ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஞாயிறு 160731 ஹாபி - தொடர் கண்காணிப்பு. (சுருக்கமா ஃபாலோ அப்)


சென்ற ஞாயிறு  ஹாபி பதிவுக்கு அபார வரவேற்பு! 

நன்றி நண்பர்களே! 

சில சந்தேகங்கள் கேட்கப்பட்டிருந்தன சந்தேகமும், அதற்கான  விளக்கமும் இதோ: 

rajalakshmi paramasivam said...

மிகவும் உபயோககரமானத் தகவல். சின்ன சந்தேதகம்.கோகோ பீட் ஒருமுறைப் போட்டால் பிறகு மாற்ற வேண்டுமா?எவ்வளவு நாளைக்கு ஒரு முறை அதை மாற்ற வேண்டும். வெறும் கீரை மட்டும் தான் அதில்வருமா? அல்லது பூச்செடிக்கும் மண்ணிற்குப் பதிலாக கோகோ பீட் உபயோகபடுத்தலாமா?          
விளக்கம்:
நான், கோகோ பீட் மற்றும் வெர்மிகம்போஸ்ட்  வாங்கியது, சென்னை டிரேட் சென்டரில் - ஜூன் மாதம் நடந்த வீட்டுப் பொருட்கள் கண்காட்சியில். 
அந்த ஸ்டால் அளித்த கார்ட் இது: 
    

அட்டையில் காணப்படும் மின் அஞ்சலுக்கு, வாசகரின் சந்தேகத்தைக் கேட்டு, ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதினைந்து நிமிடங்களுக்குள், அந்தக் கடை அதிபர் ஆதித் குமார் என்பவரிடமிருந்து பதில் வந்தது. 

அந்த பதிலின் சாராம்சம்:  

கோகோ பீட், தேங்காய் உரிமட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ('நார்சீவல்' என்று பெயர் உண்டு என்று என்  அண்ணன் மகள் கூறினார்.) இந்த நார்சீவல், மண்ணை விட அதிக நாட்கள், ஈரப்பதத்தை தன்னகத்தே தேக்கி  வைத்திருக்கும் திறன்  பெற்றது. 

ஆரம்ப  நாட்களில், நார்சீவலில்   உயிர்சத்துகள்  எதுவும் கிடையாது. ஆனால், நாள் பட, நாள் பட, நார்சீவல் நம்  உபயோகத்தில்  மக்கத் துவங்கும். அப்போது அதனிடம் நைட்ரஜன் சத்து  வந்துவிடுகிறது.  அந்த  சத்தை  அது, தன்னகத்தே  வளருகின்ற செடிகளுக்கு அளிக்கிறது. 

நார்சீவலை அடிக்கடி மாற்றத் தேவை இல்லை. பலமுறை, கீரை சாகுபடிக்கு அதை உபயோகப்படுத்தலாம். ஆனால், பூச்செடிகள்   போன்ற , வேர்கள் எளிதில் அழுகுகின்ற வகை தாவரங்களை  நார்சீவல் அமைப்பில்  பயிரிட்டால், நார்சீவல் பழுதாகிவிடும். அதில் மீண்டும் பயிரிடல்  வேண்டாம். வேறு  புதிய  நார்சீவல்  தளம்  அமைத்துக்கொள்ளுதல்  நல்லது.  

மண்புழு  உரத்துடன்  கூடிய  நார்சீவல்,  (That is, Vermi compost with cocopeat) புதினா, வெந்தயக்கீரை, கொத்தமல்லி போன்ற  இலை / கீரை  வகைகளுக்கு ஏற்றது. இந்த  வகை  தாவரங்களுக்கு  வேண்டியது, நைட்ரஜன்  மட்டுமே.  அதை  வெர்மிகம்போஸ்ட்  அளித்துவிடுகிறது.    

பழச்செடிகளை  அல்லது    காய்கறிச் செடிகளை, நார் சீவல்  அமைப்பில்  பயிரிட  நீங்கள்  விரும்பினால், நார் சீவல்  + செம்மண் +   கம்போஸ்ட்  + bone meal + sea weed extract   எல்லாமாகக் கலந்துகொண்டு   அதில்  காய்கறிச் செடிகளைப்  பயிரிடலாம். கம்போஸ்ட்  நைட்ரஜனை  அளிக்கிறது;  மற்ற  இரண்டும் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்  சத்துகளை  அளிக்கும். இந்த  சத்துகள், காய்கறிச்  செடிகள்  வளர  தேவையானவை.   
 
பூச்செடிகள்  வளர்க்க  வேண்டும்  என்றால்,  நார் சீவல்  +  கம்போஸ்ட்   +  செம்மண்   கலவை  உதவும்.  செம்மண்  சேர்ப்பது, பூச்செடிகளின்  உறுதியான  தண்டு, வேர்ப்பகுதிகளை  உறுதியாகத்  தாங்கிப்பிடிக்க.  பூச்செடிகளின்  வேர்கள்,  நார் சீவல்  போன்ற  அதிக  ஈரப்பாங்கான  இடத்தில்  எளிதில்  அழுகிவிடும்.  எச்சரிக்கை  தேவை.  ஈரத்தைக்  குறைக்கத்தான்   செம்மண்  சேர்க்கப்படுகிறது.  ஆனால்,  பூச்செடி   போட்டு,  அது  வேர்ப்பகுதி  ஈரத்தால்   அழுகிவிட்டால்,  பிறகு,  அந்த   நார்சீவல்  கலவையை  மீண்டும்  உபயோகிக்க கூடாது.. 

