புதன், 28 நவம்பர், 2018

புதன் 181128 ஆஹா ஜாலி ஜாலி!



சென்ற வாரக் கேள்விகளைக் கண்டுபிடித்து, பதில்களை அழகாகப் பதிந்த 

திண்டுக்கல் தனபாலன் 
துரை செல்வராஜூ 
பானுமதி வெங்கடேஸ்வரன் 

ஆகியோருக்கு நன்றி. 

மேலும் அன்பு, காதல், பாசம், நேசம் பற்றிய எங்கள் பதில் குறித்து அலசி ஆராய்ந்து எழுதிய 

கீதா சாம்பசிவம்
ஏகாந்தன் 
திண்டுக்கல் தனபாலன்  
நெல்லைத் தமிழன் 
கில்லர்ஜி 
கீதா ரெங்கன் 
பானுமதி வெங்கடேஸ்வரன்  
ரேவதி நரசிம்ஹன் 
 ஆகியோருக்கு, 
எங்கள் சார்பிலும், மற்ற வாசகர்கள் சார்பிலும் நன்றி!


பானுமதி வெங்கடேஸ்வரன்  : 
"எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது,அதனால் நீயும் கடவுளை கும்பிடக்கூடாது" என்று மனைவியை வற்புறுத்தினால் உறவினர்கள் கோபிக்கிறார்கள். நம் கொள்கையை மற்றவர் மீது திணிக்க வேண்டாம் என்று பெருந்தன்மையாக நடந்து கொண்டால் சமுதாயம் கேலி செய்கிறது. பாவம் இந்த நாத்தீகர்கள் என்ன செய்வார்கள்?  

ப 1 : //"பாவம் இந்த நாத்தீகர்கள் என்ன செய்வார்கள்? "//

ஹி ஹி நமது மாண்புமிகு நாத்திக நண்பர்களுக்கு பாவம், புண்ணியம் என்று எதுவும் கிடையாது ஆகையால், கவலைப்பட ஏதும் இல்லை. 

ப 2: ஆத்திகத்தைப் பரப்புவது தவறல்ல ஆனால் நாத்திகம் பரப்புவது சரியில்லை எனத் தோன்றக் காரணம் ஆ.க்கள் மெஜாரிட்டி என்பதால்தான். 
நாத்திகர்கள் சும்மா இருந்தால் கேலிக்கு ஆளாகிறார்கள் என்பது சரியல்லவே !

உடையுடுத்துவதிலும், தலை அலங்காரத்திலும் ஒரு சமயம் ஒன்று பிரபலமாக இருக்கிறது, பின்னர் வேறு ஒன்று அந்த இடத்திற்கு வருகிறது. இந்த fashion எனப்படும் விஷயம் எங்கே எப்படி துவங்குகிறது? எப்படிபரவுகிறது? 

ப 1: Fashion துவங்குமிடம் என்பது கொஞ்சம் விசித்திரமானதுதான்! எங்கோ ஒரு நகரத்தில், தவறாகத் தைத்துவிட்ட ஒரு தையல்காரர்கூட காரணமாக அமையலாம்! கடந்த சில மாதங்களாக சிறுமிகள் முதல் பெருமிகள் வரை சில பெண்கள் அணியும் மேல்சட்டை (இரண்டு) தோள்பட்டைப் பகுதியிலும் பெரிய கிழிசலுடன் காணப்படுகிறது. சிறுமிகளை மன்னித்துவிடலாம்! ஆனால் இந்தப் பெருமிகளை என்ன சொல்வது! யாரோ ஒரு பெண் ஒருபக்கம் கிழிந்துபோன ரவிக்கையை, மறுபுறமும் கிழித்துவிட்டுக்கொண்டு, இந்த நாகரீகத்தை ஆரம்பித்திருப்பாரோ என்று சந்தேகம். 

இன்று என் வீட்டிற்கு கேபிள் கனெக்ஷன் அமைக்க வந்த மெக்கானிக் குனிந்து வேலை செய்த போதெல்லாம் அவருடைய லோஹிப் பாண்ட் சென்சார் காட்சிகளை மௌன அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தது. ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் அந்த வகை லோஹிப் ஜீன்ஸ் போடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, பக்கத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் அத்தகைய ஜீன்ஸ் அணிந்து உடல்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணை, ரஜினி பார்த்திருந்தால், "கடவுளே, கடவுளே, கடவுளே ...." என்று அரற்றியபடி ஓடிப் போயிருப்பார்!

