திங்கள், 2 ஜனவரி, 2017

"திங்க"க் கிழமை 170102 – திதிப்பு தோசை (இனிப்பு தோசை) - நெல்லைத்தமிழன் ரெஸிப்பி


“உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா” டோன்ல கேட்டுக்குங்க. ‘உங்களுக்கு இனிப்பு சாப்பிடணும்னு ஆசையா?’. ‘பிரஷர் ஏறக்கூடாதா?’. ‘இனிப்பு எண்ணெயில பொரித்திருக்கக்கூடாதா?”- உங்களுக்கு நான் சிபாரிசு செய்வது இனிப்பு தோசை. இது இல்லைனா மத்த சாய்ஸ் இனிப்புக் குழக்கட்டை (பிள்ளையார் குழக்கட்டை இல்லை. அதுல தேங்காய் உண்டு) அல்லது திருவாதிரைக்களி. பாயசம்லாம் இந்த கேட்டகரில வராது. இன்னைக்கு ரொம்ப சுலபமான வாழைப்பழ இனிப்பு தோசை எப்படிச் செய்வதுன்னு சொல்றேன்.




படம் நிறைய இருந்தாலும், செய்முறை சுலபம். தேவையானவை.. 2 கப் அளவு கோதுமைமாவு, 3 ஸ்பூன் மைதா மாவு, 4 ஸ்பூன் ரவை, 2 வாழைப்பழம் (கொஞ்சம் கனிந்திருந்தால் பரவாயில்லை), 1 ½ கப் வெல்லம், ½ ஸ்பூன் ஏலக்காய் பொடி.  கோதுமை மாவுக்குப் பதிலா மைதா மாவுலயும் செய்யலாம். மைதா வேண்டாம்னு நினைச்சா கோதுமைமாவுல மட்டுமே செய்யலாம்.




வெல்லத்தை, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைங்க. அப்புறம் கசடை வடிகட்டிமூலம் நீக்கி, வெல்லத் தண்ணீரை மாத்திரம் பாத்திரத்தில் எடுத்துக்கோங்க. கொஞ்சம் ஆறட்டும்.




வாழைப்பழத்தின் தோலை எடுத்துவிட்டு, மிக்சியில் போட்டு கூழாக்கிக்கோங்க. 




கோதுமைமாவு, மைதா, ரவையை ஒரு பாத்திரத்தில் நல்ல கலந்துக்குங்க. அதுல வாழைப்பழக் கூழையும் ஏலப்பொடியையும் சேர்த்துக்குங்க. அதோட கொஞ்சம் கொஞ்சமா வெல்லத் தண்ணீரை விட்டு, நல்லா கையால கலந்துக்குங்க. தேவைனா கொஞ்சம் தண்ணீரும் சேர்த்துக்கலாம். தோசைமாவு பதத்துக்கு வரணும். தேவைனா, ஒரு அரை மணி’நேரம் இந்த மாவை அப்படியே விட்டுடலாம்.




அப்புறம், சின்னச் சின்ன தோசையா வார்த்துடவேண்டியதுதான். நான் ‘நான்-ஸ்டிக்’ தோசைக்கல்லில் வார்த்தேன். அதுனால, தோசைவார்ப்பது சுலபமா இருந்தது. சாதாரண தோசைக்கல்லில் ஏகப்பட்ட preparatory வேலைகள் செய்து, தேவைக்குக் கொஞ்சம் அதிகமாவே எண்ணெய் விட்டால்தான் தோசை வெளியே வரும். ‘நான்-ஸ்டிக்’ல் இந்தத் தொல்லை இல்லை.




கடைசிப் படம் எடுக்கும்போது எனக்கு ‘அரியலூர் அடுக்குதோசை’தான் ஞாபகம் வந்தது (ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதியது). பிளாக் படிக்கும் பெரும்பாலானோர் அதனைப் படித்திருப்பார்கள்.  ஆனா, நான் போட்டுள்ள படம், ‘எங்க ஊர் எடுப்பு தோசை’. 




