வியாழன், 28 நவம்பர், 2019

எம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா?
நாய் 
சிறுகதை 
=================

அந்தத் தெருவாசிகளுடன் சுமுகமான உறவில் இல்லை அந்த நடுவீட்டுக்காரர்.  

நகரின் நடுவே அமைந்திருக்கும்,  ஆனால் அமைதியான ஒரு தெரு அது.  பல வருடங்களாக அங்கு வசிப்பவர்களும் உண்டு.  அவ்வப்போது மாறுபவர்களும் உண்டு.  பாதி பேர் வாடகைக்கு குடியிருப்பவர்கள்தான்.  ஆனால் நீண்ட நாட்களாக அங்கு வசித்து வந்தார்கள்.  

எட்டு வருடங்களுக்கு முன் அங்கு குடி வந்தார் அவர்.  சுற்றுச் சுவர்களால் வீடுகள் மூடப்படாத காலம் அது.  எனவே அவர் வந்ததும் தெருவாசிகள் புதியவரை நட்புடன் பார்த்துப் புன்னகைக்கத் தலைப்பட்டார்கள்.  அவரும் அவர் மனைவியும் மட்டுமே இருந்தார்கள்.  ஒரு நாய் வளர்த்து வந்தார்கள்.  அது வீட்டுக்குள்ளேயே சுற்றி வரும்.  பெரும்பாலான நேரங்களில் வீட்டுத் திண்ணையில் ஜன்னலில் கட்டப்பட்டிருக்கும்.

சாதாரணமாக பேச்சு வாக்கில் மற்றவர்கள் பேசிக்கொள்ளும்போது தெருவாசிகளுக்கு ஒருவர் குடும்பத்தைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிந்திருந்தது.  ஆனால் இவர் குடும்பம் பற்றி மட்டும் எதுவும் தெரியாது.

அவர்கள் சுமுகமாகப் பேசினால்தானே தெரிந்து கொள்ள முடியும்?  சிடுமூஞ்சிகளாகவே இருந்தார்கள்.  அவர்களுக்கு வேலை ஆகவேண்டி இருந்தபோது உரிமையாக அதைப் பெற்றுக் கொண்டார்கள்.  அவர்களிடமிருந்து எந்த உதவியும் - ஒரு அவசரத்துக்குக் கூட - மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை.

ஏன் அவர்கள் வீட்டுக்கு உறவு என்று யாரும் வருவதில்லை என்று ஒருவாறு புரிந்தது.  இப்படிக் கூட புன்னகை இல்லாமல், சௌஜன்யம் இல்லாமல் இருக்க முடியுமா என்று ஆச்சர்யமாக இருந்தது.

தெருமுனையில் இருக்கும் குப்பைத் தொட்டியில் குப்பை போடுவதில் தொடங்கியது பிரச்னை.  தெரு முனையில் இருந்த வீட்டுக்காரர்கள் அவர்களிடம் சாந்தமாகத்தான் சொன்னார்கள்.  "தொட்டியில் போடுங்கள்.  கவர் பண்ணிப் போடுங்கள்"  

தலையை ஆட்டிவிட்டு அப்புறமும் அவர்கள் செய்ததையே செய்து கொண்டிருக்க, முதல் வாக்குவாதம்!

பின்னர் நிறைய விஷயங்களில் அது தொடர்கதையானது.  மற்ற அனைவர் பார்வையிலும் அவர்கள் அந்நியப்பட்டுப் போனார்கள்.  ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு பிரச்னையில் சண்டை.  கணவன் மனைவி இருவருமே இதில் சளைத்தவர்கள் இல்லை.  நாக் கூசும் வார்த்தைகள் அதிக பட்ச டெசிபலில் வெளிப்பட்டபோது அனைவருமே ஒதுங்கிப் போவதே நல்லது என்று தீர்மானித்தார்கள்.

நாயை அழைத்துக்கொண்டு அவர் வெளியே கொண்டு வந்து விடும்போது யாரும் அவருடன் பேச முற்படுவதில்லை.  அவரும் கவலைப்படுவதில்லை.  தினமும் அவர் பரத் வீட்டுக்கு முன்னாலேயே நாயை வீட்டுக் கொண்டிருக்க, பரத் வேறு இடம் போகச் சொன்னார்.  சற்றுத் தள்ளி இருந்த வெட்ட வெளிக்கு அழைத்துச் செல்லலாமே என்றார்.  மறுபடியும் வாக்குவாதம், பிரச்னை.

