Friday, January 6, 2017

வெள்ளிக்கிழமை வீடியோ 170106 :: ஒரு காட்சி ; இரு பாடல்கள்     பாடல்களை மட்டும்தான் காப்பியடிக்க  வேண்டுமா என்ன?  சில காட்சிகள் கூட பிறமொழித் தயாரிப்பாளர்களைக் கவர்ந்து விடும்.  அமெரிக்கத் திரைப்படமான 'சிங்கிங் இன் தி ரெயின்' படத்தில்தான் மழையில் நனைந்தபடியே பாடும் காட்சி படமாக்கப்பட்டதாம்.  
 
 
     அவ்வளவுதான், அதைத் தொடர்ந்து உலகப் படங்களில் எல்லாம் மழையில் நனைந்தபடி வரும் பாடல் காட்சி பிரபலமானதாம்.  இந்தியாவிலும் ஹிந்தியில் ஸ்ரீ 420, அப்னாதேஷ்  தொடங்கி தமிழிலும் தொடர்ந்தது.  மௌனராகம், புன்னகைமன்னன் வழியாக இந்த நனையல் காட்சிகள் உங்கள் நினைவிலும் இருக்கும்.

     ஜாக்கி சான் அறிமுகமாகி, பிரபலமான நேரம்.  சுட்டுக்கொண்டே மறைவிலிருந்து வெளிப்பட்டு பாய்ந்து விழும் காட்சி போலீஸ் ஸ்டோரி என்னும் அவர் படத்தில் இடம்பெற்ற காட்சி.  அப்புறம் அது பல தமிழ்ப்படங்களில் இடம்பெற்றது.

     இன்றைய பதிவின் விஷயத்துக்கு வருகிறேன்.  'குஷ்பூ' என்னும் ஹிந்திப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காட்சி!  குல்ஸார் படம்.  அவர் படங்களின் கதாநாயகர்கள் தோற்றத்திலும் அவரைப் பிரதிபலிப்பது வழக்கம்.  குல்ஸார்எழுதிய இந்த அருமையான பாடல் இடம்பெறும் காட்சி அமைப்பைப் பார்த்தீர்களா?  பாடலையும் ரசியுங்கள்.  கிஷோர் குரலில், ஆர் டி பர்மன் இசையில் மிக அருமையான பாடல்.     இந்தக் காட்சி பிடித்துப்போன 'காத்திருந்த கண்கள்' படக் குழுவினர் தங்கள் படத்தில் இதே காட்சி அமைப்புடன் ஒரு தத்துவப் பாடலை வைத்து விட்டனர்.  சீர்காழியின் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும்போது ஹிந்திப் பாடலின் சாயல்கூட லேசாகத் தெரிகிறதோ என்கிற ஐயம் வருகிறது.  விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் அந்தப் பாடல்....

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல் :

ஆசை என்னும் மேடையினிலே...
ஆடி வரும் வாழ்வினிலே...
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே...?

Geetha Sambasivam said...

அவ்வளவு ஞானம் இல்லை! :(

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே நல்ல பாடல்கள். இவற்றுக்குள் ஒப்பீடு... :)

ஹிந்தியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்கும் இப்படி நிறைய பாடல்கள் வந்தபடியே இருந்திருக்கிறது.... இன்னும் வருகிறது....

Asokan Kuppusamy said...

நல்ல பதிவு க்கு மகிழ்ச்சி

KILLERGEE Devakottai said...

ஸூப்பர்

ஆல் இஸ் வெல்....... said...

இதுபோல நிறைய பாடல்களைச்சொல்லலாம்.

G.M Balasubramaniam said...

அவ்வப்போது இம்மாதிரியும் யோசிக்க வேண்டியதுதான்

சிப்பிக்குள் முத்து. said...

இரண்டு பாடல்களுமே சூப்பரா இருக்குது..

Thulasidharan V Thillaiakathu said...

இப்படியான காப்பி நிறைய இருக்கிறது! ஆங்கிலப் படக் காட்சிகள் நிறையவே தழுவப்படுகின்றன. ஹிந்தி டு தமிழ் பாட்டுகள்....தமிழ் டு ஹிந்தி...ஏன் தமிழ் திரைப்பட உலகிலேயே கூட நிறைய உண்டே..ஆங்கிலப்பாடல்களும் கூட சில இன்டெர்லூட்ஸ், ப்ரீ லூட்ஸ் தமிழில் வருவதாக ஆங்கிலப் பாடல் ஞானம் உள்ளவர்கள் சொல்லிக் கேட்டதுண்டு. .நல்ல பாடல்கள் தேர்வு!!!

கீதா

அபயாஅருணா said...

இரண்டுமே நல்ல பாடல்கள் .
மழைப் பாடல்களில்
ரிம் ஜிம் கிரே சாவன் என்ற பாடலும்( அமிதாப்- மௌஷ்மி சாட்டர்ஜி) கூட நல்லா இருக்கும்

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

கரந்தை ஜெயக்குமார் said...

பாடல்கள் அருமை

பரிவை சே.குமார் said...

பாடல்கள் இரண்டும் அருமை.....
ஆமா ஒரே மாதிரித்தான் இருக்கு

Bhanumathy Venkateswaran said...

நீங்கள் பாடல் படமாக்கப் பட்டுள்ள விதத்தை குறிப்பிட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி நிறைய பாடல்கள் உள்ளன. சமீபத்திய உதாரணம் மன்மதன் அம்பு படத்தில் வரும் 'நீல வானம்' பாடல். அந்த பாடல் முழுவதும் ரீவைண்ட் மோடிலேயே படமாக்கப்பட்டிருக்கும். ஆனால் அது ஆங்கில ஆல்பம் ஒன்றில் இடம் பெற்றிருக்கும் பாடலின் அப்பட்டமான காபி என்று சொல்ல விரும்பவில்லை. ஆங்கில ஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலின் இன்ஸ்பிரேஷன் என்று வைத்துக் கொள்ளலாம்.

ALLURED HINDFRAG KUMAR said...

ஆசை என்னும் மேடையினிலே...
ஆடி வரும் வாழ்வினிலே...
யார் மனதில் யாரிருப்பார் யாரறிவார் உலகிலே...?அருமையான தத்துவ வரிகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!