வியாழன், 21 மார்ச், 2019

விமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர்


சென்ற மாதம் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் பெண்மணி ஒருவர் ஓய்வு பெற்றார். 
அலுவலகத்தில் என்னிடம் அதற்கு ஏதாவது எழுதிக் கொடுங்கள் என்று கேட்டனர்.  எழுதிக் கொடுத்ததும்  ஓய்வுப்பயன்களுக்காக அவர் தந்திருந்த கணவருடனான புகைப்படத்தை லேமினேட் செய்து  அதில் இதை எழுதி அனைத்து ஊழியர்கள் சார்பாகவும் தரப்பட்டது.

சோர்வில்லா உழைப்பில் சிறு ஓய்வு. 
அயர்வில்லா அலைச்சலுக்கு சிறு ஓய்வு. 
ஆனால் 
உழைப்புக்கு ஓய்வேது?
மனதுக்கு ஓய்வேது?
வாழ்க்கைப் பயணம் தொடரட்டும் 
அமைதி மனதில் மலரட்டும் 
ஆரோக்கியம் என்றும் நிலவட்டும் 
அலுவலகப் பணி 
எனும் தொடர்கதைக்குதான்  
சுப நிறைவு...  
ஆனால் 
முடிவில்லாத தொடர்கதை 
நம் நட்பு  
நட்பில் என்றும் இணைந்திருப்போம் 
நாளும் உங்களை நினைத்திருப்போம் 
நலமுடனும் வளமுடனும் 
வாழ்க பல்லாண்டு 
என வாழ்த்தும்... 

அவருக்கு ஒய்வு பெறும் நாளன்று அணிவிக்கப்பட்ட மாலை ஒரு ஸ்பெஷல்.  ஐம்பத்தெட்டு வருடங்களைக் குறிப்பிடும் வகையில் ஐம்பத்தெட்டு இரண்டு ரூபாய் நாணயங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மாலை!
====================================================================================================


வருடா வருடம் கொசுக்களின் தொல்லையை அதிகபட்சமாக அனுபவிக்கும் நேரம் இது. "இந்த வருஷம் வெயில் அதிகம் இல்லே?" என்று எல்லா வருடமும் கேட்போமே அதுபோல எல்லா வருடமும் "இந்த வருஷம்  இவ்வளவு கொசு?" என்று கேட்போம்! 

ஐந்து வருடங்களுக்கு முன் புலம்பிய கொசுப்புலம்பல்...அப்புறம் பொறுப்பாக கொசு பற்றிய 'கொசு'றுத் தகவல்களையும் பகிர்ந்திருந்தேன்!


உலகளவில், மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3000ஐத் தாண்டியுள்ளது. இதில், 80 வகை கொசுக்கள் மக்களின் இரத்தத்தை உறிஞ்சும். அதிலும், சில கொசுக்கள், தங்களது வகையைச் சேராத கொசுக்களையே சாப்பிட்டு விடும். கொசுக்களின் பரிணாம வளர்ச்சி, ஓர் அற்புதமான நிகழ்வு. ஒரு கொசு, முட்டையிலிருந்து, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறுவதற்கு தேவைப்படும் காலம், 5 நாட்கள் மட்டுமே. முட்டையிலிருந்து வெளிவந்த சில நிமிடங்களுக்குப் பின், கொசுக்கள் இனப் பெருக்கம் செய்ய முடியும் 

மழைத்துளியின் எடை, கொசுவை விட 50 மடங்கு அதிகம். இருப்பினும், மழை பெய்யும்போது, கொசு சுதந்திரமாக பறக்கலாம். கொசு அதன் குறைவான வலிமையைப் பயன்படுத்தி மிகுவிரைவாக செயல்படுவதால், மழைத்துளிகள் தாக்காது தப்பிச் செல்லாம் என்று மக்கள் பொதுவாக கருதுகின்றனர். ஆனால், இது உண்மையா? 2011-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ச்சோஜியா மாநில அறிவியல் மற்றும் பொறியியல் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள், உயர்வேக ஒளிப்பதிவு வசதியில், கொசு மழை பெய்யும்போது பறக்கும் நிலைமையைச் சோதனை செய்து பார்த்தனர். அவர்களது சோதனை முடிவின்படி, கொசுக்கள் மழையும்போது மெதுவாக பறப்பதால் தான், மழைத்துளிகளை கடந்து செல்ல முடிகிறது என அறிய வந்தனர். இது, மக்களின் பொதுவான கருத்தை விட வேறுபட்டதாக உள்ளது.

பெண் கொசுக்கள், விலங்கு மற்றும் மனிதரின் இரத்தத்தை உறிஞ்சுவதோடு, பல நோய்களையும் பரப்பி விடுகிறது. இது, உலகிலேயே கொடுமையான உயிரிகளில் ஒன்றாக உள்ளது. ஆண்டுதோறும், கொசு பரப்பும் மலேரியா காய்சலால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை, 20 முதல் 30 இலட்சம் வரை இருக்கும். மேலும், சுமார் 20கோடி மக்கள் இந்நோய் தொற்றால் அல்லல்படுகின்றனர். தவிரவும், மஞ்சகாமாலை, டெங்கு காய்ச்சல், மஞ்சக்காமாலை நச்சுயிரிதொற்று முதலியவற்றை பரப்புவதற்கு காரணமாகும்.

மக்கள் உடலிலிருந்து நுகரும் வேதி மணத்தை நாடும் திறமை கொசுவுக்கு மிகவும் வலிமையாக உள்ளது. கொசுவின் உணர்வறி உறுப்புக்களில், மணங்களையும் வேதிப் பொருட்களையும் உணர்வதற்காக 70க்கு அதிகமான பகுதிகள் இடம்பெற்றுள்ளன. மக்கள் வெளிவிடும் மூச்சு காற்றையும் மனித உடலின் மணத்தையும், கொசுக்கள் அவற்றின் உணர்வறி உறுப்புக்கள் மூலம், உணர்ந்துக் கொள்கின்றன. கரியமில வாயு உள்ளிட்ட கரிம பொருளாயதங்களையும் கூட, இந்த உணர்வறி உறுப்புக்கள் நுற்றுக்கு மேலான அடி தொலைதூரத்தில், கொசுக்கள் இந்த பொருளாயதங்களை உணர்ந்து கொண்டு, இலக்கை உறுதிப்படுத்தி கண்டறிய முடியும். ஆழமான சிவப்பு ஆடையை அணிந்திருக்கும் மக்களை, கொசுக்கள் கடிக்க விரும்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொசுக்கள் பெண்களைத்தான் அதிகமாக கடிக்கும் காரணம் அவர்கள் உடலிலுள்ள ஈஸ்ஸ்ட்ரோஜென்ஸ் கொசுக்களை கவருகின்றன

இந்தக் கொசுக்களை ஒழிக்க உலகமெங்கிலும் பல்வேறு வழிகளில் ஆய்வுகள் நடந்து வருகிறது. சமீபத்தில் செயற்கையாக கொசுக்களை உற்பத்தி செய்து, அவற்றுடன் இயற்கை கொசுக்கள் இனம்பெருக்கம் செய்தால் விரைவில் கொசு இனம் குறைந்துவிடும் என்று மெய்ப்பிக்கப்பட்டது. தற்போது இன்னொரு புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் கார்னெல் நகரில் நடந்த ஆய்வு முடிவுகள் ஒரு விஞ்ஞானப் பத்திரிகையில் வெளியாகி உள்ளது. அதில், கொசுக்களில் இருக்கும் ஒருவித புரதத்தை நமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அவற்றை அழிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது கொசுக்களில் உள்ள ஒரு வகைப் புரதம், அவற்றின் சிறுநீர் சுரப்பதற்கு பெரிதும் காரணமாக இருக்கிறது. கொசு நமது உடலில் இருந்து ரத்தத்தை உறிஞ்சும்போது அந்தப் புரதத்தை கட்டுப்படுத்த முடிந்தால் அவற்றின் சிறுநீர் சுரப்பி பாதிக்கப்பட்டு ரத்த ஓட்டமும் தடைபடும். இதனால் கொசு மரணத்தைத் தழுவும். கொஞ்சம் கொஞ்சமாக கொசு இனமும் முடிவுக்கு வரும்.

