வெள்ளி, 27 செப்டம்பர், 2019

வெள்ளி வீடியோ : கல்யாணப்பெண்ணாயிரு அங்கே கண்ணாடி முன்னால் இரு



படம் வெளிவந்த ஆண்டு 1977.  கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் விஜயகுமார்- சுஜாதா நடித்த திரைப்படம்.

படத்தின் பெயர் 'என்ன தவம் செய்தேன்'.

இதில் இரண்டு நல்ல பாடல்கள் உண்டு.  எம் எஸ் விஸ்வநாதன் இசை.



பாடல்கள் எழுதியது யார் என்று தெரியவில்லை.   கண்ணதாசனாய் இருக்கலாம், அல்லது வாலியாய் இருக்கலாம்.

இதில் இரண்டு பாடல்கள் ரசிக்கத்தக்கவை.  முதல் பாடலை கே ஜே யேசுதாஸும் வாணி ஜெயராமும் பாடியிருக்கிறார்கள்.



கேள்வி பதில் பாணியில் அமைந்துள்ள பாடல்.  நாயகி தன் மனதை நாயகனுக்கு சொல்ல முயற்சிக்கிறாள்.  நாயகன் புரியாதது போல பதில் மட்டும் தருகிறான்.  அவன் மனம் வேறிடத்தில் லயித்திருக்கிறது என்பது இன்னொருபாடலைப் பார்த்தால் விளங்கும்!  நான் படம் பார்க்கவில்லை.  பாடல்களை மட்டும் ரசிப்பேன்.

கேள்விகள் வாணிஜெயராம் குரலில்.  பதில்கள் கே ஜே யேசுதாஸ் குரலில்.



அந்தியில் சந்திரன் வருவதேன்? 
அது ஆனந்த போதையைத் தருவதேன் 

சந்திரன் வருவது ஒளிதர 
அது தமிழுக்கு ஆயிரம் கவிதர 

இலைகளில் இளந்தென்றல் படிப்பதென்னவோ 
அது இலையென்று தெரியாத குழப்பமல்லவோ 
மலைகளில் வெண்மேகம் விழுவதென்னவோ 
அது மரியாதைப் பொன்னாடை தருவதல்லவோ 

பெண்மனம் ஒன்றோடு இணைவதென்னவோ 
அது பிழையாக இருந்தாலும் இருக்குமல்லவோ 
சம்மதம் தருவதில் தொல்லை என்னவோ?
அதைத் தானாகக் கேளாது பெண்மையல்லவோ 

தலைவியின் சந்தோஷம் தலைவன் அல்லவோ 
அது இருபேரும் நினைத்தால்தான் பிறக்குமல்லவோ 
இதுவரை என் கேள்வி புரிந்ததல்லவோ 
சரி இத்தோடு உன் கேள்வி முடிந்ததல்லவோ 





அடுத்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.   வழக்கம் போல இரண்டு பாடல்களில் முதலிடம் பெறுவது.



எஸ் பி பி  - பி . சுசீலா குரலில் இனிய பாடல்.  எஸ் பி பி யின் குரலில் வழக்கம்போல ஏகப்பட்ட குழைவுகள், நெளிவுகளை ரசிக்கலாம்.

ஏதோ ஒரு நதியில் நான் இறங்குவதைப்போலே 
ஏதோ ஒருஇன்பம் நீ அருகிலிருந்தாலே 
சிங்காரச் செம்மாதுளை உந்தன் 
செந்தூரம் காட்டும் கலை 
பொழுது செல்ல பொழுது செல்ல 
கல்யாணப் பந்தலிடும் கலைச்சோலை 

