வெள்ளி, 15 மார்ச், 2019

வெள்ளி வீடியோ : இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே


அவன்தான் மனிதன்.  1975 இல் வெளிவந்த திரைப்படம்.


நடிகர்த் திலகத்தின் 175 வது படம்.  தயாரிப்பாளர் நூர் சிவாஜி கணேசனை வைத்து ஒரு படம்  தயாரிக்க ஆசைப்பட்டு, ஜி பாலசுப்ரமணியம் எழுதிய இந்தக் கதையை எடுத்துக்கொண்டு சிவாஜியை அணுக, அளவுக்கு மீறின சோகமாய் இருக்கிறது என்று சிவாஜி பதிலே சொல்லவில்லையாம்.பின்னர் இந்தக்கதை ராஜ்குமாரை ஹீரோவாகப்போட்டு கன்னடத்தில் எடுக்கப்பட்டு வெற்றியடைந்தபின் இரண்டு லட்ச ரூபாய் கொடுத்து உரிமை வாங்கி தமிழில் சிவாஜி நடித்தாராம்.

இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட்.  மிக இனிமையான பாடல்கள்.  நான் பகிரும் இந்தப்பாடல் இனிமையின் உச்சம்.கண்ணதாசன் எழுதும் எல்லாப்பாடல்களுக்கும் பொருத்தமாக ஒரு சம்பவம் சொல்வார்கள்.  பாதியை என்னால் நம்ப முடியாது.  அப்படியா அவர் நிஜ வாழ்வை எல்லாப் பாடல்களும் தகுந்த அதே சமயத்தில் பிரதிபலிக்கும்.  இந்தப்பாடலை எழுத எம் எஸ் வி அவசரப் படுத்தினாராம்.  மே மாதத்துக்குள் படம் ரிலீசாக வேண்டும் என்று எம் எஸ் வி கண்ணதாசனிடம் சொன்னாராம்.  பார்த்தால் கவிஞர் எல்லா வரிகளையும் மே எழுத்தில் முடியும் வண்ணம் எழுதி விட்டாராம்.இந்தப்படத்தின் எல்லாப் பாடல்களும் கண்ணதாசன் எழுதியது. 

இந்தப்படம் நான் பார்த்த படம்.  மஞ்சுளா, ஜெயலலிதா இரண்டு ஹீரோயின்!இதேபோல வீல்சேரில் சிவாஜியை உட்காரவைத்துத் தள்ளிக்கொண்டு போகும் சரோஜாதேவி...  சிவாஜி டி எம் எஸ் குரலில் பாடும் கருப்பு வெள்ளை பாடல் ஒன்று உண்டு...  அதுவும் எனக்கு மிகமிகப் பிடித்த பாடல்.  உங்களுக்கும் மிகவும் பிடிக்கும் அந்தப் பாடலும்....

டி எம் சௌந்தரராஜன் - பி. சுசீலா குரலில் இனிமையான பாடல்.  மிக இனிமையான பாடல்.  அந்த ஆரம்ப இசையாகட்டும், டியூனாகட்டும் (என்ன ராகம் கீதா?) டி எம் எஸ் - பி சுசீலா குரலாகட்டும்.....  ரசிக்க வேண்டிய பாடல்.  எல்லோரும் ரசித்த பாடல்.  இந்தப் பாடலை எங்களுக்கு அளித்த இந்த ஜாம்பவான்கள் அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும்.

அன்பு நடமாடும் கலைக்கூடமே ஆசை மழை மேகமே 
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித்தமிழ் மன்றமே 

மாதவிக் கொடிப்பூவின் இதழோரமே மயக்கும் மதுச்சாரமே 
மஞ்சள் வெயில் போலும் மலர்வண்ண முகமே மன்னர் குலத்தங்கமே 
பச்சை மலைத்தோட்ட மணியாரமே பாடும் புதுராகமே 

வெள்ளலைக் கடலாடும் பொன்னோடமே விளக்கின் ஒளிவெள்ளமே 
செல்லும் இடம்தோறும் புகழ்சேர்க்கும் தலமே தென்னர்குல மன்னனே 
இன்று கவிபாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே 

மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே 
காணும்நிலமெங்கும் தமிழ்ப்பாடும் மனமே உலகம் நமதாகுமே 
அன்று கவிவேந்தன் சொல்வண்ணமே யாவும் உறவாகுமே 


129 கருத்துகள்:

 1. பாடலை இப்போது மீண்டும் கேட்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 2. அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம்.
  ஆமாம் மிகச் சிறந்த பாடல். இனிமையும் டிஎமெஸ்ஸின்
  குரலும் ,சுசீலா குரலும் இழைந்து ஒலிக்கும் போது உண்மையான
  அன்பு தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்கம்மா...

   மிகவும் ரசிக்கும் பாடல் இது.

   இன்று உங்கள் தளத்துக்கு வந்து விட்டேனே...

   நீக்கு
 3. இனிமையான பாடல். மீண்டும் கேட்டு ரசித்தேன்.

  // மே மாதத்துக்குள் படம் ரிலீசாக வேண்டும் என்று எம் எஸ் வி கண்ணதாசனிடம் சொன்னாராம். பார்த்தால் கவிஞர் எல்லா வரிகளையும் மே எழுத்தில் முடியும் வண்ணம் எழுதி விட்டாராம்.//

  தகவல் புதிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கோமதி அக்கா..

   அவரின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்படி நிறையச் சொல்வார்கள். அவர் கஷ்டத்திலிருந்தபோது உதவாத உறவுகளை நினைத்துதான் அண்ணன் என்னடா தம்பி என்னடா எழுதினார் என்றெல்லாம் சொல்வார்கள்.