இந்த தோசை மறுநாள் ஆனாலும் நல்லா இருக்கும். (ஈரமோ, தண்ணியோ படாத வரை. இல்லாட்டா குளிர்சாதனப் பெட்டியில் வைத்துடலாம்). என் ஹஸ்பண்ட் இதைப் பண்ணும்போதெல்லாம், மைதா மாவு போட்டு உப்பு தோசையோ அல்லது நான் ரொம்பக் கேட்டேன்னா, வெங்காயம் போட்டு ரவா தோசையோ செய்வார்கள். அதான் காம்பினேஷன். ஆனா இன்னிக்கு நான் திதிப்பு தோசை மட்டும்தான் பண்ணினேன். (வெங்காய ரவா தோசை…அதுவும் நான் பண்ணினதுதான். ஆனால் பழைய படம்)



(கடைசிப்படம்....  அந்த தோசை அடுக்கு!  ரொம்பவே கவர்கிறது நெல்லைத்தமிழன்..  ஸ்ஸ்ஸ்ஸ்....  ஆ!)

42 கருத்துகள்:

  1. படிக்கவும் பார்க்கவுமே இனிக்கிறது
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  2. கோதுமை மாவு, கேழ்வரகு மாவில் உப்பு தோசை, வெல்ல தோசை நிறையப் பண்ணி இருக்கோம். அரிசியும் கோதுமையும் ஊற வைத்து அரைத்தே பண்ணி இருக்கோம். இதெல்லாம் என்ன ஜுஜுபி! :)))))

    பி.கு. நான் எப்போவுமே அப்பத்துக்கு அரைக்கையில் அரிசி, கோதுமை(சம்பா ரவை) சேர்த்துக் கொஞ்சம் போல் கடலைப்பருப்புச் சேர்த்து அரைத்து நல்ல கனிந்த வாழைப்பழம் சேர்த்துத் தான் அப்பம் குத்துவேன். ஆகவே இதுவும் ஜுஜுபியாக்கும்! அப்பாடா, காலங்கார்த்தாலே வந்து கமென்டியாச்சு. இங்கே ராத்திரி எட்டே கால். அங்கே காலை ஏழே முக்காலா இருக்கும். :)

    பதிலளிநீக்கு
  3. ஹூம், என்னோட கோதுமை தோசை ரெசிபி தேடப் போனால் விஜய் தமிழ் நெட் என்னும் பக்கம் யாரோ காப்பி, பேஸ்ட் பண்ணி என் பெயரை விட்டுட்டுப் போட்டிருக்காங்க. :( இது எத்தனை நாளானு தெரியலை! :(

    பதிலளிநீக்கு
  4. http://geetha-sambasivam.blogspot.com/2014/01/4.html

    இங்கே என்னோட ரெசிபி இருக்கு, பார்க்கவும். இதைத் தான் அப்படியே காப்பி, பேஸ்ட் பண்ணி விஜய், தமிழ்.நெட்டிலே போட்டிருக்காங்க. குறைந்த பட்சமாகப் பெயரையாவது போட்டிருக்கலாம். :(

    பதிலளிநீக்கு
  5. இதுவும் எங்கள் வீட்டில் பண்ணும் டிபன் தான் ஆனால் இதில் நாங்கள் cashew யும் சின்ன சின்னதாக உடைத்து போடுவோம் எண்ணெய்க்கு பதில் நெய் ஊற்றி சுட்டால் மணமும் டேஸ்ட்டும் அருமையாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. கேட்கும்போதே'ஜொள்ளு'விடவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  8. போலி(ளி) மாதிரி தெரிந்தாலும் இதான் தித்திப்பு தோசையா :)

    பதிலளிநீக்கு
  9. இதையே கேரளா கடைகளில் கூட என்னத்தையோ சேத்து குண்டு ஆப்பமாக விற்கிறார்கள் . எப்படிப் பண்ணினாய் என்று கேட்டேன் சமயக்காரருக்குத் தான் தெரியும்ன்னுட்டான் .
    இந்த தோசை செய்து பாக்கணும்

    பதிலளிநீக்கு
  10. வெல்லதோசை படங்களும் செய்முறையும் நல்லா இருக்கு தேங்கா துருவல் ஏலப்பொடி சுவை கூடும்.

    பதிலளிநீக்கு
  11. நெல்லை நீங்கள் என் பாட்டியின் பேரனோ??!!ஹிஹிஹிஹிஹி.....

