புதன், 18 ஜனவரி, 2017

வந்தது புதன் 170118 :: எழுந்தது புதிர்.சென்ற  வாரக் கேள்விகளுக்கு  விடைகள் பார்ப்போம்.

முதல் கேள்வியாகிய மணி ஓசைக்கு சரியான பதிலை முதலாக எழுதியவர். கீதா சாம்பசிவம்.

எல்லோரும்  பலமாகக்  கைதட்டி, அவர்  பொற்காசு  கேட்கும் சப்தம்  எங்கள் காதில்  கேட்காமல்  செய்யுங்கள்.


இரண்டாவது  கேள்வியாகிய ஏ டு இசட்  கேள்விக்கு  எவ்வளவோ  பதில்கள் சரி என்று  சொல்லும்    வகையில்  பதியலாம்.

அந்த வகையில்,  பெசொவி, நெல்லைத் தமிழன், துளசிதரன், பாபு  ஆகியோருக்கு எங்கள்  பாராட்டு.  மாதவன்  கூறிய மைனஸ் இன்பினிட்டி டு பிளஸ் இன்பினிட்டி  சரியான  பதிலாகத் தெரியவில்லை. அவர் எங்களோடு  சண்டை  போட  வருவார்,  ஆவலோடு  எதிர்பார்க்கிறோம்!!!


மூன்றாவது  கேள்வியாகிய  ஏ பி என் + டி  எம் எஸ் கேள்விக்கு,  சரியான பதிலை  (தி மோ) முதலாகக் கூறி  பாராட்டைப்  பெறுபவர்  பானுமதி  வெங்கடேஸ்வரன். அவர் கூறிய பாடலில்  ஆண்  குரல், எஸ் சி கிருஷ்ணன்.


====================================

இந்தவாரக்  கேள்விகளைக்  கேட்டு  வைப்போம் .

(கேள்விகளைப்  பார்த்து,  யாரும்  பயந்து   பின்  வாங்கவேண்டாம். இது  போட்டி  இல்லை. ஜாலியான  வினா  விடைப்  பகுதி.  தவறான  பதில்கள்  நிச்சயம்  கேலி  செய்யப்படமாட்டாது.  விடை  கூறி,  அது  சரிதான்  என்று  சாமர்த்தியமாக  வாதாடுதலும்  ஒரு திறன். பழைய  புதன் புதிர்க்  கேள்விகளில், திரு மாதவன்  வாதங்களை  கவனித்துப்  படியுங்கள். அவர்  திறமையாக  பல  வாதங்கள்  செய்துள்ளார். )


ஒன்று :  

What is (January 2017 - Feb 2017) * (Jan 2020 - Feb 2020)  

இரண்டு

What is ( A to M) * (N to Z) 

மூன்று

In south Indian films, who has acted as hero in maximum no of films? 

                

18 கருத்துகள்:

 1. 1. (-28)*(-29)=+812
  2. 13*13=169
  3.சிவக்குமார் ?

  பதிலளிநீக்கு
 2. கேள்விகளை பற்றி யோசிக்கிறேன்...! இப்படியுமா...?

  பதிலளிநீக்கு
 3. // இரண்டாவது கேள்வியாகிய ஏ டு இசட் கேள்விக்கு..... மாதவன் கூறிய மைனஸ் இன்பினிட்டி டு பிளஸ் இன்பினிட்டி சரியான பதிலாகத் தெரியவில்லை. //
  *சரியான பதிலாகத் தெரியவில்லை*
  What you do not feel, not necessarily ABSENT / WRONG. // அது சரிதான் என்று சாமர்த்தியமாக வாதாடுதலும் ஒரு திறன்//

  Please remember
  “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என ஓளவையாரும்,
  “எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும்
  கண் என்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் *எண்களின்* முக்கியத்துவத்தை தங்கள் பாடல்களில் குறித்துக் காட்டியுள்ளனர்.

