புதன், 27 மார்ச், 2019

புதன் 190327 :: உயிர் பிழைக்க வழி சொல்லுங்க!


சென்ற வார புதன் கேள்வி ஞாபகம் இருக்கா? 

சென்ற வாரக் கேள்விக்கும், அதற்கு முந்தைய வார பல்பு கேள்விக்கும் தொடர்பு உண்டு. 


அதற்கு முந்தைய வாரக் கேள்வியாகிய ஃபியூஸ் ஆன பல்பைக் கொண்டு வருவது பற்றி, திண்டுக்கல் தனபாலன் தவிர யாரும் விடை கூற முயற்சிக்கவில்லை. 

அவர் கூறிய வழியிலும், முந்தைய வாரக் கேள்விக்கு சரியான விடையாக அமைந்தபோதும், எந்த சுவிட்ச், எந்த பல்புக்கானது என்பதை உறுதிப்படுத்த முடியாத நிலை. 

பதில், கொஞ்சம் சுற்றிப் போகும் வழிதான். 

இருந்தாலும் சுருக்கமாக சொல்லப்பார்க்கிறேன். 

ஃபியூஸ் ஆன பல்பைக் கண்டுபிடிக்க :

* அறையின் வெளியே உள்ள முதல் சுவிட்சை மூன்று நிமிட நேரம் ஆன் செய்து வைக்கவும். 

* பிறகு, அதை அணைத்துவிட்டு, இரண்டாவது சுவிட்சை ஆன் செய்து, உடனே அறையைத் திறந்து உள்ளே நுழையவும்.

இப்போ உள்ளே மூன்று  நிலைகள் சாத்தியம். 

a) ஏதாவது ஒரு பல்பு எரிந்து கொண்டிருக்கும்; அணைக்கப்பட்டுள்ள விளக்குகளில், ஏதாவது ஒன்று சூடாக இருக்கும். 

அப்படி இருந்தால், சூடாக இருக்கின்ற, அணைந்த விளக்கின் சுவிட்ச் = A
எரிகின்ற விளக்கின் சுவிட்ச் = B.

எரிந்துகொண்டு இருக்கின்ற பல்பைக் கழற்றிவிட்டு, அந்த இடத்தில் கூலாக உள்ள இரண்டு பல்புகளையும் ஒன்று மாற்றி ஒன்று பொருத்திப் பார்க்கவும். எது எரியவில்லையோ, அது ஃபியூஸ் ஆன பல்பு. அதை வெளியே கொண்டு வரவும். 


b) ஏதாவது ஒரு பல்பு எரிந்து கொண்டிருக்கும்; மற்ற விளக்குகள் எல்லாம் கூல்.

அப்படி இருந்தால், எரிகின்ற பல்பின் சுவிட்ச் = B. ஃபியூஸ் ஆன பல்பின் சுவிட்ச் = A . 

அப்படி இருந்தால், எரிந்துகொண்டு இருக்கின்ற  பல்பைக் கழற்றிவிட்டு, அந்த இடத்தில் கூலாக உள்ள மூன்று  பல்புகளையும் ஒன்று மாற்றி ஒன்று பொருத்திப் பார்க்கவும். எது எரியவில்லையோ, அது ஃபியூஸ் ஆன பல்பு.
அதை வெளியே கொண்டுவந்துவிடலாம். 

c) எந்த பல்பும் எரியவில்லை. ஆனால் ஒரு பல்பு மட்டும் சூடாக இருக்கிறது. 

அப்படி இருந்தால், ஃபியூஸ் ஆன பல்பின் சுவிட்ச்  = B.  சூடாக இருக்கின்ற பல்பின் சுவிட்ச் = A. 

இந்த சூழ்நிலையில், ஃபியூஸ் ஆன பல்பைக் கண்டுபிடிக்க, சூடாக இருக்கின்ற பல்பைக் கழற்றி, அதை மற்ற மூன்றின் இடத்திலும் ஒவ்வொன்றாகப் பொருத்திப் பார்க்கவேண்டும். எதனுடைய இடத்தில் இந்த சூடான பல்பு எரிகின்றதோ, அந்த இடத்தில் கழற்றப்பட்ட பல்புதான் ஃபியூஸ் ஆன பல்பு. அதை வெளியே கொண்டு வரவும். 

இவ்வளவும் செய்த பின்பு, ஃபியூஸ் ஆன பல்பு போக மீதி உள்ள மூன்று பல்புகளையும் , ஏதேனும் மூன்று இடங்களில் மாட்டிவிடுங்கள். 

ஆக, முதல் வாரத்தில், நீங்கள், இவைகளை செய்துவிட்டீர்கள் :

சுவிட்ச் A மற்றும் சுவிட்ச் B இரண்டும் எந்த பல்புகளுக்கானது என்று தெளிவாகிவிட்டது. ஃபியூஸ் ஆன பல்பை வெளியே கொண்டு வந்தாகிவிட்டது. 