   நீக்கு
 4. இந்தப் படத்தில் நான் அதிகம் ரசித்த காட்சி : தன் அன்பை வெளிப்படுத்தும் வகையில் கதாநாயகியிடம் (ஜெயலலிதா) தருவதற்காக ஒரு கடிதத்தை வேலைக்காரன் (சுந்தரராஜன்) மூலமாக கதாநாயகன் அளித்திருப்பார். அந்தக் கடிதம் சென்று சேருவதற்குள் மற்றொரு கதாபாத்திரம் (முத்துராமன்) கதாநாயகியிடம் தன் அன்பை வெளிப்படுத்திவிடுவார். அது கதாநாயகனுக்குத் தெரிந்துவிடும். கடிதத்தை, தாமதமாக வேலைக்காரன் கதாநாயகியிடம் சேர்க்கப் போகும்போது, அவரிடமிருந்து அதனை வாங்கிவிடுவார். அப்போது அவர் கூறும் சொற்றொடர் "இது ஒரு காலாவதியான பத்திரம்". என் நெஞ்சில் மிகவும் பதிந்த வசனம். அன்புக்காக ஏங்குவோர் ஏமாற்றப்படும்போதோ, ஏமாறும்போதோ, தன் அன்பை வெளிப்படுத்த தாமதிக்கும்போதோ சூழல் மாறிவிடுவதை அருமையாக எடுத்துரைக்கும் தருணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க முனைவர் ஸார்...

   ரசித்த காட்சியை சொல்லி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். நன்றி.

   நீக்கு
 5. அனைவருக்கும் காலை வணக்கமும் நோன்புக்கு வாழ்த்துகளும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா அக்கா... எனக்கு நோன்பு கொழுக்கட்டை மூன்றாவது வருடமாகக் கிடைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்ய விரும்புகிறேன்!

   நீக்கு
  2. கடைசில யாரு மே, என்ன இராகம்னே சொல்ல வில்லையே?

   நீக்கு
 6. கண்ணதாசன் போன ஜன்மத்தில் அல்லது போன யுகத்தில் தக்ஷனாகப் பிறந்திருந்தாரோ என்னமோ! அதான் மே, மே, மே, என்று முடியும் வண்ணம் பாடல் எழுதி இருக்கார்! இஃகி,இஃகி,இஃகி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. கருத்துரை வித்தியாசமே..
   நல்லதொரு நகைச்சுவையாமே...

   நீக்கு
  2. ஹாஹா, உங்களுக்குத் தெரியாமல் இருக்குமா? தக்ஷனுக்கு ஆட்டுத்தலை வைச்சதால் அப்புறமாக அவன் செய்த ஸ்துதியில் கடைசியில் "மே" "மே" என்றே வரும் அல்லவா? ஸ்ரீ ருத்ரம், சமகம் பாராயணத்தின் போது கவனிக்கலாம். அதான் கண்ணதாசனும் அப்படியோனு நினைச்சுச் சொன்னேன். :)))))

   நீக்கு
  3. ஆட்டுத் தலையனுக்கும் அருள் செய்தான் அஞ்செழுத்தான்!....

   ஆணவம் அழிக்கப்பட்ட அந்த திருவிளையாடலை மறக்கவும் கூடுமோ!...

   நீக்கு
  4. //கண்ணதாசன் போன ஜன்மத்தில் அல்லது போன யுகத்தில் தக்ஷனாகப் பிறந்திருந்தாரோ என்னமோ!//

   அந்த பாதிப்பில்தான் இவர் இந்தப் பாடலைப் பாடியிருப்பர்... அதாவது எழுதி இருப்பார் அக்கா.

   நீக்கு
 7. அனைவருக்கும் அன்பின் வணக்கமும்
  வாழ்த்துரையும் சமர்ப்பணமே....

  பதிலளிநீக்கு
 8. பலமுறை கேட்டு ரசித்த அற்புதமான பாடல் ஜி

  பதிலளிநீக்கு
 9. அருமையான பாடலாமே...
  இனிமையான இசையாமே!....

  அப்போதே அனைவருக்கும் பிடித்ததாமே...
  இப்போதும் எல்லார்க்கும் பிடிக்குமாமே...

  இப்படியே எழுதினால்
  என்னையும் ஆட்டுத் தலையன்
  எனச் சொல்லி விடுவார்களாமே!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வித்தியாசமாகக் கலக்கி விட்டீர்கள் துரை செல்வராஜூ ஸார்... அருமை. ரசித்தேன்.

   நீக்கு
 10. என்கிருந்தோ ஒரு குரல் வந்தது..
  அது எந்த தேவதையின் குரலோ..

  இந்தப் படத்தில் புகழ் பெற்ற இன்னொரு பாடல்....

  பதிலளிநீக்கு
 11. இனிமையான மிகவும் பிடித்த பாடல்
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 12. கவியரசர் தினமணிக் கதிரில் அர்த்தமுள்ள இந்து மதம் தொடரை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் இந்தப் படம் வந்தது...

  பேபி சுமதியை கண்ணணாக நினைத்துக் கொண்டே அந்தப் பாடல் - ஆட்டுவித்தால் யாரிருவர் ஆடாதாரே கண்ணா- கல் மனதையும் கரைய வைத்தது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்ன ஒரு பாடல் அது... அவ்வப்போது ஒவ்வொரு பாடலாக பகிர உத்தேசம்...

