உங்களைத் தேடிக்கொண்டு ஒருத்தர் எங்கள்
வீட்டுக்கு வந்திருக்கிறார்.கீழே வரச் சொன்னாலும் வர
மாட்டேன் என்கிறார்.என்ன செய்ய...”என்று கூறிக்கொண்டு
உள்ளே வந்தாள் மாடிவீட்டுச் சிறுமி.
என் மனைவி அந்தப் பெண்ணுடன் சென்றாள். சிறிது நேரத்த்தில்
நண்பன் சேகரனுடன் கீழே இறங்கி வந்தாள்.வந்த சேகரன்
“தொப்”பென்று அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்தான். பிறகு ஒரு
அசட்டுச் சிரிப்புடன், “ தெரியாமல் மேல் வீட்டுக்குப் போய்
விட்டேன். நீங்கள் யாராவது வந்து கூட்டிக் கொண்டு வருவீர்கள்
என்று தெரியும் . அதனால்தான்....”என்று கூறினான். அவன்
பேச்சும் நடவடிக்கையும் அவன் குடித்திருக்கிறானோ என்று
சந்தேகப் பட வைத்தது. சைகையால் என் மனைவியிடம்
கேட்டேன். இல்லை என்று தலையாட்டினாள்.
சேகரன் களைப்புடன் காணப்பட்டான். “ நான் கொஞ்சம் ரெஸ்ட்
எடுத்துக் கொள்கிறேன்.பிறகு பேசலாம் “ என்று சோஃபாவில்
இன்னும் சாய்ந்துகொண்டு கண்களை மூடிக் கொண்டான்.
“ காஃபி டி ஏதாவது குடிக்கிறாயா, இல்லை நேராகவே சாப்பிட
லாமா “என்று கேட்டேன்
“சே ..சே.. ஒண்ணும் வேண்டாம்..இப்போதுதான் சாப்பிட்டு
வந்தேன் “..அவன் சொல்லும்போதே அது பொய் என்று
தெரிந்தது.
என் மனைவி எதுவும் கேட்டுக் கொண்டிருக்காமல் அவனுக்கு
சாப்பாடு எடுத்து வந்து , முன்னால் ஒரு ஸ்டூலில் வைத்துச்
சாப்பிடச் சொன்னாள். அவனும் கொஞ்ச தயக்கத்துக்குப்
பிறகு வேக வெகமாகச் சாப்பிடத் தொடங்கினான்.
சேகரன் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஃபோர்மேனாகப்
பணியாற்றி வந்தான்.சில மாதங்களுக்கு முன்பு அந்த
வேலையை விட்டுவிட்டு தனியாக ஏதோ தொழில் தொடங்கி
இருப்பதாகக் கூறியிருந்தான். தன் மனைவி, மகன் மகளுட்ன்
நன்றாகவே இருப்பதாகவும், ஒரு வீடு கட்டிக் கொண்டு
இருப்பதாகவும் கூறியிருந்தான். என்ன ஏது என்று துருவிக்
கேட்கும் பழக்கம் இல்லாதிருந்ததால் , மேற்கொண்டு எதுவும்
எனக்குத் தெரிய வில்லை. மகன் பெரியவன் டிகிரி முடித்து
வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும், பெண்
அப்போதுதான் படிப்பு முடித்திருந்ததாகவும் கேள்விப்பட்டேன்
என்னதான் வேண்டப் பட்டவர்களாக இருந்தாலும் சில கால
கட்டங்களில் அன்னியர்கள் போலத்தான் வாழ வேண்டி
உள்ளது.எது எப்படியிருந்தாலும் ஏதோ நல்ல படியாக இருக்
கிறார்கள் என்னும் சேதியே எல்லோரும் கேட்க விரும்புவது.
நான் சென்னைக்கு வரும்போது இரண்டு மூன்று நாட்கள் என்
மகனுடன் தங்குவேன். குறிப்பாகச் சொல்லப் போனால் ,
அத்தியாவசியமல்லாமல் எங்கும் போக மாட்டேன். கம்ப்ளீட்
ரெஸ்ட் தான்.
உணவு உட்கொண்டதும் சற்றே தெம்புடன் எங்களைப் பார்த்து
நலம் விசாரிக்க ஆரம்பித்தான். அவன் எங்களைப் பார்த்துப்
பேசிய விதத்தில் முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரிய என்ன
என்று கேட்டேன்.