மிகச் சிறியதும், மிக வேகமாக பறந்து நழுவிச் சென்றுவிடுவதுமான கொசு இனத்தை அழிக்க இதுவே சிறந்த வழி என்கிறார்கள் விஞ்ஞானிகள். குறிப்பிட்ட அந்த புரதத்தை கட்டுப்படுத்துவதற்கான அடுத்தகட்ட முயற்சியாக ஆய்வுகள் தொடருகின்றன.....

The average life span of the female mosquito is 3 to 100 days; the male's is 10 to 20 days.

• Mosquito adults feed on flower nectar and juices of fruits for flight energy.


• The female requires a blood meal for egg development
• Depending on species, female mosquitoes may lay 100 to 300 eggs at a time and may average 1,000 to 3,000 during their lifespan.

• The mosquito matures from egg to adult in 4 to 7 days.

• Most mosquitoes remain within 1 mile of their breeding site. A few species may range up to 20 miles or more.

• Several mosquito species are known carriers of significant diseases of man and domestic animals.

• There are 140 different kinds in the world.

• Female Mosquitoes are attracted to carbon-dioxide and will pierce the skin of people and other warm-blooded animals to suck blood, causing a painful swelling.

• The larvae feed on algae and organic matter. They are full grown in 2 - 14 days.

• The pupae still swim about actively, but do not feed as pupae. Eyes, legs and wings can be seen developing.

• Adults emerge after 1 - 14 days.
=======================================================================================


இப்போதுதான் எனக்கு சமூகப்பொறுப்பு இல்லையே தவிர, அப்போதெல்லாம் கொஞ்சம் இருந்தது.  காணாமல் போன மலேஷியா விமானத்தை நான் தேடியபோது...
======================================================================

பாராட்டின் பெருமையை உணர்ந்தவர் எழுத்தாளர் சாவி....

============================================================================

விமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர் தெரியுமோ.....  நான் சொல்லவில்லை...  இதோ இந்தப் பகிர்வு சொல்கிறது!==================================================================


தெரியுமா?...


====================================================================கூகிள் குழுமத்திலிருந்து நேற்று வந்த மெயில்....!  உங்களுக்கும் வந்திருக்கும்.  பிரியாவிடம் தரவேண்டிய நேரம்...


You’ve received this email because you have content in Google+ for your personal (consumer) account or a Google+ page that you manage.

This is a reminder that on 2 April 2019, we’re shutting down consumer Google+ and will begin deleting content from consumer Google+ accounts. Photos and videos from Google+ in your album archive and on your Google+ pages will also be deleted.

Downloading your Google+ content may take time, so get started before 31 March 2019.

No other Google products (such as Gmail, Google Photos, Google Drive or YouTube) will be shut down as part of the consumer Google+ shutdown, and the Google Account that you use to sign in to these services will remain. Please note that photos and videos already backed up in Google Photos will not be deleted.

For more information, see the full Google+ shutdown FAQs.

From all of us on the Google+ team, thank you for making Google+ such a special place.
Google LLC 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043

You have received this mandatory email service announcement to update you about important changes to your Google+ Page, product or account.

==============================================================================================

143 கருத்துகள்:

 1. காலை வணக்கம் எல்லோருக்கும்

  விமானத்தை முதலில் கண்டு பிடித்தவர் இந்தியர்// புதுசா இருக்கே..பார்க்கணுமே

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூகப் பொறுப்போடு நீங்க தேடிய அந்த விமானக் கவிதை மிக அருமை. ரசித்தேன் ஸ்ரீராம்..

   கீதா

   நீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம்.. கீதாக்கா / கீதா மற்றும்
  விடியலின் உற்சாகப் பறவைகள் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடியலின் உற்சாகப்பறவைகள்.... நல்ல வார்த்தை.

   நல்வரவு துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
 3. ஆகா.. இன்றைய பல்சுவைக் கதம்பம் அருமை...

  ஓய்வு காலம் - கவிதைக்குள் நெகிழ்ச்சியும் ஒளிந்திருக்கிறது..

  கொசு புராணம் - தற்காலத்தின் நிதர்சனம்...
  குப்பைக் கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொண்டாலே 60% கொசுக்கள் அழிந்து விடும்... வீட்டுக்குள்ளும் அடைசல் கூடாது... ஆனாலும் அதெல்லாம் நடக்கிற காரியமா?...

  போஜராஜன் கண்டறிந்த விமான சூட்சுமம் என்று எழுதினாலே காவிக்கூட்டம் கிளம்பி விட்டது என்று இன்னொரு கூட்டம் கிளம்பி விடுகின்றது...

  இப்போது கூட தஞ்சை பெரிய கோயிலில் தமிழ்க் கல்வெட்டுகளை மாற்றி ஹிந்தியில் கல்வெட்டுகளை வைத்து விட்டார்கள்... என்று ஒரு புரளி போட்டோக்களுடன் Fb ல் சுற்றிக் கொண்டிருக்கின்றது...

  எதற்கும் உஷாராக இருக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஆகா.. இன்றைய பல்சுவைக் கதம்பம் அருமை.//

   நன்றி!

   கவிதை பாராட்டுக்கு நன்றி. அவசரமாகக் கேட்டதால் கையோடு எழுதியது. இன்னும் கொஞ்சம் டச்சிங்காய் எழுதி இருக்கலாம் என்று தோன்றியது!

   கொசுபுராணம்- குப்பைகள் இல்லாமல் வைப்பதா? சாத்தியமா அது!!!

   விமான சூட்சுமம் பற்றிப்படித்தபோது எனக்கு அந்த 7 நாட்கள் பாக்கியராஜ் காமெடியும் நினைவுக்கு வந்தது!

   ஆம், அவை மராத்தி எழுத்துகள், தஞ்சை மன்னன் சரபோஜி காலத்தையது,

   நீக்கு
  2. "என்று சொன்னார்கள்."

   ஆஹா... வெட்டி ஓட்டும்போது இந்த வார்த்தை விட்டுப்போய்விட்டது! இது அங்கேயே தங்கி விட்டது!!!

   நீக்கு
 4. வியாழன் பல்சுவை விருந்தாக மலர்ந்திருக்கிறது.

  இதுதான் கொசு சீசனா?

  ஜீவி சார் எழுதிய பகுதியை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நெல்லைத்தமிழன். கொசு வாங்கு வாங்கு என்று வாங்குகிறது.

   நீக்கு
 5. ஸ்ரீராம் முதல் கவிதையும் சூப்பர். அதானே மனதிற்கு ஏது ஓய்வு!! அலைகள் ஓய்வதில்லைதானே! எண்ண அலைகள்! டக்கு டக்குனு அழகா எழுதிடறீங்க ஸ்ரீராம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா... ஆனால் எனக்கு முழு திருப்தி இல்லை.

   நீக்கு
 6. கொசுவுக்குள் இவ்வளவு விடயங்கள் இருக்கிறதா ?

  விமானத்தை மட்டுமல்ல பல கண்டுபிடிப்புகளின் தாயகம் இந்தியாவாகத்தான் உள்ளது.

  அன்று இந்தியர்கள் அறியாமைவாதிகளாக இருந்தும் எதிர்த்து வெற்றி பெற்றனர்.

  இன்று படித்தவர்களாக இருந்தும் நாட்டை அடமானம் வைக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 7. ஓய்வு பெற்றச் சகோதரிக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 8. கவிதை அருமை...

  இன்றைய பல கொசு தொல்லைகளையும் தாங்க முடியவில்லை...!

  Blogger-ம் மூடப் போவதாக நேற்று ஒரு ரூமர் பரவுகிறது...!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி DD. பிளாக்கர் மூடப்போவதாய் சுற்றுவது வதந்தியாகத்தான் இருக்கும்!

   நீக்கு
 9. 58 இரண்டு ரூபாய் காயின் வைத்த மாலை புதுசா இருக்குதே! அத்தனை காயின்களையும் 58 வருட நினைவுப் பொக்கிஷமாய் வைத்துக் கொள்ளலாம் அவர்...

