சனி, 26 நவம்பர், 2016

கேரளாவில் மருத்துவர்களும் செவிலியர்களும்.....1)  வீட்டுக்கே சென்று கனிவான சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் - கேரளத்தில்.  தமிழகத்திலும் வரவிருக்கும் ‘பாலியேட்டீவ்’ சிகிச்சை.
 

 2)  இளைஞர்களின் லட்சியமான ஐஏஎஸ் கனவை நனவாக்க இலவசப் பயிற்சி அளித்து, போட் டித் தேர்வுகளை எதிர்கொள்ள வழிகாட்டி வருகிறார் கோவையைச் சேர்ந்த அரசுக் கல்லூரி பேராசிரியர் பி.கனகராஜ்.
 
 3)  அருகில் இருந்து கற்பிப்பவர் ஆசிரியர். தான் இல்லாதபோதும் கற்றலை நிகழ்த்துபவர் சிறந்த ஆசிரியர்.  அன்பாசிரியர் கலைவாணி.
 
 4)  இவரல்லவோ இந்தியக்குடிமகன்?  தன்னிடமிருந்த 1.5 லட்சம் மதிப்புள்ள 50, 100 ரூபாய் நோட்டுகளை மக்களுக்கு விநியோகிக்க வசதியாக வங்கியில் செலுத்திய மொராதாபாத் வியாபாரி அவ்திஷ்குமார் குப்தா.


5) 
உடுமலையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கு.மாதப்ப சுப்பிரமணியம், தொடர்ந்து 13 ஆண்டுகளாக ஆதரவற்றோருக்கு தினமும் இலவசமாக மதிய உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


திருப்பூர் மாவட்டம் உடுமலை கிரீன்பார்க் லே-அவுட் பகுதியில் சக்தி விநாயகர் கோயில் உள்ளது. பொதுப்பணித் துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்த  என்பவர், கடந்த 2003-ல் ஓய்வு பெற்றார்...

6)  தன் வேலையை விட்டு பொதுமக்களுக்கு அவர்களுடைய கஷ்டத்தில் உதவிய பரணிகுமார். பட்டதாரி. குடும்பஸ்தர். பல்பொருள் கடை வைத்து நடத்தி வருகிறார். சமூக மனிதநேய சங்கத்தின் நிர்வாகி.(நன்றி LK)

7)  பாராட்டப்பபடவேண்டியவர் திரு  வைத்தீஸ்வர பிரபு.  பாராட்டுவோம். (நன்றி கரந்தை ஜெயக்குமார்)
8)  விருது பெரும் பத்திரிகையாளர் மாலினி சுப்பிரமணியம் அவர்களுக்கு பாராட்டுகள்.
9) பாலக்காடு நகருக்கு வெளியே கொழிஞ்சாம்பாறையை அடுத்து இருக்கிறது வடகரப்பதி கிராமப் பஞ்சாயத்து. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் முன்னுதாரணமாகத் திகழ்கிறது வடகரப்பதி.

10)  "பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற நாள் முதலாக நாடு முழுவதும் பொது மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகள் முன் நீண்ட வரிசையில் காத்திருந்தபோது, இந்த கிராம மக்கள் மட்டும் அதைப் பற்றி துளியும் அலட்டிக்கொள்ளவில்லை..."  குஜராத்தின் டிஜிட்டல் கிராமம்.14 கருத்துகள்:

 1. Make an attempt to start a daily for publishing only Positive news and about the people who observe this rare quality in their day today life. and also a 10 minute programme in the morning programme of television channels without any fradulent,false,mind distracting advertisements.immediately with the assistance from like minded people. to reach the school children and the public. My advance wishes for your success.
  My humble prayers to GOD to make this venture possible.
  TR Pattabiraman

  பதிலளிநீக்கு
 2. “எப்படி துணிந்து இறங்கு கிறீர்கள்?” என்று உரக்கக் கத்தி னேன்.