ப 2 : தொடர்ந்திருக்கும் பலவும் சலித்துப் போகிறது. 
கவனத்தை ஈர்க்க இயல்பாக ஒரு துடிப்பு இளவயதினருக்கு இருக்கிறது. 
அட்டென்ஷன் gathering வெறிமுற்றிய இளைஞர் மற்றும் பிரபலங்கள்தான் ஃபாஷன் ட்ரெண்டுகளுக்கு ஆதிகாரணம்.


நெல்லைத் தமிழன் :

 "எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. பாரம்பர்ய வழக்கங்களில் நம்பிக்கை உண்டு. நீங்கள் அதனைக் குறை சொல்லுவதை பெருந்தன்மையாக அனுமதிக்கறேன். ஆனால் உங்கள் கருத்து தவறு. வீட்டில் உங்கள் கருத்துக்கு மாறாகத்தான் நடக்கும். என் குழந்தைகளையும் அப்படித்தான் வளர்ப்பேன்" என்று வீட்டிலும் வெளியிலும் தைரியமாக நடந்துகொள்ளும் இந்த ஆத்திக திருமதிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன? 

ப 1: அதான் நீங்களே சொல்லிட்டீங்களே! தைரியமான திருமதிகள்! 

ப2: ஆத்திகத் திருமதிகளின் கொள்கைப் பிடிப்பு பாராட்டுக்குரியதுதான்.


================================

உங்களுக்குப் பொழுது போவதற்காக , 
இங்கே செவ்வாய்க்கிழமை இரவு தினமலரின் ஒருவரிச் செய்திகளும் அதற்கு எங்கள் கு ம கமெண்டுகளும்! 

    காதலி கொலை: காதலன் கைது

    காதலிதானே கொலை செய்தார்? காதலனை ஏன் கைது செய்கிறீர்கள்? ஒருவேளை - காதலி யாரையோ கொலை செய்ததால், 
    அவளுடைய போலீஸ் காதலன் அவளைக் கைது செய்ய வேண்டிய நிர்ப்பந்தமோ! ( ஆஹா ! நம்ம ஏரியா கதைக் கருவாக கொடுக்கமுடியும் போலிருக்கே!) 

நாகையில் நாளை முதல்வர் ஆய்வு 
  
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் பாஸ் ஆனால் சரி. 

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

அவரும் புயலால் பாதிக்கப்பட்டிருப்பாரோ? 

வேதாரண்யத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஹூம்! நம்ம ஊருக்கு புயல் மழை எல்லாம் வரமாட்டேங்குதே! என்று மற்ற மாவட்ட மாணவர்கள் ஏக்கம்! 

போலி நகையை வைத்து மோசடி: 2 பேர் கைது

இரண்டு பேர்? ஒருவரை ஒருவர் மோசடி செய்தார்களோ! 

மீண்டும் பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின

மீண்டும்? ஓஹோ, அதாவது ஒருமுறை சிக்கி, ஊர்வலம் வந்தபின், மீண்டும் சிக்கினவா! 

அறிக்கை: மத்திய குழுவுக்கு உத்தரவு

யாருங்க அந்த Mr அறிக்கை மத்திய குழுவுக்கு உத்தரவு போட!

புயல் பாதிப்பு: சிறப்பு நிதி ஒதுக்கீடு

நிதியில என்னங்க சிறப்பு நிதி! 
=====================================================

ஹய்யா! இந்த வாரம் ரொம்பப் பேருங்க கேள்வி கேட்காததால், ஜாலி! ஜாலி! நாங்களும் ஒன்றும் கேட்கப்போவதில்லை! என்ஜாய் மாடி! 

அடுத்த வாரம் கேள்விகள் ஏதாவது கேட்கப்பட்டால் பார்ப்போம்! 

===========================================

51 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆறுமணி ஆகப,போகுது, ஐந்து பேர் லைன்ல இருக்காங்கன்டு பார்த்தால் முன்னமேயே வெளியிட்டிருக்கார் கேஜிஜி சார். கர்ர்ர்ர்ர்ர்ர்.

      காலை வணக்கங்கள்.

