வியாழன், 12 ஜனவரி, 2017

ஜனவரி எதிர்பார்ப்புகள் 2 : சக பதிவர்களின் கருத்துகள்

     ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்? 

     இந்தக் கேள்வியை நம்முடைய பதிவுலகத் தோழர்களிடம் கேட்டபோது அவர்களிடமிருந்து வந்த கருத்துகள்...  இந்தப் பகுதிக்கு மேலும் சில நண்பர்களிடமிருந்து வந்திருக்கும் கருத்துகள் தொடர்ந்து அவ்வப்போது இடம்பெறும்.  முதலில் வந்த பதில் முதலில் என்கிற வகையில் இந்த வாரம் மேலும் இரண்டு பதிவர்களின் கருத்துகள்.

====================================================  
திரு ஶ்ரீராம்,


என் பதில் உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். 


உண்மை தான்,  எதிர்பாரா மாற்றங்கள் நிறைய ஏற்பட்டிருக்கின்றன.
எனக்கு யாருடைய ஆட்சியும் திருப்தி தரவில்லை. நேர்மையாய் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று நினைக்கும் கட்சித் தலைமை இல்லாத வரை, யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒன்று தான். உச்சி வெயிலில் தார் ரோட்டில் வெறுங்காலோடு நடக்கும் போது, சூடு தாங்காமல் கால்களுக்கு மாற்றி மாற்றி சற்று ஓய்வு கொடுப்பது போல கட்சிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அவ்வளவே! 

இதையெல்லாம் தாண்டி ஜெயலலிதாவை ஒரு இரும்பு மனுஷியாய் எனக்குப் பிடிக்கும். அவரது பல நடவடிக்கைகளை நான் ரசித்திருக்கிறேன்.


மத்தியில் இருக்கும் ஆட்சி மீது கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. Demonitisation னில் சற்றே அசௌகரியம் ஏற்பட்டாலும், பொறுத்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. அது பலன் கொடுத்திருக்கிறதா இல்லையா என்ற விவாதத்தைத் தாண்டி மோடி ஏதோ செய்கிறார்  என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.


இலக்கியத்தைப் பொறுத்தவரை ஒன்று ஒழுங்காய் எழுதத் தெரிய வேண்டும் அல்லது  சத்தமாய் சண்டையிடவோ, குறை சொல்லவோ தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதன் வளர்ச்சி சத்தத்தின் volume ஐப் பொறுத்தது.


அறிவியல்  வளர்ச்சிகளைப் பார்த்தால் பயம் தோன்றுகிறது. உறவுகளுக்கான இடைவெளி அதிகமாவதை உணர முடிகிறது. திருமணத்திற்கு சென்றால் கூட பிள்ளைகள் ஆளுக்கொரு கைபேசியுடன் தனியாய் அமர்ந்து விடுகிறார்கள்.  வர்தாப் புயல் அடித்த இரவு தான் நெடுநாட்கள் கழித்து, தொ.கா, தொ.பே வின் ஊடுறுவலில்லாமல், தீப வெளிச்சத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசினோம். மின்விசிறியின்றி  தூங்கினோம். சில நேரம் அறிவியல் வளர்ச்சி, என்னை வயதானவளாய் உணரச் செய்கிறது.


கலை இதை நேரமிருக்கும் போது ரசிக்கிறேன். மண்டையை இடித்தால் வெறுக்கிறேன். அவசர ஓட்டத்தில் குடுமியைப் பிடித்து  கவனத்தை இழுக்கும் படைப்புகளை வியக்கிறேன். அவற்றிடம் எனக்குள்ள உறவு அவ்வளவு தான்.


இலக்கியம் , கலை, அறிவியல் , அரசியல், இவற்றில் ஏற்படும் மாற்றங்களை எவ்வித எதிர்பார்ப்புமின்றி ஏற்றுக்கொள்ள எதிர்கொள்ள பழகிக்கொண்டேன். அதனால் அதன் வளர்ச்சியைக் கணிப்பதோ, அது இப்படி இருக்க வேண்டும் என்று விரும்புவதோ இல்லை!


இந்த பதில்களை தட்டச்சும் போது self centered person னாய் உணர்கிறேன்.  முதலில் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் 😊


என்னால் இயன்றவரை  பதிலளித்திருக்கிறேன்.  மிக்க நன்றி!- ஹேமா


=============================================================
ஒரு வருடத்தில் அதாவது 2018 ஜனவரியில் கலை, இலக்கியம் பொருளாதாரம், விஞ்ஞானம், அரசியலில் என்னென்ன மாற்றங்கள் முன்னேற்றங்கள் வரும் என்று நம்புகிறீர்கள், விரும்புகிறீர்கள்?

