சனி, 30 மார்ச், 2019

உங்களால் ஏன் சாதிக்க முடியாது? & - தொடர்கதை 3




1) டாக்டர் து.நீலகண்டன், பிரபல எலும்பு முறிவு மருத்துவரான இவர், தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்தார்....




2)  பிச்சை எடுத்தும், எச்சில் இலை எடுத்துப் போட்டும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த என்னாலேயே இன்று கால் டாக்ஸி டிரைவர் ஆக முடிந்தது என்றால் உங்களால் ஏன் சாதிக்க முடியாது என்ற கேள்வியை எழுப்புகிறார் ஜெரீனா பேகம்.  





============================================================================================================




நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே  
- - - - - - - - - - - - - - - - -



ஷ்ரவண் :

ஒரு செலிபிரிட்டியின் வாழ்க்கைத் துணையாக இருப்பதன் கஷ்டங்கள் எனக்கு மெல்ல, மெல்ல புரியத்தொடங்கின.

ஒரு பிரபலத்தின் ஒரு பாதி என்பதைப் பெண்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

ஸ்ருதியின் புகழ் வெளிச்சம் என் கண்களைக் குத்தத் தொடங்கியது. முதல் உறுத்தல் அந்தப் பெண்கள் பத்திரிகை மூலம் வந்தது.

ஸ்ருதியை பேட்டி எடுப்பதற்காக அந்தப் பத்திரிகையிலிருந்து வந்தவர்கள், அவளைத் தனியாகவும், என் பெற்றோர்களுடனும், என்னோடும் சேர்த்துப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். நானும் ஸ்ருதியும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை அட்டையில் போட்டதோடு, நான் இசை விமரிசகன் என்பதையும்  பெட்டிச் செய்தியாக வெளியிட்டிருந்தனர்.

நான் இதுவரை கட்டிக் காத்த ரகசியம் உடைக்கப்பட்டது கொஞ்சம் வருத்தம் தந்தது, அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகை என்னை மிஸ்டர் ஸ்ருதி என்று எழுதியது கோபமூட்டியது.

ஒரு வெள்ளி, சனி, ஞாயிறு என்று தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தபொழுது ஸ்ருதியோடு ஏற்காடு செல்லலாம் என்று அங்கு ரிசார்ட் புக் பண்ணி விட்டு, ஸ்ருதியிடம் சொன்னபொழுது, அவள் சந்தோஷமடைவாள் என்று நினைத்தேன்

அவளோ, "அடுத்த மாசமா? எனக்கு வெளியூர் கச்சேரி இருக்கே..?" என்று என் உற்சாகப் பலூனில் ஊசி குத்தினாள்.

"கச்சேரி ஒப்புக்கொள்ளும் முன் என்னிடம் கேட்க மாட்டாயா? நீ பாட்டுக்கு கிளம்பிப் போய் விட்டால், நான் மோட்டு வளையை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்."

"நீயும் என்னோடு வாயேன்.."

"உனக்கு ஸ்ருதி போடவா?"

நான் நிஷ்டூரமாகப் பேசுகிறேன் என்பது எனக்கே தெரிந்தாலும் என்னால் அப்படிப் பேசாமல் இருக்க முடியவில்லை.

மறுநாள் நான் அலுவலகத்திலிருந்து திரும்பியதும், "சனிக்கிழமை புக் ஆகியிருந்த என்னுடைய சேலம் கச்சேரியை நான் வெள்ளிக்கிழமைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறேன். நீயும் என்னோடு வந்தால், கச்சேரியை முடித்து விட்டு, நாம் அப்படியே ஏற்காடு போய் விட்டு வரலாம்" என்று ஸ்ருதி கூறிய பொழுது, எனக்காக அவள் மெனக்கெட்டிருப்பது புரிய அவளோடு சேலம் செல்ல முடிவெடுத்தேன்.

அப்பொழுது பார்த்தா என் தோழன் பிரசாத் போன் செய்ய வேண்டும்?  பிரசாத் என் பள்ளித்தோழன். பள்ளி மாணவர்கள் வாட்ஸாப் க்ரூபில் நேற்று அடுத்த மாதம் பள்ளித் தோழர்கள் ரீ யூனியன் இருப்பதாக ஒரு மெசேஜ் வந்திருந்தது. நான் அந்த நேரத்தில் ஊரில் இருக்க மாட்டேன் என்பதால் நான் பதிலளிக்கவில்லை.

விடாக் கொண்டனாக பிரசாத் எனக்கு ஃபோன் பண்ணினான். "வாட்ஸாப் பார்த்தால் ரிப்ளை பண்னும் பழக்கம் கிடையாதா?"

"ரீ யூனியன்தானே? நான் அப்போ, ஊரில் இருக்க மாட்டேனே."

"ஏன்? எங்க போற?"

"சேலத்தில் என் மிஸஸுக்கு கச்சேரி இருக்கு, போய்ட்டு, அப்படியே.."

"என்னை முடிக்க விடாமல், அவங்க கச்சேரி பண்றாங்க, நீ என்ன பக்க வாத்தியமா?"

அவன் கிண்டலாகக் கேட்டதை நான் பொருட்படுத்தில்லை. ஆனால், சேலத்தில் டாக்டராகயிருந்த பள்ளித்தோழன் மோகன் கேட்ட விஷயம் என்னை மிகவும் பாதித்தது.

பள்ளியில் எங்களோடு படித்த மோகன் மெடிசின் படித்தான் என்பது தெரியுமே தவிர, அவன் சேலத்தில்தான் செட்டில் ஆனான் என்பது வாட்சாப் உபயத்தில் தெரிந்ததால், சேலம் செல்லும் பொழுது அவனைச் சந்திக்க முடிவெடுத்துச் சென்றேன்.

உரையாடல்களுக்கிடையே அவன், "நீ உன் வேலையை விட்டு விட்டாயா?" என்றான்.

"இல்லையே, ஏன்?"

"உன் ஒய்ஃப் கச்சேரியெல்லாம் பண்றாங்க, அதையெல்லாம் கவனிச்சுக்க வேண்டாமா?" இப்போ கூட அவங்க கூடத்தானே இங்க வந்திருக்க..?"

