செவ்வாய், 5 நவம்பர், 2019

கேட்டுவாங்கிப் போடும் கதை :   காளியண்ணன் -  துரை செல்வராஜூ 


காளியண்ணன்


துரை செல்வராஜூ 
*********************

வரவு செலவு எல்லாவற்றையும் கணினியில் பதிவு செய்தாயிற்று...

நாளைக்குக் காலையில் கொடுக்க வேண்டிய பொருட்களையுயும் எடுத்து வைத்தாயிற்று...

இந்த அளவில் இனி வேலை ஏதும் இல்லை...  சரக்கறையின் கதவைப் பூட்டியாயிற்று...

எனது அலுவலகத்திலிருந்து வெளியே வந்து அந்தக் கதவையும் பூட்டினேன்...

மூன்றரை மணியைக் கடந்து நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது பொழுது..

குளிர்காலம் நெருங்குவதால் இளங்காற்று சாரலாக வீசிற்று...

ஒரு குவளை தேநீர் குடிக்கலாம்...

ஆனால், நாலரை மணிதான் Restaurant திறக்கப்படும் நேரம்...

இதோ சமையற்கூடத்தின் முன் வாசல்..

வெளிக் காற்றிலிருக்கும் தூசுகளும் இதர பூச்சிகளும் உள்ளே நுழைந்து
விடாதபடிக்கு Air Curtain இயங்கிக் கொண்டிருக்க இரண்டு அடுக்கு
பாதுகாப்புக் கதவுகள்...

அந்த முன் நடையின் கடைசியில் ஊழியர்களுக்கான ஓய்வு அறை - Looker Room..

பெயர் தான் அப்படியே தவிர யாரும் அங்கே சென்று அமர்ந்து விட முடியாது..

அத்துடன் இணைந்ததான கழிவறைகளையும் வெளிப்புறங்களையும் அவ்வப்போது சுத்தம் செய்வதற்காகவே ஒருவர்...

நாற்பதைக் கடந்தவர்.. நம்மூர்க்காரர்...

அங்கேயே அமர்ந்திருக்கிறார் - நாற்காலியில்..

அதுவும் ஒருபுறம் கால் உடைந்து கேட்பாரற்று இருக்கிறது..

அதில் தான் அவர் - காளியண்ணன் - முட்டு கொடுத்தபடி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்...

அவரை நோக்கி நடந்தேன்..

என்னைக் கண்டதும் எழுந்தார் காளியண்ணன்...

'' என்ன இது?.. உட்காருங்கள்!... '' - என்றபடி அவரை நெருங்கினேன் ...

சிநேகமான புன்னகையுடன் நெகிழ்ச்சியானார் காளியண்ணன்..

'' உள்ளே போய்ட்டு வாங்க... இப்போ தான் சுத்தம் பண்ணினேன்!... ''

'' நான் உங்க கிட்ட பேசறதுக்குத்தான் வந்தேன்!.. '' - என்றேன்..

'' எங்கிட்டயா?... என்கிட்ட பேசறதுக்கு என்ன இருக்கு?... ''
- காளியண்ணனுக்கு வியப்பு...

'' ஏன்?... உங்ககிட்ட பேசக்கூடாதா?... ''

'' அதுக்கில்லை சார்... '' - எதற்காகவோ கூச்சப்பட்டார்...

'' இந்த சார்... கீர்... எல்லாம் வேண்டாம்... சும்மா செந்தில்...னே
கூப்புடுங்க!... ''

'' இல்லை.. சார்... இருந்தாலும்... நீங்க ஸ்டோர் கீப்பர்.. படிச்சவங்க!... ''

'' அதெல்லாம் விடுங்க!... ''

'' சரி.. தம்பி..ன்னு கூப்புடவா?... ''

'' ம்.. இது நல்லாருக்கு!... '' -  என்றேன் சிரித்தபடி

'' சொல்லுங்க.. தஞ்சாவூர்...ல எந்தப் பக்கம்?... '' - என்று கேட்டேன்..

'' திருவையாத்துல இருந்து மூனு மைல்... வயலும் வயக்காட்டு வேலையுமாத்தான் இருந்தேன்... பல மாதிரியா பிரச்னை... சாகுபடி கை விட்டுப் போச்சு...  இந்த நாட்டுக்கு வந்து பத்து வருசமாச்சு... ''

'' இப்போ இந்தப் பாலை வனந்தான் வயித்துல பாலை வார்த்துக்கிட்டு இருக்கு... இருக்கேன்... நல்லபடியா இருக்கேன்... பெண்ணைக் கட்டிக் கொடுத்தாச்சு...  பையன் படிச்சிக்கிட்டு இருக்கான்... இன்னும் ஒரு ரெண்டு மூணு வருசத்தைஎப்படியாவது ஓட்டிடணும்... ''

'' நான் மயிலாடுதுறை... அப்பா சாகுபடியப் பார்த்துக்கிறார்...
ஏதோ ஆசைப்பட்டு வந்தாச்சு... ''

'' கல்யாணம்?... ''

'' பொண்ணு பார்த்துக்கிட்டு இருக்காங்க!... ''

'' நடக்கும்... நடக்கும்... நல்லபடியா நடக்கும்!... '' - ஆதரவுடன் சொன்னார்..

'' நானும் ஒரு வாரமாப் பார்க்கிறேன்...  Dinning Hall...ல இருந்து
சாப்பிடாம சாப்பாட்டை எடுத்துக்கிட்டு இங்கே வந்துடறீங்க!... ''

'' நம்மால யாருக்கும் தொந்தரவு இருக்கக் கூடாது தம்பி!.. '' - என்றார்..