------------------------------------------------------------------------------------------------------------------------------------

மாற்றங்கள் இன்றியமையாதவை கண்ணுக்கு தெரியாத மரபணுக்களில் ஏற்படும் சில மாற்றங்களையே சிலநேரம் தாங்க முடியாமற்போகிறது ..ஆனால் சமீபத்து மாற்றங்கள் குறிப்பாக அரசியல் விஷயத்தில் நல்லதும் கெட்டதும் போட்டிபோட்டு நடக்கின்றன ..திடீர் மாற்றங்களும் பிறழ்வுகளும் சாத்தியம் என்ற நம்பிக்கையில் எனது மனதுக்கு பட்டவற்றை இங்கு கூறியுள்ளேன் .

ஆரோக்கியமான அரசியல் சூழல் 2018 இல் உருவாகும் ..
எம் .ஜி .ஆர் அவர்களின் மறைவில் நான் காணத்துடித்தது கலைஞர் இறுதி ஊர்வலத்தில் பங்கெடுப்பாரா அங்கு அமர்வாரா என்றெல்லாம் தொலைக்காட்சியை உற்று பார்த்து கொண்டிருந்தேன் அவர் சென்றதாக கேள்விப்பட்டேன் ஆனால் இப்போ அம்மாவின் உடலுக்கு ஸ்டாலின்  அவர்கள் இறுதி மரியாதை செலுத்தியது மற்றும் கலைஞர் அவர்களை எல்லா கட்சியினரும் நலம் விசாரிப்பது என கண்டதில் ஒரு ஆரோக்கியமான சூழல் கண் முன்னே தெரிகிறது ..இனி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொண்டுள்ளார்கள்  ..
ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தாத ஒரு அரசியல் சூழல் உருவாகும் 2018 இல் ..இங்கிலாந்தில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி தலைவர்கள் அருகருகே அமர்ந்து புன்னகைக்கும் படங்களை காணும்போதெல்லாம் எப்போ நம் நாட்டில் இப்படி ஒரு காட்சி காண்பேன் என்று நினைப்பேன் 
நிச்சயம் 2018 அல்லது வரும் காலம் விரைவில் அதற்கான வழி வகுக்கும் .என்று நம்புகிறேன் .

அனைத்து கட்சியினரும் இனிஅடுத்த தேர்தலுக்காவது  வேட்பாளர்களை தெரிவு செய்யும்போது இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரம் படித்தவர்களை குறைந்தது இளங்கலை அரசியல்  /பொருளாதாரம் ..அரியர்ஸ் வைக்காம படித்தவர்களை  தேர்ந்தெடுக்க வேண்டும் ..

அரசியல் தலைவர்கள் தலைவிகள் அணியும் ஸ்லிப்பரில் மின்சார ஷாக் அடிக்கும் FACILITY வைக்கணும் அப்போதான் காலில் விழுந்து கும்பிட்டா டபார்னு ஷாக்கடிச்சி இனி மீண்டும் விழமாட்டாங்க :)  )

பொருளாதாரம் ..
=================
 நாட்டில் கருப்பு பணமெல்லாம் பிடிபட்டு விடும் என்பது நம்பிக்கை ..அந்த பணத்தை வீடில்லாதோருக்கு இருப்பிடம் இல்லாதோருக்கு அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என்பது எனது விருப்பம் .கொஞ்சம் அளவுக்கதிகமான ஆசை மற்றும் நம்பிக்கை 2018 இலாவது பொருள் ஆதாரம் அனைவருக்கும் சமமாக கிட்டிஏழைகள்  சாலையோரம் குளிரில் படுத்துறங்கும் காட்சிகளை கனவிலும் காணக்கூடாது என்பது எனது நம்பிக்கைமற்றும் விருப்பம் 


..இதெல்லாம் ஒரே வருஷத்தில் சாத்தியமா என்றெல்லாம் கேட்கக்கூடாது நான் முதலில் சொன்னபடி Mutations எப்பவும் ஏற்பட சாத்தியமுண்டு ..

