புதன், 13 நவம்பர், 2019

புதன் 191113:: மறதியினால் அவதிப்பட்டதுண்டா?


கீதா சாம்பசிவம் : 

1) இந்திரா காந்தி, நேரு போன்றோர் அரசுப் பணத்தில் செலவு செய்ததெல்லாம் ஏற்றவர்கள் இப்போது மோதி சொந்தப் பணத்தில் உடைகள் வாங்கி அணிவதை விமரிசிப்பது ஏன்?


# அவர்கள் விஷயத்தில் பெரிய மாற்றம் திடீரென்று வரவில்லை எனச் சொல்லலாம்.

& அதை ஏற்றவர்கள்தான் இப்போ விமரிசிக்கிரார்களா? மேலும் அப்போ காங்கிரஸ் மட்டுமே மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்துகொண்டு இருந்தது என்பதால், யார் செலவு என்பதை எல்லாம் யாரும் யோசித்துப் பார்த்தது இல்லை. வேறு கட்சி ஆட்சிக்கு வந்தபின்தான் மக்கள் இதைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாம் என்று தெரிந்துகொண்டுள்ளனர். 

2) ஒரு நாட்டின் பிரதமர் என்னும் முறையில் ஓரளவுக்குத் தரமான ஆடையை அவர் அணியவேண்டும் என்பதைப் பலரும் உணராதது ஏன்?


 # மிக அதிக ஆடம்பரம் என அவர்கள் எண்ணக் கூடும்.

& குறை சொல்லவேண்டும் என்று நினைத்துவிட்டால் ஏதோ ஒரு காரணம். அவ்வளவுதான். 

3) காவி என்பது பொதுவானதொரு நிறம். நம் நாட்டில் ஆதிசங்கரர் காலத்துக்கு முன்னிருந்தே இருந்து வந்திருக்கிறது. அப்படி இருக்கையில் இப்போது மட்டும் காவி நிறத்தைப் பார்த்து எல்லோரும் கலங்குவது ஏன்? புத்த பிக்ஷுக்கள் உள்படக் காவி/மஞ்சள் சேர்த்த காவி நிறத்தில் உடை அணிவது உண்டு. அப்படி இருக்கையில் அதை ஒரு கட்சிக்கு ஏற்றிவிட்டு ஏன் கலங்க வேண்டும்?

# எதிர்பாராமல் காவிக் கொடிக் கட்சி செல்வாக்குப் பெறுவது உறுத்துகிறதோ ?

& உண்மையில் சொல்லப்போனால் எனக்குக் காவிக் கலரும் பிடிக்காது; கருப்பும் பிடிக்காது. இப்போ காவிக் கலரைக் கண்டு யாரும் கலங்குவதுபோல் எனக்குத் தோன்றவில்லை. 

4) நம் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் பேசிய சங்கரரும், ராமாநுஜரும் இந்தியா முழுக்கச் சுற்றி அநேக சீடர்களைச் சம்பாதித்ததோடு இருவரையும் காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிலும் உள்ள மக்கள் தங்கள் குருவாக வணங்குகிறார்கள். வடமாநிலங்களில் ஆதிசங்கரருக்கும், ராமாநுஜருக்கும் உள்ள மரியாதையையும், மதிப்பையும் கண்டிருக்கிறேன். அங்கே உள்ள சாமானிய மக்கள் கூட இருவரையும் குரு என வணங்குகிறார்கள். அப்படி இருக்கையில் ஏன் வடக்கு, தெற்கு பேதம்?

 # அதன் அடிநாதம் பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு.

5) இப்போதைய தமிழ்நாட்டில் அப்படி ஒருத்தர் இன்னும் ஏன் தோன்றவில்லை என வருந்துவேன்! ஆனால் இருப்பவர்களும் குரு என வட மாநிலங்களில் வணங்கும் சங்கரரையும், ராமாநுஜரையும் ஏன் மதிப்பதில்லை? ராமாநுஜருக்காவது வைணவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் சங்கரர்?



#  ~௸ ௸


துளசிதரன்:

1. மறதி என்பது நாம் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் நிகழ்வது என்று நான் நினைப்பதுண்டு. பொருட்கள் உட்பட. உங்கள் அனுபவம்?


 # நான் மறதி மன்னன் தீவிர ஆதரவாளன்.

& focus என்பது முக்கியம். நாம் எதைச் செய்தாலும் அதில் முழு கவனத்துடன் செய்தால், மறதி வராது. ஒரு செயலை செய்யும்பொழுது, உடல், மனம், கவனம் எல்லாமே அதில் இருக்கவேண்டும். 

பொருட்கள் விஷயத்தில், A place for everything and everything in its place என்பதை எப்பொழுதும் பின்பற்றுபவன் என்பதால், எதை எங்கே வைத்தோம் என்று தடுமாறியதில்லை. 






2. ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது வேறு ஒன்றை மனம் நினைப்பதாலும் மறதி ஏற்படும் அதாவது கான்செட்ரேஷன் இல்லாமை என்பது சரியா?