இவர்களை மாற்றவே முடியாது என்று யாரும் இவர்களுடன் பேசுவதே இல்லை.   அதுவே அவர்களை மேலும் கோபமூட்டியது.  தங்கள் செயல்களால் ஏதாவது சிறு தொல்லைகள் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.  

எதிர் வீட்டில் இருக்கும் எல் கே ஜி படிக்கும் பெண் மாலை பள்ளி விட்டு வந்ததும் ஸ்கூல் யூனிஃபார்மோடேயே தெருவில் மெல்ல இங்கும் அங்கும் நடந்து விளையாடுவாள்.  கையை ஆட்டி ஆட்டி ஏதோ பேசியபடியே  இங்கும் அங்கும் நடப்பாள்.  அவள் மனதுக்குள் அப்போது அவள் ஒரு டீச்சராகவோ, அல்லது அவள் அப்பாவாகவோ, அம்மாவாகவோ இருப்பாள்!

வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதைக் கண்டால் உவகை ஆகி விடுவாள்.  மெல்லிய குரலில் பேசியபடியே செடிகளின் அருகே நிற்பாள்.  சமயங்களில் மெல்லிய குரலில் பாடியபடியே ஸ்கர்ட்டைப் பிடித்தபடி சிறு நடனம் ஆடுவாள்.    அவள் அம்மா வந்து அடிக்கடி அழைத்து அழைத்துப் பார்த்து விட்டு உள்ளே சென்று விடுவாள்.  அருகாமை வீட்டுக்குள் எல்லாம் சுதந்திரமாக சென்று வருவாள் குழந்தை.   இருட்டத் தொடங்கும் நேரம்  அவளே வீடு செல்வாள், அல்லது அவள் அம்மா வந்து அழைத்துச் செல்வாள்.

இவர் வீட்டின் முன் குழந்தை நிற்கும் நேரம் மட்டும் அவர் முறைத்துப் பார்த்துக் கொண்டே இருப்பார்.  அவள் இவர் வீட்டு செடிகளில் கை வைத்தால்  சத்தமாக அதட்டித் துரத்துவார்.  அவள் இவரை நிமிர்ந்தே பார்க்காமல், ஆனால் மெல்ல அகலுவாள்.

அந்த நாள்..

அன்று அவர் வீட்டு வாசலில் ஒரு பெரிய பூ மலர்ந்திருந்தது.  குழந்தை அதன் அருகில் வந்து விட்டாள்.  இவர் அவளை பார்த்ததுமே அதட்டித்  துரத்தத் தொடங்க,  அவள் இவரைக் கள்ளப்பார்வைப் பார்த்துக்கொண்டே அந்தப் பூவைப் பறிக்க முயன்றாள்.

ஆத்திரம் உச்சத்துக்குப்போன அவர், என்ன செய்கிறோம் என்று யோசிக்காமல் கட்டியிருந்த நாயை அவிழ்த்து விட்டு, அவளை நோக்கி "ச்சூ..." என்று விரட்டினார்.

உட்கார்வதும் எழுவதுமாய் பரபரப்பாய் இருந்த நாய், குலைத்துக் கொண்டே நாலு கால் பாய்ச்சலில் திண்ணையைத் தாண்டியபோதே குழந்தை பயந்து போனாள்.  அலறி ஓடத் திரும்பியவள் கால் சறுக்கி விழுந்தாள்.

அது ஓடிய வேகம் கண்டு அவரே அரண்டுபோய்ப் பார்த்துக் கொண்டிருக்க, எதிர் வீட்டிலிருந்து அலறிக் கொண்டே ஓடிவந்த அவள் தாய் விக்கித்து நின்றாள்.

குழந்தையும் வாயடைத்துப் போய் நாயை பீதியுடன்  பார்த்துக் கொண்டிருக்க, ஓடிவந்த நாய் தன்னைக் கட்டுப்படுத்த முயன்று சறுக்கிக் கொண்டே குழந்தையை அடைந்தது.

இதோ நாய் குழந்தையை கடித்துப் பிடுங்கப் போகிறது என்று அவரும் பீதியுடன் பார்த்துக் கொண்டிருக்க, நாய் வினோதமான ஒரு காரியம் செய்தது. 