விஞ்ஞானம் 
=============

சில விஞ்ஞான வளர்ச்சிகள் பயமுறுத்துகிறது ..CRYONICS பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் .இங்கு 14 வயது பெண் கோர்ட் கேஸ் போட்டு இறக்குமுன் வெற்றி பெற்று இப்போ அமெரிக்காவில் அவளுடல் உறைய வைக்கபட்டிருக்கு .அவள் இறந்தது தீர்க்க முடியா புற்றுநோயால் ..அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தால் உறையவைக்கப்பட்டுள்ள உடல் மீண்டும் THAW செய்யப்பட்டு மருந்துகளால் உயிர் பெற கூடும் என்பது அப்பெண்ணின் மற்றும் சிலரின் நம்பிக்கை ..எனக்கு அவ்ளோ ஆசை எல்லாமில்லை நோயற்ற வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்க்கை அனைவருக்கும் கிடைக்க அனைவருக்கும் ஹெல்த் கார்ட் மற்றும் மருத்துவ வசதி இலவசமாக கிடைக்கும் என்பது அளவுக்கதிகமான பேராசை நம்பிக்கை மற்றும் விருப்பம் ..


..கலை ..இலக்கியம் 
=====================
பல வருட வெளிநாட்டு வாழ்க்கையில் நான் இழந்தது வாசிப்பு ..அதனால் இலக்கியம் கொஞ்சம் என்னை  விட்டு விலகியே நிற்கிறது ..எனக்கு பாரதியார் கவிதைகளும் ஜெயகாந்தனின் புத்தகங்களும் மாபெரும் இலக்கியங்கள்..இலக்கியம் என்பது அடிமட்ட வாழ்வியலை தொட்டு செல்ல வேண்டும் அநீதிக்கு எதிராக நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும் .எல்லா காலத்துக்கும் பொருத்தவும் வேண்டும் இரட்டை அர்த்தம் தொனிக்கும் எழுத்துக்களை பாராட்டி அதற்கென ஜால்ரா  அடிக்கும் இலக்கிய விசிலடிச்சான்  வியாதிகள் ஒழிந்து நல்ல காலத்தால் அழியா இலக்கியங்களும் திரைப்படங்களும் வெளிவர வேண்டும் என்பது நம்பிக்கையும் விருப்பமும் ..
..

பொதுவாக 2018 இல் எல்லாருக்கும் எல்லாம் சமம் எனும் நிலை வர வேண்டும் ..எதற்கும் காத்திருக்கும் நிலை ஏற்படாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட வேண்டும் அதற்கு அன்றாடவாழ்க்கை தரம் உயர வேண்டும்    தடையற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் அனைவருக்கும் மருத்துவ வசதி இலவசமாக்கப்பட வேண்டும் ..


==================================================================

62 கருத்துகள்:

 1. சகோதரிகளின் ஒவ்வொரு கருத்துக்களையும் ஒப்பிட்டு பார்த்து(ம்) ரசித்தேன்...

  பதிலளிநீக்கு
 2. 2018 தை பிறந்தால்...
  அறிஞர்களின் எதிர்வு கூறலை
  கருத்திற்கொள்வோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிJeevalingam Yarlpavanan Kasirajalingam

   நீக்கு
 3. ஹேமா அவர்களின் கருத்து மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். தெளிவாக...அவர் சொல்லியிருப்பது படி விஞ்ஞானம் பயமுறுத்தத்தான் செய்கிறது. ஏஞ்சல் அவர்களும் அவர்களுடைய நடையில் சுவாரசியமாகச் சொல்லியிருக்கிறார். பேராசைகள்தான்....நமக்கும்தானே!!

  கீதா: ஒருவருடைய பெர்சனல் ஸ்பேஸ் குறைந்துவருகிறது. மனைவி/கணவன் எங்கிருக்கிறார் எந்தத் தெருவில் இருக்கிறார் என்பதைக் கூட அறிய உதவும் ஆப் இருக்கிறது....நண்பர் அழைக்கும் போது நமக்குப் போக முடியாத சூழல் என்றால் நான் இப்போது இங்கிருக்கிறேன் என்று பொய் சொல்ல முடியாது....ஆனால் இதில் நன்மையும் இருப்பதாகத் தோன்றுகிறது...உண்மையைப் பேசு என்ற அறிவுறுத்தல்???? என்றாலும் நாம் இணையத்தில் இருக்கும் போது எங்கோ யாரோ நம்மைக் கண் காணிக்கிறார்கள் என்பது தோன்றுகிறது. இணையத்தில் எதுவுமே செக்யூர்ட் இல்லை என்பது உறுதி! எனவே நமது பெர்சனல் ஸ்பேஸ் சுருங்கிவிட்டது!!