   நீக்கு
 13. முதல் முதலாக இடுகாட்டிலேயே காட்சியாக்கப்பட்ட பாடல் தான் - மனிதன் நினைப்பதுண்டு வாழ்க்கை நிலைக்கும் என்று.... இதை நடிகர் திலகம் அவர்களே நேர்காணல் ஒன்றில் சொல்லியிருந்தார்...

  பதிலளிநீக்கு
 14. அதீத சோகத்துடன் முடிந்த இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை... ஆனாலும் படம் நல்ல வெற்றியைப் பெற்றது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் படத்தின் ஒரு காட்சி - நண்பர்களின் நலம் நாடுவதைப்பற்றி சிவாஜி பேசும் சிறு துணுக்கு காட்சி - வாட்ஸாப்பில் அவ்வப்போது வரும்.

   நீக்கு
 15. அன்பு நடமாடும் கலைக்கூடம் (மே) பாடல் மலேஷியாவிலும் சிங்கப்பூர் சைனீஷ் கார்டனிலும் படமாக்கப்பட்டது...

  அப்போது சிங்கப்பூர் சுற்றுலா செல்பவர்கள் சைனீஷ் கார்டனில் நடிகர் திலகம் நடித்த இடங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்..

  நானும் அப்படி எடுத்துக் கொண்டேன்...
  ஆனால் அந்தப் படங்களில் எதுவும் என்னிடத்தில் இல்லை .. நண்பர்களிடம் சென்று விட்டன....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லவேளை சிவாஜி நடித்த என்று எழுதினீங்க. அது இல்லாம, மஞ்சுளா நடனமாடிய இடங்களில் போட்டோ எடுத்துக்கொண்டேன் என்று சொல்லியிருந்தார்.... கர்ர்ர்ர்ர்ர (எனக்கு அந்த இடங்கள் தெரியாம்ப் போயிடுச்சே எ்றுதான்)

   நீக்கு
  2. ஓ... இப்படி வேறு நடந்திருக்கிறதா? இது புதுசு எனக்கு!

   நீக்கு
  3. மஞ்சுளா நடனமாடிய இடங்களில் போட்டோ எடுத்துக்கொண்டேன் என்று சொல்லியிருந்தார்.... கர்ர்ர்ர்ர்ர (எனக்கு அந்த இடங்கள் தெரியாம்ப் போயிடுச்சே எ்றுதான்)//

   கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்லாட்டா மட்டும் இப்ப எடுத்த ஃபோட்டோக்களை எங்களுக்குக் காமிச்சிருப்பீங்களாக்கும் ஹூக்கும்..

   "தீர்க்கதரிசி"யால கூட இன்னும் உங்க முகத்தைப் பார்க்க முடியலை...இதுல இந்த ஃபோட்டோவா ...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
 16. படம் பார்த்ததில்லை தலைப்பில் பாடலை யூகிக்க முடியவில்லை ஆனால் பாடல் நன்றாகவே இருக்கிறது ரசித்தேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடலை ரசித்ததற்கு நன்றி ஜி எம் பி ஸார். இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே அருமையாக இருக்கும்.

   நீக்கு
 17. "ஜி"வா"ஜி" தன் பேத்தியுடன் நடிச்ச படமா இது? ஆனாலும் அக்கிரமமாக இல்லையோ? இதையும் மீறித் தான் படம் வெற்றி பெற்றதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடிக்கணும்.. ந்னு வந்துட்டா
   பேத்தி என்ன... பாட்டி என்ன!?...

   நீக்கு
  2. இந்த பேத்தி எம்ஜாரோட ஆடுனப்போ மட்டும் என்ன அர்த்தமாம்?...

   அது போகட்டும்..

   அன்றைக்கே இப்படித்தான் கேட்டார்கள் திரையுலகில் இருந்த சிவாஜி எதிர்ப்பாளர்கள்...

   ஆனாலும் இன்றைக்கும் பழங்கிழங்கள் - பால் மணம் மாறாத பிள்ளைகளோடு நடிக்கத் துடிக்கும் கேவலம் தொடர்கின்றதே... அதையும் ரசிக்க ஒரு கூட்டம் அலைகிறதே...

   கில்லர் ஜி அவர்களிடம் ஒரு சவுக்கு இருக்கிறது...

   அதை வாங்கி நம்மை நாமே (மே..மே...) அடித்துக் கொள்ள வேண்டும்....

   நீக்கு
  3. கீசா மேடம் அநியாயமா இப்படி எழுதலாமா? ரஜினி, ஶ்ரீதிவ்யாவோட கிளுகிளு பாடல்ல நடனமாடினா 50% ஆவது ரசிப்பாங்க. கே ஆர் விஜயா தனுஷுடன் ஆடினா கற்பனைலகூட பார்க்க முடியுமா?

   அதுனாலதான் சொல்றேன்.. ஆண்கள்னா ரூலே வேற. பெண்களுக்கான அளவீடுகள் வேற. ஹாஹ்ஹா

   நீக்கு
  4. துரை செல்வராஜு சார்... கீசா மேடத்தின் தலைவர் உலக்கை நாயகர், பேத்தி வயசான சிநேகாவோட நடிச்சப்ப, ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தாங்களே... அப்புறம் ஜிவாஜி, எம்ஜார் நடிச்சாமட்டும் என்ன?

