திங்கள், 30 ஜனவரி, 2017

"திங்க"க்கிழமை 170130 - ஹோட்டல் பாணியில் பூரி மசால் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி
சமீபத்துல ஸ்ரீராம், மசால் தோசை என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார் (தோசை மாவுலேயே, சில பலவற்றை அரைத்துச் சேர்ப்பது). அதற்கு கேஜிஜி அவர்கள் பின்னூட்டமிட்டதில், டிரெடிஷனல் மசால் தோசைதான் தன் விருப்பம் எனவும், தோசை நல்லா இல்லைனா, மசாலாவை மட்டும் சாப்பிடமுடியும், மசாலா நல்லா இல்லைனா தோசையைச் சாப்பிடலாம் எனவும் சொல்லியிருந்தார். அப்போதான், நான் செய்கின்ற, ஹோட்டல் பானி பூரி மசாலை எழுதி அனுப்பலாமே என்று தோன்றியது.

நான் பல இடங்களில் பயணிப்பவன். முடிந்தமட்டும், தென்னிந்திய சைவ உணவுவிடுதிகளில் மட்டும் உண்பவன். என்னைப் பொறுத்தமட்டில், ஒரு உணவகத்தின் உணவுத் தரம், அதன் சாம்பாரிலும், பூரி மசாலிலும் (பூரியைக் குறிப்பிடவில்லை), மதிய உணவிலும் தெரிந்துவிடும். இந்த மூன்றும் ஒரு உணவகத்தில் நன்றாக இருந்தால், அந்த உணவகத்தின் செஃப் ரொம்பத் திறமை மிக்கவர் என்று நம்பலாம். எனக்கு திருநெல்வேலியில் ஒரு காலத்தில் கிடைத்த பூரி மசால்தான் சிறந்தது என்று எண்ணம். சில வருடங்களுக்கு முன்னால் தென்காசியில் அந்த குவாலிட்டியில் சாப்பிட்டிருக்கிறேன். பாரம்பரிய பூரி மசாலில், கேரட், பட்டாணி, பூண்டுலாம் வரவே வராது. எங்க திருநெல்வேலில 80கள்ல, சமோசா சாப்பிட்டதுக்கும் இப்போ கிடைக்கற சமோசாவுக்குமே ரொம்ப வித்தியாசத்தைப் (நெல்லைல) பார்க்கிறேன் (இப்போ பட்டாணி சேர்ந்துடுத்து). நான் பண்ணற பூரி மசால், திருனெல்வேலில சாப்பிட்ட மாதிரியே அதே தரத்தில் வரும்.

தேவையானவை, உருளைக் கிழங்கு 4, வெங்காயம் 3-4, பச்சை மிளகாய் 3, இஞ்சி திருவினா 2 ஸ்பூன்.  இதைத் தவிர, கடலை மாவு 2 ஸ்பூன், கருவேப்பிலை 2 ஆர்க், தாளிக்க  கடலைப் பருப்பு 1 பெரிய ஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன், கடுகு ½ ஸ்பூன். 
உருளைக்கிழங்கை மஞ்சள், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து வேகவைத்து, தோலை உரித்துக்கொள்ளவும். அப்புறம், ஓரளவு பிசைந்துகொள்ளுங்கள். உருளைக்கிழங்குத் துண்டமும் மாவுமா இருக்கணும்.
பச்சை மிளகாயை நெடுவாக்கில் கட் பண்ணிக்கோங்க. 4 வெங்காயத்தையும் நீள் வாக்கில் வெட்டிக்கோங்க. இஞ்சியின் தோல் நீக்கி, துருவிக்கோங்க.