'' யாரும் எதுவும் சொன்னாங்களா?.. அந்த மாதிரி சொன்னா அது குற்றம் தெரியுமா!... ''

'' நீங்க சொல்றது சரிதான்... ஆனா நடப்பு வேற!.. இதெல்லாம் பேசறதுக்குத்தான் நல்லாருக்கும்.. நாம ஒதுங்கி இருந்தா அவங்களுக்குச் சந்தோஷம்... ''

'' நேத்திக்கு வந்த நீங்க கேக்கறீங்க... ஆனா, இந்த மேனேஜர்... அந்த ஆளும் தமிழந்தான்... இன்னை வரைக்கும் ஒரு வார்த்தை கேட்டதில்லை தெரியுமா?.. நான் இந்த இடத்துக்கு வந்து நாலு வருசம் ஆச்சு!... ''

'' அந்த ஆளுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது..  என்ன காரணம்..ன்னு எனக்குத் தெரியலை!... ''

'' கக்கூஸ் உள்ள போய்ட்டு வெளியில வர்றப்ப - ஒரே அழுக்கா இருக்கு...
சுத்தம் பண்ணக் கூடாதா... ன்னு சும்மானாலும் சொல்லிட்டுப் போவாரு!... வெளியிலே இருந்து வர்றப்ப வாசல் எல்லாம் குப்பையா கிடக்கே!...சும்மாஒக்காந்திருந்தா எப்படி... ந்னு எகத்தாளமா கேட்டுக்கிட்டு வருவாரு!... போயி பார்த்தா ஒன்னும் இருக்காது!...''

வீணாக அலைக்கழிக்கப்படும் வேதனை கண்களில் தெரிந்தது...

'' மினிஸ்ட்ரி ஆளுங்க வந்தா எல்லாம் சரியா இருக்கணும் இல்லையா...
அதுக்காகக் கூட சொல்லி இருக்கலாம் இல்லையா?... ''

'' உங்களுக்குத் தெரியாது தம்பி... இங்கே பங்களாதேஷ் காரன் கூடத் தான்கிளீனரா வேலை செய்றான்... அவனுங்க கிட்டயும் இந்த மாதிரி சொல்லணும் இல்லையா!... சொல்லமாட்டாரு!... ஏன்னா அவன் எதுத்துக் கேட்டுடுவான்...  மேல போயி கொளுத்தி விட்டுடுவான்... அதுனால பயம்!.. ''

'' நாம அப்படியா?.. காலால சொன்னதை தலையால செய்றவங்களாச்சே!...  நான் இங்க வந்ததுக்குக் கூட இந்த ஆளோட அநியாயந்தான் காரணம்... ''

'' எப்படி!?... ''  - என்றேன் ஆச்சர்யத்துடன்...

'' டின்..ல இருந்து எண்ணெய் எடுக்கத் தெரியாத சமயக்காரன் ஒருத்தனால நான் கிச்சன்..ல வழுக்கி விழுந்துட்டேன்.. இடுப்புல பலமான அடி.. ரெண்டு மாசம் ஆஸ்பத்ரி... யில இருந்தேன்..  அவனுக்கு இருபது தினார் சம்பளம் ஜாஸ்தி ஆக்குனாரு...  கிச்சன் கிளீனரா இருந்த எனக்கு கக்கூஸ் கிளீனரா மாத்திப் போட்டாரு.. எனக்கு ஈசியான வேலையா கொடுக்குறாராம்!... ''

'' இப்போ நான் கிச்சனுக்குள்ளே நுழைஞ்சி ஒரு வெள்ளரிப் பிஞ்சோ ஒரு கோழித் துண்டோ கேக்க முடியாது... ஒடனே ஹைஜீன்... ந்னு கத்துவானுங்க... ''

'' விடியக்காலை.. ல பல்லு விளக்காத பன்னாடைகளா வருவானுங்க பலபேரு..  அவனுங்களப் பத்தி எந்த பிரச்னையும் இல்லை.. நாம குளிச்சி முடிச்சி நெத்தியில பொட்டோட வந்தா - ஏய்!.. நீ அப்பிடி... நான்
இப்பிடி...ம்பானுங்க!... ''

'' இதையெல்லாம் ஒரு மேனேஜர்கிட்ட சொன்னா என்ன..ன்னு கேக்கணுமா வேணாமா?...  கேக்க மாட்டான்!... அது தான் இங்கே பிரச்னையே... ''

'' நானும் போங்கடா தொலைஞ்சி!...ன்னு விட்டுட்டேன்!... ''

மனக்குமுறலை எல்லாம் கொட்டித் தீர்த்தார் காளியண்ணன்...

அதற்குள் Staff Restaurant திறந்தாயிற்று..

'' வாங்க... டீ சாப்பிடலாம்!.. '' - என்றேன்..

'' தம்பீ ... நீங்க முன்னால போங்க... நான் பின்னால வர்றேன்..
இங்கே பொலிட்டிக் வேலையெல்லாம் கூட நடக்குது...
உங்களுக்குத் தெரியாது!.. '' - என்றார் மெதுவாக...

தேநீர் அருந்துவதற்காக சமையல் கூடத்திலிருந்து ஊழியர்கள் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்..

ஒவ்வொருவர் கையிலும் சிறு சிறு பிளாஸ்டிக் டப்பாக்கள்...

'' இதென்ன இது தேவையில்லாமல்!?...'' - எனக்கு ஆச்சர்யம்..