   நீக்கு
  5. //இந்த பேத்தி எம்ஜாரோட ஆடுனப்போ மட்டும் என்ன அர்த்தமாம்?..// அவர் தானே இதை எல்லாம் ஆரம்பிச்சு வைச்சதே! :(

   // உலக்கை நாயகர், பேத்தி வயசான சிநேகாவோட// க்ர்ர்ர்ர்ர் எந்தப் படம்? அதோடு சிநேகா ஒண்ணும் சின்னப்பொண் இல்லை. உலக்கை நாயகர் அவரை விடச் சின்னப்பொண்ணுங்களோடு எல்லாம் நடிச்சிருக்காரே! :( அவர் ஒண்ணும் என்னோட தலைவர் இல்லை. இப்படிச் சொல்லி உசுப்பேத்தி விடப் பார்த்தால் ஏமாந்து தான் போவீங்க?

   ஶ்ரீதிவ்யா யாரு? எந்தப் படம்? அதாவது ரஜினியோடு எந்தப்படம்?

   நீக்கு
  6. இந்தக் பின்னூட்டக் கண்ணியில் துரை செல்வராஜூ ஸார் கட்சியில் இருக்கிறேன் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

   நீக்கு
  7. //கே ஆர் விஜயா தனுஷுடன் ஆடினா..?// இதைப் போன்ற செயல்களையெல்லாம் செய்யும் தில் ராதிகாவுக்குத்தான்

   நீக்கு
  8. துரை அண்ணா நடிக்க வந்தா பாட்டி என்ன பேத்தி என்னனு சொல்லிப் போட்டு....ஆ ஆ கில்லர்ஜிக்கு கேட்டுறப் போவுது சவுக்கு அது இதுனு வேற சொல்லிருக்கீங்க அவர் சவுக்கோடு வர

   நம்ம அதிரடி வேற இந்தக் கில்லர்ஜி எப்பவுமே இப்படித்தான் அப்படினு அவரோடு மல்லுக்கு நிற்க சலங்கையோடு வந்துருவாங்க...சதிராட்டம்தான்...ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  9. கே ஆர் விஜயா தனுஷுடன் ஆடினா கற்பனைலகூட பார்க்க முடியுமா?//

   நெல்லை ஹையோ இப்படியா ஐடியா கொடுக்கறதூஊஊஊஊஊஊஊஉ .ஹையகோ....அம்மனோ சாமியோவ்...

   கீதா

   நீக்கு
  10. //கே ஆர் விஜயா தனுஷுடன் ஆடினா..?// இதைப் போன்ற செயல்களையெல்லாம் செய்யும் தில் ராதிகாவுக்குத்தான்//

   ஆ ஆ ஆ ஆ அப்ப நெல்லையின் கனவு பலிச்சுரும்ன்றீங்களா பானுக்காஆஆஆ...!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
 18. முதலில் வீல் சேரில் பின்பு ஓடியாடுவது எங்கோ சேர வில்லை அதுசரி நாந்தான் படம்பார்க்கவில்லையே

  பதிலளிநீக்கு
 19. 82 களில் சிரஞ்சீவி என்றொரு படம்... கப்பலிலேயே எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லாத படம்... அதுவும் சிங்கப்பூர் கடலில் எடுக்கப்பட்டதே...

  நான் வேலை செய்த Ship yard ன் ஓரமாக துறைமுகத்தில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.... அப்போது தமிழர்கள் ஆயிரக் கணக்கில் அங்கே பணி புரிந்தாலும் துறைமுக எல்லையைக் கடக்க யாரையும் அனுமதிக்க வில்லை... இருந்தாலும் படப்பிடிப்பைத் தேடிச்சென்று பார்க்க முடியாததற்கு முக்கிய காரணம் சிங்கப்பூரில் அனைவருக்கும் வேலை இருந்தது தான்...

  அது என்ன தமிழ் நாடா!?...

  வெட்டிக் கும்பலாய் வீடியோ எடுத்துக் கொண்டிருப்பதற்கும்... விட்டில் பூச்சிகளாக விளக்கில் சென்று விழுவதற்கும்!....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயையோ... துரை செல்வராஜு சார்.... நீங்க இப்படிச் சொன்னதால நான் இன்னைக்கு ........ நடிகை திறக்கும் திறப்புவிழாவுக்குப் போகலை.

   நீக்கு
  2. சிரஞ்சீவி படம் கப்பலில் எடுக்கப்பட்டது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். சிற்றூழியராக நடித்திருப்பார் சிவாஜி. நான் படம் பார்க்கவில்லை.

   ஆனால் அந்தப் படத்தில் டி எம் எஸ் பாடல் ஒன்று நன்றாயிருக்கும்...

   "அன்பெனும் ஒளியாக... ஆலயமணியாக..."

   நீக்கு
 20. அருமையான பாட்டு செலக்‌ஷன். காணொளி பார்க்கவே வேண்டாம். வரிகளை வாசிக்கும்போதே பாடல் மனதில் ஓடுகிறது.

  என்ன அநியாயம்... அனேகமாக எல்லோருக்கும் பிடித்த பாடலை பகிர்ந்துகொண்டுள்ளீர்களே ஶ்ரீராம்...

  இந்த பாலசந்தர், எல்லோரும் ஒரு கதையை ஒரு மாதிரி சிந்தித்தால் முற்றிலும் வேறு கோணத்தில் சிந்தித்து படம் பார்ப்பவர்களைப் படுத்துவார். நீங்களும் பலசமயம் அருமையான பாடல்களை ஒரு படத்துல விட்டுட்டு, ஏதோ பாடலை செலெக்ட் பண்றீங்களேன்னு நினைப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நெல்லைத்தமிழன். இந்தப் படத்தில் எந்தப்பாடலைப் போட்டாலும் அது எல்லோருக்கும் பிடித்த பாடலாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

   நீக்கு
 21. நல்ல பாடல். எனக்கு இந்த படத்தில் வரும் 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா ..' பாடல் மிகவும் பிடிக்கும். சிவாஜி சகாப்தத்தில் கடைசி நல்ல படம் என்று தீவிர சிவாஜி ரசிகர்கள் சொல்வார்கள்.

