சனி, 30 ஜூலை, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்1)  ஹமிர்பூரா வசூல் ராஜாக்கள்.
 
 


2)  மிஞ்சியதைத் தருவதல்ல இது.  தனியாகச் சமைத்துத் தருவது.  உணவு வங்கி.
 
 


3)  செயல்பாட்டுக்கு ஏற்றதா, வருமா என்பதை எல்லாம் விடுங்கள். அரசுப்பள்ளி என்றாலே இப்பமாய் நினைக்கும் காலத்தில் அங்கிருந்து ஒரு குருத்து தோன்றுவதை பாராட்ட வேண்டும்.  பரமக்குடி அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர் காளீஸ்வரன்.

13 கருத்துகள்:

 1. இப்படி மக்களுக்கு மக்களே எல்லாம் செய்துக் கொள்ள வேண்டும் என்றால் அரசாங்கம் எதுக்கு :)

  பதிலளிநீக்கு
 2. பரமக்குடி மாணவர் காளீஸ்வரன் பாராட்டுக்குரியவர்

  பதிலளிநீக்கு
 3. சிறுவனுக்கும் உணவு அளிப்போருக்கும், தங்கள் தேவையைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. பகவான் ஜி, உங்களுக்கு என்ன வயசு இருக்கும்? சுமார் 40க்குள் இருக்குமா? அதனால் தான் கிராமங்களின் தேவைகள் ஒரு காலத்தில் அந்த அந்தக் கிராமத்தாராலேயே நிறைவேற்றப் பட்டதை அறிந்திருக்கவில்லை. வெயில் காலத்தில் கால்வாய்கள், வாய்க்கால்கள் போன்ற நீர் வரத்துக்கான இடங்களைத் தூர்வாருவார்கள். ஒவ்வொரு கிராமமும் அவங்க அவங்க பஞ்சாயத்து மனிதர்களோடு கூடிப் பேசிக் கொண்டு அக்கம்பக்கம் கிராமத்தின் நிலையையும் தெரிந்து கொண்டு செயல்படுவார்கள். நீர் வரத்து குறித்துத் தெரிந்ததும் அதற்கேற்றபடி தயார் செய்து கொள்வார்கள். அதோடு இல்லாமல் பொதுக்குளம், கண்மாய்கள், கிணறுகள் போன்றவற்றைப் பாதுகாப்பதோடு அங்கே யாரும் அசுத்தம் செய்யாதவாறும், துணிகள், குப்பைகள், மலம் கழித்தல் போன்றவை செய்யாதவாறும் பாதுகாக்க ஓர் ஆளைப் போட்டிருப்பார்கள். மலம் கழித்துவிட்டுக் கழுவுவதெனில் நீரை மட்டும் சொம்பிலோ, வாளி போன்றவற்றிலோ எடுத்துச் சென்று நீர் நிலைகளை விட்டுத் தூரமாகப் போய்த்தான் கழுவிக் கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயமாய்க் கடைப்பிடித்தார்கள். இப்போது மாதிரி எல்லாம் இல்லை. இதை எல்லாம் கண்காணிக்க கிராமத்தில் மணியக்காரர், கணக்குப் பிள்ளை, பட்டாமணியம், வெட்டியான், போன்றோர் இருந்து வந்தனர். அவரவர் அவரவருக்கு என உள்ள வேலைகளைச் சிறப்பாகச் செய்து வந்ததோடு கிராமத்தில் யார் யார் நிலம் எங்கே உள்ளது, எத்தனை பரப்பளவு, விளைச்சல் எப்படி? நிலம் தனிச் சொத்தா? பங்குதாரர் உண்டா? அவங்க இருக்குமிடம் போன்ற எல்லாவற்றையும் அறிந்திருப்பார்கள். ஆகவே வரி விதிக்கவும் கிஸ்தி வசூலிக்கவும் அவர்களுக்குச் சரியான கணக்குத் தெரிந்திருக்கும். யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. இப்போது மாதிரி விஏஓ எல்லாம் அப்போது இல்லை. அந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களே இருந்ததால் கிராம முன்னேற்றம் குறித்து மட்டுமே நினைப்பார்கள். இது குறித்து நீங்கள் மேலதிகத் தகவல் பெற வேண்டுமெனில் தரம்பாலின் தளத்துக்குச் செல்லுங்கள். இம்மாதிரிக் கிராமங்கள் சேர்ந்தே நகரம், மாநகரம், மாநிலம் என இருந்தது. கிராமச் சாலைகள் போடுவது, திருவிழாக்களில் வரி வசூலிப்பது போன்றவை எல்லாம் கிராமங்களைச் சார்ந்தவையே! இது தான் உண்மையான தன்னாட்சி. கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கூட. இப்போது வரும் விஏஓக்கள் தாங்கள் வேலை செய்யும் கிராமத்தைக் குறித்துப் புரிந்து கொள்ளவே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கும்! அதன் பின்னர் அவங்க வேலை செய்ய ஆரம்பிக்கையில் மாற்றலும் வந்துடும்! :(