எல்லோரும் இதுவரை படித்துக்கொண்டு இருக்கிறீர்களா என்று சோதிக்க நடுவே ஒரு கேள்வி. இரண்டும் இரண்டும் எவ்வளவு? 

(அறையில் நுழைந்து பார்க்கும்பொழுது. 'எந்த பல்பும் எரியவில்லை; எல்லாமே கூல் ஆக உள்ளன' - என்று ஒரு நிலை வரவே வராது. ஏன் என்று யோசித்துப்பாருங்கள். )

இப்போ போன வாரக் கேள்விக்கு வருவோம். 

அறைக்குள் ஒரே முறை நுழைந்து, எந்தெந்த சுவிட்சுகள், எந்தெந்த பல்புகளுக்கானது என்று கண்டுபிடிக்கவேண்டும். 

முந்தைய  வாரமே நீங்கள் சுவிட்ச் A & சுவிட்ச் B எந்த பல்புகளுக்கானது என்று கண்டுபிடித்துவிட்டீர்கள். 

எனவே, இப்போது சுவிட்ச் C யை ஆன் செய்து, அறைக்குள் நுழைந்து நோட்டம் விடுங்கள். 

a) ஏதாவது ஒரு பல்பு எரிந்துகொண்டு இருக்கிறதா? அதுதான் சுவிட்ச் C க்கான பல்பு. மீதி இருப்பது சுவிட்ச் D க்கான பல்பு இல்லாத  பாயிண்ட். 

b) எதுவுமே எரியவில்லையா ? அப்போ பல்பு பொருத்தப்படாத பாயிண்டின் சுவிட்ச் = C. மற்றது சுவிட்ச் D க்கான பல்பு. 

அவ்வளவுதான்! எவ்வளவு சிம்பிள் பார்த்தீர்களா! 

தலை சுத்துதா? போய் ஓய்வு எடுத்துக்குங்க! அல்லது நம்ம ஏரியா இன்றைய பதிவைப் படித்து மேலும் குழம்புங்க!

துளசிதரன்:

காரில் பயணம் செய்த போது இடையில் டயர் பஞ்சர் ஆகி ஸ்டெப்னியும் சரியாக இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் காட்டுப் பகுதி ரோடில் நின்ற அனுபவம் உண்டா? கார் பயணம் இல்லை என்றால் பேருந்தில் இப்படியான அனுபவம் ஏற்பட்டதுண்டா?


 காரில் இல்லை. 1951((?)ல் ஆவடி காங்கிரஸ் மகாநாடு பார்த்து விட்டு ரயிலில் திரும்பும் போது "ஜனாதிபதி கிராஸிங்" காரணமாக ஐந்து மணிக்குமேலாக தாமதமாகி அவதிப்பட்டதுண்டு.

& ஒரு முறை ஏதோ ஒரு டிராவல்ஸ் பேருந்தில், சென்னையிலிருந்து, பெங்களூர்ப் பயணம். வழியில், அத்வானக்காட்டில், எஞ்சின் ஃபேன் பெல்ட் அறுந்துவிட்டது. சுற்றிலும் இருட்டு. அந்த வண்டியில் ஹினோ எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது. அதனுடைய பெல்ட் மாற்றுவது மிகவும் கடினமான வேலை. பேருந்தில் எல்லோரும் இரவு நேரம் என்பதால் உறங்கிக் கொண்டிருந்தார்கள். கண்டக்டர், டிரைவர் மற்றும் ஒரு மெக்கானிக் மிகவும் ஆபத்தான  வேலையை செய்தார்கள்.  அருகில் இருந்து குப்பை, கூளங்கள், சில செய்தித்தாள்கள் எல்லாவற்றையும் எஞ்சினுக்குக் கீழே சேர்த்து, அவற்றை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் பெல்ட் மாற்றினார்கள். எஞ்சின் பகுதியில் எங்காவது டீசல் லீக் இருந்திருந்தால் எங்கள் நிலை என்ன ஆகியிருக்கும்?

படிக்கும் காலத்தில் பரீட்சைக்கு நேரம் தவறிச் சென்றதுண்டா? அல்லது பரீட்சையை அப்படி மிஸ் செய்ததுண்டா?


 # பரிட்சை மிஸ் செய்ததில்லை.

& ஐயோ அதை ஏன் கேட்கிறீர்கள்! அடிக்கடி செய்திருக்கிறேன். அது மட்டுமா? பரீட்சைக்கு பேனா எடுத்துக்கொள்ளாமல் சென்று பென்சில் கொண்டு எழுதி, அந்தப் பென்சிலின் முனை உடைந்து, செய்வதறியாமல் திகைத்து ...... நல்ல வேளை இந்த நேரத்தில் பெரும்பாலும் முழிப்பு வந்துவிடும். ஹா ஹா --- நிஜ வாழ்க்கையில் எந்த பரீட்சையையும் மிஸ் செய்ததில்லை. 
பிடித்த சினிமாவை மீண்டும் மீண்டும் பார்க்கும் பழக்கம் உண்டா? நீங்களாவோ அல்லது டிவி சானலில் போட்டாலோ?

