செவ்வாய், 19 மார்ச், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : டிபன் பாக்ஸ் - துரை செல்வராஜூ

டிபன் பாக்ஸ் 
துரை செல்வராஜூ 



நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் - மதியப் பொழுது..

காலாற நடந்து கொண்டிருந்த காலதேவன் -
அந்தப் பள்ளி வளாகத்தின் மாமரத்து நிழலைக் கண்டு
அங்கே நடக்க இருப்பதை எண்ணி - புன்னகைத்தபடியே கடந்து சென்றான்...

காலதேவனே புன்னகைக்கின்றான் என்றால் -
என்னதான் நடக்கிறது அங்கே!...

நாமும் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம்!...
ஃஃஃ

டீ... அங்க பாருங்க... நிர்மலா போறதை!...

எங்கடி போறா அவ?...

பாவம்டி... அவ!...
அவங்க அம்மாவுக்கு திடீர்...ன்னு உடம்புக்கு முடியாமப் போச்சு...

அதான்.. தெரியுமே... இப்போ அவ அந்தப் பக்கமா எதுக்குப் போறா...ன்னு தான் கேள்வி!...

அதுக்கு அவள்...ல வந்து பதில் சொல்லணும்!...

வேற எங்க போவா!.. அந்தப் புள்ளையார் கோயில்...ல போயி குந்தியிருப்பா..
ஸ்கூல் பெல் அடிச்சதும் எந்திரிச்சி உள்ள வருவா!...

அதற்குள் -
நிர்மலாவை சத்தமிட்டுக் கூப்பிடுவதற்காக வாயைத் திறந்தாள் வனிதா...

டீ... மரமண்டை ... இங்கேயிருந்து சத்தம் போடலாமா?..
கிட்டக்கப் போயி அவள அழைச்சிக்கிட்டு வா!...

பாவாடை சரசரக்க எழுந்தோடி நிர்மலாவை நெருங்கிய வனிதா
இந்தக் கூட்டத்தைக் காட்டி - நிர்மலாவின் கையைப் பற்றினாள்..

அங்கிருந்தபடி - நிர்மலா நிர்மலா நிமிர்ந்து பார்த்து தலையை அசைத்தாள்...

என்னை விட்டுடுங்கள்.. - என்று, தயக்கம் மிகுந்திருந்தது..

அதைக் கண்டு அசராமல்
இங்கிருந்த வண்ணத்துப் பூச்சிகள் -

(சும்மா.. இது ஒரு பேச்சுக்குத்தான்!...
உண்மையில் வாலில்லாத வான...
ஆகா.. யாரோ அடிக்க வர்ற மாதிரி இருக்குதே...
நமக்கு எதுக்கு ஊர் வம்பு எல்லாம்!...)

உண்மையில் சிறகில்லாத வான தேவதைகள்... (இப்போ சந்தோஷமா!...)
கைகளை அசைத்து அழைத்தன...

அடுத்த சில நொடிகளில்
தயக்கம் மாறாத நடையுடன் அவர்களை நெருங்கினாள் நிர்மலா..

ஏம்மா... எங்களை எல்லாம் பாத்தா மனுசங்களாத் தெரியலையா?.. - கல்யாணி...

என்னமோ நீபாட்டுக்கு ராஜாத்தி மாதிரி போற..
புங்கங்காட்டு புள்ளையார் கோயிலுக்கு!..

- இது காம்போதி.. இல்லையில்லை.. கனகவல்லி...

லோகம் கெட்டுக் கிடக்கிறதடி...
நாம தான் ஜாக்ரதையா இருக்கணும்!... - காயத்ரி திருவாய் மலர்ந்தாள்...

ஏய்!... ஏண்டி ஆளாளுக்கு அவளப் போட்டுக் கொடைறீங்க...
பாவம்... அவளே மனசு நொந்து போயிருக்கா!...

இந்த வார்த்தைகளைக் கேட்டதும் -
நிர்மலாவிடம் இருந்து மெல்லிய விம்மல் வெளிப்பட்டது...

சரி.. சரி... உட்காரு.. அம்மா இப்போ எப்படி இருக்காங்க?... - மாலதி...

இப்போ கொஞ்சம் பரவாயில்லை..
தஞ்சாவூர் மெடிக்கல்...ல சேர்க்கணுமாம்!..