கடாயில, எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, அப்புறம் கருவேப்பிலை போட்டு திருவமாறிக்கொள்ளவும். அதுலயே, பச்சை மிளகாய், இஞ்சி போட்டு வதக்கிவிட்டு, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கொஞ்சம் கண்ணாடி மாதிரி வதக்கவும். ரொம்ப வதங்கினா டேஸ்ட் போயிடும். அதுல 2 ½ கப் தண்ணீர், மஞ்சப் பொடி, தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவைக்கவும். நல்லாக் கொதிச்ச உடனே பிசைந்து வைத்திருக்கிற உருளைக்கிழங்கைச் சேர்த்து குறைந்த தணல்ல கொதிக்க வைங்க. கடைசில கடலை மாவைத் தண்ணீரில் கரைத்து இதனுடன் சேர்த்துச் சிறிது கொதிக்கவைக்கவும். மசாலா ரெடி.
இஞ்சி போட்டு வதக்கும்போதே, விருப்பப்படுகிறவர்கள் கேரட் துருவலைச் சேர்க்கலாம். கொஞ்சம் வேகவைத்த பட்டாணியும் சேர்க்கலாம். எனக்கு இந்த இரண்டும் சேர்ப்பது பிடிப்பதில்லை. வெங்காயத்தையும் ரொம்ப வதக்கி வேகவைப்பதும் எனக்குப் பிடிக்காது.
மசால் தோசைக்குத் தேவையான மசாலாவுக்கு, தண்ணீர் ரொம்பக் குறைவாக விட்டால் போதும். ஒரு பெரிய ஹோட்டலில், உருளைக்கிழங்கைத் தனியே வேகவைத்து mash பண்ணி ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தார்கள்.  கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய், இஞ்சி, கொஞ்சம் அதிக வெங்காயம் நன்கு வதக்கின பின், அதை இந்தப் பாத்திரத்தில் கொட்டிக் கலந்துவிட்டார்கள். தனியா தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவில்லை. (எனக்கு வாய்ப்பு கிடைத்தால் சமையலறையை ஒரு எட்டு பார்த்துவிட்டு செஃப் உடன் பேசுவேன்) அதுவும் நல்லாத்தான் இருந்தது. எவ்வளவுக்கு எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோமோ (தாளிக்கும்போது) அவ்வளவுக்கு அவ்வளவு ஹோட்டல் டேஸ்ட் வரும்.
அன்றைக்கு பூரி செய்தேன். கோதுமை மாவு, கொஞ்சம் மைதா, கொஞ்சம் ரவை போட்டு, சூடான தண்ணீர், 1 ஸ்பூன் எண்ணெய், உப்பு போட்டு மாவு தயார் செய்து, கொஞ்சம் நேரம் கழித்து, பூரி இட்டேன்.  பூரி மசாலா நல்லா இருந்தது. நீங்களும் செய்துபாருங்கள்.

58 கருத்துகள்:

 1. பூரி மசாலா... வாவ்....

  நல்ல குறிப்பு... வட இந்தியாவில் பூரி என்றாலே ஆலு சப்ஜி தான்!

  பதிலளிநீக்கு
 2. பானி பூரினதும் என்னமோனு நினைச்சேன்! கடைசிலே இதானா! ம்க்கும்! :)))))) வரேன், எல்லோருடைய கருத்தையும் படிச்சுட்டு! :)

  பதிலளிநீக்கு
 3. எவ்வளவு எண்ணெய் சேர்க்கிறோமோ... ரைட்டு...?

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. நெல்லை பானி பூரினு போட்டு ஓ ஒரு வேளை பானிபூரிக்குள் ஒரு மசாலா வைப்பார்களே அதுவும் ஸ்ரீராமின் மசாலா தோசை என்றெல்லாம் சொல்லி பில்டப் கொடுத்ததும், நல்ல ருசித்துச் சாப்பிடும் நெல்லையா இந்த மசாலாவைத் தோசைக்குள் வைத்து... அதைத்தான் சொல்லப் போகிறீர்களோ என்று பயந்து கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டுதான் வந்தேன் ...ஹப்பாடா நிம்மதி...மட்டுமில்லை ஒரே சந்தோஷம் ஏன்னா உங்க ரெசிப்பிதான் நான் செய்வதும், வேறு காய் போடுவதில்லை. இதேஇதே பாணிதான்..சரி நீங்கள் திருநெல்வேலி டவுனில் உள்ளே தெருக்களில் ஆப்பக்காரம்மாக்கள் வீட்டு வாசலிலேயே ஆப்பம் சுட்டு அதற்கு ஒரு குழம்பு கொடுப்பார்கள்..அதைச் சுவைத்திருக்கிறீர்களா?..கடலைமாவு சாம்பார் என்று என் அத்தை வீட்டில் சொல்லுவார்கள். அத்தை வீட்டுக்குப் போகும்போதெல்லாம் அந்த ஆப்பக்காரமாவின் ஆப்பம் அந்த சாம்பார் வந்துவிடும். டேஸ்டோ டேஸ்டு..அதன் ருசியிலிருந்து கற்றுக் கொண்டு..அதை வீட்டிலும் செய்வதுண்டு ....இப்போதும் ஆப்பக்காரம்மா விற்கிறார்களா என்று அத்தையிடம்/அத்தைப் பெண்ணிடம் கேட்க வேண்டும்....

