சனி, 7 ஜனவரி, 2017

7 நாட்களுக்குள் 25 லட்சம் புரட்டியவர்..



1)  ஒரு வார காலத்துக்குள் 25 லட்சம் ரூபாய் புரட்டி, தன் ஓட்டுநரின் மகன் இதயய மாற்று அறுவை சிகிச்சைக்கு சென்னைக்கு அனுப்பி வைத்த மும்பை மீனா ஸ்ரீராம்.
 
 



2)  "என் மனவலி, வேதனை எல்லாம் கூட மறக்க முயற்சிக்கலாம், ஆனா காலைல இருந்து ரேட் எவ்வளவு ரேட் எவ்வளவு வந்த விசாரிப்பை தான் தாங்க முடியவில்லை, 25000 கூட தருகிறேன் என்று வந்த மெஸேஜை காட்டியவர், இதே ரேட்டை நீ ஒரு தொண்டு நிறுவனத்தில் நிதியாக செலுத்தி விட்டு ரசீதை கொண்டு வா ! மன்னிக்கிறேன் என கலங்கடித்திருக்கிறார் ஸ்ரீலக்ஷ்மி. தொண்டு நிறுவனத்தில் செலுத்திய ரசீதை பெற்ற பிறகே வக்கிர வண்டை மன்னித்து விரட்டி அடித்திருக்கிறார். வாழ்த்துக்கள் ஸ்ரீலக்ஷ்மி.
 
 


3)  தனக்காக இல்லை ஏழைக்கு குழந்தைகளுக்காக ஓவர்டைம் பார்க்கும் மனிதர்.



18 கருத்துகள்:

  1. ஸ்ரீலக்ஷ்மி..மலைக்க வைக்கிறார்/ பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நினைக்க வைக்கின்றார்.

    மற்றவர்களும்தங்கள் சுய நலமில்லா சேவைகளால் பாராட்டுப்பெறுகின்றார்கள். பகிர்ந்த உங்களுக்கும் அதே தான்.

    பதிலளிநீக்கு
  2. மனிதம் சிலரால் வாழ்கிறது

    பதிலளிநீக்கு
  3. நீங்களும் எங்களுக்காக ஓவர்டைம் செய்திருக்கலாம் ஜி :)

    பதிலளிநீக்கு
  4. நல்ல மனம் வாழ்க.....

    அனைவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. டானிக் செய்திகள்!! முக்கியமாக ஸ்ரீலஷ்மி - 'நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும்...' வரிகளை நினைவு படுத்துகிறார்!! புதுமைப் பெண்!!

    பதிலளிநீக்கு

  6. அருமையான தகவல்
    சிறந்த வழிகாட்டிகள்

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீலக்ஷ்மியின் தைரியத்திற்கு ஒரு பூங்கொத்து!!!

    மற்ற இருவரையும் போற்றுவோம்! நாம் கற்றும் கொள்வோம்!

    பதிலளிநீக்கு
  8. தினேஷ் பாராட்டுதலுக்கரியவர். முகம் தெரியாதவர்களுக்கு உதவ நினைக்கும் உள்ளம், "உள்ளத்தில் நல்ல உள்ளம்தான்". ஶ்ரீலக்ஷ்மியின் தைரியம் பாராட்டுக்குரியது. ஓட்டுநரின் மகனுக்கு உதவ்வேண்டும் என்ற எண்ணம் பாராட்டுதலுக்குரியது, அதனினும் பலர் பங்கெடுத்துக்கொண்டது மனித நேயத்தைக் காட்டுகிறது.

    பதிலளிநீக்கு
  9. நம்மைவிட நல்ல மனிதர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியைத்தருகிறது

    பதிலளிநீக்கு
  10. லஷ்மி போற்றப்பட வேண்டியவர்...
    எல்லாப் பெண்களும் போராட்டக் களத்தில் லஷ்மி ஆக வேண்டும்...
    அனைவரையும் பாராட்டுவோம்...

    பதிலளிநீக்கு
  11. மனிதம் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றது என்று உணர வைத்தன திருமதி மீனா ஸ்ரீராம் மற்றும் தினேஷ் குமார் கௌதம் பற்றிய செய்திகள் என்றால் மனிதத் தன்மை மறைந்து, அசுரத் தன்மை தலையெடுக்கும் பொழுது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியது லஷ்மி பற்றிய செய்தி. மூவரையும் வணங்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  12. ஶ்ரீலக்ஷ்மியின் தைரியத்துக்கும் மீனா ஶ்ரீராமின் கருணை உள்ளத்துக்கும் பாராட்டுகள். மூன்றும் மூன்று முத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. மீனா ஸ்ரீராமின் உதவி ஆச்சரியப்
    படவைத்தது.லஷ்மி பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!