& நகைச்சுவைப்படங்கள் என்றால், டீ வி யில் வரும் சமயங்களில் எல்லாம், நேரம் இருந்தால் நிச்சயம் பார்ப்பேன். ஒரு காலத்தில் குரோம்பேட்டையில் கேபிள் டி வி ஆரம்பக் கட்டங்களில், TCP என்று ஒரு சானல். அதில் கிட்டத்தட்ட தினந்தோறும் 'காதலா காதலா ' படம் போட்டார்கள். நானும் அதை கிட்டத்தட்ட ஐம்பது முறை பார்த்திருக்கிறேன். அதற்கு அடுத்தபடியாக காதலிக்க நேரமில்லை படத்தை அடிக்கடி டி வி யில் பார்த்திருக்கிறேன். ஐந்து தடவைகள் பார்த்த பின்புதான், மைக்கேல் மதன காம ராஜன் படம், எந்தக் கமல், எந்தக் காட்சியில் வருகிறார் என்பதை ஒருவாறாக அனுமானிக்க முடிந்தது. சங்கரா ஹாலில் மலிவு விலையில் சில நகைச்சுவைப்படங்கள் VCD வாங்கினேன். வாங்கிய நாளிலிருந்து இதுவரை எதையும் பார்த்த ஞாபகம் இல்லை. அப்படியே வைத்திருக்கிறேன்! 


வாட்ஸ் அப் கேள்விகள் : 

பானுமதி வெங்கடேஸ்வரன் :

பேசும் பொழுது டங் ட்விஸ்ட் ஆவது அப்படி என்ன பெரிய தவறு? அதையெல்லாம் மீம்ஸ் போட்டு பெரிது பண்ண வேண்டுமா?

# மீம்ஸ் எல்லாம் பயணத்தில் எதிர்ப் படும் ஜன்னல் காட்சி மாதிரி. பார்த்து சிரித்து ப் போய்க்கொண்டு இருக்க வேண்டும். இதையெல்லாம் மீம்ஸ் பண்ணாதே என்று யாரிடம் சொல்வது ? யார் கேட்கப் போகிறார்கள்?

தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு சென்றதுண்டா?

# உண்டு. 1952 நேரு. 1957 அண்ணாதுரை. பின் ஒருமுறை கருணாநிதி. ப. சிதம்பரம்.

& உண்டு. நாகையில் 1971 - சோ பேசிய கூட்டம். 1977 - சென்னையில் மொரார்ஜி தேசாய் பங்கேற்ற மெரீனா கூட்டம். மற்றக் கூட்டங்கள் எல்லாம் கூட்டம் நடைபெறுகின்ற இடங்களுக்கு எதேச்சையாகப் போக நேர்ந்தால், கொஞ்ச நேரம் நின்று கேட்பேன். ஒன்றும் ஸ்டஃப் இல்லாத பேச்சு என்று தெரிந்தால், உடனே அகன்று விடுவேன். 

கீதா ரெங்கன் அனுப்பிய கேள்வி : 



இந்தக் கேள்விக்கு, பன்னிரண்டு மணி நேரம் யோசித்து, ஒரு பதிலைக் கண்டுபிடித்தேன். அதை நான் சொல்வதற்கு முன்பாக, வாசகர்களைக்  கொஞ்சம் முயற்சி செய்யவிட்டால் நல்லது என்று தோன்றியதால், இங்கே போட்டிருக்கிறேன். 

பாலைவனத்தில் தனியாக மாட்டிகொண்ட, பார்வை அற்ற மனிதர் ஒருவர், தன்னிடம் ஒரேமாதிரி வடிவம், எடை கொண்ட இரண்டு சிவப்பு, நீல மாத்திரைகள் வைத்துள்ளார். அவர் உயிர் பிழைக்கவேண்டும் என்றால், ஒரு நீல மாத்திரை, ஒரு சிவப்பு மாத்திரை மட்டும் உட்கொள்ள வேண்டும். இதில் எந்த மாற்றம் நேர்ந்தாலும் அவர் உயிருக்கு ஆபத்து. இந்நிலையில் அவர் உயிர் பிழைக்க என்ன செய்வார்?

நீங்கள் யோசித்துப் பாருங்கள். கேள்வி அனுப்பியவர் தவிர மற்றவர்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள். 

இதற்கு பதில் சொல்வதற்கு முன்பு, இந்தக் கேள்வியின் ஒரு அம்சத்தைப் பாராட்டவேண்டும். இந்தக் கேள்வியின் நிபந்தனைகள் அழகாக சமயோசிதமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. 

பாலைவனம் : தண்ணீர் கிடையாது.
பார்வை இழந்தவர் : எந்த நிற மாத்திரை என்பது அறிய இயலாது. 
ஒரே மாதிரி மாத்திரைகள் : வடிவம், எடை கொண்டு அடையாளம் கண்டுபிடிக்க இயலாது. 
சரியாக ஒவ்வொரு நிறத்திலும் ஒன்றை சாப்பிடவேண்டும். இல்லையேல் உயிருக்கு ஆபத்து. 