காளியண்ணன் சொன்னார்...

'' இன்னைக்கு ஆபீசர் மெனுவில சிக்கன் டிக்கா!... ''

'' ஆமாம்!... ''

'' ஆபீசர் கேம்புக்குப் போறதுல இருந்து ரெண்டு கிலோ கைமாத்து பண்ணி இவனுங்க திங்கிறதுக்குக் கொண்டு போறானுங்க!.. ''  - என்றார்..

'' கை மாத்தா!?... ''

'' ஆமாம்.. இங்கே கை மாத்து..ன்னா களவு எடுக்கற்து..ன்னு அர்த்தம்!... ''

'' இது மேனேஜருக்குத் தெரியுமா?.. ''

'' முதல் பிளேட் அந்த ஆளுக்குத் தானே!.. '' - தனக்குள் சிரித்துக் கொண்டார்...

'' நீங்க இதக் கண்டுக்காதீங்க!... இங்க இதான் வழக்கம்..  அப்படியே விட்டுடுங்க!.. ''

'' அப்போ இது எல்லா Staff க்கும் கிடைக்குமா!... ''

'' உங்களுக்குக் கிடைச்சதா?... ''

'' இல்லை!... ''

'' அதான்.. அதே தான்!... ''

'' நீங்க கேட்டா கொடுக்க மாட்டார்களா?... ''

'' கேட்டா அந்த பெரிய குக்கர் கத்துவான்!.. ''

'' இதோ வர்றேன்.. நீங்க Restaurant க்குப் போங்க!.. '' - என்று சொல்லி விட்டு Hair Net அணிந்து கொண்டு சமையலறைக்குள் நுழைந்தேன்...

Disposable Pack நிறைய கோழித் துண்டுகளை எடுத்துக் கொண்டு வந்து
காளியண்ணனிடம் கொடுத்தேன்...

'' சாப்பிடுங்க!... ''

'' உங்களுக்கு!?... '' - அவருக்கு ஆச்சர்யம்...

'' இன்னைக்கு வியாழக்கிழமை.. நான் சாப்பிட மாட்டேன்!...''

'' ஓ... இது வேறயா!.. நானும் இப்படித்தாங்க.. நல்ல நாள்.. பெரிய நாள்..னா கவுச்சி இல்லாம இருக்கணுமே..ந்னு தவிச்சுக்கிட்டு இருந்தேன்.. பட்டினி கூட கிடந்திருக்கேன்... ரெண்டு வருசமா அந்தப் பிரச்னை இல்லாமப் போச்சு!... ''

'' எப்படி?.. ''

'' நாலாவது மாடியில மணி ஐயர் இருக்கார்..ல்ல!... ''

'' ஆமா... ''

'' அவரு ஹெட்டாபீஸ்..ல வேலை செய்றாரா!.. அதனால அவருக்குத் தனி ரூம்...  அவரு கம்பெனி சாப்பாடெல்லாம் சாப்பிட மாட்டாரு.. சாயங்காலம் வேலை விட்டு வந்ததும் சமைச்சி சாப்பிடுவாரு...  விசேசம்.. ன்னா கூப்புட்டுக் கொடுப்பாரு!... ''

'' நாளைக்கு வெள்ளிக்கிழமையா... மூனு வேளையும் அவரு கூடத்தான்
சாப்பாடு... காலையிலயே ரூமுக்குப் போய்டுவேன்.... அவரு குளிச்சு
முடிச்சுட்டு வர்றதுக்குள்ளே கார்பெட்டுல மெஷின் போட்டுட்டு காபிக்கு
பால் வச்சிடுவேன்... குளிச்சிட்டு வந்ததும் விளக்கேத்தி வச்சி ரெண்டு
மந்திரம் சொல்லுவாரு... சந்தனம் குங்குமம் வச்சிக்கிட்டு சோபாவுல
உட்காருவாரு.. காபி கலந்து கொடுப்பேன்.. நானும் குடிப்பேன்...
அதுக்கப்புறம் காலை டிபன் எல்லாம் அவரு செய்வாரு.. நான் கூடமாட ஒத்தாசை செய்வேன்... நல்ல மனுசன்!... ''

'' அறையை எல்லாம் சுத்தம் செஞ்சு வை!... - ன்னு அவரு சொன்னாரா?... ''

'' இல்ல.. இல்ல... நானாத்தான் இஷ்டப்பட்டு செய்றேன்...  அதெப்பிடிங்க ஒருத்தர் வீட்டுல சோத்தைத் தின்னுட்டு சும்மா வர்றது?..  நம்மால ஆனது ஏதாவது அவங்களுக்கு செய்ய வேணாமா!?.. ''

'' ஒனக்கேன்டா இந்த வேலை ... ந்னு தான் அவரு கேப்பாரு!...
நீங்க ஒங்க வேலையப் பாருங்க ஐயரே...ன்னு நான் சொல்லிடுவேன்...
ரெண்டு வருசமா தீவாளிக்கு வேட்டி எல்லாம் எடுத்துக் கொடுக்குறாரு!... ''

காளியண்ணனின் கண்கள் கலங்கின...

'' பாலைவனத்துல பசுஞ்சோலை...ன்னு சொல்லுவாங்க!...அது மணி ஐயரு தாங்க... இவர மாதிரி இன்னொருத்தரும் இருந்தாருங்க!...அவரும் சைவ சாப்பாடு தாங்க சாப்புடுவாரு!.. ''

'' யார் அவர்!?.. ''

'' அவரு சூப்பர்வைசருங்க... தஞ்சாவூர்க்காரர்... செல்வகுமார்..ன்னு பேரு!...''

