திங்கள், 25 மார்ச், 2019

"திங்க"க்கிழமை : புளிக்காய்ச்சல் - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி


புளிக்காய்ச்சல் என்னோட முறையில்!


சேச்சே! முறைத்தல் எல்லாம் இல்லைங்க! முறைனு சொன்னேன். அடடா! மறுபடி முறைக்கிறீங்களா? சரி, சரி, நான் செய்யும் வழக்கப்படினு வைச்சுக்கோங்க! இப்போச் செரியா? அப்பாடா! 

ஶ்ரீராம் "திங்க"ற கிழமைக்காக 4,5 முறை கேட்டுட்டார். படங்கள் சிலது அப்லோட் ஆகி இருக்கு. சில செய்முறைகளிலே அப்லோட் பண்ணலை. சிலது ட்ராஃப்ட் மோடில்! இஃகி, இஃகி! இஃகி! இந்த அழகில் எதை அனுப்பறதுனு ஒரே யோசனை. சரி உடனே அனுப்பறதுக்கு இதான் வசதினு என்னோட புளிக்காய்ச்சல் செய்முறையை எடுத்த படங்களை இணைத்து ஒரு பதிவு அனுப்பி வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.  நான் கொஞ்சம் வித்தியாசமானவள்னு உங்களுக்குத் தான் தெரியுமே! அதான் இந்தச் செய்முறையும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்! ஆனாலும் தி/கீதா, ரேவதி சிம்ஹன் போன்றவர்களுக்கு இது தெரிஞ்சிருக்கும். "அதான் எனக்குத் தெரியுமே!" என 2 பேரும் சொல்லப் போறாங்க பாருங்க! என்ன பேசிட்டே இருக்கே, இன்னும் ஆரம்பிக்கலையானு கேட்கறீங்களா? இதோ ஆரம்பிச்சாச்சு.




அளவெல்லாம் எனக்குச் சொல்லத் தெரியாது என்பதே உண்மை. ஹிஹி, அளக்கிற வழக்கமே இல்லையே!அதான். எல்லாம் கண்ணளவு தான்.ஆனாலும் இங்கே இந்த நெ.த., அதிரடி போன்றவங்களுக்கெல்லாம் அளந்து போட்டாலே பண்ணத் தெரியாது! இந்த அழகிலே கண்ணளவு என்றால் அவங்க அனுஷ்கா கண்ணளவா? தமன்னா கண்ணளவா என்பார்கள்.  ஆகையால் உத்தேசமாச் சொல்றேன்.



புளிக்காய்ச்சல் காய்ச்சத் தேவையான பொருட்கள்:

புளி    பழைய புளியாக இருத்தல் நலம். அல்லது பழம்புளி+புதுப்புளி கலந்து எடுத்துக்கலாம்.  ஒரு சின்ன கமலா ஆரஞ்சு அளவுக்கு எடுத்து நீரில் ஊற வைக்கவும். 

உப்பு, தேவையான அளவுக்கு.  மஞ்சள் பொடி இரண்டு டீஸ்பூன்.

தாளிக்க
 நல்லெண்ணெய்  ஒரு கிண்ணம்

மிளகாய் வற்றல்  காரமில்லாதது எனில் சுமார் 8 முதல் 10க்குள்

கடுகு  இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன் அல்லது கொண்டைக்கடலையைக் கழுவி ஒரு டேபிள் ஸ்பூன் அப்படியே எடுத்துக் கொண்டு எண்ணெயில் போட்டுப் பொரிக்கலாம்.

வேர்க்கடலை  ஒரு சின்னக் கிண்ணம்

கருகப்பிலை ஒரு கைப்பிடி, மஞ்சள் பொடி 2 டீஸ்பூன் அல்லது விரளி மஞ்சளை வறுத்துப் பொடிக்கும் சாமான்களோடு வறுத்துப் பொடிக்கலாம்.



வறுத்துப் பொடிக்க 

வெறும் வாணலியில் இரண்டு டீஸ்பூன் வெந்தயம்,2 டீஸ்பூன் கடுகு, 2 டீஸ்பூன் கறுப்பு எள் ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

நல்ல சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெயில் ஒரு டீஸ்பூன் மிளகு போட்டி வெடிக்க விட்டு வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டுக் கொள்ளவும்.

சுமார் 5 அல்லது 6 மிளகாய் வற்றல் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தாளிப்பில் மி.வத்தலைக் குறைத்துக் கொண்டு வறுத்துப் பொடிப்பதில் அதிகம் ஆக்கிக்கொள்ளலாம். நான் தாளிப்பில் 4 மிளகாய் வற்றல் மட்டுமே போடுவேன்.வறுத்துப் பொடிப்பதில் காரத்தைச் சேர்த்து விடுவேன். மிளகாய் வற்றலை விதை நீக்கி வறுத்தால் கமறல் வராது. காரமும் அதிகம் இருக்காது.  மி.வத்தல் கறுகாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்துக் கொத்துமல்லி விதை.



சுமார் 2 டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதையை எண்ணெயில் போட்டுச் சிவக்க வறுத்துக் கொள்ளவும். பெருங்காயத்தைப் பொரித்துக் கொள்ளவும். இப்போது வெறும் வாணலியில் வறுத்த சாமான்கள், நெய்யில் வறுத்த மிளகு ஆகியவற்றையும் இதோடு சேர்த்துக் கொண்டு நல்ல மென்மையான மிருதுவான பொடியாகப் பொடித்துக் கொள்ளவும். பொடியைத் தனியாக வைக்கவும்.





புளியை நன்கு கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.கடாய், உருளி அல்லது கல்சட்டியை அடுப்பில் வைத்து ஒரு கிண்ணம் நல்லெண்ணெயை ஊற்றவும். தாளிக்கும் மிளகாய் வற்றலை இரண்டாய்க் கிள்ளிக் கொண்டு உள்ளிருக்கும் விதைகளை எடுத்துவிட்டுக் காய்ந்த எண்ணெயில் முதலில் போட்டுக் கருப்பாகும் வரை வறுக்கவும். 







பின்னர் தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். கடைசியில் கருகப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். அல்லது வறுத்துப் பொடித்த பொடியோடு மஞ்சளையும் சேர்த்துப் பொடித்து வைக்கவும்.  பின்னர் கரைத்த புளிக்கரைசலை ஊற்றி உப்பையும் போட்டுக் கொதிக்க விடவும்.நன்கு புளி வாசனை போகக் கொதித்ததும் சலசலவென எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும்.