"சே சே, அதெல்லாம் அவங்க அப்பா கவனிச்சுக்கறார், இப்போ எனக்கு ஆபிஸ் மூணு நாள் லீவ் என்பதால் வந்தேன்" என்று அப்போது சொல்லிவிட்டாலும், அந்தக் கேள்வி என் மனதுக்குள் சுழன்று என் சமநிலையைப் பாதித்தது. 

சேலத்தில் அவள் கச்சேரி நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எனக்குத்தான் ஏனோ பாராட்டத் தோன்றவில்லை.

ரூமிற்கு வந்ததும், நைட்டிக்கு மாறியபடியே, "கச்சேரி எப்படி இருந்தது?" என்றாள்

"ம்.."

"அப்படின்னா? நல்லாயில்லையா?"

நான் பதில் சொல்லாமல், பேண்ட், சட்டையை அவிழ்த்து ஹேங்கரில் மாட்டி, வார்டரோப்பிற்குள் வைத்தேன். பெர்மூடாவில் நுழைந்த பொழுது, "இன்னிக்கு சுத்த தன்யாசி சுத்தமா இருந்ததா? ஆபேரி கலக்கவில்லையே?"

"ப்ளீஸ், ஸ்டாப் இட். கச்சேரி முடிஞ்சாச்சு, ஐயம், நாட் எ க்ரிட்டிக் ஹியர், ஓகே?” முதல் முறையாக ஸ்ருதியிடம் காட்டமாகப் பேசினேன். அதுவும் கச்சேரிக்குப் பிறகு. 

காது ஜிமிக்கியை கழற்றிக் கொண்டிருந்த ஸ்ருதியின் கை அப்படியே ஒரு நிமிடம் நின்றது. என்னை வெறித்துப் பார்த்தவள், எதுவும் பேசாமல் நகைகளைக் கழற்றி வைத்தாள். முகம் கழுவிக் கொண்டு வந்து படுத்துக் கொண்டாள்.



----மீட்டல் தொடரும்...

95 கருத்துகள்:

  1. மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் எல்லோருக்கும்..

    மூன்றாம் பகுதியா இன்று!! .

    .செய்திகள் படித்துவிட்டு வருகிறேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம்..
    கீதாக்கா / கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ ஸார்... நல்வரவு.

      நீக்கு
    2. நல்வரவு அளித்த துரைக்கும் இனி வரவேற்கப் போகும் அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்.

      நீக்கு
  3. மருத்துவர் அசத்துகிறார் என்றால் ஜெரினா பேகம் டாப்!

    ஸ்ரீராம் நான் பாதி கதை எழுதி வைத்திருக்கிறேன் ஆறிக் கொண்டிருக்கு.....பெண் கால் டாக்சி டிரைவராக என்று இங்கு ஜெரினா வந்துவிட்டார்.!! வாவ்! என் கதையில் நாயகியின் பேக் க்ரவுன்ட் வேறு....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜெரினா வாழ்க்கை போன்ற கதையா கீதா? என்ன ஆச்சர்யம்!

      நீக்கு
    2. ஆமாம் ஸ்ரீராம் இங்கு ஜெரினாவைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம்...கூடவே ச்சே கதையை எழுதி முடித்து அனுப்பியிருக்க வேண்டும் என்றும் தோன்றியது.

      இப்படித்தான் ஸ்ரீராம் பல கதைகள் பாதியில் தூங்குகிறது. அது வேறு ஒன்றுமில்லை எழுதி வைத்துவிட்டு ஆறப் போட்டால் அடுத்து வாசகர் ரீதியில் அதை வாசித்துப் பார்க்கும் போது ஓட்டைகள் தெரியும் இல்லியா அதைச் சரிப்படுத்தலாம் என்று ஆனால் சில சமயம் அந்த காலதாமதம் ஓவராகியும் விடுகிறது...ஹிஹிஹி

      கீதா

      நீக்கு
  4. பொது இடங்களில் இரித்துக்கொண்டு வளையவரும் பிரபலங்களை நினைத்துக்கொள்கிறேன். அவங்க மனதில் மகிழ்ச்சி இருக்குமா? தன் திறமைகளை பார்ட்னர் மதிக்கிறாரா, பெருமை கொள்கிறாரா இல்லை பொறாமைத் தீயில் வெந்து இருவர் வாழ்க்கையையும் நாசம் செய்கிறாரா? சலனங்கள் ஏற்படுத்தும் கேள்விகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனித பலவீனம் நெல்லை. தம்பதிகளிடையே இது ஆண்களிடம் அதிகம் காணப்படும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  5. முதல் செய்தியில் குழந்தைகள் உட்கார்ந்திருக்கும் சூழ்நிலை அம்பேரிக்கப் பள்ளிகளை ஒத்திருக்கிறது. ஆனால் ஒரு மேஜையில் சுமார் 2 அல்லது 3 குழந்தைகள் தான் இருக்கும். ஒரு வகுப்பில் மிஞ்சிப் போனால்20 குழந்தைகள். அதற்கு மேல் இருக்காது. குழந்தைகள் அனைவரின் எதிர்காலம் சிறப்பாக அமையப் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா அக்கா... அப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கும் மருத்துவரைப் பாராட்டுவோம்.

      நீக்கு
  6. கதை நல்ல விறுவிறுப்பாகச் செல்கிறது. சுருதிபேதம் தட்டத் தொடங்கி விட்டது. ஆனால் பெரும்பாலும் சுற்றி இருப்பவர்களே காரணமாக அமைகின்றனர். இந்த நிலை என்று மாறுமோ? ஆணின் ஈகோ, பெண்ணின் முன்னேற்றத்திற்கு எப்போதுமே ஓர் தடை தான். நண்பர்கள் சொல்லுவதை எல்லாம் அலட்சியம் செய்யும் மனம் வரணும். ஆனால் ஷ்ரவண் ஒரு சாதாரண மனிதன் தான் என்பதை நிரூபிக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீசா மேடம்... அப்படி அலட்சியப்படுத்தி சம மனநிலையில் இருக்க முடியுமா?