அப்படியே மண்டியிட்டு சறுக்கிக் கொண்டே குழந்தை அருகில் சென்றது.  அதன் குலைப்பு நின்று போயிருந்தது.  வால் ஆடிக் கொண்டிருக்க, சின்ன சிணுங்கலுடன் குழந்தை அருகே சென்று இங்கும் அங்கும் பாய்ச்சல் காட்டியது.  குழந்தை பயம் குறையாமல் பார்த்துக் கொண்டிருக்க, அருகே சென்று அவள் கையை நக்கியது.  அவளருகே செல்வதும், இங்கும் அங்கும் திரும்பி ஓடுவதும் என்று, தான் விளையாடுவதை குழந்தைக்கு உறுதி செய்தது.  குழந்தைக்கு அருகே சமர்த்தாக உட்கார்ந்து கொண்டு அதன் தாயைப் பார்த்து வாலை ஆட்டியது.  அதன் தாய் மெதுவாய் அருகே வந்து குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவரை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் வீட்டுக்குச் சென்றாள்.  

தெருவில் இன்னும் ஓரிருவரும் இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் நகர, திரும்பி வந்த நாயை தானும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் ஜன்னலில் கட்டினார் அவர்.   நாய் ஏதோ அவருக்கு ஒரு பாடம் எடுத்தது போலிருந்தது.

இதோ நாட்கள் ஓடுகின்றன...    எதிர் வீட்டுக்குழந்தை மறுபடி அவர் வீட்டு வாசல் வரக் காத்திருக்கிறார்.   அவள்தான் இப்போதெல்லாம் வெளியே வருவதே இல்லை.   அவரிடமிருந்து பழைய சத்தங்களைக் காணோம்; சண்டைகளைக் காணோம்.  மற்றவர்கள் அவருடன் சுமுகமாகப் பேசும் நாளுக்காய்க் காத்திருக்கிறார் அவர். 

**********

======================================================================================================


தமிழ் சினிமா பற்றி வடநாட்டுக் காரர்கள் என்ன நினைக்கிறார்களாம்?  தேசிய விருது தேர்வுக் கமிட்டியில் மூன்றுமுறை அங்கம் வகித்த வெண்ணிற ஆடை நிர்மலா அதுபற்றிச் சொல்லியிருக்கிறார்.  

தினமலர் பகுதியில்  'சொல்கிறார்கள்' என்கிற பகுதி வரும். நெட்டில் ஓரளவு படிக்க முடியும்.  பேப்பர் செய்தியில் ஒருபக்கம் நீளவாக்கில் ஓரமாக போடுவார்கள்.  

செய்திகளை படிக்கும் சுவாரஸ்யத்தில் நிறைய பேர்கள் அதைப் படிக்க மாட்டார்கள்.  இணையப் பக்கத்திலும் தினசரி அதுமாறிக்கொண்டே இருக்கும்.  எனவே அந்த பக்கத்துக்கு லிங்க் தரமுடியாது!  

நல்ல செய்திகள் வந்தால் அதை என் பேஸ்புக்கில் எடுத்துப்போட்டு லிங்க் தருவது என் வழக்கம்!  அது போல அங்கு நவம்பர் ஐந்தாம் தேதி வந்த பகுதியை இப்போது இங்கு பகிர்கிறேன்!சினிமா படங்களுக்கு தேசிய விருது தேர்வு செய்யும், 'ஜூரி' கமிட்டியில், தமிழகம் சார்பில், மூன்று முறை இடம்பெற்ற, பழம்பெரும் நடிகை, வெண்ணிற ஆடை நிர்மலா: 

"சினிமா படங்களுக்கான தேசிய விருது, ஹிந்தி பேசும் மக்கள் நிறைந்த, வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் அதிக அளவில் கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான், அந்த கமிட்டியில் அதிகமாக இருக்கின்றனர்.ஜூரியாக நான் இருந்த ஒவ்வொரு முறையும், சிறந்த தமிழ் படங்களுக்கு விருது வாங்கித் தருவதற்குள் நான் பட்ட பாடு, சொல்லி மாளாது. கடந்த, 1998ல், ஜீன்ஸ் படத்தின், கண்ணோடு காண்பதெல்லாம் என்ற பாடலுக்காக, அந்த படத்திற்கு தேசிய விருது வழங்க வேண்டும் என, வாதாடினேன். 

அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளாத பிற ஜூரிகள், 'அந்த பாட்டை பார்த்த பிறகு தான், எங்கள் முடிவை சொல்ல முடியும்' என்றனர். அதனால், அந்த பாடல் அடங்கிய, பிலிம் ரோலை தேடி, நானே போக வேண்டியதாயிற்று. 

டில்லியில் குடோன் போல இருந்த அந்த அலுவலகத்திற்குள், மே மாத வெயிலில் தேடி வியர்த்தேன்; கடுமையான கோடை காலம் என்பதால், அடுப்பு மேலே நிற்பது போல உணர்ந்தேன். ஒரு வழியா, அந்த பிலிம் ரோலை தேடிக் கண்டுபிடித்து, எடுத்து வந்து, அதை பிற ஜூரிகளிடம் போட்டு காட்டிய பிறகு தான், அவர்கள் ஒப்புக் கொண்டனர். 

தமிழர்களைப் பொருத்தமட்டில், விருந்தோம்பலில் சிறந்தவர்கள். நம்ம ஊருக்கு வந்த வெளியூர் காரர்களிடம் நாம் எவ்வளவு மரியாதையாக நடந்து கொள்கிறோம்! 

ஆனால், பெரும்பாலான வட மாநில ஜூரிகள் அப்படியில்லை. ஜூரி என்ற உயரிய பொறுப்பு வகிக்கிறோமே, என்ற எண்ணமெல்லாம் இல்லாமல், சில தமிழ் படங்களைப் பார்த்து, கேலியும், கிண்டலும் செய்து, நம்மை மட்டம் தட்டும் அவர்களின் போக்கு இருக்கிறதே... அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.நாம் எல்லாரும் அறிந்த நல்ல தமிழ் படம், சொல்லாமலே! அந்தப் படத்தைப் பார்த்து விட்டு, 'தமிழில் இதை விட உங்களுக்கு, சின்ன வயது ஹீரோ கிடையாதா'ன்னு, ஹிந்தியில் பாட்டுப்பாடி, 'ஓ...' என கத்தி, கூச்சல் போட்டு, கலாட்டா பண்ணியதை, இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. 

மதராசிகள் என்றாலே, அவர்களுக்கு, 'பார்வர்டு திங்கிங்' கிடையாது என, ஒரு சில ஜூரிகள், என் காதுபடவே சொன்னார்கள். அவர்களைப் பொருத்தவரை, வட மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் தான், தேசிய விருது கிடைக்க வேண்டும்; அவர்களுக்கு மட்டும் தான் அந்த தகுதி இருக்கிறது என்ற நினைப்பு! 


========================================================================================


எம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா?  நான் பார்த்திருக்கிறேன்!  நீங்களும் பாருங்களேன்...========================================================================================

பாலச்சந்தர் சொல்லும் அந்த கல்யாணராமன் யார் ?  படித்தால் தெரியும்.   நடுநடுவில் யாரோ கையெழுத்து போட்டுப் பழகி இருக்கிறார்கள்.  அதனால் படிக்க சிரமமாய் இருக்கலாம்.   அதைப் படித்துவிட்டு யார் அந்த கனகா என்று கேட்பவர்களுக்கு, எனக்கு அப்படி யாரையும் தெரியாது!  புத்தகத்தை வாங்கிப்போன யாரோ தன் கைத்திறமையைக் காட்டி இருக்கலாம்.  அல்லது பைண்ட் பண்ணப்படுவதற்கு முன்னாலேயே போடப்பட்டதாக (கிறுக்கப்பட்டதாக) இருக்கலாம்.  ஆமாம், விஷயத்தை படத்திலேயே வைத்து படிக்க முடிகிறதோ?
========================================================================================


முன்பு ஒருமுறை பகிர்ந்தது....   எடுத்த போட்டோவை வைத்து சும்மா இப்படியொரு கமெண்ட் போட்டிருந்தேன்.  ஒரு நண்பர் இப்ப என்ன சொல்ல வர்றீங்கன்னு கடுப்படித்திருந்தார்! 101 கருத்துகள்:

 1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. அப்படியா சொல்றீங்க....   கதம்பத்தால் அப்படித் தோன்றுகிறதோ...