அப்போது வறுத்த பொடியைத் தேவையான அளவுக்குக் கண் திட்டமாகச் சேர்க்கவும். எல்லாப் பொடியையும் உடனே சேர்க்கவேண்டாம். பின்னால் சாதம் கலக்கும்போது தேவையானால் பொடியைப் போட்டுக் கலந்து கொள்ளலாம்.  புளிக்காய்ச்சல் ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் நீர்க்கவும் இல்லாமல் கரண்டியால் அள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும். ஒரு சிலர் நன்கு கொதிக்க விட்டு மி.வற்றல், தாளிதங்கள் மட்டுமே தெரியும்படி மிகவும் கெட்டியாக எடுப்பார்கள். இது அவரவர் விருப்பம். எங்க வீட்டில் கொஞ்சம் கெட்டியாக, கொஞ்சம் தளர எனக் கூட்டுப் பதத்துக்கு இருக்கும். 




இந்தப் புளிக்காய்ச்சலை சுமார் ஒரு மாதம் வரை வெளியேயே வைத்துக்கொள்ள முடியும். குளிர்சாதனப் பெட்டியில் இருந்தால் 2, 3 மாதம் கூட வைத்துக் கொள்ளலாம். புளிக்காய்ச்சல் காய்ச்சிய பின்னர் சாதத்தை விரைப்பாக வடித்துக் கொண்டு நல்லெண்ணெய், அரைடீஸ்பூன் உப்பு, பெருங்காயப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்துக் கிளறி ஆற வைத்துப் பின்னர் புளிக்காய்ச்சலைத் தேவையான அளவுக்குப் போட்டுக் கிளறி வைக்கலாம். ஊர்களுக்குப் போகும்போது கையில் எடுத்துப் போகலாம். வீட்டிலேயே ஒரு நாள் குழம்பு வைக்காமல் புளியஞ்சாதம் சாப்பிட்டுக்கலாம்.


கற்சட்டியில் புளிக்காய்ச்சல்....   பார்க்கையிலே நாவில் அருவி!


============================================================================================

யாரிவர்கள்?  





114 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம்!

    அட! இன்று கீதாக்காவின் புளிக்காய்ச்சலா !!
    பார்க்கணும் வரேன் வேலை பல இருக்கு முடித்துவிட்டு வருகிறேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அட! கடைசியில் ஏதோ சொல்லியிருக்கீங்க!!! நான் முதல்ல புளிக்காய்ச்சல் குறிப்புகள் ஏதாவது கலர் படத்தோடு வந்துருக்கோன்னு நினைத்துவிட்டேன்!!! ஹா ஹா ஹா

    அட! கதையா! எப்ப வரும்?! ஆஹா! கல்யாணவசந்தமா? முகாரியான முடிவானு பார்ப்போம்!

    கீதா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறு தொடர்கதை விரைவில்... பார்ப்போம். மற்ற விவரங்கள் பின்னர் சொல்கிறேன்.

      நீக்கு
    2. தில்லு முல்லு படத்தில் தேங்காய் சீனிவாசன் சொல்லும் வசனம் ஞாபகம் வருகிறது - " கரகரப்ரியா ராகத்தில், ஷண்முகப்ரியா ராகத்தைக் கலந்து அதில் ஆரோகணம் இழுத்து, அவரோகணத்தில் நிறுத்தினால் வருவது ஸ்ரீப்ரியாவா அல்லது சத்யப்ரியாவா என்று கேட்டான் பாரு, ....." (இதுதான் சரியான வசனமா என்று தெரியாது.- ஆனால் அதை அவர் சொல்வது நடிகை சத்யப்ரியாவிடம் என்பது மட்டும் ஞாபகம் இருக்கு) இந்தக் கதை அறிவிப்பைப் பார்த்தவுடன், அந்தக் காட்சி ஞாபகம் வந்தது!

      நீக்கு
    3. கரகரப்ரியா ராகத்தில், ஷண்முகப்ரியா ராகத்தைக் கலந்து அதில் ஆரோகணம் இழுத்து, அவரோகணத்தில் நிறுத்தினால் வருவது ஸ்ரீப்ரியாவா அல்லது சத்யப்ரியாவா என்று கேட்டான் பாரு,//

      ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ சிரிச்சு முடியலை கௌ அண்ணா....

      கீதா

      நீக்கு
    4. என்னனு யோசிச்சு வைங்க! அப்புறமா மெதுவா வரேன்.

      நீக்கு
  3. காலை வணக்கம்.

    ஆஹா இன்னிக்கு புளிக்காய்ச்சலா? சுவை.....

    தில்லிக்கு கொஞ்சம் பார்சல் ப்ளீஸ்......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வெங்கட்... கீதாக்கா இன்னும் ஊரிலிருந்து வரவில்லை போல...

      பார்சல்தானே? ஹெல்ப் யுவர்செல்ப் ப்ளீஸ்....

      நீக்கு
    2. ஹா ஹா ஹா வெங்கட்ஜி அப்படியே கல்சட்டியோடு பார்சல் பண்ணி எடுத்துட்டுப் போய்டுங்கனு ஸ்ரீராம் சொல்றார் பாருங்க!!!! (கல்சட்டி வெயிட்டா வேற இருக்கும்!!!)

      கீதா

      நீக்கு
    3. ஶ்ரீராம், நேத்து ராத்திரி வரச்சே ரொம்ப நேரம் ஆயிடுச்சு. இன்னிக்குக் காலம்பர எழுந்ததே லேட்டு! குஞ்சுலு வேறே வந்தது! அதான் இணையத்துக்கு தாமதமாய் வந்தேன்.

      நீக்கு
    4. வெங்கட், எடுத்துக்கோங்க!

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை வணக்கம். பின்னர் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. //இந்தப் புளிக்காய்ச்சலை சுமார் ஒரு மாதம் வரை வெளியேயே வைத்துக்கொள்ள முடியும்//

    வீட்டுக்கு வெளியேவா???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா, மதுரைத் தமிழரே, கொஞ்ச நாட்களா பூரிக்கட்டை ஓய்விலே இருக்கு போல! இஃகி, இஃகி! வீட்டுக்கு வெளியே போகும்போதும் கையில் கொண்டு போகலாமே! அப்படி வைச்சுக்குங்க! :)))))

      நீக்கு

  6. ///ஊர்களுக்குப் போகும்போது கையில் எடுத்துப் போகலாம்//

    அப்ப பெட்டியை ஹேண்ட் பேக்கை யார் எடுத்து செல்வது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெட்டியை எல்லாம் கார்கோவில் போடுவீங்க இல்லையா? அப்போ இதையும் சேர்த்துப் போட்டுட்டு எடுத்துட்டுப் போங்க! ")))))))

      நீக்கு
  7. புளிக்காய்ச்சல் செய்முறை விவரமாக்க் கொடுத்துள்ளீர்கள். நல்ல மணம். கொஞ்ச நாள் கழித்து இதே முறையில் செய்கிறேன்.

