Wednesday, January 25, 2017

170125:: புதனும் புதிரும்சென்ற  வாரக் கேள்விகளுக்கு விடைகளைப்  பார்ப்போம். 

முதல்  கேள்விக்கு  நான்  நினைத்திருந்த  பதில், ஆறு. 

பாபு  முதலில்  திகைக்க வைத்துவிட்டார்! கணக்கு  சரியாத்தான்  போட்டிருக்கார்.  ஆனா  மைனஸ்  இருபத்தெட்டு  மைனஸ்  இருபத்தொன்பது  எல்லாம் எந்த  மைனா (பட்சி ) சொல்லியது  என்று எனக்குத்  தெரியவில்லை. அப்புறம்  மறுபடியும்  வந்து  மைனஸ் முப்பத்தொன்று, மைனஸ்  முப்பத்தொன்று ...   ஈஸ்வரா ! இது  என்ன  சோதனை!!! 

மாதவன்  சரியான பதில்  சொல்லியிருக்கார். பிறகு, பானுமதி. 

இரண்டாவது  கேள்விக்கு, ஒன்றே  ஒன்று மட்டும்  சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்ன  என்றால், ...............   எனக்கும்  பதில்  தெரியாது. திட்டுபவர்கள்  எல்லோரும்  கெட்ட  வார்த்தைகள்  இல்லாமல்,  நல்ல வார்த்தைகள்  கூறித் திட்டலாம்!  யாராவது  பதில்  சொன்னால்  சரியாக  இருக்குதா  என்று  பார்க்க்கலாம்  என்று  நினைத்தால் ..........   ஹூம்!  


மூன்றாவது  கேள்விக்கு  பிரேம் நசீர்  என்று  கூறியவர்களுக்கு, நூற்றுக்கு  நூறு!  முதலில்  கூறிய  நெல்லைத் தமிழனுக்கு, சிறப்புப் பாராட்டுகள். 


நெல்லைத்  தமிழனுக்கு  அளிக்கப்பட்ட  பாராட்டுப்  பத்திரத்தில்  பாதியை  மைனஸ்  செய்கிறேன்.  --- யானை வரும்  பின்னே ; மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழியை அவர்  தவறாக  கூறியதால்!  


சென்ற  வாரப்  புதிர்களுக்கு, ஆர்வத்தோடு  பங்கேற்று, எல்லா கேள்விகளுக்கும் நகைச்சுவையுடன்  பதில்கள் அளித்திருந்த  அதிரா (உச்சரிப்பு சரிதானே?)  அவர்களுக்கு எங்கள்  சிறப்புப்  பாராட்டுகள். பிரேம் 'நசீராம்' ....  என்று  அவர்  எழுதிய  உடனேயே  அவர்  கூகிள் தேடல்  / மற்ற தேடல்கள் எதுவும்  செய்யவில்லை என்று  தெரிந்துகொண்டோம். !!!!  

13 X 13 = 139 என்று  எழுதிய பிருகஸ்பதிகள்  எல்லோரும் பத்து நிமிடங்கள் பெஞ்சு  மேல  ஏறி  நில்லுங்கோ. 

============================================


இந்த  வாரக்  கேள்விகள்:  

1) If yesterday becomes tomorrow, what will be the day after tomorrow?  


2)    What is {(circle - triangle) - right angle} ?   

3)  இயற்பெயர் ஐந்தெழுத்து,
     ஏற்ற பெயர் நான்கெழுத்து, 
     செல்லப்பெயர் மூன்றெழுத்து. 
     கின்னஸ் சாதனையாளர்.  
     யாரிந்த சினிமா பிரபலம்?  
34 comments:

பால கணேஷ் said...

1)Today 2)????? 3) கோபிசந்தா என்கிற மனோரமா என்கிற பூச்சி. ச்சே,ஆச்சி.

வெங்கட் நாகராஜ் said...