      நீக்கு
    2. நெல்லை நான் போன புதன் ஆறுமணிக்குத்தானே வந்துச்சுன்னு பார்த்தா இன்னிக்கு முன்னாடியே...அதுவும் ஆதியோட கம்பு தோசைக்கு ஆஜர் வைச்சுட்டுருக்கும் போதுதான் சட்னு நினைவு வந்துச்சு ஆஹா இன்று புதன்....பதிவு வரதே புதிராச்சேன்னு வந்தா இங்க கீதாக்கா மட்டும்...தனியா....ஹா ஹா ஹா ஹா

      அப்புறம் அவங்களுக்கு கம்பெனி கொடுக்கலாம்னா இங்க காபி கடமை...

      கீதா

      நீக்கு
  2. இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு, காலை வணக்கம்

    பதிலளிநீக்கு
  3. அன்பு, காதல், பாசம், நேசம் பற்றிய முழு அலசலை நான் சொன்னதா நினைவில் இல்லை. மத்தவங்க எல்லோரும் அலசிக் காயப் போட்டிருந்தாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நீங்க அலசலையா இருக்கலாம் ஆனா நட்ஷெல்லா சொல்லிருந்தீங்க பாயின்ட்ஸ...

      கீதா

      நீக்கு
  4. வர வரக் கேள்விகளே குறைஞ்சுட்டு வருதே! இப்படி விடலாமோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே.... கேள்வி நாயகி ரொம்ப நாளைக்கப்புறம் நேற்று கண்ணில் பட்டார்!!!

      நீக்கு
    2. கேள்வியின் நாயகி வந்துட்டாரா....அட!!

      பார்க்கனுமே...நேத்து கதை ரிஷபன் அண்ணான்னு தெரிஞ்சுச்சு...இனிதான் வாசிக்கனும்...ஞாயிறு எல்லாம் பார்க்கனும்..

      கீதா

      நீக்கு
  5. கு.ம. கமென்டுகள் என்றால் குண்டக்க மண்டக்க கமென்டுகள் தானே? செய்தியில் கூட கதைக்கருவைத் தேடும் கௌதமன் சார் அவரே இதை வைச்சு ஒரு கதை எழுதலாமே!

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதாக்கா பானுக்கா, நெல்லை அப்புறம் வரும் அனைவருக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. கௌ அண்ணா இனிய காலை வணக்கம்..

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சம்பளம் வந்தால் கூடத் திருப்தி இல்லாமல் லஞ்சம் வாங்குவது ஏன்? பேராசை தானே காரணம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபீசில் சர்வைவ் பண்ணுவதற்கு, வேற வழியில்லாமல் சிலர் வாங்கவேண்டிவரும் அல்லவா?

      நீக்கு
  9. அன்பின் Kgg, ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் முன்னோடிகள் அனைவருக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "முன்னோடிகள்"

      ஹா... ஹா.... ஹா...

      இனிய காலை வணக்கம் துரை செல்வராஜு ஸார்.

      நீக்கு
  10. சிறுமிகள் முதல் பெருமிகள் வரை சில பெண்கள் அணியும் மேல்சட்டை (இரண்டு) தோள்பட்டைப் பகுதியிலும் பெரிய கிழிசலுடன் காணப்படுகிறது. //

    ஹா ஹா ஹா...

    உடையில் நாகரீகம்.....இருக்கட்டும் என்னவோ போகட்டும் மனதில் நாகரீகம் இருந்தால் அதுதானே சிறப்பு!

    நான் பார்த்த வரையில் சிலர் உடையில் கன்னா பின்னா நாகரீகத்துடன் இருப்பவர்கள் மனதில் ரொம்பவே வித்தியாசமாய் அதாவது கொஞ்சம் கூட சபை நாகரீகம் தெரியாமல் இருப்பதையும் பார்க்கிறேன்...நாக்கு நாகரீகம்....எல்லாருமே பார்க்கிறோம் தான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. வேலை முடிந்து அறைக்குச் சென்றபின் சில செய்திகள்...

    (என்னவோ கருத்து கந்தசாமி மாதிரி!?)

    பதிலளிநீக்கு
  12. இந்த தினமலரோட செய்தி தலைப்புகளை கவனமா படிச்சாலே போதும்...

    இருக்குற (!) தமிழும் தகர்ந்து போகும்!..

    ஒற்று போடத்தெரியாது...
    கனக்கு வழக்கற்ற எழுத்துப் பிழைகள்...
    அர்த்தம் கெட்ட தலைப்புகள்...

    காலங்காத்தால
    அதை ஏன் போட்டீர்கள்!?..

