Sunday, November 13, 2016

ஞாயிறு 161113 கீரை, எத்தனை கீரையடா!

                             
                          

19 comments:

KILLERGEE Devakottai said...

இப்படியும் கீரையா ?

Geetha Sambasivam said...

பயனுள்ள பதிவு. கீரைகள் அற்புத சக்தி வாய்ந்தவை!

Geetha Sambasivam said...

தொடர

'நெல்லைத் தமிழன் said...

'நிறைய கீரைகள் மூலிகைகள். 'வாழைத் தண்டு சிறு'நீரகக் கல்லினால் அவதிப்படுபவர்கள் சாப்பிடலாம். அதையும் நிறைய எடுத்துக்கொண்டால், உடலில் இருக்கும் முக்கியமான மினரல்களையும் கரைத்துவிடும். உடம்புக்குக் கெடுதல் என்று படித்துள்ளேன். அதுபோல், இந்தக் கீரைகள், மூலிகைகளை இஷ்டத்துக்கு சாப்பிட்டால் பாதகமில்லையா? முன்னாளில், நெல்லிக்காய் ஞாயிறு அன்றும் (எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் இருக்கும்), இரவிலும் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பார்கள். சும்மா உடம்புக்கு நல்லது, இயற்கை என்று இத்தகைய மூலிகைகளையும் கீரைச் சாற்றினையும் சாப்பிடலாமா?

கீதா மேடம்.. வெகு அதிசயமாக இங்கு மார்க்கெட்டில் அகத்திக்கீரை பார்த்தேன். அதை வைத்து ருசியான ரெசிப்பிக்கள் சொல்லுங்கள்.

middleclassmadhavi said...

முன்னம் கேட்டிராத கீரைகளை அடையாளம் காண, படங்களைத் தேடணும்....பக்கத்திலேயே முளைத்திருக்கலாம், தெரியாமலே இருந்திருக்கலாம்!! இப்போது மூன்று கிளைகளோடு இருப்பவர், வருங்காலத்தில் தெரு தோறும் பல்கிப் பெருக வாழ்த்துக்கள்!!:-))))

Geetha Sambasivam said...

நெல்லைத் தமிழன், அகத்திக்கீரையை தினமும் சாப்பிடக் கூடாது! ஏகாதசிக்கு மறுநாள் மட்டுமே என ஏன் வைத்திருக்கிறார்கள் எனில் முதல்நாள் ஏகாதசி விரதத்தில் பட்டினி போடுவதால் வயிறு சூடு ஆகும். உடல் சூடு ஆகும். அதைத் தணிக்கவும் வயிற்றுப் புண்ணை ஆற்றவுமே அகத்திக்கீரையை அன்று சமைத்து உண்பார்கள். மற்ற நாட்களில் அகத்திக்கீரைக்குத் தடா! மேலும் அகத்திக்கீரை எத்தகைய மருந்தை நாம் எடுத்துக் கொண்டாலும் அதை முறிக்கும் ஆற்றல் பெற்றது. ஆகவே அகத்திக்கீரையைச் சாப்பிடும் அன்று மருந்துகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்தக் காரணத்தினாலேயே நாங்கள் அகத்திக்கீரை வாங்குவதே இல்லை! :)))))

Geetha Sambasivam said...

@நெல்லைத் தமிழன், உங்கள் விருப்பப்படியே விபரமான கருத்து! ஓகேயா? :)))))

Geetha Sambasivam said...

http://maruththuvam.blogspot.in/2006/02/blog-post_114102961105353438.html
http://dailytamizh.blogspot.com/2015/05/agatthi-keerai-payangal.html

'நெல்லைத் தமிழன் said...

'கீதா மேடம்... நீங்கள் Ready Reckoner. 'நன்றி...

Ajai Sunilkar Joseph said...

ம் ம் ம் தொடருங்கள்...

G.M Balasubramaniam said...