  பாதாளத்தில் இருந்து பதில் வந்தது, “வேற நிவரிட்டில்ல, ஜீவிக்க வேணுமே...” உழைத்துச் சாப்பிடுகிறார்கள் மக்கள்!//

  உழைத்துச் சாப்பிடும் மனிதர்களை வணங்க வேண்டும்.

  //‘‘பணத் தட்டுப்பாடு நாடு முழுவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. ஆனால் எங்களுக்கு அந்த கவலை இல்லை. மொபைல் எஸ்எம்எஸ் மூலம் எளிதாக பணப் பரிவர்த்தனை செய்கிறோம். நுகர்வோரும் சரி, பொருளை விற்கும் வணிகர்களும் சரி, இதை முழுமையாக பின்பற்றுகிறார்கள். இதனால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை’’ என்றார்.//
  டிஜிட்டல் கிராமம் போல் எல்லா இடங்களிலும் இருந்தால் நல்லதுதான்.

  திரு. வைத்திஸ்வரபிரபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. டிஜிட்டல் கிராமம் நிஜமாகவே பாராட்டத் தக்கது . நான் வங்கியில் வேலை பார்த்திருந்தாலும் கூட டெபிட் கார்ட் நேரில் தான் உபயோகப் படுத்துகிறேன் தவிர ஆன்லயனில் உபயோகப் படுத்த ரொம்பவே யோசிக்கிறேன் மொபைல் பேங்கிங் அறவே கிடையாது

  பதிலளிநீக்கு
 4. பயன்தரும் முன் முயற்சி செய்தோரை
  பயன்பெறும் பயனர் ஒருபோதும் மறவார்
  மறவாது புதிய முகங்களும் முயன்றால்
  இறந்தும் வாழ்வோம் நன்மை செய்தமைக்கே!

  பதிலளிநீக்கு
 5. நல்ல செய்திகள் கண்ணில் பட வைக்கும் எங்கள் ப்ளாகிற்கு மிக மிக நன்றி. முக்கியமாக பாலியேடிவ் கேர்.

  பதிலளிநீக்கு
 6. பாசிடிவ் விஷயங்களைச் செயல் படுத்துவோர் வாழ்க.

  பதிலளிநீக்கு
 7. அட! டிஜிட்டல் கிராமம்!! ஆனால் என்னதான் சொன்னாலும் ஆன்லைன் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது

  அனைத்துச்செய்திகளையும் வாசித்தாயிற்று. அனைத்தும் அருமை..விரிவாக எழுத முடியவில்லை... நிறைய இருக்கிறதே வாசிக்க!!!

  கீதா: இதுக்குத்தான் பள்ளிக் கூடத்துக்கு லீவு போடக் கூடாதுனு சொல்றாங்களோ!!! ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 8. நாலு, ஐந்து, பத்து படிச்சது தான். மற்றவற்றிற்கு வாழ்த்துகள்.

  //ஊழியராக பணிபுரிந்த என்பவர், கடந்த 2003-ல் ஓய்வு //

  திருத்துங்க! :)

  பதிலளிநீக்கு
 9. மொராதாபாத் வியாபாரி அவ்திஷ்குமார் குப்தா அவர்கள் தான் இன்றைய No.1 +++

  பதிலளிநீக்கு
 10. #‘ஆரோக்கியா கேரளம் பாலியேட்டீவ் கேர் புராஜெக்ட்’#
  அம்மா தமிழகம் பாலியேட்டீவ் கேர் புராஜெக்ட் என்று கூட பெயர் வைத்துக் கொள்ளட்டும்,நம் மாநில அரசும் இத்திட்டத்தை செயல் படுத்தலாமே :)

  பதிலளிநீக்கு
 11. நல்ல தகவல்கள்...
  அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
  டிஜிட்டல் கிராமம் சூப்பர்ல...

  பதிலளிநீக்கு
 12. அருமையான செய்திகள்! அறியக்கொடுத்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!