    கற்றுக் கொண்ட ஆரம்பகாலத்தில், மல்லிகா பத்ரிநாத் செய்முறையை வைத,து அப்படியே செய்துபார்த்த நினைவு வந்தது.

    திங்கள் வருவதனால் ஐந்து நாள் விடுமுறை எனச் சொன்னீர்களோ?

    பதிலளிநீக்கு
  8. தொடர்கதை அறிவிப்பினைக் கண்டேன். மனதில் வல்லிம்மா எழுதும் தொடர்கதையோன்னு தோணுது. அவங்கதான் உறவின் பிரச்சனைகளை வைத்து நிகழ்ந்தவற்றை ரசமான தொடராகப் புனைவார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுமானங்கள் தொடரட்டும்...

      நீக்கு
    2. //வல்லிம்மா எழுதும் தொடர்கதையோன்னு தோணுது அவங்கதான் உறவின் பிரச்சனைகளை வைத்து நிகழ்ந்தவற்றை ரசமான தொடராகப் புனைவார்// துரை சார் கூடத்தான் மனித உறவுச் சிக்கல்களை சொல்வதில் வல்லுனர்.ஏன் அவராக இருக்கக்கூடாது?

      நீக்கு
    3. துரை செல்வராஜு சாரும் நல்லாவே உறவுண் சிக்கலைச் சொல்லுவார், ஆனா அவசர அவசரமா கல்யாணம் செஞ்சு வைத்து சுபம் போட்டுடுவார். ஆனால் நல்லா எழுதுவார்.

      பேய்க்கதை மன்னனும் தொடர் எழுதி நாளாச்சு.

      ஆனா பொதுவா நான் தொடர் படிக்க விரும்பறதில்லை. எந்த நாவலையும் முதல் அத்யாயம், கடைசி அத்யாயம் அப்புறம் ஆரம்பத்திலிருந்து என்றுதான் படிப்பேன். அதனால முற்றும் போடற வரைல தொடரைப் படிக்க மாட்டேன்

      நீக்கு
    4. புதுத் தொடரா? எப்போலேருந்து? செவ்வாய்க்கிழமைக் கதையாகவா? இல்லைனா தினம் தினம் தொடருமா?

      நீக்கு
    5. நெல்லை, நீங்க கணக்கிலே இம்புட்டு வீக்கா? நான் போன புதனில் இருந்து நேற்று ஞாயிறு வரை ஐந்து நாட்கள் எனச் சொன்னேன். :)))))

      நீக்கு
    6. கீசா மேடம்... நீங்க தமிள்ல வீக்காயிட்டீங்களே. 'திங்கள் கிழமை திரும்பி வருவதனால், ஞாயிறு வரை ஐந்து நாட்கள் விடுமுறை' என்று சொன்னீர்களோ என்பது, என்னுடைய ஒரு வாக்கியத்தின் பொழிப்புரை.

      அது இருக்கட்டும்... நீங்களும் ஸ்ரீராம் மாதிரி ஒரு வரில பதில் தருகிறீர்களே....

      நீக்கு
    7. தொடர்கதையா. பாராட்டுகள். அன்பு முரளிமா, என்னை நினைத்ததற்கு நன்றி. என்னால் சுருங்கச் சொல்லவே முடிவதில்லை. துரை செல்வராஜு வண்ண இலக்கியமாகச் ,நல்ல தமிழில் சொல்வார்.
      எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
      தில்லுமுல்லு தேங்காய் ஸ்ரீனிவாசன் டாப் க்ளாஸ்.
      நன்றி கௌதமன் ஜி.

      நீக்கு
    8. //என்னால் சுருங்கச் சொல்லவே முடிவதில்லை. // - இல்லை வல்லிம்மா.. நீங்கள் சுருங்கத்தான் சொல்கிறீர்கள். ஆனால் அவங்க வாழ்வில் நடந்த விஷயங்கள் (திருமணம், பிரச்சனை, மனம் ஒத்துப்போகாதது, கடைசியில் சேர்வது அல்லது பிரச்சனை தீர்வை எட்டுவது) சிறுகதையாக எப்படிச் சொல்வது? 'தொடர்' என்று ஸ்ரீராம் சொன்னதால் நீங்கள்தான் அப்படி ஒரு தொடர் எழுதப்போகிறீர்கள் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் எபியில் சிறிய தொடர்கதையோ அல்லது சற்றே நீண்ட சிறுகதையோ எழுதக்கூடாது? நீங்கள் எழுதினால் அதற்கு நான் படம் போடுகிறேன்.

      நீக்கு
  9. வாழ்க நலம்..
    அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்க நலம். வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. வணக்கம் பலமுறை சொன்னேன்,சபையினர் முன்னே!தமிழ்மகள் கண்ணே!

      நீக்கு
  10. ஓ... புளிக்காய்ச்சலா!....

    நான் என்னவோ புலிக்குக் காய்ச்சல்..ந்னு நெனைச்சுட்டேன்....

    பதிலளிநீக்கு
  11. அதென்ன... கமலா ஆரஞ்சு?....

    கண்ணளவு..ந்னதும் பெரிய அக்கா அனுஷ்கா சின்ன அக்கா தமக்கா நினைவுக்கு வருது!...

    புளிக்கு மட்டும் 1959 கமலா அக்காவா!...

    கார்த்திகா.... கீர்த்திகா எல்லாம் இல்லையா?....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா ஹா கீதாக்காவுக்கு இந்த அனுஷ் தமன்னா எல்லாமே கூட இந்த எபியின் விளைவுதான்....இல்லைனா அவங்களுக்கு எங்கத் தெரிஞ்சுருக்கப் போவுது (கீதாக்கா இஃகி இஃகி இஃகி நு சிரிப்பாங்க பாருங்க!!!!)

      இதுல கார்த்திகா கீர்த்திகா எல்லாம் எங்க தெரியப் போகுது!!!!