“ எனக்கு ஒரு கண் சரியாகத் தெரிவதில்லை.சக்கரை வியாதி
என்று சொல்லுகிறார்கள் “
”டாக்டரிடம் காட்டிகண்ணுக்குக் கண்ணாடி வாங்கிக் கொண்
டிருக்கலாமே “,என்றேன்
“ இப்போது அது ஒன்றுதான் குறைச்சல் “,என்று முணு
முணுத்தான்.
” என்னையா, என்னாச்சு,?ஏதாவது ப்ராப்ளமா.?தொழில் எல்லாம்
சரியாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது ? “.
“ தொழில் என்று ஏதாவது இருந்தால்தானே சரியாகப் போக.”
“என்ன சொல்றெ நீ.?சொந்தத் தொழில் செய்வதாகத்தானே
சொல்லிக் கொண்டிருந்தாய்.வேலை என்னாயிற்று.?”
“ பின் என்னங்க..வேலை இல்லை சும்மா இருக்கிறேன் என்றா
சொல்லிக் கொள்ள முடியும்.”
“ வேலையிலிருந்து VRS வாங்கிக் கொண்டு தொழில் செய்வதாக
சொல்லிக் கொண்டிருந்தாயே”
“அதெல்லாம் சும்மா. VRS-ம் வாங்கலை, தொழிலும் செய்யலை.
என்னை அனுப்பி விட்டார்கள் “
“ அடடா...15/-வருஷத்துக்கு மேலா வேலையில் இருக்கும்
உன்னை எப்படி அவர்கள் அனுப்ப முடியும்.?”
“நான் வேலையிலிருந்தது ஒரு தனியார் தொழிற்சாலை-ன்னு
உங்களுக்குத் தெரியும்.அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்
அனுப்பிவிடலாம். ஒன்றும் கேட்க முடியாது.”என்று சொல்லிக்
கொண்டு வந்தவன் கூறியதிலிருந்து,
மெக்கானிக்காகச் சேர்ந்தவன் ஃபோர்மனாகப் பதவி உயர்வு
பெற்று நன்றாகவே இருந்தான். ஒரு முறை வாடிக்கையாளர்
களுடனான ஒரு மீட்டிங்கில் இவனும் கலந்து கொண்டிருந்த
போது, வந்தவர்களுக்கு தண்ணீரும் காஃபியும் கொடுக்க
இவனுடைய அதிகாரி இவனிடம்கூறியிருக்கிறார். “நான்
என்ன ப்யூனா.. ஆஃபீஸ் பாயா...நனொரு ஃபோர்மன் என்னால்
முடியாது “ என்று இவன் கூறியிருக்கிறான். வந்தவர்கள்
முன்னால் எதிர்த்து வாயாடிய இவனுக்கு கல்தா கொடுத்து
விட்டார்கள்.இதை சொல்லவும் முடியாமல் மெல்லவும்
முடியாமல் எல்லோரிடமும் வீ.ஆர். எஸ் -ல்வந்து விட்டதாக
கூறி வந்திருக்கிறான்.
தன்னிலை உணர்ந்து கொள்ள முடியாதபடி ஈகோவும் அகம்
பாவமும் அவனை அலைக் கழித்துக் கஷ்டப்பட வைத்து
விட்டது. போதாக் குறைக்கு தொழிற்சாலையில் கிடைத்த
பணத்தில்வீடு கட்டத் துவங்கி முடிக்க முடியாமல் திண்டாடிக்
கொண்டிருந்தான். அங்கும் இங்கும் கடன் வாங்கி வட்டியும்
கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவன் நான்
சென்னை வந்தது எப்படியோ தெரிந்து , விலாசம் வாங்கி
என்னை காண வந்திருக்கிறான்.
“ சரி.. விஷயத்துக்கு வா ,”என்றேன்.
“என் பையனின் பரீட்சைக்குப் பணம் கட்ட வேண்டும். இரண்டு
நாள்தான் இருக்கிறது. வீடு கட்ட வாங்கிய கடனுக்கு வட்டி
வேறு கட்ட வேண்டும்”
“பையன் டிகிரி முடித்து விட்டான் என்றல்லவா சொல்லி
இருந்தாய்.”