    பதிலளிநீக்கு
  13. மெக்கானிக் குனிந்து வேலை செய்த போதெல்லாம் அவருடைய லோஹிப் பாண்ட் சென்சார் காட்சிகளை மௌன அரங்கேற்றம் செய்துகொண்டிருந்தது. //

    ஹா ஹா...இது இப்போது வரும் பல இளைஞர்களுக்கும் பொருந்தும்....இளம் பெண்கள் கேட்கவே வேண்டாம்...

    என் ஆசிரியை மேரி லீலா சொன்னது இன்னமும் மனதில் ஆழமாக இருக்கிறது. உன் உடை, உன் உடல் மொழி எந்த ஆண்களின் மத்தியிலும் அல்லது இந்த சமூகத்தின் மத்தியில் ஒரு மரியாதையை தோற்றுவிக்க வேண்டும். என்று சொல்வார்...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேரி லீலாஜிக்கு ஒரு காலை நமஸ்காரம். அந்தக்காலத்து ஆசிரியை. நல்லது செய்து, நல்லது சொல்லிப் புண்ணியத்தைத் தேடிக்கொண்டார்.

      இந்தக்காலத்தில் பெரும்பாலும் ஆ’சிறி’யர்கள். அவர்கள் தங்கள் மாணவிகளைக் கடத்திச்செல்லாமல் இருந்தாலே அவர்களுக்குக் கோடிப் புண்ணியம்.

      நீக்கு
    2. கொஞ்சம் ஹார்ஷா சொல்லியிருக்கீங்க ஏகாந்தன் சார். நிறைய நல்ல ஆசிரியர்கள் இருக்காங்க. அவங்களால பெர்ஃபார்ம் பண்ண முடியலை. பசங்க குடிச்சுட்டு வராங்க, கொஞ்சம் கண்டித்தாலும் பெற்றோர்கள் சண்டைக்கு வராங்க, இல்லைனா சாதிச் சண்டையைக் கொண்டுவந்து சிக்க வைக்கிறாங்க, பசங்க ரவுடிகளாட்டம் மரியாதை இல்லாம்ப் பேசறாங்க, மேனேஜ்மென்ட் இதற்கிடையில் ரிசல்ட் காண்பிக்கணும்னு கொடுக்கற டார்ச்சர்னு, அவங்க தரப்பிலும் சொல்ல நிறைய இருக்கிறது.

      அதேசமயம் குடித்துவிட்டு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்கள், எப்போப் பாத்தாலும் பஞ்சாயத்துன்னு வேலையைப் பார்க்காமல் ச்ச்சரவுகளில் இறங்குபவர்களையும் கண்டிருக்கிறேன், 30 வருடங்களுக்கு முன்பே

      நீக்கு
    3. நெ.த. - ஹார்ஷாகச் சொல்லிவிட்டேனோ! ஏதேதோ காரணங்கள் சொல்லி அப்பாவி ஹைஸ்கூல் மாணவிகளை அறைக்கழைத்து, பயமுறுத்தி மானபங்கம் செய்திருக்கும் -வடக்கு, தமிழ்நாடு- இரண்டு பக்கத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன் - ’ஆ...சிறியர்கள்’-ஐப்பற்றி அடிக்கடி படிக்க நேர்ந்ததன் விளைவு! அதற்காக ஆசிரியர்களில் நல்லவர்கள், நேர்மையாளர்கள் இல்லை என்று கூறவில்லை. அவர்கள் நாடெங்கும் வெகுவாகக் குறைந்துவருவது தெரிகிறது. கூடவே, நீங்கள் குறிப்பிட்ட வகை மாணவசிகாமணிகளும், பொறுப்பில்லாப் பெற்றோரும், மேனேஜ்மெண்ட் ஆசாமிகளும் கூடிவருகிறார்கள். மொத்தத்தில் படிப்பிற்கான, நல்லொழுக்கத்துக்கான சூழல் வெகுவாக நாட்டில் விலகிவருகிறது என்பது தெரிகிறது.

      இவையாவற்றையும் தாண்டி, நல்லவர்களாகப் பிறந்தவர்கள் நல்லவர்களாகவே வளர்கிறார்கள், வாழ்கிறார்கள். அவர்களில் ஆசிரியர், பெற்றோர், மாணவ, மாணவியர் என அனைத்து வகையினரும் உண்டு என்பதில் ஒரு ஆறுதல்.