      இருவரும் எங்கு சென்றாலும் மனைவியை மட்டும் கவனித்து, ஆராதிக்கும் மக்கள்.... யோசிக்கவே கடினமாக இருக்கு. (சம்பந்தமில்லாமல், நடிகை மீனாவும் அவர் கணவனும்-திருமணத்தின் போதா என்று ஞாபகம் இல்லை, அவர் ஒவ்வொருவரிடமும் சென்று நான்தான் மீனாவின் கணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார் என கிண்டல் த்வனியில் பத்திரிகையில் செய்தி படித்தது நினைவுக்கு வந்தது)

      நீக்கு
    2. இந்த இடத்தில நீங்கள் சதாசிவம் ஐயாவையும், டி கே பட்டம்மாள் கணவரையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

      நீக்கு
    3. யெஸ் அதேதான் ஸ்ரீராம் இதைத்தான் சொல்ல வந்தேன் ஸ்ரீராம் நீங்கள் சொல்லிட்டீங்க

      கீதா

      நீக்கு
    4. ஸ்ரீராம்... எனக்கு அதுவும் மனதில் வந்துபோனது. இதைப் பற்றி விரிவா எழுதவேண்டாம்னு பார்க்கிறேன். இந்த இரண்டு உதாரணங்களிலும் மனைவி, கணவனை அனுசரித்துப் போனதை மட்டும்தான் பார்க்கிறேன். பொதுவாக, மனைவி பெரும் புகழ் பெறப் பெற, கணவன் டம்மியாகிவிட்டதுபோன்ற எண்ணம்தான் இயல்பாக கணவனுக்குத் தோன்றும். நிச்சயம் ஸ்கார்பியன் கணவனுக்கு இது ஒத்துவராது...ஹாஹா.

      பரமாச்சார்யார், எம்.எஸ் அவர்கள் 'விஷ்ணுசகஸ்ரநாமம்' கேசட் கொடுக்கக்கூடாது என்று சொன்னதாகவும், சதாசிவம் அவர்கள் இதில் முடிவெடுத்து, எம்.எஸ். அவர்களை விஷ்ணு சகஸ்ரநாமம் ஹெச்.எம்.வி கேசட் வெளியிட்டதாகவும் படித்திருக்கிறேன். எல்லாவற்றிலும் முடிவெடுத்தவர் சதாசிவம் அவர்கள். அதே சமயம், சதாசிவம் அவர்கள் 'எம்.எஸ்.' அவர்களின் பிறப்பை மிகவும் அர்த்தமுள்ளதாகச் செய்து அந்த ஆன்மாவை உயர்த்தினார் என்பதையும் கவனிக்கவேண்டும்.

      நீக்கு
  7. இது சங்கீத்த்துக்கு மட்டுமல்ல... கதையாசிரியர்கள் விளையாட்டுத்துறை வல்லுனர்கள், அரசியல்வாதிகள் போன்ற பலருக்கும் பொருந்துமல்லவா? வெளியில் ஏகப்பட்ட புகழ், தன்னைக் காணத் தவித்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள், தொண்டர்கள், தன்னை கடவுள் ரேஞ்சுக்குப் பாராட்டும் பெருமைப்படுத்தும் நிலைமை, ஆனால் வீட்டில் அப்படி இல்லை, இன்னும் மேலே உயரமுடியாமல் இழுத்துப் பிடிக்கும் கயிறு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் அந்த இன்னொரு பாதி எப்படி தன் சக பாதியிடம் நடந்து கொள்கிறார் என்பதையும் பொறுத்ததோ அது?​

      நீக்கு
    2. நிச்சயமாக நெல்லை. ஆண் அதாவது கணவன் புகழுடன் பிசியாக இருந்தால் வீட்டில் மனைவியுடன் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்காமல் இருந்தாலும் சில பெண்களுக்கு 40 வயதிய நெருங்கும் போது பிரச்சனை ஆரம்பிக்கும். அதுவும் பெண்களில் சிலருக்கு நினைவுத்திறன் அகிதமாகவே இருக்கும் பழசைக் குத்திக்காட்ட என்று.

      இது வைஸ் வெர்சாதான். பெண் புகழுடன் இருந்தால் அது வேறு வகைப் பிரச்சனையில் வரும்.

      இப்போதெல்லாம் அது சீக்கிரம் தொடங்கிவிடுகிறது. ஸ்ரீராம் கூட இதைச் சொல்லியிருந்த நினைவு...

      கீதா

      நீக்கு
    3. ஸ்ரீராம் அதே உங்கள் பதிலே...இன்னொரு பாதி நடந்து கொள்வதில் இருக்கு. இங்கு ஈகோ என்பது இல்லாமல் இருக்க வேண்டும்...

      கீதாக்கா சொல்வதையும் அப்படியே ஏற்கிறேன். அதில் பெண்களும் அடக்கம். எப்போது கணவன் மனைவிக்கு இடையில் மூன்றாவது நபர் அவரது கமென்ட்ஸ் இடர்படுகிறதோ அப்போது இருவரும் அதைப் புறம் தள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். யாரேனும் ஒருவர் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தாலே போதும் அவ்வளவுதான்...

      இது நார்மல் குடும்பங்களுக்குமே பொருந்துமே...

      கீதா

      நீக்கு
    4. வயது 40-50 காலகட்டத்தில் பொதுவாக பெண்களின் behavioral patterns -ஐக் கவனித்திருக்கிறீர்களா?
      இதே வயதுப் பரப்பில் ஆண்களின் லட்சணத்தையும்!
      (இங்கே, இருபாலாரில் யாரையும் தூக்கவோ, தாக்கவோ இல்லை)

      @ கீதா: //..இங்கு ஈகோ என்பது இல்லாமல் இருக்க வேண்டும்...//

      என்ன! இருப்பதுதானே ஈகோ? ’இல்லாமல்’ எப்படி அது ’இருக்கும்’ ?

      நீக்கு
    5. சில மாதங்களுக்கு முன்னால் மாஸ்டர் செஃப் (யூஎஸ்) பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் ஒருவர், தான் வீட்டில் இருக்கும் கணவர் என்றும், தன் மனைவி மட்டும் வேலைக்குப் போய் சம்பாதிப்பதாகச் சொன்னார். இதுமாதிரி நிலைமையை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இருந்தால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம்.