  கொசு ன்னு பாத்ததுமே கொசுவை அடித்து ராத்திரி முழுவதும் அதுக்குக் காவல் இருந்த ஸ்ரீராம் நினைவுக்கு வரார் ஹா ஹா ஹா ஹா ஹா...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 75 ரூபாய் காயின்களா கோர்த்து மாலையாக்கியிருக்கலாமோ?

   நீக்கு
  2. கீதா... கொசுத்தொல்லை பெரிய தொல்லை. கொசுவலை ஏனோ எனக்கு அலர்ஜி! நாணயம் வைத்து தயாரிக்கப்பட்ட மாலை எங்கள் அலுவலக ஊழியர் ஒருவர் முயற்சி.

   நீக்கு
  3. நெல்லை.. 75 ரூபாய் காயின்களிருக்கிறதா என்ன? இந்த ரெண்டு ரூபாய் நாணயங்கள் இவரே கொடுத்து மாலை தயாரிக்கச் சொன்னார்.

   நீக்கு
 10. //வாழ்க்கைப் பயணம் தொடரட்டும்
  அமைதி மனதில் மலரட்டும்
  ஆரோக்கியம் என்றும் நிலவட்டும்//

  அருமையான வரிகள்.
  ஓய்வு பெற்றபின் வெறுமையை உணர்வார்கள், மனம் நிம்மதி இன்றி இருப்பார்கள் சிலர்.
  அவர்களுக்கு மனதில் அமைதி மலரட்டும் என்றது மிக சரி.

  பெண் என்பதால் இவ்வளவு நாள் இரட்டை மாட்டு வண்டி சாவாரி போல், குடும்பம், அலுவலகம் என்று இருந்தவருக்கு இனி குடும்பத்தை கவனித்து கொள்ளும் வேலை, அதை அவர் சிறப்பாக செய்வார்.

  ஓடி ஓடி சுறு சுறுப்பாய் இருந்தவர்கள் இப்போது ஓய்ந்து அமர்ந்து விட்டால் நோய்க்கு இடம் கொடுத்தவர்கள், மீண்டும் இயங்கி கொண்டு மிதமான உடற்பயிற்சி, நண்பர்களை சந்தித்தல்,(நட்பில் என்றும் இணைந்திருப்போம் )

  கோவில் வழிபாடு, தனக்கு பிடித்த ஏதாவது விஷயங்களில் ஈடுபட்டால்தான்
  ஆரோக்கியமாய் இருப்பார்கள். ஆரோக்கியம் என்றும் நிலவட்டும் என்ற வரிகள் அருமை.

  அவருக்கு பணி ஓய்வு மாலை அழகு அருமை.
  அவரின் ஓய்வு காலம் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்க வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அக்கா. உங்கள் வாழ்த்தை அவருக்குத் தெரிவித்து விட்டேன். நம் தளத்தின் மௌன வாசகியான அவர் உங்கள் பெயர் சொன்னதும் அடையாளம் தெரிந்து கொண்டார்!

   நீக்கு
 11. கொசுபுலம்பல் முன்பே முகநூலில் படித்தது.
  கொசுவுக்கு ஒரே நிவாரணம் கொசுவலை. ஆரோக்கியம், மற்றும் பக்கவிளைவுகள் இல்லை.
  இரவு எழுந்து போய் விட்டு மறுபடியும் பத்திரமாய் அதை சரி செய்து படுக்க வேண்டும் இல்லை என்றால் உள்ளே கொசுவின் பாடலையும் அது மகிழ்ச்சியாக நம்மை சுற்றி சுற்றி கடிப்பதையும் அனுபவிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அக்கா. முன்பு முகநூலில் பகிர்ந்ததுதான் இது. கொசுவலை ஏனோ எனக்கு அலர்ஜி!

   நீக்கு
 12. கொசுவைப் பற்றிய தகவல்கள் வியப்பு.

  பெண் கொசுக்கள் நிறைய நாள் வாழ்கிறது போல!! பிறந்ததுமே இனப்பெருக்கம் வேறு..!!!

  பெண்களைத்தான் அதிகம் கடிக்கும்னு தகவல் சொல்லுது....அப்ப என்னை கொசு அவ்வளவாகக் கடிப்பதில்லையே...அதாவது ஒப்பீட்டளவில்!!! அதான் யோசிக்கேன்...

  கொசுவுக்குக் கூட சிறுநீர் எல்லாம் உண்டா!!ஆஆஆஆஆ ஆ ஆ...ஆச்சரியமான தகவல்...

  கொசு லேசுப்பட்டதில்லைனு தெரியுது....ஹா ஹா ஹா ஹா...

  அத்தனைத் தகவல்களும் அதை அழிப்பது உட்பட எல்லாமே சூப்பர்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ பாசிட்டிவ் வகை ரத்தம் இருப்பவர்களை கொசு அதிகம் கடிக்கும் என்றும் ஒரு வதந்தி உண்டு கீதா...

   நன்றி.

   நீக்கு
 13. நீங்க கொசு புராணம் அதாவது இந்த பேட் கொசு மருந்து எதுவும் வேலை செய்யலை பேட் பத்தி சொல்லிருக்கீங்களோ...வாசித்த நினைவு...இருந்தாலும் கொசு புராணம் எப்பவுமே பாடலாம் தான்.

  சென்னையில் நம் வீட்டில் வெயில் காலத்தில் கொசு கிடையாது என்பதையும் (முதல்மாடி அங்கு) பங்களூரில் இப்போது இருக்கும் வீடு ஒரே தளம் தான் கீழ் மட்டும் என்றாலும் இங்கு கொசு அத்தனை இல்லை என்பதைச் சொல்லி உங்கள் காதில் புகை வர வைக்கிறேன்!!! ஹா ஹா ஹா ஹா..இங்கு வந்து கொசுவிற்கு குட்னைட் சொல்லவே இல்லை என்பது கூடுதல் தகவல்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 14. நான் வைமானிக்கா ஸாஸ்திரம் பற்றி சொல்ல வந்தேன் ஆனால் அந்தக் குறிப்பிலேயே இருக்கிறது. பரத்வாஜமுனிவர் விமான சாஸ்திரம் எழுதியதாகவும் அதை அப்புறம் ஒவ்வொருவருக்கும் கடத்தப்பட்டதாகவும். ஆங்கிலத்தில் ஒரு ஸாஸ்திரியால் முழுப்பெயர் நினைவில் இல்லை... மொழிபெயர்க்கப்பட்ட புத்தகம் 1973ல் வெளிவந்தது. அது ஐஎஸ் ஆர் ஓ - தும்பா ராக்கெட் அலுவலகத்தில் நூலகத்தில் கூட இருந்தது. திருவனந்தபுரத்தில் இருந்தப்ப நம் வீட்டிற்கும் அதன் செராக்ஸ் காப்பி கொண்டுவரப்பட்டது. இப்போதும் வீட்டில் இருக்கா என்று தெரியவில்லை.
  அதன் குறிப்புகள் - மேனுஸ்க்ரிப்ட்ஸ் ஒவ்வொருவரிடமும் கடந்து வந்து.....அப்புறம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது என்றுதான் சொல்லிக் கேள்வி.
  ஆனால் அப்புத்தகத்தில் சில முரண்பாடுகள், விவாதங்கள், அதில் சொல்லப்பட்டுள்ள டெக்னாலஜிப் படி அமைத்தல் சரிவராது என்று ஐ ஐ எஸ் ஸி பங்களூரில் ஆய்வு செய்யப்பட்டு சொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுவதுண்டு. அதன் பின்னானவை தெரியவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
 15. ஜீவி அண்ணா எழுதிய குறிப்புகள் எனக்குப் புதிய எழுத்தாளரைப் பற்றி அறிய உதவியது. விந்தன் எனும் கோவிந்தன் பற்றியும் அவரது படைப்புகள், கல்கியின் ஆதரவு, விந்தனின் எழுத்துகள் பாராட்டப்பட்டது எல்லாம் அறிய முடிந்தது. நன்றி ஜீவி அண்ணா மற்றும் ஸ்ரீராம்...இங்கு பகிர்ந்தமைக்கு..