கன்னம் சிறுகுழிவிழ சிரிக்கின்ற வண்ணம் 
மின்னும் இதழ் பறவைகள் குடிக்கின்ற கிண்ணம் 

தாலாட்டு பூச்சூட்டு நான் உந்தன் சொந்தம் 
ஆராத்தி நீ காட்டு நானுந்தன் பந்தம் 

என் வீட்டு பச்சைக்கிளி 
இன்று என் தோளில் தொத்தும் கிளி 
இடமிருந்து வலமிருந்து 
என்னோடு வட்டமிடும் வண்ணக்கிளி 

மங்கை தினம் கலகலவென வரும் கங்கை 
மன்னன் தினம் குழலிசை வடிக்கின்ற கண்ணன் 
ராகங்கள் பாவங்கள் நான் கண்டேன் இங்கே 
மேளங்கள் தாளங்கள் ஊர்வலம் அங்கே 
கல்யாணப்பெண்ணாயிரு 
அங்கே கண்ணாடி முன்னால் இரு 
கடவுளுக்குநன்றி சொல்லி எந்நாளும் 
அன்பு கொண்ட கண்ணாயிரு 


52 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
    இந்த வெள்ளி அனைவருக்கும் அன்னையின் அருளோடு
    விடியட்டும்.
    இரண்டு பாடலுமே கவிதையான கவிதை.
    மீண்டும் கேட்டுவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே
    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    இன்றைய வெள்ளி பாடல்கள் மிக அருமையாக இது வரை அறியாத பாடல்களாக இருக்கின்றன. பாடலின் வரிகள் நன்றாக உள்ளது. படம் என்னவென்று தெரியவில்லையே..? பாடல்களை முழுதாக கேட்டு விட்டு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...

      இனிய பிரார்தனைகளுக்கு நன்றி. 

      ஓ... படம் பெயர் சொல்ல மறந்து விட்டேனோ!

      படத்தின் பெயர் "என்ன தவம் செய்தேன்"

      நீக்கு
  3. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  4. இரண்டு பாடல்களும் நன்றாக இருக்கிறது கேட்டு இருக்கிறேன்.
    இரண்டாவது பாடல் இனிமை.
    படம் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் படம் எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று தெரியவில்லை!   ஆனால் பாடல்கள் அருமையாய் இருக்கின்றன. நன்றி அக்கா.

      நீக்கு
  5. பழைய இசைக் கூட்டணிகளான MSV மற்றும் கண்ணதாசன் அல்லது வாலி அளித்த பெரும்பாலான பாடல்கள் காலத்தை கடந்து நினைவில் நிற்பவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.  இன்னமும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி கூட்டணி பிரியாமல் இருந்திருந்தால்  இன்னமும் கூட நன்றாயிருந்திருக்கும்.

      நன்றி ஜோஸப் ஸார்.

      நீக்கு
  6. துரை செல்வராஜூ ஸார் எங்கே இரண்டு நாட்களாய்க் காணோம் என்று தெரியவில்லை.   நேற்றும் வரவில்லையே அவர்?

    பதிலளிநீக்கு
  7. இரண்டும் கேட்ட பாடல்களே இதில் இரண்டாவது பாடல் அடிக்கடி கேட்ட ஸூப்பர் பாடல்.

    பதிலளிநீக்கு
  8. நேற்று வியாழக்கிழமை காலை எழும்போது கொஞ்சம் தாமதமாகி விட்டது...

    வேலைக்கு ஓடி - அங்கே கணினியில் தான் கண்டேன் வியாழன் விருந்தினை...

    மாலை அறைக்குத் திரும்புவதற்குள் ஒரு கதை...
    என்னை எழுது.. எழுது.. என்றது...

    சமையல் முடித்த பின் கதையையும் வடிவமைத்து விட்டு தூங்கியெழுந்து
    இதோ இன்று காலையில் அந்தக் கதையைத் தங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன்...

    புரட்டாசி அல்லவா...

    அறைக்குத் திரும்பி பிறகு தான் சாப்பாடு...
    சமையலை முடித்து விட்டு வருவதற்குள் இணையம் இழுவையாகி விடுகின்றது..