      ஒரு உதாரணத்துக்குச் சொல்றேன். ஒரு பெண்மணி வீட்டுக்கு தொடர்ந்து நிறையபேர் போன் பண்ணி, 'அம்மா இருக்காங்களா.. அவங்கள்ட பேசணும்', 'நான் அவர் ஹஸ்பண்ட் தான்... என்ன விஷயம்', 'அம்மாவைக் கூப்பிடுங்க. அவர்கிட்டதான் சொல்லணும்' என்றமாதிரி போன் வந்தால், 'கச்சேரிக்கு நாங்களே அழைச்சிக்கிட்டுப்போய் திரும்ப விட்டுடறோம்..நீங்க சிரமப்படவேண்டாம்' என்றெல்லாம் தொடர்ந்து நிலைமை வந்தால்.... இதுமாதிரி நிறைய யோசிக்கலாம்.... ஈகோ என்பது 'தன் முக்கியத்துவம்' இது இருபாலாருக்கும் உண்டு, குடும்பத் தலைவன் என்ற முறையில் ஆண்களுக்கு இருமடங்கு உண்டு என்று நான் நினைக்கிறேன்...

      நீக்கு
    6. நெல்லை இது நார்மல் குடும்பங்களிலும் நடக்கிறதே.

      கணவனை எல்லோரும் அப்ரோச் செய்யும் விதத்தில் அவன் நடந்து கொண்டால் எல்லோரும் அவனையும் அழைத்துப் பேசுவார்க்ள். அவன் சர்க்காஸ்டிக்காகப் பதில் சொல்லுதல், இண்டிஃப்ரெண்டாகப் பதில் சொல்லுவது, மனம் புண்படப் பேசுவது, யாராவது எதேனும் கேட்டால் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லுவது இல்லை என்றால் தத்துவம் பேசுவது என்று இருந்தால் மனைவியிடம் பேசுவதைத்தான் விரும்புவார்கள். இது சாதரணமாக வீடுகளிலும் நடப்பதுதான். அழைப்பிதழில் மட்டும் மிஸ்டர் என்று பெயர் போட வேண்டும் ஆனால் அவர்கள் வாயால் அழைக்கும் போது இண்டிஃப்ரென்டாகப் பதில் சொல்லுவது எனும் போது அந்த இடத்தில் மதிப்பு போகத்தானே செய்யும்...

      இது வைஸ் வெர்சாவும் நடக்கும் என்ப்தையும் சொல்ல முடியும்தான்.

      கீதா

      நீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பர் சொக்கன் சுப்பிரமணியன்... இது மாதிரி ஒற்றுமை வருவது இது இரண்டாவது முறை, இல்லை?!!

      நீக்கு
  9. நீலகண்டன் அவர்களின் உதவும் மனப்பான்மையை பாராட்டுவதோடு இல்லாமல், நாமளும் நம்மால் முடிந்த உதவிகளை நாம் படித்த பள்ளிக்கு செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்

    ஜெரீனா பேகம் அவர்களின் தன்னம்பிக்கையை பாராட்ட வேண்டும்.

    "//பள்ளி மாணவர்கள் வாட்ஸாப் க்ரூபில் நேற்று அடுத்த //" - நேற்று என்ற வார்த்தை தவறுதலாக வந்து விட்டது என்று நினைக்கிறேன்.

    நான் நேற்று தான் எங்கள் கல்லூரியின் ரீ யூனியன் பற்றிய பதிவை வெளியிட்டிருந்தேன். இன்றைக்கு இந்த கதையிலும் அதே ரீ யூனியன் பற்றிய வாசகங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என் பதிலை அங்கேயே வைத்து விடுகிறேன் நண்பர் சொ சு...! நீக்கி இங்கே வெளியிடவில்லை!!!

      நீக்கு
  10. நேற்றே கூட நெல்லை சொல்லியிருந்தார் இன்று வந்த பகுதியில் உள்ளது போல கருத்தை.

    பிரச்சனை எட்டிப் பார்க்கத் தொடங்கியுள்ளது..முதல் வரி சொல்லுதே! பார்ப்போம் எப்படிச் செல்கிறது என்று.

    என்னதான் தெரிந்தே மணம் முடித்தாலும் கூட யதார்த்தம் என்று வரும் போது அதை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டித்தான் இருக்கிறது. அது அமைய புரிய பக்குவப்பட சில கேஸ்களில் காலம் எடுக்கும். சில கேஸ்களில் மாற்றம் வராமல் வேறு வகையில் முடியும். எல்லாமே எதிர்கொள்ளும் பக்குவத்தில்தான் இருக்கிறது. அது காதல் கல்யாணமாக இருக்கட்டும். பெற்றோர் பார்த்து வைக்கும் கல்யாணமாக இருக்கட்டும், குறைகள் தெரிந்தே கல்யாணம் செய்து கொண்டாலும் சரி, தெரியாமல் ஏமாற்றப்பட்டுக் கல்யாணம் நடந்தாலும் சரி...

    கீதா

    பதிலளிநீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  12. மருத்துவர் உதவி மிக அருமை.மருத்துவர் நீலகண்டன் அவர்களையும் அவர் நற்பணிக்கு உதவியாக இருக்கும் அவர் மனைவிக்கும் வாழ்த்துக்கள்.

    தன் குடும்பத்தை உழைத்து காப்பாற்றும் தன்னம்பிக்கை மிக்க ஜெரீனா பேகத்திற்கு வாழ்த்துக்கள்.அவர் எப்படி கார் ஓட்ட கற்றுக் கொண்டார் என்று இந்த கட்டுரையில் இடம் பெறவில்லை, அதையும் அவரை பேட்டி எடுத்தவர் போட்டு இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  13. //ஒரு செலிபிரிட்டியின் வாழ்க்கைத் துணையாக இருப்பதன் கஷ்டங்கள் எனக்கு மெல்ல, மெல்ல புரியத்தொடங்கின. //

    ஸ்ருதி பேதம் வந்து விட்டதா?

    // ஒரு பத்திரிகை என்னை மிஸ்டர் ஸ்ருதி என்று எழுதியது கோபமூட்டியது. //

    ஏன் தான் இப்படி பத்திரிக்கைகள் இருக்கோ?


    //சேலத்தில் என் மிஸஸுக்கு கச்சேரி இருக்கு, போய்ட்டு, அப்படியே.."

    "என்னை முடிக்க விடாமல், அவங்க கச்சேரி பண்றாங்க, நீ என்ன பக்க வாத்தியமா?"//

    ஸ்ருதி பேதம் ஏற்படாமல் இருக்குமா? இப்படி பட்டவர்களின் பேச்சால்?