    இதே இதே இதே!!! என்ன ஒரே ஒரு வித்தியாசம் வெல்லத்தைத் தண்ணீரில் பொடித்துப் போட்டுக் கையால் கரைத்து.... அடுப்பில் வைக்க மாட்டார். வெந்நீர் விட்டால் தோசைக்கல்லில் வார்க்க முடியாது என்பதால். அப்படியே கொதிக்க வைத்தாலும் ஜஸ்ட் கொஞ்சமே கொஞ்சம் வெல்லம் கரைய மட்டுமே. அப்புறம் நன்றாக ஆற வைத்து அதனை வடிகட்டி மாவில் கலந்து கரைத்து....கொதிக்க விட்டால் ஸ்லைட் பாகு வந்துவிட்டால் கூட வார்க்க வராது என்பதால்....அதாவது தோசைக் கல்லில்...நான் ஸ்டிக் தெரியாது. பயன்படுத்துவது இல்லை என்பதால்...

    இதையே கெட்டியாகக் கரைத்து அப்பமாகவும் செய்வதுண்டு. நல்ல ரெசிப்பி!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. மதுரைத்தமிழன் என் பாட்டியின் வழியில் நானும் நெய் ஊற்றி முந்திரியைப் பொடியாக கட் பண்ணி வைத்துக் கொண்டு அதன் மேல் தூவி செய்வேன்...மகனுக்காக அப்புறம் அதன் மேல் எல்லா ட்ரை ஃப்ரூட்ஸும் சேர்த்து, ட்யூட்டி ஃப்ரூட்டி கூட போட்டுச் செய்வதுண்டு. நட்ஸ் ஃப்ரூட்டி தோசை. மகனுக்காக. அப்புறம் மேலே தேங்காய் தூவி மூடி வைத்து வெந்ததும் இரண்டாக மடித்தும் செய்வதுண்டு. அப்புறம், தேங்காய் தூவியதைத் திருப்பிப் போட்டு கொஞ்சம் தேங்காய் சிவக்குமே அப்போது எடுத்தால் அதன் சுவை தனி.....வீட்டில் நிறைய ஸ்வீட் பிரியர்கள் இருப்பதால் இப்படி எல்லாம்....எனக்கும் பிடிக்கும் ஆனால் ஸ்வீட்டுக்கே ஸ்வீட்டா??!!! ஹிஹிஹிஹி.

    கீதா

    பதிலளிநீக்கு
  14. ஸாதாரணமாக சிறிது அரிசிமாவும் சேர்ப்போம். உங்களது தொய்யத் தொரள நல்ல ,ஷேப்பில் அருமை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. நாவூறவைக்கும் சுவையான பதிவு

    பதிலளிநீக்கு
  16. அருமை. கெட்டியாகக் கரைத்துக் கொண்டால் குழிப் பணியாரத்துக்கும் உதவும் போலும் :), நன்றி.

    பதிலளிநீக்கு
  17. சின்ன வயசில் அடிக்கடி சாப்பிட்டது இப்போதெல்லாம் மனைவி இதையே குழி அப்பமாகச் செய்கிறார் அது என்ன தோசை அடுக்கா, பூரி போல் தெரிகிறதுநான் பயிற்சியில் இருந்தபோது ஹாஸ்டலில் இருந்தபோது நண்பர்கள் இப்படித்தான் பொங்கிய பூரிகளை அடுக்கி வைத்து வெட்டுவார்கள் ஒரு சாண் உயரம் அரையடி உயரம் என்று கணக்கு வேறு

    பதிலளிநீக்கு
  18. நல்லதோர் பகிர்வு. அடுக்கு தோசை அப்படியே சாப்பிடத் தூண்டுகிறதே! :)

    பதிலளிநீக்கு
  19. வாழைப்பழம், சர்க்கரை, மைதா மாவை கலந்து பலகாரம் செய்ததுண்டு.தோசை இனி செய்து தான் பார்க்க வேண்டும்.
    அல்லது யாரேனும் சமையல் செய்து தந்தால் ருசித்து பார்த்து கருத்திடலாம்.

