சனி, 23 மார்ச், 2019

அந்த நிஜ ஹீரோவுக்கு ஒரு சல்யூட்.......


1)  பெங்களூரில் சித்தலிங்கய்யா என்று ஒரு காவல் அதிகாரி, வயிற்றில் குத்தப்பட்டுக் குடலெல்லாம் வெளிவந்து சாலை ஓரத்தில் சாகக்கிடந்த ஒரு பெண்ணை, குடலை வயிற்றில் தள்ளி வயிற்றை துணியால் கட்டி, ஆட்டோவில் மருத்துவமனைக்கு எடுத்துப்போய், அந்தப் பெண்ணுக்குத் தேவையான AB+ ரத்தம் அந்த மருத்துவமனையில் இல்லாததால் அதே ரத்தப் பிரிவைச் சேர்ந்த அவரே ரத்த தானம செய்து அந்தப் பெண்மணியைப் பிழைக்க வைத்துவிட்டார்.
அந்த நிஜ ஹீரோவுக்கு ஒரு சல்யூட்.  (நன்றி எழுத்தாளர் ஆனந்த் ராகவ், முகநூல்) 2)  மரபுக்கு மாறாக, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கும், சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது. தன் வீட்டுக்குள் நுழைய முயன்ற பயங்கரவாதிகளை, அடித்து விரட்டியதற்காக, அச்சிறுவனுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் வீர தீர விருது வழங்கப்பட்டது.
3)  வடநாட்டில் தமிழர்களுக்காக தமிழர்களால் செய்யப்படும் சேவை...
4)  ........... அதில், 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் மட்டும் மயங்கி நிலைகுலைந்தான்.

ஹோலி கொண்டாட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்த தனியார் செய்தி நிறுவன புகைப்படக் கலைஞர் ரவிக்குமார் என்பவர் அந்தச் சிறுவனை மீட்டு உடனடியாக முதலுதவி அளித்துள்ளார்.


29 கருத்துகள்:

 1. மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் எல்லோருக்கும்.

  அட! மீண்டும் ஒரு நிஜ ஹீரோவா!!!! யார் பார்க்கிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 2. ஹோலி கொண்டாட்டத்தில் சிறுவனை மீட்ட ரவிக்குமார் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  இங்கும் எங்கள் தெருவில் ஹோலி கொண்டாடினாங்க தினமும் பார்க்கும் நபர் கூட யாரென்று தெரியாத அளவு கலர் சாயம். முழுவதும். மாடியிலிருந்து கலர் தண்ணீர் கொட்டியும் என்று ஒரே சத்தமும் கூச்சலுமாக....எல்லா வீட்டுச் சுவர்களும் ஹோலி கொண்டாடின!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த உரிமையையும் மிஸ்யூஸ் செய்வது என்பது இந்தியாவில் மட்டும்தான் நடக்கும் மடைமை. அது வெடி போடுவதாகட்டும், போகி என்ற பெயரில் குப்பையைக் கொளுத்துவதாகட்டும், ஹோலி என்ற பெயரில் தெருவை நாறடிப்பதாக ஆகட்டும். எதைச் செய்தாலும் அவங்க அவங்க வீட்டுக்குள்ள கொண்டாடினாப் போதாதா? இந்தியர்களுக்கோ டிஸிப்பிளின் ரத்தத்துலயே கிடையாது (பெரும்பாலானவர்களுக்கு). அவங்களுக்கு கொண்டாட்டங்கள் எதுக்கு?

   நீக்கு
 3. இர்பான் ரம்ஜான் ஷேக் - நிஜ ஹீரோதான். பயங்கரவாதிகளைத் தைரியமாக அடித்து விரட்டியிருக்கிறாரே. பாராட்டுகள் அவருக்கு..

  வடநாட்டில், தழிழர்களுக்குத் தமிழர்களால் செய்யப்படும் சேவை சூப்பர்ப். (நாட்டுக்கோட்டை நகரசத்திரம்...ஆஹா நம்ம கில்லர்ஜி இன்று எங்க ஊர்னு மகிழ்ச்சியில் பூரிப்பாரே!!!) திரு நாகப்பன், சாரதா அவர்களுக்கு வாழ்த்துகள்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்க ஊர் என்று நானும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோ. எனக்கும் கில்லர்ஜிக்கும் இந்த பிரச்சனை தான் காரைக்குடி பெருசா, தேவகோட்டை பெருசான்னு....

   நீக்கு
  2. சொக்கன் சுப்ரமணியன் - நான் உங்க கட்சி. காரைக்குடிதான் நகரத்தார்களின் பூர்வ ஊர். மற்ற இடங்களிலும் அவங்க பரவலா வாழ்ந்தாலும், நா.கோ.செ என்றாலே காரைக்குடிதான்னு சொல்லுவாங்க.

   நா.கோ.செ. (நகரத்தார்கள்) சைவத்துக்கு நிறைய தொண்டு புரிந்திருக்கிறார்கள். அவங்க நிறைய யாத்திரை போகும் இடங்களில் சத்திரங்கள் கட்டியிருக்காங்க (காசி, ராமேஸ்வரம் உள்பட).