  பூரியில் மைதா சேர்ப்பதில்லை....ரவை சேர்ப்பதுண்டு...
  நன்றி நெல்லை..பானி பூரி மசால் தோசை என்று பயமுறுத்தாமல் நல்ல ரெசிப்பி கொடுத்தமைக்கு...ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஹோட்டல் பாணி என்று இருந்தால் குழப்பம் வராது !

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஶ்ரீராம் எங்கள் பிளாக். "ஹோட்டல் பாணி" என்பதுதான் சரி. பயணத்தில் இருக்கிறேன். சில தினங்களுக்குள் வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. படிப்படியாய் சொல்லிப் போனவிதமும்
  படம் தந்த விதமும் அற்புதம்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. என்னடா பாணி பூரி என்று சொல்லிவிட்டு பூரிக்கிழங்கு ரிசிப்பியை தந்து இருக்கிறீர்கள் என நினைத்தேன் அதன் பின் தான் புரிந்தது இது ஹோட்டல் பாணியில் நீங்கள் தந்த பூரிக் கிழங்கு என்று

  பதிலளிநீக்கு
 10. முழுவதும் படித்த பிறகு பூரி பானிபூரி ரெசிபி என்று புரிந்தது.

  குறிப்பு அருமை! கடலை மாவு சேர்க்காமலேயே வெங்காயமும் உருளைக்கிழங்கும் மட்டுமே சேர்த்தாலும் அருமையாக வரும்.கடலை மாவு சேர்த்தால் வாடை போகுமளவு சிறிது கூடவே நீர் விட்டு கொதிக்க விட வேண்டும். அப்புறம் வெந்த உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 11. கடலைமாவு சேர்க்காமல் செய்வேன் இது போல.
  செய்முறை விளக்கமும், படங்களும் அருமை.

  பதிலளிநீக்கு
 12. //தேவையானவை, உருளைக் கிழங்கு 4, வெங்காயம் 3-4, பச்சை மிளகாய் 3, இஞ்சி தோல் நீக்கித் திருவினது 2 ஸ்பூன். இதைத் தவிர, கடலை மாவு 2 ஸ்பூன், கருவேப்பிலை 2 ஆர்க், தாளிக்க கடலைப் பருப்பு 1 பெரிய ஸ்பூன், உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன், கடுகு ½ ஸ்பூன்.//

  இவை தவிர எது சேர்த்தாலும் எனக்கும் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் எனோ முக்கியமான மஞ்சள் தூளை நீங்க எழுத விட்டுடீங்கோ. :(

  இதுபோல மஞ்சள் நிறத்தில் செய்யப்படும் மஸால்தான் எனக்கு மிகவும் பிடித்தமான ஐட்டமாகும்.

  ’நன்கு உப்பலான சூடான பூரி + மஸால்’ என மட்டுமே சொல்ல வேண்டும்.

  பானி பூரி, பேல் பூரி, சப்ஜி, சென்னா என்றெல்லாம் சொல்லக்கூடாது. எனக்கு மிகவும் பிடித்தமான நம்பர்-1 டிபனான பூரி+மஸாலைப் போய் இதுபோலெல்லாம் மாற்றி மாற்றி அழைப்பது ஏனோ எனக்குப் பிடிக்கவே இல்லை. அழுகையாக வருகிறது.

