1) இப்படியொரு வீட்டில் வசிக்க, இயற்கைக் சூழலில் இப்படி ஒரு வீட்டைத் தயார் செய்ய எனக்கும் ஆசைதான்...
2) உதவும் மலையாளப் பிரபலங்கள்... மனிதாபிமானம்.
3) இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் இப்போட்டியில் ராணுவ தொப்பி அணிந்து
காலை வ்ணக்கம் எல்லோருக்கும்..
பதிலளிநீக்குஇந்திய வீரர்களும் இராணுவத் தொப்பியும்...தலைப்பே ஈர்க்குதே...
கீதா
காலை வணக்கம் கீதா... (பெஞ்ச் மேல் நின்றுகொண்டு)
நீக்குஹா ஹா ஹா ஹா ஹா நானும் லேட்டு இன்று ஸ்ரீராம். அதான் பாஸிட்டிவ் செய்திகளை இப்பத்தான் வாசித்தேன் முழுவதும். (தீர்க்கதரிசி வேற நம்ம ஏரியாவுக்குள்ள புகுந்த உடனே ஆஹா ஏரியாவுக்குள நுழைங்கவங்க நம்மவீட்டுக்குளயும் புகுந்துருவாங்கன்னு வந்து பார்த்துட்டுப் போய்ட்டேன்...ஹா ஹா ஹா!!!)
நீக்குமுதலாவதும் ஒரு வகையில் இன்ஸ்பிரேஷன் செய்திதான்...
இரண்டாவது மனதை நெகிழ்த்தியது. இத்தனை வருடங்கள் கடந்தும் அதை நினைவில் கொண்டு மலையாளத் திரையுலகினர் சிலர் உதவ முன்வந்தது பாராட்டிற்குரிய விஷயம். வாழ்த்துவோம்.
மூன்றாவது...கிரிக்கெட் வீரர்களின் உதவியையும் பாராட்டுவோம் வாழ்த்துவோம்...
கீதா
அனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
நீக்குகிரிக்கெட்காரர்கள் இருப்பு பணத்தை வழங்காமல் புதிய ஆட்டத்தின் சம்பளத்தை ராணுவவீரர்களின் குடும்பத்துக்கு கொடுத்ததைவிட....
பதிலளிநீக்குஹரீசுக்கு மலையாளிகள் உதவியதே உயர்வான மனிதாபிமானம்...
நன்றி ஜி... சேவாக், காம்பிர் போன்றவர்களை மறந்து விட்டீர்கள் ஜி.
நீக்குwelcome to one and all. will come afterwards.
பதிலளிநீக்குWelcome அக்கா
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
பதிலளிநீக்குமூன்றும் நல்ல செய்திகள். பசுமை நிறைந்த வாழ்வை நினைத்தாலே நன்றாகத்தான் இருக்கிறது. மனிதாபிமானங்கள் இன்னமும் ஆங்காங்கே இருந்து கொண்டேதான் உள்ளது. வாழ்க மனித நேயங்கள் என மனதாற வாழ்த்துவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
முடியாத, ஆனால் மனம் ஏங்கும் பசுமை வாழ்க்கை கமலா அக்கா.
நீக்குஅதே அதே ஸ்ரீராம்..அவர்களைப் போல் முடியலைனாலும்....முடிந்த வரை நம் சிறிய வீட்டை பசுமையுடன் வைத்துக் கொள்ள முயற்சிக்கலாம்...
நீக்குகீதா
போற்றதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
பதிலளிநீக்குசிறப்பான செய்திகள்.
வீடு ரொம்பவே கவர்கிறது. இப்படி ஏதாவது ஒரு கிராமத்தில், தோட்டத்துடன் கூடிய வீடு கட்டி அங்கே வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது! எங்கே பார்த்தாலும் ஃப்ளாட் மயம்! :(
விபத்தில் கால்களை இழந்தவருக்கு கேரள நடிகர்கள் செய்த உதவி பாராட்டுக்குரியது.
//இப்படி ஏதாவது ஒரு கிராமத்தில், தோட்டத்துடன் கூடிய வீடு கட்டி அங்கே வாழ வேண்டும் எனத் தோன்றுகிறது! எங்கே பார்த்தாலும் ஃப்ளாட் மயம்! :(//
நீக்குவாழ்க்கைத்தேவை. சர்வைவல் காரணமாக நரகத்தை விட்டு, ... ச்சே... நகரத்தை விட்டு நகரமுடிவதில்லை நம்மால்!
இயற்கை சூழலில் வீடு செம
பதிலளிநீக்குநலம் வாழ்க...
பதிலளிநீக்குவணக்கம் அனைவருக்கும்!....
அந்தப் பசுமை வீடு அழகு....
பதிலளிநீக்குமுந்தைய கிராமங்களில் கூரை வேயப்பட்ட வீடாக இருந்தாலும் வாசலின் இருபுறமும் முல்லைக் கொடிகளும் செம்பருத்திச் செடிகளும்... அப்படியே பக்கவாட்டுத் தாழ்வாரத்தின் ஓரமாக ரெண்டு சுரைக்கொடி, பீர்க்கங்கொடி.... புழக்கடை ஓரத்தில் கீரைப் பாத்தி ஏழெட்டு வாழைக் கன்றுகள்... இளசாக ஒரு முருங்கை..
பதிலளிநீக்குகிணற்று மேடை ஓரமாக துளசி மாடம்...
இந்தப் பக்கம் சிறிய நங்கை, பெரிய நங்கை, கற்பூரவல்லி , பட்டு ரோஜா - பூச்சட்டிகளில்!...