    இந்த வாரம் எந்தப் பதிவும் தரவில்லை... கவனித்திருப்பீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியாழக்கிழமைக்கான  கமெண்ட்ஸ் இனிமேல்தானா?!!!   (விடமாட்டோமே)

      கதை வந்தது. வாசகர்களுக்கு அந்த அருமையான கதை படிக்கக்கிடைக்க நாட்களாகும் என்கிற வருத்தம் எனக்கும் இருக்கிறது.

      ஆமாம்..   உங்களிடமிருந்து பதிவொன்றும் இல்லை என்பதை கவனித்தேன்.

      நீக்கு
    2. >>> கதை வந்தது. வாசகர்களுக்கு அந்த அருமையான கதை படிக்கக் கிடைக்க நாட்களாகும் என்கிற வருத்தம் எனக்கும் இருக்கிறது..<<<

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. இன்றைய பாடல்களைக் கேட்டு இருக்கிறேன்.. ரசித்த பாடல்கள்...
    ஆனாலும் வெகு நாளாயிற்று..

    படம் பார்த்ததில்லை...

    பதிலளிநீக்கு
  10. நல்ல பாடல்கள். பெரிதாக கேட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    முதல் பாடல் கேட்ட நினைவில்லை. ஆனால் இப்போது கேட்டதில் நன்றாக உள்ளது. இந்த மாதிரி கேள்வி பதிலாக நிறைய பாடல் அந்தக்கால திரைப்படங்களிலிருந்தே வந்துள்ளது என நினைக்கிறேன். "நீல மலர்கள்" என்றொரு படத்தில் கூட இது போல் ஒரு பாட்டு வரும். (ஸ்ரீ தேவி, கமல் பாடுவது)

    இரண்டாவது பாடல் கேட்கும் போது ரேடியோவில் கேட்ட நினைவு வந்தது. இனிமையான பாடல். மீண்டும் வெகு நாட்களுக்குப்பின் கேட்டு ரசித்தேன். படம் பார்த்ததில்லை. எனக்கு சுஜாதாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...
      நீங்கள் சொல்லும் பாடல் "இது இரவா பகலா?  நீ நிலவா பிறையா?"

      அதுவும் கே ஜே யேசுதாஸ்தான். வாணி ஜெயராம்தான்!

      ரசித்ததற்கு நன்றி கமலா அக்கா.

      நீக்கு

    2. //நீ நிலவா பிறையா?"//

      *திருத்தம்  :

      அந்த வரி "நீ நிலவா கதிரா" என்று நினைக்கிறேன்!

      நீக்கு
    3. நீ சட்னியா.. சாம்பாரா?... என்றெல்லாம் இப்போது பாடல்கள் வருகின்றன...

      இல்லாவிட்டால்...

      இது இடுப்பா... துடுப்பா?... என்று எழுதினால் சரியாகி விடுகிறது...

      காலக் கொடுமையடா கந்தசாமி!...

      நீக்கு
    4. 'என் சமையலறையில்' பாடல்நிறைய பேருக்குப் பிடிக்கும். ஆனால் எனக்குப் பிடிக்காது.   ஆனால் இன்றைய பாடலும்,  கமலா அக்கா சொல்லி இருக்கும் பாடலும் நன்றாயிருக்கும்.  பழைய பாடல் ஒன்று நினைவிருக்கிறதா?  "பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ..   பூவிலே சிறந்த பூ ன்ன பூ?" 

      நீக்கு
    5. //பூவிலே சிறந்த பூ என்ன பூ?" // - வேற என்ன? குஷ்பூ தான்னு பிற்காலத்துல கவிஞர்கள் எழுதியிருக்காங்களே

      நீக்கு
    6. >>> பூவிலே சிறந்த பூ - குஷ்பூ!..<<<

      நெல்லைத் தமிழனா.. கொக்கா!?

      செவிட்டில் அறைந்த மாதிரி பதில்!...