  இந்த படத்திற்கா? அல்லது வேறு ஏதாவது படத்திற்கா? என்று தெரியவில்லை, குமுதம் விமர்சனத்தில், "சிவாஜியோடு நடிக்கும் பொழுதாவது மஞ்சுளா நடிக்க முயற்சி செய்ய வேண்டும், இல்லாவிட்டால் உஷா நந்தினிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும்" என்று எழுதியிருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ... விமர்சனச்செய்தி எனக்குப் புதிது பானு அக்கா. ஒரு கூடுதல் தகவல்... மஞ்சுளா கௌ அங்கிளுக்குப் பிடித்த நடிகையாக்கும்! நான் சொன்னேன்னு அவர் கிட்ட காமிச்சுக்காதீங்க... கேட்டு கீட்டு வச்சுடாதீங்க...

   நீக்கு
  2. சரி கௌ அங்கிளுக்கு போன் பண்ணி, மஞ்சுளாவை அவருக்குப் பிடிக்கும் என்ற விஷயத்தை நானேதான் தெரிந்து கொண்டேன், ஸ்ரீராம் சொல்லவில்லை என்று சொல்லி விடுகிறேன்.

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா... அநன்யா மகாதேவன் என்றொரு பதிவர்... இதை வைத்து கௌ அங்கிளை ஓட்டுவார்!

   நீக்கு
  4. //மஞ்சுளா கௌ அங்கிளுக்குப் பிடித்த நடிகையாக்கும்! நான் சொன்னேன்னு அவர் கிட்ட காமிச்சுக்காதீங்க... கேட்டு கீட்டு வச்சுடாதீங்க...//
   athiraaaaaaaaaaw @ ஓடி வாங்க சீக்கிரமா வாங்க இதெல்லாம் பார்க்கமா என்ன ஷாப்பிங் ??

   நீக்கு
  5. ஓ.... அதிரா ஆன் வீக் எண்ட் ஷாப்பிங்கோ!

   நீக்கு
  6. நாங்க எல்லாம் வெள்ளி ஷாப்பிங் தான் :) இன்னிக்கு நான் ஒரு பார்சலுக்கு வெயிட்டிங் அதனால் ஆத்துகாரரை அனுப்பிட்டேன் :) இருங்க பட்டு கேட்டுட்டு வரேன் ஜிவாஜி அங்கிள் ஸ்டைலிஷா போஸ் கொடுக்கிறார் :)

   நீக்கு
  7. மஞ்சுளா கௌ அங்கிளுக்குப் பிடித்த நடிகையாக்கும்! நான் சொன்னேன்னு அவர் கிட்ட காமிச்சுக்காதீங்க... கேட்டு கீட்டு வச்சுடாதீங்க...//

   ஹா ஹா ஹா ஹா ஹா அப்ப கீச்சு இல்லையா!! கௌ அண்ணா லேட்டஸ்ட் ட்ரெண்ட்ல நு நினைச்சேன்...!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  8. கீச்சுக்கு முன்னாடி பாவனா :)

   நீக்கு
  9. தோஓஓஓஒ..... வந்துட்ட்ட்ட்ட்டேன் அஞ்சூஊஊ... என்னாச்சூஊஊ சிவாஜி அங்கிள் விழுந்திட்டாராஆஆஅ... அப்பாடா ஶ்ரீராமுக்கு ஒண்ணுமில்லையே:)... ஹா ஹா ஹா நான் மொறிசனில ஷொப்பிங் நடக்குது... முடிஞ்சதும் வாறேன்ன்ன் பாட்டுக் கேய்க்க:)...

   நீக்கு
  10. கீச்சுக்கு முன்னாடி பாவனா :)//

   ஓ எஞ்சல் நன்றி நன்றி

   கீதா

   நீக்கு
  11. //ஶ்ரீராமுக்கு ஒண்ணுமில்லையே:)..//

   ஒண்ணுமில்லை... ஒண்ணுமில்லை... மெல்ல வாங்க!!!

   நீக்கு
  12. அடக் கண்றாவியே! எனக்கு மஞ்சுளாவைப் பிடிக்காது. மஞ்சுளா காலமான சமயத்தில் அவருடைய படத்துடன் ஒரு துணுக்கு செய்தி முகநூலில் போட்டேன். அதைப் பிடித்துக்கொண்டு அனன்யா கேலி கலாட்டா செய்துகொண்டிருந்தார். அப்புறம் அவருக்கு உள் பெட்டியில் என் கடும் கண்டனங்களைத் தெரிவித்தபின் தன்னுடைய கேலிகளை நிறுத்திக்கொண்டார். மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

   நீக்கு
  13. அதானேஏ பாவனாவை விட்டுப்போட்டு மஞ்சுளா எனச் சொன்னால் ஆர்தான் பொறுப்பினம்:) எனக்கே நெஞ்சு வலிக்கிறமாஆஆஆஆறி இருக்கே ஹா ஹா ஹா:)...

   நீக்கு
  14. எனக்கு கூட தலையை சுத்துச்சி .கர்ர் 4 ஸ்ரீராம் :)

   நீக்கு
 22. ஆலயமணியில் வரும் 'கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?...' பாடல் பிடிக்காதவர்கள் இருப்பார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அக்கா நான் சொல்ல வந்த பாடல் ''பொன்னை விரும்பும் பூமியிலே...''

   நீக்கு
  2. ஹா... ஹா... ஹா....