  You said ( abt. the range of எழுத்து) A to Z. So, to make it complete I answered (abt. the range of) counts/numbers.

  #Alphanumeric

  பதிலளிநீக்கு
 4. 1) (Jan 17 - Feb 17) = No. of days in Jan 17 - No. of days in Feb 17 = 31 - 28 = 3
  Similarly for 2020, it is 2 (2020 being Leap year).
  thus the answer is 3 * 2 = 6

  2) (A to M) * (N to Z) = 13 * 13 = 139.
  I may give more answers for this..

  பதிலளிநீக்கு
 5. // In south Indian films, who has acted as hero in maximum no of films? //
  தென்னிதிய 'மென்படலத்தில்' மிக அதிகமுறையாக 'கதாநாயகனே', ஹீரோவாக நடித்துள்ளார்.

  பதிலளிநீக்கு
 6. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. 1. (Jan 2017 - Feb 2017)*(Jan 2020 - Feb 2020) இங்கிருக்கும் - என்பதை கழித்தல் குறியாக கொண்டால்
  Jan 2017 -Feb 2017 = 3(31-28) Jan 2020 - Feb 2020(31-29) 2 so 3x2 = 6

  2. ....

  3. பிரேம் நசீர், அல்லது தியாகராஜ பாகவதர் அல்லது இன்னும் நடிக்க வராத ஒரு நடிகர்.

  பதிலளிநீக்கு
 8. விடுங்கோ விடுங்கோ குறுக்கே நிக்காமல் கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ.. பரிசு எனக்கே.. இதோ பதில்கள் கொண்டு வந்திருக்கிறேன்ன்....
  1. அதாவது இந்த வருடம் ஜனவரி பெப்ரவரியில் பிறந்தோருக்கு.. 2020 ஆம் வருடம் 3 வயது ஏறியிருக்கும் எனச் சொல்லிக் காட்டுறீங்க:).. சரி விடுங்கோ..
  2. முதலாவது குறில்.. அடுத்தது நெடில்...~)
  3. ஹா ஹா ஹா பிரேம் நசீராம்ம்:) நான் எந்த விக்கிப் பீடியாவிலும் இதைத்தேடவில்லை என்பதை இந்த தேம்ஸ் கரையில் இருக்கும் இலையில்லா மரத்தின் முதலாவது கிளையில் இருக்கும் இந்த நீலக்குருவியின் கால் மேல் அடிச்சுச் சத்தியம் பண்றேன்..

  நான் ரொம்ப பிஸி.. கெதியா என் பரிசைக் குடுங்கோ நான் போகோணும்.

  ஊசிக்குறிப்பு: விளங்கிறமாதிரி கேள்வி இருந்தா, நானும் விளங்குறமாதிரி பதில் குடுக்க மாட்டேனா:) பத்துத்தரம் படிச்சும்.. தலைதான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எண்ணுது.. முடியல்ல சாமி மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:).

  பதிலளிநீக்கு
 9. ///விடை கூறி, அது சரிதான் என்று சாமர்த்தியமாக வாதாடுதலும் ஒரு திறன்/// ஹா ஹா ஹா இது போதும் எனக்கு..:) என் பரிசு ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கேஏஎ?:)

  பதிலளிநீக்கு
 10. தாமதமாய் வந்துட்டேன். என்றாலும் போன புதிர்க்கேள்விக்குக் கிடைச்சிருக்கும் பொற்காசுகளை யு.எஸ். டாலரில் அனுப்பி வைக்கவும். :) உரக்கக் கூவறேன்.

