புதன், 20 மார்ச், 2019

புதன் 190320 : ஸ்டிக்கர் ஒட்டத் தெரியுமா?


சென்ற வார பல்பு கேள்விக்கு பதில் கூறிய திண்டுக்கல் தனபாலனுக்குப் பாராட்டுகள். 

தப்பி ஓடிய மீதி பேர் எல்லாம் இந்த வாரம் பதில் அளிக்க முயற்சி செய்யுங்க! 

முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்;
முயற்சியிலார் மகிழ்ச்சி அடையார் !
ஏஞ்சல் : 


1, free will மற்றும் தேர்வு /தெரிவு செய்தல் இதை மனிதர்கள் தவறான வழியில் பயன்படுத்துகிறார்களா ?


# தவறான வழியில் பயன் படுத்தும்போது மட்டுமே கவனிக்கப் படுகிறோம்.

2, தார்மீக அமைப்பு அறநெறிகள் இவற்றை குறித்த பாடங்கள் பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டுமா ? 


# மாரல் கிளாஸ் எனக்கு இருந்தது. அதை விட வீட்டில் உள்ள பெரியவர்கள் நல்ல நடத்தையை போதிக்க முடியும்.

3, நம்முடைய ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவது எது ?
ஏற்கனவே எப்பவோ வாங்கிய அடியா இல்லைன்னா நமது உள்ளுணர்வுகளா ?


நம் செயல்களை இயக்குவது மனதின் ஆசை, கோபம் அல்லது பயம். கட்டுப் படுத்துவது நெகடிவ் இமேஜ் அல்லது தண்டனை பற்றிய பயம்.

& ஆழ்ந்து சிந்தித்தால், இதுதான் படைப்பாற்றலின் ஆரம்பக் கேள்வி. Only a fearless, free and calm mind can be creative. 

4, நாம் நினைப்பதையெல்லாம் செய்வதுதான் சுதந்திரமா ? 


நியாயமான செயலை செய்ய வாய்ப்பிருப்பது சுதந்திரம்.

& ஒரு மனிதன், தன்னுடைய வாக்கிங் ஸ்டிக்கை, 'உயர்ந்தமனிதன் சிவாஜி' போல (அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!) பலவாறு சுழற்றியபடி சென்று கொண்டிருந்தான். அது பின்னால் வந்த நபரின் மூக்கின் மீது பட்டு, உதிரம் சொட்டத் தொடங்கியது. அடிபட்ட நபர், உயர்ந்த மனிதனிடம், " என்னய்யா இது?" என்று கேட்டார். 

அதற்கு அந்த உ ம - "நான் ஒரு சுதந்திர மனிதன். சுதந்திரக்காற்றில், என் கைக்குச்சியை எப்படி வேண்டுமானாலும் சுழற்றிச் செல்வேன். என் சுதந்திரத்தில் நீ ஏன் மூக்கை நுழைத்தாய் ? " என்று கேட்டானாம். 

அடிபட்ட நபர், " அப்பனே, உன் சுதந்திரம் என் மூக்கு தொடங்குகின்ற இடத்தில் முடிவடைகிறது. (Your freedom ends where my nose starts)" என்று கூறி அவரை நீதிமன்றத்தில் கொண்டுசென்று நிறுத்தினாராம். 

எனவே நம் சுதந்திரம், மற்றவர்களின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடாது. அம்புடுதேன்!                      

5, மட்டற்ற எல்லையில்லா மகிழ்ச்சி அடைதல் என்று சொல்வது ஏன் மனிதருக்கு மனிதர் வேறுபடுது ?


மனிதரில் ஒருவருக்கொருவரிடையே இருக்கும் ஏக்கம் அல்லது ரசனை வெவ்வேறு லெவலில் இருக்கிறதே !

& மகிழ்ச்சி என்பது ஏதாவது ஒரு செயலை, செவ்வனே செய்து முடித்தல். இந்த மகிழ்ச்சியை படைப்பாளிகள் அடிக்கடி எய்துவர்.          

6, இந்த பரந்த அகண்ட அறிவுக்கும் ஆழமான அறிவுக்கும் என்ன வித்யாசம்னு ? எக்சாம்பிளோட சொல்லுங்க ? 


பரந்த அறிவுள்ளவர் எது பற்றியும் எவருடனும் சுவாரசியமாக உரையாடும் திறன் பெற்றவர். ஆழமான அறிவுடையவர் அவர் துறையில் கில்லாடி.
உதாரணம் கமல்ஹாசன், வேளுக்குடி கிருஷ்ணன். 

7, சேவியர் சிப்லிங்ஸ் // savior siblings மருத்துவ முறை நம் நாட்டில் நடைமுறைக்கு வந்தாச்சா ? இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன ?


நம் நாட்டுக்கு வரவில்லை போலிருக்கிறது. இது சற்று சங்கடமான மருத்துவ ஆலோசனை என்பது என் எண்ணம். சட்டம் இடம் தருமா என்றும் தெரியவில்லை. நம்மவர்களுக்கு மனம் வராது.

8, பொறாமை குணம் நெகட்டிவா இல்லை பாஸிட்டிவா ? பொறாமை மனுஷ இயல்பை குணத்தை மேம்படுத்துமா இல்லைன்னா கவிழ்த்துப்போடுமா ?


பொறாமை ஐம்பெரும் தீய குணங்களில் ஒன்று.

& பள்ளி மாணவப்பருவத்தில் என்னுடைய அண்ணன், மாணவர் சங்க பேச்சுக்காக தயார் செய்த பிரசங்கங்களில், " மாணவர்களுக்கிடையே படிப்பில் போட்டி இருக்கலாம் - ஆனால் பொறாமை இருக்கக்கூடாது" என்று சொல்லி கை தட்டல் பெறுவார். அப்போதெல்லாம் எனக்கு இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாது. 