இதே மாதிரி பக்கத்து வீட்டிலும்!..
அந்தப் பசுமை கூட்டுக்குள் அவ்வப்போது புன்னகையுடன் தலை காட்டிச் செல்லும் பச்சைக் கிளி!....
அடடா... எல்லாம் நினைவுக்கு வருகின்றனவே!...
படிக்கும்போதே ஏக்கம் வருகிறதே......
நீக்குஎன்னவொரு அருமையான வீடு... ஆகா...!
பதிலளிநீக்குஅழகான வீடு , பசுமை வீடு கண்ணையும் கருத்தையும் கவர்ந்து விட்டது.
பதிலளிநீக்குபரணசாலை , போன்ற வீடு எனக்கு பிடிக்கும். மேலே வைக்கோல் போட்டு ,(எப்போது வைக்கோல் காயாமல் மஞ்சள் கலரில் அப்படியே இருக்க வேண்டும்.) சுவர், தரை எல்லாம் கோலம் போட்டு என்று.
முன் பக்கம் எல்லாம் பூச்செடிகள், பின் பக்கம் காய்கனி தோட்டம். சின்னதாக சலசலத்து கொண்டு போகும் நீரோடை , தூரத்தில் தெரியும் சின்ன அருவி எல்லாம் பார்க்க என்றும் அருமைதான்.
உதவும் உள்ளம் எங்கு இருந்தாலும் வாழ்க! வளர்க!
மற்ற இரு செய்திகளும் மனிதம் போற்றும் செய்திகள். அன்போடு உதவும் கரங்கள் உதவட்டும்.
வீடு, மிகவும் அருமை. பசுமையின் வெளிப்பாடு
பதிலளிநீக்குஇந்த வாரச் செய்திகள் ஓகே ரகம்தான்.
பதிலளிநீக்கு1. பசுமை வீட்டுக்கு எவ்வளவு செலவழிச்சிருப்பாங்க, அது பணக்காரர்களுக்குத்தான் சாத்தியம். கிராமத்தில் இத்தகைய வீடுகளைவிட்டு வந்துவிட்டபிறகு, பால்கனில செடிகளை வைத்துக்கொள்வதே, இழந்தவற்றை மனம் மீண்டும் நாடும் முயற்சிதான்.
3. ராணுவத் தொப்பியைப் போட்டுக்கிட்டுப் போனவங்க, 'நாட்டுக்காக விளையாடணும்' என்பதை மறந்து வேக வேகமா பெவிலியனுக்குத் திரும்பிவந்து மேட்சுல படு தோல்வி அடைஞ்சுட்டாங்களே.... ராயுடு, தவான் போன்ற வெட்டி வீரர்களை இன்னும் எத்தனை காலம்தான் இந்திய அணி சுமக்கும்?
ம்ம்ம்ம் அந்த முதல் படம் என்னுள்ளே பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. நாங்க ராஜஸ்தானில் இருந்த ராணுவக் குடியிருப்பு (தனி வீடு) இப்படித் தான் கொடிகளால் மூடப்பட்டு இரு வராந்தாக்களோடு காட்சி கொடுக்கும். இடப்பக்கம் இருக்கும் சின்ன வராந்தா வழியாக சமையலறைக்குச் செல்லலாம். வலப்பக்கம் இருக்கும் வராந்தா மூலம் வீட்டினுள் மெயின் ஹால், படுக்கை அறை, அதைத் தாண்டிக் கொல்லைத் தாழ்வாரம் அதன் பின்னே மிகப் பெரிய முற்றம், அதிலே ஓர் பெரிய வயதான வேப்பமரம், துளசி மாடம் எல்லாம் இருக்கும். கழிவறை அந்தக்கொல்லைப்புற முற்றத்தின் கடைசியிலே அமைந்திருக்கும். வீட்டுக்குள் இருக்காது! மயிலும், குயிலும் நிஜம்மாகவே வந்து ஆடும், பாடும். இடப்பக்க வராந்தாவுக்கு நேரே இரு பக்கங்களிலும் தோட்டம். காய்கறிகள், கொடிகள், செடிகள், பூக்கள் என! நடைபாதையில் இருபக்கங்களிலும் வரிசையாக டாலியா! நாங்க சென்னையிலிருந்து முல்லைக் கொடிப் பதியன் போட்டு வைத்தோம். முருங்கை நட்டோம்.வாழை, மஞ்சள் பயிரிட்டு மஞ்சளை அங்குள்ள தமிழர்களுக்கூ சங்கராந்திக்குக் கொடுத்திருக்கோம்.கொஞ்சம் மூச்சு வாங்கிக்கறேன். :))))
பதிலளிநீக்குநாட்டுப்பற்றைக் காட்ட இதுவுமொருவழியோ
பதிலளிநீக்குமூன்று செய்திகளும் அருமை. பசுமை வீடு கண்ணைப் பறிக்கிறது. நம் கிராமங்களில் பழைய நாவலக்ளில் படித்த குடிசை வீடுகளிலும் பூசணி,பலவகைக் காய்கறி என்று படரவிட்டிருப்பார்கள்.
பதிலளிநீக்குஅவர்களின் உணவின் ஆதாரமே அவர்கள் வீட்டைச் சுற்றிக் கிடைத்துவிடும்.
மலையாள ஹீரோக்களுக்கு வாழ்த்துகள்.
க்ரிக்கெட் வீரர்கள் கொடுத்ததும் நற்செயல்தான்.
சனிக்கிழமை மாலைக்கான வாழ்த்துகள்.
இயற்கை சூழலில் வீடு...சூப்பர்
பதிலளிநீக்கு