  பசியைக் கிளப்பிவிடும் இந்தப் பகிர்வுக்கு நன்றிகள் !

  பதிலளிநீக்கு
 13. //விருப்பப்படுகிறவர்கள் கேரட் துருவலைச் சேர்க்கலாம். கொஞ்சம் வேகவைத்த பட்டாணியும் சேர்க்கலாம். எனக்கு இந்த இரண்டும் சேர்ப்பது பிடிப்பதில்லை. வெங்காயத்தையும் ரொம்ப வதக்கி வேகவைப்பதும் எனக்குப் பிடிக்காது.//

  கரெக்ட். இது விஷயத்தில் நானும் உங்கள் கட்சிதான். :)

  பதிலளிநீக்கு
 14. மேற்படி மஸாலில் காரம் தூக்கலாக, அதாவது நல்ல கார சாரமாக (கண்ணில் ஜலம் வருவதுபோல) இருக்க வேண்டும்.

  இதிலெல்லாம் என் இரண்டாவது மருமகள் மிகவும் எக்ஸ்பர்ட். சுடச்சுட மஸாலை முதலில் என் தட்டில் நிறையவே போட்டுவிட்டு, சுடச்சுடப் பூரியை நன்கு உப்பலாகச் செய்து கொண்டுவந்து, எனக்குப் போட்டுக்கொண்டே இருப்பாள். ஒரு பன்னிரெண்டு நம்பர்ஸ் உள்ளே போனதும் ஒரு சிறிய ஏப்பம் வரும். அதுவே என் லிமிட் + அளவாகும். அத்தோடு போதும் எனச் சொல்லி நிறுத்திக்கொண்டு விடுவேன். :)

  பதிலளிநீக்கு
 15. //டுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய், இஞ்சி, கொஞ்சம் அதிக வெங்காயம் நன்கு வதக்கின பின், அதை இந்தப் பாத்திரத்தில் கொட்டிக் கலந்து//
  பஞ்சாபி சமோசா இப்படித்தான் filling செய்து பொரிப்பாங்க ....பூரிலாம் வீட்ல செய்ரதேயில்லை ..நீங்க செய்த பூரிஸ் மசால் பார்க்க எங்கம்மா செய்த மாதிரி இருக்கு .

  பதிலளிநீக்கு
 16. விளக்கமும் பதிவும் நன்று!

  பதிலளிநீக்கு
 17. //// பானி பூரி மசால் - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி///

  நெல்லைத்தமிழன் ரெசிப்பிக்கும் எனக்கும் எப்பவும் ஒரு சண்டை வந்துகொண்டே இருக்குது:) எல்லாம் பெயரை வச்சுத்தேன்ன்:))... பூரி மசாலா எனத்தானே சொல்லோணும்ம்ம்ம் எதுக்கு “மசால்” என ஸ்டைலாப் போட்டார்ர்ர்ர்:).. இதைத் தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லையோ?:).. சே..சே.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)

  பதிலளிநீக்கு
 18. சிம்பிள் ரெசிப்பி ஆனா சூப்பரா இருக்கு, இதில் உள்ள சூட்சுமம் என்னெண்டால்ல் அந்த கடலை மாவைக் கரைச்சு விடுவது.. இல்லையெனில் கறி தடிக்காது.. எப்பூடி என் கண்டு பிடிப்பூ... சூப்பரா இருக்கு அடுத்த திங்கள் இன்னொரு தலைப்புடன் வாங்கோ நெ.த... வீ ஆ வெயிட்டிங்கூஊஊஊ...:)

  பதிலளிநீக்கு
 19. எனக்கு இங்கின ஒரு டவுட்டூ.. எங்கட கோபு அண்ணன் மாதிரி.. சகோதரர் ஸ்ரீராமும்.. ஆப்பாட்டுப் பிரியரா இருப்பாரோ.. சொறி டங்கு ஸ்லிப்ட்:).. சாப்பாட்டுப் பிரியரா இருப்பாரோ?:)

  ஏனெனில் ஏனைய நாட்களில் விடிய எழும்பி மெதுவா முகம் கழுவி.. மெதுவா ரீயைக் குடிச்சு.. பின்பு வந்துதான் போஸ்ட் போடுவார்ர், ஆனா இந்த திங்கட்கிழமைகளில் மட்டும்.. எலாம் வச்சு எழும்பி விடிய முன்னமே போஸ்ட் போட்டு விடுறார்ர்...:)) எப்பூடி என் கண்டுபிடிப்பூ?:))..