      நீக்கு
    7. "இது இரவா பகலா நீ நிலவா கதிரா" என்ற அந்த ஆரம்ப வரிகள் எனக்கு மறந்து விட்டது. அதே போல் வறுமையின் நிறம் சிவப்பில், கமல், ஸ்ரீ தேவி பாடும் "சிப்பி இருக்குது" பாடலும் நன்றாக இருக்கும்.

      நீங்கள் சொல்லியிருக்கும் "பூ பூவா பூத்திருக்கும்" அதுவும் நல்ல ரசனையான பாடல். அதுவும் எனக்கும் பிடிக்கும். அது சரோஜா தேவி, ஜெமினி பாடும் பாடல் என நினைக்கிறேன். அது "பூவிலே சிறந்த பூ அன்பு" என்ற பதத்தில் வரும்படியாக அமைந்திருக்கும்.

      "பூவிலே சிறந்த பூ குஷ்பூ" இது அந்த வரிகளின் இப்போதைய நிலைபாடு."குஷ்புவிடம் கேட்டால் அப்போ நான் பிறக்கவேயில்லை வாதிடுவார்."

      பழைய கால ஒரு படத்தில், (அந்த படமும் நினைவில்லை.) மக்கள் திலகமும், கலைவாணரும் இப்படி கேள்வி பதிலாக ஒரு பாடல் பாடுவார்கள். அதுவும் கருத்துள்ளதாக இயற்றியிருப்பார்கள்.

      வானம்பாடி என்ற படத்தில் தேவிகாவும், எஸ். எஸ். ஆரும் சேர்ந்து பாடும் ஒரு பாடல். (சட்டென என் டியூப் லைட்டின் நினைவில் வரவில்லை) இப்படி நிறைய பாடல்களை இன்று நினைவுக்கு அருகில் கொண்டு வந்த இன்றைய வெள்ளிப் பாடலுக்கு நன்றி.

      நீக்கு
    8. பிறக்கவேயில்லை என வாதிடுவார்.

      நீக்கு
    9. வறுமையின் நிறம் சிவப்பு பாடல் கேள்வி பதில் டைப்பில்ல்லையே கமலா அக்கா? மற்றபாடல்கள் ஓகே..   எம் ஜி ஆர் என் எஸ் கிருஷ்ணன் பாடல் எனக்கும் நினைவிருக்கிறியாது.   ஆனாலும்,
      இந்த இரண்டு பாடல்கள் மட்டுமே ரசனை!  (எனக்கு)

      நீக்கு
    10. குஷ்பூ என்று சொன்னால் தப்பூ!

      நீக்கு
  12. இரண்டு பாடல்களும் நல்லா இருக்கு. இரண்டாவது பாடல் நிறைய தடவை கேட்டமாதிரி (சின்ன வயதுல) இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நெல்லைத்தமிழன்.  இரண்டாவது எஸ் பி பி யின் ஸ்பெஷல்களில் ஒன்று!

      நீக்கு
  13. கேட்டேன். Poor audio quality. முன்பு கேட்டமாதிரி நினைவில்லை.
    நிஜமான இளமையில் ஹீரோ, ஹீரோயின்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீடியோ குவாலிட்டியும் மட்டம்தான் ஸார்...    ஆனால் ஆடியோ அவ்வளவு மோசமில்லை என்று நினைக்கிறேன். நீங்கள் முதல் பாடலைச் சொல்கிறீர்களோ...    இரண்டாவது பாடல் கேட்கவில்லையோ...

      நீக்கு
    2. வீடியோ க்வாலிட்டி ஓஹோ என நான் சொல்லவில்லை!
      முதல் பாடல் ஆடியோ மோசம். இரண்டாவது பரவாயில்லை.

      நீக்கு
    3. பாட்டின் குவாலிட்டி பற்றி ஒன்றும் கருத்து இல்லையா சாரே...!!!