இப்போ யோசித்துப் பார்த்தால், பொறாமையால் விளையும் போட்டி என்பது envious attitude, பொறாமை உணர்வு இல்லாத போட்டி sportive attitude என்று தோன்றுகிறது.     

9, பிறர் நலம் பேணுதல் பொதுநலம் காத்தல் இது நூற்றுக்குநூறு நடைமுறை வாழ்க்கையில் பொருந்தி வருமா ?


ஒரு சிறு அளவிலாவது இவை இருத்தல் நலம் - இருக்கும்.

& தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும்! சுயநலம் (அது பொருளாசையோ அல்லது புகழாசையோ) இல்லாத பிறர் நலம், பொது நலம் எல்லாம் நூற்றுக்கு நூறு கதைகளில் மட்டுமே சாத்தியம். வாழ்க்கையில் கிடையாது என்பது என் வாதம்.   

10, எது ரொம்ப சுலபம் ? ஒருவரை சந்தோஷப்படுத்துவதா ? அல்லது ஒரே வார்த்தையில் அவரை சுருண்டு விழ வைப்பதா ?


# சுலபம் என்று பார்த்தால் அடுத்தவரை மகிழ்வித்தல்தான்.

& ஒரே வார்த்தையில் சுருண்டு விழக்கூடிய ஆளை சந்தோஷப்படுத்துதல் சுலபம் - அவர் சுருண்டு விழக்கூடிய வார்த்தையை சொல்லாமல் இருந்து! 

திண்டுக்கல் தனபாலன் : 

1) ஈவு இரக்கம் இல்லாமல் நாட்டு மக்களிடம் கொள்ளை அடிப்பவர்களை, கேவலம் - பணத்திற்காக கொலை செய்பவர்களை, காமக்கொடூரர்களை... சுருக்கமாக நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சக செயல் செய்யும் சில கொடியவர்களை தண்டித்து, அவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்ற வேண்டியது ஒரு அரசின் பொறுப்பு... தகுந்த தண்டனை கொடுத்தும் மாறவில்லையெனில், மரண தண்டனையே சரி... அது ஒரு விவசாயி களையைக் களைந்து, பசுமையான பயிரைக் காப்பதற்குச் சமம்...


தகுந்த தண்டனை சரி தான்... களைகள் முளைக்க ஆரம்பித்தவுடன் கண்டறிந்து வேரோடு எடுக்க வேண்டியது அவசியம் தான்... ஆனா ஒரு அரசாங்கமே களைகளாக மாறி விட்டால்...? மக்களுக்கு நல்லது செய்யலேன்னா எப்படி...? தொடர்ந்து மக்களை துன்புறுத்துற செயல்களை செய்றது, கொலையே தொழிலா செய்ற கொலைகாரனை விட கொடியது... அவர்களுக்கெல்லாம் தண்டனை என்ன...?


கலியுகத்தில் நீதி அனைவருக்கும் சமமாக இராது. நேர்மை குறைந்தோரின் கை ஓங்கி இருக்கும்.  மைனாரிட்டியான நெறியாளர்கள் வம்பில் மாட்டிக் கொள்ளாமல் ஒதுங்கி இருக்கும் நிலைக்குத் தள்ளப் படுவர்.

2) ஒரு ஆட்சியாளனின் தொழில் என்னவென்றால், குற்றம் செய்து விட்டால் அது யாராக இருந்தாலும், அதற்கு சரியான தண்டனை வழங்குவது தான்... அதோடு, குற்றம் இல்லா நாட்டை உருவாக்கி விட்டால் ஆட்சியாளன் மீது குற்றமில்லை...

யாராக இருந்தாலும்...? ஏம்பா எரிச்சலை கிளப்புறே... நீதிங்கிறது எல்லோருக்கும் சமமாயிருக்கா...?

& ஆட்சியாளர் தண்டனை வழங்குவது என்பதெல்லாம் மன்னராட்சி காலம். அப்போதெல்லாம் நீதிமன்றம், நீதிபதி, வக்கீல்கள் கிடையாது. வக்கீல்கள் வந்த காலத்திலிருந்து சட்டப் புத்தகங்களின் ஓட்டைகள் வழியே ஒட்டகங்கள் கூட சந்தோஷமாகத் தப்பிக்கலாம். 

கீதா சாம்பசிவம் : 

பெரும்பாலான பெண்கள் கணவனிடம் எல்லாமும் வாங்கி அனுபவித்திருப்பார்கள்/ அனுபவிப்பார்கள். கேட்டு வாங்கிக் கொள்வார்கள். ஆனால் தங்கள் பிள்ளை சம்பாதிக்க ஆரம்பித்த பின்னர் கணவனிடம் ஓர் அலட்சியம் காட்டுவார்கள்/ காட்டுகின்றனர்/கண்கூடாகப் பார்த்திருக்கேன். அது ஏன்?

& நான் பார்த்தவரை எங்கள் சொந்தங்களில் அப்படி யாரும் இல்லை. கணவனிடம் அலட்சியம் காட்டும் பெண்கள் ஆரம்பத்திலிருந்தே அலட்சியம்தான். பி ச ஆ மு --- பி ச ஆ பி எல்லாம் கிடையாது. கணவனுடன் அனுசரணையாக வாழ்பவர்களும், ஆரம்பம் முதல் கடைசி வரை அப்படியே. 

அதே பிள்ளை கல்யாணம் ஆனதும் மாறி விடுவதையும் பெண்கள் கண்கூடாகக் கண்டிருப்பார்கள்.ஆனாலும் பிள்ளையைக் குற்றம் சொல்லாமல் வந்த மருமகளைக் குற்றம் சொல்லுவது ஏன்? இதையே தங்கள் வாழ்க்கையில் தங்கள் கல்யாணம் ஆன சமயம் பார்த்திருப்பார்களே! அப்புறமும் ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்?