தமிழ் மணம் +1

பூச்சி ச்சே ஆச்சி! :)

Geetha Sambasivam said...

அட? கடைசிக்கேள்விக்கு போட்டி போட்டுண்டு பதில் வருதே! :)

Madhavan Srinivasagopalan said...

1) It will be the 5th day from today.
Illustration. Today is Wed.. y'day was Tue. Had y'day been tomorrow(ie Thurs), then today is Fri and day after tomorrow will be Sunday. As such today originally Wed.. Sunday turns up as 5th day from today(Wed), actually

திண்டுக்கல் தனபாலன் said...

பிறகு வாறேன்...!

Ramarao said...

1) Ans: Today

Bhanumathy Venkateswaran said...

மாதவன் கூறி விட்டார் என்றாலும்கூட நானும் கூறுகிறேன்

1. புதன்
3. ம னோ ர மா

Bhanumathy Venkateswaran said...

2. 90 என்று நினைக்கிறேன். பின்னர் விளக்கம் தருகிறேன். செல்போனில் அடிக்க கஷ்டமாக இருக்கிறது.

Babu said...

1.today
2.(360-180-90)=90 degrees
3.Manorama

'நெல்லைத் தமிழன் said...

பழமொழியைத் தவறாக வேண்டுமென்றே சொன்னேன். யாராவது சுட்டிக்காட்டுகிறார்களா என்று (கோபு சார் கடைசியாக எழுதியுள்ள இடுகையின் தலைப்பும் 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே'.

1க்கும் 3க்கும் விடை தெரியும். ஆனால் மற்றவர்களெல்லாரும் எழுதிவிட்டார்கள். கின்னஸ் என்றதும்தான் மனோரமா என்று முடிவு செய்தேன். ஆரம்பத்தில் ஊர்வசி சாரதாவை நினைத்தேன்.

jk22384 said...

1. Today

2. Semi circle.

3. manorama

Madhavan Srinivasagopalan said...

// 2) (A to M) * (N to Z) = 13 * 13 = 139.
I may give more answers for this.. // cited from my comment on "வந்தது புதன் 170118 :: எழுந்தது புதிர்."

// 13 X 13 = 139 என்று எழுதிய பிருகஸ்பதிகள் எல்லோரும் // Cited from this post.

What a mistake I made. May be, I was in hurry to say so. Good that you pointed out here.

But, Sir, why no comments on my words(last week) to support my own words(week before last week), regarding .."மைனஸ் இன்பினிட்டி டு பிளஸ்" ?

Madhavan Srinivasagopalan said...

@ Bala Ganesh, Ramarao, Banumathi Venkat, Babu, jk22384

For (1), If 'yesterday' as assigned to a 'future', then how a 'further future'(day after tomorrow) can be present(today) ?

Babu said...

reply to mr madhavan: For today 25th yday is 24th. if you redesignate 24th as "tomorrow" then the day after such "tomorrow" is 25th. viz today.

Babu said...

Alternative thought on Qn 1:
In Hindi Kal is the term for both yesterday and tomorrow. That is yesterday becomes tomorrow in "kal".The day after kal is therefore "parsoan"

பெசொவி. said...

1. Today.
2. right angle (circle has 360 degrees Less 180 degrees for triangle; we get 180 degrees , now after deducting 90 degrees (right angle), we get 90 degrees. Hence, right angle is the answer.
3. Manorama

KILLERGEE Devakottai said...

நொடியில் தமிழ் மணம் விழுகிறதே ?
விடை இதோ வருகிறேன்....

Thulasidharan V Thillaiakathu said...

1.Today

2. half circle

3. Manorama/aachi

Asokan Kuppusamy said...

நல்ல பதிவு

Nagendra Bharathi said...

அருமை

athira said...