பூ மலர்வது போலப் பேசிய நிர்மலா
காயத்ரிக்கும் மாலதிக்கும் இடையில் அமர்ந்தாள்...

அதெல்லாம் சரியாய்டும்... எதுக்கும் கவலப்படாதே!..
அம்பாள் அனுக்ரஹம் பண்ணுவா!.. - என்ற, காயத்ரி -

எப்போ அழைச்சிண்டு போறேள்?... ஆஸ்பத்ரியில அட்மிட் ஆகிட்டா
பக்கத்துல ஒருத்தர் இருக்கணுமோல்லியோ!.. - ஆதரவுடன் வினவினாள்...

ஆமாம்!.. - என்று, நிர்மலா தலையசைத்தபோது
விழி ஓரத்தில் நீர்த்துளிகள் தத்தளித்தன..

சரி... சரி...அழாதே... சாப்டியா இல்லையா...

ஏ.. சோடா புட்டி... என்னா இது கேள்வி?..
அவ இன்னைக்கு டிபன் பாக்ஸ் கொண்டு வரலைடி..

எப்டி..டி... கொண்டு வருவா:...
அவளோட அம்மாவுக்கு முடியலை..ஒத்தாசைக்கும் வேற ஆளில்லை...
காலைல கூட சாப்பிட்டுருக்க மாட்டா... வயிறப் பாரு.. ஒட்டிக் கெடக்கு...

சடாரெனெ அழுகை பொங்கியது நிர்மலாவிடமிருந்து..

டீ.. அழப்படாது....   அழப்படாது...
பொண் குழந்தைகள் கண்..லருந்து ஜலம் வந்துடுத்து....ன்னா
பூமா தேவிக்குப் பொறுக்காதாம்... பொங்கி எழுந்துடுவாளாம்!..

காயத்ரியின் கை - நிர்மலாவின் கண்ணீரைத் துடைத்து விட்டது...

டீ.. நீ என்ன கொண்டு வந்திருக்கே... - கல்யாணி.பரபரத்தாள்..

இட்லி, மிளகா சட்னி... நல்லெண்ணெய் ஊத்தியிருக்கு...

நீ?..

கோதுமை உப்புமா.. - கனகவல்லி.

ஏய் தயிர் சாதம் நீ?..

வேறன்ன.. தயிர் சாதந்தான்... நாத்தங்கா ஊறுகாய்!... - காயத்ரி..

இவ.. அரைவேக்காடு.. சாம்பார் சாதமும் ஆஃப் பாயில் முட்டையும்!..

ஏன்டி அமுதா!.. பத்மா மூணாவது ரேங்க்..  நீ எட்டாவது ரேங்க்..
அவளைப் போய் நீ அரை வேக்காடு... ன்னு சொல்றியே!..

நான் பத்மாவைச் சொல்லலைடி..
அவளோட டிபனைச் சொன்னேன்.. - கலகல..ன்னு சிரிப்பொலி பரவ...

நிர்மலாவின் முகத்திலும் மகிழ்ச்சி அரும்பியது..

சரி..சரி..எல்லாரும் ஆளுக்கு ஒரு கை எடுங்கடி ..
நிர்மலாவும் நம்மோட சாப்பிடுவா!..

வேணாம் வேணாம்.. - நிர்மலா பதறினாள்.. மறுத்தாள்..

அன்னலக்ஷ்மிய அப்படிச் சொல்லப்படாது...
சாப்டறப்போ வயிறு நெறஞ்சா கூட - போதும்..னு தான் சொல்லணும்...

தோழியர் ஒருவருக்கொருவர் அன்பினைப் பரிமாறிக் கொண்டிருந்தபோது -

நிர்மலா!..

- என்றபடி, நிர்மலாவின் தந்தை வீரையன் சைக்கிளில் வந்து இறங்கினார்...

அந்த சைக்கிளின் முன் பக்கம் தூக்குவாளி ஆடிக்கொண்டிருந்தது...

அம்மாவுக்கு முடியலே..னா என்ன!..
அப்பா நானிருக்கேன்..ல உன்னைத் தவிக்க வுட்டுடுவனா?..
காலைல.. சாப்பிடாம பசியோட வந்துட்டியே..
சோறு கொண்டாந்திருக்கேன் அப்பா.. நொய்க்குறுணைச் சோறு...
வத்தக் கொழம்பு வச்சி முருங்கக் கீரை வதக்கியிருக்கேன்...