& கல்யாணம் ஆன பின் எந்தப் பிள்ளையும் மாறுவது இல்லை. அவர்களின் priority மாறுகிறது. பெண்ணின் அம்மா, அப்பா கல்யாணத்திற்குப்பின், பெண்ணுடைய priority மாறுவதை ஏற்றுக்கொள்கிறார்கள். இன்னும் பார்க்கப்போனால், கிட்டத்தட்ட பெண் கல்யாண வயது அடைந்த காலத்திலிருந்தே அவளின் பெற்றோர் இந்த மனநிலைக்கு வந்து விடுகிறார்கள். ஆனால், பையனின் அம்மா அப்பா, பையனின் priority மாறுவதை இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை. இதில் மருமகளை குற்றம் சொல்வதில் அர்த்தம் இல்லை. 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

காவேரி தென்பெண்ணை பாலாறு, தமிழ் கண்டதோர் வைகை,
பொருனை என்று பல நதிகள் தமிழ் நாட்டில் ஓடினாலும் காவேரிக்கு கொடுக்கும் மகத்துவத்தை தமிழர்கள் மற்ற நதிகளுக்கு தருவதில்லையே?


ஆறுகளை மக்கள் கொண்டாடாமல் இருந்ததில்லை. அண்மையில் கூட தாமிரவருணி புஷ்கரம் அமர்களப்பட்டதே! கடலூரில் "ஆற்றுத் திருவிழா" என்று தடபுடலாக கொண்டாடுவதைக் கண்டிருக்கிறேன். அழகர் ஆற்றில் இறங்குவது, ஆடிப் பெருக்கு இப்படியாக நதிகளுக்கு முக்கியத்துவம் நிறையவே கொடுக்கப்பட்டிருக்கிறது.

காவேரியின் சிறப்புக்கு அதைக் கொண்டு பாசனம் பெற்று வரும் மாபெரும் நிலப்பரப்பு காரணமாக இருக்கலாம். 'நடந்தாய் வாழி காவேரி' என்று காவியத்தில் பாடப்பெற்றிருக்கிறதே. கர்நாடகா அணைகள் சமீபத்தியவை. அதற்கு முன் ஏன், இப்போதும்  சோழதேசத்துக்கு காவிரிதான் உயிர்நாடி. எனவே அது கொண்டாடப் படுவது இயல்பாகிப் போனது. இளங்கோவடிகள், அகஸ்தியர், பிள்ளையார் என்று பெரிய இடத்து சம்பந்தம் வேறு சேர்ந்து கொண்டது.

& சரிங்கோ. நம்ம வேண்டுமானா - சென்னைக்காக இப்படி ஒரு பாட்டு இயற்றிடலாமுங்கோ !

கூவம் பக்கிங்ஹாம் அடையாறு 
பாவம் கொண்ட அழுக்காறு 
நாற்றமுடை ஆறுபல ஓடியே
மாற்றமிலா சென்னை வாழியே!


கீதா சாம்பசிவம் : (நம்ம ஏரியா பதிவில் கேட்ட கேள்வி ) 

 நீங்க சாப்பிட்டவற்றுக்குள் அசோக் லேலான்ட் கான்டீன் சாப்பாடு நல்லா இருக்குமா? இல்லைனா வீட்டுச் சாப்பாடா? வீட்டிற்கு வந்து ராத்திரி சாப்பிடுவீங்களா? அப்போ கான்டீன் சாப்பாடு நினைவு வரும் இல்லையா?


இதற்கு வேறு யாரும் பதில் அளிக்க முடியாது என்பதால் .... நானே சொல்கிறேன்:

அ லே காண்டீன் சாப்பாடு கல்யாண சாப்பாடு போல. அதாவது ஒவ்வொரு நாளும் எட்டாயிரம் பேர்களுக்கும் மேலாக தயார் செய்யப்பட்ட உணவு. பெரும்பாலும் அங்கே சூடுதான் சுவை. பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஹிண்டாலியம் தட்டுகளில் வரிசையில் நின்று, ஒரு பட்டை சாதம். ஒவ்வொரு பகுதியிலும் சொர்ரென்று ஊற்றப்படும் குழம்பு, ரசம், போனால் போகிறது என்று ஹிண்டாலிய டம்ப்ளரில் ஊற்றிக் கொடுக்கப்படும் நீர் மோர். சுமந்து வந்து, இடம் பார்த்து உட்கார்ந்து, சாப்பிடவேண்டும். 

வீட்டு சாப்பாடு என்பது நமக்காக, நமக்கு எது பிடித்த உணவு என்று பார்த்து அம்மாவோ - பின் நாட்களில் மனைவியோ தயார் செய்யும் உணவு. அது பழைய சோறாக இருந்தால் கூட தேவாமிர்தம்தானே! வீட்டில் சாப்பிடும்பொழுது காண்டீன் சாப்பாடு நினைவு நிச்சயம் வராது. எங்கள் இந்த வாரக் கேள்வி. 

அதே ரூம். அதே பல்புகள். (N, E, W, S.) அதே நிபந்தனைகள்.  வெளியே உள்ள ஸ்விட்சுகளின் பெயர்கள் A B C D. ஆனால், எந்த ஸ்விட்ச் எந்த பல்புக்கானது என்று தெரியாது. அது குளிர்சாதனம் பொருத்தப்பட்ட அறை.  மரக்கதவு மூடியே இருக்கும். (ஏன் குளிர்சாதனம் பொருத்தினேன் தெரியுமா? வெயில் காலம் என்பதால் மட்டும் அல்ல, எந்த பல்பும் சுவிட்சை அணைத்த ஒரு நிமிட நேரத்தில் அறையின் குளிர் நிலைக்கு வந்துவிடும். அதிக வெப்பம் குறைந்த வெப்பம் உள்ள பல்பு என்று எதையும் அடையாளம் காண இயலாது. ) 

ஒரே முறைதான் அறையில் நுழைந்து வெளியேறலாம். உங்களுக்கான கேள்வி இதுதான் : 

உங்கள் கையில் N, E, W, S என்று நான்கு ஸ்டிக்கர்கள் கொடுக்கப்படும். நீங்கள் வெளியே உள்ள ச்விட்சுகளுக்குக் கீழே 
எந்த சுவிட்ச் எந்த பல்புக்கானது என்று சரியாக ஸ்டிக்கர் ஒட்டவேண்டும். 