நான் எப்பொழுதும் கூறுவதை மீண்டும் கூறுகிறேன்; பதில் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். யாரும் உங்கள் பதில்களை கேலி செய்யமாட்டோம். 
       

மீண்டும் சந்திப்போம்! 

    

65 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கௌ அண்ணா, ஸ்ரீராம், துரை அண்ணா அன்ட் எல்லோருக்கும்!

    இரண்டும் இரண்டும் நாலுனு இடையில வந்த கேள்விக்குப் பதில் சொல்ல இப்படித் சுத்தி வந்து தலை சுத்தி!!!! ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாஆஆஆஆஅ... ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அண்ணா எனக்கு இந்தக் கேள்வி அதான் பில்ஸ் அந்தக் கேள்வி வாட்சப்புல 2 பேர்கிட்டருந்து வந்துச்சு..நான் குழம்பிக்கிட்டிருந்த நேரத்துல அட நம்ம கௌ அண்ணாவுக்கு அனுப்பினா புதன் போட்டு யாராவது (யாராவதுஎன்ன டிடி மட்டும்தான்!!!!!!!!) விடை சொல்லுவாங்களேனு அனுப்பிட்டேன்...ஹிஹிஹி

    அனுப்பினதும் ஜிஎம்பி சார் கிட்டருந்து வந்துச்சு பாருங்க......ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி அனுப்பியவர் தவிர//

      ஹா ஹாஹ் ஹா ஹா ஆ எனக்குக் கண்டுபிடிக்க முடியாததுனாலதானே உங்களுக்கு அனுப்பினேன்...இன்னும் நான் விடை கண்டுபிடிக்கலை ஹிஹிஹிஹ்ஹி

      கீதா

      நீக்கு
  3. இனிய காலை வணக்கம். கொஞ்சம் பொறுமையுடன் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். அம்மா கீதா, தலை சுத்தறது உன் கேள்வி.
    பத்து மணி நேரம் யோசிக்கணுமா.
    காலையில் எழுந்து பார்க்கிறேன்.யாராவது சொல்லி இருப்பார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட! ரொம்ப சுலபமான வழியா இருக்கே! ஒரு மனிதர் அங்கே நாலு மாத்திரைகளை வைத்துக்கொண்டு, எப்படி உயிர் பிழைப்பது என்று திண்டாடிக்கொண்டிருக்கிறார்! நீங்க தூங்கப்போகிறேன் என்று சொல்கிறீர்களே! :))

      நீக்கு
  5. இப்போது வணக்கம் வெச்சட்டு,பின்னர் வருகிறேன். அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. Seems to be one of the right(?) answers. But as I tell every time, do not stop with just one right answer. Think. There could be more.

      நீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. //அருகில் இருந்து குப்பை, கூளங்கள், சில செய்தித்தாள்கள் எல்லாவற்றையும் எஞ்சினுக்குக் கீழே சேர்த்து, அவற்றை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் பெல்ட் மாற்றினார்கள். எஞ்சின் பகுதியில் எங்காவது டீசல் லீக் இருந்திருந்தால் எங்கள் நிலை என்ன ஆகியிருக்கும்?//

    படிக்கவே பயமாக இருக்கிறது. டார்ஜ் லைட் ஏதாவது வைத்துக் கொள்ள மாட்டார்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டார்ச் லைட் யாரோ கொடுத்தார்கள். அதனுடைய வெளிச்சம் போதவில்லை.

      நீக்கு
  9. அனைவருக்கும் காலை வணக்கம்.

    கேள்வி பதில்கள் சூப்பர். தாங்கள் சென்ற கார் பயணம் நிறையவே திகில்தான். சகோதரி கீதாரெங்கன் அவர்களின் கேள்விக்கு பதில் யோசிக்கனும். நான் நேரம் கிடைத்து வருவதற்குள் பதில்கள் வந்திருக்கும். அப்பறம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே

      "கார்?"
      ஹா.ஹா.ஹா. காலையில் எழுந்தவுடன் அந்த ஃப்யூஸ் போன பல்பை படித்து மூளையில் ஏற்றலாம் என சோதித்ததின் விளைவு டிராவல்ஸ் பேருந்து காராகி விட்டது.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  10. கீதா ரெங்கன், உங்களிடம் ரகசியமாய் தெரிந்து கொள்கிறேன் , எனக்கு மட்டும் சொல்லிவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ஹா கோமதிக்கா எனக்குத் தெரியாததுனாலதானே கௌ அண்ணாவுக்கு அனுப்பினேன்...அவர் மற்றும் இங்கு சமயோசித புத்திசாலிகள் இருப்பதால் கண்டு பிடிச்சுருவாங்கனு!!ஹா ஹா ஹா நானும் யாராவது விடை சொல்லுவாங்களானு பார்க்கறேன் தெரிஞ்சுக்கத்தான்

      கீதா

      நீக்கு
    2. தெரிஞ்சாலும் சொல்லிடாதீங்க! அடுத்த வாரம் வரை சஸ்பென்ஸ் தொடரட்டும்!