“எங்கே முடித்தான்...அரியர்ஸ் இருக்கிறது “
“எவ்வளவு பணம் தேவைப்படும்.?”
” இப்போதைக்கு ஒரு மூவாயிரம் தேவைப் படும்.”
” இந்த மூவாயிரத்தால் உன் கஷ்டங்கள் தீர்ந்து விடுமா.?”
“கஷ்டம் எங்கே தீரும்...இப்போதைக்கு சமாளிக்கலாம்.
அவ்வளவுதான் “
“ நான் ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறேன். என்னிடம் அவ்வளவு
பண்ம் இல்லை.ஊருக்குப் போன பிறகு வேண்டுமானால்
முயற்சிக்கலாம். ஆனால் அது உன் பிரச்சனைக்குத் தீர்வு
ஆகாது. ‘என்று நான் சொன்னதும் அவன் முகம் வாடி விட்டது.
“ நம்பிக்கையோடு வந்தேன் “ என்றான்.
“ நீ எங்கிருக்கிறாய்.?உன் விலாசம் சொல்லு. நான் உன் வீடு
வந்து உன் மனைவியையும் மக்களையும் பார்க்க வேண்டும் “
என்றேன்.விலாசம் கொடுத்தான். திருவொற்றியூரிலிருந்து
வந்திருந்தான்.
“ நீ எப்படி வந்தாய்.. உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறது”
என்று கேட்டேன்.
”எப்படி எப்படியோ வந்தேன் “என்று சொல்லி ஒரு ஐந்து ரூபாய்
நாணயத்தைக் காண்பித்தான்.
ஒரு பஸ்ஸில் ஏற வேண்டியது.அது போகாத இடத்துக்கு
டிக்கெட் கேட்பது, கண்டக்டரிடம் திட்டு வாங்கி அடுத்த
நிறுத்தத்தில் இறங்கி விடுவது இப்படியே இவ்வளவு தூரம்
வந்து விட்டதாகச் சொல்லி சிரித்தான்.எனக்குப் பாவமாக
இருந்தது. என்னிடம் அப்போது இருந்த ரூ.500/- ஐ அவனிடம்
கொடுத்து, அவனை வீட்டில் பார்ப்பதாகக் கூறி அனுப்பி
வைத்தேன்.
அடுத்த நாள் அவன் வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் அங்கே
இருக்கவில்லை. அவன் மகன் ஸீக்ஸ்பாக் உடம்புடன் இருந்தான்
போலீசில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கு முயற்சிப்பதாகக்
கூறினான். அவனுக்கு எந்தக்கவலையும் இருப்பதாகத் தெரிய
வில்லை.அப்பாவுக்கு சக்கரை வியாதியால் கண் பாதிக்கப்பட்டு
இருப்பது தெரியுமா என்று கேட்டபோது, அவருக்கு வயசாகி
விட்டது என்று விட்டேத்தியாக பதில் கூறினான். அவனது
மனைவியோ வீட்டில் இருந்த நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டு
இருந்தாள். சற்று நேரத்தில் பெண் வந்தாள்.சூட்டிகையான பெண்
போல் காணப்பட்டாள் வேலைக்கு முயற்சி செய்வதாய்க்
கூறினாள்.பசித்தவனுக்கு மீனைக் கொடுப்பதைவிட மீன்
பிடிக்கக் கற்றுக் கொடுப்பதே மேல் என்று தோன்றியது.
நிலையான வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை
விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது சிறந்தது எனத்
தோன்றியது. அப்போது அங்கு வந்த சேகரன் என்னைப் பார்த்து
மகிழ்ச்சியடைந்தான்..எனக்கு அவனைப்பார்க்கப் பாவமாக
இருந்தது. நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல்
இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே
என்று கவலை கொள்வதில் எந்த பலனும் இல்லை.
நல்ல வேளை ..அப்போதே எனக்குத் தெரிந்த நண்பனுக்குப்
ஃபோன் போட்டு, ( அவன் ஒரு எம்ப்ளாய்மெண்ட் கன்சல்டன்சி
வைத்திருந்தான்.) சேகரனின் மகளுக்கு வேலைக்கு ஏற்பாடு
செய்ய முடியுமா என்று கேட்டேன். அதிர்ஷ்டவசமாக,மறுநாளே
வந்தால் ஒரு வேலையில் சேரலாம் என்றான்.இந்த
மகிழ்ச்சியான சேதியை அவர்களிடம் கூறி விடை பெற்றேன்.