    பதிலளிநீக்கு
  20. ஆகா..ஆசையாக இருக்கிறதே. நான் ஒரேமுறை முயன்று சரியாக வரவில்லை.
    மீண்டும் முயற்சிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  21. நன்றி ஸ்ரீராம், எங்கள் பிளாக் - வெளியிட்டமைக்கு. நன்றி கருத்திட்ட அனைவருக்கும்.

    நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்.

    நன்றி கீதா மேடம். கேழ்வரகு மாவில் (கேப்பை மாவு) வெல்லம் போட்டு தோசை பண்ணியதில்லை. உப்பு தோசை பண்ணியிருக்கிறேன். ஆனாலும், கோதுமைமாவு போல் வராது. "அரிசியையும் கோதுமையையும் ஊறவைத்து அரைத்து"-இப்போ யார் இந்த மாதிரிச் செய்வார்கள், செய்ய முடியும்... இப்போது ரெடிமேடு மாவுகளின் காலம். விரைவில், கடையில் ரெடியாக, (இப்போது கிடைப்பதுபோல்) பாக்கெட்டுகளில் எல்லாவித அரைத்த மாவும் (தோசை, கேப்பைதோசை, அடை, மில்லட் தோசைமாவு) கிடைக்க ஆரம்பித்துவிடும். நானும் உங்கள் செய்முறையிலேயே, அப்பமும் குத்தியிருக்கிறேன் (செய்திருக்கிறேன்). உங்கள் செய்முறை நல்லா authenticஆக இருப்பதனால்தானே இந்த காப்பி-பேஸ்ட் வேலை செய்திருக்கிறார்கள். ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான். உங்க பெயரைக் கண்டிப்பாகப் போட்டிருக்கவேண்டும்.

    நன்றி அவர்கள் உண்மைகள் மதுரைத் தமிழன். முந்திரி, உலர் திராட்சை (இதை கிஸ்மிஸ் என்று சொல்லுவோம். ஸ்கூலில் சொன்னால் அடிவிழும்), கிராம்பு சேர்க்கலாம். நன்றாகத்தான் இருக்கும். நெய் எப்போதும் இனிப்புகளுக்கு மணம் கொடுக்கும்.

    பதிலளிநீக்கு
  22. நன்றி திண்டுக்கல் தனபாலன். என்ன போளி மாதிரி இருக்குன்னு சொல்லிட்டீங்க. படம் ஃப்ளாஷில் எடுத்ததனால் அப்படித் தோன்றுகிறதோ?

    நன்றி மிடில்கிளாஸ்மாதவி. நான் இதேபோன்று அதற்கு முந்தைய வாரத்தில் அப்பம் செய்தேன். இரண்டுக்கும் ஒரே செய்முறைதான். நான் பண்ணின அப்பம் ரொம்ப அழகான ஷேப்பில் வரவில்லை. சமயத்தில் ஜெல்லி ஃபிஷ் தோற்றம் (அதன் மேல்பகுதி) வந்தது.

    பதிலளிநீக்கு
  23. நன்றி பாரதி. இனிப்புகளுக்கும், மழைக் காலங்களில் மிளகாய் பஜ்ஜிக்கும் ஜொள்ளு விடாதவர்கள் யார்?

    நன்றி பகவான்'ஜி - போளி கொஞ்சம் வேலை ஜாஸ்தி. பூரணம் ரெடிபண்ணணும். அப்புறம் மாவு உருண்டைக்குள் வைத்து சப்பாத்திபோல் இடணும். இனிப்பு தோசை ரொம்ப சுலபம். நமக்கு வேண்டியது இனிப்புதானே.

    பதிலளிநீக்கு
  24. நன்றி அபயா அருணா. கேரளாவில் விற்பது 'உன்னியப்பம் அல்லது குன்னியப்பம்'. அது அட்டஹாசமா இருக்கும். ஆனால் எண்ணெய் ஜாஸ்தி. சென்னையில் இரண்டு இடங்களில் (அம்பிகா மற்றும் இன்னொரு கடை) பாக்கெட்டில் விற்கும் உன்னியப்பம் வாங்கினேன். எண்ணெயைத் தவிர சுவை கொஞ்சம்கூட இல்லை. எங்க ஊரில் கேரளாக்காரர்கள் பாக்கெட்டில் போட்டு விற்கும் உன்னியப்பம் பக்கத்தில் (சுவையில்), சென்னையில் கிடைப்பது நெருங்கவேமுடியாது.