  இருவரின் கருத்துகளையும் ரசித்தேன்..ஏஞ்சலின் இந்தக் கருத்திற்கு.//.அரசியல் தலைவர்கள் தலைவிகள் அணியும் ஸ்லிப்பரில் மின்சார ஷாக் அடிக்கும் FACILITY வைக்கணும் அப்போதான் காலில் விழுந்து கும்பிட்டா டபார்னு ஷாக்கடிச்சி இனி மீண்டும் விழமாட்டாங்க :) )// அஹஹஹஹ்ஹ் சிரித்துவிட்டேன்

  அருமை

  பதிலளிநீக்கு
 4. //வர்தாப் புயல் அடித்த இரவு தான் நெடுநாட்கள் கழித்து, தொ.கா, தொ.பே. யின் ஊடுறுவலில்லாமல், தீப வெளிச்சத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாய் அமர்ந்து பேசினோம். மின்விசிறியின்றி தூங்கினோம்.//

  துன்பத்திலும் ஓர் இன்பம் ..... மிக அழகாக அனுபவித்து சொல்லியுள்ளார்கள்.

  பதிலளிநீக்கு
 5. //அரசியல் தலைவர்கள் தலைவிகள் அணியும் ஸ்லிப்பரில் மின்சார ஷாக் அடிக்கும் FACILITY வைக்கணும் அப்போதான் காலில் விழுந்து கும்பிட்டா டபார்னு ஷாக்கடிச்சி இனி மீண்டும் விழமாட்டாங்க :)//

  நல்லதொரு நகைச்சுவை .... ரஸித்தேன் .... அதை அணியும் நபருக்கு ஷாக் ஏதும் அடிக்காமல் அது வடிவமைக்கப்பட வேண்டும்.

  //பொதுவாக 2018 இல் எல்லாருக்கும் எல்லாம் சமம் எனும் நிலை வர வேண்டும் ..எதற்கும் காத்திருக்கும் நிலை ஏற்படாமல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்ட வேண்டும் அதற்கு அன்றாடவாழ்க்கை தரம் உயர வேண்டும். தடையற்ற மின்சாரம் கிடைக்க வேண்டும் அனைவருக்கும் மருத்துவ வசதி இலவசமாக்கப்பட வேண்டும் ..//

  நல்லதொரு எதிர்பார்ப்பு ! வாழ்க !! பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 6. எதிர்பார்ப்புகள் நிகழாவிட்டால் மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ ஏமாற்றம் நிச்சயம்

  பதிலளிநீக்கு
 7. மிக்க நன்றி தனபாலன் சகோ .நம் நாட்டுடன் பெரிதாக தொடர்பில்லாமல் போய் விட்டது ..அனைத்து செய்திகளையும் இணையம் மூலமாகவே அறிகிறேன் அங்கிருந்தால் இன்னும் ஆராய்ச்சி செய்து எனது கருத்துக்களை கூறியிருக்கலாம் என்று நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 8. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் சகோதரர் ஜீவலிங்கம்

  பதிலளிநீக்கு
 9. @ killerjee annaa வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜீ அண்ணா ..நாமளாவது வெளிநாட்டில் இருக்கோம் அன்றாடம் இந்த காலில் விழும் காட்சியை காணும் நம்ம நாட்டு அப்பாவி ஜனங்களை நினைச்சா பாவமா இருக்கு ..இந்த காட்சியெல்லாம் எனக்கு காண தமிழ் டிவி கனெக்க்ஷன் கூட இல்லை இங்க எங்க வீட்டில்