   மறுபடியும் சொல்கிறேன்... இந்த இரண்டில் நான் சொல்ல விரும்பியது "பொன்னை விரும்பும் பூமியிலே"

   நீக்கு
  3. பொன்னை விரும்பும் பூமியிலே பாட்டும் செம பாட்டு...ரொம்பப் பிடிக்கும்...அதில் வரும் அந்த மியூஸிக் டக் டக் என்று வருமெ...

   கீதா

   நீக்கு
  4. பானுக்கா கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா வும் செம அழகான பாட்டு...

   கீதா

   நீக்கு
  5. 'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?’ என்று ஸ்பேனிஷ் பேசும் நாட்டில் தமிழில் கேட்கும்படி அல்லது பாடும்படியானது எனக்கு ஒரு மாலையில் !

   நீக்கு
  6. அடடே ஏகாந்தன் ஸார்... அதென்னது?!!

   நீக்கு
  7. க்யூபாவின் தலைநகர் ஹவானா. இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு டெலிகேஷனுக்காக இந்தியா ஹவுஸில் (தூதரின் அகம்) ஒரு கலர்ஃபுல் பார்ட்டி. அதில் பொழுதுபோய்க்கொண்டிருக்க ஒருவர் நன்றாக ஹிந்தியில் பாடுவார் என இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு அம்மணி சொல்ல, எங்கள் தூதர் அவரை சீண்டி ‘எங்கே பாடு! பார்க்கலாம்’ என்றார். தயக்கத்திற்குப்பின் பாடினார் அவரும். பாடுவதற்கு முன் நான் பாடியபின் நீங்களும் ஒரு பாட்டுப்பாடவேண்டும் என்றார். இந்திய தூதர் அதற்கென்ன பாடிவிடுவோம் என்று சொன்னதால் வந்தவினை! தூதர் ஒரு ஹிந்தி பாட்டின் சில வரிகளைப் பாடிவிட்டு நிறுத்த வேறு யாராவது? என்றார் அந்த அதிகாரி. தூதர் அருகில் அமர்ந்திருந்த என்னை கைகாட்டிவிட்டார். நான் அங்கு அதற்குமுன் பாடியதில்லை. நான் ’தமிழில் பாடமுடியும் ஆனால் லிரிக்ஸ் நினைவில்லை..’ என்று சமாளிக்கப் பார்த்தேன். அவர் விடவில்லை. சும்மா தெரிஞ்சவரை பாடு! என்று ஊக்குவித்தார். கல்லெல்லாம்.. பாடல் வரிகள் ஓரளவுக்கு நினைவுக்கு வர பாடியே விட்டேன்! அதைத் தொடர்ந்து எங்களது தூதர் ஒரு ஸ்பானிஷ் பாட்டைப் பாடி அசத்தினார். அப்படி ஒரு மாலை சென்றது ஹவானாவில்! 2008.

   நீக்கு
 23. ஸ்ரீராம் செம பாடல் இது! மிகவும் பிடித்த பாடல். படம் பார்த்ததில்லை. பிற பாடல்கள் கேட்டிருப்பேன் ஆனால் அவை இந்தப் படம் என்பது தெரிந்திருக்காது எனக்கு...

  //மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
  காணும்நிலமெங்கும் தமிழ்ப்பாடும் மனமே உலகம் நமதாகுமே
  அன்று கவிவேந்தன் சொல்வண்ணமே யாவும் உறவாகுமே //

  அழகான வரிகள்...

  ரசித்தேன்....

  கீதா

  பதிலளிநீக்கு
 24. ஆரம்ப மியூஸிக் செம!! அழகான ஆரம்பம்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா... பதிவிலேயே உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட்டிருக்கிறேன்.

   நீக்கு
  2. //அந்த ஆரம்ப இசையாகட்டும், டியூனாகட்டும் (என்ன ராகம் கீதா?)// இதான் அந்தக்கேள்வி தி/கீதா. நானும் பதிலுக்கு வெயிட்டீஸ்!

   நீக்கு
  3. ஸ்ரீராம் சொல்றென் ஸ்ரீராம் பார்த்துட்டேன் நீங்கள் கேட்டிருப்பதை...அதான் பாடிப் பார்ட்துக் கொண்டிருக்கிறேன்....மனதில் இருக்கும் ராகம் பெயர் டக்கென்று வர மாட்டேன்னுது...

   கீதா

   நீக்கு
  4. கீதாக்கா அண்ட் ஸ்ரீராம் ஆரம்பம் ஒரு ராகம் சொல்லுது....உள்ள போனா வேறொன்னு எட்டிப் பாக்குது....அதான் பார்த்துக் கொண்டிருக்கேன் பாடி...

   கீதா

   நீக்கு
  5. ஸ்ரீராம் அண்ட் கீதாக்கா நான் மீண்டும் மீண்டும் பாடி ஆலாபனை செய்து பார்த்ததில் என் சிற்றறிவுக்கு எட்டிய ராகம் ஸ்வரங்கள் வாஸந்தி. முதலின் நான் தயங்கியதன் காரணம் முதல் ஆரம்பம் கொஞ்சம் மலையமாருதம் போல் தோன்றியது ஆனால் உள்ளே சரணம் போனால் வித்தியாசப்பட்டது. காரணம் ஸ்வரங்கள் பல சகோதரிகளின் ஸ்வரங்கள்...ஸோ கடைசில ஆலாபனை எப்படிப் பாடிப் பார்த்தாலும் வாஸந்தியை டச் செய்தது எனவே என் சின்ன குட்டியூண்டு கடுகளவு அறிவிற்கு வாசந்தி...