'' அவரு எங்கே இப்போ?.. ''

'' ஐயரு மாதிரியே அவரும் நல்ல மனுசன்.... அவருக்கு இவனுங்க குடைச்சல் மேலகுடைச்சல் கொடுத்துக்கிட்டு இருந்தானுங்க... போங்கடா சர்தான்...ன்னு வேற எடத்துக்குப் போய்ட்டாரு... ''

அப்போது தான் கவனித்தேன்... Restaurant க்குள் பத்து மேஜைகள் கிடந்தன..  ஒவ்வொன்றுக்கும் நான்கு நாற்காலிகள் என்றால் இரண்டு அதிகமாகக் கிடந்தன..

'' காளியண்ணன்!.. ''

'' என்னங்க.. தம்பீ!.. '' -  உற்சாகமானார்..

''இங்கே இருந்து ஒரு நாற்காலிய எடுத்துக்கிட்டுப் போயி உங்க இடத்துல
போட்டுக்கிட்டு ஜம்..ன்னு உட்காருங்க!..  உடைஞ்சி போன நாற்காலியத் தூக்கி வெளியே போடுங்க!... '' - என்றேன்..

'' வேணாந்தம்பி... யாரும் எதும் சொல்லுவாங்க!.. பிரச்னை வரும்!.. '' - என்றார்..

'' வரட்டும்... பார்த்துக்கலாம்!.. ''

'' எதுக்குத் தம்பி... புது நாக்காலி எல்லாம்!.. ''

'' சொல்றதைச் செய்ங்க!... ''

மறுத்து ஒன்றும் சொல்ல முடியாமல் அங்கிருந்து ஒரு நாற்காலியைத் தூக்கிக் கொண்டு நடந்தார்..

சாய்ந்து கொள்ளத் தோள் ஒன்று கிடைத்த நம்பிக்கை காளியண்ணனின் நடையில் தெரிந்தது...
ஃஃஃ

64 கருத்துகள்:

  1. இன்று எனது கதையைப் பதிவு செய்த ஸ்ரீராம் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  2. இன்று வருகை தரும் அனைவருக்கும் நண்பர் காளியண்ணன் அவர்கள் சார்பாக நல்வரவு...

    பதிலளிநீக்கு
  3. நாடு விட்டு நாடு வந்து நாலு காசு சம்பாதிப்பதற்குள் நல்ல மனங்களுக்குத் தான் எத்தனை கஷ்டம்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதே கஷ்டம் போலிருக்கிறதே....

      நீக்கு
  4. இந்த வளைகுடா நாட்டில்
    எத்தனை எத்தனையோ காளியண்ணன்கள்,,

    ஐயரைப் போன்றும் செல்வகுமாரைப் போலவும்
    நாற்காலி கொடுத்த நல்லவனைப் போலவும்..

    அந்த நல்ல உள்ளங்களுக்கு
    இன்றைய கதை சமர்ப்பணம்....

    பதிலளிநீக்கு
  5. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன், அனைவருக்கும் இந்நாள் இனிய நாளாக பிரகாசிக்க அந்த ஆண்டவனை மனதாற பிரார்த்திக்கிறேன்

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா அக்கா..    வாங்க.  

      பிரார்த்தனைகளுக்கு நன்றி.

      நீக்கு
  6. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

    தாங்கள் எழுதிய கதை எப்போதுமே நன்றாகத்தான் இருக்கும். நல்ல நடையில், வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுடன் இயல்பாக கதையை நகர்த்திச செல்வீர்கள். இறுதியில் முடிவும் மனதிற்கு மகிழ்வாக அமையும்.

    கொஞ்ச நேரத்தில் கதையை படித்து விட்டு கருத்திடுவதற்கு வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீமதி கமலாஹரிஹரன் அவர்களுக்கு நல்வரவு....

      தங்களது வருகையும் கருத்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி...

      விரிவான கருத்துரைக்குக் காத்திருக்கிறேன்...

      நீக்கு
  7. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். காளியண்ணன் எனப் படிச்சதும் முதல்லே நினைவுக்கு வந்தது முள்ளும் மலரும் நாவலின் காளியண்ணன் தான்! :) நல்லதொரு கதை! இரு உயர்ந்த மனிதர்களின் நட்பும் அதனால் ஒருவர் இன்னொருவருக்குச் செய்யும் உதவியும் மிக இயல்பாகச் சொல்லிப் போகிறார் துரைத் தம்பி! அனுபவங்கள் பேசுகின்றன. நடப்பதை அப்படியே சொல்லுகிறார். நாடு விட்டு நாடு போய் வாழ்கையில் இம்மாதிரி ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் சொல்லாமல் சொல்லுகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா..

      இதுக்குத்தான் இப்படியொரு அக்கா வேண்டும் என்பது....

      முள்ளும் மலரும் காளியை எப்படி மறந்தது மனம்!?....