  பதிலளிநீக்கு
 10. @கீதா அன்ட் துளசி அண்ணா .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..
  உண்மைதான் ஹேமா அவர்கள் சொன்னது சொன்னது மிக சரி ..எனது தொலைபேசியில் மகளின் வயலின் டீச்சர் நம்பர் இருக்கு அவரது fb id எனக்கு தெரியாது அவர் fbyil இருக்கற என்பதும் எனக்கு தெரியாது ஆனால் யூ மே know திஸ் பெர்சன் என காட்டுகிறதே முகப்புத்தகம் எல்லா திசையிலிருந்து கண்காணிக்கப்படுகிறோம் என்பது மறுக்கமுடியா உண்மை .அமேசானிலோ ebay இலோ ஒரு பொருளை வாங்கினாலும் அதையம் காட்டுகிறது கணினி ..வரவேற்பறை வரைக்கும் வந்த சிசிடிவி அதையும் தாண்டி வருமோன்னும் பயமா இருக்கு ..ரொம்ப வெறுப்போடதான் அந்த மின்சார மேட்டர் எழுதினேன் ..லட்சம் பெரியார் வந்தாலும் காலை கும்பிடும் இவர்கள் மாற மாட்டார்கள் :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி Angelin.உங்களுடைய கருத்துகள் சுவாரஸ்யமாய் இருக்கின்றன.

   நீக்கு
 11. @ Gopu annaa வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி கோபு அண்ணா ..பல வருட வெளிநாட்டு வாழ்க்கையில் மின்சார தடை என்பதே நான் பார்க்கவில்லை இங்கே ..எதையும் உடனே பெற்றுக்கொள்ள தைரியமாக பேச எங்களுக்கு இங்கே வசதியுண்டு ..கஷ்டப்பட்டாலும் உதவ நல்ல மனங்களுமுண்டு ..வெளிநாட்டை போல நம் நாட்டை மாற்றணும் என்று அரசியல்வாதிகள் கூறும்போது எனக்கும் ஆசைதான் நான் சந்தோஷமா இருக்கேன் என் நாட்டு மக்களும் குறைந்த பட்சம் அத்தியாவசிய தேவைகளுக்காவது கையேந்தாமல் நிற்கணும் என்பது எனது ஆசை ..அனைவருக்கும் பாதுகாப்பு எல்லாவிஷயத்திலும் கிடைக்கணும் என்பதே எனது பிரார்த்தனை ..

  பதிலளிநீக்கு
 12. @G.M.B ஐயா ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..எனது எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியது :) பேராசைதான் ஆனாலும் நம்பிக்கை பெரிது .. எல்லார் மனங்களிலும் மாற்றம் வரணும் அப்போதான் தூய தெளிவான மனதுடன் வாக்களித்து வருங்கால சந்ததிக்காவது நல்லதொரு வழி பிறக்கும் ..பாவம் நம் மக்கள் ஏமாற்றம் வேண்டாம் அவர்களுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டுட்டாங்க.எல்லாரும் நல்லா இருக்கணும் .ஒரே ஆண்டில் சாத்தியப்படாவிடிலும் கூடிய விரைவில் நடக்கணும்

  பதிலளிநீக்கு
 13. @ஹேமா ..HVL ..

  //சூடு தாங்காமல் கால்களுக்கு மாற்றி மாற்றி சற்று ஓய்வு கொடுப்பது போல கட்சிகளைத் தேர்ந்தெடுக்கிறோம். அவ்வளவே! //

  மிக அருமையா சொன்னீங்க ..கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதே அப்பட்டமான கன்னத்தில் அறையும் உண்மை ....

  நாங்கள் எங்கள் குடும்பத்தில் இங்கே வெளிநாட்டில் பேமிலி டைம் என்று வைத்திருக்கோம் ..சனிக்கிழமைகளில் நாங்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து நலலதொரு மலையாளப்படத்தை தேர்வுசெய்து போட்டு பார்ப்போம் .லாப்டாப்பிலிருந்து கனெக்ட் செய்வோம் ..
  இங்கே ஒரு கெட் டு கெதர் சென்றோம் அதில் சின்ன பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து MONOPOLY விளாடிக்கொண்டிருந்தனர் ஆனால் அவர்களின் பெற்றோர் அனைவரும் போனும் கையுமாக :)
  இங்கே ஒரு நாள் கரண்ட் போனாலும் இந்த பெற்றோருக்கு தலை வெடிக்கும் அவ்வளவு மூழ்கியிருந்தாக போனில்

  பதிலளிநீக்கு
 14. எனக்கு மனதில் பட்டதையெல்லாம் வளவளன்னு பெரிய கட்டுரை ரேஞ்சுக்கு பதிவாகவும் பின்னூட்டமாகவும் எழுதி தள்ள உதவி செய்த எங்கள் பிளாகிற்கு நன்றீஸ் :)