அப்பா... இவங்க எல்லாரும் எங்கூடப் படிக்கிறவங்க...
எல்லாருமா சேர்ந்து சாப்பாடு கொடுத்தாங்க.. சாப்பிட்டுட்டேன்.. பா!...

அப்படியா.. நல்லது!..
இங்க .. பாருங்க புள்ளைகளா....
நீங்க பள்ளிக் கூடத்துல படிக்கிறதெல்லாம் படிப்பு இல்லை..
இந்தப் பாசந்தான் படிப்பு!.. இந்த நேசந்தான் படிப்பு!..
இத நல்லா படிச்சிக்குங்க.. விட்டுடாம கெட்டியா புடிச்சுக்குங்க!...

கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்ட வீரையன்...

சரி...ம்மா... நான் கிளம்பறேன்..
- என்றபடி சைக்கிளில் இருந்த தூக்கு வாளியைப் பார்த்தார்...

அவருடைய பார்வையைப் புரிந்து கொண்ட கல்யாணி பளீர்.. எனச் சொன்னாள்..

டீ.. அப்பா மனசத் தவிக்க விடக்கூடாது...
அந்த வாளியக் கொடுங்கப்பா..

நாங்க எல்லாருமா சாப்புட்டுக்கறோம்...
என்க்கு முருங்கக் கீரை..ன்னா பிடிக்கும்...

குறுணைச் சோறு..ன்னா அமிர்தமா இருக்குமே.. - என்றாள் அமுதா..

எனக்கு வத்தக் குழம்புன்னா உசிரு.. - என்றாள் பத்மா..

எனக்குந் தான்!..

- என்றபடி தனது டிபன் பாக்ஸை நீட்டினாள் காயத்ரி..

ஃஃஃ

அப்புறம் என்ன ஆச்சு..ன்னு கேக்குறீங்களா...

எட்டிப் பார்த்த நமக்கு இதுதாண்டா.. உலகம்.. ன்னு இருந்துச்சு....

அம்பாள் அனுக்ரஹத்தால நிர்மலாவோட அம்மாவுக்கு உடம்பு நல்லபடியாச்சு..

காலா காலத்துல எல்லாப் பொண்ணுங்களுக்கும் கல்யாணங்காட்சி
மாலை மங்கலம் மக்கட்பேறு..ன்னு ஆகி -

இப்போ எல்லாரும் தீர்க்க சுமங்கலியா
பேரன் பேத்திகளோட வாழ்ந்துக்கிட்டு இருக்கிறதா கேள்வி...

68 கருத்துகள்:

  1. காலை வணக்கம் எல்லோருக்கும்...இன்று துரை அண்ணாவின் கதையா...

    டிபன் பாக்ஸ் தலைப்பே நிறைய சொல்லுதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா ரெங்கன். ஆமாம் அண்ணாவின் நெகிழ்ச்சியூட்டும் கதைதான்.

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் வலைத்தள நட்புகள் அனைவருக்கும் நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. இன்று மற்றுமொரு வரலாற்றுப் பதிவினைப் பதிப்பித்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. இங்கே கதையைப் படித்து விட்டு அப்படியே நமது தளத்திற்கும் வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அங்கும் இனிமை...

      பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
      தொகுத்தவற்றுள் எல்லாம் தலை...

      நீக்கு
    2. போயிட்டு வந்துட்டோமுல்ல!

      நீக்கு
  5. ஆஹா... சிறப்பான ஒரு கதையுடன் இன்றைய செவ்வாய் இனிதே துவங்கி இருக்கிறது.

    நட்பு தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  7. கதை மிக அருமை.
    பாசம், நேசம், நட்பு எல்லாம் கலந்த கதை.
    எங்கள் பள்ளிப் பருவம், பகுத்துண்டு வாழ்ந்த காலங்கள் நினைவுக்கு வருது.

    //இங்க .. பாருங்க புள்ளைகளா....
    நீங்க பள்ளிக் கூடத்துல படிக்கிறதெல்லாம் படிப்பு இல்லை..
    இந்தப் பாசந்தான் படிப்பு!.. இந்த நேசந்தான் படிப்பு!..
    இத நல்லா படிச்சிக்குங்க.. விட்டுடாம கெட்டியா புடிச்சுக்குங்க!...//

    இதுதான் இதுதான் இப்போது வேண்டும்.
    நட்பு வாழ்க!