      நீக்கு
    4. நெ.த. சொல்லியிருப்பது மிகவும் சரி. இப்போதய இளைஞர்கள் ஆசிரிய வேலையை விரும்பாததற்கு அவைதான் காரணம். மும்முனைத் தாக்குதல்!

      நீக்கு
  14. நம் கொள்கையை மற்றவர் மீது திணிக்க வேண்டாம் என்று பெருந்தன்மையாக நடந்து கொண்டால் சமுதாயம் கேலி செய்கிறது.// (கடவுள் நம்பிக்கை)

    பானுக்கா சமுதாயம் கேலி செய்கிறதா என்ன...எங்கள் வீட்டில் சிலர் இருக்காங்களே ஒன்னும் பிரச்சனை இல்லையே....அவங்களுக்கு நம்பிக்கை தான் இல்லை ஆனால் மிக மிக நல்ல பண்பாளர்கள். நல்ல இரக்க குணம் எல்லாம் உண்டு. (எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு...)

    எந்தக் கொள்கையும் யார் மீதும் திணிக்கக் கூடாது...அதை நட்பு ரீதியுடனோ அல்லது கதை ரீதியாகவோ சொல்லிக் கொண்டு வரலாம் அது நல்ல கொள்கையாக இருந்தால்...அது முதலில் அத்தனை பலன் அளிக்கவில்லை என்றாலும் விதைக்கப்பட்ட விதை பிற்காலத்தில் மரமாக வளர்ந்து ஆஹா அன்னிக்கு அவங்க சொன்னது எவ்வளவு சரின்னு தோனலாம்...

    இல்லை என்றால் அப்படித் திணிக்கும் போது சில சமயம் ரூட் மாறிப் போகும் வாய்ப்பும் இருக்கும். அதாவது ஒரு வெறுப்பு வளர்வதால்..விலகிப் போகவதும் நடக்கலாம்...எல்லாம் மனித மனம்!!!!

    கொள்கையை திணிப்பதை விட (நல்ல கொள்கைகள்) நாம் நம் வரையில் அதை பின்பற்றி காட்டினாலே போதும்...நல்லது என்று நினைத்தால் எடுத்துக் கொள்ளட்டும் இல்லையா இல்லை. என்று எனக்கு தோன்றுவதுண்டு...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. காலை வணக்கம்.

    கேள்வி-பதில்கள் மாலையில் தான் படிக்க வேண்டும். மாலையில் வருகிறேன்.

    இப்போதைக்கு ப்ரெசெண்ட் சார் மட்டும்! :)

    பதிலளிநீக்கு
  16. அட என்ன ஒற்றுமை! நான் நேற்றுதான் செய்திதாளில் வந்திருக்கும் செய்திகளுக்கு கு.ம. கமெண்ட் போட்டு ஒரு பதிவிடலாம் என்று நினைத்தேன்.
    சரி, இப்போது அடுத்த வாரத்திற்கான கேள்வி: சில சமயம் நாம் சில மனிதர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போம், அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வரும், அல்லது அவரே நேரில் வந்து நிற்பார்(ஆனால் அதை அவரிடம் சொன்னால் நம்ப மாட்டார்), இப்படிபட்ட அனுபவங்கள் உண்டா?

    குளிர்சாதன பெட்டிக்குள் பாம்பு, வாஷிங் மெஷினில் இருந்த குழந்தை மரணம், மோர் என்று நினைத்து ஃபினாயிலை குடித்த வாலிபர் காப்பற்றப்பட்டார் போன்ற செய்திகளை படிக்கும்பொழுது என்ன நினைத்துக் கொள்வீர்கள்?

    பதிலளிநீக்கு
  17. கேள்வி பதில்களை படித்தேன்.
    பதில்கள் எல்லாம் நன்றாக இருந்தது.
    கு ம கமெண்டுகளும்! நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. இந்த fashion விஷயத்தில் ஒரு விஷயத்தை லேட்டா புரிஞ்சிக்கிட்டேன் :) ஒரு காலத்தில் ப்ளவுஸ் puff ஸ்லீவ்ஸ் அனார்கலி சல்வார் ,frock டைப் சல்வார் எல்லாம் வந்து அப்புரம் லெக்கிங்ஸ் ,பாட்டியாலா சல்வார் வந்து இப்போ மறுபடியும் கோட் டைப் அனார்கலி சல்வார் 5 வருஷத்தில் திரும்பி பேஷனாகிடுச்சி ....இதனால் பேஷன் போச்சுன்னு எதையும் வீச கூடாது அது ஒரு வட்டம் போல் சுற்றி வருது ஆனா உடல் அளவையும் அப்படியே மெயிட்டெயின் பண்ணிட்டா நல்லது ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ஆனா உடல் அளவையும் அப்படியே மெயிட்டெயின் பண்ணிட்டா நல்லது ..// கரெக்ட்!