சரி.  இப்போ  என்னுடைய  கொத்தமல்லித்  தொட்டியைப்  பாருங்கள்.  
     
     
பழைய  ஃபிரிட்ஜின் பாலி கார்பனேட்   காய்கறிப்  பெட்டி.  (அந்த  ஃபிரிட்ஜை  வீட்டுக்கு  வெள்ளையடிக்க  வந்தவருக்கு  இலவசமாகக்  கொடுத்துவிட்டேன்.)   பெட்டியை    எடுத்து,  அடியில்  நான்கு  மூலைகளிலும்  1/8" (3 mm) dia  ஓட்டை  (மொத்தம்  நான்கு ஓட்டைகள் மட்டுமே. ஒவ்வொரு  மூலையிலும்  ஒவ்வொன்று Thanks : Kayjee)  போட்டுக்கொண்டேன்.   தொட்டியில்  பாதிக்கு  மேலே  செம்மண்  நிரப்பினேன்.  பிறகு  நார்  சீவல், இரண்டு  அங்குல  ஆழத்துக்கு இட்டேன்.   கொத்தமல்லி  விதைகளை, இருபத்துநான்கு  மணி நேரம்  தண்ணீரில்  ஊறவைத்துக்கொண்டேன்.  ஊறிய  விதைகளை கம்போஸ்ட் உடன் கலந்து நார் சீவல்  படுக்கைக்கு  மேல்  இட்டேன். 

பதினான்கு  நாட்கள்  தொடர்ந்து தொட்டியை  வீட்டுக்கு  வெளியே  நிழலில்  வைத்து, தண்ணீர்  தெளித்து வந்தேன்.  ஜூலை  நான்காம்  தேதி  ஆரம்பித்த  தவம்,  ஜூலை பதினான்கு சமயத்தில்தான்  முளை விட்டது.  

                Coriander

      

12 கருத்துகள்:

  1. எனக்காக சம்பந்தப்பட்டவருக்கு மின்னஞ்சல் செய்து, விளக்கமானப் பதிவு வெளியிட்டதற்கு மிக்க நன்றி கௌதமன் சார். குடியிருப்பு வளாகத்தில் இருப்பதால், உங்களின் கோகோ பீட் பதிவு வழியாகத் தான் கோகோ பீட் தகவலை அறிந்து கொண்டேன். தற்பொழுது குடியிருப்பு வளாகத்தில் இருப்பதால் எனக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் தகவல்.என் மனதில் எழுந்த சந்தேகங்களை கமென்ட்டில் தட்டி விட்டேன். ஒரு பதிவாகவே எனக்குப் பதிலளித்து விட்டீர்கள் .மீண்டும் நன்றிகள் பல.கோகோ பீட் ஆர்டர் செய்து விட்டேன்.
    அதில் செடிகள் வந்ததும் படத்துடன் வெளியிடுகிறேன் .

    பதிலளிநீக்கு
  2. உபயோகமான தகவல்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. கொத்தமல்லி ரெடியாயிடுத்தா. அப்படின்னா நாளைக்கு கொத்தமல்லி துவையல், ரசம், சாம்பார் ரெசிப்பிதான் போலிருக்கு. கொத்தமல்லி அடைன்னு புதுசா கண்டுபிடிச்சுப் போடாம இருந்தாச் சரிதான்.

    கே ஜி சார் - இது கீழ்த்தளத்தில் வைத்திருக்கிறீர்களா அல்லது மேல் மாடியிலா? வேறு என்ன என்னவெல்லாம் தோட்டத்தில் முயற்சி செய்திருக்கிறீர்கள்?

    பதிலளிநீக்கு
  4. பயனுள்ள தகவல்.கொத்தமல்லியை பார்க்கும்போதே மணக்கிறது

    பதிலளிநீக்கு
  5. நெல்லைத் தமிழன், கர்நாடகாவின் அக்கி ரொட்டி அல்லது அடைக்கு நிறையக் கொத்துமல்லி தான் சேர்ப்பார்கள். ஆகவே கொத்துமல்லி அடை உண்டு! :)

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் ஆசைதான் தாசில் பண்ண! அதிர்ஷ்டம் இருக்கானு பார்க்கணும். :(

    பதிலளிநீக்கு
  7. பலருக்கும் பயனுள்ள பதிவு தொடரட்டும் ஞாயிறு.

    பதிலளிநீக்கு
  8. //கே ஜி சார் - இது கீழ்த்தளத்தில் வைத்திருக்கிறீர்களா அல்லது மேல் மாடியிலா? வேறு என்ன என்னவெல்லாம் தோட்டத்தில் முயற்சி செய்திருக்கிறீர்கள்?//

    மொட்டை மாடியில். (இரண்டாவது தளம். ) இன்றளவில் கொத்துமல்லியும், வெந்தயக் கீரையும்தான்.
    நல்ல செம்மண் கிடைத்தால், மற்றக் காய்கறிச் செடிகள் முயற்சிக்கலாம் என்று இருக்கிறேன்.
    நன்றி நெல்லைத் தமிழன்.

    பதிலளிநீக்கு
  9. கௌதம் ஜி மிக மிக பயனுள்ள தகவல். குறித்தும் வைத்துக் கொண்டோம். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!