      நீக்கு
  11. அனைவருக்கும் அன்பின் வணக்கம்....

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  12. மாத்திரையை பாதியாக உடைக்க முடியும் தானே..?

    அப்படி என்றால் நான்கையும் ஒவ்வொன்றாக சரிபாதியாக உடைத்து சாப்பிட வேண்டியது தான்...!

    எனது பதிவு இன்று வெளியிட வேண்டும்... பிறகு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. அந்த ஆசிரியர் நான் இல்லை என்பதைப் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்!

      நீக்கு
  13. கண் தெரியாதவர் இவ்வாறு செய்ய முடியமா என்று தெரியவில்லை... இருந்தாலும் இதைவிட (நம்மை விட) பல சக்திகள் கண் பார்வை அற்றவர்களிடம் உண்டு... முக்கியமாக வாக்கு அளிப்பதிலும், வாக்கு கொடுப்பதிலும்...! ஓஹோ, இங்கு அரசியல் கூடாதோ...? மறந்து விட்டேன்... ஹிஹி...

    நான்கு மாத்திரையையும் பொடியாக்கி நன்றாக கலந்து, அதில் பாதியை சாப்பிட வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள்தான் அரசியல் பதிவுகள் எழுதமாட்டோம். நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் அரசியல், கருத்துரைகளில் எழுதலாம்!

      நீக்கு
    2. அரசியல் கேள்விகள் கூடக் கேட்கலாம். எங்களுக்கு பதில் தெரிந்தால் சொல்வோம்.

      நீக்கு
    3. அரசியல் கேள்வி! பதில் சொல்லுங்க கேஜிஜி சார்! :))))

      நீக்கு
  14. ஒவ்வொரு நிறத்திற்கும் வெப்பத்தை உறிஞ்சும் தன்மையும், பிரதிபலிக்கும் தன்மையும் மாறுபடும்...

    வெப்பத்தை சிவப்பு நிறம் அதிகம் பிரதிபலிக்கும்... அதே சமயம் நீல நிறம் வெப்பத்தை அதிகம் உறிஞ்சும்...

    பிறகென்ன...? நான்கு மாத்திரையையும் வெளியில் சிறிது நேரம் வெயிலில் வைத்து, அதிக சூடு உள்ள மாத்திரை ஒன்றையும் குறைந்த சூடு உள்ள மாத்திரை ஒன்றையும் எடுத்து... லபக்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எக்சலண்ட். நானும் அந்தக் கோணத்தில் சிந்தித்தேன்.

      நீக்கு
  15. மாத்திரை ஒருபுறம் இருக்கட்டும்... தண்ணீர் குடிக்காமல் பாலைவனத்தில் வெகுநேரம் இருக்க முடியுமா...? ஏனென்றால், முதலில் நான் சொன்ன கருத்துரையிலேயே சில சந்தேகங்கள்... மாத்திரையை சரி பாதியாக உடைக்க முடியுமா...? சரி அதை விடுங்கள்... மாத்திரை தண்ணீரில் கரையும் என்று எடுத்துக் கொள்கிறேன் என்றால் :-

    1) அவரிடம் தண்ணீர் குடிக்க ஏதேனும் பொருள் உள்ளதா...?
    2) அப்படி இருந்தால், அதில் இந்த நான்கு மாத்திரையையும் கரைத்து, பாதி தண்ணீரை குடிக்க வேண்டும்... அதன்பிறகு தாகமெடுத்தால்...?
    3) இந்தக் கேள்வி உருவாக்கியவரிடம் (சகோதரி கீதா ரெங்கன் அல்ல) பல கேள்விகள் கேட்க வேண்டும்... இல்லையென்றால் ஒரே ஒரு குறளை சொல்லி விளக்கம் கேட்க வேண்டும்... ஆமாம் அந்த குறள் என்ன...? - இது அடுத்த வாரத்திற்கான கேள்வி...!

    அதே குறளுக்கு ஏற்ற பல பாடல்களில் ஒரு பாடல் இதோ :-

    காவலரே வேஷமிட்டால் கள்வர்களும் வேறுருவில்
    கண் முன்னே தோணுவது சாத்தியமே...
    காத்திருந்து கள்வனுக்கு கைவிலங்கு பூட்டிவிடும்
    கண்ணுக்கு தோணாத சத்தியமே...
    போடும் பொய்த்திரையை கிழித்து விடும் காலம்
    புரியும் அப்போது மெய்யான கோலம்...

    ஓம் முருகா என்று சொல்லி உச்சரிக்கும் சாமிகளே
    ருத்திராட்ச பூனைகளாய் வாழுரீங்க...
    சீமான்கள் போர்வையிலே சாமான்ய மக்களையே
    ஏமாத்தி கொண்டாட்டம் போடூறீங்க...
    பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
    உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயோ போயிட்டீங்க தி த! உங்கள் இரண்டாவது பாயிண்டும் நான் யோசனை செய்து பார்த்தேன். நீங்க படைப்பாற்றல் மிக்கவர் என்பதை ஒவ்வொரு வாரமும் நிரூபித்து வருகிறீர்கள். நன்று!