 # அதுவும் ஒரு காரணம்.

& ஆம். அதே. சரியே! 
கைகளால் காய்கறி வெட்டிக்கொண்டு, கண்களால் அடுப்பில் இருக்கும் பால் பொங்குகிறதா என்று பார்த்துக்கொண்டு, வாயால் தோள்பட்டையில் இடுக்கிக்கொண்ட ஃபோனில் பேசிக்கொண்டு, இன்றைக்கு என்ன தேதி, என்ன கிழமை என்று யோசித்துக்கொண்டிருந்தால் .......   என்ன ஆகும்? பால் பொங்கும் நேரம் கை விரலை நறுக்கிக்கொண்டு, மொபைலை எங்கேயாவது தூக்கிப்போட்டு, அமளிதுமளிகள் முடிந்தபிறகு மொபைலை எங்கே விட்டோம் என்பது மறந்துபோகும். 


3. நாம் பள்ளியில், கல்லூரியில் படிக்கும் போது தேர்வில் சில பாயின்ட்ஸ் எழுதாமல் விட்டு விடுவோம். இது அந்தப் பாயின்ட்ஸை முக்கியமாகக் கருதாமல் நிகழ்வதா? அல்லது நம் மூளைத் திறனைப் பொருத்ததா?


# இப்போது எதற்கு அந்தக் கவலை ?

& தேர்வில் கேட்கப்படும் கேள்விகளில், எவ்வளவு மதிப்பெண் கேள்வி என்பதை பார்த்துக்கொள்வேன். பத்து மதிப்பெண் கேள்வி என்றால், எண்கள் குறிப்பிட்டு, பத்துப் பாயிண்டுகளுக்குக் குறைவில்லாமல் எழுதுவேன். ஐந்து மதிப்பெண் என்றால், ஒன்று முதல் ஐந்து வரை எண் எழுதி, அழகாக எழுதிவிடுவேன். AMIE பரிட்சையில், ஒருமுறை What are the advantages of powder metallurgy ? என்று ஒரு இருபது மதிப்பெண் கேள்வி கண்டேன். சும்மா விடுவேனா ? இருபது பாயிண்டுகள் பொளந்து கட்டினேன். (Examination hall supervisor அதை என் பின்னால் நின்று பார்த்து, படித்து, அசந்துபோய்விட்டார். )  powder metallurgy பற்றி அவ்வளவு தெரியும் என்று எனக்கே அதுவரை தெரியாது!  
ஆக, தேர்வில் விடை எழுதும்போது எந்த பாயிண்டும் மறக்காது! (மறந்தாலும் அது, விடைத்தாள் திருத்துபவருக்கு தெரியாமல் போய்விடும்!)                      

4. நம் மறதியினால் நம்மைச் சுற்றி இருப்பவர்க்கு ஏதேனும் பாதிப்பு நிகழும் வாய்ப்பு உண்டு. அல்லது அவர்களின் மறதியினால் நமக்கு. அப்படியான அனுபவங்கள் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா?


 # இருந்திருக்கும். மறந்து விட்டது.

& மற்றவர்களின் மறதி சில சமயங்களில், என்னை பாதித்தது உண்டு. ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தியது இல்லை. 

=======================================
காடராக்ட் 5.

சரி ... ரொம்ப இழுக்காம சுருக்கமா சொல்லிடறேன். 

நான் மூன்றாவதாக பார்த்த டாக்டர், அறுவை சிகிச்சை செய்ய நாள் குறித்தார். 

ஆனால், அங்கே நாங்கள் போகவிருந்த நாளுக்கு முதல் நாளில், என் பையனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, சிகிச்சையை அவர் செய்தாலும், வேறு ஒரு ஆஸ்பத்திரியில் செய்யப்போவதாக தெரிவித்தார். அந்த காஜல் (அகர்வால் !) ஆஸ்பத்திரியில்தான் நவீன கருவிகள் உள்ளதால், அங்கே சிகிச்சை என்று சொன்னார். 
                    
    

அறுவை சிகிச்சை குறிக்கப்பட்ட நாளில், காலையில், தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து வரவேண்டும் என்றார். 'அது என்ன சம்பிரதாயம்' என்று கேட்டேன். 

"சம்பிரதாயம் இல்லை - அறுவைக்குப்  பிறகு இரண்டு வாரங்கள் நீங்க தலைக்கு, முகத்துக்கு எண்ணெய் / தண்ணி ஒன்றும் காட்டக் கூடாது. அதனால் சொன்னேன்" என்றார். 

அவர் சொன்னபடியே, எண்ணெய் குளித்து, பொட்டிட்டு, புத்தாடை அணிந்து சென்றேன். 

மதியம் ஒரு மணி சுமாருக்கு சென்று சேர்ந்தோம். அங்கு உள்ள பணியாளர் ஒருவர் எந்தக் கண்ணுக்கு அறுவை சிகிச்சை என்று கேட்டார். இடது கண் என்றேன். இடது கண்ணுக்கு மேலே ஒரு ஸ்டிக்கரை ஒட்டிவிட்டுச் சென்றார். 

கொஞ்சம் நெர்வஸ் ஆகத்தான் இருந்தது. வீட்டில் சமைக்காமல் வேறு இடத்திலிருந்து வந்திருந்த காரச் சாப்பாடு வேறு வயிற்றுக்குள் கடமுடா செய்து வாயுப் பிரச்னை, தலைவலி என்று ஏதேதோ கிளப்பியது. 

இரண்டு உள்ளங்கைகளையும் மசாஜ் செய்து கொஞ்சம் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்தேன். 