    //(சும்மா.. இது ஒரு பேச்சுக்குத்தான்!...
    உண்மையில் வாலில்லாத வான...
    ஆகா.. யாரோ அடிக்க வர்ற மாதிரி இருக்குதே...
    நமக்கு எதுக்கு ஊர் வம்பு எல்லாம்!...)//

    பள்ளிக் காலத்தில் பசுமை நிறைந்த நினைவுகளே! என்று கண்ணதாசன் பாடி இருக்கிறோம்.
    அதில் குரங்குகள் போல மரங்களின் மீது ஆடி திரிந்தோமே! என்று வரும்.
    நீங்களும் உங்கள் பதிவில் சொல்லி விட்டு பின் வான தேவதைகள் என்று சொல்லி விட்டீர்கள்.
    உண்மைதான் அன்பான தேவதைகள் தான்.


    நிறைவு பகுதி அருமை. கண்ணில் நீர்துளி.





    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      நிறைவை எழுதும் போது நானும் கலங்கி விட்டேன்...

      இனிய கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  8. அனைவருக்கும் காலை வணக்கம். துரை சாரின் கதையா? ஒரு செறிவான கதையாகத்தான் இருக்கும். வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. துரையோட கதையா? வழக்கம்போல் அருமையான நினவலைகளைக் கிளப்பி விடும் கதைக்கரு! அனைவருக்கும் அவரவர் பள்ளி நாட்கள் நினைவில் ஓடும். அவரவர் பள்ளிச் சிநேகங்களும் நினைவில் வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகை மகிழ்ச்சி... மறக்க முடியாத பள்ளிச் சிநேகங்கள் மனதைக் கலக்குகின்றன...

      நீக்கு
  10. அனைவருக்கும், அன்பு துரை ராஜுவுக்கும் இனிய காலை வணக்கங்கள்.

    செய்திகளைப் படித்து வருந்தியிருந்த
    மன
    சுக்கு, கள்ளம் கபடில்லாத பெண் தேவதைகளின் பாசம் மகிழ்ச்சி அலையாக வருகிறது.
    மனம் நன்றியும் வாழ்த்துகளும். அருமையான் கதை ஓட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      கள்ளங்கபடு இல்லாத தேவதைகள்.. தோழிகள்...

      இனியொரு காலம் அப்படி வாய்க்குமா?..

      அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி .. நன்றி..

      நீக்கு
  11. கதை சொல்லவரும் கருத்து நல்லா வந்திருக்கு.

    துரை செல்வராஜு சார்.. இப்போதும் ஓரளவு கலங்கலில்லாத மனசு பள்ளிக்கூடத்துல, கல்லூரி வரை இருக்கிறது, எங்கள் காலத்தில் இருந்தது போலவே.

    ஆனால், கட்சி கட்டும் பெரியவர்களாலும், வித்தியாசத்தை சிறிய வயதிலேயே விதைப்பதாலும், நடக்கும் செய்திகளாலும் மனது கலங்கிப்போவதைப் பார்க்கிறேன். ஸோஷியல் மீடியாவின் பங்கும், மனதைக் கலக்கும் சீரியல்களின் பங்கும் இதில் மிக அதிகம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால், கட்சி கட்டும் பெரியவர்களாலும், வித்தியாசத்தை சிறிய வயதிலேயே விதைப்பதாலும், நடக்கும் செய்திகளாலும் மனது கலங்கிப்போவதைப் பார்க்கிறேன். ஸோஷியல் மீடியாவின் பங்கும், மனதைக் கலக்கும் சீரியல்களின் பங்கும் இதில் மிக அதிகம்//

      இதே கருத்தைத்தான் என் போக்கில் சொல்ல நினைத்தேன் இங்கு நெல்லையே சொல்லிவிட்டதால் இதை டிட்டோ செய்கிறேன்.