  இந்த வாரத்துக்கான கேள்வியில் 2017-2020 க்கு ஒரு விடை 3 ஹிஹிஹி, ரெண்டுக்கும் நடுவிலே மூணு வருஷம்! இன்னொண்ணு 2017 லீப் வருஷம் இல்லை. 2020 லீப் வருஷம். அதனால் ஃபெப்ரவரிக்கு ஒரு நாள் கூட. ஒன்று இன்னொரு விடை. இன்னொரு விடை பானுமதி சொல்லி இருக்காப்போல் போட்டால் 6 வரும். மூணு விடைக்கும் எனக்கே எனக்குப் பரிசு! :)

  பதிலளிநீக்கு
 11. கதாநாயகனாக அதிகப்படங்களில் நடிச்சவர் பிரேம் நசீர் தான் என்பதில் சந்தேகம் இல்லை. :)

  இரண்டாவது கேள்விக்கு இரண்டும் சரியாப் பதின்மூன்று எழுத்துக்கள் என்பதால் 13 X 13 =139 இதான் வரும்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. "மணி ஓசைக்கு சரியான பதிலை முதலாக எழுதியவர். கீதா சாம்பசிவம்." - கேஜிஜி சார்... இஷ்டத்துக்கு பதில் கொடுக்கலாமா?

  'யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே' - இதுதான் பழமொழி. நீங்கள் மணி, ஓசை இவற்றிற்கு முன்னால் வருவது எது என்று கேட்டிருந்தால் யானை சரியான விடை.

  பதிலளிநீக்கு
 13. @நெல்லைத் தமிழன், எனக்குப் பொற்காசுகள் கிடைச்சதுக்கு இம்புட்டுப் பொறாமையா? ஹையா, ஜாலி! :)

  பதிலளிநீக்கு
 14. wish to correct my answer for 1.
  1. (-31)*(-31)=+961 (that is what MSExcel gives)

  பதிலளிநீக்கு
 15. அச்சச்சோ என்னா இது? புதன் கிழமையானாலே எங்கள் புளொக் எப்படித்தான் இருக்குமோ? ஒரே மயான அமைதியா இருக்கே, ஏதோ Haunted house க்குள் நுழைவதுபோலவே வந்து போகிறேன் இன்று.... இதுதான் நான் இங்கு வரும் முதல் புதன்கிழமை:) அதாவது இதற்கு முன் வந்ததில்லை.
  சரி உதை விடுங்கோ... கடகடவென இங்கு இருட்டுதே... எங்கே என் பரிசூஊஉ நைட் ஆகமுன் தந்திடுங்கோ இல்லையெனில் கெட்ட கெட்ட கனவா வந்திடப்போகுது...
  எங்கே இன்னமும் எங்கட புரட்சிப் போராளியைக் காணல்ல:) ... அஞ்சூஊஊஊஊ ஓவரா நல்ல பிள்ளைபோல தெரியாத மாதிரி காக்கா போனா விட்டுடுவமா ... வந்து பதிலை சொல்லுங்கோ:)... ஏதாவதுவிடை சொல்லிப்போட்டு, பின்பு அதுதான் சரி என வாதாடட்டாம்ம் ஓனரே சொல்லிட்டார் இன்னும் என்ன தயக்கம் ஓடியாங்கோ:)

  பதிலளிநீக்கு
 16. 3 வதுக்கு ஈசியா பதிலைச் சொல்லிடலாம் அவரு எங்கூரு ஆளுன்றதுனால..ஹிஹீஹி அன்புநசீர்!

  மத்த ரெண்டுக்கும் இப்ப மூளை கொஞ்சம் மழுங்கிக் கிடக்குது ஷார்ப் பண்ணிட்டு வரோம். அதுக்குள்ள நீங்க விடையைச் சொல்லிடுவீங்க ஹிஹிஹி

  பதிலளிநீக்கு
 17. @ ATHIRA MIYYYYAV ..தலைவி நீங்க களமிறங்கி பதில்களை சொன்ன பிறகு சிறு துரும்பு நான் போட்டிக்கு வருவதில் எனக்கு உடன்பாடில்லை அதனால்தான் நான் இவ்வார போட்டியில் பங்கேற்கவில்லை என்று ....கூறிக்கொண்டு.......

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!