    நன்றி ஆல் இஸ் வெல். தேங்காய்த் துருவலைவிட, தேங்காய்ப் பல் இன்னும் சுவைகூட்டும். 'நான் ஏலப்பொடி சேர்த்தேன். அதைவிட, கையால் நசுக்கிய ஏலக்காய் (உள்ளே உள்ள கருமையான) விதைகள் இன்னும் சுவைகூட்டும்.

    பதிலளிநீக்கு
  25. 'நன்றி தில்லையகத்து கீதா ரங்கன். நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். இந்தமுறை நான் செய்தபோது, வெல்லம் கொஞ்சம் பாகு பதத்துக்கு வந்தது. நான் 'நான் ஸ்டிக்' தாவா உபயோகப்படுத்துவதால் எடுப்பதில் சிரமம் இல்லை. ஆனால் தோசையின் விளிம்பு கொஞ்சம் வளைந்தமாதிரி வந்து, பார்க்க தடிமனான தோசை போன்று தோற்றம் கொடுத்துவிட்டது (அதனால்தான் சிலர் போளி போன்று என்று எழுதியிருக்கின்றனர்). நீங்கள் சொன்ன 'எங்கள் பாட்டியின் பேரனோ' என்பதை, 'பாட்டியை' விட்டுவிட்டுப் படித்தேன். பரவாயில்லையே நம்மையும் 15 வயது என்று எண்ணும் ஆட்கள் (எங்க ஊரைச் சேர்ந்த) இருக்கிறார்களே என்று மகிழ்ச்சிகொண்டேன்.

    பதிலளிநீக்கு
  26. நன்றி கீதா ரங்கன். டூட்டி ஃப்ரூட்டி, உலர் திராட்சை சேர்த்தால், இனிப்பு இன்னும் அதிகமாக ஆகிவிடுமே. திகட்டிவிடாதோ? இருந்தாலும், பசங்களுக்கு ஏதேனும் கிம்மிக்ஸ் செய்தால்தான் அவர்களும், நூடுல்ஸ், பிட்சா போன்றவற்றிலிருந்து விலகிவருவார்கள்.

    பதிலளிநீக்கு
  27. காமாட்சி மேடம். நன்றி.. 'தொய்யத் தொரள'-ரசித்தேன். நீங்கள் எழுதும் 'ஸரி, ஸாதாரணமாக' என்பதையும் ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. நன்றி ஜீவலிங்கம்.

    நன்றி ராமலக்ஷ்மி. நீங்கள் சொல்லியபடி குழிப்பணியாரம் செய்யலாம். ஆனால் தேங்காய்ப் பல்கள் அவசியம். அதுவும் கொட்டைத் தேங்காயில் எடுத்து, சிறிது வறுத்துக்கொண்டால், இன்னும் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  29. நன்றி ஜி.எம்.பி ஐயா. அன்றைக்கு நிறையக் கரைத்துவிட்டேன். அதனால் தோசைகளை அடுக்கவேண்டியதாகிவிட்டது. உங்கள் ஹாஸ்டல் அனுபவம், எனது அனுபவத்தை நினைவுகூர வைத்துவிட்டது. +2வில் தூய பிரிட்டோ ஹாஸ்டலில் (பாளையம்கோட்டை) டிஃபன் 5 தோசை, 6 இட்லி, 5 சப்பாத்தி போன்று அளவுதான். ஒரு தடவை ஹாஸ்டல் வார்டன், ஒரு மாதத்தில் unlimited போட்டு டிரை பண்ணினார். நிறையபேர் 10-12நு சப்பாத்திகள் வெட்ட ஆரம்பித்துவிட்டனர். அப்புறம் கட்டுப்படியாகவில்லை (Expenses shared among all, which includes ஏழை மாணவர்கள்) என்று நிறுத்திவிட்டார்.

    பதிலளிநீக்கு
  30. நன்றி மாதேவி.

    நன்றி அசோகன் குப்புசாமி

    பதிலளிநீக்கு
  31. நன்றி வெங்கட். தில்லியில் செய்துபாருங்கள்.