  எல்லாமே அருமை ஸ்ரீராம்.

  என்ன ... டைஃபாய்ட் வந்து ஒல்லியான அனுஷின் படம் தான் இடம் பெறவில்லை!!! ஹா ஹா ஹா ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
 16. சுவையான கதம்பம்.

  பல விஷயங்களை இன்றைக்கு கதம்பத்தில் படித்து ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. காணாமல் போன மலேஷியா விமானத்தை நான் தேடியபோது...//

  சமூகபொறுப்பு ! தேடல் கவிதை அருமை.

  சாவி பற்றிய செய்திகள் அருமை, எவ்வளவு எழுத்தாளர்களை, ஓவியர்களை அவர் முன்னுக்கு கொண்டு வந்து இருக்கிறார். படைப்பாளிக்கு பாராட்டு மிக அவசியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுஜாதா, பாலகுமாரன், சிவசங்கரி உள்ளிட்ட அனைவரும் சாவி அவர்களுக்குக் கடமைப்பட்டவர்களாகவே இருப்பார்கள் கோமதி அக்கா.

   நீக்கு
 18. வேர்களை தேடி செய்தி அருமை.

  நாம் எல்லாவற்றிற்கும் முன்னோடிதான்.

  திறமையானவர் காணாமல் போனது தால்படயே நிலமை என்ன வானதோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்... நம் பெருமை நமக்குத் தெரிவதில்லை கோமதி அக்கா.

   நீக்கு
 19. ஜீவி சாரின் பதிவை முன்பே படித்து இருந்தாலும் மீண்டும் படித்தேன்.
  அருமை.

  பதிலளிநீக்கு
 20. கூகிள் குழுமத்திலிருந்து நேற்று வந்த மெயில்.. !
  எனக்கும் வ்னஹ்து இருக்கிறது.

  //Blogger-ம் மூடப் போவதாக நேற்று ஒரு ரூமர் பரவுகிறது...!!!//
  திண்டுக்கல்தனபாலன் சொல்வது ரூபராக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாமாம்.. ரூமராகவே இருக்கட்டும்!

   நீக்கு
  2. முதல்ல பேஸ் புக்கை மூடட்டும்... புளொக்கரில எதுக்கு கை வைக்கினம் கர்ர்ர்ர்ர்ர்:)

   நீக்கு
  3. பேஸ்புக்கையும் மூடி, ப்ளஸ்ஸையும் மூடினால் எங்கள் பிளாக்கை நான் எங்கேதான் விளம்பரம் செய்வது!!!!

   நீக்கு
  4. ஹா ஹா ஹா நாங்கள் எங்கு போய் விளம்பரம் செய்தாலும்.. நம்மிடம் வருவோர்தான் வந்து படிப்பார்கள் ஸ்ரீராம்... கொமெண்ஸ் உம் போடுவார்கள்..

   நீக்கு
  5. படிப்பவர்கள் எல்லோரும் கமெண்ட் போட்டால் பிளாக் தாங்காது அதிரா!

   நீக்கு
 21. இன்று சனிக்கிழமையோ விசாலக்கிலமையோ..... நான் எங்க இருக்கேஏஏஏஏன்ன்ன்ன்ன்ன்ன்:).... எனக்கு கை எங்க வைக்கிறது கால் எங்க வைக்கிறதெண்டே புரியல்ல:)...

  நான் புளொக்குக்கு வருவது குறைஞ்சதில ஒரு காரணம் சிரிராம் தேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:).......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆத்தீ..... நான் என்ன செஞ்சேன்.....!

   நீக்கு
  2. அந்த ஆன்லைன் புக் வாசிக்க லிஸ்ட் கொடுத்தது நீங்கதானே :)

   நீக்கு
  3. அதுவா?!!!

   ஆ.....

   யானே கள்வன்....!

   நீக்கு
  4. ஹா ஹா ஹா இத இத இதத்தான் எதிர் பார்தேன்ன்ன்ன்ன்:)...
   எதிரி அடிக்கும்போது வலிக்காதமாறியே இருந்தா, எதிராளிக்கு அது தோல்வியாம்:)... இது நேக்கு வெற்றீஈஈஈ:)

   ஹா ஹா ஹா நான் கிண்டில் ல மூழ்கி முத்தெடுக்கிறேன் ஶ்ரீராம்:)... நல்லவிசயம் தானே செஞ்சிருக்கிறீங்க:).... எள் எண்டால் எண்ணெயாகி நிக்கிற பேர்வழியாக்கும் நான்:)...

   அமேசன் இந்தியஆவில் போய் கிண்டில் புக் வாங்கிப் படிக்கத் தொடங்கிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்...

   இப்போ ஆரம்பிச்சிருப்பது எது தெரியுமோ???? “சிகப்புக்கல் மூக்குத்தி” .... கண்ணதாசன் அங்கிளுடையது:)...

   என்ன விலை தெரியுமோ... நாப்பேத்தூஊஊஊஉ ரெண்டூஊஊஊஊ பென்ஸ்:) ஹாஆஆஆஆ ஹாஆஆஅ எவ்ளோ மலிவு:)..... என் பல வருட ஆசை எல்லாம் நிறைவேறிக்கொண்டு வருதூஊஊஊஉ:)..... அம்மாவின் வயிற்றில் இருக்கும்போது தெரியுமாமேஏஏஎ ஒரு இருட்டூஊஊஊ அது இப்போ தெரியுதெனக்கூஊஊஊ:)... ஹையோ அஞ்சுவைக் காணமே:)...

   நீக்கு
  5. ////அந்த ஆன்லைன் புக் வாசிக்க லிஸ்ட் கொடுத்தது நீங்கதானே :)///
   ஆஆஆஆஅ மொபைல்ல முக்கி முக்கி ரைப் பண்ணுவதற்குள் எல்லோரும் கம்பி மேல:)....

   நீக்கு
  6. //இப்போ ஆரம்பிச்சிருப்பது எது தெரியுமோ???? “சிகப்புக்கல் மூக்குத்தி” .... கண்ணதாசன் அங்கிளுடையது:)...//

   இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது. கமல்- ஸ்ரீதேவி நடிப்பில்!

   நீக்கு
  7. ஆன்லைனில் புக்கை திறந்ததும் பேய் பிசாசு பூதம் வர செட்டிங் இருக்கும் ஸ்டோரீஸ் இருந்தா சொல்லுங்க ஸ்ரீராம் :) ஒருத்தருக்கு கைண்டா கிண்டலில் ப்ரெசென்ட் பண்ணனும் :)))))))

   நீக்கு
  8. ஹா... ஹா... ஹா... இப்பதான் டீவியில் கல்யாணராமன் படம் முடிந்தது!

   நீக்கு
  9. //இது திரைப்படமாகவும் வந்திருக்கிறது. கமல்- ஸ்ரீதேவி நடிப்பில்!//

   ஓ அப்படியா.. எனக்கு கதை படிக்க ஆரம்பிச்சதிலிருந்தே ஒரு சந்தேகம் மனதில ஓடிகொண்டிருக்குது.. நீங்க இங்கு பகிர்ந்த பாட்டைப்பிடிச்சுப்போய்ப் படம் பார்த்தேன்.. அப்படியே தொடராக சில படங்கள் பார்த்தேன்.. அதில் ஒரு படம்,

   சிவாஜி அங்கிள்+ மனைவி.. குழந்தை கிடையாது, மனைவியின் தங்கை கே ஆர் விஜயாவை வலுக் கட்டாயமாக 2ம் தடவை முடிக்கோணும் என சி. அங் ஐ வற்புறுத்திக் கட்ட வைக்கிறார்... அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்குது.. படப்பெயர் மறந்து போயிந்தி:)).. அக்கதையாக இருக்குமோ.. சி.மூ என சந்தேகத்தோடயே இருக்கிறேன்ன். அப்போ அது வேறயோ...