அறுவை சிகிச்சைக்கு முன்பாக ஒரு டாக்டர், தனியாக அறைக்குக் கூப்பிட்டு, அறுவை சிகிச்சையின்போது என்ன நடக்கும், நான் என்ன செய்யவேண்டும் என்று விவரமாகக் கூறினார். ஒரு விளக்கு (பல்ப் )  இருக்கும், சிகிச்சை செய்யப்படும் கண்ணால் அதையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். சிகிச்சை நடக்கும்பொழுது ஏதேனும் சொல்லவேண்டும் என்றால், கை விரலை மட்டும் உயர்த்தவேண்டும்.  

ஒரு நர்ஸ் வந்து தலைக்கு ஒரு பாலிதீன் cap போட்டுவிட்டு, ஒரு நீண்ட நீலநிற அங்கிக்குள் என் கைகளை விடச் சொல்லி, என் கைகளில் என்னைப்பற்றிய விவரங்கள் கொண்ட பேப்பரைக் கொடுத்து, ஆப்பரேஷன் தியேட்டருக்குள் என்னை ஒரு தள்ளு தள்ளிவிட்டார். 

கதவருகே ஓர் முகமூடி உருவம் என்னைப் பார்த்து, ' வா , வா ' என்று தலை அசைத்தது. பயந்து போனேன். அந்த உருவம், வாயைப் பொத்தியிருந்த முகமூடியை அகற்றி, ' பயப்படவேண்டாம் - நாந்தான் உங்கள் கண்ணை இதற்கு முந்தைய ஆஸ்பத்திரியில் பரிசோதித்த டாக்டர் ' என்று சொன்னார். 

பிறகு ஒரு பெஞ்சில் கொஞ்ச நேரம் உட்கார வைக்கப்பட்டேன். 

===========================================

அடுத்த வாரம் மீதி. 

===========================================




81 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. முப்பதே செகண்டில் லேசரில் கரைக்கப்படுகிற காடராக்ட் ஆபரேஷனுக்கு ஐந்துவாரம் முடிந்து ஆறாவது வாரமும் தொடரும் போட்டால் எப்படி கௌதமன் சார்? மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனை பற்றிக் கேள்விப்பட்டது இல்லையோ? அங்கே டாக்டர்கள் எத்தனை ஆயிரங்கள் உங்கள் பர்ஸிலிருந்து கரைப்பார்கள் என்றெல்லாம் பேசுவதில்லை!

      நீக்கு
    2. அதுக்காக பெங்களூரிலிருந்து, மதுரை வந்து, ஒரு அல்லது இரு வாரங்கள் தங்கி வைத்தியம் பார்த்திருந்தால், ஆபரேஷனுக்கு ஆன செலவு குறைந்திருக்கலாம்; ஆனால், பயண செலவு, தங்குமிடம், உதவிக்கு ஆள் என்று பலமடங்கு செலவு ஆகியிருக்கும். நிற்க. நீங்கள் சொன்ன மருத்துவமனையில்தான் என் சின்ன அண்ணன் காடராக்ட் ஆபரேஷன் செய்துகொண்டார். குறைந்த செலவுதான் என்று சொன்னார்.

      நீக்கு
    3. கௌதமன் சார்!

      டயாபெடிக், வேறு சீரியஸான கோளாறுகள் இல்லாமல் இருந்தால் ஆபரேஷன் முடிந்த மூன்று அல்லது நான்கு மணிநேரத்திலேயே டிஸ்சார்ஜ் ஆகிவிடலாம்.மற்றபடி ஊருக்கே திரும்பி அவர்கள் சொல்கிறபடி தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் கொள்ளாமல் ஒருவாரம், பத்து நாள் அப்புறம் கண்ணில் மருந்து ஊற்றிக் கொண்டாலே போதும். அதிகபட்சம் 45 நாட்கள். ஒரு விஷயத்தைப் பற்றி நீளமாகப் பேசுவதில் காடராக்ட் சிகிட்சை பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் செலவு பற்றியோ சிகிட்சைபற்றியோ வாசிப்பவர்களுக்கு வந்துவிடக் கூடாதென்பதற்காகவே மறுபடியும் இதை எழுதுகிறேன்.

      நீக்கு
    4. சார்! பொறுமை, பொறுமை! ஆரம்பித்ததிலிருந்து இதுவரை, நான் அறுவை சிகிச்சை நடந்த அந்தப் பத்து நிமிட நேரம் பற்றி ஒன்றும் எழுதவில்லை. என்னுடைய அனுபவங்களை, என்னுடைய கண்ணோட்டத்தில் எழுதி வருகிறேன். இதன்மூலம் நான் யாருக்கும், 'கண்புரை ஆபரேஷன் நல்லது' என்றோ அல்லது 'கொடியது' என்றோ அல்லது 'செலவு அதிகம்' என்றோ ஒன்றும் மெசேஜ் கொடுக்க நினைக்கவில்லை. ஒரு நகைச்சுவைக் கட்டுரைத் தொடர். எனக்கும் பொழுதுபோக்கு, படிப்பவர்களுக்கும் பொழுதுபோக்கு. அவ்வளவுதான்!