      நீக்கு
    2. சார்... அப்படி எல்லாம் இல்லை... இன்று எதோ நேரம் கிடைத்தது... அதனால் சிந்தித்து தங்களின் புதிருக்கு சில விளக்கம் அளிக்க முடிந்தது... இதே போன வாரம் "திசை - N E W S" என்று நினைத்து பதில் சொல்லி விட்டேன்... அதன்பிறகு வேலை அதிகம் என்பதால் என்னால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை... அதே சமயம் போன வாரம் (https://engalcreations.blogspot.com/2019/03/20.html) இன்னொரு எங்கள்ஸ்-பதிவில் சொன்னது தான் (எனது தந்தையும் இதை விட பல புதிர்கள் போடுவார்... ஆனால் அந்த புதிரையே அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள பல நாட்கள் பிடிக்கும்... அது தான் புதிர்...! நன்றி...)

      போன வாரம் கொடுத்த புதிருக்கு, இன்றைய விளக்கம் புரிகிறது... இதே போல் இரு புதிர்கள் உள்ளது... ஆனால் அதை எப்படி சொல்வது என்று தான் தெரியவில்லை... அப்பாவிடம் தகுந்த சமயம் பார்த்து கேட்க வேண்டும்...

      நான் ஏற்கனவே பலமுறை சொன்னது போல், பதில் தெரியாத + குழப்பமான + தெளிவான, "சரியான கேள்வி உருவாக்க தான் அதிக திறமை வேண்டும்..." நன்றி...

      நீக்கு
  16. //காரில் பயணம் செய்த போது இடையில் டயர் பஞ்சர் ஆகி ஸ்டெப்னியும் சரியாக இல்லாமல் நட்ட நடு ராத்திரியில் காட்டுப் பகுதி ரோடில் நின்ற அனுபவம் உண்டா? கார் பயணம் இல்லை என்றால் பேருந்தில் இப்படியான அனுபவம் ஏற்பட்டதுண்டா?// கார் இல்லை, பேருந்தும் இல்லை. ஆனால் வானில் எங்க சஷ்டி அப்தபூர்த்திக்காகத் திருக்கடையூர் செல்லும்போது இம்மாதிரி அனுபவம் ஏற்பட்டது! அந்த ட்ராவல்ஸ் காரங்க ரொம்பவே நல்லவங்க போல! எங்களை அங்கேயே இருக்கச் சொல்லிட்டு எங்கே இருக்கோம்னு தகவல் அனுப்பினால் வேறே மாற்று வண்டி அனுப்பி வைப்பதாகவும் சொன்னாங்க! அப்போ எங்க குடும்பத்தில் செல்ஃபோன் வைச்சிருந்த ஒரே ஆளான என் தம்பி தான் அவங்களிடம் பேசி மாற்று வண்டிக்கு வழிசொல்லி வர வைச்சார்.அப்போத் தான் செல்ஃபோன் அவசியம் எங்களுக்குப் புரிந்தது. அதன் பின்னரும் ஒரே ஒரு செல்ஃபோன் வாங்கிவிட்டு அதையும் வீட்டிலேயே வைச்சுட்டுப் போவோம்! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // ஒரே ஒரு செல்ஃபோன் வாங்கிவிட்டு அதையும் வீட்டிலேயே வைச்சுட்டுப் போவோம்! // ரொம்ப உஷார்தான்!

      நீக்கு
    2. இவ்வளவு ஜாக்கிரதையா இருக்கறதுனால வீட்ல வச்சிருந்த செல்போனும் கண் முன்னே திருடு போயிடுது கீசா மேடம்.

      நீக்கு
    3. கண் முன்னாடி போனாப் பிடிக்க மாட்டேனா என்ன? க்ர்ர்ர்ர் நெ.த. நான் சமையல் அறையில் இருந்தேன். நம்ம ரங்க்ஸ் மெகானிக்கோடு குளியலறையில்! அவரோட உதவி ஆளை மாடிக்குப் போகச் சொல்லி இருக்கார். சரியான சமயமா இருந்திருக்கு! அப்போத் தூக்கிட்டார் அந்த மெகானிக்கின் உதவி ஆள்! கண்டு பிடிச்சாச்சு! ஆனால் செல் கிடைக்கலை! :((((((

      நீக்கு
  17. இஃகி, இஃகி, என்னடா இது ராமாயணம் எழுத ஆரம்பிச்சுட்டாளேனு நினைக்கிறவங்களுக்கு! இந்தப் பயணம் இடையில் தடைப்பட்டு நட்ட நடுவில் நின்ற அனுபவங்கள் பல ரயில் பயணங்களில் ஏற்பட்டிருக்கு! இதில் நான் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டது ஒரே ஒரு முறை திருச்சி டவுன் ஸ்டேஷனில்! :)))) மற்றவை எல்லாம் ராஜஸ்தான், குஜராத்,மும்பை என்றெல்லாம் பயணம் செய்தபோது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஷை தெரியாத ஊர்களில் (எனக்கு இந்தி தெரியாது) நடு வழியில் மாட்டிக்கொண்டால், முழி பிதுங்கிப் போய்விடுவேன்!