உங்களால் முடியுமா? எப்படி? 

சென்ற வாரம் பல்பு கழற்றி, மாட்டத் தெரியாது என்று கழண்டு ஓடினவர்களும் பங்கு பெறலாம். வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைதான். 
ஆனால் - தேவை : சிந்திக்கும் திறன் மட்டுமே! 


மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்! 


75 கருத்துகள்:

 1. காலை வணக்கம் எல்லோருக்கும்...

  புதிர் என்றால் டிடி தான் முதலில் விடை சொல்லிவிடுவார். டிடிக்கு வாழ்த்துகள்!

  கீதா  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் KGG அவர்களுக்கு வணக்கம்...

   அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

   நீக்கு
  2. காலை வணக்கம் எல்லோருக்கும்...

   நீக்கு
 2. சுதந்திரம் பற்றிய கேள்விக்குன பதில் மிகவும் அருமை.

  பதிலளிநீக்கு
 3. வாழ்க நலம்...
  இன்று உலக சிட்டுக் குருவிகள் நாள்..
  சிற்றுயிர்கள் மீது இரக்கம் கொண்டு
  புல்லையும் பூண்டையும் வாழ வைப்போம்...

  பூமிப் பந்தினைக் காத்து நிற்போம்...

  பதிலளிநீக்கு
 4. கூவத்தைப் பற்றிக் கூவிப் பாடிய பாட்டை ரசித்தேன்..

  மற்றவற்றிற்கு வருகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
 5. >>> தப்பி ஓடிய மீதி பேர் எல்லாம் இந்த வாரம் பதில் அளிக்க முயற்சி செய்யுங்க!..<<<

  அத்தோடு கேள்விக்குப் பதிலையும்
  சொல்லி வைப்போம்!..

  தெரிஞ்சாத்தான் அப்பவே சொல்லியிருப்பேனே!..
  வச்சிக்கிட்டா வஞ்சனை செய்யறேன்!?..

  பதிலளிநீக்கு
 6. >>> வெறும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைதான்...<<<

  தேர்தல் நேரமாச்சே... போஸ்டர் ஒட்ற வேலை ஏதாவது கெடைக்கும்..ன்னு நினைச்சேன்...

  வெறும் ஸ்டிக்கர் ஒட்டுற வேலை தானா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடக் கடவுளே! வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகிவிட்டதே!

   நீக்கு
  2. துரை அண்ணே ஸ்டிக்கர் ஒட்டுறதுதான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமாக்கும்!!!! இப்ப இலவசம் எதுவும் இல்லையோ??!!!

   கீதா

   நீக்கு
 7. கூவம் பக்கிங்ஹாம் அடையாறு
  பாவம் கொண்ட அழுக்காறு
  நாற்றமுடை ஆறுபல ஓடியே
  மாற்றமிலா சென்னை வாழியே!..

  தருமமிகு சென்னை இப்படி ஆகிப் போனதே...

  ஆறுகள் அழிந்த இடத்தில் கலாச்சாரமும் அழிந்து போகுமே..

  சென்னையும் அப்படித் தானோ?...

  ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் - என்பது ஔவையின் வாக்கு!..

  பிறகு ஏன் சென்னையைக் கொண்டாட வேண்டும்!...

  ஒரு ஆற்றை அழகாக வைத்துக் கொள்ளத் தெரியாத மக்கள்- அரசு!?...

  பதிலளிநீக்கு
 8. சுதந்திரம் பற்றிய கேள்விக்கு பதில் சிறப்பு.

  மற்றவையும் ஸ்வாரஸ்யம்.

  புதிர் - நான் இந்த விளையாட்டுக்கு வரல!

  “அதோ அங்க பாருங்க... முதலா நான் தான் ஓடறேன்!”

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //// அதோ அங்க்ச் பாருங்க.. முதலா நான் தான் ஓடறேன்!...////

   எனக்கு முன்னால தான் யாருமே ஓடலையே!....

   நீக்கு
 9. சும்மா ஏதாகிலும் பதில் சொன்னால்தான் என்ன? இங்கே யாரும் யாரையும் கேலி செய்யப்போவதில்லை. அப்படி இருக்கையில் எந்த பதிலாக இருந்தாலும் பாராட்டுக்குரியதே! It is always better to try and fail than leaving anything not trying.

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 11. அனைத்து கேள்விகளும், பதில்களும் அருமை.

  //" மாணவர்களுக்கிடையே படிப்பில் போட்டி இருக்கலாம் - ஆனால் பொறாமை இருக்கக்கூடாது" //

  நன்றாக சொன்னார்கள் உங்கள் அண்ணன்.


  இன்று காலை ஸ்ரீ சேஷமலர் புத்தகம் படித்துக் கொண்டு இருந்தேன்.

  அதில் 25. 07. 1987 சனிக்கிழ்மை ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமத்தில் ஆன்மீக மாணவர் பயிற்சி மையம் நடைபெற்ற போது மாண்வர்களுக்கு உமாதேவி அம்மையார் ஆற்றிய உரையை போட்டு இருந்தார்கள். மாணவர்களுக்கு நிறைய அறிவுரைகள் சொல்லி இருந்தார்கள், அதில் பொறாமை படக்கூடாது, நல்லா படிக்கும் பிள்ளையைப் பார்த்து பொறாமை படக்கூடாது, அது அவனை கெட்ட வழியில் போய் அவனை பாஸாக விட கூடாது என்ற கெட்ட தீய் எண்ணத்தை கொடுத்து விடும்.

