தேவையான பொருட்கள்:
இஞ்சி -- 100 கிராம்
புளி ---- ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவு
பச்சை மிளகாய் --- 3
கறிவேப்பிலை --- சிறிதளவு
உப்பு. ---- இரண்டு டீ ஸ்பூன்
தாளிக்க : கடுகு, எண்ணெய்.
முதலில் புளியை வென்னீரீல் ஊற வைத்துக் கொள்ளவும்.
இஞ்சியை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஊறிய புளிக் கரைசலை கெட்டியாக கரைத்துக் கொண்டு கோது இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு போட்டு, அது வெடித்ததும் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். (கறிவேப்பிலையை கைகளால் கிள்ளித்தான் போட வேண்டும். அப்போதுதான் வாசனையாக இருக்கும்.)
இவை நன்கு வதங்கியதும், புளி கரைசலை சேர்த்து, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கி விடலாம்.
பி.கு.: எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கண்ணில் படாமல் வைத்துக் கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த ஊறுகாயை தொட்டுக் கொண்டு சாப்பிடும் பொழுது வழக்கத்தை விட நான்கு பிடி அதிகம் சாப்பிடும் அபாயம் உள்ளது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவாழ்க நலம்...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அனைவருக்கும்.
பதிலளிநீக்குதிங்கறதுக்கு அப்புறமா வரேன்…….கொஞ்சம் பிஸி….
கீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.
நீக்குவிடியற்காலையில் ஏதோ டியூன் எல்லாம் போட்டிருந்தீர்களே!..
நீக்குஅன்பின் ஸ்ரீராம் , கீதா அக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துகள்... நல்வரவு...
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஅனைவருக்கும் வணக்கம். நல்வரவு சொல்லும் துரைக்கு நன்றி.
நீக்குநீக்கினது வேற ஒன்னுமில்ல.....நான் வேர்ட்ல செஞ்சுக்கிட்டுருக்கற வேலைல ஒன்னு காப்பி பேஸ்ட் செஞ்சது நினைவில்ல...ஹிஹிஹிஹி....
பதிலளிநீக்குகீதா
புளி இஞ்சி/ இஞ்சி புளி அருமை....
பதிலளிநீக்குபச்சை மிளகாய்க்குப் பதில் சிவப்பு மிளகாய் சேர்ப்பது வழக்கம்...
காலை வணக்கம் 🙏
பதிலளிநீக்குஆஹா புளி இஞ்சி எனக்கும் பிடிக்கும்.
செய்முறை படிக்க பிறகு வருகிறேன்.
இரண்டாதாக வந்திருக்கும் புளிக்கரைசல் படத்துக்கீழே வந்திருக்கும் "ஊறிய இஞ்சிக்கரைசல்" என்பதைப் "புளிக்கரைசல்" என மாத்துங்க ஸ்ரீராம்
பதிலளிநீக்குஎனக்கென்னவோ செய்முறையை எல்லாரும் முழுமையாப் படிக்கறாங்களான்னு செக் பண்ண ஶ்ரீராம் வைத்திருக்கும் ட்விஸ்ட் இல்லை டெஸ்டுனு நினைக்கறேன்.
நீக்குசெய்துட்டேன் அக்கா.
நீக்குநான் பெரும்பாலும் நீங்கள் அனுப்பும் வரிகளில் கைவைப்பதில்லை. படித்துப் பார்த்துவிட்டு சில சிறு ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் திருத்தியதுண்டு. இது என் மனதில் பதியவில்லை. அதனால் நான் டெஸ்ட் எல்லாம் வைக்கவில்லை நெல்லை.
நீக்குதுரை சொன்னது போல் சிவப்பு மிளகாயிலும் செய்யலாம். அரைத்தும் கிளறலாம். அரைத்துக் கிளறியதைப் புளிக்காய்ச்சல் பதத்துக்கும் வைச்சுக்கலாம். தொக்கு மாதிரிக் கெட்டியாவும் வைச்சுக்கலாம். வெறும் பச்சை மிளகாய் மட்டும் போட்டுப் புளிமிளகாய் பண்ணினால் அன்னிக்கே அரைச்சு அப்போவே வார்க்கும் தோசைக்குத் தொட்டுக்க நல்ல துணை. நாங்க அதைப் புளியா தோசை என்போம். அதுக்குப் புளிப்பும் உறைப்புமாகப் புளிமிளகாய்.
பதிலளிநீக்குமலையாளிகள் இதை மிகவும் சுவையாக செய்வார்கள்.