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...    காலை வணக்கம்.   பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
    2. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  3. //..கதவருகே ஓர் முகமூடி உருவம் என்னைப் பார்த்து, ' வா , வா ' என்று தலை அசைத்தது. பயந்து போனேன். அந்த உருவம்.. //

    என்ன இது, அந்தக்கால ’நாஞ்சில் பி.டி.சாமி’ ரேஞ்சுக்கு போகிறீரே.. திகில் தொடர் தொடங்க ஒத்திகையா இது!

    பதிலளிநீக்கு
  4. புரியுது. காட்டராக்ட் செய்துகொள்ள உங்களை உந்தி உள்ளே தள்ளியது காஜல்தானா ! செலவு கொஞ்சம் ஜாஸ்தியாக ஆகியிருந்தாலும் தோஷமில்லை. தோஷத்தைப் போக்குவது பெண்..

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள், நல்வரவு. எ.பி. திறக்கக் காத்திருந்தேன். ஆனால் உங்க நேரம் ஐந்தேமுக்கால் வரை வரலை. எங்க நேரம் ஆறேகால் அப்போ. அப்புறமாச் சட்னி அரைக்கப் போயிட்டேன். :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்னி - இட்லிக்கா அல்லது தோசைக்கா அல்லது உப்புமாவுக்கா?

      நீக்கு
    2. தோசை. அதுவும் கல் தோசைக்கு. தேங்காய்ச் சட்னி! நம்மவருக்கும், மாப்பிள்ளைக்கும் அதான் பிடிக்கும். அதைத் தவிரவும் எங்க வீட்டில் தக்காளி+கொத்துமல்லிச் சட்னி, தக்காளி+வெங்காயச் சட்னி, கொத்துமல்லி+புதினாச் சட்னி என ஓட்டல் மாதிரி தயாராக இருக்கும். இன்னிக்கும் எல்லாமும் இருந்தது. தேங்காய்ச் சட்னி மட்டும் புதுசாக அரைத்தேன்.

      நீக்கு
    3. தகவலுக்கு நன்றி! என்ன கல் போட்டு தோசை செய்வீர்கள்?

      நீக்கு
    4. கேஜிஜி சார்.. உங்களையும் என்னையும் மாதிரி லோகல்்ஆட்களுக்கா சமையல் பண்ணறாங்க? அம்பேரிக்கா ஆட்களைப்காக்கும்.

      ரத்னக்கல், வைரக்கல் உபயோகிப்பாங்களாக இருக்கும். க்கும். க்கும்

      நீக்கு
    5. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நெ.த. கௌதமன் சார், எல்லோருக்கும் பாரம்பரியம் மறந்து போச்சு! இது அன்னிக்கே அரைத்து, உடனே வார்க்கப்படும் தோசை. தோசைக்கல் சமமாக இருக்கும். உட்குழிந்து இருக்காது. வாய்ப்பாகப் பெண்ணிடம் அப்படி ஓர் தோசைக்கல் இருக்கு. பழைய முறையில் கொஞ்சம் கனமாக மெத்தென்று தோசை வார்த்தேன். எங்க வீட்டில் இதுக்குப் புளி மிளகாய் தான் தொட்டுப்போம். இங்கே சட்னி வகைகள். :) இங்கே அம்பேரிக்காவிலும் தோசைனு கொடுக்கிறாங்களே! நொறுக்கிப் பொடியாக்கித் தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
    6. அமெரிக்காவுல 'நீர்தோசை'தான் விற்கிறார்களா?

      நீக்கு
    7. கிட்டத்தட்ட அப்படித்தான் கௌதமன் சார்.

      நீக்கு
  6. //இப்போ காவிக் கலரைக் கண்டு யாரும் கலங்குவதுபோல் எனக்குத் தோன்றவில்லை.// கேள்விகளுக்கு பதில் சொன்னதுக்கு நன்றி. காவி பற்றிய கேள்விக்கு கௌதமன் சார் அளித்த பதிலில் சமகால நிகழ்வு பற்றி அறியாமல் இருக்காரோனு தோன்றியது. ஆனால் அதை அவர் ஒரு பொருட்டாகக் கருதி இருக்க மாட்டார் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. காஜல் அகர்வால் இப்போக் கொஞ்ச நாட்களாகப் பற்பசை விளம்பரத்திலும் ப்ரூ காஃபி விளம்பரத்திலும் காணோமேனு நினைச்சேன். என்னால் அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய தற்கால நடிகைகளில் நன்கு அடையாளம் தெரிந்தவர் இவர் ஒருத்தர் மட்டும் தான் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. மறதி நல்லது...

    அறுவை சிகிச்சை - திகில் கதை போல...!

    பதிலளிநீக்கு
  9. இந்திரா காந்தி, நேரு போன்றோர் அரசுப் பணத்தில் செலவு செய்ததெல்லாம் //

    இது என்ன புதுக்கதை? இவ்வளவு காலம் கழித்து நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க?

    பதிலளிநீக்கு
  10. இப்போதெல்லாம் சில பெயர்கள் வேண்டிய நேரத்தில்வராமல் பல் இடுக்கில் சிக்கிய ஏதோபோல் தொந்தரவு செய்கிறது ஆனால் அதெ பெயர் நான் நினைக்காத போது வந்து விழும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதுக்கதை எல்லாம் இல்லை. அப்போவே பல தினசரிகள் பெருமையுடன் பீத்திக்கொண்டிருக்கின்றன.