  அழுக்காறு இளம் பிராயத்தில் மனதிலே புகுந்து விட்டால் அது பிற்காலத்தில் வேலை செய்யும் இடத்தில் நாம் முன்னேறி போவதற்கு நமக்கு முன்னாடி இருப்பவர் தடையாக இருக்கார், அவர் பேர்ல ஏதாவது தப்பு எழுதிப் போட்டு அவரை வேலையிலே இருந்து நீக்கம் செய்து விட்டு நமக்கு அந்த பதவி வருகிறதா என்று பார்க்கலாம் என்ற கெட்ட எண்ணமாய் வளரும்.

  இளம் பிராயத்தில் நல்ல எண்ணங்க்களை வளர்க்கணும் என்று போகிறது அவர் உரை.

  பதிலளிநீக்கு
 12. //வக்கீல்கள் வந்த காலத்திலிருந்து சட்டப் புத்தகங்களின் ஓட்டைகள் வழியே ஒட்டகங்கள் கூட சந்தோஷமாகத் தப்பிக்கலாம். //

  அதைதான் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
  எளியவனுக்கு ஒரு நீதி, வலியவனுக்கு ஒரு நீதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கோமதி அரசு அவர்கள் மிக நன்றாகச் சொல்லியிருக்கிறார்கள்..

   சட்டப் புத்தகங்களின் ஓட்டைகளில் டைனசர்களே நுழைந்து போகின்றன...

   ஆனாலும்
   இது மனுநீதிச் சோழன் வாழ்ந்த மண் என்பதையும்,

   அறம் பிழைத்தோர்க்கு அறமே
   கூற்றாகும் என்பதையும் மறந்து விடுகிறார்கள்....

   நீக்கு
  2. அதெல்லாம் ஏட்டுப் படிப்பு துரை சார்! கோர்ட்டுப் படிப்பு வேற ஆயிடுச்சு. பேய்கள் ஆளவந்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

   நீக்கு
  3. சகோ துரைசெல்வராஜூ , சட்டப்புத்தகம் ஓட்டைப் பற்றி அழகாய் கருத்து சொன்னது கெளதமன் சார்.
   அதை எடுத்துப் போட்டு என் கருத்தை சொன்னேன்.

   நீக்கு
  4. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கேள்விக்கு சார் அளித்த பதில்

   நீக்கு
 13. //சோழதேசத்துக்கு காவிரிதான் உயிர்நாடி. எனவே அது கொண்டாடப் படுவது இயல்பாகிப் போனது. இளங்கோவடிகள், அகஸ்தியர், பிள்ளையார் என்று பெரிய இடத்து சம்பந்தம் வேறு சேர்ந்து கொண்டது.//

  அருமையான பதில்.

  நீர் நிலைகளையும் கொண்டாட பட வேண்டும். குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பது போல்.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கோமதி அரசு அவர்களது கருத்துக்கு நன்றி..

   மீனாளின் திருமணத்தன்று
   சுந்தரேசனின் திருவருளால்
   பொங்கிப் பெருகியவள் வைகை எனும் குல மங்கை..

   மாண்பினை அறியாத மக்களால் பாழ்பட்ட நதிகளுள் வைகையும் ஒன்று....

   நீக்கு
 14. N, E, W, S
  இதில் உள்ள வரிசைபடி ஒட்டி விடுவேன்.

  பதிலளிநீக்கு
 15. வெளியே இருந்து உள்ளே செல்லும் போதே முதல்ல எது எந்த திசை என்பதைப் பார்த்து வைத்துக் கொண்டு...உள்ளே உள்ள பல்புகளின் திசை தெரிஞ்சுகிட்டு.....அதை வைச்சு (இங்கதான் குயப்பம் இருந்தாலும் சும்மா ஒரு முயற்சி அம்புட்டுதேன்...) வரிசைப்படுத்தி ஸ்விச்சுகளில் ஒட்டிவிடுவேன்!! (தப்பா பல்பு எரிஞ்சா என்னைய சொல்லப்புடாது சொல்லிப்புட்டேன்...ஏன்னா என் மூளைல இருக்கற பல்பு அப்படித்தானே எரிஞ்சுச்சு!! ஹிஹிஹி)

  கீதா

  பதிலளிநீக்கு
 16. Only a fearless, free and calm mind can be creative. //

  செம விடை! ரசித்த விடை.... நான் அடிக்கடி இதைத்தான் சொல்லுவது. !!

  பல இசையமைப்பாளர்கள், எழுத்தாளர்கள் எல்லாம் ரூம் போட்டுத்தான் தங்கள் படைப்புகளைப் படைப்பதுண்டுனு கேள்விப்பட்டதுண்டு.,...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரூம் போட்டா பயம் போய், சுதந்திர உணர்வு வந்திடுமா! அவர்கள் ரூம் போடுவதற்கு வேறு காரணங்கள் உள்ளன!

   நீக்கு
 17. எனவே நம் சுதந்திரம், மற்றவர்களின் சுதந்திரத்தை பாதிக்கக்கூடாது. அம்புடுதேன்! //

  // பொறாமையால் விளையும் போட்டி என்பது envious attitude, பொறாமை உணர்வு இல்லாத போட்டி sportive attitude என்று தோன்றுகிறது. //

  அப்படியே அதே! சரியாகச் சொன்னீங்க...

  பிறரை மகிழ்வித்தல்.......சுருண்டு விழக்கூடிய வார்த்தயைச் சொல்லாமல் இருந்து// நல்ல பதில்கள்.

  பள்ளிகளில் மாரல் ப்ரீச்சிங்க் என்றில்லாமல் கதைகள் மூலமும், சில செயல்பாடுகள் மூலமும் வகுப்புகள் இருந்தால் நல்லது. ஒரு குறிப்பிட்ட மதத்தின் கதைகள் என்றில்லாமல் எல்லா மதத்திலும் உள்ள மாரல் கதைகள் அல்லது மத அறிகுறிகள் இல்லாத நன்னெறிக் கதைகள், சில செயல்பாடுகள் என்று எல்லாப் பள்ளிகளில் இருந்தால் நல்லது.