  ஹையோ என் வாய்தேன் நேக்கு எதிரி:)) படிச்சதும் கிழிச்சு பக்கத்து ஆத்தில:) போட்டிடுங்கோ பிளீஸ்ஸ்.. நேக்கு ஊர் வம்ஸ்ஸ் பிடிக்காதாக்கும்:) மீ எச்கேப்ப்ப்ப்ப்... அஞ்சுவோட நடக்கப்போறேன் தேம்ஸ் கரையில கையைப் புடிச்சுக்கொண்டு:).. பாய் பாய்.. (ஹையோ இது வேற பாய்).

  பதிலளிநீக்கு
 20. Naanum ithe pol than seiven. Masal dosai enral kadalai maavu karaithu viduvathillai. Poori masalku viduven.

  பதிலளிநீக்கு
 21. //அஞ்சுவோட நடக்கப்போறேன் தேம்ஸ் கரையில கையைப் புடிச்சுக்கொண்டு:).. பாய் பாய்.. (ஹையோ இது வேற பாய்).//

  who is that boy ?????

  பதிலளிநீக்கு
 22. பாணி பூரி என்று நெல்லைத் தமிழன் தவறாய் எழுதி இருப்பதாய் நினைத்து நான்தான் அதை பானிபூரி (என்று நினைத்து) மாற்றினேன். ஸோ, யானே கள்வன்! எனவே தலைப்பை 'ஹோட்டல் பாணியில்' என்று மாற்றியிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. //எனக்கு இங்கின ஒரு டவுட்டூ.. எங்கட கோபு அண்ணன் மாதிரி.. சகோதரர் ஸ்ரீராமும்.. ஆப்பாட்டுப் பிரியரா இருப்பாரோ.. சொறி டங்கு ஸ்லிப்ட்:).. சாப்பாட்டுப் பிரியரா இருப்பாரோ?:) //

  அதிரா.... சந்தேகமே வேண்டாம். சாப்பாட்டுப் பிரியன்தான் நானும். எனது முந்தைய திங்கள் பதிவுகளாக நாக்கு நாலு முழம், தோசையாயணம் போன்றவற்றைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்!

  பதிலளிநீக்கு
 24. //who is that boy ????? //

  ஆம், நானும் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. ///ஸ்ரீராம். said...
  பாணி பூரி என்று நெல்லைத் தமிழன் தவறாய் எழுதி இருப்பதாய் நினைத்து நான்தான் அதை பானிபூரி (என்று நினைத்து) மாற்றினேன். ஸோ, யானே கள்வன்! எனவே தலைப்பை 'ஹோட்டல் பாணியில்' என்று மாற்றியிருக்கிறேன்///

  உப்பூடி சிம்பிளா சொல்லி எஸ்கேப் ஆக விட்டிடுவமோ?:) அஞ்சூ கமோன்ன்ன் ஒரு காண்ட் குடுங்கோ... ஸ்ராட் மூசிக்க்க்:)) தேம்ஸ்ல தள்ளிடுவோம்ம்:)).. ஹையோ இத நான் சொல்லவே இல்ல மீ ஒரு அப்பாவீஈஈஈஈ.. அஞ்சுதான் சொல்லச் சொன்னா:)

  பதிலளிநீக்கு
 26. //ஸ்ரீராம். said...
  //who is that boy ????? //

  ஆம், நானும் அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.///

  இதென்ன இது புது வம்பாக்கிடக்கூஊஊஊஊஉ.. பிள்ள உனக்கு சனி நடுக்கூறு நடக்குது கவனமா இரு என சாத்திரியார் சொன்னது சரிதான் போல:).. நல்லவேளை இதை எங்கட “அவர்கள் உண்மைகள்” இன்னும் பார்க்கல்ல:)).. அதுவரை தப்பிச்சேன்ன் ஜாமீஈஈஈஈ:))