      நீக்கு
    4. இரண்டாவது பாட்டை மீண்டும் கேட்டேன்! எஸ்பிபி-பி சுசீலா காம்பினேஷன் அருமையாக இருக்கிறது. இனிமை.
      நன்றி.

      நீக்கு
    5. நன்றி ஸார். 

      மிரட்டி அபிப்ராயம் வாங்கியதற்கு மன்னிக்கவும்!!

      நீக்கு
  14. இரண்டாவது மிக அழகான இசை. எஸ்பிபி சுசீலா இணை மிக் அருமை. பாவம் சுஜாதா. புடவை அணியாவிட்டால் கஷ்டப் படுவார்.
    இசை நதி போலவே மனதோடு ஓடுகிறது.
    மிக மிக நன்றி. ஸ்ரீராம்.
    தாலாட்டுதே வானம் பாடலும் கூடவே ஓடுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசை ஒரு நதி போலவே...

      ஆமாம் வல்லிம்மா...  ஏதோ ஒரு நதியில் இறங்குவது போல...  கவர்ச்சியான இந்த வரியை வைத்து பாலகுமாரன் ஒரு கதை எழுதினர் - மோனா மாத இதழில்.  அதன் பின்புறம் சுப்ரமணியராஜு 'எங்கோ ஒரு இரவில்' என்று ஒரு கதை எழுதி இருந்தார். கவர்ச்சியான வரிகள்.

      அந்த நதியில் இறங்கும் அமானுஷ்யத்தை இளையராஜாஒரு பாடலில் காட்டியிருப்பார்.  

      நீக்கு
  15. 77 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்தோம். ஆதலால் தமிழ்நாட்டு நிகழ்வுகள் ஏதும் தெரியாது. இப்படி எல்லாம் படங்கள் வந்திருப்பதையும் அவற்றின் சிறப்பான பாடல்களையும் உங்க மூலமே அறியக் கிடைக்கிறது. இதெல்லாம் பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லை. தி/கீதா இருந்தால் ராகங்களைப் பிரித்து மேய்ந்திருப்பார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் ராகத்தைப் பிரித்தேன். மேயமுடியவில்லை!   ஹிஹிஹி...     கீதா அக்கா...  ஆக, பாட்டு உங்களுக்கு பிடிக்காத பாட்டில்லை என்று தெரிகிறது!

      நீக்கு
  16. ஆஆஆஆ இம்முறையும் 2 வது பாட்டுதான் எனக்கும் அதிகம் பிடிச்ச பாடல், முதலாவதும் தெரியும்.

    ஆனா நான் நினைச்சிருந்தேன்... சிவாஜி அங்கிள் நடிச்ச ஒரு சோகப் பம் பெயர் “எங்கிருந்தோ வந்தாள்”... அந்தப் படத்தில்தான் இந்த ஏதோ ஒரு நதியில் பாட்டு வந்ததாக இன்றுவரை நினைச்சிருந்தேன்... என் பக்கமும் இப்பாட்டைப் போட நினைச்சிருந்தேன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்:)...

    ஆனா படப் பெயர் வேறு சொல்றீங்க.. நான் தப்பா நினைச்சுக் கொண்டிருந்திருக்கிறேன் போலும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா...

      உங்க பக்கமும் போட நினைத்திருந்த பாடலா?  அடடே...    எங்கிருந்தோ வந்தாள் படத்தில் எஸ் பி பி, யேசுதாஸ் குரலில் பாடலே கிடையாது.

      நீக்கு
    2. ஆஆஆ நான் பாடுவது யாரெனக் கவனிப்பதில்லையே:)... வரிகளைத்தான் ரசிப்பேன்ன்ன்:)... அதனால படம் மாறிப்போச்ச்ச்ச்:)... ஹா ஹா ஹா

      நீக்கு
  17. இனிமையான பாடல்கள்... கேட்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!