  கீதா

  பதிலளிநீக்கு
 18. //தவறான வழியில் பயன் படுத்தும்போது மட்டுமே கவனிக்கப் படுகிறோம்.//
  என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? நல்ல விஷயத்தை தேர்வு செய்து வெற்றி பெற்றவர்களின் பெட்டிகளை நீங்கள் படித்ததில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருவாளர் # கிட்ட சொல்றேன். அவர் என்ன சொல்கிறார் பார்ப்போம்!

   நீக்கு
 19. //கல்யாணம் ஆன பின் எந்தப் பிள்ளையும் மாறுவது இல்லை. // .. //ஆனால், பையனின் அம்மா அப்பா, பையனின் priority மாறுவதை இயல்பாக ஏற்றுக்கொள்வதில்லை.// --- சிறப்பு

  //சோழதேசத்துக்கு காவிரிதான் உயிர்நாடி. எனவே அது கொண்டாடப் படுவது இயல்பாகிப் போனது. இளங்கோவடிகள், அகஸ்தியர், பிள்ளையார் என்று பெரிய இடத்து சம்பந்தம் வேறு சேர்ந்து கொண்டது.// --- ரசிப்பு

  பதிலளிநீக்கு
 20. உங்களின் கேள்வியை என்னால் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை... // (ஒரே முறைதான் அறையில் நுழைந்து வெளியேறலாம்) // எதற்கு...?

  (காம்பஸ் துணை இல்லாமல்) திசைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று படித்துள்ளேன்...

  சூரியனை வைத்து அனைவருமே திசையை சொல்லி விடுவார்கள்... சூரியன் மேலே இருந்தால் திசைகளை சரியாக அறிந்து கொள்வது சிறிது கடினமே..! இருந்தாலும்...

  1. முதலில் ஒரு சிறிய குச்சியை செங்குத்தாக மண்ணில் ஊன்றி வைத்துக் கொள்ள வேண்டும்...
  2. அக்குச்சியின் நிழல் உச்சியை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்...
  3. 10-15 நிமிடம் கழித்து அந்த குச்சியின் நிழல் சற்று விலகி இருக்கும்...
  4. அதன் உச்சியையும் குறித்து வைத்துக் கொண்டு, இரண்டு குறியீடுகளையும் நேர்கோட்டின் மூலம் இணைக்க வேண்டும்...
  5. முதலில் குறித்த இடத்தில் இடது காலையும், இரண்டாவது குறித்த இடத்தில் வலது காலையும் வைத்து நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும்...
  6. நம் முகம் எந்த திசை நோக்கி இருக்கிறதோ, அது வடக்கு திசை... பின்புறம் தெற்கு திசை... இணைத்து வரைந்த நேர்கோடு கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை...

  இதிலே ஒரு சந்தேகம் உள்ளது...? இரவில்...? அதுவும் அமாவாசை அன்று...?

  மனித வளர்ச்சியின் அடிப்படையே பயணம் தான்... அதற்கு முக்கியமாக தேவைப்படுவது திசை... அந்தக் காலத்தில் மாலுமிகள் சூரிய, சந்திர, நட்சத்திரங்களின் உதவியோடு கப்பலைச் செலுத்தி உள்ளார்கள்... அவர்களின் வியக்க வைக்கும் ஒரு கண்டுபிடிப்பு :- விடியற்காலையில் மங்கலாகத் தெரியும் நட்சத்திரங்களின் அடிப்படையில், சூரியன் எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதை...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்வி திசை தவறிப் போய்விட்டதுபோலத் தோன்றுகிறது. N E W S என்பது பல்புகளைக் குறிக்க ஒரு குறியீடு. அவ்வளவுதான். வேண்டுமானால் P Q R S என்றும் வைத்துக்கொள்ளலாம். அறைக்குள் ஒரே முறை நுழைந்து, பல்புகளை ஆராய்ந்து - வெளியே வந்து, எந்தெந்த ஸ்விட்ச் எந்தெந்த பல்புக்கானது என்பதைக் கண்டுபிடித்து, அந்தந்த சுவிட்சின் மீது அதற்குரிய பல்பின் ஸ்டிக்கரை ஒட்டவேண்டும். இதுதான் Task. Have I made myself clear on the subject?

   நீக்கு
  2. ஓ கௌ அண்ணா இப்பத்தான் புரியுது. எனக்கும் முதலில் நான் திசை என்றே நினைத்துவிட்டேன்...கீழ பானுக்காவும் அதே புரிதலில் தான் சொல்லிருக்காங்க.. ஆஹா!!!

   ஆஹா அப்ப திரும்பவும் முதலேர்ந்தாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ!!!

   கீதா

   நீக்கு
 21. ஒரு உதாரணத்திற்கு அந்த அறை கிழக்குப் பார்த்த அறையாக இருந்தால், உள்ளே நுழைந்ததும் நமக்கு பின்னல் இருக்கும் சுவர் கிழக்கு பக்க சுவர் அதை முதல் சுவர் என்று கொண்டு 'E ' ஸ்டிக்கரை முதல் ஸ்விட்சின் கீழ் ஒட்டுவேன். அடுத்து வருவது தெற்குப் புற சுவர். எனவே இரண்டாவது ஸ்விட்சின் கீழ் 'S' ஸ்டிக்கர். அதைத் தொடர்ந்து வருவது மேற்கு புற சுவர். ஸோ, மூன்றாவது ஸ்விட்சிங் கீழ் 'W" ஸ்டிக்கர் வரும். கடைசியாக வருவது வடக்குப் புறச்ச சுவர். மிச்சமிருக்கும் 'N' ஸ்டிக்கர் அங்கு.