    நன்றி நிஷா. வெல்லத்துக்குப் பதிலாக கருப்பட்டியையும் உபயோகப்படுத்தலாம். யாரேனும் செய்துதந்தால், ருசித்துப் பார்க்கலாம். எனக்கு அந்த வாய்ப்பு இல்லாததால் செய்து பார்க்கிறேன்.

    நன்றி தேன்மதுரத் தமிழ் கிரேஸ். நான் ஸ்டிக் தாவா உபயோகப்படுத்தினால் நிச்சயம் சரியாக வரும். தோசை சரியாக வரலைனா, கொஞ்சம் அரிசி மாவையோ அல்லது ரவையையோ சேர்த்து (ரவைனா பத்து நிமிடம் ஊறவேண்டும்) முயற்சித்தீர்கள் என்றால் சரியாகிவிடும்.

    பதிலளிநீக்கு
  32. வெல்ல தோசை பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது.எங்கள் சிறு வயதில் நாங்கள் விளையாட்டாக வெல்ல தோசை வார்த்த நினைவு வருகிறது.

    நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு விடுமுறை நாள். வீட்டில் பெரியர்வர்கள் யாரும் இல்லை,எங்கே சென்றிருந்தார்கள் என்று ஞாபகம் இல்லை. நான், என்னை விட ஒரே ஒரு வயது மூத்த என் அக்கா, எங்களின் சம வயதான மாமா பையன்கள் இருவர், எங்கள் நால்வருக்கும் போரடித்தது, ஏதாவது சமைக்கலாம் என்று முடிவெடுத்தோம். ரவா கேசரி செய்யலாம் என்றால் அதற்கு ரவை, சர்க்கரை, நெய்(அதிகம் வேண்டும்) ப்ரொசீஜரும் சரியாக தெரியவில்லை. வெல்ல தோசை செய்யலாம் என்று முடிவு செய்தோம். கோதுமை மாவு, அரிசி மாவு, வெல்லத்தை அப்படியே உடைத்துப் போட்டு கரைத்து தோசை என் அக்கா வார்க்க, "என்னடி பண்றேள்?" என்று கேட்டுக் கொண்டே எதிர் வீட்டு அக்கா வந்து விட்டார். "வெல்ல தோசை வார்க்கிறோம்" என்றதும், வெல்ல தோசையா? எப்படி செய்தீர்கள்? எங்க கொஞ்சம் குடு.." என்று கேட்டு வாங்கி ருசித்தவர், "ஆ! பிரமாதமா இருக்கே..! வெல்ல தோசைக்கு அரைக்க வேண்டாமா"? என்றார்? அப்போதுதான் எங்களுக்கு அரைக்க வேண்டுமா"? என்று தோன்றியது. அவர் அதோடு நிற்காமல், அந்த காலனி முழுவதும் அதைப் பரப்ப, நாங்கள் டாக் ஆப் தி காலனி ஆகி விட்டோம்.

    பதிலளிநீக்கு
  33. அப்போதெல்லாம் டி.வி, கணினி, செல் போன் இவையெல்லாம் இல்லாததால் குழந்தைகள் க்ரியேட்டிவாக ஏதாவது செய்துதான் பொழுதை ஓட்ட வேண்டும். இல்லாவிட்டால் புத்தகம் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. நெல்லைத் தமிழன், அரைப்பது இப்போதைய கிரைண்டர், மிக்சி காலத்தில் முன்னை விட மிக எளிது. நான் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சம் போட்டு ஊற வைத்து அரைத்துத் தான் செய்கிறேன். :) அது தான் சரியாவும் வருது. கரைத்தால் அவ்வளவு நன்றாக இல்லை! :)

    பதிலளிநீக்கு
  35. நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன். வெல்ல தோசை experience அருமை. நானும் ரொம்பச் சிறிய வயதில் அம்மா தூங்கிக்கொண்டிருந்த போது, அகல் விளக்கின் மேல் தட்டைப் பிடித்துக்கொண்டு உருளைக்கிழங்கு துண்டுகளை ரோஸ்ட் போன்று செய்ய முயன்றிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. நன்றி கீதா மேடம். அடுத்த தடவை அரைத்து முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!