  பதிலளிநீக்கு
 15. எழுத்துக்களுக்கு வாழ்த்துக்கள் ஹேமா.
  ///இந்த பதில்களை தட்டச்சும் போது self centered person னாய் உணர்கிறேன். முதலில் என்னை மாற்றிக் கொள்ள வேண்டும் 😊
  //// மிக அருமையான வாக்கியம், நானும் இதையேதான் நினைப்பேன்... எமக்கு எது அடுத்தவரிடம் பிடிக்கவில்லையோ, அதை நாமும் செய்யக்கூடாது, சிலர் எப்பவும் அடுத்தவரையே குறைகூறிக்கொண்டிருப்பார்கள் ஆனா அப்பிழையை தாம் சிம்பிளாக விடுவார்கள்... நம்மை திருத்தினால் உலகம் தானாக திருந்தும்.

  பதிலளிநீக்கு
 16. ///Angelin said...
  எனக்கு மனதில் பட்டதையெல்லாம் வளவளன்னு பெரிய கட்டுரை ரேஞ்சுக்கு பதிவாகவும் பின்னூட்டமாகவும் எழுதி தள்ள உதவி செய்த எங்கள் பிளாகிற்கு நன்றீஸ் :)//// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அடுத்த தமிழ்நாட்டு முதலமைச்சர் நீங்கதான் என தேம்ஸ் கரையில் பேசுகிறார்கள்....:).

  அரசியல் என்றாலே வாலைத்தூக்கிக்கொண்டு தலை தெறிக்க ஓடும் கூட்டத்தில:) முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்ன்.. பிடிக்கவே பிடிக்காது...

  பதிலளிநீக்கு
 17. நோஓஓஓஓஓஓஒ நான் இதை ஒத்துக்க மாட்டேன்ன், இது முந்திப் போட்ட ஃபோட்டோ:) இன்று எடுத்த அந்த குண்டுப் படம்தான் போடோணும்... இல்லையேல் இதோ தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்போறேன்ன்ன்.. ஃபயர் எஞ்சினுக்கு அடிங்கோ:).

  ///நிச்சயம் 2018 அல்லது வரும் காலம் விரைவில் அதற்கான வழி வகுக்கும் .என்று நம்புகிறேன் ./// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாளையே நம் கையில் இல்லை இதில 2018 பற்றி எல்லாம் மீன் குஞ்செல்லாம் பேசுது.. இதை என்னைப் படிக்க வச்சிட்டியே முருகா!!!... சரி சரி கோச்சுக்கக்கூடா :)

  பதிலளிநீக்கு
 18. ///அரசியல் தலைவர்கள் தலைவிகள் அணியும் ஸ்லிப்பரில் மின்சார ஷாக் அடிக்கும் FACILITY வைக்கணும் அப்போதான் காலில் விழுந்து கும்பிட்டா டபார்னு ஷாக்கடிச்சி இனி மீண்டும் விழமாட்டாங்க :) )///

  ஹா ஹா ஹா இதுதான் இண்டைக்கு டாப்பூஊ:).. முதல்ல அஞ்சுவைத் தூக்கி உள்ளே போட்டு கேள் வரகுக் கஞ்சி.. பால் விடாமல் கொடுங்கோ:)

  பதிலளிநீக்கு
 19. Angelin said...///நாட்டில் கருப்பு பணமெல்லாம் பிடிபட்டு விடும் என்பது நம்பிக்கை ..அந்த பணத்தை வீடில்லாதோருக்கு இருப்பிடம் இல்லாதோருக்கு அரசாங்கம் பயன்படுத்தவேண்டும் என்பது எனது விருப்பம்///

  ஹா ஹா ஹா ஏன் இப்பூடிப் புகையுது... இந்தாங்கோ மோர் குடிங்கோ, கறுப்புப் பணம் திரட்டவும் தெகிரியம் வேணும் தெரியுமோ:).

  பதிலளிநீக்கு
 20. @athiraa //போட்டு கேள் வரகுக் கஞ்சி.. // ஸ்ரீராம் பார்த்தார்னா 1000 முறை இம்போசிஷன் எழுத வைப்பார்

