2) மாற்றுத்திறனாளிகள் பேருந்து ஏறுவதிலிருந்து பொது இடங்களில் புழங்குவது வரை பலப்பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் இன்னல்களில் நாம் அறியாத ஒன்று அவர்களின் ஆடை அணியும் சிரமம். அதை நீக்க வந்திருக்கும் ஷாலினி விசாகன்.
3) தங்கள் கைகளே தங்களுக்குதவி. அரசை எதிர்பாராமல் தங்களுக்குத் தாங்களே பள்ளியைக் கட்டிக்கொண்ட கிராம மக்கள்.
4) தலைமை ஆசிரியரை வருடங்கள் பல கழித்தும் கௌரவித்த மாணவர்கள். அவர்கள் நினைவில் என்றும் இமயமாய் நிற்கும் கோ. பாஸ்கரன் .
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
தம 1
ஒவ்வொரு கிராமமும் இப்படி முன்னேறினால் சீக்கிரமே வல்லரசு ஆகிவிடலாம் :)
பதிலளிநீக்குஆசிரியர்களை போற்றுவோம் அருமை நண்பரே
பதிலளிநீக்குபிறருக்கு எடுத்துக் காட்டாக வாழும் ஷாலினி அவர்களுக்கு பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குஅனைவருக்கும் பாராட்டுகள்! ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் மிளிர்கிறார்கள்!!!
பதிலளிநீக்குகீதா: 1,3,4 எல்லோரையும் பாராட்டி போற்றினாலும் எனக்கு 2 வது பாசிட்டிவ் செய்தியான ஷாலினிக்கு எனது பூங்கொத்து. ஏனென்றால் மாற்றுத் திறனாளிகளுக்குப் பயன்படும் வகையில் உடை வடிவமைப்பைப் பற்றியும், சிறப்புக் குழந்தைகளுக்கான ஆடை வடிவமைப்பு பற்றியும் எனது தங்கை மகள் ஃபேஷன் டெக்னாலஜி படிப்பை முடிக்கும் தருவாயில் இருப்பதால் அவளிடம் சிறிது ஹின்ட் கொடுத்து மீண்டும் அதைப் பற்றி விரிவாகப் பேச நினைத்திருந்தேன். அத்துடன், எனது மாமியாரால் இப்போது புடவையோ, 9 கஜமோ கட்ட முடியாமல் மிகவும் கஷ்டப்படுகிறார். தவிர்க்க முடியாமல் அவர் கலந்து கொள்ள வேண்டிய க்டும்ப நிகழ்வுகளுக்கு அவரை நைட்டியிலேயெ தான் அழைத்துச் செல்கிறேன். அதனைப் புரிந்து கொள்ளாமல் அதனாலேயே குடும்பத்தில் பல விமர்சனங்கள், அரசியல், அவரை எப்படியாவது 9 கஜத்தைச் சுற்றி அழைத்துவரலாமே என்று முன்வைக்கப்படுகிறது. இதனையும் என் தங்கை பெண்ணிடம் பேச இருந்தேன். ஷாலினி சாதித்துவிட்டார்!!!! மிக்க நன்றி ஷாலினி மட்டுமல்ல தனது திருமண வாழ்க்கையையுமே இந்தச் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைத்துக் கொண்டமைக்கு ஹேட்ஸ் ஆஃப்!!! பாராட்டுகள் வாழ்த்துகள்!!!! மிக்க நன்றி எங்கள் ப்ளாக் இதை எடுத்து இங்கு பகிர்ந்தமைக்கு என் தங்கை பெண்ணிடமும் சொல்லுவேன்..
அருமையான தகவல்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.
அருமை
பதிலளிநீக்குஷாலினிக்கு வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். (தெய்வபெண் என்று நினைக்கிறேன்) கடவுள்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக அனுப்பி வைத்து இருக்கிறார்.
பதிலளிநீக்குஅனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் போற்றுவோம்.
அனைவருக்கும் பாராட்டுகள்.....
பதிலளிநீக்குநல்ல மனம் வாழ்க!
பாராட்டுகள்
பதிலளிநீக்குஷாலினியைப் பார்த்துப் பெரிதும் வியக்கிறேன்.
பதிலளிநீக்குவாழ்த்துகள் அனைவருக்கும்.
அனைத்து நல் உள்ளங்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்...
பதிலளிநீக்குவாழ்த்துவோம்...
தில்லையகத்து "கீதா" தன் மாமியார் குறித்துச் சொல்லி இருப்பதைப் படித்தேன். என் அம்மாவும் ஒன்பது கஜமே கட்டிப் பழக்கப்பட்டவர். புற்று நோய் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஒன்பது கஜம் என்ன புடைவையே பல சமயங்களிலும் கட்ட முடியவில்லை. வெளியில் செல்கையில் ஆறுகஜம் புடைவையைச் சுற்றி விட்டுக் கொண்டு வந்தோம். பின்னர் அதுவும் முடியாமல் இந்த நைட்டி எனப்படும் கவுன் தான். சமீபத்தில் இறந்த என் மாமியாருக்கும் அப்படியே தான்! யாரும் எதுவும் சொல்லவில்லை. கீதா அவர்களின் குடும்ப உறவுகள் விமரிசனத்தைக் குறித்துக் கவலைப்படாமல் இருக்க வேண்டும்.
பதிலளிநீக்குஎல்லாமே அருமை! எல்லோருமே சிறப்பான அறிமுகங்கள்!
பதிலளிநீக்குஷாலினிக்கு வாழ்த்துக்கள். ஸ்ரீராமின் இத்தகைய முயற்சிக்கு வாழ்த்துக்கள். இந்த சமூகத்தில் நல்லவர்களைக் காணுதல் என்பது சாத்தியமில்லாத ஒன்று. நல்லவைகள் செய்பவர்கள் சத்தமே இல்லாமல் செய்கிறார்கள். அவர்களை அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய காரியம்.
பதிலளிநீக்குகீழே இருக்கும் இணைப்பினைப் படித்துப் பாருங்கள். ஊனமுற்றவர்களின் மீது நடத்தப்படும் வன்முறையை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இது எனது அனுபவம். இதைப்போல இன்னும் எத்தனையோ இருக்கின்றன.
http://thangavelmanickadevar.blogspot.in/2016/09/blog-post_97.html