    பிரபலம் ஆகாத சாதாரண பெண்கள் வாழ்க்கையே உறவினர்களால் விரிசல் வரும்.
    பெண் வீட்டை சேர்ந்த விழாக்களுக்கு கணவனை வருந்தி அழைத்து சென்றால் உறவினர் மாப்பிள்ளைக்கு உரிய மரியாதை கொடுத்து அவரிடம் நங்கு பேச வேண்டும், உபசரிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்பார்கள். இல்லையென்றால் அடுத்த முறை உங்கள் வீட்டில் எனக்கு கிடைத்த மரியாதை போதும் நீமட்டும் போய் வா என்பார்கள் ஆண்கள். நன்றாக பேசினால் , உபசரித்தால் அடுத்த முறை கண்டிப்பாய் வருவார்கள்.

    அது போல் தான் பெண்களும். கண்வரின் உறவினர், நண்பர்கள் வீட்டில் நன்றாக பேசினால்தான் அடுத்த முறை போக விரும்புவார்கள்.

    இப்படி இருக்கும் போது பிரபலங்களின் வாழ்க்கை !

    குடும்பம், நட்பு, பொது வாழ்க்கை, தொழில் எல்லாவ்ற்றிக்கும் சரியாக நேரம் காலத்தை ஓதுக்க தெரிந்து இருக்க வேண்டும்.
    அப்புறம், விட்டுக் கொடுத்தல், சகிப்பு தன்மை, தியாகம் இருக்க வேண்டும்.

    இல்லையென்றால்

    //"ப்ளீஸ், ஸ்டாப் இட். கச்சேரி முடிஞ்சாச்சு, ஐயம், நாட் எ க்ரிட்டிக் ஹியர், ஓகே?” முதல் முறையாக ஸ்ருதியிடம் காட்டமாகப் பேசினேன். அதுவும் கச்சேரிக்குப் பிறகு.//

    இது போன்ற ஸ்ருதி பேதங்கள் வரத்தான் செய்யும்.








    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரபலம் ஆகாத சாதாரண பெண்கள் வாழ்க்கையே உறவினர்களால் விரிசல் வரும்.
      பெண் வீட்டை சேர்ந்த விழாக்களுக்கு கணவனை வருந்தி அழைத்து சென்றால் உறவினர் மாப்பிள்ளைக்கு உரிய மரியாதை கொடுத்து அவரிடம் நங்கு பேச வேண்டும், உபசரிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்பார்கள். இல்லையென்றால் அடுத்த முறை உங்கள் வீட்டில் எனக்கு கிடைத்த மரியாதை போதும் நீமட்டும் போய் வா என்பார்கள் ஆண்கள். //

      ரொம்ப சரி கோமதிக்கா...

      ஆனால் பெண்கள் விஷயத்தில் அது போல் தான் பெண்களும். கண்வரின் உறவினர், நண்பர்கள் வீட்டில் நன்றாக பேசினால்தான் அடுத்த முறை போக விரும்புவார்கள்.//

      ஆனால் இது பெண்களைப் பொறுத்து, அவர்க்ள் சூழலைப் பொறுத்து இருக்கு கோமதிக்கா.

      எனக்குத் தெரிந்து பெண்களின் பிறந்த வீட்டுக்கு கணவன் செல்லாம ஆனால் மனைவி மட்டும் அவர்கள் வீட்டவர்களக் கவனிக்கும் அதாவது கணவன் வீட்டவர்களைக் கவனிக்கும் குடும்பங்களையும் பார்க்கிறேன்...அப்பெண்ணுக்கு எவ்வளவு இக்கட்டான சூழல் இல்லையா? ஆனால் அதைய்ம் சமாளித்து வருபவர்கள் இருக்காங்க அக்கா..

      கீதா

      நீக்கு
    2. ரொம்பக் கஷ்டம் கோமதி அக்கா... நீங்கள் சொல்லி இருக்கும் உதாரணத்தைப் பொறுத்தவரை நான் ரொம்ப லக்கி. எங்கள் வீட்டு பக்கத்திலும் பாஸுக்கு பரிச்சயம் உண்டு. எனவே பிரச்சனை வராது.

      நீக்கு
    3. ஆனால் இங்கேயே ஒரு விஷயம் மனதில் படுகிறது... உடனே ஏன் ஜஹில் என்னை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்?!!!

      நீக்கு
    4. //உடனே ஏன் ஜஹில் என்னை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்?!!!//

      உடனே ஏன் இதில் என்னை..... என்று படிக்கவேண்டும்!

      நீக்கு
  14. //பார்ட்னர் ஒரு துறைல பெரிய ஆளாகணும்னா, இன்னொருத்தர் ரொம்ப விட்டுக் கொடுக்கணும், வளர்ச்சியை ரசிக்கணும், தங்களுக்குன்னு ஸ்பேஸ் ஒதுக்கிக்கொள்ளத் தெரியணும்... இது சுலபமல்ல. ஒன்றுல பெரிய ஆளா வருகிறவர்கள், நிறைய இழந்தால்தான் சாத்தியம்.//

    நெல்லைத் தமிழன் அவர்களும் போன பதிவில் இப்படி சொல்லி விட்டார்கள்.
    சரியான புரிதல் இல்லையென்றால் வாழ்க்கை படகு ஓடுவது கஷ்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுமாதிரி விஷயங்களில் புரிதல் என்பது இருபது சதவிகிதம் கூட இருப்பதில்லை.

      நீக்கு
  15. டாக்டர் து.நீலகண்டன் அவர்களின் நல்ல உள்ளத்திற்கும், ஜெரீனா பேகம் அவர்களின் தன்னம்பிக்கைக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    முதலில் இரு செய்திகளும் அருமை. படித்த பள்ளியை மறவாமல் உதவி செய்த மருத்துவருக்கு பாராட்டுகள். தம்பதிகள் மனம் ஒருங்கிணைந்து செய்து வரும் செயல்
    மிகவும் பாராட்டத்தக்கது.

