ஊருக்கு உழைப்பவன். 1976 இல் வெளியான படம்.
கன்னட பாலு பெலகிது என்கிற கன்னடப்படத்தை தெலுங்கில், அப்புறம் ஹிந்தியில் அப்புறம் தமிழில் எடுத்தார்கள். ஹிந்தி ஹம்ஷகலில் இரண்டு நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தார் ஆர் டி பர்மன்.
தமிழில் எம் எஸ் வி அனைத்துப் பாடல்களையும் ஹிட் ஆக்கி இருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தையும் கே ஜே யேசுதாஸ் பாடியிருந்தார். "பிள்ளைத்தமிழ் (பில்லைத்தமிழ்!!) பாடுகிறேன்", 'அழகெனும் ஓவியம் இங்கே", இதுதான் முதல் ராத்திரி" போன்ற பாடல்கள்...
எம் ஜி ஆர் வாணிஸ்ரீ, வெ ஆ நிர்மலா நடித்த திரைப்படம்.
வாலி, நா காமராசன், முத்துலிங்கம் இந்தப் படத்தின் பாடல்களை எழுதி இருந்தனர்.
இந்தக் குறிப்பிட்ட பாடலை எழுதியவர் நா. காமராசன்.
தாலாட்டு வகைப் பாடலைச் சேர்ந்த மிக இனிமையான பாடல் இது. மிகச் சிறிய பாடலும் கூட!
கன்னட பாலு பெலகிது என்கிற கன்னடப்படத்தை தெலுங்கில், அப்புறம் ஹிந்தியில் அப்புறம் தமிழில் எடுத்தார்கள். ஹிந்தி ஹம்ஷகலில் இரண்டு நல்ல பாடல்களைக் கொடுத்திருந்தார் ஆர் டி பர்மன்.
தமிழில் எம் எஸ் வி அனைத்துப் பாடல்களையும் ஹிட் ஆக்கி இருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தையும் கே ஜே யேசுதாஸ் பாடியிருந்தார். "பிள்ளைத்தமிழ் (பில்லைத்தமிழ்!!) பாடுகிறேன்", 'அழகெனும் ஓவியம் இங்கே", இதுதான் முதல் ராத்திரி" போன்ற பாடல்கள்...
எம் ஜி ஆர் வாணிஸ்ரீ, வெ ஆ நிர்மலா நடித்த திரைப்படம்.
வாலி, நா காமராசன், முத்துலிங்கம் இந்தப் படத்தின் பாடல்களை எழுதி இருந்தனர்.
இந்தக் குறிப்பிட்ட பாடலை எழுதியவர் நா. காமராசன்.
தாலாட்டு வகைப் பாடலைச் சேர்ந்த மிக இனிமையான பாடல் இது. மிகச் சிறிய பாடலும் கூட!
இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்
நெஞ்சில் இரண்டு பாடல்கள் கொண்டு வந்தான்
காத்திருப்பாள் என்று தேவதைக்கு
தென்றல் காற்றினிலே ஒன்றைத் தூது விட்டான்
புத்தனின் முகமோ... என் தத்துவச் சுடரோ..
சித்திர விழியோ அதில் எத்தனை கதையோ...
அதில் எத்தனை கதையோ...
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் அண்ட் எல்லோருக்கும்..எம்ஜிஆர் படப் பாடலா? கேட்டிருப்பேன் ஆனால் வரிகள் எப்பவும் போல் தெரியாததால் டக்கென்று சொல்ல முடியவில்லை. பாடல் அப்புறம் தான் கேட்க முடியும் கேட்டுவிட்டு வருகிறேன்
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்" பாடலைப் பகிர்வதா, இதைப் பகிர்வதா என்று குழம்பி முதலில் இதைப் பகிர்ந்து விட்டேன்!
நீக்குஅருமையான பாடல். கேட்டு எவ்வளவு வருடங்களாகிவிட்டது.
பதிலளிநீக்குவாங்க நெல்லைத்தமிழன்..
நீக்குநன்றி.
காலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குவெள்ளியின் விடியலில் புள்ளினங்களாய் இசை கேட்க வரும் அனைவருக்கும் என் அதிகாலை வணக்கங்கள்.
அதிசயம்..என் முதல் வருகை ! ஆனால் இது முற்றிலும் உண்மை.!
அதிசயங்களும் என்றேனும் ஒருநாள் அங்கீகரிக்கப்படுமா என்ற ஐயத்துடனே
அரங்கேற்றமாகின்றன.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்
வாங்க கமலா அக்கா....
நீக்குகாலை வணக்கம்.
//அதிசயம்..என் முதல் வருகை ! ஆனால் இது முற்றிலும் உண்மை.!//
ஆமாம்... உண்மை! உண்மை!
நன்றி அக்கா.
வணக்கம் சகோதரரே
நீக்குமுந்துதல், முதலில் வருவதென்பது எங்கள் ப்ளாக்கில் இயலாத காரியம்தான். ஆனாலும் மூன்றில் ஒன்றாக வந்தமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்.
நல்ல பாடல். பாடல் கேட்டிருக்கிறேன். தகவல்களுக்கு நன்றி. பிள்ளைத்தமிழ் பாடலும் மிக மிக இனிமையாக இருக்கும். இந்தப் பாடலை பாடியதும் கே.ஜே.யேசுதாஸ்தானோ? நல்ல பகிர்வுக்கு நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முந்துதல் அப்படி ஒன்றும் சிரமமில்லை கமலா அக்கா!
நீக்குஆமாம், இந்தப் படத்தில் ஆண் குரலுக்கான எல்லாப் பாடல்களையும் கே ஜே யேசுதாஸ்தான் பாடி இருக்கிறார். இந்தப் படப்பாடல்களும், நாளை நமதே கே ஜே யேசுதாஸ் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
// வெள்ளியின் விடியலில் புள்ளினம்...//
நீக்குஆகா.. நயம்.. கவி நயம்...
ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களுக்கு நன்றி....
வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே
நீக்குஇப்போதுதான் பார்க்கிறேன். எல்லாம் தங்கள் சொல் நயத்திலிருந்து கற்றுக் கொண்டவைதான். அருமையான சொல்லாடலுடன் கவிநயம் மிகுந்த தங்களைப் போன்ற சிறந்த பதிவர்களின் பதிவுகளை படிக்கும் போது எழுந்த தாக்கந்தான் என் எழுத்து. எனினும் மனமுவந்த தங்கள் பாராட்டிற்கு மகிழ்வுடன் கூடிய என் பணிவான நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அப்படியெல்லாம் பெரியோர்களாகிய தாங்கள் பாராட்டுதற்கு அன்னைத் தமிழும் அதனைப் பயிற்றுவித்த ஆசான்களும் எல்லாம் வல்ல ஈசனின் திருவருளும் தான் காரணம்....
நீக்குதங்களது கருத்துரைக்கு நன்றி...
வாழ்க நலம்....
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்....
பதிலளிநீக்குவாங்க துரை செல்வராஜூ ஸார்.
நீக்குவணக்கம்.
நல்ல இனிய பாடல் ..
பதிலளிநீக்குமெல்லிசை மன்னர் வழங்கிய தாலாட்டுப் பாடல்கள் எல்லாமே இனிமையானவை...
அவற்றுள் இதுவும் ஒன்று...
இது போல இன்னொரு பாடலும் மனம் நிறையும்.. அது -
செல்லக்கிளியே... மெல்லப் பேசு..
தென்றல் காற்றே.. மெல்ல வீசு....
ஆஹா...
நீக்குஅதுவும் இனிமையான பாடல்...
"தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டும்...."
வேட்டைக்காரன் படத்திலும் ஒரு இனிய தாலாட்டுப் பாடல் உண்டு.
வெள்ளி நிலா முற்றத்திலே...
நீக்குவிளக்கெரிய.. விளக்கெரிய...
அடடா... மெய் சிலிர்க்கிறது....
எப்படிப்பட்ட திரைப் பாடல்கள்!...