      கீதா

      நீக்கு
    2. ஹிஹிஹி, துரை! நீங்க சொல்லுவது சரியே! பிரயாணத்தில் நிறைய சினிமா நடிகர்கள், சீரியல் நடிகர்களைப் பார்த்தோமா! நம்ம ரங்க்ஸ் உடனே என்னைக் கூப்பிட்டுக் காட்டி இது அந்த நடிகர், இது இந்த சீரியல் நடிகை! இது பாலசந்தர் படத்தில் வருபவர்னு காட்ட, மேக்கப் இருந்தாலே அடையாளம் தெரியாமல் முழிக்கும் நான் அவர் சொன்னதைக் கேட்டு ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!!!!!!!!!!!!!!

      நீக்கு
    3. மன்னிக்கவும், தி/கீதானு சொல்றதுக்கு இங்கே துரைனு சொல்லிட்டேன். எல்லாம் இந்த அதிராவால் வந்தது!அவங்க தானே கீழே இருந்து ஆரம்பிச்சு பதில்சொல்லுவேன்னு சொன்னாங்க?க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))

      நீக்கு
    4. ஹிஹிஹி, இப்போ துரைக்குத் தான் பதில்! புளி அளவுக்கு எதைச் சொல்றதுனு தெரியாமல் கமலாவைச் சொன்னேன். ஆனால் அவங்க ஆடறது எனக்கு ரொம்பப் பிடிக்குமாக்கும்!

      நீக்கு
    5. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதாக்கா அது அதிரடி இல்லை! ஏஞ்சலாக்கும் அவங்கதான் கீழருந்து ஆரம்பிச்சு பதில் சொல்றது...இப்ப கொஞ்சம் மாத்திக்கிட்டாங்கனு நினைக்கிறேன்....

      கீதா

      கீதா

      நீக்கு
    6. ஹாஹா அந்த ரிவர்ஸ் ஆர்டர் நாந்தேன் :) கதைபுக்கையே ஆ.கோ .வில் பேஜ் படிச்சிருவேன் இங்கே கமெண்ட்ஸ்லாம் அப்படிதான் படிக்கிறேன் பின்னாலிருந்து

      நீக்கு
    7. ஆ.கோ .வில் end last page பேஜ் படிச்சிருவேன்

      நீக்கு
    8. //பிரயாணத்தில் நிறைய சினிமா நடிகர்கள், சீரியல் நடிகர்களைப் பார்த்தோமா! // - இது என்ன புது அணுகுண்டு... ஏதேனும் ஸ்டார் நிகழ்ச்சிக்குப் போனமாதிரி சொல்றீங்க... இல்லை... ஏதேனும் படம் எடுக்கிற அல்லது தொலைக்காட்சி சீரியல் எடுக்கிற விஷயமா?

      நீக்கு
    9. வணக்கம் சகோதரி

      ஹா.ஹா.ஹா. நீங்கள் என்னை பழுத்த பழமாக குறிப்பிட, சகோதரர் துரை செல்வராஜ் அவர்கள் வருடத்தை நினைவுபடுத்தி பேரிளம் பெண்ணாக (பேரீட்சை அல்ல..)குறிப்பிட, என் பெயர் இங்கே ஆரஞ்சாக உருளுது. ஆனால் 59லிருந்து 59 வரை நான் ஆடி நானே பார்த்ததில்லை. அப்படியிருக்க என் ஆட்டம் எப்போது தங்களை கவர்ந்தது...ஹா ஹா ஹா. ஆனாலும் பிடித்ததற்கு நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    10. நெல்லைத் தமிழரே, இன்னும் பயணக்களைப்பு நீங்கலை என்பதோடு துணிகள் துவைத்தல், வீட்டின் சுத்தம் செய்யும் வேலைகள்னு மெதுவா நடக்குது! இரண்டு நாட்களாவது ஆகும்போல பதிவு போட! அப்போ விபரமாக எழுதறேன். :))))

      நீக்கு
    11. ஹாஹா, கமலா, நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு! நான் அந்தக் காலத்தில் ட்ரம் டான்ஸ் ஆடிய கமலா லக்ஷ்மணனைச் சொன்னேன் என்பதை நீங்களும் புரிந்து கொண்டிருப்பீர்கள். :))))))))

      நீக்கு
  12. நல்லதொரு குறிப்பினை வழங்கியமைக்கு நன்றி...

    ஆனாலும் கல் சட்டிக்கு எங்கே போவேன்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை! கல்சட்டி இல்லைனா என்ன? கல்சட்டி இல்லாமல் நீங்க வைச்சிருக்கும் பாத்திரத்திலேயே பண்ணலாம்.அல்லது மண் சட்டி இருந்தால் அதில் பண்ணலாம்.

      நீக்கு
  13. துளஸிஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? துளசிதரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

      நீக்கு
    2. வணக்கம் சகோதரரே

      சகோதரர் துளசிதரன் அவர்களுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகளையும் (தாமதமானாலும்) தெரிவித்துக் கொள்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    3. வணக்கம் சகோதரரே

      புது தொடர் கதையை அனைவரைப் போலவும் விரைவில் ஆவலுடன் நானும் எதிர்பார்க்கிறேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  14. காய்ச்சலா ?
    நிறைய பேரின் ஜீவன் அனுஷ்கா, தமன்னாவை வைத்து ஓடுகிறது போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கில்லர்ஜி, புளிக்காய்ச்சல் உங்களுக்குப் பிடிக்காதோ? காய்ச்சலா எனக் கேட்டிருக்கீங்க! இஃகி, இஃகி, கண்ணளவு என்றால் நினைவுக்கு வருவதே கண்ணழகிகள் தானே!

      நீக்கு
    2. ஹை கீதாக்கா அப்ப எங்க வீட்டுக் கண்ணழகியும் சேர்த்துனு சொல்லுங்க!!! ஹா ஹா

      கீதா

      நீக்கு
  15. அம்மணியின் அம்மா வரும்போது புளிக்காய்ச்சல் செய்வார்கள். இந்த ரெசிப்பியை கொடுத்து அம்மணியையே செய்ய சொல்ல வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செய்து பார்க்கச் சொல்லுங்கள் சொக்கன் சுப்ரமணியன். அவங்களை முடிஞ்சப்போ "சாப்பிடலாம் வாங்க" பக்கமும் வந்து பார்க்கச்சொல்லுங்க.ஹிஹிஹி,ஒரு சின்ன விளம்பரந்தேன்! :)))))

      நீக்கு
  16. நானும் இதே முறையில்தான் புளிக்காய்ச்சல் செய்வேன்.
    படத்தில் ஒரு சிறு வெல்லக்கட்டி தெரிகிறதே? அதை என்ன செய்தீர்கள்? வாயில் போட்டுக் கொண்டு விட்டீர்களா? நான் எண்ணை பிரிந்து வருமே, அப்போது சேர்த்து விடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பால் பெருங்காயக் கட்டியை சுலபமா வெல்ல ஜாதிக்கு ஜாதிமாற்றம் பண்ணிட்டீங்களே