    தன்னம்பிக்கையுடன் சோர்ந்து விடாமல், தன் வாழ்க்கையில் போராடி வென்று வரும் ஜெரீனா பேகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மூன்றாவது பகுதியாக கதை நகர்கிறது. அவர்களுக்குள் விரிசல்கள் பெரிதாகி விடுமோ என ஐயமும் வருகிறது. ஒரே துறையில் அதுவும் கலைசம்பந்தபட்ட துறை, வெளியுலகிற்கு பிரசித்தியாகும் துறை என தம்பதிகள் சேரும் போது சற்று முரண்பாடுகள் எழுவது சகஜந்தான். இதில் சாதாரண குடும்ப சூழ்நிலையில் கணவரை விடவோ, இல்லை, கணவருக்கு சமமாக வருமானம் இருக்கும் போதோ சில பிரச்சனைகள் ஈகோவினால் எழும் வாய்ப்புண்டு. (சூரியகாந்தி படம் நினைவுக்கு வருகிறது.) நான் பொதுவாக என்று அனைவரையும் குறிப்பிடவில்லை. சில குடும்பங்களில் இந்த மாதிரி அமைதி கெடும் சூழ்நிலைகள் உருவாகும். இதற்கு ஒரேவழி ஒருவர் தன் ஈகோவை விட்டு முழுமையாக அடிபணிந்து போக வேண்டும். அது சாத்தியமாகாத போது பிரச்சனைகள் பெரிதாகும். ஊர் உறவு அதையும் (பிழைக்கத்தெரியாதவன்(ள்) என்று ஏசும். விட்டுக் கொடுத்து இணக்கமாயிருந்தால், (கூஜா தூக்கி, எனவும், வெகுளி) எனவும் பட்டங்கள் கொடுத்து பேசும். அதனால் ஊர் வாய்க்கு அவலாகும் முன் தம்பதிகள் பேசி யோசித்து நல்ல முடிவாக எடுக்க வேண்டும்.
    (ஆனால் மிகுந்த படிப்பறிவு அவர்களை கோர்ட் படியேறி யோசிக்க வைத்து விடுகிறது என்பது வேதனையான விஷயம்.) கதையை தொடர்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா... இந்த இடத்தில சூரியகாந்தி படம் நினைவுக்கு வராமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இன்னொரு படம் கூட உண்டோ? ஆளுக்கு ஒரு ஆசை!

      நீக்கு
  17. பாசிட்டிவ் செய்திகள் சிறப்பு. ஜெரீனா பேகம் - வெகு சிறப்பு... முயன்றால் முடியாததில்லை.

    தொடர்கதை - மூன்றாம் பகுதியும் சிறப்பாக இருக்கிறது. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே...
    நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே...

    என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது...
    இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது...?

    இது மிஸ்டர் ஸ்ருதி சொன்னது இதில் அர்த்தம் உள்ளது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான உதாரணம் தி.த.... என் மனநிலையைப் பிரதிபலிக்கும் உதாரணம்.

      நீக்கு
    2. உடனடியாக நினைவுக்கு வரும் பாடல்... நல்ல உதாரணம் டிடி...

      நீக்கு
    3. ////நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே...
      நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே..////
      இந்த வசனத்துக்கு சின்ன வயசிலிருந்தே அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறேன் ... இப்போதான் புரிந்தது...

      அதாவது அவ வளர்வதால இவர் ஏன் தேயவேண்டும்? அது தப்பாச்சே என நினைச்சுக் கொண்டிருந்தேன்...

      நீக்கு
  19. ஸ்ருதியின் நாளைய பாட்டு ?! :-

    வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
    ஆனாலும் அன்பு மாறாதது...

    மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
    பிரிவென்னும் சொல்லே அறியாதது...

    அழகான கணவன் அன்பான துணைவன் அமைந்தாலே பேரின்பமே...

    மடிமீது துயில சரசங்கள் பயில
    மோகங்கள் ஆரம்பமே...

    நல்ல கனவானின் நேசம் ஒரு கோடி...
    நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி...
    சந்தோஷ சாம்ராஜ்யமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டிடி அருமை அருமை!! சூப்பர் பாடல்!! நல்லாருக்கே வரிகள்.

      நான் பாடல்கள் கேட்பது குறைவு கேட்டாலும் வரிகள் மனதில் மனப்பாடம் ஆனது குறைவு அதுவும் இரண்டு வரிகள் மட்டுமே பதிவாகியிருக்கும் ஹா ஹா

      சூப்பர் டிடி...

      முதல் பாட்டு தெரிந்து விட்டது..இரண்டாவது பாட்டின் மெட்டு மனதில் கிடைக்கவில்லை

      கீதா

      நீக்கு
    2. கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடதய்யா...
      சோலைமயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதய்யா...
      நாள்தோறும் கவிஞன் பாராட்டும் கலைஞன் பாடாத நாளில்லையே
      சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே
      துக்கம் சிலநேரம் கூடிவரும் போதும்...
      மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே...
      என்சோகம் என்னோடுதான்...!

      கல்யாண மாலை கொண்டாடும் ஆணே...
      என் பாட்டை கேளு உண்மைகள் சொல்வேன்...
      ஸ்ருதியோடு லயம் போலவே
      இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே...

      படம்: புதுபுது அர்த்தங்கள்

      நீக்கு
    3. டிடி சூப்பர் !!! சூப்பர்!!!

      அருமையான வரிகள்...பாட்டும் கேட்கிறேன் படம் பெயர் கொடுத்துருக்கீங்களே!!

      கீதா

      நீக்கு
    4. பாடல் வரிகளை இந்த இடத்துக்கேற்ப அழகாக மாற்றி எழுதி இருக்கிறீர்கள் டிடி. பின்னூட்டத்தில் போல்ட் லெட்டர்ஸ் எழுதுவது எப்படி?