      நீக்கு
    2. கீசா மேடம்.. நீங்களா எழுதியிருந்தீங்க.. மும்பைல ஸ்ட்ரேன்டட் ஆகி, யதேச்சையா உங்க உறவினரைப் பார்த்து அவரோட வீடுபோய்ச் சேர்ந்ததை

      நீக்கு
    3. நான் தான் நெல்லை! ஆனால் மும்பையில் மாட்டிக்கலை. ஜாம்நகரிலிருந்து மும்பை வரும் வழியில் குஜராத் எல்லை பால்கர் என்னும் ரயில் நிலையம்! தற்செயலாக எல்லாம் மைத்துனரைப் பார்க்கலை. அவங்க வீட்டுக்குத் தான் போயிட்டிருந்தோம். எங்களைக் காணாமல் அவங்க பால்கரில் தேடக் கிளம்பிட்டு இருந்தாங்க. அதுக்குள்ளே நாங்க போரிவிலி போய் அவங்க வண்டியிலே ஏறும் சமயம் பார்த்துட்டோம். எங்க பொண்ணுதான் பார்த்தா! சித்தப்பா, அம்மா சித்தப்பா! அதுவரை அத்தனை இனிமையான மொழியை நாங்க யாரும் கேட்டதே இல்லை! :))))))

      நீக்கு
  18. ஆ! நினைவு வந்துவிட்டது! ஒரு முறை குலதெய்வக் கோயில் பேருந்தில் போகும்போது (அப்போல்லாம் அந்த வழியே செல்லும் ரயில்களை தண்டவாள வேலை காரணமாக நிறுத்தி வைச்சிருந்தாங்க. ஒரே ஒரு ரயில் ராக்ஃபோர்ட் கும்பகோணம் வரை செல்லும் திருச்சி வழியாக! அதுக்கு டிக்கெட்டே கிடைக்காது!எழுதித் தான் பார்க்கணும்.) வழியில் டயர் வெடிச்சு வண்டி நின்னு போச்சு! பின்னர் நடத்துநர் வண்டியைப் பார்த்துக்க ஓட்டுநர் அவ்வழியே சென்ற ஒருவருடன் அருகில் ஒரு கிமீ தூரத்தில் இருந்த பணிமனைக்குச் சென்று ஸ்டெப்னியையும், வெடிச்ச டயரையும் மாத்திக்கொண்டு பணிமனை ஆளுடன் வந்து டயர் மாற்றிப் பயணிக்கையில் இரண்டு மணி நேரம் நின்றோம். நல்லவேளையா அதிகம் கஷ்டப்படலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணம் போகும்போதெல்லாம் ஏதாவது ஒரு பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் எடுத்துக்கொண்டு போவேன். திட்டமிடா நிறுத்தல்கள் வந்தால், அதைப் பிரித்துப் படிக்கத் துவங்கிவிடுவேன்!

      நீக்கு
  19. முதலில் ஒரு மாத்திரையைச் சப்பிச் சாப்பிட்டுவிட்டால் அதன் ருசி, மணம் புரிந்து விடும். பின்னர் அதல்லாத மற்றொரு மாத்திரையைக் கண்டு பிடிச்சுடலாம். அதையும் சாப்பிட்டு உயிர் பிழைச்சுடலாம். இப்போத் தேநீர் போட்டுட்டு அப்புறமா வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியில்லை என்று நினைக்கிறேன். பல மாத்திரைகள் சுகர் கோட்டிங் உள்ளவையாக இருக்கும். மேலும் மாத்திரைகளில் அறுசுவை எல்லாம் இருக்காது. எல்லாமே ஆரம்ப இனிப்புக்குப் பிறகு, ஒருமாதிரி கசப்பு சுவைதான் பெரும்பாலும் இருக்கும். வித்தியாசமான பதில்தான். ஆனால் சரி என்று தோன்றவில்லை.

      நீக்கு
  20. //அதற்கு முந்தைய வாரக் கேள்வியாகிய ஃபியூஸ் ஆன பல்பைக் கொண்டு வருவது பற்றி, திண்டுக்கல் தனபாலன் தவிர யாரும் விடை கூற முயற்சிக்கவில்லை. //

    அல்லோ அவ்வ்வ்வ் அண்ணன்:) நாங்கள் பலபேர் விடை கூறியிருந்தொமே:) அதாவது எங்களுக்கு முயற்சிக்க ரைம் இல்லை, முடியவில்லை, தெரியவில்லை.. இப்பூடி:) அதெல்லாம் விடை இல்லையோ கர்ர்ர்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் விடையா! கேள்வியைப் படிச்சதே விடை என்று சொல்லாமல் விட்டீர்களே!