வழி விடுங்கோ வழி விடுங்கோ சிறப்புப் பரிசாமே... தாறதுதான் தாறீங்க அங்கங்க வைரம் பதிச்சதா தாங்கோவன்., அடிக்கடியோ தரப்போறீங்க இல்லைத்தானே:),
கொஞ்சம் இருங்கோ எதுக்கும் ஓடிப்போய் என் காரை எடுத்து வாறேன் அதிலதான் பெரீய பூட் இருக்கு, பிரசண்ட்ஸ்சை ஏத்திப்போக வசதியாக இருக்கும்ம்ம்:)

athira said...

பாபூஊ, மாதவன், பானுமதி, நெல்லைத் தமிழன் மற்றும் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

///முதல் கேள்விக்கு நான் நினைத்திருந்த பதில், ஆறு. ////
முதல்ல இவரைப் பிடிங்கோ தேம்ஸ்ல தள்ளிடுவோம்ம்.. நீங்க நினைப்பதை எல்லாம் சொல்ல நாங்க என்ன மரத்தடி கிளியோசியரோ??:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) .. இது சரிவராது இப்பூடியெல்லாம் யோசிச்சுப் போட்டால் நான் தேம்ஸ் கரையில் உண்ணாவிரதம் இருப்பேன்ன்ன்.. அஞ்சுவையும் கையில பிடிச்சுக்கொண்டுதான்ன்:)).

athira said...

///இரண்டாவது கேள்விக்கு, ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்ன என்றால், ............... எனக்கும் பதில் தெரியாது. திட்டுபவர்கள் எல்லோரும் கெட்ட வார்த்தைகள் இல்லாமல், நல்ல வார்த்தைகள் கூறித் திட்டலாம்! யாராவது பதில் சொன்னால் சரியாக இருக்குதா என்று பார்க்க்கலாம் என்று நினைத்தால் .......... ஹூம்! ///

ஹையோ ஆண்டவா, பழனி முருகா.. என்னை எதுக்கு இன்னும் உயிரோடு வைத்திருக்கிறாய்:).. இங்கின அடிக்கடி வந்தால் என்னை வெள்ளை பஸ்ல ஏற வச்சிடுவினம்போல இருக்கே வைரவா!!!... இதில வேற நல்ல வார்த்தை சொல்லித் திட்டட்டாம்ம்ம்... டீசண்ட்டா எனச் சொல்லிட்டார்ர்... சரி சரி டீசண்ட்டாவே திட்டிட்டேன்ன்ன் அரை மணித்தியாலமா:))

athira said...

///நெல்லைத் தமிழனுக்கு அளிக்கப்பட்ட பாராட்டுப் பத்திரத்தில் பாதியை மைனஸ் செய்கிறேன். --- யானை வரும் பின்னே ; மணி ஓசை வரும் முன்னே என்ற பழமொழியை அவர் தவறாக கூறியதால்///
ஹா..ஹா..ஹா என்னாது இப்பயமொயியையே:) தப்பாக்கூறிட்டாரோ:) இனியும் நான் பொறுக்க மாட்டேன்ன்ன் பொயிங்கிட்டேன்ன்.. முதல்ல அவரின் பெயரில இருக்கும் தமிழைமாத்தச் சொல்லுங்கோ:))..

///
'நெல்லைத் தமிழன் said...
பழமொழியைத் தவறாக வேண்டுமென்றே சொன்னேன். யாராவது சுட்டிக்காட்டுகிறார்களா என்று (கோபு சார் கடைசியாக எழுதியுள்ள இடுகையின் தலைப்பும் 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே'.////
கோபு அண்ணன் ஓடியாங்கோ.. இது என்ன கூட்டுச் சதியா?:))..

athira said...