  அந்த அறையின் வாயில் எந்த திசை நோக்கி இருக்கிறது என்பதை பொருத்து இது மாறும்.

  இதில் இன்னொரு முக்கியமான விஷயம் நான் சொல்லியிருக்கும் முறைப்படி ஸ்டிக்கர் ஒட்ட அந்த அறைக்குள் போக வேண்டிய அவசியம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல முயற்சி ...... ஆனால் பாருங்க - சுவிட்சுகளோ அல்லது பல்புகளோ எந்த வரிசையிலும் அமைக்கப்படவில்லை. வடக்கு பக்கம் பொருத்தி இருக்கின்ற பல்பு N என்று இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அதுபோல, முதல் சுவிட்ச் கிழக்குப் பக்கம் இருக்கின்ற பல்புக்காக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. அறையில் நுழையாமல், எந்த சுவிட்ச், எந்த பல்புக்கானது என்று தெரிந்துகொள்ள இயலாது. ஆனால் ---- ஒரே முறைதான் அறைக்குள் நுழைந்து பல்புகளை ஆராய இயலும்.

   நீக்கு
 22. பல்புகள் என்றதும் குண்டு பல்புகள் என்று நினைத்துக் கொண்டு விடுகிறோம். அந்த அறையில் பொருத்தப் பட்டிருக்கும் நான்கு பல்புகளும் நான்கு வகையாக இருந்தால்? உதாரணமாக ஒன்று ட்யூப் லைட், ஒன்று குண்டு பல்ப், ஒன்று எனர்ஜி சேவிங் லாம்ப், ஒன்று நைட் லாம்ப் என்று இருந்தால், எனர்ஜி சேவிங் லாம்புக்கான சுவிட்ச் E, நைட் லாம்புக்கான சுவிட்ச் N, ட்யூப் லைட்டை ஸ்லிம் எனக்கொண்டு அதற்கான ஸ்விட்சை S என்று குறிக்கலாம், வேஸ்ட் லைட் இது W ஸ்டிக்கரை ஒட்டி விடலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கற்பனை. ஆனால் போன புதன் பதிவில் என்ன பல்புகள் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்.

   நீக்கு
 23. பெரும்பாலும் கேள்வி கேட்பவர்களுக்கு அவர்களிடமே பதிலும் இருக்கும் அவர் நினைக்கும் பதி வந்தால்மகிழ்ச்சி இன்னொரு வகை பதில் சொல்பவர்கள்தன்னை விட டெரிந்தவரா என்று கண்டு கொள்ள இதெல்லம் நான் நினைப்பது நோ எம்பைரிகல் போயிண்ட்

  பதிலளிநீக்கு
 24. என் நிலை அப்படிப்பட்டது இல்லை. நான் எப்பவும் எங்கள் வாசகர்களுக்கு சொல்லும் விஷயம் : Don't stop with one right answer. There would be more right answers. That is the first lesson in the development of creativity.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே ..ஒரு கேள்விக்கு இரண்டுக்கும் மேலே பதில்கள் இருக்கும்

   நீக்கு
  2. சரியாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள், நன்றி.

   நீக்கு
 25. கேள்வி பதில்களை ரசித்தேன். கீசா மேடத்தின் கேள்விக்கான பதில் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
 26. //அப்போ கான்டீன் சாப்பாடு நினைவு வரும் இல்லையா?// - கேஜிஜி சார் சொல்லியிருப்பது சரிதான். வீட்டிலோ அல்லது மற்ற இடங்களிலோ சாப்பிடும்போது வேறு இடத்தின் ஞாபகம் எப்படி வரும்? நானெல்லாம் நான் வேலை பார்த்த ஃபேக்டரியில் மூன்று வேளையும், சமயத்தில் நாலு-ஐந்து வேளையும் சாப்பிட்டிருக்கேன். (காலை 8 மணி-டிபன்-30 அல்லது 40 பைசா ஆகும், 12 மணி லஞ்ச் 1 ரூபாய் 10 பைசா, 4 மணி டீ-அப்போ 15 பைசாக்கு 1 கரண்டி உப்புமா வீதம் 3 கரண்டி உப்புமா, இரவு 7:30க்கு ஸ்பெஷல் பெர்மிஷனில் டின்னர், அதே 1 ரூபாய் 10 பைசா சாப்பாடு, அப்புறம் நானே என் ஆர்வத்தில் 8:30 மணிலேர்ந்து என் ஆபீசில் ப்ரோக்ராம் எழுதுவேன். இரவு 12 மணிக்கு சுடச் சுட இட்லியும் சட்னியும் சாப்பிட்டுவிட்டு பிறகு என் அறைக்குத் திரும்புவேன் (தூங்குவதற்கு). அந்த வயது அப்படி, கடுமையாக உழைப்பதில் ஆர்வம்.

  பதிலளிநீக்கு
 27. //சேவியர் சிப்லிங்ஸ் // - இதை இப்போதுதான் தெரிந்துகொண்டேன். கேட்கவே அச்சமா இருக்கு. ஒரு குழந்தையைக் கொன்று இன்னொரு உயிர் பிழைக்கணுமா? என் புரிதல் சரிதானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. A savior baby or savior sibling is a child who is born to provide an organ or cell transplant to a sibling that is affected with a fatal disease, such as cancer or Fanconi anemia, that can best be treated by hematopoietic stem cell transplantation. The savior sibling is conceived through in vitro fertilization.

