சென்ற வாரக் கேள்விகள் முதல் இரண்டிற்கும் சரியான பதில்களைக் கூறி, நம் பாராட்டுகளைப் பெறுபவர், மிடில் கிளாஸ் மாதவி.
மூன்றாவது கேள்விக்கு பதில், எனக்கு அப்போதும் தெரியாது, இப்போதும் தெரியாது. நம்ப சினிமா டயரி வாசகர் யாராவது சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.
முகமது பின் துக்ளக் சில அரசியல் காரணங்களால் சிலநாட்கள் மட்டுமே திரையிடப்பட்டது என்பது உண்மைதான். ஆனால், புரசைவாக்கம் ராக்சி தியேட்டரில், தொடர்ச்சியாக பல ஞாயிற்றுக்கிழமைகளில் திரையிட்டனர். நான் அங்கு அந்தப் படத்தை, மூன்று வாரங்கள் தொடர்ந்து பார்த்தேன்.
என்னுடைய அண்ணனும், சக ஆசிரியருமான திரு யக்யராமன், முன்பு ஒருமுறை, 'உலகம்' என்ற படமோ அல்லது 'உலகம் பலவிதம் ' என்ற படமோ ஏதோ ஒன்று மூன்று நாட்கள் மட்டுமே ஓடியது என்று கூறக் கேட்டிருக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. அவர் எப்போதாவது இந்தப் பக்கம் (!) வந்தால் நம் சந்தேகத்தைத் தீர்த்துவைப்பார் என்று நினைக்கின்றேன்.
=================================
இந்த வாரக் கேள்விகள் :
1 ) அடுத்து வருவது என்ன?
மணி, ஓசை, -----------
2) What comes next?
A to Z, ----------------
3) ஏ பி நாகராஜன் இயக்கி, சிவாஜி நடித்த கலர்ப்படங்களில், டி எம் சவுந்தரராஜன் ஒரு பாடல் கூடப் பாடாத படம் எது?
மூன்றாவது கேள்விக்கு விடை தில்லானா மோகனாம்பாள். இசை வழிந்தோடும் அந்தப் படத்தில் மொத்தமே மூன்று பாடல்கள்தான். 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' பாடலையும், 'நலந்தானா' பாடலையும் பி.சுசீலா பாடியிருப்பார். மற்றொரு பாடல் 'பாண்டியன் நானிருக்க' என்னும் பாடல். அதை பாடியது யார் என்று தெரியவில்லை. நிச்சயமாக டி.எம்.எஸ். இல்லை.
பதிலளிநீக்கு1. மணி, ஓசை, கேட்டு
பதிலளிநீக்கு2. சேவை(service)
2) -∞ to ∞
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குபோட்டி பக்கம் வருவதேயில்லை. ஆனால் ரசிப்பேன். நன்றி.
பதிலளிநீக்குரைட்டு...!
பதிலளிநீக்குஇது என்ன புது மாதிரிப் போட்டி. அஹா இப்பிடியும் இடுகை போடலாமா. நானும் ட்ரை பண்றேன் :) ஹாஹாஹா
பதிலளிநீக்கு2. I have two answers:(i) Alpha to Omega, (ii) everything
பதிலளிநீக்கு(2) பொதுவாக A-Z, 0-9 என்றுதான் வரும்.
பதிலளிநீக்கு(1) மணி, ஓசை - எனக்கு ஒரு சந்தேகம்... இது சரஸ்வதி சபதத்தில் சிவாஜிக்குப் பேச்சு வரும் சமயம் நிறைய வார்த்தைகள் சொல்லிப்பார்ப்பார். அதுல இருந்து இதை எடுத்திருக்கிறாரோ என்று. 'மணி ஓசை கேட்டு எழுந்து' என்ற பாடலைவைத்து இந்தக் கேள்வி இருக்காது. 'மணி ஓசை கல கல கலவென...'ந்னு ஒரு பாட்டு இருக்கு.
ம் ...
பதிலளிநீக்குஹூம், நான் பார்க்கிறதுக்குள்ளே எல்லோரும் வந்து சொல்லிட்டுப் போயிருக்காங்க. மணி, ஓசை னா அடுத்து வருவது நம்ம ஆனையார் தான். கடைசிக் கேள்விக்குப் பதில் சினிமா மன்னர்கள், மன்னிகள் தான் சொல்லணும். :)
பதிலளிநீக்கும்ம்ம்ம்.... நடத்துங்க!!!!!
பதிலளிநீக்குமணி, ஓசை, யானை
பதிலளிநீக்குZ to A
Thanks for compliments
பதிலளிநீக்குa to z, "on" amazon -Babu
பதிலளிநீக்கு