      நீக்கு
  19. https://qvc.scene7.com/is/image/QVC/u2/1/90/164890.001?$aemprodgallery$

    cold shoulder tops அதான் மேலே தோளிலிருந்து fore arm puff ஸ்லீவ்ஸ் வருமிடத்தில் gap விட்டு தச்சிருக்கிற ப்ளவுஸ் போடறாங்க சிலர் :)
    அது கிழிந்த ரவிக்கையிலிருந்து வரல :) கோல்ட் ஷோல்டர் டாப்ஸை நம்மூர் சாரி கட்ட வசதியாக்கியிருக்காங்க :)

    பதிலளிநீக்கு
  20. நம்மூரில் பெருமிகளும் இந்த கோல்ட் கிழிச்சி விட்ட ஷோல்டர் ப்ளவுஸ் போடறாங்கஎன்பதை அறிந்துகொண்டேன் இப்போ :)
    கிழிந்த ஜீன்ஸோ ஷர்ட்டோ அது போடறவங்களுக்கு பொருத்தமா இருக்கணும் ..இல்லைன்னா கேவலமா இருக்கும் .

    ஷாப்பிங் போகும்போது மகள் ஜீன்ஸ் செக்ஷன் போகும்போது மனசு படபடன்னு அடிச்சிக்கும் :)
    ஒரு கேள்வி உதித்து விட்டது :) அதை கேள்வியில் கேட்கிற்றேன்

    பதிலளிநீக்கு
  21. //..பக்கத்தில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் அத்தகைய ஜீன்ஸ் அணிந்து உடல்பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணை, ரஜினி பார்த்திருந்தால், "கடவுளே, கடவுளே, கடவுளே ...." //

    ஃபேஷனின் உச்சமென்பது கீழ்நோக்கி நழுவிகிறது! என்ன செய்ய? புவி யீர்ப்பு சக்தி காரணமாக இருக்குமோ? நியூட்டனைக் கேட்கலாமென்றால் அவரையும் காணவில்லை!

    உற்றுப்பார்த்துவிட்டு லோ-ஹிப் என கு.ம. கமெண்ட் அடிக்காமல், ஏதோ பாண்ட் என்ற ஒன்றை இன்னும் இவர்கள் போட்டுத் திரிகிறார்களே என்று சந்தோஷப்பட்டாலென்ன ஸ்வாமி?

    பதிலளிநீக்கு
  22. அந்த லோஹிப் ஜீன்ஸ் போட்டவர் அட்டென்சன் seeking லைம் லைட் விரும்பியாக இருக்கக்கூடும் ..பிக்காஸ் உடற்பயிச்சிக்கு யாரும் லோ ஹிப் அணிய மாட்டாங்க .

    பதிலளிநீக்கு
  23. ஆத்திகமோ நாத்திகமோ ஒரு லிமிட்டு டன் இருப்பது நல்லது .ஆனால் ஆத்திக திருமதிகளை நானும் பாராட்டுவேன் :)
    என்னைப்பொறுத்தவரை பக்தி அல்லது நாத்திகம் என்பது ஊரெல்லாம் பறைசாற்றி கொண்டிருப்பதல்ல நம் நற் செயல்களால் இவர் கடவுளின் பிள்ளை இறையடியார் அல்லது non பிலீவர் என்று பிறருக்கு உணர்த்தினால் போதுமானது ..

    பதிலளிநீக்கு
  24. 1, சந்தோஷம் நிலையானதா ?சந்தோஷத்தின் கால அளவு எவ்வளவு ? பெரும்பாலானோர் சொல்றது துக்கம் இருக்கும் காலத்தை விட குறைஞ்ச நேரமே சந்தோசம் வந்து தலை காட்டிட்டு போகுது
    அதாவது is happiness short lived ?