      நீக்கு
    2. கரெக்ட் நெல்லைத் தமிழரே! நீங்க சமையல் நிபுணர் தான் எனச் சான்றிதழ் கொடுக்கிறேன். :)))))

      நீக்கு
    3. அது வெல்லக்கட்டி இல்லை பானுமதி! நெ.த. கரெக்டா சொல்லி இருக்கார். நான் பொதுவாப் புளிக்காய்ச்சலில் வெல்லம் சேர்ப்பதில்லை. எப்போவானும் எங்க புக்ககத்து மனிதர்கள் வந்தால் புளிக்காய்ச்சலில் வெல்லம் சேர்த்துச் செய்வேன். அல்லது செய்து வைத்திருப்பதில் வெல்லத்தைப் போட்டுச் சூடு பண்ணி வைப்பேன்.அதோடு வாயில் போட்டுக் கொள்ளும் வழக்கமே இன்று வரை வந்ததில்லை. அப்பா வீட்டில் நிவேதனம் ஆன பின்னர் கூட வாயில் போட்டுப் பார்க்கக் கூடாது! அப்படிப் பார்த்தால் அப்பா அப்படியே எதை வாயில் போட்டுக் கொண்டோமோ அதைக் கொட்டி விடுவார்.ஆகவே இங்கே வந்தும் கூட அந்த வழக்கம் வரதில்லை. இதனால் சில நாட்கள் சமையலில் உப்பு சரி இல்லை எனில் எனக்கும் அவருக்கும் ஒரு குருக்ஷேத்திரம் நடக்கும்! ஆனாலும் நான் திருந்தவே இல்லை! :)))))

      நீக்கு
    4. கீதாக்கா ஹைஃபைவ்!!! மீக்கும் செய்யும் போது வாயில் சுவை பார்க்கும் பழக்கம் சுத்தமா இல்லை....

      அது பாட்டியின் வழக்கம் அப்படியே எனக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. எல்லாரும் சாப்பிடத் தயாராகும் முன் முன் கூட நான் பார்க்க மாட்டேன். யாரையாவது பார்க்கச் சொல்லுவேன்.

      கீதா

      நீக்கு
    5. அது ஏன் சாப்பிட்டுப்பார்க்கக்கூடாது? என்னவோ எனக்கு இந்தத் தியரியில் ரொம்பவும் நம்பிக்கை இல்லை. நான் சுவை பார்க்காமல் பெருமாளுக்கு கண்டருளப்பண்ணுவதில்லை. (ஆனால் பெங்களூரில் ஒரு 8-9 நாட்கள் செய்தபோது சுவைத்ததில்லை). சரியா இல்லாத உணவை எப்படி கடவுளுக்குப் படைப்பது (ஒருவேளை உப்பு குறைவோ ஜாஸ்தியோ இருந்தால்).

      இது கூடாது என்று சொல்பவர்கள், (அதற்கான காரணங்கள் சொன்னால்), நியாயமாக, அதற்குப் பிறகு (கண்டருளப்பண்ணிய பிறகு) உணவில் எதையும் சேர்க்கக்கூடாது. உப்பு போட மறந்திருந்தால், போடக்கூடாது. இதுதான் கான்சப்ட். இந்த கான்சப்ட் ஃபாலோ பண்ணாதவர்கள், நான் செய்வதுபோல் ஃபாலோ பண்ணுங்கள். ஹாஹா.

      நீக்கு
    6. நெல்லை நான் சாமிக்கு என்றில்லை.....பாட்டிதான் இப்படி நெய்வேத்தியம் செய்யும் முன் சாப்பிட்டுப் பார்க்க மாட்டாங்க...எனக்கு அப்படியான பழக்கம் எல்லாம் இல்லை....பாட்டி செய்ததைப் பார்த்து தொற்றிக் கொண்டப் பழக்கம்...பாட்டியும் தான் சாப்பிட்டுப் பார்க்க மாட்டாங்க பக்கத்துல யாரு இருக்காங்களோ அவங்ககிட்டதான் கொடுத்துப் பார்க்கச் சொல்லுவாங்க...அதுவே எனக்கும் வந்துவிட்டது!!!!

      கீதா

      நீக்கு
    7. //பக்கத்துல யாரு இருக்காங்களோ அவங்ககிட்டதான் கொடுத்துப் பார்க்கச் சொல்லுவாங்க...// - கண்டருளப்பண்ணுமுன் சாப்பிட்டுப் பார்ப்பது பாவம். அந்தப் பாவம் தனக்கு வேண்டாம், (மற்றவர்களுக்குப் போகட்டும்) என்று நினைக்கிறீர்களோ? ஹாஹா

      நீக்கு
    8. நான் யாரிடமும் கொடுத்துப் பார்க்கச் சொன்னதும் இல்லை. எத்தனை விருந்தினர் வந்தாலும் சாப்பிட உட்கார்ந்ததும் அவங்க ருசி பார்த்துச் சொல்கையில் தான் உப்புத் தேவைனா சேர்ப்பேன். நாங்க இரண்டு பேரும் சாப்பிட உட்காரும்போது அநேகமாக நான் முதலிலே பார்த்துட்டுச் சொல்லிடுவேன். இதையே ஏன் முன்னாலே செய்யக் கூடாதுனு ஆரம்பிப்பார்! அதென்னமோ பழக்கமே வரதில்லை.

      நீக்கு
  17. பாருங்கப்பா!...
    விடாதே பிடி வெல்லக் கட்டிய...ன்னு!...

    இப்படித்தான் இருக்க வேணும்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எது?.. புளிக்காய்ச்சலா?..

      இல்லை... வெல்லக்கட்டி!..

      நீக்கு
    2. ஹாஹா, துரை, நெத சொல்லி இருப்பது தான் சரி! அது வெல்லக்கட்டி இல்லை.

      நீக்கு
  18. நான் பருப்பு வகைகளை தனியே வறுத்து சேர்ப்பேன்...

    வறுத்து அரைக்க வேண்டியதை எண்ணெய் விடாமல் வறுப்பது வழக்கம். ஆசையை தூண்டிவிட்டீங்க. போய் புளிக்காய்ச்சலை ரெடி செய்ய வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி. அநேகமாக சமையலுக்கு எங்க வீட்டுக்கு வரும் மாமிகள் நீங்க சொல்றாப்போல் பருப்பு வகைகளைத் தனியே வறுத்துச் சேர்க்கின்றனர். வாயில் ஒரே பருப்பாக இருப்பது போல் என் எண்ணம்! வறுத்து அரைக்கவேண்டியதை எண்ணெய் விடாமல் சிலர் செய்தும் பார்த்திருக்கேன். நான் எள், வெந்தயம், கடுகு எண்ணெய் விடாமல் வறுத்துப்பேன்.