பதிலளிநீக்குஇஞ்சிப்புளி செய்முறை சுருக்கமா சுலபமா இருக்கு. நாங்கள் பாலக்காட்டுக்குச் சென்றிருந்தபோது அங்கு இஞ்சிப்புளி வாங்கிவந்தோம். ஏனோ அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை. எங்களுக்கு புளிமிளகாய்தான் இன்னும் பிடிக்கும்.
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம் , வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஇஞ்சி புளி என்று சொல்வோம்.
பதிலளிநீக்குஇஞ்சியை துறுவி செய்வோம். சொதி செய்யும் போது கண்டிப்பாய் இஞ்சி புளி, அல்லது இஞ்சி துவையல் உண்டு.
அம்மா கொஞ்சம் வெந்தயமும் போடுவார்கள் தாளிக்கும் போது.
படங்கள் எல்லாம் அழகு. குறிப்பாக இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை படம் அழகு.
நீங்கள் சொன்ன முறையில் ஒரு நாள் செய்கிறேன்.
புளி இஞ்சி,கொஞ்சமாகச் சாப்பிடுவேன். அருமையான செய்முறை விளக்கம் பானு மா.
பதிலளிநீக்குநெல்லை சொன்னது போல அன்றரைத்த தோசைக்கு புளிமிளகாய் செம காம்பினேஷன்.
நாங்கள் புளி இஞ்சி, மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து, எண்ணெயில் சுருள வதக்கி ஒரு வாரம் வருமாறு செய்து கொள்வோம்.
பெருங்காயத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
வாழ்த்துகள் பானு மா.
//நெல்லை சொன்னது போல அன்றரைத்த தோசைக்கு புளிமிளகாய் செம காம்பினேஷன்.//க்ர்ர்ர்ர்ர்ர், நானில்லையோ சொல்லி இருக்கேன். நெல்லை புளிமிளகாய்தான் பிடிக்கும்னு மட்டும் தான் சொல்லி இருக்கார். :)))))))
நீக்குதவறுதலாக்கூட சின்னவங்களை பெரியவங்க பாராட்டக் கூடாதா? நெல்லைப் பகுதியைச் சேர்ந்தவங்க கிட்ட இருக்கற மெக்னாமிட்டி மதுரைக்காரங்க கிட்ட இல்லையே :-)
நீக்கு:P :P :P :P
நீக்குகீதா மா. இனிய மாலை வணக்கம். எல்லாப் பதிவையும் நேரம் கழித்துப் படிப்பதால் ஒரு பிழை
நீக்குவந்துவிடுகிறது. என் அருமை கீதாவுக்கு மாற்றா நான் ஏதாவது சொல்வேனா.
நெ.த.மா,,,,
பிறப்புக்கு ஒரு ஊர் என்றால் பிழைக்க வந்த ஊர் மீனாட்சியோடது.வளம் கொடுத்தவள் அவள் தான். பிறகு தான் சென்னை.பொதுவாக நம் மனசு தங்கம்.
ரேவதி, சும்மா தமாஷுக்குத் தான், நெல்லையை வம்புக்கிழுப்பதே நம் கடமை, உரிமை! அதான்! :))))))
நீக்குஅருமை...
பதிலளிநீக்குபின்குறிப்பு கொடுத்தது, எவ்வளவு ருசியாக இருக்கும் என்று தெரிகிறது...!
பதிலளிநீக்குஇதை யாராவ்து உடனே செஞ்சு அதிராவிற்கு அனுப்பி வையுங்களேன் அப்படி அனுப்பும் போது இதை சாப்பிட்டால் உடல் மெலியலாம் என்று சொல்லி அனுப்புங்கள்
அடடே! இன்று என்னோட ரெசிபியா? பிரசுரித்த எங்கள் ப்ளாகிற்கும், வருகை தந்து பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் நன்றி.
பதிலளிநீக்குதுரை சாரும், கீதா அக்காவும் சொல்லியிருப்பதை போல சிவப்பு மிளகாய் சேர்த்து செய்ததில்லை. ஒரு முறை செய்ய வேண்டும்.
@நெ.த.: புளி மிளாகாய்? மிளகாய் தொக்கை சொல்கிறீர்களா?
பதிலளிநீக்குகட் செய்த அல்லது கீறிய மிளகாய், புளி ஜலம்+பெருங்காயம் கலவையில் வேகவைப்பது. இங்கேயே (எ பி) இதன் செய்முறை வந்திருக்கிறது.