      கீதா

      நீக்கு
    2. சமீபத்தில் கூடக் கல்லூரியில் சாதி மோதல் கொலை என்று நடக்கிறது....வேதனை. சீரியல்களையும் விட சுயமாகச் சிந்திக்கத் தெரியாதவர்கள் சிக்கும் சமூக வலைத்தளங்கள் இதற்கு மிக முக்கியக் காரணம் என்றும் தோன்றுகிறது.

      கீதா

      நீக்கு
    3. நாங்கள் படிக்கும்போது சக மாணவர்கள் ஒவ்வொருவருடைய விவரமும் நன்றாகவே தெரியும்....

      ஆனாலும் அவற்றைப் பொருட்படுத்திய்தே இல்லை..

      நன்றாக மலர்ந்தது கொண்டிருந்த சமுதாயத்தை அரசியல்வாதிகள் கொடுத்தார்கள்...

      நீக்கு
  12. பள்ளிக்காலம் என்பதே பாசத்தையும் நேரத்தையும் கற்றுக்கொடுக்கத்தானே
    அருமையான கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசத்தையும் நேசத்தையும் கற்றுக் கொள்ளத் தானே பள்ளிக் காலம்..

      அருமையான கருத்து...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி. நன்றி..

      நீக்கு
  13. கதை மனதைத் தொட்டது துரை அண்ணா. நெகிழ்ச்சி! இந்த நட்பு அன்பு எல்லாம் பழைய நினைவுகளை மீட்டது. இப்போதும் இது ஆங்காங்கே இருக்குமாக இருக்கலாம் தான்.

    நாங்களும் இப்படிக் கும்பலாக உட்கார்ந்துதான் சாப்பிடுவோம்.

    கதை மிக அருமை, துரை அண்ணா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      மாமரத்தடியில் வடமாக உட்கார்ந்து கொண்டு சாப்பிட்ட நாட்கள் எல்லாம் மறக்கக் கூடியவையா?..

      இனிய வசந்தம்....

      நீக்கு
  14. உண்மையில் சிறகில்லாத வான தேவதைகள்... (இப்போ சந்தோஷமா!...)//

    இல்லை இல்லை இல்லை....எனக்கு முதலில் சொன்ன இதுதான் //உண்மையில் வாலில்லாத வான...// பிடித்திருக்கிறதாக்கும்...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதா.. நீங்கள் சொல்லியிருக்கும் வரிகளை மிக ரசனையுடன் எழுதினேன்....

      நீக்கு
  15. அன்புதான் படிப்பு கெட்டியாக புடிச்சுக்கோங்க... அருமை ஜி

    //ஏய் தயிர் சாதம் நீ ?

    வேறன்ன.. தயிர் சாதந்தான்... நாத்தங்கா.. ஊறுகாய்!... - காயத்ரி..//

    நார்த்தங்காயை, நாத்தங்கா என்றதை ரசித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      நார்த்தங்காயை நாத்தங்காய் என்பதும் இனிமையாகத் தானே இருக்கிறது...

      அதுவும் சின்னப் பிள்ளைகள் செல்லமாகச் சொல்லும் போது....

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  16. உண்மையில் வாலில்லாத வான...//

    ஒரு வேளை அண்ணா தேம்ஸ்காரங்களுக்குப் பயந்துக்கிட்டோ வானதேவதைன்னு சொன்னது!!! ஹா ஹா ஹா...அவங்கதான் "என் குருவை இப்படிச் சொன்னது ஆரூஊஊஊஊனு நீதி நியாயம் நேர்மை எருமைனு கத்திக்கிட்டே வந்து குதிப்பாங்க.!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே.. அதே...

      ஆனாலும் இது இன்னும் கண்ணில் படவில்லை....

      நீக்கு
    2. நல்லவேளை கீதா, பயத்தில:) பாதியில் நிறுத்திட்டார் துரை அண்ணன் ஹா ஹா ஹா...

      நீக்கு
  17. மனசும் நிறைஞ்சு போச்சு..
    வயிறோட !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகையும் ரத்ன சுருக்கமான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  18. பதில்கள்
    1. பால்யகால பள்ளிக்கூட நட்பு இருக்கிறதே. அது பல நிகழ்ச்சிகளைக் கொண்டது. மறக்க முடியாத இனிய அனுபவங்கள். இனிய அனுபவங்களை அசைபோட வைத்து விட்ட உங்கள் கதை. இனிப்பாகவும், சுவையாகவும் இருந்தது. அன்புடன்

      நீக்கு
    2. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    3. அன்பின் காமாட்சி அம்மா..
      தங்களது அன்புக்கும் க்ருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  19. வணக்கம் சகோதரரே

    பள்ளிப்பருவ பாசங்கள் நிரம்பிய கதை படிக்க மிகவும் ஸ்வாரஸ்யமாக இருந்தது.