   நீக்கு
  10. //
   Angel21 மார்ச், 2019 ’அன்று’ பிற்பகல் 2:51
   ஆன்லைனில் புக்கை திறந்ததும் பேய் பிசாசு பூதம் வர செட்டிங் இருக்கும் ஸ்டோரீஸ் இருந்தா சொல்லுங்க ஸ்ரீராம் :) ஒருத்தருக்கு கைண்டா கிண்டலில் ப்ரெசென்ட் பண்ணனும் :)))))))//

   https://thumbs.gfycat.com/UnevenKnobbyInsect-small.gif

   நீக்கு
  11. அதிரா... சிவாஜி - கே ஆர் விஜயா பற்றி நீங்கள் சொல்லி இருப்பது போல ஒரு படம் நான் கேள்விப்பட்ட நினைவில்லை.

   நீக்கு
 22. ////விமானத்தை முதலில் கண்டுபிடித்தவர் இந்தியர்////

  நோஓஓஓஓஒ முதலில் கண்டு பிடிச்சது ஸ்கொட்டிஸ்ச்ச்ச்ச்ச்ச் காரர்தான்ன்ன் அதாவது அதிராவின் ஜொந்தக்காரர்ர்ர்ர்ர்ர்ர்:).... இது வேற கண்டு பிடிக்கிறது:)...

  இன்று தலைப்பு பார்த்து சனி என நினைச்சுப்புட்டேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்:) கிளிகிளுப்பான தலைப்பேதும் கிடைக்கேல்லைப்போல:)...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேணாம் வேணாம் என் வாயை கிளறாதிங்க :)

   நீக்கு
  2. அடடா... தலைப்பு சரியில்லையா? தலைப்பப் பார்த்து எல்லோரும் ஆர்வமாக வருவார்கள் என்றல்லவா நினைத்தேன்!

   நீக்கு
  3. தலைப்பு சனிக்கிழமையோ என ஜந்தேகப்பட வைக்குது ஶ்ரீராம்.... வியாளனின் ஸ்டைலே வேற:)

   ஏன் அஞ்சு வாயில சமோசா போட்டிட்டாவோஓஓஒ அப்போ கிளறாமல் விட மாட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)

   நீக்கு
  4. நீங்கள் சொன்ன பிறகு எனக்கும் அப்படித் தோன்றுகிறது!

   நீக்கு
 23. ////Blogger-ம் மூடப் போவதாக நேற்று ஒரு ரூமர் பரவுகிறது...!!!//

  noooo நான் விட மாட்டேன் ..அது மட்டும் நடக்க கூடாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏஞ்சல்... அதென்ன மிக்கி மௌஸ் மாதிரி ஜோடியா வந்திருக்கறீங்க!

   நீக்கு
  2. அது எதேச்சையா அமையுது :))))))))))))))) கூட வந்த்தாதான் வாலை இழுக்கவும் வசதி :)

   நீக்கு
  3. இது எதேச்சையாகவே இன்று அமைஞ்சது ஶ்ரீராம்ம்ம்ம்:)... காலைச் சுத்தின பாம்பூஊஉ கடிக்காமல் விடாதாமே:) நான் அஞ்சுவுக்குச் சொல்லல்லே:) ஹா ஹா ஹா:)

   நீக்கு
  4. ஆஹா வந்தாச்சா...டாம் அண்ட் ஜெர்ரி இப்பத்தான் அங்கு வாழ்த்துகள் சொல்லிட்டு வந்தேன்...இங்க ரெண்டுமே புகுந்துருச்சு...

   ஏஞ்சல் அண்ட் அதிரா..உங்க .கமென்ட்ஸ் ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. ஆஆஆஆஆஆஅ கீதாவும் கம்பிமேலயோ.. நான் இப்போதான் கொம்பியூட்டர் திறந்தேன்ன்... மொபைலை விட்டு:)..

   நீக்கு
  6. ஆமாம் தீர்க்கதரிசி...

   இங்குதான் உலாவிக் கொண்டிருக்கிறேன்...

   கீதா

   நீக்கு
 24. காசு மாலை அழகா இருக்கு கவிதை வாழ்த்து மடலும்தான் ..ஒரு டவுட் .இப்படி இதுக்கு முந்தி ரிட்டையர் ஆகி போனவர்களுடன் இன்னும் தொடர்பில் இருக்கீங்களா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரிட்டையர் ஆனவர்களுடன் தொடர்பில்தான் இருக்கிறேன். 97 இல் ஒய்வு பெற்ற நண்பர் சமீபத்தில் காலமானபோது போகமுடியாத வருத்தத்தைக் கூடச் சொல்லி இருந்தேனே...

   மேலும் இவர் என் அலுவலகத்தில் பனி புரிந்திருந்தாலும் பாஸுக்கு நெருங்கிய நண்பி!

   நீக்கு
  2. //பனி புரிந்திருந்தாலும் //

   பனி இல்லை பணி!

   நீக்கு
  3. ஹா ஹா ஹா இப்போ எல்லோரும் என்னா ஸ்பீட்டா கரெக்ஸன் செய்கினம்:)

   நீக்கு
  4. யெஸ் இங்கே சொன்னிங்க போக முடியாத வருத்தம் பற்றி
   சரி சரி பணி மேல் பனி யாய் படர்ந்தது :)   நீக்கு
  5. என் அலுவலகத்தின் பெண் நண்பிகள் அனைவரும் என் பாஸுக்கும் நல்ல நண்பர்கள். வரலக்ஷ்மி விரதம் சமயத்தில் அனைத்து பெண் சக அலுவலர்களையும் வீட்டுக்கு அழைத்து வெ.பா தரும் வழக்கத்தினாலும், பாஸின் நட்பு மனதினாலும்!

   நீக்கு
  6. ஆஹாஅருமை கேட்கவே சந்தோஷமாயிருக்கு

   நீக்கு
  7. இந்தத் தோழி ஓய்வு பெற்ற அன்று பாஸ் கர்சீப்பை நனைத்துக் கொண்டிருந்தார். தனிப்பட்ட முறையில் நினைவுப்பரிசும் கொடுத்தார். அவரும் என் பாஸுக்கு புடைவை எடுத்துக் கொடுத்தார்!

   நீக்கு
  8. அலுவலக நண்பிகளை மட்டும் பயமில்லாமல்:) பாஸ் க்கு அறிமுகம் செய்கிறீங்க:).. எங்களை மட்டும் செய்கிறீங்க இல்லை:) ஹா ஹா ஹா... இதை அஞ்சுதான் ஜொள்ளச் சொன்னா:)).. மீ ரொம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணூஊஊஊஊஊஊஉ சின்ஸ் 6 இயேர்ஸ்ஸ்ஸ்ஸ்:)..

   நீக்கு
  9. நல்ல நட்புகள் ஸ்ரீராம் உங்க பாஸுடன் உங்கள் அலுவலகத் தோழிகள்...

   ஹப்பா ஸ்ரீராம் பனி யைப் பார்த்ததும் ஹையோ ஸ்ரீராம் கரெக்ட் பண்ணிருக்காரா இல்லைனா இப்ப டமில்ல டி வாங்கினவங்க கம்பைத் தூக்கிட்டு வந்துருவாங்களேனு கவலையா போச்சு...நல்ல காலம் உடனே கரெக்ட் பண்ணிட்டீங்க...டமில்ல டி வாங்கின ரீச்சர்கிட்ட மாட்டிக்கலை!!

   கீதா   நீக்கு
  10. //அலுவலக நண்பிகளை மட்டும் பயமில்லாமல்:) பாஸ் க்கு அறிமுகம் செய்கிறீங்க:).. எங்களை மட்டும் செய்கிறீங்க இல்லை:) ஹா ஹா ஹா.//

   உங்களை எல்லாமும் பாஸுக்குத் தெரியும்!

   நீக்கு
 25. கொசுக்களை நினைச்சாலே மனம் பதறுது .என்னையும் என் மகளையும் தேடி வந்து சைன் வச்சிட்டு போவுங்க மெட்றாஸ் கொசுக்கள் .அது மார்க் ஒரு மாசம் வரைக்கும் இருக்கும் .
  எங்க ஊர்ல கொசு இல்லியே இல்லியே :) நம்மூரில் வெறும் கட்டிடங்கள்தானே இருக்கு அதான் கொசுங்க வீட்டுக்கு வராங்க ..பக்கத்தில் பாண்ட் இருந்த மீன்களும் வாத்துகளும் கொசு லார்வாவை சாப்பிட்டுடும் கொசு பெருகாது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்த கொசு விரட்டி செடிகளில் பெஸ்ட் லெமன் க்ராஸ் தான்

   நீக்கு
  2. காய்ந்த வேப்பிலை, பழைய மேட் போன்றவற்றை எரித்து விரட்ட முயற்சித்தது உண்டு.