இன்றைக்குக் குப்பைகளைக் கோமேதகம் என்று ஆரவாரம்...
கரெக்ட்...
நீக்குஇப்படி நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும்போது சுகமாக இருக்கிறது.
குப்பைகளை கோமேதகம் என ஆரவாரம் செய்வதும் குப்பைகளே!
நீக்குதமிழ்த் திரையுலகில் சோகப் பாடலின் இடையே தாலாட்டும் லுலுலுலு ஆரி.. எனும் ஒலியினை இணைத்தவர் மெல்லிசை மன்னர் என்பது எனது கருத்து....
பதிலளிநீக்குஅப்படித்தானே ஸ்ரீராம்..
நினைவுபடுத்திச் சொல்லுங்கள்...
மக்கள் மனம் மகிழ்ந்திருக்கட்டும்...
ஆமாம்... என்று சொல்லிக்கொள்கிறேன்.
நீக்குஆனால் குறிப்பாக என்ன பாடலை மனதில் வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் நலம்.
//தமிழ்த் திரையுலகில் சோகப் பாடலின் இடையே தாலாட்டும் லுலுலுலு ஆரி.. எனும் ஒலியினை இணைத்தவர் மெல்லிசை மன்னர் என்பது எனது கருத்து....
நீக்கு//
ஆமாம்... ஆனால் இங்கு ஒரு இளையராஜா பாடலும் நினைவுக்கு வருகிறது. ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் "உச்சி வகுந்தெடுத்து..."
வைதேகி காத்திருந்தாள் படப்பாடல் "காத்திருந்து காத்திருந்து" பாடலில் கூட இப்படி வரும்.
ஆமாம்...
நீக்குஇவை இரண்டு மட்டுமின்றி இன்னும் பல..
சங்கர் கணேஷ் முதல் ஆபாவாணன் கூட இவ்விதம் சேர்த்திருக்கிறார்கள்..
சட்டென நினைவுக்கு வருவதில்லை..
ஆபாவாணன் என்று நீங்கள் சொல்வது "அந்தி நேரத் தென்றல் காற்று... அள்ளித்தந்த தாலாட்டு...."
நீக்குசரியா?
இந்தப் பாடலிக் கேட்டதாக நினைவு இல்லை...
நீக்குஊமை விழிகள் படத்தில் என்று நினைக்கிறேன்...
ஓ... ஊமை விழிகளில் என்ன தாலாட்டுப்பாடல் என்று தெரியவில்லை.
நீக்குசொன்னது 'இணைந்த கைகள்' படப்பாடல்.
துரை செல்வராஜு சார்... நீங்கள் சொன்னது 'அத்தைமடி மெத்தையடி' பாடலா? ரொம்பவும் தயக்கத்தோடு (தனது பல்லவி ஆமோதிக்கப்படணுமே என்று நினைத்து) முதல் முதலாக கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்ன சம்பவத்தை உள்வாங்கிக்கொண்டு வாலி எழுதிய வரிகள். ஒரு பாடலுக்காக வாலியை அனுமதித்தவர், முழுப் படத்தின் பாடல்களையும் அவரே எழுதச் சொன்னதற்குக் காரணமாயிருந்த வரிகள்.
நீக்குசெல்லக் கிளியே மெல்லப் பேசு ....
பதிலளிநீக்குஇந்தப் பாடலின் இடையில் சின்னதாக முத்தச் சத்தம் கேட்கும்...
ஆகா... சுகம்....
வீடு வரை உறவு... வீதி வரை ....
பதிலளிநீக்குதமிழ்த் திரைப் பாடல்களுள்
இன்றுவரை எவராலும் அசைக்க முடியாத அளவுக்கு பல வகையிலும் கனமான பாடல்...
அதனூடாக மெல்லிய பொன் இழையாக
தாலாட்டுங் குரல் (L.R.ஈஸ்வரி) ஒலிக்குமே..
கல் நெஞ்சமும் கரையும்....
ஆமாம்... கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா பாடலிலும் நீங்கள் குறிப்பிடும் மெல்லிய பொன் இழையாக தாலாட்டுங் குரல் (L.R.ஈஸ்வரி) ஒலிக்கும்.