      நீக்கு
  20. சாதாரண பள்ளியில் படித்து நல்ல நிலைக்கு வந்த பலர் தாங்கள் படித்த பள்ளியின் பெயரை சொல்லிக்கொள்ள விரும்பாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு மத்தியில் டாக்டர் நீலகண்டன் அவர்களின் நன்றி மறவாத குணமும், அந்த பள்ளியை முன்னேற்ற அவர் எடுக்கும் முயற்சிகளும் பாராட்டுதல்களுக்கு உரியவை. இவரைப் போன்றவர்கள் இருந்தால் அரசுப்பள்ளிகள் மூடப்படுவது தவிர்க்கப்படும். வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  21. ஒரு பிரபலத்தின் ஒரு பாதி என்பதைப் பெண்கள் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள். //

    பெரும்பான்மையான ஆண்களால் இதை ஏற்றுக் கொள்வது கொஞ்சம் கடினம்தான். பெண்கள் ஏற்றுக் கொள்வது போல...ஆனால் தற்போது சங்கீத உலகில் இருவருமே பாடவோ அல்லது அதே துறையில் இருப்பதாலோ இப்போது இருக்காங்கதான்

    கீதா

    பதிலளிநீக்கு
  22. ஜெரினா பேகம் வணங்கப்பட்ட வேண்டியவர். இவரைப் போன்ற ஒரு பெண்மணியை நான் ஒரு முறை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் சந்தித்தேன்.
    ஆட்டோ ஓட்டும் அவர் சூடு வைக்காத மீட்டர் போட்டு, நியாயமான தொகையை மட்டுமே வசூலித்தார். சென்னை சென்ட்ரல்-கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்-ராமாவரம் செல்ல ரூ 150/- மட்டுமே.
    தனக்கு இரு குழந்தைகள் என்றும் மகள் நர்சிங் படிப்பதாகவும், மகன் இன்ஜீயரிங் படிப்பதாகவும் கூறினார். "சரியான மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிக்கிறீர்களே, கட்டுப்படியாகிறதா?" என்று கேட்டேன், "ஆண்கள், குடிக்கிறார்கள் அதனால் அவர்களுக்கு அதிகம் பணம் தேவைப்படும், எங்களுக்கு அதெல்லாம் கிடையாதே?" என்றார். ஆரம்பத்தில் மிரட்டல் வந்ததாம். பதிவு எழுத வேண்டும் என்று அவரை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன், ஏனோ எழுதவில்லை.

    பதிலளிநீக்கு
  23. திண்டுக்கல் தனபாலன் மிக அருமையான பாடலுடன் கருத்தை சொல்லி விட்டார்.

    பதிலளிநீக்கு
  24. சங்கீதம்னா கிலோ என்ன விலை ?
    என்று கேட்கும் துணை அமைந்தால் இப்படித்தானோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்து பைரவி...!

      ஹா... ஹா... சிந்தாவிட்டால் அனுஷ்க்க்க்க்க்கா...!

      நீக்கு
    2. அல்லோஓஓஒ துணைக்கு சங்கீதமோ நடனமோ முக்கியமில்லையாக்கும்:).... அன்பு தச்ன் முக்கியம்.... அன்பு இருந்தா ஏனையவை தானாகவே வந்திடுமாக்கும்:) ஹா ஹா ஹா கழுதை கத்துவதுபோல இருந்தாலும் ......... ........... ............:).

      நீக்கு
    3. கில்லர்ஜி துணை சங்கீதத்தில் நுணுக்கங்கள் தெரிந்தவன் என்றுதானே கதையில் முதல் பார்ட்டிலேயே சொல்லப்பட்டிருக்கே விமர்சனம் எழுதுபவன் என்று....இது சங்கீதப் பிரச்சனை இல்லையே.....இது வேறல்லவா...

      கீதா

      நீக்கு
    4. அபிமான்:) ஹா ஹா ஹா ... எனக்கு ஹிந்தி தெரியாதென ஆரும் நினைச்சிடக்கூடாதெல்லோ:)...

      நீக்கு
    5. அதிரா நான் கில்லர்ஜிக்கு அன்பு நு அடுத்து சொல்ல வந்தேன்...அதுக்குள்ள உங்க கமென்ட் வந்துருச்சு...இடைல வேலை வேறு...

      உங்களுக்கு ஹிந்தி தெரியும் ஆனா ஆக்ரிராஸ்தா ஹிந்தி க்ளைமேக்ஸ் மட்டும் வேறு மொழியல்லோ?!!!! ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    6. அதிரா...

      அபிமான்!

      சரியான உதாரணம் ஹிந்திப்படத்தில் சட்டெனப் பிடித்தீர்கள். எப்படி? எனக்கே நினைவுக்கு வரவில்லை?

      நீக்கு
    7. நான் என் வாழ்க்கையில்... அதாவது இந்த 16 வருட காலத்தில் :) பார்த்தது இரண்டே இரண்டு ஹிந்திப் படங்கள்:)...
      முதலாவது படம் அபிமான்.... அப்பா கசட் எடுத்து வந்து, நாம் பார்க்கோணும் என வீட்டில் பார்த்தது.
      2வது 2017 இல் /2015 இல் வெளிவந்த ஷாருக்கனின் மூவி:) பெயர் வாயில் நுழையாது.... பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் தவறி ஒரு பெண் குழந்தை வந்து அது ஷாருக்கானை அப்பா என்கிறது... படாதபாடுபட்டு அக்குழந்தையைப் பெற்றோரிடம் ஒப்படைப்பார். இது கனடா தியேட்டரில் என் சிஸ்டர் இன் லோவின் ஆக்கினையால் போய்ப் பார்த்தோம்:)...
      அவ ஷாருக்கானின் தீவிர றஜிகை:).... ஹா ஹா கில்லர்ஜிக்கு கோள்வம்:) வந்திடப்போகுதூஊஊஉ:)...

      நீக்கு
    8. ஓ... நீங்கள் விரும்பினால் நான் சில ஹிந்திப் படங்கள் சிபாரிசு செய்வேன். நிச்சயம் நன்றாய் இருக்கும். ரிஷி- டிம்பிள் நடித்த பாபி, ஷோலே, குச் குச் ஹோத்தா ஹை, ஹம் ஆப்கே கௌன் ஹை, யாதோன் கி பாராத்...

      நீக்கு
    9. அதிரா ஹிந்தியிலும் 'டி' வாங்கிட்டாங்க பாருங்க ஸ்ரீராம் அண்ட் நெல்லை... ஜெர்ரிக்கும் இந்தத் தகவல்!!