      நினைவூட்டியமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. எங்கேயும் நடக்கும் திருட்டு இங்கேயும் உணவில்! இதிலிருந்து வெளிநாட்டில் வாழ்க்கை எவ்வளவு சிரமம் என்பதையும் புரிய வைக்கிறார். வாய்க்கு நல்ல உணவு கூடக் கிடைக்காமல் நம் ஆண்கள் குடும்பத்துக்காகச் சம்பாதித்துப் போடுகிறார்கள். ஆனால் அவர்கள் பணத்தை மதிக்கும் உறவுக் கூட்டம் அவர்களை எங்கே மதிக்கிறது! :(

    பதிலளிநீக்கு
  9. அடிமை வாழ்க்கை வெளிநாடுகளில் மட்டுமல்ல இங்கும் உள்ளது தலைக்கனம் பிடித்த மேலதிகாரிகளிடம் படும் அவஸ்தை இதைவிட கொடுமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் சொல்லியிருப்பது நிதர்சனம்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  10. நட்பை தவிர ஆறுதலுக்கு ஈடு ஏது...?

    அருமை ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்...

      அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்!..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

      நீக்கு
  11. எந்த ஊருக்குச் சென்றாலும் இந்த மாதிரி சில பிரச்சனை தரும் ஆட்கள் உண்டு. நட்புள்ளம் கொண்ட சிலராவது இருப்பதால் தான் வாழ்க்கை ஓடுகிறது பலருக்கும்.

    நல்ல கதை. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.. உண்மை...

      அன்பின் வெங்கட்.. தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  12. குடும்பத்திற்காக பலரை பொறுத்துப் போகும் வாழ்வியல் முறை ...

    அவர்களின் நிதர்சன வாழ்வில் பல கஷ்டங்களும் வருத்தங்களும் ...

    சொந்தங்கள் இதை புரிந்து கொண்டு அவர்களை கொண்டாடினாள் ..அவர்களின் இந்த கஷ்டங்கள் எல்லாம் மாயமாக மறைந்து போகும்...ஆனால் அத்தகைய புரிதல் இருக்கிறதா என்பது கேள்விக்குறி யே ...

    நிதர்சனமான கதை ..

    பதிலளிநீக்கு
  13. அனுபிரேம் ..
    தங்களது வருகைக்கு மகிழ்ச்சி...

    இப்படியான சூழ்நிலையில்
    இங்கே இருப்பவர்களுக்கு சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை..

    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

    பதிலளிநீக்கு
  14. கடல்கடந்த தேசத்தில் படும் கஷ்டங்களுக்கு நட்பே துணை, ஆறுதல்,நம்பிக்கை எல்லாம்.
    மனம் சாய ஒரு மனம் கிடைப்பது புதையல் தான்.
    கதை அருமை ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல நட்பு புதையல் தான்...
      பொக்கிஷம் தான்..

      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  15. வணக்கம் சகோதரரே

    நல்ல கதை.. மனம் விட்டு பேசும் போதுதான் ஒருவரின் மனதிலிருக்கும் துன்பங்களும், துயரங்களும் வெளி வருகின்றன.

    ஒரு கடைநிலை ஊழியருக்கு சராசரி உரிமைகள் கூட புறக்கணிக்கப்படும் போது இப்படி ஒரு நல்லவர் வந்து உதவி செய்வது அந்த ஆண்டவனின் வருகையை குறிக்கும். மேலும் ஏற்கனவே உதவிகள் செய்து வரும் இருவரும் அந்த தேவனின் தூதுவர்கள்.

    சகோதரி கீதா சாம்பசிவம் சொல்வது போல் முள்ளும், மலரும் காளியை மறக்க முடியுமா? இந்த காளியண்ணனும் இனி மனதில் தங்கி விடுவார். அவர் மட்டுமல்ல.. ஏற்கனவே காளியண்ணனுக்கு உதவி செய்து வரும் இருவரும், இனி உதவிக்கரம் கொண்டு காளியண்ணனை அணைத்துச் செல்ல தவறாத செந்திலும் அடுத்தடுத்து மனதில் தங்கி விடுவார்கள். கதை அருமை.. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி வாழ்வில் நடப்பதை வார்த்தையால் விவரித்து விடுகிறீர்கள். பாராட்டுக்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. சின்னச் சின்ன சிறுகதை தான். இருந்தாலும் அதை எழுதி முடிப்பதற்குள் எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கிறது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா...
      தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. அந்த மூன்று கால் நாற்காலியையும் மற்ற நடமாடும் மனிதர்கள் மாதிரி ஒரு பாத்திரப் படைப்பாய் உலவ விட்டிருக்கும் அதிசயம் உங்கள் எழுத்தில் நிகழ்ந்திருக்கிறது. சாயக் கிடைத்தத் தோளும் சாய்ந்து விடாமல் இருக்க வேண்டும்; சாஸ்வதமாகவும் ஆகி விடக்கூடாது.

    ஒருவருக்கொருவர் தாங்கலாக இருப்பது தான் வாழ்க்கை நெறி என்று உணர்திய யோசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சாய்ந்து கொள்ளக் கிடைத்த தோளைச் சாய்த்தும் விடக்கூடாது...

      ஒருவருக்கொருவர் தாங்கல்...
      அன்பின் வாழ்வு நெறி...

      வாழ்க நலம்....
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  18. அயல் நாடுகளில் வேலை என்பது எத்தனைக்கஷ்டம்என்பத ஒரு சிற்கதை வாயிலாக் சொல்லிச்செல்கிறீர்கள் ஒரு மாற்றத்துக்கு கிராமங்களை விட்டு வளை குடா வாழ்க்கைக்கு வந்திருக்கிறிர்கள்பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் பாராட்டுரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  19. வந்துவிட்டேன் நானும்! காளியண்ணன் கூட பேச நானும் வந்துவிட்டேன்.!!

    வணக்கம் எல்லோரும் நலம்தானே?

    துரை அண்ணா, கதை மிக மிக அருமை. உங்கள் அனுபவம் என்றும் யூகிக்க முடியுது. செல்வகுமார்!!!!