      நீக்கு
  19. அருமையான குறிப்பு... இதை செய்வதில் எனது அம்மாவும், இரண்டாவது அக்காவும் கில்லாடிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி, உங்க ஊர்ப்பக்கம் வரும்போது புளியோதரை ஒரு பார்சேல்ல்ல்ல்ல்!

      நீக்கு
  20. //"அதான் எனக்குத் தெரியுமே!"// ஹா ஹா ஹா ஹா ஹாஹ் ஆ,,,அக்கா இதே போல் ஒரு காமெடி வரும் இல்லையா பூரி செய்வது.....பழையபடம் ஆனால் என்னபடம் என்பது நினைவில்லை...தங்கவேலு காமெடி? அதை நினைச்சு சிரித்துவிட்டேன்...

    கீதாக்கா இதே தான் எங்க மாமியார் செய்வாங்க. அப்படி நான் 4 வகை புளியோதரை குறிப்புகள் கற்றுக் கொண்டேன். எள்ளு, கொப்பரை போட்டு மைசூர் புளியோதரை, மிளகு தனியா போட்டு (சில சமயம் எள்ளும் போட்டு) என் மாமியார் செய்வது, அப்புறம் என் உறவினரின் மாமியார் - காஞ்சிபுரம்...அந்த டைப் புளிக்காய்ச்சல்

    அப்புறம் இருக்கவே இருக்கு தி க்ரேட் திருநெல்வேலி என் பாட்டிகள் செய்யும் புளிக்காய்ச்சல்...நான் கற்றுக் கொண்ட ரெசிப்பி ராமானுஜம் மாமாவின் ரெசிப்பி... அதில் நோ தனியா மிளகு, எள்ளு கொப்பரை எதுவும் கிடையாது...இதில் எதுவேண்டுமானாலும் அவ்வப்போது அன்றைய மூட் பொறுத்து...பெரும்பாலும் திருநெல்வேலி பு கா தான் அப்படி யாருக்கவது வேணும்னா இந்தப்பொடி மேல்பொடியா வைச்சு கலந்துக்கறது...

    என் மகனுக்குப் புளிக்காய்ச்சல் பொடியாகவே செய்து கொடுத்துவிட்டுவிடுவேன் ஃப்ளைட்டில் எண்ணெய் வழியாமல்...போகும் என்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. கீதாக்கா என் அளவும் கண்ணளவுதான்...

    இப்ப எபி க்கு அனுப்பறதுனால செய்யறதை கண்ணளவுல போடறதை அப்படியே அளந்து குறிப்பு எழுதி வைச்சுட்டுப் போடறேன்...இல்லைனா அதுவும் மறந்து போய்டும் ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தி/கீதா.எனக்கும் 2,3 வழிமுறைகளிலே புளிக்காய்ச்சல் தெரியும். பெருமாள் கோயில் புளிக்காய்ச்சல் செய்முறையும் திருக்கண்ணபுரம் போயிருந்தப்போ மடப்பள்ளியிலே பட்டாசாரியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். என் மாமியார் வெறும் தாளிதம் மட்டுமே போட்டுப் புளிக்காய்ச்சல் காய்ச்சுவார். அதுவும் தெரியும். பச்சைப்புளியஞ்சாதம் செய்யும்போது செய்யும் அவசரப் புளிக்காய்ச்சலும் நன்றாகவே இருக்கும்.

      நீக்கு
    2. பொதுவா சமையலிலே அளவு சொல்வது கொஞ்சம் கஷ்டம் என்னைப் பொறுத்தவரை!

      நீக்கு
    3. எந்தக் கஸ்டமுமில்லை கீசாக்கா... கிராம்/ மில்லி லீட்டர் கணக்கில சொல்லிட்டால் போச்சு:).. முன்பு நான் சமையல் குறிப்புக் குடுக்கும்போது, தண்ணிகூட அளந்து சொல்லிடுவேன்...
      இப்போ எல்லோருமே சமையல் வல்லுனிகள் என்பதனால தேவைப்படாது:)

      நீக்கு
    4. grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr தீர்க்கதரிசி, கையில் அளவுக்குடுவையோடு சமைப்பீங்களோ? :P:P:P:P

      நீக்கு
  22. என்னாதூஊஉ இன்று கீசாக்காவின் ரெசிப்பியோ? இந்த புளிக்காச்சலுக்குத்தான் அஞ்டூஊஊஉ நாள் லீவு எடுத்தாவோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஹா ஹா ஹா....

    புளிக்காச்சலை நாலு வரியில சொல்லி முடிப்பாங்க பொதுவா:)... இது கீசாக்கா நாப்பேதூஊஊ வயசுக்கு சே சே வரிக்கு நீட்டி இருக்கிறாவே என்னா புறுணமா இருக்கப் போகுதோ:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்க்கதரிசி, எதுக்கோ தெரியுமா, எந்த வாசனையோனு சொல்லுவாங்க! அப்படித் தான் புளிக்காய்ச்சல் பத்தியும் உங்களுக்குத் தெரியலை! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  23. இவ்ளோ காலமும் கீசாக்காவுக்கு அளந்து போடத் தெரியாமல்தான்... கண்ணளவிலேயே மாமாவைப் பேய்க்காட்டிக் கொண்டு வந்திருக்கிறா ஆனா என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊ ... சின்ன கிண்ணத்தில கச்சான் என்றால் அது எந்தளவு சின்னன்?... அஞ்சு அளவோ இல்ல கீதா அளவு சின்னனோ?:)... ஹையோ சமைக்கிறதை விட இது பெரிய குழப்பமா இருக்கே:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ தீர்க்கதரிதி பூஸாரே!! ஏஞ்சலும் சரி கீதாவும் சரி கப்புன்னா அளக்கற கப்புதான் சொல்லுவாங்க!! ஹிஹிஹி

      அது சரி பூசாரே!! கீதாக்கா கொடுத்துருக்காங்களே... படத்துல உள்ள கச்சானை எண்ணி எடுத்துக்கோங்க கிளியராத்தானே இருக்கு அப்புறம் என்னன்றேன்!! என்ன சொல்றீங்க கீதாக்கா?!!!