நீக்குதுரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் ரெண்டு பேரும் நிறைய பாடல்கள் பத்தி சம்சாரிச்சுருக்கீங்க...ஸ்வாரஸ்யம்!!!! ரசித்தேன்
நீக்குகீதா
அன்பின் கீதா அக்கா அவர்களை சில நாட்களாகக் காணோமே!?....
பதிலளிநீக்குஎந்தெந்த திருக்கோயில்களைத் தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்களோ!...
கீதா அக்கா அவர்கள் தளத்தில் பதில் சொல்லும்போது இரண்டு மூன்று நாட்களுக்கு விடுப்பு சொல்லி இருந்தார். நாளை அல்லது நாளை மறுநாள் வருவார் என்று நினைக்கிறேன்.
நீக்கு5 நாள் விடுப்பு என்று சொல்லியிருந்த நினைவு!!
நீக்குகீதா
இதைப் போல கவியரசரின் வரிகளைக் கூட வேறு சில பாடல்களில் காணலாம்...
பதிலளிநீக்குமுக்கியமாக எது என்று காணலாமா!....
ஆஹா.....
நீக்குஆஹா... வா?..
நீக்குஅப்படியும் ஒரு பாடலா!...
// முக்கியமாக எது என்று காணலாமா!....//
நீக்கு"ஆஹா காணலாமே..." என்று அர்த்தம்.
'தேரோடும் வகையிலே நின்றாடும் மீனே..' பாடல் கூட இனிமையான ஒரு தாலாட்டுப் பாடல்.
நீக்கு
நீக்குபுதிர்!
//தேரோடும் வகையிலே நின்றாடும் மீனே..' பாடல் கூட இனிமையான ஒரு தாலாட்டுப் பாடல். //
இது என்ன பாடல்? பார் மகளே பார் திரைப்படத்தில். "நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே..." பாடல்தான் தெரியும்.
மன்னிக்கவும் 'நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே..' என்பதை தவறாக குறிப்பிட்டு விட்டேன். டங் ஸ்லிப் ஆவதில் தளபதிக்கு தங்கை ஆகி விடுவேன் போலிருக்கிறது...
நீக்கு//டங் ஸ்லிப் ஆவதில் தளபதிக்கு தங்கை ஆகி விடுவேன் போலிருக்கிறது.//
நீக்குஹா... ஹா... ஹா...
ஹா ஹா ஹா பானுக்கா இது டங்கு ஸ்லிப்பு இல்ல....ஃபிங்கர் ஸ்லிப்பு!!!!!!!!!!!
நீக்குகீதா
வணக்கம் சகோதரரே
நீக்குநல்ல நல்ல பாடல்களை பற்றி "தலைப்பில்லா அரட்டைகளோடு" (தங்கள் வியாளன் தலைப்புதான்.) உரையாடி,பாடல் அரங்கமாக நெஞ்சில் பதிய வைத்தது இந்த வெள்ளி பாடல் பதிவு. அந்த கால எல்லாவிதமான பாடல்களும், இலை மறைவு, காய் மறைவாக பொருள் இருந்தாலும் இப்போது கேட்கும் போதும் ரசிக்கத்தக்கவையாகத்தான் இருக்கிறது. தங்கள் அனைவரின் கருத்துரைகளையும் ரசித்தேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா.
நீக்குநீண்ட இடைவெளிக்குப்பிறகு கேட்டு இரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்குஅருமையான பாடல்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குநல்ல பாடல். நீண்ட நாட்களுக்குப்பின் கேட்கிறேன். ஆரம்பம் ஜெயச்சந்திரன் குரல் போல ஒலித்தது. ஜெயச்சந்திரனின் குரலுக்கும், ஜேசுதாஸின் குரலுக்கும் அதிகம் வித்தியாசம் இருக்காது.
பதிலளிநீக்குநான் வித்தியாசம் கண்டு பிடித்து விடுவேன்! ஜெயச்சந்திரன் எனக்கு மிகவும் பிடித்த பாடகர்.