   நீக்கு
 26. நாங்க காடு மலைப்பக்கம் டிரோன் அனுப்பி தேடினா நீங்க மீனம்பாக்கத்தில் தேடியிருக்கிங்க வெறி குட்
  விமானம் கண்டுபிடித்த நம்மாட்கள் தகவல் புதிது .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... நீங்களும் தேடினீர்களா?!!

   நீக்கு
  2. நான் முதல்ல விமானத்தை கண்டுபிடித்தவர் தலைப்பைப் பார்த்து பேஜ் ஸ்க்ரோல் ஆகும் போது கரீக்ட்டா அந்த மீனம்பாக்கம் கவிதை வேற வந்துச்சா அது சரி அப்ப ஸ்ரீராம் தான் விமானத்தைக் கண்டுபிடிச்சுருக்கார்னு நினைச்சேன்!!!!!!!!!!!!!!!!!

   கீதா

   நீக்கு
  3. இதில இருந்து என்னா புரியுதுன்னாஆஆஆஆஆஆஆஆ... அஞ்சுவுக்கும் ஸ்ரீராமுக்கும் எங்கின போய்த் தேடுவதென்றே தெரியுதில்லை ஹையோ ஹையோ:)).. இருக்கும் இடத்தை விட்டு... இல்லாத இடம் தேடி.. எங்கெங்கோ அலைகிறாரம்மா தீர்க்கதரிசி ஞானித்:) தங்கமே:).. எங்கெங்கோ அலைகிறாரம்மா:) ஹா ஹா ஹா.

   “எங்கு தொலைச்சோமோ அங்குதான் தேட வேண்டும்”.. ஜொன்னது ஆரு தெரியுமோ.. புலாலியூர்ப் பூஸானந்தாஆஆஆஆஆஅ:)) ஹா ஹா ஹா..

   ஆனா அதுக்கும் மேலால கற்பனை கவிதை ஜூப்பர் ஸ்ரீராம்... உங்களுக்கு சட்டுப்புட்டென எழுத வருது.. போன போஸ்ட்டில் கோமதி அக்கா கேட்டிருந்தா, தன் தாமரைக் குளம் பார்த்ததும் அதிராவுக்கு கவிதை தோணுதோ என, எனக்கு நினைச்ச வராது, நினைக்காத நேரம் வரும்:), ஆனா பார்த்தவுடன் ஸ்ரீராம்தான் எழுதுவார் எனச் சொன்னேன்.. நீங்க அதைப் பார்க்கவில்லைப்போலும்.. முடிஞ்சால் அந்தத் தாமரைக்குளக்கவிதை ஒன்று அடுத்த வாரம்??????? பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

   நீக்கு
  4. தீர்க்கதரிசி அந்தத் தாமரைக்குளத்தில் அனுஷ் இருந்தா கவிதை தானா வந்துவிடாதோ?!! என்ன சொல்றீங்க தீர்க்கதரிசி!!! ஹா ஹா ஹா

   கீதா

   நீக்கு
  5. ஆயிரம் தாமரை மொட்டுக்களும் விரிந்திட
   ஒவ்வொரு தாமரையிலும்
   உன் முகம் கண்டேன்
   கவிபாடியதும்
   நீ நாணத்திலே கன்னம் சிவந்திட
   தலையைக் குனியும் தாமரையானாய்!

   கீதா (இரண்டு பாடல்கள் இரவல் வாங்கி.....ஹையோ ஸ்ரீராம் அடிக்க வருவதற்குள் மீ அந்த விமானத்தோடு ரன்வேயில்!!!)

   நீக்கு
  6. ஹா ஹா ஹா சூப்பரா சொல்லிட்டீங்க கவிதை கீதா:)...

   அனுஶ்:) டாமரை மேல ஏறி இருந்தா:) குளத்து நீரெல்லாம் நாட்டுக்குள் வந்திடுமே ஹா ஹா ஹா ஹையோ ஹையோஒ...:)

   நீக்கு
  7. ஆதிரா, ஸ்ரீராம் கிட்ட கவிதை கேட்டால் கீதா தருகிறார்களே !

   நீக்கு
  8. அது கோமதி அக்கா... தன்னைக் கேய்க்கவில்லையே என கீதாவுக்குப் பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ராஆஆஆஆமை:) ஹா ஹா ஹா:)...

   நீக்கு
  9. ஆஹா... அசத்திட்டீங்க கீதா... கவிஞி!

   நீக்கு
  10. //அனுஶ்:) டாமரை மேல ஏறி இருந்தா:) குளத்து நீரெல்லாம் நாட்டுக்குள் வந்திடுமே//

   grrrrrrrrr..... இப்ப இளைச்சிட்டாங்களாம் தெரியுமா... சொன்னாங்க...

   நீக்கு
  11. அதிரா, நீங்கள் கேட்டவுடன் சட்டுப்புட்டென எழுதிவிட்டார் ஸ்ரீராம்.
   தாமரை கவிதை அருமை படித்துப் பாருங்கள்.

   நீக்கு
 27. நான் மலேரியா கண்ட்ரோல் செக்ஷனில் பணியாற்றியதால்,கொசுவாப் பற்றி பல தகவல்கள் தெரியும். இருந்தாலும் அதையெல்லாம் சொல்லி எல்லோரையும் படுத்த இஷ்டமில்லை. சில வருடங்களுக்கு முன்பு கொசுவைப்பற்றி நான் முகநூலில் பகிர்ந்திருந்த, பலரால் பாராட்டப்பட்ட, சிலரால் பகிரவும்பட்ட ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன்.
  கொசுக்கடியும், ஏழரை நாட்டு சனியும் ஒன்றுதான். எத்தனை முஸ்தீபுகள் செய்தாலும், என்ன பரிகாரங்கள் புரிந்தாலும் தன வேலையை காட்டாமல் விடாது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கொசுக்கடியும், ஏழரை நாட்டு சனியும் ஒன்றுதான். எத்தனை முஸ்தீபுகள் செய்தாலும், என்ன பரிகாரங்கள் புரிந்தாலும் தன வேலையை காட்டாமல் விடாது. //

   ஹா.... ஹா....ஹா... உண்மை .பானு அக்கா.

   நீக்கு
  2. பானுக்கா செமையா சிரிச்சுட்டேன்...ஏழரை சனியோடு கொசுவையும் சேர்த்து...

   அது சரி அப்ப எல்லாக் கொசுவுக்கும் ஏழரை சனி கூடவேயோ? அப்படினா அதுக்கு என்ன பரிகாரமா இருக்கும்?!!!

   கீதா

   நீக்கு
  3. ஹா ஹா ஹா செவின் பொயிண்ட் ஃபைவ் அங்கிள்கூட 7.5 உடன் முடிஞ்சிடுவார்ர்ர்... கொசு.. பரம்பரை பரம்பரையா வந்து கொல்லுமே:))

   நீக்கு
 28. பணி ஒய்வு பெறும் எல்லோருக்கும் இப்படிப்பட்ட காசு மாலை உண்டா? நல்ல ஐடியா!

  பதிலளிநீக்கு
 29. ஓய்வு பெறும் அவருக்கு வாழ்த்துகள் சொல்லிடுங்க ஸ்ரீராம்...இது அப்ப போடும் போது சொல்ல விட்டுப் போச்சு

  காசு மாலை அழகா பின்னிருக்காங்க...யார் பின்னிருந்தாலும் அந்தக் கலைஞருக்கும் வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
 30. காசு மாலை நல்ல ஐடியா, அழகு.