நீக்குபானுமதி, மிளகாய்த் தொக்கு வேறே! புளி மிளகாய் வேறே! இதே புளி இஞ்சி செய்முறையில் இஞ்சி இல்லாமல் முழுக்க முழுக்கச் சின்னப் பிஞ்சுப் பச்சைமிளகாய்களை வதக்கிச் சேர்த்துச் செய்யவேண்டும். நாங்க தாளிதத்தில் புளி இஞ்சி, புளி மிளகாய் இரண்டுக்குமே வெந்தயம் சேர்ப்போம். கருகப்பிலை சேர்ப்பதில்லை. சிவப்பு மிளகாய் எனில் புளியை ஊற வைத்துக் கொண்டு, மி.வத்தல், இஞ்சியை நன்கு வதக்கிக் கொண்டு புளியோடு சேர்த்து அரைத்துவிட்டுப் பின்னர் அடுப்பில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு, பெருங்காயம் தாளித்து மஞ்சள் பொடி சேர்த்து அரைத்த விழுதைப் போட்டு உப்புச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறி எடுக்க வேண்டியது தான். இது பிசைந்தும் சாப்பிடுவார்கள். நான் தோசை, சப்பாத்தி, மோர் சாதம், கஞ்சி போன்றவற்றுக்குத் தொட்டுக்கவெனச் செய்வேன். ஆனால் இதுக்கு ஓட்டு விழறதில்லை அபூர்வமா போணி ஆகும்.
நீக்குபச்சை மிளகாய்த் தொக்கு செய்முறை யாரும் இதுவரை போடாததால் அதைச் சாய்ஸில் விட்டுடறேன்.
நீக்கு@நெ.த.: புளி மிளாகாய்? மிளகாய் தொக்கை சொல்கிறீர்களா?
பதிலளிநீக்கு@ கோமதி அரசு: சொதி என்பது கிட்டத்தட்ட அவியல் மாதிரிதானே? ஆனால் தேங்காய்ப்பால் விட வேண்டும் இல்லையா? நான் செய்திருக்கிறேன், இருந்தாலும் ரெசிபி போடுங்களேன்.
பானுக்கா சூப்பர் ரெசிப்பு...எங்க வீட்டுல புளி மிளகாய் அப்புறம் புளி இஞ்சி கேரளத்து ஸ்டைல்/பாலக்காடு.....எங்க வீட்டுல உண்டு. பையனுக்குக் கூட செஞ்சு கொடுத்துவிட்டேன்...ரெண்டுமே...
நீக்குஅப்புறம் பானுக்கா சொதி வேறு அவியல் வேறு...டேஸ்ட் வைஸ்....கோமதிக்கா நெல்லை சொதி சொல்லிருப்பாங்க அதுவும் கூட வேறு வகைதான்...நான் சொல்லும் சொதி இலங்கை சொதி...
இஞ்சி மட்டும் போட்டு புளி இஞ்சி செய்வதுண்டு...இஞ்ஜி தொக்கு...மிகளாய் தொக்கு...அப்புறம் கீதாக்க சொல்லியிருப்பது எல்லாமே...நான் சொல்ல வந்தது எல்லாமே சொல்லிட்டாங்க...ஒரு வேலை மிச்சம்
டிட்டோ போட்டுட்டு போறேன்...ஹா ஹா ஹா
எனக்கு ரொம்பப் பிடித்த டிஷ் பானுக்கா....சூப்பரா சொல்லிருக்கீங்க....என்னை போல கதையும் ஜல்லியும் அடிக்காம ஹிஹிஹிஹி
கீதா
பானு, அவியல் மாதிரி இருக்காது , சொதி குழம்பு மாதிரி இருக்கும்.
நீக்குதேங்காய் பாலில் தான் செய்வார்கள்.
http://saratharecipe.blogspot.com/2017/11/tirunelveli-sothi.html இவர் பதிவில் செய்முறைகளுடன் இருக்கிறது.
மூன்று காய்கறி தான் போட்டு இருக்கிறார், நாம் பட்டாணி, இன்னும் இரண்டு மூன்று காய்கறி போட்டுக் கொள்ளலாம்.
வாழைக்காய் சிப்ஸ், இஞ்சி துவையலுடன் சாப்பிட ருசி.
இன்னுமா ஆறு ஆகலை! ஙே!!!!!!!!!!!!!!!!!!!!!!
பதிலளிநீக்குஎன் இன்னொரு தளத்தில் பூவையின் எண்ணங்கள் மொளகூட்டலும் இஞ்சிப் புளியும் செய் முறை பற்றிப் பதிவிட்டிருக்கிறேன்
பதிலளிநீக்குநல்ல ருசியாக இருக்கும் நம்புகிறேன்
பதிலளிநீக்கு