Friday, November 25, 2016

Video 16112510 comments:

கோமதி அரசு said...

காணொளி அருமை.

வெங்கட் நாகராஜ் said...

அருமை.... அதனால் தான் அவர் ராஜா!

Geetha Sambasivam said...

not opening. will come afterwards.

Thulasidharan V Thillaiakathu said...

ஐயையோ லேட்டா வந்தா பாக்க முடியாதோ...

Thulasidharan V Thillaiakathu said...

3 நோட்ஸ் காணொளியா பார்த்திருக்கிறேன்...இங்கு பார்க்க முடியவில்லை...
கீதா

G.M Balasubramaniam said...

ரசிக்கவைக்கும் செய்தியும்காணொளியும்

'நெல்லைத் தமிழன் said...

த்த்தகாரம் கேட்டவுடன் பாடல் வரிகள் எழுதினால் என்ன என்று தோன்றியது. (Try பண்ணறதுல என்ன இருக்கு. கூட்டத்துல நம்மளும் ஐக்கியமாக வேண்டியதுதானே. கீதா சாம்பசிவம் இடுகையைப் படித்தபின் எழுதியிருக்கிறேன்)


வாழ்வில் சுகமென்ப தேதிங்கே அதுவெறும்
கானல் நீர்போல் காணுதே (இந்த)
அனுதினம் வரும் பெரிய புயலினில்
என்மனம் தினமும் வாடுதே. -- எழுதறது கஷ்டம்தீன்

பரிவை சே.குமார் said...

முன்பே கேட்டிருக்கிறேன் அண்ணா...
நம்ம மொட்டையோட உடம்பெல்லாம் இசைதான்....

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லைத்தமிழன் ரொம்ப நல்லா இருக்குது உங்கள் வரிகள்...கொஞ்சம் இடிக்குது...அவ்வளவுதான்...'அது வெறும்' அப்படின்றதுல அதுவை எடுத்துட்டா ஃபிக்ஸ் ஆகுது. அது போல பெரிய கொஞ்சம் இடிக்குது அதை எடுத்தாலும் இடிக்குது...அதைவிடச் அனுதினம் பெரிய புயலினில் என் மனமும் தினமும் வாடுதே....அப்படினு வந்தா ஃபிக்ஸ் ஆகுது...எனிவே குடோஸ் நெல்லை அழகா எழுதறீங்க...எனக்கெல்லாம் சுத்தமா வராது!!! நீங்க மெய்யாகவே பன்முகக் கலைஞர்தான்!!!!

கீதா

'நெல்லைத் தமிழன் said...

துளசி கீதா ரங்கன் - நன்றி. நீங்கள் சொல்லியது சரிதான். எனக்கு தத்தகாரம் கேட்டவுடனேயே எழுதவேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டது. ஆனாலும், திரையிசைக் கவிஞர்கள் ரொம்பத் திறமைசாலிகள்தான். காட்சிக்கேற்ற அர்த்தமும் வரணும், மீட்டர்லயும் உட்காரணும்.

கவிஞர் அவர்கள், 'போனால் போகட்டும் போடா' என்று எழுதினவுடன் மெல்லிசை மன்னர், ஏன் மரியாதைக் குறைவால்லாம் வார்த்தை போடறீங்க என்று கேட்டாராம். (யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க, போன்றவையும் இந்த லிஸ்டில் சேரும். இதேபோல், 'கட்டோடு குழலாட ஆட' பாடலில், 'பச்சரிசிப் பல்லாட' என்ற வார்த்தைகள் வரும். இதைப் பிற்பாடு கவிஞர், மற்றொருவர் சுட்டிக்காண்பித்தபோது, அர்த்தம் தவறுதான் என்று ஒத்துக்கொண்டாராம். 1966ல் ஈவெரா சம்பத் தொடங்கிய தமிழ் தேசியக் கட்சியிலிருந்து, காமராஜருடன் (காங்கிரஸ்) சேர்ந்துவிட எண்ணி, 'அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி.. சேரும் நாள் பார்க்கச் சொல்லடி' என்று ஒரு படப் பாடலில் எழுதினாராம். (கதைக்கும் பொருத்தம்.. ஏனென்றால் முருகனை வணங்கிப்பாடும் பாடல். காமராஜரின் அம்மாவின் பெயர் சிவகாமி). அதேபோல் இன்னொரு பாடலில் 'நாளைமுதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்' என்று எழுதினவுடன், மெல்லிசை மன்னர், அது என்ன 'நாளை' என்று எழுதுகிறீர்கள், இன்று என்று வராதா என்றபோது, தவறு செய்கிறவர்கள் யாரும், இன்றிலிருந்து நிறுத்துகிறேன் என்று சொல்ல மாட்டார்கள், நாளையிலிருந்துதான் என்று சொல்லுவார்கள் என்றாராம். இதையெல்லாம் படித்த ஞாபகம் வந்துவிட்டது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!