  இல்லைன்னா கசட தபற யரல வழள 100000 டைம்ஸ் சொல்ல வைப்பார்

  பதிலளிநீக்கு
 21. ஹா ஹா :) பூனைக்கு அரசியல் பிடிக்காதா ??
  எங்களுக்கு ஒருகாலத்தில் அரசியல் பேச தடை சின்ன வயதில் ..இப்போதான் கேள்வி கேக்க ஆளில்லை .
  .அடுத்த முதல்வரா ? ஆசை கொஞ்சமா யிருக்கே நானா இந்திய ப்ரைமினிஸ்டர் ஆகணும்னு நினைச்சிட்டிருக்கேன்
  ஒரு ப்ரைம் மினிஸ்டர் ஆகணும்னா உலக அறிவு வேணும் அதான் எல்லா பீல்டுலையும் நம்ம மீன் முத்திரை வச்சிட்டு போறேன்


  பதிலளிநீக்கு
 22. Angelin said..///பல வருட வெளிநாட்டு வாழ்க்கையில் நான் இழந்தது வாசிப்பு ..////
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதை நான் ஒத்துக்க மாட்டேன், நீங்க வாசிக்காமல் ஊரை சுத்திக்கொண்டு திரிஞ்சுபோட்டு, வாசிப்பை இழந்திட்டேன் எனக் குற்றம் சொல்லக்குடா, இப்போ போயிருந்து ஒரு மணிநேரம் வாசிச்சுப் போட்டு வாங்கோ... இல்லையெனில் எங்கு கண்டாலும் சங்கிலி அனுப்புவேன் கழுத்துக்கல்ல கைக்கு:)...

  ஹா ஹா ஹா நிறைய அலட்டிட்டேன், கொஞ்சூண்டு பயம்மாக்க்கிடக்கூஊஊஊஉ அதனால புறப்படுறேன், அஞ்சு உண்மையில நீங்க ஒரு ஜேனலிஸ்ட் போலவே பதில்கள் அளித்திருக்கிறீங்க வாழ்த்துக்கள், அஞ்சுவால இப்படியும் எழுதமுடியுமோ என ஆச்சரியமா இருக்கெனக்கு.

  ஆவ்வ்வ்வ்வ்வ் “எங்கள் புளொக்” ஆடுதேஎ... அஞ்சு லாண்டட்போல மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).

  பதிலளிநீக்கு
 23. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 24. ///Angelin said...
  @athiraa //போட்டு கேள் வரகுக் கஞ்சி.. // ஸ்ரீராம் பார்த்தார்னா 1000 முறை இம்போசிஷன் எழுத வைப்பார்

  இல்லைன்னா கசட தபற யரல வழள 100000 டைம்ஸ் சொல்ல வைப்பார்///

  ஹா ஹா ஹா ஹையோ ச்ச்சும்மா மேடையில ஏறி முழங்கிக்கொண்டிருந்த என்னை இப்பூடிக் கவிட்டுப்போட்டாவே... ஜமாளிப்போம்ம்ம்... :) அது பிரித்தானியாக் கேள்:) அதுக்கு இதுதான் ஸ்பெல்லிங்கு என குயின் அம்மம்மா அடிக்கடி சொல்லுவா:).. எனக்கு தமிழ் ல டி ஆக்கும்:).. ழ, ள எல்லாம் தூசுபோல எழுதிடுவேன்:)..

  ////போர்ராமை உங்களுக்கு நான் 12 கிலோ குறைச்சதில் கர்ர்ர் //// ஹா ஹா ஹா அது பொர்ர்ர்ர்ர்ர்ராமை:) நொட் போர் ஆமை:) எப்பூடி:).. ஹையோ இங்கு அரட்டை பண்ணினால் அடி விழுமோ தெரியேல்லை, என் வாயை அடக்கிட்டு ஓடிடுறேன்... தப்பிருந்தால் மன்னிச்சிடுங்கோ எல்லோரும்.

  பதிலளிநீக்கு
 25. உங்ககிட்ட 1 பவுண்ட் ட்ரங்க் முழுக்க இருக்குன்னு உளவுத்துறை தகவல் கிடைச்சுதே எனக்கு // BEFORE OCTOBER செலவு பண்ணாட்டி எல்லாம் கருப்பு பணமாகிடும் :)
  ..உங்களுக்கு நான் பேலியோல 12 கிலோ குறைச்சதில் பொர்ர்ர்ராமை குண்டு பூஸ் இங்க நிலநடுக்கத்துக்கு நீங்கதான் காரணம்

  பதிலளிநீக்கு
 26. பின்னூட்டமெல்லாம் ஆஞ்செலுக்கு மட்டுமா . ஹேமா ஏன் பதிலே சொல்வதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்ப தான் விஷயம் தெரிந்து வருகிறேன். அதனால் லேட்.