      நீக்கு
  11. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  12. //பொருட்கள் விஷயத்தில், A place for everything and everything in its place என்பதை எப்பொழுதும் பின்பற்றுபவன் என்பதால், எதை எங்கே வைத்தோம் என்று தடுமாறியதில்லை.//

    நல்ல பழக்கம்.
    தேடும் வேலை மிச்சம். நான் இடுக்கியை உணவு மேஜை மேல் கொண்டு வந்து வைத்து விட்டு பின் அடுக்களையில் தேடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், உண்மைதான். பல வீடுகளில் இந்த வகைத் தேடல்களைப் பார்த்ததுண்டு.

      நீக்கு
    2. நானும் இடுக்கியைத் தான் தேடுவேன். கடைசியில் பார்த்தால் நம்மவர் வெந்நீர் போட்டுக்கொண்டு அவருக்குத் தோன்றிய இடத்தில் வைச்சிருப்பார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

      நீக்கு
  13. கதவருகே ஓர் முகமூடி உருவம் என்னைப் பார்த்து, ' வா , வா ' என்று தலை அசைத்தது. பயந்து போனேன்.//

    நன்றாக எங்களுக்கும் பயம் காட்டுகிறீற்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜமாகவே அந்த நேரத்தில் மிகவும் பயந்து போனேன்!

      நீக்கு
  14. /// கதவருகே ஒரு முகமூடி..///

    விடியற்காலையில் படித்து விட்டுச் சிரித்தேன்..

    வேலைக்கு நேரமாகி விட்டது என ஒன்றும் சொல்ல முடியவில்லை...

    எல்லாரையும் கவர்ந்த வரிகள்...

    நல்லவேளை..
    பயத்தில் அலறி வைக்கவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் முகமூடியை கழற்றாமல் இருந்திருந்தால் அலறியிருப்பேன்!

      நீக்கு
  15. உங்கள் கண் ஆபரேஷன் அனுபவத்தை சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்.

    நீலக்குயிலை எதிர்பார்த்த உங்களுக்கு முகமூடி டாக்டர்னா பயமாத்தான் இருந்திருக்கும்.

    எல்லா கம்பெனிகளும்பராஜக்ட் சைன் ஆகிறவரை அழகிகள், ஸ்வீட் டாக்கர்ஸை கிளையன்ட் கிட்ட பேச வைப்பாங்க. ப்ராஜக்ட் சைன் ஆகி அட்வான்ஸ் கொடுத்ததும் நமக்கு வேறு அனுபவம்வாய்க்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவஸ்தர் நீங்க சொன்னா சரியா இருக்கும்! ப்ராஜக்ட் சைன் ஆகும்வரை தமன்னாக்கள் வருவார்கள்; பிறகு தகர டப்பாக்கள்?

      நீக்கு
  16. மோடி உடை பற்றிய விவாதம் சென்ற வாரமே முடிந்து விட்டது என்று நினைத்தேன். இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹி ஹி! எல்லாம் நீங்க ஆரம்பிச்சு வெச்சதுதான்! நன்றி!

      நீக்கு
    2. @பானுமதி, போனவாரப் பதிவின் பின்னூட்டங்களை ரிவிஷன் செய்யுங்க! அதில் கேள்விகள் கேட்டிருக்கேனே!

      நீக்கு
  17. கேள்விகளும் பதில்களும் அருமை....

    எலி வகையறாக்களுக்கு எதையாவது
    கடித்துக் குதறிக் கொண்டே இருக்க வேண்டும்....

    இல்லாவிட்டால் அதன் பற்கள் நீண்டு வளர்ந்து விடும்...

    என்று அந்தக் காலத்தில் சொல்வார்கள்..

    அது மாதிரி இங்கே ஊடகங்களுக்கும் மற்றும் சிலருக்கும்..

    சாதுவான பசுக்கள் கூட வெள்ளை வேட்டியைக் கண்டு மிரளும்..

    இதில் நாய்களும் சேர்த்தி...

    கறுப்புக் குடையைக் கண்டால் சில மாடுகள் வெறித்துக் கொண்டு ஓடி வரும்...

    கறுப்புத் துணி காக்காய்களுக்கு அலர்ஜி...

    இன்னும்
    சிலபேருக்கு பிறர் நல்ல உடை உடுத்தால் பிடிக்காதும்.. வயிற்றைக் கலக்கும்...

    ஆமாம்... எதற்கு இதெல்லாம்?..

    மறந்து போச்சே!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ! காவி என்று சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தால் தலைப்பை சொல்லி முடித்துவிட்டீர்களே!

      நீக்கு
    2. ஹா... ஹா... ஹா... ஹா...

      துரை செல்வராஜூ ஐயா... வாழ்க நலம்...!

      நீக்கு
  18. ஆபரேஷன் ரகத்தில் நீங்கள் செய்து கொண்ட முதலாவது இந்தக் கண் புரை நீக்க சிகிச்சை தானா.. இதை இவ்வளவு பய பக்தியுடன் அனுபவித்து விவரிக்கிறீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இசைந்து சென்று செய்துகொண்ட ஆபரேஷன் என்று பார்த்தால் இது மூன்றாவது.

      நீக்கு
    2. முதல் இரண்டு ஆபரேஷன்கள் செய்துகொண்ட காலத்தில், பணியில் இருந்தேன். Blog தொடங்காத காலம்!

