சனி, 19 நவம்பர், 2016

மரங்களைக் கட்டிப்பிடித்து நின்ற பெண்கள்1)  கார்ட் அக்செப்ட் செய்கிறோம் என்று சொல்லியதால் குழந்தைக்கு பொருள்கள் வாங்கி கொண்டு கருவியின் அருகில் வந்து தேய்த்தால் அது வேலை செய்யவில்லை.  ஆனால் அங்கிருந்த இளைஞனோ இவர் அங்கு சென்றதே அதுதான் முதல் தரம் என்றாலும் "எடுத்துக் கொண்டு போங்க..  அப்புறம் வந்து பணம் கொடுங்க" என்று சொல்லியிருக்கும் நிகழ்வு.  அதுவும் இவர் மறுநாள் வெளியூர் சென்று விடுகிறார் என்று தெரிந்தும்.  கரன்ஸி இல்லா நாட்களின் நிகழ்வுகளில் ஒன்று.  அவர் பெயர் மாரிமுத்து, ராமநாதபுரம் மாவட்டம்.  
 
 
 

 
 
  
2)  இத்தகைய நிலையில் வியாழக்கிழமை காலை சாதாரண மக்களுக்கு அன்றாட செலவுக்குத் தேவையான ரூ. 100, ரூ. 50 பணம் இல்லாமல் தவித்த நிலையில், ஆம்பூர் ஓ.வி. சாலை பகுதியில் அமைந்துள்ள துணிக்கடையின் உரிமையாளரான ரமேஷ் அத்தகைய சாதாரண மக்களுக்கு உதவ முன்வந்தார். தன்னிடமிருந்த ரூ. 100, ரூ. 50 சில்லறை பணத்தை மக்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்தார். ஒரு நபருக்கு ஒரு 500 ரூபாய்க்கு சில்லறை வழங்கினார். அவ்வாறு ஆயிரம் நபர்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கு அவர் சில்லறை வழங்கி உதவியுள்ளார்.
 
 


 
3)  ஏழை வியாபாரிகளுக்கு ஒரு நற்செய்தி.  பழம், காய்கறிகள் கெடாமல் பாதுகாக்க உதவும் மின்சாரம் தேவைப்படாத இயற்கை முறையிலான குளிர்பதனப் பெட்டியை கோவையில் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை அதிகாரி கள் முதல்முறையாக வழங்கி உள்ளனர்.
 
 


 
4)  நேர்மறையான நிஜக்கதைகள் தினமலரில் எழுதி வரும் திரு எல் முருகராஜ் அவர்கள் விருது வாங்கியது, கடந்த சென்னை வெள்ளத்தின் கொடூரங்களை தனது சொந்தக் கஷ்டங்களைப் பார்க்காமல் பதிவு செய்ததுதான்.
 
 


 
6)  அந்த கிராமத்துக்கே ஒளி வழங்கிய கலாவதி.  ஆண்களை எதிர்பார்க்காமல் தனிப்போராட்டம்.  மரங்களை அதனை வெட்டுபவர்களிடமிருந்து காப்பாற்ற அந்த மரங்களைக் கட்டிப்பிடித்து நின்று பெண்கள் நடத்திய போராட்டம் நினைவுக்கு வருகிறதா?  அது இவர் தலைமையில்தான்.
 

  
7)  "......மதுரையில் வெப்பாலை மூலிகை மர இலை தைல மருந்தை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி, இந்நோயில் இருந்து மீண்ட கீழவாசல் பாத்திரக்கடை வியாபாரி தினகரன்(50), தான் பெற்ற பயனை மற்ற நோயாளிகளும் பெற, அவர்களுக்கு மூலிகை தைலத்தை அவரே தயாரித்து இலவசமாக விநியோகம் செய்துவருகிறார். இதற்காக பிரத்யேகமாக இயந் திரங்களை வாங்கி, தனது கடையின் ஓர் அறையில் வெப்பாலை மருந்து தயாரிப்புக் கூடத்தை உருவாக்கி....."
 