நீக்குஇப்போதுதான் எம்.ஜி.ஆருக்கு வந்திருக்கிறீர்கள். அப்படியே கொஞ்சம் பின்னால் எம்.கே.டி. காலத்திற்குச் சென்று, 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து..' இருந்தால் பகிருங்கள்.கிண்டல் இல்லை, சீரியஸாகத்தான் சொல்கிறேன். சொப்பன வாழ்வில் மகிழ்ந்து பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
பதிலளிநீக்குஎனக்கு எம் கே டி பாகவதர் பாடல்கள் பிடிக்கும். ஏற்கெனவே வெள்ளி வீடியோவில் எம் கே டி யின் "உன்னையே அன்புடன்.. வாரி அணைத்து" பாடல் பகிர்ந்திருக்கிறேன்.
நீக்குஅழகான பாடல் ஸ்ரீராம். நிறைய கேட்டிருக்கேன். அது போல பிள்ளைத் தமிழ் எல்லாப்பாடல்களுமே கேட்டிருக்கேன் ரொம்ப பாப்புலர் அப்ப...அதுவும் பில்லை ரொம்ப ஃபேமஸ்!!!!!!!!
பதிலளிநீக்குஅருமையான பாடல்...!!
கீதா
ஆமாம் கீதா...
நீக்குஹா.. ஹா... ஹா...
"தெருக்கோவிலே ஓடி வா" போல!
"தெருக்கோவிலே ஓடி வா" போல!//
நீக்குஅதே அதே!! இதையும் முந்தையதுல சொல்ல நினைச்சு விட்டுப் போச்சு!!!
என் தொண்டை இப்போது பாடும் நிலையிலேயே இல்லை வோக்கல் கார்ட் ப்ராப்ளம் ப்ளஸ் சைனஸ் ப்ராப்ளம். இருந்தாலும் சரி பாடிப் பார்ப்போமேனு நம்ம கவிநயாம்மாவின் பாடல்களில் ஒன்றை வாசந்தி ராகத்தில் மெட்டு அமைத்து...பாட முயற்சி செய்தப்ப அதில் வரும் ஒரு வரி "உன் திருப்பெயரைச் சொன்னால் பெரும் துயரும் ஆறும்" என்ற வரியை நான் திரு என்று சரியாக உச்சரித்தாலும் எத்தனை முறைப் பாடிப் பார்த்துப் பதிவு செய்தாலும் பதிவு செய்ததைக் கேட்ட போது திரு என்பது ஏனோ தெரு என்றே கேட்பது போல் இருந்தது. மனம் திருப்தி அடையவே இல்லை. எனவே அனுப்பாமல் அப்படியே விட்டுவிட்டேன்...!!!!!!!!!
கீதா
ஆஆஆ மை பேவர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் நினைவாலே சிலை செய்து......
நீக்குஅருமையான பாடல்...
பதிலளிநீக்குThanks DD.
நீக்குஅருமையான இனிமையான பாடல் பகிர்வு.
பதிலளிநீக்குகேட்டு மகிழ்ந்தேன்.
நன்றி கோமதி அக்கா.
நீக்குநெஞ்சிலிருப்பது நேற்றைய பாடல்கள்:
பதிலளிநீக்குஇதயவானின் உதயநிலவே எங்கே போகிறாய் - நீ
எங்கே போகிறாய்..
மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..போ..
இனிக்கும் இன்ப இரவே நீ வா.. வா..
இன்னலைத் தீர்க்க வா...
விந்தனின் விந்தைத் தயாரிப்புகள் என நேற்றே அறிந்தேன்.
ஏ அண்ணனின் நேற்றைய பாடல்கள், எனக்கு எப்பவும் பிடித்த பாடல்கள்...
நீக்குஇது நேற்றைய கமண்ட்டா?!!!
நீக்குஇது வரை கேட்காத பாடல்
பதிலளிநீக்குஇப்போது கேட்டு ரசித்தீர்களா?
நீக்குமிக அழகிய பாடல், மியூசிக்கே இல்லாமல் வொயிஸ் மட்டும் வருவதுபோல ரொம்ப நன்றாக இருக்கு.