      நீக்கு
    3. அப்போ முன்னைப் பழங்கதையும் மூண்டு வருமோ!...

      நீக்கு
  19. 14 லட்ச ரூபாயில் கோட்-ஸூட்
    ஓரளவு தரமான உடைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கில்லர்ஜி, இதுக்குப் பதில் சொல்லப் போனால் பெரிதாக ஆகும். ஆகவே எதுவும் சொல்லவில்லை. பின்னால் அந்த உடை ஏலம் விடப்பட்டது தெரிந்திருக்கும் என்பதோடு நிறுத்திக்கிறேன். :))))))

      நீக்கு
    2. 2000//ரூபாய் கொடுத்தால் சென்னை சிவாநந்தா குருகுலத்தில் வாழும் தாய்-தந்தையற்ற 310 குழந்தைகளுக்கு காலை டிஃபன் வழங்க முடியும். என்பது எனது கடந்த 15 வருட அனுபவ அறிவு.

      14 லட்ச ரூபாயின் உடையை ஏலம் எடுத்தவன் மூடனே...

      சரி இந்த உடையின் பலன் என்ன ?

      நீக்கு
    3. நேற்றே பதிலை எழுதிட்டுக் கொடுக்க நினைக்கையில் வேலை வந்துடுச்சு கில்லர்ஜி. இம்மாதிரித் தனிப்பட்ட பரிசுகளை ஏலம் விடுவதின் மூலம் வரும் தொகைகள் பிரதம மந்திரியின் நிவாரண நிதிக்குப் போய்ச் சேரும். அரசாங்க சார்பில் அளிக்கப்படும் பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்பட்டாலோ விற்றாலோ அது அரசு கஜானாவுக்கே போகும் அல்லது அதுவும் நிவாரண நிதிக்குப் போகலாம். பிரதமர் யாராக இருந்தாலும் அவர்கள் பதவியின் பெயரில் இயங்கி வரும் இந்த நிதி அமைப்பு ஆவசர காலங்களிலும் பல சமயங்களிலும் ஏழை மக்களின் வைத்திய உதவிக்காகவும் அப்போதைய பிரதமரின் பரிந்துரையின் பேரில் கொடுக்கப்படும். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றாலும் நினைவூட்டினேன். அம்புடுதேன். ஒரு சில அரசு சார்பில் அளிக்கப்படும் பரிசுப்பொருட்கள் காட்சிக்காக வைக்கப்படுவதும் உண்டு. ப்ரதிபா பாடீல் மாதிரி யாரும் தூக்கிக் கொண்டு போனதாகச் சரித்திரம் இல்லை. உடையை ஏலம் எடுத்தவர்கள் நேரிடையாகக் கொடை அளிப்பதற்குப் பதிலாக இம்மாதிரியான ஒரு முறையில் தெரிந்தே அளிக்கின்றனர். இதில் யாரும் மூடர்கள் அல்ல. ஒரு சினிமா நடிகர்/நடிகையின் கைக்குட்டையைக் கூட ஏலம் எடுக்கும் மக்கள் இருக்கிறார்கள். அவர்களை விட இம்மாதிரி ஏலம் எடுப்பவர்கள் மூடர்களாக ஆவது இல்லை. தாங்கள் ஏன் ஏலம் எடுக்கிறோம் என்பதைத் தெரிந்தே செய்கிறார்கள்.

      நீக்கு
    4. ஒரு சில ஏழைக்குழந்தைகளின் உயர்படிப்பு, புயல் நிவாரணம், பூகம்பம், வறட்சி இன்னபிற திடீரென ஏற்படும் கஷ்டங்களுக்குப் பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் அளிக்கப்படும். அதன் பின்னரே அரசு சார்பாக வந்து ஆய்வு நடத்திவிட்டு நிதி ஒதுக்கீடு செய்வதெல்லாம்.

      நீக்கு
    5. (தொம்பி) கில்லர்ஜி... நாசக்கார + பிச்சை எடுக்கும் (அடிமையை - எட்டுப்பட்டியை தொடரும்) + பிறப்பறியா (வந்தேறி) + என பல இந்துத்துவ கும்பல் உங்களை வளைக்கிறது... ஜாக்கிரதை...

      நன்றி கில்லர்ஜி...

      நீக்கு
  20. நல்ல வேளையா இப்போப் பஞ்சாபில் சீக்கியர்களின் காவித் தலைப்பாகை அணிந்தது குறித்தும், அங்கே லங்கரில் சீக்கிய உடை அணிந்து அனைவருக்கும் உணவு பரிமாறியதும் குறித்து யாரும் ஏதுவும் கண்டுக்கலை. :)))))) அந்த அந்த மாநிலத்துக்குப் போகும்போது அவங்க பாரம்பரியத்தை மதிப்பதும் ஓர் கடமை! மாநில மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விஷயம்.

    பதிலளிநீக்கு
  21. என்னோட முதல் கேள்விக்கு # அவர்கள் அளித்திருக்கும் பதில் தான் ஏற்புடையது. பொதுவாகவே மனித மனம் அடிமட்டத்தில் இருந்தவர்கள் மேலே வந்தால் விமரிசனம் தான் செய்கிறது. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்பதற்கான நிரூபணம்.