   நீக்கு
  2. சிப்லிங்கின் உடல் உறுப்புகள் திசுக்கள் எலும்பு மஜ்ஜை ஆகியவை மட்டுமே உடல் நிலை பாதித்த மூத்த குழந்தைக்கு பயன்படுத்துவார்கள் .
   my sisters keeper என்றொரு மூவியும் வந்தது இதுபற்றி ,இதெல்லாம் இங்கே 9 ஆம் வகுப்பில் மகள் ஸ்கூலில் சொல்லிக்கொடுத்தது அவதான் எனக்கு எக்ஸ்ப்ளைய்ன் செஞ்சா .அவளோட ப்ரண்ட் சிக்கில் செல் அனீமியாவால் பாதிக்கப்பட்டவ 10 வருஷம் கழிச்சி இன்னொரு குழந்தைக்கு முயற்சித்திருக்காங்க பெற்றோர் மூத்த குழந்தையின் நோயை குணமாக்க இரண்டாவது குழந்தையின் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்ய ஆனா பாவம் சிக்கில் செல் நோய் ஜெனெடிக்கா வந்து இரண்டாவதையும் பாதிச்சு .இப்போ பேரண்ட்ஸுக்கு இரண்டு குழந்தைகளையும் அதி கவனமா பார்க்க வேண்டிய கட்டாயம்

   நீக்கு
  3. ஏஞ்சலின் - இரண்டாவது குழந்தைக்கு இதனால் பாதிப்பில்லையா (உடல் உறுப்புகள், திசுக்கள், எலும்பு, மஜ்ஜை போன்றவற்றை உபயோகப்படுத்துவதால்)? அது பிற்காலத்தில் நினைக்காதா? மூத்தவனின் உபயோகத்துக்காக உலகில் பிறந்ததை? அதுபோல டெஸ்ட் டியூப் பேபி, மாற்று விந்தணு சேர்ப்பு - இதையெல்லாம் கொஞ்சம் ஆராய்ந்தால் சங்கடமாகத்தான் உணரமுடியுது

   நீக்கு
  4. நேரமிருந்தா அந்த மூவி சொன்னேனே மை சிஸ்டர்ஸ் கீப்பர் அது பாருங்க .அதை பிள்ளைங்களை பார்க்க வச்சு எஸ்ஸே எழுத வச்சாங்க ஸ்கூலில் .நீங்க சொன்ன அந்த //மூத்தவனின் உபயோகத்துக்காக உலகில் பிறந்ததை? // இந்த கேள்வியை இரண்டாம் குழந்தை பேசுவது போல் வருமாம் . post-traumatic stress கூட வருமாம் பிறக்கும்போது இன்ன காரணத்துக்குன்னு அசைன் செஞ்சி வருவது கஷ்டம்தான்

   நீக்கு
  5. எனக்கு என்னவோ இந்த XS வழி வகைகள் சரி எனப்படவில்லை. எங்கேயோ ஏதோ ஓர் உணர்வு இடறுகின்றது. அது என்ன என்று சொல்லத் தெரியவில்லை.

   நீக்கு
  6. எனக்கும் தான் .எதுனாலும் அது நல்லதோ கெட்டதோ கடவுள்கிட்டருந்து தான் வரணும் .
   சில பல விஷயங்களை ஏற்கும் எனது மனம் இதில் எனக்கும் தடுமாறுது

   நீக்கு
 28. என்னுடைய கேள்விகளுக்கு பதிலளித்த ஆசிரியர்க்குழுவிற்கு மனமார்ந்த நன்றீஸ் :)

  பதிலளிநீக்கு
 29. ஸ்டிக்கர் ஒட்டுறது பேனாவால் கிறுக்கறதுலாம் தப்பு :) நான் வரலை

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் சகோதரரே  இந்த வார கேள்விகளும், பதில்களும் எப்போதும் போல் அருமை.  நம் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவதற்கு கூறியுள்ள பதில்களை ரசித்தேன்.  மகிழ்ச்சி ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடுதலை பற்றி கூறுகையில்,  /மனிதரில் ஒருவருக்கொருவரிடையே இருக்கும் ஏக்கம் அல்லது ரசனை வெவ்வேறு லெவலில் இருக்கிறதே !  & மகிழ்ச்சி என்பது ஏதாவது ஒரு செயலை, செவ்வனே செய்து முடித்தல். இந்த மகிழ்ச்சியை படைப்பாளிகள் அடிக்கடி எய்துவர். என்ன கே. பதிலையும் ரசித்தேன்.  மற்றும் சகோதரி கீதா சாம்பசிவம், சகோதரர் திண்டுக்கல் தனபாலன் ஆகியோரின் கேள்விகளும், அதற்கு தாங்கள் அளித்த பதில்களும் மிகவும் நன்றாக உள்ளது.

  இந்த வாரமும் நாங்கள்"பல்பு" வாங்காமல் செல்லக்கூடாது என நினைத்து அதே "பல்பு" கேள்வி கேட்டுள்ளீர்கள் போலும். விடைகள் கூறிய அனைவருக்கும் நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 31. அனைத்துக் கேள்விகளும் அதற்கான பதில்களும் வழக்கம் போல் அருமை.

  கேள்வி.

  காரில் பயணம் செய்த போது இடையில் டயர் பஞ்சர் ஆகி ஸ்டெப்னியும் சரியாக இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் காட்டுப் பகுதி ரோடில் நின்ற அனுபவம் உண்டா? கார் பயணம் இல்லை என்றால் பேருந்தில் இப்படியான அனுபவம் ஏற்பட்டதுண்டா?

  படிக்கும் காலத்தில் பரீட்சைக்கு நேரம் தவறிச் சென்றதுண்டா? அல்லது பரீட்சையை அப்படி மிஸ் செய்ததுண்டா?

  பிடித்த சினிமாவை மீண்டும் மீண்டும் பார்க்கும் பழக்கம் உண்டா? நீங்களாவோ அல்லது டிவி சானலில் போட்டாலோ?

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 32. அனைவருக்கும் காலை வணக்கம். எல்லாக் கருத்துகளையும்
  படித்து ரசித்தேன். வீடு நிறைய விருந்தாளிகள்.

  சந்தோஷமும் அதிகம் வேலையும் அதிகம்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!