எத்தனை கீரை வகைகள் இருந்தால்தான் என்ன/ எதுவும் வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லையே அகத்திக் கீரை ஆட்டின் உணவு அல்லவா

திண்டுக்கல் தனபாலன் said...

வாரம் இருமுறை...!

அபயாஅருணா said...

கீரையுடன் தக்காளி சேர்த்துச் சமைத்தால் அது சிறு நீரகத்தில் கற்களை உருவாக்கும் என்று ஆந்திராவில் சொல்கிறார்கள் . அது எந்த அளவு உண்மை என்று தெரியாது , எனக்கு சிறு நீரகத்தில் கற்கள் உண்டு . ஆந்திராவில் இருந்தபோது வந்தது , வளர்வதும் தேய்வதுமாக இருக்கிறது

ஜீவி said...

அகத்திக்கீரையும் பசுமாடுகளும்:

பசு மாடுகளை போஷிக்கின்ற பசு ம்டங்கள் இருக்கின்ற இடங்களில் அகத்திக்கீரை விற்பனை அதிகம்.

பிரதோஷ தினத்தன்று வில்வம். அருகம்புல் வாங்கி சிவன் கோயில்களில் கொடுப்பதையும் அன்று கட்டு கட்டாக விற்கப்படும் அகத்திக்கீரை வாங்கி பசுக் கொட்டில்களில் பசுக்களுக்கு நேரிடையாக வழங்குவதையும் பலர் பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். சென்னை மாம்பலம் பகுதியில் பசு மடம் உள்ளதால் கோயில்கள் முன்பு அகத்திக்கீரை விற்பனை அதிகம்.

‘தளிர்’ சுரேஷ் said...

கீரைகள் சத்தான உணவுதான்! இப்போது அதிலும் பூச்சிக் கொல்லிகள் அடித்து பாழடிக்கிறார்கள். இயற்கையில் விளையும் கீரைகள் ஆபத்தற்றவை! அகத்தி கீரை வாய்ப்புண் அகற்றும்.

காமாட்சி said...

மூலிகை மகத்துவமுள்ள எவ்வளவோ கீரைகள் இருக்கிறது. இரவு நேரத்தில்,பிரயாணம் செய்யுமுன் என்று கீரைகள் சமையல் செய்யக்கூடாது என்பார்கள். விஷயங்கள் தெரிந்தால் ஆசாரம். இல்லாவிட்டால் எந்த உபசாரமும் இல்லை. ஏழைகளின் உணவில் கீரை முதலிடம் வகிக்கிறது. இப்போது எல்லாம் எல்லோருக்கும் மருந்தாகிவிட்டது.அகத்திக்கீரை துவாதசி பாரணையில் விசேஷம்.
பருப்புசிலி நன்றாக இருக்கும். சிறு கசப்புச் சுவையுடன் கூடிய ஆத்திக் கீரையை கார்த்திமாதக்கீரை கணுவெல்லாம் ருசிக்கும் என்ற பழமொழியும் உண்டு. மொட்டும்,பூவும்,துளிருமாக இளஇள என்று இருக்கும். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுப்பது விசேஷகாரியங்களில் ஒன்று.
திதிகொடுப்பது என்ற விசேஷ பிரிவினர்கள் அகத்திக்கீரையையும் மற்ற காய்கறிகளுடன்,சாப்பாட்டிற்கு வேண்டியவைகளையும் சேர்த்துக் கொடுப்பார்கள். இப்படிச் சில விஷயங்கள் வேறுபடுவதும் உண்டு. அன்புடன்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

நெடுநாள் வாழ்வுக்கும்
இரும்பு போலப் பலம் பெறவும்
கீரை வகை சிறந்தது

கோமதி அரசு said...

கீரை பகிர்வு அருமை.

வெங்கட் நாகராஜ் said...

கீரை.... கீரை...... :) இங்கே கிடைப்பது சில வகைகள் மட்டுமே!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!