    பள்ளி படிப்பின் இடையிலேயும், பாசமெனும் படிப்பையும், கற்று வந்த காலங்கள் இனிதானவைதான். அவற்றை எந்த பருவத்திலும் மறக்க இயலாதவை. மிக அழகாக கதையை நகர்த்திச் சென்று முடிவிலும் பேரன் பேத்திகளோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக முடித்த துரை செல்வராஜ் சகோதரருக்கு பாராட்டுடன் வாழ்த்துக்கள். அருமையான கதை தந்தமைக்கு நன்றிகளும்.. பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  20. பலருடைய நினைவலைகளை கிளறி விட்டிருக்கிறது இந்த கதை. ஆனால் இவ்வளவு பாசத்தோடு பழகிய தோழியரோடு நட்பை தொடர முடியாதது ஒரு வருத்தம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      அன்பு நண்பர்கள் எல்லாம் காலச் சூழலில் எங்கெங்கு இருக்கிறார்களோ...

      அவர்களை நினைக்கும்போது என் மனமும் கலங்கும்...

      நீக்கு
    2. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி....

      அன்பு நண்பர்கள் எல்லாம் காலச் சூழலில் எங்கெங்கு இருக்கிறார்களோ...

      அவர்களை நினைக்கும்போது என் மனமும் கலங்கும்...

      நீக்கு
  21. இங்க .. பாருங்க புள்ளைகளா....
    நீங்க பள்ளிக் கூடத்துல படிக்கிறதெல்லாம் படிப்பு இல்லை..
    இந்தப் பாசந்தான் படிப்பு!.. இந்த நேசந்தான் படிப்பு!..
    இத நல்லா படிச்சிக்குங்க.. விட்டுடாம கெட்டியா புடிச்சுக்குங்க!...//

    ஆமாம் துரை அண்ணா இதுதான் வாழ்க்கையே! அருமையான வரிகள். வீரையனுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் நெகிழ்ச்சி....

    காலையில் இதை பப்ளிஷ் பண்ணியும் ...கமென்ட் பப்ளிஷ் ஆகாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா..
      தங்களுடைய வருகையால் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  22. சின்ன சின்ன உரையாடல் களுடன் பின்னப்பட்ட அழகிய கதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி..
      கருத்துரைக்கு நன்றி..

      நீக்கு
  23. ஆஆஆஆவ்வ்வ்வ் இன்று துரை அண்ணன் ஸ்ரோரியோ.... நான் புதன்வரை இம்முறை படு பயங்கர.......... இடைவெளியை நிரப்பவும்:)...

    அதனால எங்கும் வர முடியல்ல... நைட் எப்படியும் எல்லா வீட்டுக்கும் போக ட்ட்ட்ட்ட்ட்ட்றை பண்ணுவேன்ன்ன்ன்...

    அதிரா வந்து ஸ்ரோரி / ஸ்டோடி படிக்காட்டில் துரை அண்ணன் கவலைப்படுவார் என ஓடி வந்தேன்ன்ன்ன்ன்:)... ஆனா அஞ்சுவோ கீசாக்காவோ கீதாவோ நெ டமிலனோ இல்ல 3ராமோ படிக்காட்டில் கவலைப்பட மாட்டார்ர்ர்ர்ர்ர்ர்:)....

    ஹையோ ஆரது குண்டுபோல குறுக்க நிக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கொஞ்சம் அரக்கி நில்லுங்கோ மீக்கு பெல் அடிக்கப்போகுதூஊஊஊஉ மீ ரன்னிங்க்:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //குண்டுபோல குறுக்க நிக்கிறது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) //
      ஹலோ மியாவ் இதுக்குதான் கண்ணாடி முன்னாடி நின்னு கமெண்ட் போடாதீங்கன்னு சொல்றது :) அடந்த குண்டு நீங்கதான்

      நீக்கு
    2. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதுக்குத்தான் அம்மம்மா அடிக்கடி ஜொள்றவ பொல்லுக்குடுத்து அடி வாங்கக்கூடா அதிரா என :)... சே சே பேசாம வைட் போர்ட்டைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம் மீ:)..