பதிலளிநீக்குஇதுவரை நான் கேட்டதாக நினைவில்லை.
ஆ.... என்ன ஆச்சர்யம்... என்ன அநியாயம்... இந்தப்பாடல்கள் எல்லாம் கேட்டதே இல்லையா?
நீக்குதலைப்புப் பார்த்து, இன்று ரெண்டு பாடல்களோ என நினைச்சிட்டேன்:)...
பதிலளிநீக்குஆ.தோ அ வ!
நீக்குபாடல் வரிகளுக்கும்பாடப்படும் இடத்துக்கும் என்ன சம்பந்தம் என்று பல பாடகளில்புரிவதிலை ஓச நயத்துக்கே முக்கிய்சத்துவமென்று நினைக்கிறேன் இது இசைக்காகப் பாடலாபாடலுக்காக இசையா என்று எண்ண வைக்கிறது இதனாலேயே பலபாடல்க்ள் நினைவில் இருப்பதில்லை
பதிலளிநீக்குவாங்க ஜி எம் பி ஸார்... பாடல் கேட்காமலேயே பதில் சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் எதுவும் இந்தப் பாடலுக்குப் பொருந்தாது. காட்சிக்குப் பொருத்தமான பாடல். ஓசை நயம், இசை நயம் அமைந்த பாடல்.
நீக்குரோசாப்பூ ரவிக்கைக்காரி பாடல் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். கூடவே உடுக்கை சத்தம். அந்த ஆரீராரோ யார் பாடினார்களோ. என்ன ஒரு சோகம்.
பதிலளிநீக்குஅதே போல் வீடு வரை உறவு பாடலில் எல்.ஆர் ஈஸ்வரியின் தாலாட்டு.
சுசீலா அம்மாவின் அன்பில் மலர்ந்த நல் ரோஜா பாடல்.
தூளி,குழந்தை,அதற்கான பாடல்கள் என்றும் உயிர்த்தெழ வைக்கும்.
பிள்ளைத் தமிழும் அந்த வகைதான். அருமையான ஜேசுதாஸ் ஐய்யாவுக்கு.
விஸ்வனாதன் சார் மலர வைத்த அத்தை மடி மெத்தையடி ஒலிக்காத இடமே இல்லை. சுசீலாம்மா எப்படித்தான் உருகிப் பாடினாரோ.
மிக மிக நல்ல பாடல்களை நினைவில் கொண்டு வந்ததற்கு நன்றி மா ஸ்ரீராம்.
வாங்க வல்லிம்மா... பல பாடல்களை நீங்களும் அசைபோட்டு விட்டீர்கள்.
நீக்குஅன்பில் மலர்ந்த நல் ரோஜா... எனக்கும் மிகப் பிடித்த பாடல். என் மாமாக்களில் ஒருவர் மற்றும் என் சித்தி இருவர் இந்தப் பாடலையும், 'சிங்காரக் கண்ணே உன்' பாடலையும் வெகு அழகாகப் பாடுவார்கள்.
இந்தப் படமும் பார்த்திருக்கிறேன். பாடல்களுக்காகவும், அப்போதைய என் வயதில் ஹீரோ எம்ஜிஆர் என்பதாலும். இப்படத்தில் வரும் எல்லாப் பாடல்களுமே சிறப்பானவை.
பதிலளிநீக்குபல வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன் இப்பாடலை. மிக்க நன்றி ஸ்ரீராம்ஜி பகிர்விற்கு.
துளசிதரன்
இனிய காலை வணக்கம். கேட்ட பாடல் தான்.
பதிலளிநீக்குபில்லை தமிழ் போலவே பில்லை நிலா! :) கொஞ்சம் வார்த்தைகள் தடுமாறினாலும் குரல்! கானகந்தர்வன் ஆகிற்றே!
மன்னிச்சு! எனக்கு எம்.ஜி.ஆரை அறவே பிடிக்காது. போயிட்டு அப்பாலிக்கா வரேன்
பதிலளிநீக்கு