    காளியண்ணன் போன்றோருக்கு பல இடங்களிலும் இப்படியான மரியாதைதான். இங்கு மட்டும் என்னவாம்? அலுவலகங்களில் மட்டுமில்லை. வீடுகளிலும் கூடத்தான். பணம் கொடுக்கிறோம் என்பதால் தங்கள் இஷ்டத்திற்கு மனிதம் பார்க்காமல் நடத்துவதையும் பார்க்கிறோமே..

    காளியண்ணனின் வேதனையையும், அவருக்குச் சாய்ந்து கொள்ள அன்பான ஒரு நட்பும் என்று மிக அழகன கதை. அதுவும் அந்த நாற்காலி (உடைந்ததும், இறுதியில் நல்ல நாற்காலியை செந்தில் கொடுப்பதும்) பல உணர்வுகளைச் சொல்லிவிடுகிறது. சிறிய நிகழ்வு ஆனால் அதில் பல உணர்வுகள் பல அர்த்தங்கள்!

    அருமை துரை அண்ணா.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கீதா சகோதரி

      நலமா? நான் இன்று உங்களை நினைத்தேன். தீபாவளி சிறப்புத்தானா ? தீபாவளி முடிந்தும் இன்னமும் கீதா ரெங்கனை காணவில்லையே என இன்று காலையில் உங்களை நினைத்தேன். யாரிடம் கேட்கலாம் என நினைக்கும் போது தாங்களே வந்து விட்டீர்கள்.. மகிழ்ச்சி.. தொடரட்டும் தங்கள் வருகைகள். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. மிக்க நன்றி கமலாக்கா. என்னைக் குறித்து நினைத்தமைக்கு. நான் இங்கு வர இயலவில்லை என்றாலும் உங்கள் எல்லோரது நினைவும், எப்படா தளம் பக்கம் வருவோம் நும் மனதில் இருந்துகொண்டே இருந்தது...ஒவ்வொருமுறை இப்படி வர இயலாமல் போகும் போது தோன்றும்.

      வீட்டில் ட்ரெய்னேஜ் பிரச்சனைகள், உறவினர் வருகை என்று கொஞ்சம் பிஸியாகப் போச்சு. கூடவே கரன்ட் கட், நெட் பிரச்சனை என்று....

      மிக்க ந்னறி கமலா அக்கா...

      கீதா

      நீக்கு
    3. இவங்க இந்தத் தளத்துக்குப் புதுசா? தில்லையகத்து துளசிதரன் தெரியும். இது யாரு கீதான்னு? பழைய ஆளா இருப்பாங்க. ரொம்ப நாள் கழிச்சு வந்திருப்பாங்க.

      நீக்கு
    4. அன்பின் கீதா..

      தங்களது யூகமே தனி...
      செல்வகுமார் - நான் தான் என்று...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
    5. ஹா ஹா ஹா துரை அண்ணா யூகம் கடினம் இல்லையே சமீபத்தில் உங்களுக்குச் அலுவலகப்பணியில் சில மனக்கஷ்ட்டங்கள் ஏற்பட்டது பற்றி சொல்லியிருந்தீங்களே! நீங்கள் புது இடம் மாறியது எல்லாம்....அது போல அவ்வப்போது உங்கள் அலுவலத்தில் சிலர் கொடுத்த தொல்லைகள் குறித்தும் சொல்லியிருந்ததை வைத்து யூகம்!!!!! அம்புட்டுத்தான்...

      கீதா

      நீக்கு
    6. நெல்லை ஹா ஹா ஹா ஹா ஹா....ஆமா ஆமா பழசுதான் புச்சேதான்!! தினம் தினம் புதிதாய் பிறக்கிறோம்!!! (இன்னா தத்துவம்பா!!! இப்படி எல்லாம் நம்ம ஞானி!!!! லெவலுக்கு சொல்லி ஹிஹிஹிஹி) நானும் ஞானி மாதிரி புது புது அவதாரத்துல இனி வர வேண்டியதுதான்!!!

      கீதா

      நீக்கு
    7. கீதா , நலமா?
      உங்கள் வேலைகள் முடிந்து விட்டதா?

      நீக்கு
  20. காளியண்ணன் போல் பலரை நான் பார்த்து இருக்கிறேன் நிச்சயமாக நான் ஆறுதலாக பேசி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தாங்கள் அறியாததா!..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  21. கதை மிக மிக அருமை சார்.

    ஒவ்வொருவரது அனுபவங்களும் எத்தனைக் கதைகளைச் சொல்கிறது. காளியண்ணன் போன்றோர் வெளிநாடுகளில் படும் துயரம் கேள்விப் பட்டுள்ளேன்.

    சொல்லிய விதம் மிக அருமை. நாற்காலியின் கால் உடைந்திருப்பதை விட மனிதர்களின் மனம் தான் ஊனம். இறுதியில் அவரிடம் அன்புடன் பேச நண்பர் கிடைத்தது மகிழ்வான விஷயம்.

    வாழ்த்துகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி....

      நீக்கு
  22. வளைகுடா நாட்டில் வாழ்ந்தவர்களுக்கு கதை கண் முன்னே நடந்தது தெரியும்.

    நிறையபேருக்கு (சாப்பிடுபவர்கள்), செய்பவர்களின், அந்தக் குழுவின் கஷ்ட நஷ்டங்கள் தெரியாது. எத்தனையோ எளியவர்கள் கஷ்டத்தில்தான் வளைகுடாவிற்கு வந்து எந்த வேலையையும் செய்கிறார்கள்.