///சென்ற வாரப் புதிர்களுக்கு, ஆர்வத்தோடு பங்கேற்று, எல்லா கேள்விகளுக்கும் நகைச்சுவையுடன் பதில்கள் அளித்திருந்த அதிரா (உச்சரிப்பு சரிதானே?) அவர்களுக்கு எங்கள் சிறப்புப் பாராட்டுகள். பிரேம் 'நசீராம்' .... என்று அவர் எழுதிய உடனேயே அவர் கூகிள் தேடல் / மற்ற தேடல்கள் எதுவும் செய்யவில்லை என்று தெரிந்துகொண்டோம். !!!///
ஹா ஹா ஹா மீயைக் கரீட்டாப் புரிஞ்சு வைத்திருப்பமைக்கு மியாவும் நன்றி:))..

அதுசரி பரிசோடு கையில என்வலப்பும் தருவீங்களோ?:) பவுண்ட்ஸ் லயே தந்தால் எனக்கு எக்சேன்ஞ் பண்ணும் சிரமமிருக்காதெல்லோ:))

athira said...

:

1) If yesterday becomes tomorrow, what will be the day after tomorrow? ///

இண்டைக்கு புதன் கிழமை என எடுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்து.. பூமியைப் பார்த்து.. எங்கட ஆத்தையும் பார்த்து யோசிச்ச இடத்தில “வெள்ளிக்கிழமை” எனத்தான் நேக்குப் பதில் வருது...

2) What is {(circle - triangle) - right angle} ?
/// இதில ட்ரை ஆங்கிலுக்கு பாகை சொல்லவில்லை... ஆதலால் நான் 45 பாகை என வைத்தால், 4 ட்ரை ஆங்கில்கல் வரும் அதில இடதை எடுத்து, பின்பு வலதையும் மைனஸ் பண்ணினால் பாதி வட்டம் வரும், இல்லை மேலே ஒரு ட்ரை ஆங்கிலை எடுத்தால், இரு ட்ரை ஆங்கில்கள் மிச்சமாகும் (X) வடிவில்... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஅ இதுக்கு நீங்க கட்டாயம் வைர நெக்லெஸ்தான் பரிசா தரோணும் சொல்லிட்டேன்ன்ன்.. இல்லாவிட்டால் உண்ணாவிரதம் ஆரம்பிப்பேன் தேம்ஸ் கரையில்...:))

athira said...

///திண்டுக்கல் தனபாலன் said...
பிறகு வாறேன்...!///

ஹா ஹா ஹா கிரேட் எஸ்கேப்ப்ப்.. மீயும் அதையே சொல்லிக்கொண்டு 3 வது விடை அதிக வாக்குகளின் எண்ணிக்கையில் “அவவுக்கே” என்பது தெலிவாச்சு:)) சே சே தெளிவாச்சு:)) அதனால இது நேக்கு தெரியாது.. பரிசை நீங்க ”அவருக்கே” கொடுங்கோ நேக்கு வாணாம்ம்.. மீ ரொம்ப நல்ல பொண்ணு..:) ஹையோ ஓவரா அலட்டிட்டனோ.. மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

Babu said...

/இரண்டாவது கேள்விக்கு, ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்ன என்றால், ............... எனக்கும் பதில் தெரியாது. திட்டுபவர்கள் எல்லோரும் கெட்ட வார்த்தைகள் இல்லாமல், நல்ல வார்த்தைகள் கூறித் திட்டலாம்! யாராவது பதில் சொன்னால் சரியாக இருக்குதா என்று பார்க்க்கலாம் என்று நினைத்தால் .......... ஹூம்! /
/13 X 13 = 139 என்று எழுதிய பிருகஸ்பதிகள் எல்லோரும் பத்து நிமிடங்கள் பெஞ்சு மேல ஏறி நில்லுங்கோ./
கணினியில் A-Z எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் மதிப்பு (ASCII value) உண்டு . அதன்படி A (65)முதல் M(77) வரை எண்ணிக்கை 13 ஆகும் . அதே மாதிரி NtoZ 13 ஆகும். எனவேதான் (13*13)=169

Angelin said...

வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள் மற்றும் எங்கள் பிளாகின் பாராட்டுக்களை பெற்ற அதிரா அந்த பாராட்டுக்களுக்கு பொருத்தமானவர் நல்லவர் வல்லவர் நாமெல்லாம் இரண்டு காலால் நடக்கும்போது நான்கு கால் மற்றும் வாலுடன் நடப்பவர் . வாழ்த்துக்கள் அதிரா வாழ்த்துக்கள் அதிரா ..100000 டைம்ஸ் சொல்லிட்டேன் .

Angelin said...

@அதிராஆவ் ...நீங்க எழுதியனுப்பின மாதிரியே வாழ்த்தை காப்பி பேஸ்ட் பண்ணிட்டேன் .சரியா செஞ்சிட்டேனான்னு வந்து பார்த்து சொல்லுங்க

kg gouthaman said...

//Angelin said...
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள் மற்றும் எங்கள் பிளாகின் பாராட்டுக்களை பெற்ற அதிரா அந்த பாராட்டுக்களுக்கு பொருத்தமானவர் நல்லவர் வல்லவர் நாமெல்லாம் இரண்டு காலால் நடக்கும்போது நான்கு கால் மற்றும் வாலுடன் நடப்பவர் . வாழ்த்துக்கள் அதிரா வாழ்த்துக்கள் அதிரா ..100000 டைம்ஸ் சொல்லிட்டேன் .//
ஒரு சமயத்துல ஒரு காலை மட்டும் வாரிவிடுபவர்களைப் பார்த்திருக்கேன். சகோதரி ஏஞ்சலின், சகோதரி அதிராவை ஒரே நேரத்தில் நான்கு கால்களையும் வாரி விட்டாரே! என்ன திறமை!

kg gouthaman said...

//Babu said...
/இரண்டாவது கேள்விக்கு, ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது என்ன என்றால், ............... எனக்கும் பதில் தெரியாது. திட்டுபவர்கள் எல்லோரும் கெட்ட வார்த்தைகள் இல்லாமல், நல்ல வார்த்தைகள் கூறித் திட்டலாம்! யாராவது பதில் சொன்னால் சரியாக இருக்குதா என்று பார்க்க்கலாம் என்று நினைத்தால் .......... ஹூம்! /
/13 X 13 = 139 என்று எழுதிய பிருகஸ்பதிகள் எல்லோரும் பத்து நிமிடங்கள் பெஞ்சு மேல ஏறி நில்லுங்கோ./
கணினியில் A-Z எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண் மதிப்பு (ASCII value) உண்டு . அதன்படி A (65)முதல் M(77) வரை எண்ணிக்கை 13 ஆகும் . அதே மாதிரி NtoZ 13 ஆகும். எனவேதான் (13*13)=169//
நல்ல ஆராய்ச்சி பாராட்டுகள் . ஆனால் (A to M) * (N to Z) means ( 65 to 77) * (78 to 90) .... இதில் பதின்மூன்று எங்கேயிருந்து வருகிறது? Does 65 to 77 or 78 to 90 mean 13 by any means? (பின் வருபவற்றை சாலமன் பாப்பையா குரலில் படிக்கவும் ) " அய்யா பாபு வாங்க. எனக்கென்னவோ பதிமூணு துரதிஷ்ட நம்பரா தெரியுது. அது அப்படித்தானா இல்லையான்னு பாபு சார் சொல்லட்டும்! "

Angelin said...

கௌதமன் சார் :) நன்றி நன்றீ நாங்க எப்பவுமே இப்படித்தான் :) தோள்மேல கைபோட்டுக்கிட்டு போவோம் எல்லாரையும் டைம் டேபிள் போட்டு வாரிவிடுவோம் அப்பப்போ போரடிக்கும்போது எங்க காலை வாரிவிட்ருவோம்

athira said...

உஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூஊஊஊஉ மெதுவா பேசுங்கோ கேட்டிடப்போகுதூஊஊஉ:)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!