 8) சுழலும் மருத்துவர்.  வைரஸ் காய்ச்சலால் தனது 2 கால்களையும் இழந்த மருத்துவர், நோயாளிகளின் நம்பிக்கையாலும் குடும்பத்தினரின் அரவணைப்பாலும் மீண்டு வந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி சிகிச்சை அளித்து வருகிறார்....  ஏழைகளுக்கு அவர்களது வருமானத்தின் அடிப்படையில் மிக சொற்ப கட்டணமே வசூலிக்கிறார்.  மருத்துவர் ஆறுமுகம்(63)


20 கருத்துகள்:

 1. மலைக்க வைக்கும் அற்புத தகவல்கள்...!!!
  எங்கிருந்து தேடி எடுக்கிறீர்கள்.....????

  பதிலளிநீக்கு
 2. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்
  நன்றி நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 3. அனைத்துமே அற்புதமான தகவல்கள்.
  த ம 3

  பதிலளிநீக்கு
 4. அருமையான செய்திகள்.
  மனிதநேயம் உள்ளவர்கள் அனைவரும், வாழ்க வாழ்க! வாழ்க வளமுடன்.
  உங்களுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. இவர்களைப் போன்றவர்களால்தான் இன்னும் மனிதம் வாழ்கின்றது வாழ்த்துவோம்

  பதிலளிநீக்கு
 6. வழக்கமாக நீங்கள் செய்திகளைத் தெரிவு செய்யும் முறையைக் கண்டு நான் வியக்கிறேன். அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
 7. இப்போது இருக்கும் நிலைமையில்500 க்கு சில்லறை தரும் ரமேஷ் பாராட்டத்தக்கவர்

  பதிலளிநீக்கு
 8. தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்று பரந்த சிந்தனையோடு சேவை செய்து வரும் திரு தினகரன் அவர்களுக்கு வாழ்த்து)

  பதிலளிநீக்கு
 9. இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்குச் சில்லரை கொடுத்து உதவினார் ஒரு நண்பர் நல்ல உள்ளம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் வாழ்க

  பதிலளிநீக்கு
 10. மனிதர்களுக்கு வணக்கங்கள்.
  அருமையான பகிர்வு சகோ..நன்றி.

  பதிலளிநீக்கு
 11. அனைவருமே அற்புதமான மனிதர்கள்..... பாராட்டுக்குரியவர்கள். இப்படி சிலர் இருப்பதால் தான் இன்னும் நம்பிக்கை இருக்கிறது இவ்வுலகில்......

  பதிலளிநீக்கு
 12. கலாவதி அவர்களின் முயற்சிக்கு பாராட்டு

  பதிலளிநீக்கு
 13. எல்லாம் வழக்கம்போல் அருமை என்றாலும், இயற்கைக் குளிர்பதனப் பெட்டி, வெப்பாலை நோய்க்கான மருந்து, சுழலும் மருத்துவர் ஆகியவை மனதைக் கவர்ந்தது. அனைவரும் மனிதாபிமானம் மிக்கவர்கள்.

  பதிலளிநீக்கு
 14. அற்புத தகவல்கள்...!!!
  வாழ்த்துவோம்...

  பதிலளிநீக்கு
 15. கட்டிப்புடி வைத்தியம்...மரங்களைக் காப்பாற்றிய பெண்கள் வாழ்க!!!

  பணத்தட்டுப்பாட்டில் உதவிய வர்கள் பாராட்டிற்குரியவர்கள்!!!

  முருகராஜ் அவர்களைப் பல நாட்களாகத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டு இப்போது தங்களால் அறிந்து கொள்ள முடிந்தது. அவருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!

  சுழலும் மருத்துவர் ஆறுமுகத்திற்கும், வெப்பாலை மருந்து தயாரித்து இலவசமாக வழங்கும் தினகரன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

  அனைத்து செய்திகளும் அருமை!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!