   நீக்கு
 27. ஏஞ்செல் ஆஞ்செல்லாக தட்டச்சாயிற்று

  பதிலளிநீக்கு
 28. இதை எல்லாம் குறித்து விபரமாக எழுதினால் அதுவே இரண்டு, மூன்று பதிவுகள் ஆகிவிடும். ஆகவே எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வதோடு நிறுத்திக்கணும்! :))))

  பதிலளிநீக்கு
 29. @நண்டு சார் வாழ்த்துக்களுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 30. @கீதா சாம்பசிவம் மேடம் ..:) வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி .. உண்மைதான் எனக்கே இன்னும் நாலு பக்க கட்டுரையை சுருக்கிட்டோமென்ற பீலிங்ஸ் :)

  நிறைய எழுத ஊற்று மாதிரி ஐடியாஸ் வந்துட்டே இருந்தது எனக்கு ..

  பதிலளிநீக்கு
 31. ஆதிராவா? அதிராவா? செம அரட்டை அடிக்கறீங்களேப்பா...நடத்துங்க..... கொண்டாடுங்க....

  பதிலளிநீக்கு
 32. இப்போது தான் இப்பக்கம் வந்தேன். அனைவரின் கருத்துகளுக்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 33. நல்ல கருத்துகள்......

  காலில் விழுபவர்களுக்கு மின்சாரத் தாக்குதல் - நல்ல ஆசை! :)

  பதிலளிநீக்கு
 34. ///ஸ்ரீராம். said...
  ஆதிராவா? அதிராவா? செம அரட்டை அடிக்கறீங்களேப்பா...நடத்துங்க..... கொண்டாடுங்க..../// அச்சச்சோ அது நெடில் அல்ல குடில்.. ஹையோ வெறி சொறி டங்கு ஸ்லிப் ஆச்ச்ச்ச்ச்:) அது குறில்.. அதிரா:). எனக்கு நிறைய எழுத வரும் ஆனா பயத்திலயே பாதி அடக்கிட்டேன்:) அடிக்கடி அஞ்சுவைக் கேட்பேன், பறவாயில்லையா பேசலாமா இங்கு என... ஆனா ஒண்ணு கலைச்சால்ல் ஓடித்தப்பிடுவேன் அஞ்சுவைக் கையில் பிடிச்சுக்கொண்டுதான் ஹா ஹா ஹா மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 35. ///ஸ்ரீராம். said...
  ஆதிராவா? அதிராவா? செம அரட்டை அடிக்கறீங்களேப்பா...நடத்துங்க..... கொண்டாடுங்க....//// அஞ்சூஊஊஊஊஉ ஓடிக் கம் பெர்மிஷன் கிராண்டட்:) இனி யாரும் ஏசமாட்டாங்க:))

  பதிலளிநீக்கு
 36. @ athira ..நோ!!! Not now ..நான் பாடம் படிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 37. Athira பாதி எழுதினதே இங்கே வார்த புயல் மாதிரி இருக்கு 😀

  பதிலளிநீக்கு
 38. @ venkat nagaraj :) மிக்க நன்றி ..adhu chinna aasai :)

  பதிலளிநீக்கு
 39. ///Angelin said...
  @ athira ..நோ!!! Not now ..நான் பாடம் படிக்கிறேன்//// ஹா ஹா ஹா சங்கிலி அனுப்புவேன் என்றதும் நல்லாப் பயந்திட்டாபோல:) வாசிங்க வாசிங்க... நான் இப்பவும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்திலயே நிக்கிறேன்ன்ன்:)

  பதிலளிநீக்கு
 40. @ஸ்ரீராம் நான் இங்கேதான் இருக்கேன் அதிரா கிட்ட சொல்லாதீங்க :)

  பதிலளிநீக்கு
 41. இருவரும் ரொம்ப அருமையாச் சொல்லியிருக்காங்க...
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 42. இரண்டு பேரின் ஆசைகளும் சிறப்பாக இருந்தன. நிறைவேேறட்டும்.

  பதிலளிநீக்கு
 43. @ சே.குமார்
  மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் சகோதரர்

  பதிலளிநீக்கு
 44. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 45. மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும் @ Bhanumathy Venkateswaran madam.

  பதிலளிநீக்கு
 46. அருமையான பதிவு க்கு மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 47. @ Asokan Kuppusamy.... மிக்க நன்றி வருகைக்கும் கருத்துக்கும்


  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!