   நீக்கு
  3. அப்பாடா, இப்பத்தான் எனக்கு நிம்மதியா இருக்குது. இதைப் படிச்சுட்டு கில்லர்ஜி என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
   நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. சித்தலிங்கய்யா பெருமைக்குறியவர், மற்றவர்களையும் பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 5. சித்தலிங்கையா வாவ்! போற்றி பெருமைப்படுத்த வேண்டியவர். பாருங்க அந்தப் பெண்மணிக்குத் தேவையான இரத்தமும் அவரது க்ரூப்பாக இருந்திருக்கிறது!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 6. நல்ல ஒத்தாசைகள் ஆசிகள் யாவருக்கும். அன்புடன்

  பதிலளிநீக்கு
 7. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 8. சிறப்பான செய்திகள்....

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 9. இந்த பதிவில் இடம்பெற்ற ஹீரோக்கள் அனைவருக்கும் ஒரு சல்யூட்.
  அவர்களுக்கு பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம்...
  வாழ்க நலம்....

  பதிலளிநீக்கு
 11. அனைத்துச் செய்திகளிலும் மகத்தான மனித நேயம் மிளிர்கிறது...

  நாட்டுக் கோட்டை நகரத்தார் புரியும் நற்செயலுக்குத தலை வணங்குகிறேன்....

  பதிலளிநீக்கு
 12. மனிதநேய சித்தலிங்கய்யா அவர்களுக்கும், நிஜ ஹீரோ இர்பான் ரம்ஜான் ஷேக் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 13. போற்றத்தக்கவர்களைப் பற்றிய அருமையான பதிவு. எங்களது வட இந்தியப் பயணத்தின்போது இந்த நகரத்தார் சத்திரத்தில்தான் தங்கியிருந்தோம்.

  பதிலளிநீக்கு
 14. எல்லோருமே வணங்கத்தக்கவர்கள்.

  பதிலளிநீக்கு
 15. பல கொண்டாட்டங்கள் சோகமாக முடிவது
  வாடிக்கையாகிவிட்டது. இதை ஏற்பாடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அனால் பெரும்பான்மையான நேரங்களில் வருமுன் காக்காமல், வந்தபின்தான் யோசிக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 16. சித்தலிங்கையா - இவர் செய்தது பெரும் செயல் என எனக்குப் படவில்லை (நல்ல செயல் செய்திருந்தாலும்). சாதாரண மக்கள் இதைப்போல் உதவினால் அவங்க பல்வேறு அல்லலுக்கு ஆளாயிடுவாங்க (உனக்கும் இவருக்கும் என்ன தொடர்பு, அந்த ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போடு, இந்த கோர்ட்டுக்கு சாட்சி சொல்லவா, அட்மிட் பண்ணிணதுக்கு காசு கட்டு என்பதுபோல). என்னைக்கேட்டால், காவலர்கள், அத்தகைய உதவி புரிபவர்களைத் தொந்தரவுசெய்யாமல் எளிமையாக நடத்தி ஆதரவு தந்தாலே அதுவே சிறந்த விஷயம்.

  இர்ஃபான் ஷேக்கின் செயல் ஆச்சர்யமூட்டும் செயல். இதனால் வரும் பெருமையைவிட, அவருக்கு தொந்தரவுகளே (உயிருக்கும்) அதிகமாக வரும். அதையும் மீறிச் செய்த செயல் மிகுந்த பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 17. இந்தவார நல்லவர்களின் கலவை ரஸமானது.

  பதிலளிநீக்கு
 18. போற்றத்தக்க செயல்கள் புரிந்த சித்தலிங்கையா, இர்ஃபான் ரம்ஜான், சேவை செய்து சிறப்பாக இருக்கும் நகரத்தார் அனைவருக்கும் மனப் பூர்வ வணக்கங்கள். சிறுவனை உயிர்ப்பித்த திரு .ரவிக்குமார் பாராட்டப் படவேண்டியவர். எல்லோரும் முதலுதவிப் பயிற்சி பெற வேண்டும்.
  எனக்குத் தெரிந்திருந்தால் என் கணவரைக் காப்பாற்றி இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
 19. கேமராமேன் படம் மட்டும் பார்த்தேன். ஆனால் விவரம் இங்குதான் தெரிந்துக்கொண்டேன்.

  பயங்கரவாதத்துக்கு எதிராய் போராடிய இளைஞன் மீம்ஸ் போட்டு சமூக வலைதளத்தில் வெட்டியாய் போராடிக்கொண்டிருக்கும் மற்ற இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு...

  எல்லா துறையிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள் என்பதற்கு போலீஸ்காரரே சாட்சி

  பதிலளிநீக்கு
 20. நாட்டுப்பற்றுடனும் மனிதாபிமானத்துடனும் வாழத் தூண்டும் நிகழ்வுகளைத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்.

  மகிழ்ச்சி. நன்றி ஶ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 21. ஹோலி கொண்டாட்டத்தில் சிறுவனை மீட்ட ரவிக்குமார் அவர்களுக்குப் பாராட்டுகள். மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 22. அனைத்தும் நல்ல செய்திகள்.
  பாராட்ட வேண்டும்.

  வல்லி அக்கா சொன்னதை கேட்டதும் வருத்தமாய் இருந்தது.

  பதிலளிநீக்கு
 23. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி. முதலாம் செய்தி நானும் ஃபேஸ்புக்கில் வாசித்தேன்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!