      கீதா

      நீக்கு
    2. கப்பு...... ண்டால் என்னெண்டு முதல்ல அஞ்சுவை சொல்லச் சொல்லுங்கோ:) கரீட்டாச் சொல்லிட்டாவெனில் நான் பத்து மட்டின் ரோல் டின்னருக்கு சாப்பிடுவேன் ... இது அந்த கீசாக்காவின் கலுச் சட்டி மேல ஜத்தியம்ம்ம்ம்:)

      நீக்கு
    3. https://i.ebayimg.com/images/g/JMIAAOSwv0db~57r/s-l300.jpg

      ஹலோ தீர்க்க அரிசி :) சாரி நீர்க்கத்தரிசி ஹயவ் டங் ஸ்லிப்பிங் சரி குண்டு பூனையே இதான் கப்

      நீக்கு
    4. ஆஆஆஆ அஞ்சுக்கு இன்று ஓவரா டங்கு ஸ்லிப்பாகுதே:)... இதுக்குத்தேன் ஜொன்னேன் வீக்கெண்ட் பார்ட்டிக்கெல்லாம் போகாதீங்கோ என:)... இங்கின ஆருதான் அதிராட பேச்சுக் கேய்க்கிறாக குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      நீக்கு
    5. கரீட்டாச் சொல்லிட்டாவெனில் நான் பத்து மட்டின் ரோல் டின்னருக்கு சாப்பிடுவேன்//

      ஆஹா இப்படி ஒரு சாக்கா!! மட்டின் ரோலைக் கட்டுக் கட்ட!!! அது ஏஞ்சலுக்கல்லோ அனுப்பணும்?!!

      கீதா

      நீக்கு
    6. இந்த தீர்க்கதரிசிக்கு அளந்து சொன்னாலே போடத் தெரியாமல் முழிக்கும்! இதிலே பேச்சு வேறேயா?

      நீக்கு
  24. கீசாக்கா என்ன அளவில போட்டாலும் பினிசிங் சூப்பரா வந்திருக்கு... செய்து பார்க்கலாம்.. பார்ப்போம்...

    அது என்ன கருங்கல்லில சட்டியா? கல்லுரல் போல இருக்கே.. அதை அடுப்பில் எப்படி வைப்பது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா அது மாக்கல்சட்டி...அடுப்பில் வைக்கலாமே...கேஸ் அடுப்பில்...

      கீதா

      நீக்கு
    2. ஓ நான் அப்படிக் காணவில்லை இதுவரை

      நீக்கு
    3. அதிரா ஆன்லைனில் கூடக் கல்சட்டி ஸ்டோன்வெர் என்று கிடைக்கிறது...

      ஏஞ்சல் கூடச் சொல்லிருக்காங்க பாருங்க (இதுக்குத்தான் செக் சொல்றத பார்க்கணுன்றது!!!!!)

      கீதா

      நீக்கு
    4. ஸ்டோன்வேர் வேறே, கல்சட்டி வேறேனு நினைக்கிறேன். இது கீழே விழுந்தாலோ, இடுக்கியினால் பிடித்தாலோ உடைந்து வந்துவிடும். இதிலே கூட கல்சட்டியின் வாய்ப்பக்கம் சின்னத் துண்டாகத் தெரியும் பாருங்க! சூட்டோடு யாரோ பிடிச்சதில் ஏற்பட்டது அது. இந்த மாக்கல் சட்டியில் குழந்தைகள் விளையாடும் சொப்புக்கள் கூடக் கிடைக்கும். குழி ஆப்பச் சட்டி கிடைக்கும். தோசைக்கல் கிடைக்கும். ஆனால் கவனமாகக் கையாளணும்.

      நீக்கு
  25. கீதா மேடம் கவிதைகள் எழுதுகிறாரே என்று நினைத்தேன் இந்த ராக ஆலாபனைகள் எனக்கு மூச் தெரியாது புளிக்காய்ச்சல் செய்ய நான் கஷ்டப்பட மாட்டேன் சென்னை அடையாறு கிராண்ஸ்வீட்ஸில் புளிக் காய்ச்சல் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜிஎம்பி சார், இதெல்லாம் வெளியில் வாங்குவதை விட வீட்டில் செய்து வைத்துக்கொள்வது தான் லாபம். நாங்க இம்மாதிரித் தயாரிப்புக்கள் மட்டுமில்லை பொதுவாக எதுவுமே வெளியில் வாங்குவது குறைவு. வீட்டில் தான்! அதிலும் க்ரான்ட் ஸ்வீட்ஸ்! நான் கிட்டேக்கூடப் போக மாட்டேன். :))))))

      நீக்கு
  26. அருமையான புளிக்காய்ச்சல் நானும் இது போல் செய்வேன்.
    நிலக்கடலை மட்டும் போடாமல் செய்கிறேன்.
    எங்கள் வீட்டில் அவர்களுக்கு பிடிக்காது நிலக்கடலை.
    புளி எலிமிச்சை அளவு என்பார்கள், நீங்கள் கமலா ஆரஞ்சு அளவு என்கிறீர்கள். எலுமிச்சை அளவு சிறிய கமலா ஆரஞ்சு கிடைக்கிறது. அதனால் தான் அப்படி சொல்லி இருப்பீர்கள்.

    படங்கள் அழகு. கல் சட்டி எங்கள் அத்தை வீட்டில் கருப்பாய் இருக்கும்.உங்கள் வீட்டில்
    வாங்கும் போது உள்ள கலரே இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி, இங்கே நம்மவருக்கும் அவ்வளவா வேர்க்கடலை போட்டால் பிடிக்காது. இப்படி எப்போதேனும் செய்தால் ஒண்ணும் சொல்வதில்லை. எலுமிச்சை அளவு புளிக்கு இந்த சாமான்கள் எல்லாம் அதிகம் இல்லையோ? அதோடு அதில் செய்தால் மிஞ்சிப் போனால் ஒரு வாரம் தான் வைச்சுக்கலாம். நான் கொஞ்சம் ஒரு மாதம் அல்லது 2 மாதங்கள் வரை வைச்சுக்கறாப்போல் செய்வதால் ஆரஞ்சு அளவு சொல்லி இருக்கேன். மாக்கல் சட்டி பழைய சட்டி தான். நேரில் பார்த்தால் தெரியும்! :)))) அது என்னமோ ஃபோட்டோவுக்குச் சமத்தா போஸ் கொடுத்துடுது! :))))))