  பதிலளிநீக்கு
 27. @athiraa //இதை எங்கட “அவர்கள் உண்மைகள்” இன்னும் பார்க்கல்ல:))//

  பேர் இப்போ மாத்தியாச்சு அவருக்கு :)இனிமேல் அவர் ..//நயன்தாராவின் அண்ணன் என்று அழைக்கப்படுவாயாக // அப்படீன்னு யாரோ சொல்லிட்டாங்களாம் :)

  பதிலளிநீக்கு
 28. ///அதிரா.... சந்தேகமே வேண்டாம். சாப்பாட்டுப் பிரியன்தான் நானும். எனது முந்தைய திங்கள் பதிவுகளாக நாக்கு நாலு முழம், தோசையாயணம் போன்றவற்றைப் படிக்க சிபாரிசு செய்கிறேன்!///
  நன்றி, தேடிப் படிக்கிறேன், ஆனா ஒரு வேண்டுகோள்... என்னோடு சேர்ந்து அஞ்சுவும் படிக்கோணும்!!!:).

  பதிலளிநீக்கு
 29. @athiraa என்னாவொரு வில்லத்தனம் :) பொறாமை புடிச்ச பூஸ் ..நான் எல்லா சாப்பாடு போஸ்ட்டையும் படிச்சி பேலியோவை மறந்து நல்ல சாப்பிட்டு பூனை மாதிரியே குண்டாகனுமா நோ அது நடக்காது

  பதிலளிநீக்கு
 30. @ஸ்ரீராம் அண்ட் நெல்லைத்தமிழன் ..ஆனாலும் இங்கே இன்னிக்கு இந்த பூரி மஸால் படமும் செய்முறையும் என்னை கொஞ்சம் அதிகமாகவே சபலப்படுத்திவிட்டது ..
  அரிசியில் செயற பூரி ரெசிப்பி ஏதாச்சும் இருந்தா தரவும் ..எனக்கு க்ளுட்டன் அலர்ஜி ..

  பதிலளிநீக்கு
 31. @Angelin, அரிசியில் பூரி மஹாராஷ்டிராவில் செய்வாங்க. அரிசியில் அக்கி ரொட்டி என்று கர்நாடகாவில் ரொம்பவே பிரபலமானது. அரிசிமாவைக் கிளறிக் கொட்டியும் சிலர் பூரி செய்யறாங்க! :) உளுத்தமாவு சேர்த்துக்கணும். (நீர் விட்டு அரைச்சது இல்லை. உளுந்தை வெறும் வாணலியில் வறுத்து மிஷினிலோ மிக்சி ஜாரிலோ போட்டுத் திரிக்கணும்.)

  பதிலளிநீக்கு
 32. @Geetha sambasivam தாங்க்ஸ் :) ஆ ஹா நல்லாருக்கும்போலிருக்கே ..இதே மஸால் காம்பினேஷனுக்கு செய்து சாப்பிடணும் ..

  பதிலளிநீக்கு
 33. இந்த மசாலோட துணையோடயா? ம்ஹூம், நான் வரலை இந்த ஆட்டைக்கு! நீங்க ஒண்ணு செய்யுங்க. கேழ்வரகோ, கம்போ ஒத்துக்கும்னா அந்த மாவிலே பூரி செய்து இந்த மசாலோட சாப்பிடலாம். அரிசி பூரியோடு! ம்ஹூம்! :))))

  பதிலளிநீக்கு
 34. அவ்வ்வ் :) பரவாயில்லை ஒரு நாள் அலர்ஜி வந்தாலும் கோதுமைல சாப்பிட்டே தீரணும் :)
  கம்பு கேழ்வரகு மாவு கிடைக்கும் பாப்போம் சரி வருதான்னு ..