    2, சின்ன வயசில் ரோட்டு ஓரம் ஸ்டேஷன் வெளியிலெல்லாம் துண்டு சீட்டுக்கள் தருவாங்க அதில் நிறைய வாசகங்கள் இருக்கும் பிறகு இதை பத்து பேருக்கு அனுப்பாட்டி இல்லைன்னா இப்படி செய்யாட்டி ரத்தம் கக்கி போவீங்கன்னு எழுதியிருக்கும் .அப்படி துண்டு pamphlets படித்து அலறிய அனுபவங்கள் இருக்கா ?

    3, மனுஷரில் நல்லவர் யார் கெட்டவர் யார்னு எப்படி கண்டுபிடிக்கிறது ?

    4,TORN ஜீன்ஸ் எப்பவோ நம்மூரிலும் பேஷன் வந்துவிட்டது அறிவோம் ..அதுபோல பட்டுப்புடைவையை கிழித்து டோர்ன் காஞ்சி சில்க் சாரீ கட்டும் நாள் வருமா ???

    5,இந்த ஆண்கள் மட்டும் எப்பவும் ..//எங்கம்மா இது சட்னியை எவ்ளோ ருசியாசெய்வாங்க .இந்த கேக் அவங்க செஞ்சது இன்னும் ருசி நினைவில் ,அம்மா பூண்டு குட்டி துணியில் கட்டி ரசத்துக்கு போடுவாங்க ,தலைக்கு எண்ணெய் போட்டு வார்வாங்க இப்படி எந்நாளும் அம்மா புராணம் பாடுவதன் காரணம் என்ன ?????????????? அம்மா ஆழ்மனதில் பதிந்து விட்டதாலா ??

    6, பெரும் செல்வந்தர்களைவிட இல்லாதோர் கிட்ட தாராள குணம் அதிகமா இருக்கே ? காரணம் என்ன ??


    7,உங்கள் மனைவியின் தொலைபேசி எண் உங்கள் சகோதர சகோதரியின் தொலைபேசி எண் ஐ மீன் மொபைல் எண் இவற்றில் யார் நம்பரை மனப்பாடமா போனை பாக்காம சொல்ல முடியும் உங்களால் ??

    8, வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்றாங்களே எப்படி ??

    9, கார்ட்டூன் பார்க்கும் பழக்கம் உண்டா ? உங்களுக்கு பிடிச்ச கார்ட்டூன் என்ன ஏன் ?எதற்கு பிடிக்கும் ??

    10, சமீபத்தில் ரசித்த அல்லது உங்களை சிந்திக்க வைத்த வித்யாசமான முகப்புத்தக ஸ்டேட்டஸ் என்ன ? ஏன் ?


    பதிலளிநீக்கு
  25. //பானுக்கா சமுதாயம் கேலி செய்கிறதா என்ன...// என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் கீதா? கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் ,மற்றவர்களின் நம்பிக்கை குறித்து கடுமையான விமர்சனங்களை வைக்காத வரை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள், எப்போது அவர்கள் மற்றவர்களின் நம்பிக்கையை விமர்சித்து விட்டு தன் வீட்டில் மட்டும் அதை செயல்படுத்தாமல் இருந்தால் கண்டிப்பாக மற்றவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். நம் ஊர் தி.மு.க.காரர்களின் குடும்பத்தினர்கள் கோவிலுக்குச் செல்வது உடனே ஊடகங்களில் வலம் வந்து விடுமே, பார்த்ததில்லையா?

    பதிலளிநீக்கு
  26. // //"பாவம் இந்த நாத்தீகர்கள் என்ன செய்வார்கள்? "//
    //நமது மாண்புமிகு நாத்திக நண்பர்களுக்கு பாவம், புண்ணியம் என்று எதுவும் கிடையாது//

    நான் pity என்ற பொருளில் பாவத்தை குறிப்பிட்டால், நீங்கள் sin என்ற பொருள்பட பதில் கூறியிருக்கிறீர்கள். பெஞ்சு மேல் ஏறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு பெஞ்சு அனுப்பி வைக்கவும். அதுவரை தரையில்தான் நிற்பேன்!

      நீக்கு
  27. லோ ஹிப் ஜீன்ஸை DLJ(dangerously low jeans) என்பார்கள். இதை பிரபலப்படுத்தியது சிம்ரன். ஓமான் மாதிரி நாட்டிலேயே இந்த டி.எல்.ஜெ. ஐ பெண்கள்
    அணிந்து கொண்டு பொது இடங்களுக்கு வந்த பொழுது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!