    பதிலளிநீக்கு
  22. கேள்விகள் அல்ல... அவ்வாறு நினைத்தால் அடுத்த புதனில் இதற்கு பதில் வேண்டாம்... செயலில் வேண்டும்... நன்றி...

    1) வலைப்பூ என்று ஒன்று உண்டு... வாட்ஸாப் என்று(ம்) உண்டு... வலைப்பூ வாட்ஸாப் ஆக மாற காரணம்...?
    எடுத்துக்காட்டு : வாட்ஸாப்-ல் வர வேண்டியது... வலைத்தளத்தில் வரவே கூடாதது...!

    (1.1) வாழ்க நலம்... வாழ்க வளமுடன்... (வாழாவிட்டாலும் நலமாக அனைவரும் இருக்க வேண்டும்...)
    (1.2) அன்பின் வணக்கம்... (அன்பு இல்லாவிட்டாலும் வாழ்க நலம்...!)
    (1.3) கிர்ர்ர்ர்ர்... அப்புறமா வர்றேன்... காப்பி ஆத்தனும்... சட்னி செய்யணும்... காய்ச்சல் எனக்கு...
    (கழிவறைக்கு போறது மட்டும் தான் சொல்லலே...!)
    (1.4) :))
    (1.5) யாரோ வந்து விட்ட்ட்ட்ட்ட்டார்கள்... பிறகு வர்றேன்...!
    (1.6) ஆகா...! உறவினர்கள் வந்து... அதனால் லேட்...!
    (1.7) கடமை அழைக்கிறது... மீண்டும் வருகிறேன்...
    (1.8)
    (1.9)
    ...
    ...
    ...

    (1.130001)

    இப்படி வெளியிட்ட பதிவிற்கு சம்பந்தமே இல்லாத கருத்துரைகள் தேவையில்லை... (எலி, நாய், மாடு, காக்காய் என சொல்வது உட்பட)

    பதிவு சோகம்... ஆனால் கருத்துரை மகிழ்ச்சி...! காண்க 1.1 to 1.130001

    கருத்துரைகளின் எண்ணிக்கை அதிகம் என்பது பெருமையல்ல... கருத்துரை சொன்னவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதே சிறப்பு...!

    இங்கேயே தவம் கிடக்கும் பலரை காப்பாற்ற மனம் இருக்க வேண்டும்... ஸ்ரீராம் சார்...

    இனி இந்த வாரக்கேள்வி :-

    ஸ்ரீராம் சார்... கீழுள்ளபடி செய்வீர்களா...? வேடந்தாங்கல், பறவை வாழும் இடம் என்று கதை சொல்வீர்களா...?

    Blogger Dashboard → Settings → Posts, comments and sharing → Comment Moderation ? → Always - என்பதை தேர்வு செய்யுங்கள்...

    இனி அனைவரும் நலம்...!

    நன்றி...

    பதிலளிநீக்கு
  23. ///1. மறதி என்பது நாம் சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால் நிகழ்வது என்று நான் நினைப்பதுண்டு. பொருட்கள் உட்பட. உங்கள் அனுபவம்?//

    இதைத்தான் பலசமயம் நானும் நினைப்பதுண்டு, அதாவது முக்கியத்துவம் இல்லை என நம் மனம் எண்ணுவதை நாம் மனதுடனேயே விட்டுவிடுகிறோம், அதை மூளைக்கு எடுத்துச் சென்று சேஃப் பண்ணுவதில்லை...

    பதிலளிநீக்கு
  24. ஆஆஆ இந்தக் கர்ரறக் ஒபரேஷன் எங்கட சிசேரியனை விடப் பெரிசாக இருக்கும்போல இருக்கே ஹா ஹா ஹா.. எங்கட அப்பா, அம்மா , மாமி மூவரும் 2 கண்ணுக்கும் செய்தவர்கள், இங்கெல்லாம் எந்த சலசலப்பும் இல்லை போய்ச் செய்துபோட்டு 3,4 மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார்கள்..

    //அவர் சொன்னபடியே, எண்ணெய் குளித்து, பொட்டிட்டு, புத்தாடை அணிந்து சென்றேன்///

    ஹா ஹா ஹா எண்ணெய் வச்சுத் தோய மட்டும் தானே சொன்னார்ர்[வெளிநாட்டில் இப்படி எல்லாம் சொல்ல மாட்டினம்}.. புது உடுப்பெல்லாம் ஆருக்குக் காட்ட ப் போட்டீங்கள் அந்த நீலக் குயிலுக்கோ ஹா ஹா ஹா?:))

    பதிலளிநீக்கு
  25. ஹா ஹா ! புதிய மருத்துவமனையில் நீலக்குயில் யாரும் இல்லை ! மீசை மாதவன்கள்தாம் இருந்தார்கள்.

    பதிலளிநீக்கு
  26. ஆஆஆ இம்முறை கேள்விகள் ஆரம்பிக்கப்போறேன்.. முதல் கிளவியே கொஞ்சம் வில்லங்கமான கிளவிதான் ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே கேள்விதான்.. ஹா ஹா ஹா..

    1. ஒரு பாடலிலும் கேட்டேன், வசனம் இப்போ மறந்து போயிந்தி:)).. கம்பராமாயணத்திலும் கேட்டேன்.. அது என்ன , ஆனா அதைச் சொல்லாமல் அதை வச்சு எழுந்த கேள்வியைத்தான் கேட்கப்போறேன்.. அதாவது..