   வேறு யாரேனும் சங்கீத வல்லுநர்கள் சொன்னால் நானும் கற்றுக் கொள்ள வசதியாக இருக்கும்....

   கீதா

   நீக்கு
  6. ஓ... வாஸந்தியா? நான் இந்துமதி அல்லது சிவசங்கரியாய் இருக்கும் என்று நினைத்தேன்!

   ஹா... ஹா.. ஹா...

   நீக்கு
  7. மலையமாருதமும் டச் செய்யுது...அட போங்கப்பா சினிமாக்காரங்க கீ போர்ட், ஹார்மோனியம், பியானோனு இசை போடறதுனால ஸ்வரங்கள் எல்லாம் கலந்துக் கட்டித்தான் போடுவாங்க..ஆனால் புதுமையான நல்ல ராகங்களின் கலவை கிடைத்து இனிமையாக அமைவதுண்டு...

   கீதா

   நீக்கு
  8. ஸ்ரீராம் ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹ...

   நான் நினைத்துக் கொண்டேதான் (இந்துமதி சிவசங்கரி என்று னீங்க இல்லைனா யாராவது சொல்லுவீங்கனு நினைச்சுக்கிட்டே) கமென்ட் அடித்தேன்....அதைச் சொல்ல நினைத்து மீண்டும் பாடிப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்...வாசந்தினு சிலர் சொல்றாங்க வசந்தினு சிலர் சொல்றாங்க என்னவோ போங்க...ஹா ஹா ஹா ஹா

   இப்படியான பயிற்சி சூப்பர் ஸ்ரீராம் ராகம் கண்டுபிடிக்கும் பயிற்சி...நிறைய தெரிந்து கொள்ள உதவுகிறது..!!!

   கீதா

   நீக்கு
  9. //அந்த ஆரம்ப இசையாகட்டும், டியூனாகட்டும் //

   பாத்தீங்களா ஸ்ரீராம் உங்களுக்கும் தோனியிருக்கு ஆரம்பம் மற்றும் உள்ள கொஞ்சம் வித்தியாசமா இருக்குனு....அதே கன்ப்யூஷன்லதான் நான்....

   இந்த ரெண்டும் இணைஞ்சு வர ராகம் புதுசா ஏதேனும் இருக்குமோன்னும் பார்த்துட்டுருக்கேன் ஹா ஹா ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  10. //பாத்தீங்களா ஸ்ரீராம் உங்களுக்கும் தோனியிருக்கு //

   அப்படி எல்லாம் இல்லை அதிரா... மொட்டையாக பாடலை ரசித்தத்தைக் குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வளவுதான்!

   நீக்கு
  11. ////அப்படி எல்லாம் இல்லை அதிரா...///
   ஹா ஹா ஹா கீதா ஓடிக் கமோன்ன்ன்ன்ன் அதிராவாம்:).. ஶ்ரீராம் சொல்றார்ர்ர்ர் ஹா ஹா ஹா அதிரா கண்ணுக்கு .... எல்லாம் தெரியுமெல்லோ...

   நீக்கு
  12. https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTIGQaLCurzP3sppW72FXZjH2tilz7Lk3WQ6fnR20Vd3bbGURy5-A

   நீக்கு
 25. ஆஹா !! எங்கம்மா மிளகாப்பழ ரெட் பட்டுப்புடவை வாங்கினதா சொன்னது இந்த படத்தில் மஞ்சுளாபார்த்துத்தானா !!!!பாட்டு கேட்டேன் .சூப்பரா இருக்கு .முன்பு விவித்பாரதில கேட்டதோடு சரி பல வருஷம்ப்பின் கேட்கிறேன் இப்போ .
  ஆரம்பத்தில் வீல்சேரில் ஆரம்பிச்சி நல்லா நடக்கும் வரை இயல்பா இருந்தார் ஜிவாஜி அங்கிள் :)
  இந்த படம் சில வருஷமுன் free சானல் டிவியில் போட்டாங்க அழுதழுது பார்த்தது . .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆரம்பத்தில் வீல்சேரில் ஆரம்பிச்சி நல்லா நடக்கும் வரை இயல்பா இருந்தார் ஜிவாஜி அங்கிள் ://

   ஹா... ஹா... ஹா... அப்புறம் ஓடி ஆட ஆரம்பிச்சுடறார்!

   நீக்கு
  2. ஹா ஹா ஹா ஹா ஹா ஹா பாவம், கௌ அண்ணாவுக்குப் பிடிச்ச, மஞ்சுளா ஆண்டியை விட்டுப்போட்டீங்களே....அவங்க கஷ்டப்பட்டு வாயசைச்சுப் பாடி ஜிவாஜி அங்கிளை ஓடி ஆட வைக்கிறாங்க..பாருங்க!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. ஆமாம் சிவாஜி அங்கிளை ஓட வைக்கிறார்!

   நீக்கு
  4. கௌதமன் சார் மஞ்சு ஆன்ட்டி பாவமில்லியா :) ஒல்லியா :) அந்த வீல் சேரை ஜிவாஜி அங்கிளை வச்சி தள்ள எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாங்க ..sooo sad

   நீக்கு
 26. நீங்கள் போட்டிருக்கும் பாடலும், பேசப்பட்டுக்கொண்டிருக்கும் பாடல்களும் கேட்க இனிமை. நல்ல வரிகளும்.