சேகரன் இறந்து பத்து வருடங்கள் ஓடி விட்டன. அன்றைக்கு
வழி காட்டப்பட்ட பெண் நன்றாக இருக்கிறாள்.மகனும் ஏதோ
வேலையில் இருக்கிறான்.இருவருக்கும் மணமாகி விட்டது.
அவனது மனைவி இன்றைக்கும் நாய்க்கு உணவு ஊட்டிக்
கொண்டிருக்கிறாள்.யாருக்காவது சேகரனைப் பற்றிய
நினைவோ,ஏறி வந்த ஏணிபற்றிய எண்ணமோ இருப்பதாகத்
தெரியவில்லை.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇன்னி தேதியிலே அடுத்தவனுக்கு கவலைப் பட்டு உதவி செய்யவோ ஓனர்ஷிப் எடுத்துக்கவோ யாருக்கு மனசு இருக்கு? அருமையான நரேஷன். ஃப்ளோ! கார்த்தால படிக்க, பாஸிட்டிவா ஃபீல் பண்றேன். வாழ்த்துக்கள், ஜி எம் பி அவர்களே! அருமை!
பதிலளிநீக்குசெத்தாண்டா சேகரன் என்று மறந்து விட்டார்கள் போலிருக்கு :)
பதிலளிநீக்குஏறி வந்த ஏணியை நிணைப்பவர்கள் சமூகத்தில் எண்ணிக்கையில் குறைவுதான்...
பதிலளிநீக்குஏறி வந்த ஏணியை நிணைப்பவர்கள் சமூகத்தில் எண்ணிக்கையில் குறைவுதான்...
பதிலளிநீக்குமிக இயற்கையாக வந்திருக்கும் கதை. ஏணி இரண்டு.
பதிலளிநீக்குநல்ல உள்ளங்கள் ஏணியை மறப்பதில்லை.பாவம் சேகரன்.
Interesting and felt pity for Sekaran.. GMB Sir, nice one.
பதிலளிநீக்குஅருமையான நடை.. பாராட்டுகள் ஐயா...
பதிலளிநீக்குஅருமையான நடை.. பாராட்டுகள் ஐயா...
பதிலளிநீக்குஅருமையான கதை நல்லதொரு தத்துவம் அடங்கிய விடயம்
பதிலளிநீக்குஇது நான் ஏற்கனவே திரு. ஜியெம்பி ஐயா அவர்களின் ''வாழ்வின் விளிம்பில்'' நூலில் படித்து இருக்கிறேன் வாழ்வில் எனக்கு மறக்க முடியாத நால்
மன்னிக்கவும் நூல் என்பது நால் என்று வந்து விட்டது
பதிலளிநீக்குமிகவும் யதார்த்தமானதோர் சம்பவம். அதையே கதையாகச் சொல்லியவிதமும் கச்சிதம். கதாசிரியருக்குப் பாராட்டுகள். படிக்க இங்கு பதிவாக்கித்தந்துள்ள ’எங்கள் ப்ளாக்’குக்கு என் நன்றிகள்.
பதிலளிநீக்குநிறைய பேர் இப்படியான மனநிலையில்தான் வாழ்கிறார்கள்.. நம்மோடு வசிக்கிறார்கள்.. நாய்க்கு சோறூட்டும் ஒரு சிறு சம்பவத்தின் பாதிப்பால் இக்கதை உருவானது என்றறிய வியப்பு.. கதாசிரியரின் மனத்துள் எந்த அளவுக்கு பெரிய பாதிப்பை அது உண்டாக்கியிருக்கிறது என்பதை கதையோட்டம் விளக்குகிறது. பாராட்டுகள் ஐயா. வாழ்வின் விளிம்பில் நூலிலும் வாசித்திருக்கிறேன் என்றாலும் மீள வாசிக்க வாய்ப்பளித்த ஸ்ரீராமுக்கு நன்றி.