  இப்போதான் கொசுக்கொலை நடத்தி, இருவரின் சடலங்களும் இங்கு படமாப் போட்டீங்க ஸ்ரீராம் ஒரு மாவீரர் ரேஞ்சுக்குப் போய்:)).. அதுக்குள் அடுத்த வருட கொசுப்புராணம் ஸ்ராட்டட்ட்.. ஓ அமி கோட்ட்.. என்னா ஸ்பீட்டூஊ . மீ வேல்ட்டுக்குச் சொன்னேன்:))

  பதிலளிநீக்கு
 31. ///ப்போதுதான் எனக்கு சமூகப்பொறுப்பு இல்லையே தவிர, அப்போதெல்லாம் கொஞ்சம் இருந்தது. ///
  அதிதான் எங்களுக்குத் தெரியுமே:)... பக்கத்து வளவில அம்மனுக்கு கூழ் ஊத்த முருங்கி இலை பிடுங்கினதுக்கே:) உங்க வீட்டு மொட்டை மாடியில நிண்டு கொண்டே பதறினதை எப்பூடி மறப்போம்ம் ஹா ஹா ஹா:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதறவில்லையே... அப்போதும் நான் பதறவில்லையே.... பதிவல்லவா தேத்தினேன்!!!!

   நீக்கு
 32. வணக்கம் சகோதரரே

  இன்றைய வியாழன் கதம்பம் அருமை. நிறைய விஷயங்களை உள்ளடக்கியதாக உள்ளது. படிக்க, ஜீரணிக்க பொழுதும் நிறைய தேவை எனத் தோன்றுகிறது.

  ஓய்வு பெற்ற தங்களுடன் பணியாற்றிய சகோதரிக்கு பிரிவு உபசார கவிதைக்கு மனமுவந்த வாழ்த்துக்கள். மலேசிய விமானத்தை தினமும் தேடி தங்களுக்குள் உதித்த கவிதையும் படு ஜோர. தங்களுக்கு கவிதைச் சொற்கள் எளிதில் உதயமாகிறது. தாங்கள் கவிதை எப்படி எழுதப்பழக வேண்டுமென ஒரு புத்தகம் எழுதினால், என் போன்றவர்கள் படித்தறிந்து கவிதை எழுத கொள்ள செளகரியமாக இருக்கும்.
  இன்னமும் பதிவை படித்த பின் வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வாங்க கமலா அக்கா... ஜீரணிக்க கடினமா இருக்கா? யூனிஎன்ஜைம் சாப்பிடுங்க... ஹா... ஹா... ஹா...

   //தாங்கள் கவிதை எப்படி எழுதப்பழக வேண்டுமென ஒரு புத்தகம் எழுதினால், என் போன்றவர்கள் படித்தறிந்து கவிதை எழுத கொள்ள செளகரியமாக இருக்கும். //

   ஹா... ஹா... ஹா...

   நீக்கு
 33. நானொரு முறாஐ நண்பரொருவர் வீட்டில் கோடம்பாக்கத்தொஇல் தங்கினேன் கொசுக்கடியை தவிர்க்க அவர் ஒர் பெடெஸ்டல் ஃபானை அருகில் வைத்தார் காலையில் விழித்ததும் என்னைச்சுற்றிகொசுக்கள் செத்துக்கிடந்தது நானொரு சுற்று பெருத்துஇருந்தேன் ராமாயண காலட்திலேயே புஷ்பகவிமானம் எல்லம் இருந்தது என்று படித்திருக்கிறேன் இந்தியர்களே எல்லாவகை கண்டு பிடிப்புகளுக்கும் மூலகர்த்தாக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி எம் பி ஸார்... கொசுக்கொலை புரிந்து விட்டீர்களா! இங்கு தினசரி அதுதான் நிலைமை!

   நீக்கு
 34. வணக்கம் சகோதரரே

  இரண்டு ரூபாய்களை வைத்து காசுமாலை பாணியில் செய்த அந்த மாலை அற்புதம்.

  கொசுக்களைப்பற்றிய தகவல்கள் அறிந்து கொண்டேன். பெண்களை விரும்பி கடிப்பதோடு மட்டுமில்லாமல் அது குழந்தைகளையும்,மிகவும் விரும்பி கடித்து துன்புறுத்துகிறது. அப்போது இந்த கொசு பிறக்காலிருக்க யாராவது சாபம் கொடுக்க கூடாதா என மனம் கோபம் அடைகிறது.

  சாவியின் பாராட்டும் குணம் தெரிந்து கொண்டேன்.விமானத்தை முதலில் கண்டு பிடித்தது இந்தியர் என்ற தகவல் பெருமை கொள்ள வைக்கிறது. புராணங்களில் இராவணன் புஷ்பக விமானத்தில், சீதையை கடத்திக் கொண்டு சென்றான் என கதைகளில் கேட்டது உண்மையாக இருக்குமென்று தோன்றுகிறது. அனைத்தும் சுவையான தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காசுமாலை ஐடியா தந்த நண்பரிடம் உங்கள் அனைவரின் பாராட்டுதல்களை சொல்கிறேன். மகிழ்வார்.

   பெண்கொசுக்கள்தான் கடிக்கின்றன அக்கா... பெண்களை மட்டுமா கடிக்கின்றன? எங்களையும்தான்!

   நீக்கு
  2. //பெண்கொசுக்கள்தான் கடிக்கின்றன அக்கா... பெண்களை மட்டுமா கடிக்கின்றன? எங்களையும்தான்!// - பெண்களும் அப்படித்தான் என்று சொல்ல வருகிறீர்களா ஸ்ரீராம்? (அதில் உண்மை இருந்தாலும்)

   நீக்கு
  3. பாதி சொன்னால் மீதி புரிந்து விடுகிறது!

   நீக்கு
 35. கொசுக்களைப் பற்றிப் படித்தபோது, என் ப்ரொஃபசரின் மனைவி (அவரும் ப்ரொஃபசர்தான்), மதுரையில் கொசுக்களை வைத்து ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தார் (பி.ஹெச்.டிக்கு). அவருடைய வீட்டின் அறையில் ஏகப்பட்ட பாட்டில்களில் கொசுக்களை வளர்த்துவந்தாராம். அதனா அந்த வீட்டில் கொசுக்கடி அதிகமாக இருக்குமாம் என்று நண்பன் சொன்னான்.

  அது இருக்கட்டும். நீங்கள் ஏன் இவ்வளவு ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள்? ஆங்கிலச் செய்தியையும் போட்டு, கிட்டத்தட்ட மேஜர் சுந்தர்ராஜன் ரேஞ்சுக்குப் போன காரணம் என்ன?

  சில மாதங்களுக்கு முன்பு, பாத்ரூமிலும், என் அறையிலும் இரு வேறு நாட்களில், batவைத்துக்கொண்டு, நடு இரவில் ஆரம்பித்து கை வலியினால் தளர்வடையும் வரை கொசுக்களை அடித்திருப்பேன். அடிக்க அடிக்க கொசு வந்துகொண்டே இருந்தது. ஒவ்வொரு அறையிலும் ஆயிரம் கொசுக்களுக்குமேல் அடித்திருப்பேன் (உண்மையா. எக்ஸாஜரேஷன் கிடையாது). (வெளிநாட்டில், 25 வருடங்களா கொசுக்களே பார்த்தது கிடையாது). அப்புறம் ஜன்னல்களை மூடியும், எக்ஸாஸ்ட் பேன் பகுதியில் இருந்த பெரிய ஓட்டையையும் அடைத்தேன். அன்றிலிருந்து அதிக அளவில் கொசுக்களைப் பார்த்ததில்லை. (அதிகபட்சமா 10-15)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நெல்லை. மூடிய அறைக்குள் எவ்வளவு கொசு... அவ்வளவு கொசு எங்கிருந்துதான் வந்து கொண்டே இருக்குமோ என்ற ஆச்சர்யம் எங்களுக்கும்...

   நீக்கு
  2. // மேஜர் சுந்தரராஜன் ரேஞ்சுக்கு //

   ஹா... ஹா... ஹா... இது உண்மையில் சென்ற தேர்தல் சமயத்தில் முகநூலில் பகிர்ந்தது! இங்கு இப்போதும் தேர்தல், இப்போதும் கொசு என்பதால் பகிர்ந்தேன்.