      நீக்கு
  24. எனக்கு மீண்டும் பள்ளிக்கூடம் போயிட்டு வந்த உணர்வு .நாங்களும் இப்படித்தான் எல்லாருடனும் பகிர்ந்து சாப்பிட்டிருக்கோம் .கூடவே காக்கை அணில்களும் வந்து உணவு கேட்கும் அதுங்களுக்கு கொடுப்போம் .
    கள்ளம் கபடற்ற பருவம் எவ்ளோ இனிமையான நாட்கள் அவை .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இன்னும் கதை படிக்கவே இல்லை... நைட்தான் படிக்கப்போறேன்ன்ன்ன் என எல்லோருக்கும் ஜொள்ளிக்கொள்கிறேன்ன்ன்ன்ன்ன்:)...

      நீக்கு
  25. /நீங்க பள்ளிக் கூடத்துல படிக்கிறதெல்லாம் படிப்பு இல்லை..
    இந்தப் பாசந்தான் படிப்பு!.. இந்த நேசந்தான் படிப்பு!..
    இத நல்லா படிச்சிக்குங்க.. விட்டுடாம கெட்டியா புடிச்சுக்குங்க!...//
    இதேதான் எங்கப்பாவும் அடிக்கடி சொல்வார் எப்பவும் இந்த அனுபவம் கிடைக்காது .நல்ல நட்புக்கள் மிக அவசியம் என்பார் .

    ஒரேயொருமுறை 7 ஆம் வகுப்பில் ரோமன் கத்தோலிக்க என்று என் நண்பியைப்பற்றி சொல்லும்போது சொன்னேன் அப்பவே அப்பா திட்டினார் இப்படி பிரிவினை வார்த்தைகள்லாம் பேசக்கூடாதுன்னு .எதுவும் தெரியாமல் வளர்ந்தோம் வளர்க்கப்பட்டோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏஞ்சல்...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      வளர்ப்பு முறை சரியாக இருந்தால் சங்கடங்கள் இல்லை.. சஞ்சலமும் இல்லை..

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  26. அழகான கதை. பலரது பள்ளி நாட்களை நினைவுபடுத்தும் கதை. அந்த வயதிற்கேற்ற அழகான குறும்பும் மகிழ்ச்சியும் ததும்பும் உரையாடல்கள். அதே சமயம் தன் சக தோழியின் வருத்தத்தில் பங்கெடுத்து அவளுக்கு உணவு பகிர்வது என்று அருமையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை.

    வீரையனுக்கு கண்ணில் நீர் துளிர்த்தது போல எங்கள் கண்ணிலும் தான்.

    நான் வேலை செய்த பள்ளியிலும் கூட இப்படியான குழுக்கள் உண்டு இப்போதெல்லாம் பள்ளியில் இருக்கும் போதே சமூகவலைத்தளத்தில் குழு அமைத்துக் கொண்டு தொடர்பில் இருந்தும் வருகிறார்கள். இப்போதெல்லாம் முன்பு போல் நட்புகளைத் தேட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.

    அருமையான கதைக்கு வாழ்த்துகள் ஸார்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  27. ஆஆஆவ்வ்வ்வ் படிச்சிட்டேன் மிக அழகிய... ஓட்டோகிராப்...
    மொபைலில் பார்க்க பெரிய கதைபோல தெரிஞ்சுது, பயத்தில படிக்காமல் விட்டேன்.. இப்போ படித்தால் குட்டிக்கதை...

    கதைபோல இல்லாமல் உண்மை நிகழ்வுபோலவே இருக்கு, துரை அண்ணன் எழுதிய விதம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அதிரா..
      தங்கள் வருகை மகிழ்ச்சி..

      தீர்க்க தரிசிக்குத் தெரியாமல் இருக்குமா?..

      உண்மையும் இதற்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறது...

      மகிழ்ச்சி.. நன்றி.. ம்

      நீக்கு
  28. செம...

    ஆஹா... அய்யா கதை சொல்லும் விதமே அழகுதான்.

    அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் குமார்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  29. அருமையான கதை
    பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களன்பின் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!