      நீக்கு
  27. கீதாக்கா எனக்கு அந்த கல் சட்டி பார்சல் ப்ளீச் அப்போதான் உடனே செஞ்சி பாக்கமுடியும் இந்த புளிக்காய்ச்சலை :) என் க வீட்டு gas hob மாத்தினத்தில் மண் சட்டி கூட அதில் வைக்க முடில .தட்டையான பாத்திரம் வாங்கித்தான் இதெல்லாம் சமைக்கணும்.
    அப்புறம் அந்த கல் சட்டி ரொம்ப ஹெவியோ ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஏஞ்சல் கல்சட்டி ஹெவியாதான் இருக்கும்

      கீதா

      நீக்கு
    2. ஏஞ்சல், வாங்க, வாங்க, ரொம்ப நாளாச்சு பார்த்து! அதெல்லாம் கல்சட்டியைப் பார்சல் செய்ய முடியாது! உடைஞ்சுடும். நீங்க இந்தியா வரச்சே வாங்கிட்டுப் போனால் கூட அதைக் கார்கோவிலோ, கையிலோ எடுத்துச் செல்வது கஷ்டம். இங்கே வந்தால் வீட்டுக்கு வாங்க, சமைச்சுப் போடறேன்.
      எங்க பொண்ணு வீட்டு காஸ் அடுப்பிலும் தட்டையான பாத்திரங்களில் தான் சுலபமாகச் சமைக்க முடியும்.

      நீக்கு
  28. புளிக்காய்ச்சல் செமயா இருக்கே பார்க்க .இங்கே இப்போ தேடியதில் ஸ்டோன்வேர் pans கண்டுபுடிச்சிட்டேன் :) வாங்கி செய்யப்போறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்லோ மிஸ்டர்.... ஆடத் தெரியாதவ, நிலம் கூடாதென்றாவாமே:) அப்பூடியெல்லோ இருக்குது இக்கதை:)....
      இதுக்கு சட்டி முக்கியமில்லையாக்கும் ரெசிப்பிதான் முக்கியம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

      கீசாக்கVஐக் காணம்... மறுபடியும் ரெண்டுநாள் லீவோ கர்ர்ர்ர்ர்ர்:)..

      நீக்கு
    2. நேத்திக்கு உடனேயே வந்து பதில் சொல்லி இருக்கேனே அதிரடி, என்னத்தைக் கவனிக்கிறீங்க போங்க! எதுக்கும் கண்ணாடியை மாத்துங்க!

      நீக்கு
  29. அன்பு கீதாவுக்கு வாழ்த்துகள்.கல்சட்டியில் செய்யும் புளியோதரை வாசம் இங்க வரைக்கும் வருகிறது.
    உங்கள் பயணக்கட்டுரையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

    அழகான விளக்கம்.எனக்கும் அளந்து போடத் தெரியாது. கைத்திட்டம் தான். அதுவும் கல் உப்போடு செய்ய வேண்டும்.
    கோவில் புளியோதரையில் மிளகும்,தனியாவும் சேர்ப்பதைப் பார்த்திருக்கிறேன்.
    ம்ம்ம்.நல்ல வாசனை.
    அம்மா செய்யும் புளிக்காய்ச்சலில் நல்லெண்ணெய் வாசமும் பருப்பு வாசமும்
    அமிர்தமாய் வீடும்.
    பாதிதான் என்னிடம் வந்திருக்கிறது.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வராது இருக்கலாமா? கச்சட்டி அழகான புளிக்காய்ச்சல்,தோராயமான கையளவு,கண்ணளவு,பதம் எல்லாம் ஒண்ணோடவொண்ணு தூக்கி சாப்டூடறது. அந்தப் பால் பெருங்காயத்தை மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக உபயோகப்படுத்தணும். பதில் எழுதினவர்கள் எதையும் விட்டுவைக்கவில்லை. பதத்திற்கு பதம் யார் சொல்ல முடியும்? கமகமன்னு மணக்கிரது கீதாஸ்பெஷல். அன்புடன்

      நீக்கு
    2. //பால் பெருங்காயத்தை மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக // - இதோட அர்த்தம் என்ன? விளக்கம் ப்ளீஸ்

      நீக்கு
    3. வாங்க வல்லி, வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றிம்மா. ஒருமுறை மிளகு, தனியா சேர்த்துப் பண்ணிட்டு அதையும் பகிரணும். பார்ப்போம். இப்போப் பண்ணினது தீரணும்.

      நீக்கு
    4. வாங்க காமாட்சி அம்மா, உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மனமார்ந்த நன்றி. ஆமாம், நீங்க சொல்றாப்போல் பால்பெருங்காயத்தை ஜாக்கிரதையாகத் தான் பயன்படுத்துவேன். அநேக சமயங்களில் கரைத்து ஊற்றிவிடுவேன்.

      நீக்கு
    5. நெல்லை, பால்பெருங்காயம் அதிகம் ஆனால் கசந்துவிடும். அதே போல் பொரியும்போதும் கருகக் கூடாது! ::))))))))

      நீக்கு
  30. வணக்கம் சகோதரி

    அருமையான புளிக்காய்ச்சல்...கற்சட்டியில் கொதிக்கும் புளிக்காய்ச்சல் மணம் என்னை என் பிறந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றது.மலரும் நினைவுகளை உண்டாக்கியது...அப்போதெல்லாம் அம்மா வீட்டில் கற்சட்டியில்தான் சமையலின் பெரும்பாகமும்...அந்த மணம் இன்னமும் நாசிகளின் நினைவுகளில் வாசமாகி நிற்கிறது.

    நீங்களும் நிறைய நாள்கள் வைத்திருந்து சாப்பிடலாம் என்றதினால், தாமதமான வருகை தந்துள்ளேன். கடைசியில் இருப்பதெல்லாம் எனக்கே.. எனினும் தாமத வருகைக்கு மன்னிக்கவும். அருமையான செய்முறைகளுடன் அழகான படங்களுடன் புளிக்காய்ச்சலின் மணம் இங்கே வரை நன்றாக வீசுகிறது. படங்களை பார்க்கும் போதே புளியோதரை சாப்பிட வேண்டுமென்ற உணர்வை தூண்டுகிறது. இனி அடுத்த முறை செய்யும் போது இதே மாதிரி செய்கிறேன்.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா, தாமதமானால் என்ன? இதான் வீணாகப் போயிடாத பொருள் ஆச்சே, எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்குங்க! கல்சட்டி, சீனாச் சட்டியெல்லாம் இப்போதைய தலைமுறைக்குத் தெரியவே தெரியாது! அதான் இப்படிச் செய்யும்போதாவது படம் எடுத்துக் காட்டலாமே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!