சனி, 16 மார்ச், 2019

அபிஷேக், வயது 13....


1)  பசுமை பேனா.  வாழை இலையில் தயாரிக்கப்படும் பேனா...

"இதை உபயோகப்படுத்தி துாக்கிப் போட்டால் கூட, எங்கோ ஓர் இடத்தில் உள்ளிருக்கும் விதை முளைக்கும்; மண் குளிர, மரமாக வளரும்....." 2) ராஜலக்ஷ்மி தனது மகனுக்காக கண்டுபிடிக்க நினைத்த கருவிதான்.  ஆனால் அது பல வலிப்பு நோயாளிகளுக்கு உதவும் வகையில் அமைந்து விட்டது.  அதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதையும் சொல்கிறது செய்தி.
3) அபிஷேக் ஒரு லேப்டாப், மூன்றாம் பரிசாக பத்தாயிரம் ரூபாய் பரிசு வாங்கியது எதற்காக?  ஹாவேல் விளம்பரங்கள் பார்த்திருக்கிறீர்களா?  தாய் கஷ்டப்படுவதைப் பார்த்து மகன் சட்டென ஒரு கம்பியை வளைத்து இடுக்கி போல செய்து கொடுப்பான்.  அதுபோல தனது தாய் பணியில் கஷ்டப்படுவதைப் பார்த்து அவர் சிரமத்தைக் குறைக்க ஒரு கருவியைக் கண்டுபிடித்தார்.  அபிஷேக் வயது 13.  அவர்  ஒரு ஐ பி எஸ் அதிகாரியின் அன்பு, நன்மதிப்பையும் இதன்மூலம் பெற்றிருக்கிறார்.
39 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. வாழை இலை பேனா கண்டுபிடிப்பு ஈர்க்கிறதே விரிவாகப் பார்க்க வேண்டும்.

  நினைவுக் கருவு இதுவும் என்னனு பார்க்கனுமே..

  இனிய காலை வணக்கம்...எல்லோருக்கும்..

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் கருத்து சரியாத்தான் கொடுத்திருந்திருக்கிறேன்...தப்பாகிவிட்டதோனு எடுத்துட்டேன்...

   கீதா

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

   நீக்கு
  3. மீண்டும் கருத்தில் தெரியாம நினைவுக் கருவினு வந்துருச்சு ஸ்ரீராம் ...நினைத்த என்று வந்திருக்கனும்...

   கீ போர்ட் கீ எல்லாம் லூஸாக இருக்கு....பல வார்த்தைகள் தப்ப்பாக வருகிறது...அதுவும் வேகமாகத் தட்டச்சினால்..நானும் ஏதோ அதில் தூசி இர்க்குனு க்ளீன் செய்தேன்...

   கீதா

   நீக்கு
 3. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு செய்திகளுடன் இன்றைய பதிவு.... வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
 5. வாழையிலையில் பேனா எனக்கு புதிய செய்தி.

  பதிலளிநீக்கு
 6. தன் மகனுக்காக என்று முயற்சி செய்து அது ஊருக்காக என்று ஆகிய நிறைவைத் தந்தது தாய்மையின் பெருமை....

  பதிலளிநீக்கு
 7. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.
  அனைத்து செய்திகளும் நல்ல செய்திகள்.
  அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

  வாழையிலை பேனா வியக்க வைக்கிறது. மாணவர்களுக்கு இலவசமாக கொடுப்பதற்கு பாராட்டவேண்டும்.
  மகனுக்கு என்று தாய் கண்டுபிடித்த செய்தியும், தாயுக்கு என்று மகன் கண்டு பிடித்த செய்தியும் மகிழ்ச்சி அளிக்கிறது.
  அன்பு வாழ்க!

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான செய்திகள் உடன் இன்றைய காலை இனிதே துவக்கம்..... நன்றி.

  பதிலளிநீக்கு
 9. அருமைத்தாயின் சாதனை, அருமை மகனின் உழைப்பு,வாழைப் பேனா
  இதுவும் வாட்ஸாப்பில் வந்தது.
  அனைத்தும் நன்று. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
 10. ராஜலக்ஷ்மி அவர்களின் கண்டுபிடிப்பு தகவல் புதிது...

  பசுமைப் பேனா சிறப்பு...

  அபிஷேக் கண்டுபிடிப்புகள் தொடரட்டும்...

  அனைவருக்கும் வாழ்த்துகள்... பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
 11. இன்றைய டாப் செய்தி மற்றும் கவனத்தை ஈர்த்த செய்தி வாழை இலையில் பேனா...

  எங்கள் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை, ஒரு குழுவிற்கு ஐந்து பேர் என்று, மொத்தம், 70 மாணவர்கள். இவர்களை வைத்து, எப்போதெல்லாம், 'ஆர்டர்' கிடைக்கிறதோ அதற்கேற்றாற்போல், விடுமுறை நாட்களில், அதற்கான உபகரணங்களை கொடுத்து, வாழையிலை பேனாவை தயாரித்து விடுகிறோம்.//

  அருமையான விஷயமாகத் தெரிகிறது. புதுமையான விஷயமாகவும் தெரிகிறது...

  .சேலம் மாவட்டத்தை சுற்றி உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், இதுவரை, 5,000 பேனாக்களை தயாரித்து கொடுத்துஉள்ளோம்.