  பதிலளிநீக்கு
 35. ///Angelin said...
  அவ்வ்வ் :) பரவாயில்லை ஒரு நாள் அலர்ஜி வந்தாலும் கோதுமைல சாப்பிட்டே தீரணும் :)
  கம்பு கேழ்வரகு மாவு கிடைக்கும் பாப்போம் சரி வருதான்னு ..///

  சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ... ஒரு அஞ்சு:) கிலோவாவது ஏத்திடுங்கோ:)

  பதிலளிநீக்கு
 36. @athiraaav ஆமா !! நான் எல்லா சாமிகிட்டயும் வேண்டுதல் வச்சிகிட்டுதான் சாப்பிடுவேன் .
  அந்த வேண்டுதல் ..எனக்கு அலர்ஜி வந்தாலும் நன் எவ்ளோ சாப்பிட்டாலும் அதிராவுக்கு எடை தாறுமாறா ஏறணும் சாமின்னு வேண்டிகிட்டுதான் சாப்பிடுவேன் :)

  பதிலளிநீக்கு
 37. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 1278645634565

  பதிலளிநீக்கு
 38. சுவையோ சுவை! ரவை போட்டு பூரி..புதிது. செய்து பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 39. என்ன ஏஞ்சலின் கட்சி மாறிட்டீங்களா அஹஹஹ் கீதா அக்காவோட ரெசிப்பி செஞ்சு மசாலோட சாப்பிடனும்னு ஆசை வந்துருச்சா....இதுக்குத்தான் நான் ஸ்ரீராம், கோபு அண்ணா , நெல்லை எல்லாரும் பேலியோனாலே கொஞ்சம் உதறல்...பின்ன இங்க இப்படி எங்கள் ப்ளாக்ல சுவை சுவையா ரெசிப்பிஸ் அள்ளித் தெளிக்கும் போது அதெப்படி சாப்பிடத் தூண்டாம இருக்கும்...ஹிஹிஹி...ஏஞ்சலின் மீ எஸ்கேப் அடிக்க வந்துராதீங்க....அதிரா இதப் பிடிச்சுக்கோங்க ஏஞ்சலின ஓட்ட...

  கீதா

  பதிலளிநீக்கு
 40. @ GEETHA :) எனக்கு ரொம்ப டெம்ப்ட்டிங் அண்ட் அப்பீலிங் ஆக இருக்கு திங்கள்கிழமையான :) இவர் நெல்லைத்தமிழன் எழுத்து அப்படியே பசி கிளப்பி விட்ருது ஆனாலும் இந்த புலி கவனமா இருக்கணும் :) இன்னிக்கு காலை இதே மசால் ரெசிப்பி செய்து மக்களுக்கும் இவருக்கும் அனுப்பிட்டேன் சப்பாத்தி வச்சி ..அந்த வாசனைக்கு நானா அசரலையே :) ஐ ஆம் வெறி வெறி ஸ்ட்ராங் :)

  பதிலளிநீக்கு
 41. அருமையான குறிப்பு. இதே முறையில்தான் மசால் செய்வோம். கடலை மாவுக்கு பதில் திரித்த பொட்டுக் கடலைப் பொடி பயன்படுத்துவதுண்டு.

  பதிலளிநீக்கு
 42. நன்றி எங்கள் பிளாக், ஸ்ரீராம், வெளியிட்டமைக்கு

  நன்றி வழக்கறிஞர் நண்டு@நொரண்டு.

  நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

  நன்றி வெங்கட் நாகராஜ். ஆலு சப்ஜி எப்படிப் பண்ணறதுன்னு பார்க்கணும்.

  நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

  நன்றி திண்டுக்கல் தனபாலன். கேள்வியைப் பார்த்தால் நீங்க டயட்ல இருக்கற மாதிரி இருக்கு.