      நீக்கு
  21. பல்ப்பூஊஊஊ சங்கதியை வச்சே ரெண்டு போஸ்ட் எழுதிட்டீங்க:)) கண்டுபிடிச்சிட்டேனெல்லோ:)).

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யாரோ முன்பின் அறிமுகமில்லாமல் ஒருவர் பாலை வனத்தில ரெண்டே ரெண்டு குளிசையை வச்சுக் கொண்டிருக்கிறார்ர்ர்.. இதுக்குப்போய் ஓசிச்சு என் கிட்னி பாலைவனமாகிடப்போகுது:)) சரி சரி முறைக்கக்கூடாது:)) அஜீஸ் பண்ணுங்கோ அதிரா தானே:)..

    கெள அண்ணன்.. பயமொயி கேய்க்கலாமோ?:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ அது பயமொயி:) இல்லை.. மாறிச் சொல்லிட்டேன் விடுகதைகள்? அதாவது நொடிகள்..

      நீக்கு
  22. //தலை சுத்துதா? போய் ஓய்வு எடுத்துக்குங்க! அல்லது நம்ம ஏரியா இன்றைய பதிவைப் படித்து மேலும் குழம்புங்க!
    //

    அவ்வ்வ்வ்வ் நம்மஏரியா என ஒன்று இருப்பதையே மறந்து பல காலமாச்ச்சு:).. அது இன்னும் என் றீடிங் லிஸ்ட்டில் சேர்க்கப்படவில்லை.. அதனாலதான் கண்ணுக்கு தெரியுதில்லை, நினைச்சுப் போனால் மட்டுமே :))

    பதிலளிநீக்கு
  23. எனது சென்ற வாரக் கேள்விகளுக்கான பதில்கள் நல்ல பதில்கள். பேருந்து பயணத்தில் ஏற்பட்ட அனுபவ பதிலில் தகவலும் இருந்தது. கௌதமன் சாரின் பதில் என்று நினைக்கிறேன்.அவரது பணி அனுபவங்கள் சிந்தனை தெரிந்தது. ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி.

    1. கோடை விடுமுறையில் விளையாடவிடாமல், குழந்தைகளைப் (10, +2 மாணவர்களை அல்ல) பல வகுப்புகளுக்கும் அனுப்பி குழந்தைகளின் விருப்பம் பற்றி சிந்திக்காமல் அனுப்பும் பெற்றோர் பற்றி உங்கள் கருத்து என்ன?

    தற்காலத்துக் குழந்தைகளில் பலரும் சுயமாகச் சிந்திக்கும் பழக்கம் பெற்றவர்களாக இருப்பது ப்ளஸ்ஸா மைனஸா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  24. 1,நமக்கு ஒரு விஷயம் பிடிக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அது உணவு ,உடை திரைப்படம் ,அரசியல் கட்சி etc ..etc
    இவற்றில் பிடித்ததை மட்டும் சொன்னால் போதாதா ? எதற்காக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி பிறர்மீது நமது கருத்துக்களை திணித்தே ஆக வேண்டுமா ?

    2, சமீப காலமா எல்லாவற்றுக்கும் ஏட்டிக்கு போட்டி எதிர்வினை என பல விஷயங்கள் நடக்கிறது இது அவசியம்தானா ?

    3,கெட்ட விஷயங்கள் எண்ணங்கள் எப்படி உருவாகுது ?

    4,அன்பு செலுத்துவது அல்லது பிறரின் அன்புக்கு உரியவராக இருப்பது இதில் எது ரொம்ப ஈஸி ?

    5,மரணம் என்பது முடிவா இல்லை துவக்கமா ?

    6,ஒரு பெரிய காடு அந்த காட்டுக்குள்ள பல மிருகங்கள் அதில் காட்டு ராஜாவா இருப்பது சுலபமா ? இல்லைன்னா முயலாவோ அணிலாவோ இருப்பது சுலபமா ?
    நீங்க என்னவா இருக்க விரும்பறீங்க ?

    7, சமுதாயத்துக்கு நம்மளோட அடுத்த தலைமுறைக்கு ஏதாவது நல்லது செய்யணும்னா என்ன செய்வீங்க ?

    8, சிலர் எதற்கெடுத்தாலும் முன்கோபிகளாகவும் சிலர் எதற்கெடுத்தாலும் ரூல்ஸ் ராமானுஜங்களாகவும் சிலர் டவுட்டிங் தாமஸ்களாகவும் ,இன்னும் சிலர் நம்பிக்கை நாராயணன்களாகவும் சிலர் அவநம்பிக்கை அம்புஜங்களாகவும் இருப்பதன் காரணம் என்ன ? இவர்களின் இயல்பை மாற்றவே முடியாதா ?

    9, உண்மை என்றால் என்ன ? அது அறிவியலா ? ,கணிதமா ?அல்லது கலையா ?

    10,உங்களுக்கு சொந்தமுள்ள ஒரு பொருள் இன்னொருத்தர் கையில் இருப்பதை பார்க்கும்போது எப்படி உணர்வீர்கள் ?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!