  பதிலளிநீக்கு
 27. வணக்கம் சகோதரரே

  நல்ல பாடல். அடிக்கடி கேட்டு ரசித்திருந்தாலும், இப்போதும் கேட்டு மிக ரசித்தேன்."மே"லதிக தகவல்கள் தெரிந்து கொண்டேன். இந்தப்படம் பார்த்ததாய் நினைவில்லை. இனிமையான பாடலுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா... நீங்களு'மே' இந்த எழுத்தை உபயோகப்படுத்தி விட்டீர்கள். படம் புகழ் பெற்ற படம்தான். நான் தஞ்சையில் பார்த்தேன்!

   நீக்கு
 28. >>> ஓ... வாஸந்தியா? நான் இந்துமதி அல்லது சிவசங்கரியாய் இருக்கும் என்று.. <<<<

  உங்க களேபரத்துல சுகந்திய விட்டுடாதீங்க!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உங்க களேபரத்துல சுகந்திய விட்டுடாதீங்க!...//

   ஹா... ஹா.. ஹா...

   நீக்கு
 29. அன்பு நடமாடும்...

  பாடல் எனக்குப் பிடிக்கவில்லை:)) அப்பூடின்னு சொன்னாஅல்.. இன்று எல்லோரும் என்னைக் கல்லுக் கட்டி தேம்ஸ்ல போட்டிடுவினம்:))... ஹா ஹா ஹா அப்பூடி எல்லோரும் பாட்டுக் கேட்டுக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்காத குறையா இருக்கினம் போல இருக்கே:))..

  ஆனா உண்மையில் நல்ல பாடல், ஆனா என் பேவரிட் லிஸ்ட்டில் இல்லை.. இலங்கை வானொலியில் தவழ்ந்து உருண்டு வந்து வந்து பலதடவை காதுக்கு இனிமை சேர்த்த பாடலில் இதுவும் ஒன்று.

  ஆனா எனக்கு இந்தப் பழைய பாடல்கள் கேட்கும்போது எப்பவும் கவலைதான் வரும்.. ஏனெனில் சின்ன வயதில் விளையாடும்போது.. ஊஞ்சலாடும்போதெல்லாம் ரேடியோவில் இப்படிப் பல பாடல்கள் போகும்.. இப்போ பழைய பாட்டுக் கேட்டாலே எனக்கு மனதை மனதை என்னமோ பண்ணும்...

  இதுதான் “முதுமை இளமை நினைவில் வாழுது” என்பதோ ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

  ஒருநாள் எங்கள் வேப்பமர ஊஞ்சலில் பெரிதாக மிகப் பெரிய ஊஞ்சல் கட்டி ஆஅடிக்கொண்டிருக்கிறேன்ன்.. ரேடியோவில் போகுது....
  “ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆஅடுதம்மா ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதம்மா....” எனக்காகவே போட்டதுபோல பல நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கு. குட்டியாக இருந்தபோது நினைப்பேன்.. ரேடியோவுகுள் ஆரோ ஒளிச்சிருந்து என்னைப் பார்த்து சிட்டுவேஷன் சோங் போடீனம் என. உண்மையா:)) ஹா ஹா ஹா...

  அதனால இப்போ பழைய பாட்டுக் கேட்கும்போதெல்லாம் குழந்தைக்காலம் நினைவுக்கு வந்து மனதைக் கவலையாக்கும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க அதிரா...

   பாடலை மனதில் கொள்ளாதாதற்கு நீங்கள் சொல்லி இருக்கும் காரணம் நெகிழ்ச்சி.

   சாதாரணமாக நான் (எல்லோரும்தான்) பாடல்கள் கேட்கும்போது, நாம் முதலில் அந்தப் பாடலை எங்கே, எந்தச் சூழ்நிலையில் கேட்டோமோ அங்கே சென்று விடுவோம்.

   இந்தப்படத்தின் எல்லாப் பாடல்களும் நல்ல, இனிமையான பாடல் என்று நீங்களும் அறிந்திருப்பீர்கள்.

   "மனதைக் கவலையாக்கும்" என்கிற வரியை விட ''மனதைக் கனமாக்கும்'' என்கிற வரி பொருத்தமாக இருக்கலாம்!

   நீக்கு
 30. இப்போ எனக்கு எங்கே இருக்கு நேரம் படம் பார்க்க:)). கிடைக்கும் நேரத்தில ஓன் லைன் ரீடிங் எல்லோ நடக்குது:)) எல்லாம் ஸ்ரீராமாலதேன்ன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... இதில் எனக்கு சந்தோஷம்தான்! இல்லை, சந்தோஷந்தேன்...

   நீக்கு
 31. //இந்தப் பழைய பாடல்கள் கேட்கும்போது எப்பவும் கவலைதான் வரும்.. ஏனெனில் சின்ன வயதில் விளையாடும்போது.. ஊஞ்சலாடும்போதெல்லாம் ரேடியோவில் இப்படிப் பல பாடல்கள் போகும்.. இப்போ பழைய பாட்டுக் கேட்டாலே எனக்கு மனதை மனதை என்னமோ பண்ணும்... //
  உண்மைதான் மியாவ் ..இந்த பாட்டு ரேடியோவில் போகும்போது சுட சுட தோசை வரும் அம்மா தலைப்பின்ன சாப்பிட்டுட்டே வேலை நடக்கும் அரக்க பரக்க கிளம்புவேன் ஸ்கூலுக்கு இதெல்லாம் நினைவுக்கு வருது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை ஏஞ்சல்... நானும் இந்த உணர்வுகளை அனுபவிப்பதுண்டு.

   நீக்கு
 32. எனக்கு பிடிச்ச படம். ஆட்டுவித்தால் ஆதாதார் யாரோ கண்ணா! பாட்டு ரொம்பவே பிடிக்கும்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!