    என் மனசுல நான் எனக்குள்ள நல்ல குணம்னு நினைத்துக்கொள்வது (நிறைய வேண்டாத குணங்கள் இருந்தாலும், அதிலும் முன்கோபம் ஹாஹா), எளிய மனிதர்கள் எல்லோரிடமும் நன்றாகப் பேசுவேன், அவங்க கஷ்டத்தைப் புரிந்துகொள்வேன். முடிந்த வரை உதவுவேன். அவங்க யாரையும், அது ஆபீசை கிளீன் பண்ண வரும் காண்டிராக்ட் ஆட்களில் கடையனாக இருந்தாலும், முடிந்த வரை அன்புடனும் மரியாதையுடனும்தான் பேசுவேன். என் வீட்டிற்கு வார விடுமுறையில் கிளீனிங் செய்ய தமிழ் ஆள் ஒருவரை வைத்திருந்தேன் (எல்லாம் 20-30+ வயசுதான்). அவங்க 3 மணி நேர வேலை முடிந்ததும் சாப்பிடச்சொல்லித்தான் அனுப்புவேன். (ஹா ஹா... நான் அவங்களுக்காக உணவு சமைப்பேன்). இது பெருமைக்குச் சொல்லலை. எளியவர்களின் கஷ்டத்தை உணர்ந்தவன். அவர்கள் எப்படி அடிமைப்படுத்தப் படுகிறார்கள் (உடனே அரபிக்கள் அவ்வளவு கொடுமைக்காரர்களா என்று நினைத்துவிடாதீர்கள். அவங்க பெரும்பாலும் கடவுளுக்குப் பயந்தவங்க. பெரும்பாலும் அநியாயம் செய்ய மாட்டாங்க. அநியாயம் செய்வது நம்ம ஊர் மேனேஜர்கள்தாம். பெரும்பாலும் மலையாளி, தமிழன் மேனேஜர்கள்தான் டேஞ்சரான ஆட்கள். தங்கள் மேனேஜர்களுக்கு சாமரம் வீசி, தங்களுக்குக் கீழுள்ளவர்களைக் கொடுமைப்படுத்துபவர்கள்)

    அந்த மாதிரி எளிய மனிதர்கள் அங்கு கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள். இங்கிருக்கும் அவர்களது குடும்பம், அவர்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது, தங்களுக்கு 4 பவுன் நகை வேண்டும், அப்பா குடித்து காசை கரியாக்குகிறார், தம்பி கீழே விழுந்து ஆஸ்பத்திரி செலவு, தங்கச்சி பெரியமனுஷியான செலவு என்று நிறைய சிலுவைகளைத் தூக்குகிறார்கள். ரொம்ப பாவப்பட்டவர்கள்.

    அந்தமாதிரி எத்தனையோ களத்தில், சமையல் செய்பவர்களைப் பற்றிய கதை, மிக அருமையாக எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார். தன் பதவியினால் எளியவர்களை நசுக்குவதில், அவர்களுக்கு கஷ்டம் கொடுப்பதில் என்ன வீரம், ஆண்மை இருக்கிறது? ஆண்மை, தனக்குத் தவறிழைக்கும் பாஸிடம் தைரியமாக சண்டைபோடுவதில்தான் இருக்கிறது. வளைகுடாவில் இது மாதிரி நடப்பதில்லை. எல்லோரும் பிழைக்க வந்திருக்கிறோம் என்ற எண்ணம்தான்.

    தரமான கதை. எழுத்தில் நன்றாக வந்திருக்கிறது. பாராட்டுகள் துரை செல்வராஜு சார். (இப்போதான் கதை படிக்க நேரமும் மூடும் கிடைத்தது)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..

      தாங்கள் சொல்லியிருப்பது அனைத்தும் உண்மை.. இப்படித்தான் நிகழ்கிறது..

      ஆனாலும் நல்லவர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள்...

      அது பூர்வ ஜன்ம புண்ணியம்...

      நீக்கு
  23. அந்த ஊர்ல, கிளீனிங் செர்வீஸ் செய்வதற்கு கம்பெனி உண்டு. (இது 15-18 வருடங்களாக). அதனால் முன்பு இருந்ததுபோல, கிளீனிங், செக்யூரிட்டி இதற்கெல்லாம் கம்பெனி ஆட்கள் எடுக்காது. இந்த மாதிரி கிளீனிங் கம்பெனியிடம் காண்டிராக்ட் விட்டுடும்.

    இந்த கிளீனிங் கம்பெனி, ஆபீஸ் கிளீனிங், டாய்லெட் கிளீனிங், தேவையான கம்பெனிகளுக்கு முழு நேரமும் ஆபீஸில் கிளீங்க் ஆட்கள் இருக்கும்படியாக அனுப்புவாங்க, கட்டிட கிளீனிங் என்று ஏகப்பட்ட மாதிரியான வேலைகள் இருக்கும். இவங்கள்ட ஒவ்வொரு இடத்துக்கும் ஆட்களை அனுப்பி திரும்பி தங்குமிடத்திற்குக் கூட்டிவர வண்டிகள் இருக்கும். தங்குமிடம் (ஒரு அறைக்கு 6 பேர், கட்டிலுக்கு மேல் கட்டில் என்ற முறையில், காமன் டாய்லெட், வாஷிங் மெஷின், எல்லோருக்கும் பெரிய மெஸ் என்று இருக்கும்) ஊருக்கு வெளியே இருக்கும்.