  பதிலளிநீக்கு
 43. நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். நெல்லையில் இருந்தபோது (அம்மாவழி பாட்டிவீட்டில், லீவின்போது) எப்போதாவது ஹோட்டல் பேப்பர் ரோஸ்ட், பக்கத்துக் கடைகளில் மிக்சர், தவலடை வாங்கிச் சாப்பிட்டதோடு சரி. எங்கள் அப்பா வழி, கீழநத்தத்தில் இருந்தபோது, பக்கத்து வீடுகளில்கூட தண்ணீர் சாப்பிடக்கூடாது என்ற அளவுக்கு கண்டிப்பு. தாமிரவருணியில் சாப்பிடலாம். இதுல, எங்க ஆப்பக்காரம்மாகிட்டல்லாம் வாங்கிச் சாப்பிடுவது? கோவிலில் பிரசாதம் சாப்பிடுவதே எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அதீதச் சலுகை. ஆனால், அப்போ மிஸ் பண்ணின பரோட்டாக்களை இப்போதும் மனம் நினைத்து ஏங்கும்.

  பதிலளிநீக்கு
 44. நன்றி கில்லர்ஜி.

  நன்றி பகவான்ஜி

  நன்றி ரமணி அவர்களே.

  நன்றி அவர்கள் உண்மைகள் துரை.

  நன்றி நாகேந்திர பாரதி.

  பதிலளிநீக்கு
 45. நன்றி மனோ சாமினாதன் மேடம். அந்தக் காலத்தில் கடலை மாவு சேர்ப்பது, உருளையோடு சேர்ந்து வாசனைக்காக இருக்கும்.

  நன்றி கோமதி அரசு மேடம்.

  பதிலளிநீக்கு
 46. நன்றி கோபு சார். மஞ்சப் பொடியை மறக்கவில்லையே.

  கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் உணவு ரசனை எனக்குப் பிடிபட ஆரம்பித்துவிட்டது. காரமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். சாப்பிடும்போது ஏன் எண்ணுகிறீர்கள். எண்ணாமலேயே வயிறு சரியான சமயத்தில் போதும் என்று சொல்லிவிடாதோ.

  பதிலளிநீக்கு
 47. நன்றி ஏஞ்சலின். பூரி மசால் வீட்டில் செய்துபார்க்காமலிருக்கலாமா?

  நன்றி புலவர் ஐயா.

  பதிலளிநீக்கு
 48. நன்றி அதிரா. கடைகளில் பூரி மசால் அப்படின்னுதான் சொல்வார்கள். உங்க கண்டுபிடிப்பு நல்லத்தான் இருக்கு. செய்துபாருங்கள். யார்தான் சாப்பாட்டுப் பிரியர் இல்லை. நல்ல சாப்பாடு எல்லோருக்கும் பிடிக்குமே.

  பதிலளிநீக்கு
 49. நன்றி மிடில்கிளாஸ் மாதவி. மசால் தோசைக்கு கட்டியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும். கடலைமாவு கரைத்துவிடாவிட்டால் பரவாயில்லை.

  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 50. நன்றி ஏஞ்சலின். கோதுமைமாவுக்குப் பதிலாக, கேப்பை (கேழ்வரகு, ராகி) மாவிலேயும் செய்துபார்க்கலாம். கொஞ்சம் மைதா சேர்த்துக்கொள்ளலாம் என்றால் சேர்த்துச் செய்துபார்க்கவும். ('நான் செய்துபார்க்கவில்லை. ஒருவேளை நீங்கள் செய்து பார்த்து, உடம்பு எல்லாம் ஓகேயாக இருந்தால்... அதாவது சிலபல திங்கட்கிழமைகளில் உங்கள் பின்னூட்டம் வந்தால், நன்றாக வந்திருக்கிறது போலிருக்கு என்று நினைத்துக்கொள்வேன்)

  பதிலளிநீக்கு
 51. நன்றி கீதா மேடம்.. மீள் வருகைக்கு. உங்கள் 'கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' உபயோகப்படுத்திய அதிராவை ஒன்றுமே சொல்லவில்லையே... விட்டுக்கொடுத்துவிட்டீர்களா?

  பதிலளிநீக்கு
 52. நன்றி தேன்மதுரத் தமிழ் கிரேஸ்

  நன்றி நாகேந்திர பாரதி.

  பதிலளிநீக்கு
 53. நன்றி ராமலக்ஷ்மி. திரித்த பொட்டுக்கடலை மாவும் நன்றாகத்தான் இருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!