      கீதா

      நீக்கு
    10. ஹா ஹா ஹா நெட்டில் புத்தகம் வாசிக்கவே மாட்டேன் என இருந்த என்னை, இப்போ வாசிப்பே சுவாசிப்பு என்பதுபோல மாற்றிட்டார் ஶ்ரீராம் ... இப்போ ஹிந்திப்படம் பார்க்கவும் தூண்டுறார் ஹா ஹா ஹா... முயற்சிக்கிறேன் ஶ்ரீராம்... ஷோலே கொஞ்டம் காதில் அடிபட்ட பெயராகவே இருக்கு... குரு என ஒரு படம் தமிழில் வந்துது ஐஸ்வர்யாராய் உம் அமிதாப்பின் மகனும் சேர்ந்து நடிச்சது தி.முன்... அது ஹிந்தியில்தான் வெளியானது.. 2008 இல் என நினைக்கிறேன் அந்த ஹிந்தி டிவிடி வாங்கி வந்தோம் ஆனா பார்க்கலியே:).... ஹா ஹா ஹா.

      கீதா நேக்கு ஹிந்தி பகூத் அச்சா ஹை:).. ரேக் கேர்...:)... பே தி ஜி:) ஹா ஹா ஹா

      நீக்கு
    11. புத்தகம் வாசிப்பது நல்ல பழக்கம்தானே அதிரா...

      அமிதாப் மகன் நடித்த குரு படம் நான் பார்த்தேன். மணிரத்னம் படம். போர்!

      நீக்கு
  25. பாராட்டுக்குரியவர்கள் இருவரும். பகிர்வுக்கு நன்றி.

    மனைவிக்குக் கிடைக்கும் புகழ், முன்னேற்றம் ஆகியவற்றைத் தனக்கானதாகப் பார்க்க முடியாதவர் பலர். தொடர்க..

    பதிலளிநீக்கு
  26. பின்பு வாறேன்ன் ஆனா அவசரமா ஒன்று சொல்லிப்போட்டு ஓடுறே ந்ன்ன்ன்:) இன்றைய எழுத்து பார்க்க அச்சு அசலாக ஶ்ரீராமின் எழுத்தாகவே எனக்குத் தோணுதூஊஊஊ:)...

    இன்றைய எழுத்து நடை அப்படியே தத்ரூபமாக மனதைத் தொடுது.....
    கடவுளே வைரவா வேறு யாராவது எழுதியதெனில்:)... இதை யார் கண்ணிலும் படாமல் மறைச்சுப்போடப்பா உன் செல்ல வாகனத்தை விட்டே:)...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சரி அதிரா... ஏஞ்சல் எங்கே இரண்டு நாட்களாய்க் காணோம்?

      நீக்கு
    2. அது ஶ்ரீராம், அதிரா ஞானியாகிட்டதால அஞ்சு பாதிரியார் ஆக றை பண்றா:)... சேஜ் இலேயேதான் குடும்பம் நடத்துறா என தேம்ஸ் கரையில் யாரோ பேசியதை ஒட்டுக் கேட்டேன்:).. எனக்கெதுக்கு ஊர் விடுப்ஸ்:)... ஹா ஹா ஹா:)..

      நீக்கு
    3. ஆனால் பாருங்க... புதன் பதிவுக்கு ஓடிவந்து கேள்விகளை வீசிப்போட்டு விட்டு ஓடிட்டாங்க!

      நீக்கு
  27. அடுத்து வரப்போகும் ஒரு கேள்விக்கு பதில் கிடையாது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேட்ட கேள்விக்கே இன்னும் பதில் தரேல்லை கர்ர்ர்ர்:)... எழுத்தாளரை எப்போ சொல்லப் போறீங்க:)?

      நீக்கு
    2. அவசரத்தில் எழுத்தாளரை எப்போ கொல்லப்போறீங்கன்னு படிச்சுட்டேன் அதிரா! என்ன கோபம் அதிராவுக்குன்னு பயந்துட்டேன்...!!!!

      நீக்கு
  28. // பின்னூட்டத்தில் போல்ட் லெட்டர்ஸ் எழுதுவது எப்படி? //

    ஸ்ரீராம் சார், பதிவு எழுதும் போது, எவ்வாறு என்று தெரியும்... பதிவில் உள்ள குறிப்பிட்ட சொல்லை தேர்வு (select) செய்து, மேலே உள்ள "B" எனும் ஐகான்-யை சொடுக்கினால், தேர்ந்தெடுத்த சொல் "Bold" ஆக மாறி விடும்... அதே போல் "I" (Italic) சாய்வு எழுத்து...

    கருத்துரையில்...?
    BOLD: குறிப்பிட்ட சொல்லிற்கு முன் <b> சொல்லிற்கு பின் </b>
    ITALIC: குறிப்பிட்ட சொல்லிற்கு முன் <i> சொல்லிற்கு பின் </i>

    சரி இந்த நுட்பத்தை நீங்கள், நண்பர்களின் தளத்தில் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறீர்கள்....இந்த கருத்துரையை கோப்பி (நன்றி அதிரா) அண்ட் பேஸ்ட் செய்து பாருங்களேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி டிடி

      சோதனை முயற்சி

      கீதா

      நீக்கு
    2. ஆஆஆஆவ்வ்வ்வ்வ் அதிரா ஞானி ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்

      நீக்கு
    3. அது கோப்பி இல்லை கொப்பி ஆக்கும் கர்ர்ர்ர்ர்ர்:) ஹா ஹா ஹா

      நீக்கு
  29. வார இதழ்களை நிறுத்தியவுடன் சிறு கதை, தொடர்கள் படிக்கிற வழக்கமும் மறந்தே போய்விட்டது இங்கே இன்னமும் கதைசொல்ல அதன் மேல் கதைக்கவென்று இத்தனை பேர் கூடுவதை பார்க்கும் போது மெய்யாகவே தலைசுற்றுகிறது ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா... ஹா... ஹா...

      வாங்க கிருஷ் ஸார்.. இங்கு எல்லாப் பதிவுகளுமே எல்லோரும் உட்கார்ந்து எல்லாவற்றையும் பேசும் ஒரு அரட்டை அரங்கம் போல இருக்கும். பல விஷயங்களும் பேசப்படும்!

      நீக்கு
  30. இன்றைய பாச்ட்டிவ் செய்திகள் இரண்டுமே அருமை. ஜெரினா அவர்கள் தைரியமாக கால் டாக்கி ஓட்டுவதைப் பாராட்ட வேண்டும்.

    பள்ளி மிக அழகாக இருக்கிறது. மாடல் பள்ளியாக பிற பள்ளிகள் எல்லாம் இப்படி அமைந்தால் நன்றாக இருக்கும்.

    கதையைத் தொடர்ந்து வருகிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!