  பதிலளிநீக்கு
 5. அரசாங்கம் என்பது எல்லாப் பொறுப்புக்களையும் தங்கள் தோளிலேயே சுமப்பது என்று இருப்பது அல்ல! இப்போது பாருங்கள் ஒவ்வொன்றுக்கும் அரசு வந்து செய்யட்டும்னு அவங்க அவங்க கிராமப் பகுதியில் இருக்கும் ஆறைச் சுத்தம் செய்வதோ நீர்நிலைகளைச் சுத்தம் செய்வதோ யாரும் முன் வருவதில்லை. நூறு நாள் வேலைத் திட்டமும் முழுத் தோல்வி! கிராமங்களில் பொதுக் கழிப்பறை கட்டினால் கூட சுத்தம் செய்ய அரசு தான் ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த அழகில் இருக்கிறது இன்றைய நிர்வாகம்! எல்லாம் இலவசம், பள்ளிகளில் குழந்தைகளுக்குச் சீருடை, புத்தகங்கள், பேனா, பென்சில்கள், சாப்பாடு, சைகிள், மடிக்கணினி என்று எல்லாமும் தான் கொடுக்கிறார்கள். அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய் வகைகள், மற்றும்
  விலை இல்லா மிக்சி, கிரைண்டர்கள், இலவசமாக ஆடு, மாடுகள், கோழிகள், தாலிக்குத் தங்கம், குழந்தை பிறந்தால் சலுகைகள் என்று கொடுக்கிறார்கள். இதுக்கெல்லாம் ஆகும் பணத்தில் மக்களுக்கு நீர்நிலைகளைத் தூர் வாரவும் ஆறுகளைச் சுத்தம் செய்யவும் தடுப்பணைகள் கட்டவும் பயன்படுத்தினால் விவசாயம் தன்னால் முன்னேறாதா? தண்ணீருக்காக ஏன் வெளி மாநிலத்தில் கையேந்த வேண்டும்? யார் இதை எல்லாம் யோசிக்கின்றார்கள்? எல்லாமும் அரசே செய்து விட்டால் மக்கள் உழைப்பது எப்போது? ஏற்கெனவே தமிழனைப் போல் சோம்பேறிகள் இல்லைனு நினைக்கிறேன்.தமிழ்நாட்டுக்கு வந்து வீட்டு வேலை, கொத்தனார் வேலை, ஓட்டல்களில் வேலை செய்பவர்கள் என்று பலரும் வெளிமாநிலக்காரர்கள். இதற்கு என்ன காரணம்?

  பதிலளிநீக்கு
 6. பரமக்குடி காளீஸ்வரன் பாராட்டப்பட வேண்டிய மாணவன்.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரரே

  மக்களுக்கு நன்மை பயக்கும் வண்ணம் அறிவியலில் சாதனை செய்த பரமக்குடி அரசு பள்ளி மாணவர் காளீஸ்வரன் பாராட்டப்பட வேண்டியவர்.அவருக்கு வாழ்த்துக்கள். மேலும் செய்திகளை அறிய தந்த தங்களுக்கு நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. பாராட்டுக்குரியவர்கள்.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. காளீஸ்வரனுக்குப் பாராட்டுகள்

  ஃபுட் பேங்க் மற்றும் ஹமீர்புரா மக்களுக்குப் பாராட்டுகள். ஹமீர்புரா மகக்கள் போன்று தங்கள் தேவையைத் தாங்களே ப் ஆர்த்துக் கொளல் காந்தியின் பொருளாதாரம். அருமை..

  பதிலளிநீக்கு
 10. அனைவருமே பாராட்டுக்குரியவர்கள். அம்மா கீதா சாம்பசிவம் அவர்களின் விளக்கமும் அருமை.
  த ம 7

  பதிலளிநீக்கு
 11. கீதா அவர்கள் சொல்வது சிந்திக்கத் தக்கது. உதாரணத்திற்கு அரசு பள்ளிகள் நிறைய இருக்கும்போது தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்துவிட்டு கட்டணத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் . அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்று அரசு மீது குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறோம்.
  நுகரும் சக்தி இருப்பதால் பொறுப்புணர்வு சிறிதும்க இன்றி பிளாஸ்டிக் பொருட்களை வாங்கிக் குவித்து குப்பைகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறோம். குப்பைகளை எப்படி குறைப்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் ஆரசு குப்பையை அகற்றுவதில்லை என்று கூறிக் கொண்டிருக்கிறோம்.
  பத்து கார்களை சாலையில் பார்த்தால் அதில் 8 கார்களில் ஓரிருவர் மட்டுமே பயணிக்கின்றனர். அரசு போக்குவரத்தை கட்டுப்படுத்தவில்லை என்று பழி போடுகிறோம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!