பதிலளிநீக்குகதையை வாசித்டுக் கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி என் டாஷ் போர்டில் மதியம் தான் இது தெரிந்தது ஸ்ரீராமுக்கும் நன்றி
பதிலளிநீக்குஅருமை ! ஏணிகள் ஏறுவதர்க்கு மட்டுமே என்பதனால் மறந்தார்களோ ..நிறையப்பேர் இப்படித்தான் வாழ்க்கையை திரும்பி பார்க்க விரும்புவதில்லை ஏறி வந்த ஏணியையும் தான் ..
பதிலளிநீக்குவரும் வழியை மறந்துவிடக்கூடாது
பதிலளிநீக்குஅருமை சார். ஏணி வந்த ஏணியை யாரும் நினைப்பதில்லைதான். அருமையான கதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம். :)
பதிலளிநீக்குஅருமை. ஏறி வந்த ஏணியை யாரும் நினைப்பதுமில்லை, மதிப்பதுமில்லை....
பதிலளிநீக்குநல்ல கதை. பாராட்டுகள் GMB ஐயா.
ஏணிகள் ஏற்றி விடத்தான்
பதிலளிநீக்குஎன்கிற மனோபாவம் மட்டும் இருந்தால்
ஏணிகளுக்கும் பிரச்சனையில்லை
ஏறியவருக்கும் பிரச்சனையில்லை
என்ப்தே என் வாழ்வின் அனுபவம்
அருமையான கதை
பதிலளிநீக்குதொடருங்கள்
அருமையான கதை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
கதையாகத்தெரியவில்லை! உண்மை நிகழ்வு போல இருக்கிறது! வாழ்க்கையின் யதார்த்த நிலையை அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!
பதிலளிநீக்குவாழ்க்கையில் சேகரன் போன்றவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஏறி வந்த ஏணியை மறப்பது அங்கங்கே நடந்து கொண்டிருக்கும் வேதனையான விஷயம்.
பதிலளிநீக்குஅதை அழகாய் எடுத்து சொன்ன கதசிரியருக்குப் பாராட்டுக்கள். இங்கே பதிவிட்ட திரு ஸ்ரீராம் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தக் கதையை ஜிஎம்பி சாரின் தளத்தில்/புத்தகத்தில் வாசித்த நினைவு. அருமையான கதை. பெரும்பான்மையொர் தாங்கள் ஏறி வந்த ஏணியைப் புறக்கணித்து மறந்தும் விடுகின்றனர்...வாழ்த்துகள் ஜி எம்பி சார்..நன்றி எங்கள் ப்ளாக் பகிர்ந்தமைக்கு
பதிலளிநீக்குஅருமையான கதை. கதையை படித்தவுடன் மனம் கனத்து போனது.
பதிலளிநீக்கு//நன்றாக இருந்த காலத்தில் யாரையும் மதிக்காமல்
இருந்துவிட்டு, இல்லாதபோது யாரும் கவனிப்பதில்லையே
என்று கவலை கொள்வதில் எந்த பலனும் இல்லை.//
நிறைய பேர் இப்படித்தான் வேலை வேலை என்று குடும்பத்தை கவனிக்காமல் கடைசிக் காலத்தில் குடும்பத்தினர் பாசம் காட்டவில்லை என்று புலம்புவதும்
நட்க்கிறது இதை உணர்த்தும் கதை.
ஜிஎம்பி சாருக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.
அருமையான கதை... அவரின் தளத்தில் படித்த ஞாபகம்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நல்ல கதை. எப்படியோ கைக்காசை பாதுகாத்துக் கொண்டீர்கள். - இராய செல்லப்பா
பதிலளிநீக்குநல்ல ஆழமான கருத்தை உள்ளடக்கிய கதை
பதிலளிநீக்கு'ஹாலில் நான் சேரில் அமர்ந்திருந்தேன், பேருக்காக பேப்பரைப் புரட்டியபடி...'
பதிலளிநீக்கு--- மறக்க முடியாத ஆரம்ப வரி அல்லவா, அது?
நல்ல கதை. தொடர்ந்து விறு விறு. என்றாலும் முடிவு எதிர்பார்க்கக் கூடியதே! ஆரம்பத்தில் குடும்பத்தில் மதிப்போடு வாழ்ந்த பலரும் கடைசிக்காலத்தில் கஷ்டப்பட்டே இறக்கின்றனர் என்பது ஓர் எழுதாத விதினு நினைக்கிறேன்.
பதிலளிநீக்கு