   நீக்கு
 36. ப்ளாகர் மூடப் போவதில்லை. அந்த சைட்டிற்கே போய் அறிந்து கொண்டேன்.
  உங்கள் அலுவலக்த் தோழிக்கு ஓய்வு வாழ்க்கை இனிமையாக அமைய வாழ்த்துகள். 58*2 116 வயது வரை ஆரோக்கியமாக வாழட்டும். என் ஆசிகள்.
  உங்கள் கவிதை அன்புடன் ,அறிவு தோய்ந்த வார்த்தைகளால் புனையப்பட்ட மற்றோரு
  மாலை.

  கொசுவைத் தவிர்க்கக் கொசுவலை தான் சூப்பர் சல்யூஷன்.
  நாங்கள் அதையே மேலே போர்த்திக் கொண்டு முழுவீச்சில் மின் விசிறியைச்
  சுத்த விட்டு விடவோம்.
  இப்பொழுது வீடு முழுக்க நெட் அடித்ததில் அவ்வளவு இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...

   உங்கள் வாழ்த்தை தோழிக்கு சொல்லி விடுகிறேன்.

   கவிதை பாராட்டுக்கு நன்றி. கொசுவலை ஏனோ எனக்கு அலர்ஜியாக இருக்கிறது...

   நீக்கு
 37. பதில்கள்
  1. ஆமாம் அம்மா.. திருமணம் போன்ற விசேஷங்கள் சமயத்தில் நன்றாகவே உதவுகின்றன!

   நீக்கு
 38. ஸ்ரீராம்ஜி வழக்கம் போல உங்கள் கவிதைகள் அருமை. குறிப்பாக இரண்டாவது கவிதை விமானத்தைத் தேடிய கவிதையை மிகவும் ரசித்தேன். முதல் வாழ்த்துக் கவிதையிலும் வரிகள் அருமைதான். எனக்கெல்லாம் இத்தனை அளவு கூடக் கவிதை எல்லாம் எழுத வராதே!!!

  ஓய்வு பெறுபவருக்கு வாழ்த்துகள். கூடவே உங்கள் வரிகளுடன். வித்தியாசமான மாலை. அதுவும் அவரது செர்வீஸ் வருடங்களைக் கணக்கிட்டு 2 ரூபாய் காயின்கள் வைத்துத் தொடுத்த மாலை! (நானும் சென்ற வருடம் ஓய்வு பெற்றதை நினைத்துக் கொண்டேன் இதே மார்ச்சில்தானே! ஆனால் இப்போது அருகில் உள்ள காலேஜில் வேலை...என்பதால் நேரம் மிக டைட்டாகப் போகிறது)

  விமானத்தைக் கண்டுபிடித்தவர் பற்றிய தகவல்கள் அறிந்தேன்.

  ஜீவி சார் எழுதிய புத்தகத்திலிருந்து கொடுத்திருந்த குறிப்பை ரசித்தேன்.

  எழுத்தாளர் சாவி அவர்களின் பண்பு சிறப்பான ஒன்று!

  எங்கள் வீட்டிலும் கொசு உண்டுதான் ஆனால் கொசு வலை எல்லா ஜன்னல்களிலும் உண்டு. மேலும் வீட்டைச் சுற்றித் தோட்டம் எனவே மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அந்தி சாயும் நேரத்தில் கொஞ்சம் வரும் அப்புறம் எல்லாம் தோட்டத்திற்குள் புகுந்துவிடும். எனவே அத்தனை தெரிவதில்லை.

  அனைத்தும் அருமை ஸ்ரீராம்ஜி!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க துளஸிஜி..

   அனைத்தையும் படித்து ஒவ்வொன்றாக கருத்திட்டமைக்கு நன்றி.

   வழக்கம் போல கவிதையை ரசித்தமைக்கும் நன்றி.

   நீக்கு
 39. ஸ்ரீராம் காலையில் சொல்ல விட்டுப் போன மிக மிக அருமையான விஷயம்....

  சாவி அவர்களைப் பற்றியது. எத்தனை பெரிய எழுத்தாளர் அவர்! (சாவி என்றாலே எனக்கு வாஷிங்க்க்டனில் திருமணம் தான் நினைவுக்கு வரும். நான் ரசித்து வாசித்து சிரித்து சிரித்து ஹையோ கல்லூரிக் காலத்தில் அப்படிச் சிரித்திருக்கிறேன் வாசித்து). இப்போது மீண்டும் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது) பத்திரிகையாளரும் கூட! என்ன அருமையான தலைசிறந்த குணம் இல்லையா!!!? ஒருவரைப் பாராட்டுவது என்பது ஆகச் சிறந்த குணம் என்பேன். எத்தனை ஊக்கம் அளிக்கும் அது! அந்த ஊக்கத்திலேயே நிறைய நல்ல படைப்புகள் வருமே. அவரிடம் நாம் கற்க வேண்டிய மிகச் சிறந்த குணம். மிகவும் ரசித்தேன் அக்குறிப்பை. ச்சே இத்தனை நல்ல விஷயத்தை எப்படி காலையில் சொல்ல விட்டுப் போனேன் என்று இங்கு சொல்லியிருக்கேனோ என்று தேடிப்பார்த்து இல்லை என்பது தெரிந்ததும்...இப்போது போடுகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கீதா.

   நிர்வாண நகரம் என்று ஒரு கதை. அந்தக் கதைதானா, வேறு கதியா என்று நினைவில்லை. கணேஷ் பாலா சரியாகச் சொல்லக்கூடும்.

   அந்தக் கதையில் சுஜாதா எழுதி இருந்த ஒரு வாரம்... பிரசுரிக்க முடியாது என்று சொல்லி விட்டாராம் சாவி... அப்புறம் சுஜாதா மாற்றவேண்டி இருந்ததாம்.

   நீக்கு
 40. வர வர ஸ்ரீராமுக்கு மறதி அதிகமாகிக்கொண்டே வருகிறது. இரண்டு வாரங்களாச்சு அனுஷ்கா படம் போட்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா...

   அரம செயலருக்கு இருக்கும் பொறுப்பு எனக்கில்லையே... என்னைவிட ரசிகராயிருக்காங்களே.....!!!

   நீக்கு
 41. விமானம் என்ற எண்ணத்தைக் கண்டுபிடித்தது நிச்சயம் இந்தியாவில்தான். உ-ம் ராவணணனின் புஷ்பக விமானம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா....

   உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

   நீக்கு
 42. ஆஹா என்ன .ஒரு ஒற்றுமை. நான் தங்களின் இன்றைய பதிவை படிக்காமல் (காணொளியை காணாமல்) அதற்கு அடுத்த பதிவை படித்தேன். தாங்கள் தங்களுடன் பணிபுரிந்தவரின் ஓய்வுக்கு ஒரு கவிதையை எழுதியிருக்கிறீர்கள். நானும் என்னுடைய ஆசிரியரின் ஓய்வுக்கு,அவரிடம் படித்த காலத்தில் நடந்ததை நினைவுகூறி நேற்று தான் எழுதி அனுப்பினேன்.

  உங்கள் கண்களுக்கு அந்த காணாமல் போன விமானம் தட்டுப்பட்டிருக்கணுமே!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா...

   நீங்கள் சொல்லி இருக்கும் ஒற்றுமையை கவனிக்க மறந்தேன் சொக்கன் ஸார்... ஸாரி!

   நீக்கு
 43. விமானம்...மட்டுமல்ல டிவி, வானொலி,கம்ப்யூட்டர்,கார்,மிதிவண்டி,கிரைண்டர்,மிக்சி,பல்ப்....Ext உலகத்தில் உள்ள அனைத்தையும் கண்டுபிடித்தது இந்தியர்கள்தான் o.k va....உருப்படியா இந்த உலகத்திற்கு எதையுமே கண்டுபிடித்து கொடுக்காமலேயே எவனாவது எதையாவது கண்டுபுடிச்சா நாங்கதான் முதல்ல கண்டுபுடித்தோம்னு சொல்லி சொல்லியே வாழ்க்கைய ஓட்டிட்டு போயிடுவோம் சரியா....த்தூ...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!