    எங்கு பார்த்தாலும், மனைவிதான் பதிபத்தினியாக இருக்க வேண்டும் என்கிறார்களே தவிர, ஆண்கள் பத்தினர்களாக இருக்கோணும் என எங்கும் சொல்லப் படவில்லை.. அது ஏன்? கற்பு என்பது இருபாலாருக்கும் பொதுவானதுதானே? அப்போ ஏன் ஆண்களுக்கு அதைப்பற்றிப் பேசாமல்,
    பெண்களில் அழகு, அறிவு, அன்பு, பாசம் இப்படி எவ்வளவோ இருப்பதைப் பற்றியும் பேசாமல், கற்பை மட்டும் பெண்களுக்குப் பேசுவது தப்பு இல்லையோ?..

    பாடல் வரிகளில் என்னமோ.. அன்பான கணவனும், பத்தினி மனைவியும் இருப்பின் போதுமே குடும்பம் மகிழ்ச்சியாகும் .. இப்படி ஏதோ வருது..

    கம்பராமாயணத்தில், ஒரிடத்தில் சீதை சோர்ந்திருப்பாவாம், அப்போ ராமன் வந்து கேட்பாராம், ஏன் சோர்வாக இருக்கிறாய்? நான் வேணுமெண்டால் கை கால் பிடிச்சு விடட்டோ என, அதுக்கு சீதை பதறிக்கொண்டு சொல்லுவாவாம், நான் தான் உங்களுக்குச் சேவை செய்யோணுமே தவிர, நீங்கள் போய்ச் செய்வதா என்று, அதற்கு ராமர் கூறுவாராம்..
    பதிபத்தினிக்கு மணாளன் சேவை செய்தாலென்ன, மணாளனுக்குப் பதிபத்தினி சேவை செய்தாலென்ன எல்லாம் ஒன்றுதானே என...

    இதைக் கேட்டதும் எழுந்தது எனக்குள் கேள்வி:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரடி, ராமன் பிரபலம் ஆனதுக்குக் காரணமே ஏகபத்தினி விரதனாய் இருந்ததால் தானே! கனவிலும் பிறமனை நோக்காதவன் எனப் பெயர் பெற்றவன் அல்லவா? ஆகவே உங்கள் கேள்விக்கு ராமாயணத்திலேயே விடை இருக்கே. :)))))

      நீக்கு
    2. கீசாக்கா நான் கேட்க வந்தது ஆண்கள் பதிவிரதர்களாக இருக்கிறார்களா என்பதல்லவே.... எங்கும் எதிலும் எதுக்காக பெண்கள் எனில் பத்தினியாக இருக்கோணும் எனச் சொல்கிறார்கள், ஆனா அதே கொள்கையை ஆண்களுக்குச் சொல்வதில்லை?.. ஆண்கள் பதிவிரதர்களாக இருக்கோணும் எனும் கட்டாயமிலை என்பதுபோலல்லவா இருக்கிறது கதை, படம், பாட்டுக்கள் எதுவாஅயினும்...

      நீக்கு
  27. 2. யாரையும் காயப்படுத்திடக்கூடாது என நினைப்போர்தான் அதிகம் காயப்படுகிறார்களே அது ஏன்?

    3.சுற்றமும் நட்பும் நிறைய வேண்டும் என விரும்புவோர் அதிகம் தனிமைப்படுத்தப்படுகிறார்களே அது ஏன்?

    3. வாக்கைக் கொடுத்துப்போட்டுப் பின்னர் அதைக் காப்பாற்றாமல் விடுபவர்களை என்ன பண்ணலாம்? வாக்குக் குடுத்திட்டால் அதைக் காப்பாற்றினால்தானே அழகு?

    4.தான் மட்டுமே புத்திசாலி எனவும், ஏனையோர் எல்லாம் தன்னைவிட அறிவு குறைந்தோர் என எண்ணுவோருக்கு உங்களின் அட்வைஸ் என்ன?

    5.தேவைப்படும்போதெல்லாம் இன்சொல்லில் பேசி, கடன் வாங்கிவிட்டு,பின்பு கடன் தந்தவர்களையே தூற்றிக்கொண்டு திரிவோரைபற்றி என்ன சொல்வது?

    6.இளகிய மனதுடன் பிறருக்கு உதவுவோர், அதிகமாக ஏமாற்றப்படுவது ஏன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லேட்டா பார்த்தேன்; இணைய தொல்லைகளால்! பதில்கள் அளிக்கிறோம்!

      நீக்கு
  28. //யாரையும் காயப்படுத்திடக்கூடாது என நினைப்போர்தான் அதிகம் காயப்படுகிறார்களே அது ஏன்?//

    ஹாஹா!இப்போவும் அப்படித்தான் அதிரடி, காயப்படுத்தாமல் விலகி இருக்க நினைச்சால் கூட காயப்படுத்தறவங்களை என்ன சொல்றது? :)))))))))) கண்டுக்காமல் ஒதுங்கி இருக்கணும். அம்புடுதேன்! :))))))

    பதிலளிநீக்கு
  29. கேள்வி பதில்கள் ஸ்வாரஸ்யம். கண்புரை சிகிச்சை அனுபவங்களை தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!