  இந்தப் பேனாக்கள், விற்பனைக்கல்ல; இலவசமாகத் தருகிறோம். ஆனால், அதற்கு ஈடாக, மாணவர்களுக்கு தேவையான நோட்டு, புத்தகம் உள்ளிட்ட பல உபகரணங்கள் வாங்கிக் கொள்கிறோம்.

  வாவ்!1 சூப்பர்...அந்தப் பேனாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது...எப்படிச் செய்கிறார்கள் என்பதையும்..

  வாழ்த்துகள் ! பாராட்டுகள்...

  கீதா
  .

  பதிலளிநீக்கு
 12. எபிலெப்ஸி கருவி அசாத்திய உழைப்பைக் காட்டுகிறது. எவ்வளவு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் செய்திருக்க வேண்டும்....மிக மிக அருமையான கண்டுபிடிப்பு. (necessity is the mother of invention!!!!!..உலகிற்கே பயன்படும் ஒன்றாகிறது!! சூப்பர்.)

  ராஜலக்ஷ்மி அவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அபிஷேக்கின் கண்டுபிடிப்பும் அருமை. அபிஷேக்கிற்கும் பாராட்டுகள் வாழ்த்துகல்..

   இப்படிக் குழந்தைகள் கண்டுபிடிப்பவை மேலும் நன்றாக மெருகேற்றப்பட்டு நல்ல வடிவில் மார்க்கெட்டிற்கு வந்து அவர்களுக்கு மார்க்கெட்டிங்க் உதவியும் கிடைத்தால் அபிஷேக் போன்ற சாதாரண நிலையில் இருக்கும் குழந்தகளின் வாழ்வாதாரம் மேலும் உயரும்.

   (பல கண்டுபிடிப்புகள் அதன் பிறகு பேசப்படாமல் போகிறதே என்ற ஆதங்கம்..

   கீதா

   நீக்கு
 13. எங்கள் அஞ்சலியின் சீனா சாரின் படம் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

  பதிவுலக வளர்ச்சிக்கு ஒருகால கட்டத்தில் வெகுவாகத் துணையாக இருந்தவர். அவருக்கு என் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் அஞ்சலியில் சீனா சார் அவர்களின் படமா?...

   என்ன நடந்தது?...

   நீக்கு
  2. சீனா சார் சில காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். மதுரையில் நேற்று (15-03-2019) அன்று காலமானார் என்று முகநூலில் அவருடைய பக்கத்தில், அன்னாரின் மகள் இன்று பதிவிட்டிருக்கிறார்.

   நீக்கு
  3. சீனா சார் காலமான செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன்.
   அவரை மதுரையில் ஒரு பூங்காவில் சந்தித்தோம் பதிவர் சந்திப்பில்.
   நல்ல மனிதர். அவரை இழந்து தவிக்கும் அவர் குடும்பத்திற்கு இறைவன் ஆறுதலையும், தேறுதலையும் தர வேண்டும்.
   எனது அஞ்சலிகளும்.

   நீக்கு
 14. என்னையும் உற்சாகப்படுத்தி வலைச்சரத்தில் ஆசிரியர் பணி அளித்தவர்...

  வலையுலகின் தூண்களுள் ஒன்று சரிந்து விட்டது...

  பதிலளிநீக்கு
 15. சீனா ஐயா அவர்களின் மறைவு மனதை வருத்துகின்றது..

  அவர் தம் குடும்பத்தினர் இத்துயரைத் தாங்கிக் கொள்ளும் வகைக்கு இறைவன் அருள வேண்டும்...

  தமிழுக்குத் தொண்டாற்றிய
  ஐயா அவர்கள் இறைநிழலில் இன்புற்றிருப்பாராக...

  பதிலளிநீக்கு
 16. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அதிலும் அபிஷேக்கின் கண்டுபிடிப்பு எளியவர்களுக்கு உதவிசெய்வதால் அதற்குத்தான் முதலிடம்.

  பதிலளிநீக்கு
 17. மூன்று செய்திகளுமே முத்தானவை.

  பதிலளிநீக்கு
 18. சீனா ஐயாவின் மறைவைப்பற்றி கேள்விப்பட்டேன் என் வலைத்தளத்துக்கு முதல் கருத்துரையாள்ர் மதுரை சரஅனன் என் வீட்டுக்கு வந்திருந்தபோடு அவருடந்தொலைபேசியில் அறி முகம் செய்தார் மதுரை பதிவர்மாநாட்டில் சந்தித்துஇருக்கிறேன் அவருக்கு நினைவஞ்சலிகள்
  வாழை இலைப் பேனா தெரியாதது அதே போல் தலைப்பு என்பேரனை நினைவுபடுத்தியது சில ப்டங்கள் பதிஐப் புரிந்து கொள்ள உதவலாம்

  பதிலளிநீக்கு
 19. அபிஷேக் பாராட்டப்படவேண்டியவன்

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் சகோதரரே

  இந்த வார பாஸிடிவ் செய்திகள் அருமை. வாழை இலையில் பேனா தயாரித்து எழுத உபயோகிக்க கொடுத்தவரின் செய்கை பாராட்டுக்குரியது. அனைவரின் திறமைகளுக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 21. எல்லாமே அருமையான செய்திகள்.

  வாழையிலையில் பேனா ஆச்சரியம். எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கத் தோன்றியது.

  எல்லோருக்கும் வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!