    ஆரம்பகாலத்தில் மூன்று வேளையும் சாதம்/சாம்பார்/நான் வெஜ் போன்றவை, சப்பாத்தி தொட்டுக்கொள்ள கறி... வெள்ளி மட்டும் பாயசம் போன்றவை இருக்கும். இந்த நம்ம ஊர் மேனேஜர்கள், காசை மிச்சப்படுத்துகிறேன் என்று சொல்லி, எல்லாத்திலும் லிமிடெட் என்று கொண்டுவந்தாங்க (6 சப்பாத்திதான், பிளேட் ரைஸ்தான் என்பதுபோல). சின்ன மிஸ்டேக்குக்கும் பெரிய தண்டனை. அவங்களுக்குக் கொடுப்பதே 8000 ரூபாய்தான், அதிலும் ஃபைன் என்று 1500 ரூபாய்லாம் போடுவாங்க). மேனேஜர்களுக்கு அடிபணியலைனா 2 வருட காண்டிராக்டை புதுப்பிக்க மாட்டாங்க, காசு அதிகம் கொடுக்க மாட்டாங்க, சலுகைகளை கட் பண்ணுவாங்க, ஊருக்குப் போகணும்னா, 2 மாச சம்பளத்தை கைல வச்சிக்கிட்டு அனுப்புவாங்க...

    எத்தனையோ கண்டிருக்கிறேன்... பாவம் வேலை பார்ப்பவர்கள்.

    பதிலளிநீக்கு
  24. எளியவர்க்கு இரங்குபவர்களால் தான் இவ்வுலகம் இயங்குகின்றது....

    ஆனாலும் இங்கே கடவுளுக்குப் பயந்திருந்தவர்களில் 90% இப்போது மாறி விட்டார்கள்...

    மாதந்தோறும் குறித்த நாளில் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் போக்கு பெருகி விட்டது..

    இருந்தாலும் படைத்தவனே பாதுகாப்பு..
    தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  25. இன்னும் மதுரையிலிருந்து
    ஸ்ரீமதி கோமதிஅரசு அவர்களைக் காணோமே...

    பதிலளிநீக்கு
  26. அழகிய கதை துரை அண்ணன், எனக்கென்னமோ தன்னைத்தான் கதையாக வடித்திருக்கிறார் துரை அண்ணன் என்பதுபோல தெரியுதே:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆகா...

      சங்கமித்திரையும், கீதாவும், ஏஞ்சலினும் திரிகால ஞானிகளின் ஆசி பெற்றவர்கள் என்பது ஊரறிந்ததே..

      அந்த Supervisor செல்வகுமாரும் நானே..
      Storekeeper செந்தில்குமாரும் நானே...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. வணக்கம் வந்து விட்டேன் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்

      இன்று அதிகாலை போனவள் இரவு ஏழு மணிக்கு தான் வந்தேன்.
      வந்தவுடன் இரவு உணவு வேலையை முடித்து விட்டு போன் பேசியவர்களுக்கு பதில் கொடுத்து விட்டு அமர்ந்து விட்டேன். உங்கள் கதை படிக்க.

      நீக்கு
    3. ஆஆஆஆஆ டபிள் ஆக்டிங்காஆஆஆஆ?:) ஹா ஹா ஹா..

      நீக்கு
  27. உதவிசெய்யும் நல்ல உள்ளங்கள் என்றும் வாழ்க.

    பதிலளிநீக்கு
  28. அந்த Supervisor செல்வகுமாரும் நானே..
    Storekeeper செந்தில்குமாரும் நானே..//

    கதையை படித்தவுடன் நானும் கண்டு பிடித்து விட்டேன்.

    பதிலளிநீக்கு
  29. //இவர மாதிரி இன்னொருத்தரும் இருந்தாருங்க!...அவரும் சைவ சாப்பாடு தாங்க சாப்புடுவாரு!.. ''

    '' யார் அவர்!?.. ''

    '' அவரு சூப்பர்வைசருங்க... தஞ்சாவூர்க்காரர்... செல்வகுமார்..ன்னு பேரு!...''

    '' அவரு எங்கே இப்போ?.. ''

    '' ஐயரு மாதிரியே அவரும் நல்ல மனுசன்.... அவருக்கு இவனுங்க குடைச்சல் மேலகுடைச்சல் கொடுத்துக்கிட்டு இருந்தானுங்க... போங்கடா சர்தான்...ன்னு வேற எடத்துக்குப் போய்ட்டாரு... ''//

    இந்த இடத்தை படித்தவுடன் உங்கள் நினைவுதான் வந்தது.

    கதை மிக அருமையாக இருக்கிறது.
    தூரா தூராத்தில் குடும்பத்தை பிரிந்து குடும்பத்திற்காக உழைக்கும் மக்களுக்கு ஆறுதலாக, அன்பாக இருக்கும் தோழமை கிடைத்தால் எவ்வளவு ஆனந்தம்.

    பதிலளிநீக்கு
  30. காளியண்ணன் அவர்களை மனித நேயத்தோடு பார்த்து பேசி பழகி ஆதரவாய் இருக்கும், மணி ஐயர் , செந்தில் வாழ்க.

    அருமையான மனிதநேய கதைக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    எங்கள் பழைய வீட்டில் ஜன்னல்கள் பழுது அடைந்து உள்ளது, அதை சரிசெய்யும் வேலை நடைபெறுகிறது. வேலை முடியும் வரை இணையம் பக்கம் இரவுதான் வர முடியும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!