   நீக்கு
 3. நல்ல கதை, பொதுவாக நாய்களே குழந்தைகளை எதுவும் செய்யாது. அந்த முரடுக்கு நல்ல பாடம்! வேணுங்கட்டிக்கு வேணும், வெங்கலங்கட்டிக்கு வேணும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கள் வீட்டில் ஒரு முரட்டுச் செல்ல, இருந்தது.  சமயங்களில் நாங்களே அருகில் செல்ல முடியாத அளவு கோபம் வரும், பிடிவாதம்!  அதன் அருகில் நேரம் காலம் இல்லாமல் என் பையன் சென்று அபாயகரமாக விளையாடுவான். மகிஷியை இழுத்துக் கொண்டு இங்கும் அங்கும் செல்வதுதான் அவன் விளையாட்டு.அந்த கோபக்கார செல்லம் அவனை ஒன்றுமே செய்ததில்லை என்பது எங்கள் ஆச்சர்யம்.

   நீக்கு
 4. வெண்ணிற ஆடை நிர்மலா மட்டுமில்லை, பல தமிழ் ஜூரிகளும் இதே குறையைச் சொல்லி இருக்கிறார்கள். இதில் தெலுங்கு, கன்னடம் விதிவிலக்கு. அவங்களுக்கு ஏதேனும் ஒரு படத்துக்கு அவார்ட் கிடைச்சுடும். கேரளம் கேட்கவே வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மாளுங்களுக்கு நடுவு நிலைமையென்ற பெயரில் கம்மென்றிருப்பார்கள்.அடுத்தவர்களுக்கு சப்போர்ட் செய்வார்கள்!

   நீக்கு
 5. எம்ஜாரையும் பார்த்தாச்சு, உங்க முகநூல் ஜோக்கையும் படிச்சாச்சு. பாலசந்தர் சொன்னதும் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பாலசந்தர் சொன்னதும் படிச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.//

   ஆ...    அப்படீன்னா நீங்களும் பைண்ட் பண்ணி வச்சுருக்கீங்க இந்தக் கதையை!

   நீக்கு
 6. வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை பெரும்பாலும் இதை தமிழர்கள் உணர்வதில்லை. காரணம் நம்மில் விசிலடிச்சான் குஞ்சுகள் அதிகம்.

  //மதராசிகள் என்றாலே, அவர்களுக்கு, 'பார்வர்டு திங்கிங்' கிடையாது என, ஒரு சில ஜூரிகள், என் காது படவே சொன்னார்கள்//

  இது உண்மைதானே...

  கதையை படித்த பிறகு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.கதம்பம் சுவை.

   உடனே வெங்கட் நினைவு வருகிறது. அவர் எழுதி நான் பார்க்கவில்லையே.

   குழந்தையும் நாயும் கதை வெகு அருமை.
   நாய்க்குணம் எனு சொல்வார்களே. அதை அந்தவளார்த்தவர்களுக்குத் தான் கொடுக்கணும்.
   பாவம் அந்தக் குழந்தை. மிக மிக அழகாக அமைந்திருக்கிறது.

   பாலச்சந்தரும் கல்யாணராமனும் முன்பேபார்த்திருக்கிறேனோ.

   நீக்கு
  2. வெண்ணிற ஆடை நிர்மலா சொல்லி இருப்பது உண்மைதான். சுண்ணாம்பு வெண்ணெய்க் கதை.
   இப்பொழுது கொஞ்சம் மாறி இருக்கலாமோ என்னவோ.

   நீக்கு
  3. வாங்க கில்லர் ஜி.  நன்றி.

   //கதையை படித்த பிறகு வருகிறேன்.//

   நன்றி.  காத்திருக்கிறேன்.

   நீக்கு
  4. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  

   நாய்க்குஇருக்கும் நன்றி மனிதனுக்குஇருக்காது!

   பாலச்சந்தர்-கல்யாணராமன் நான் முதல்முறை பகிர்கிறேன்.வேறெங்கிலும் பார்த்திருப்பீர்கள்!

   வெங்கட்டைக் காணோம்... பிஸி போல.

   நீக்கு
  5. குழந்தை எம் ஜி ஆர்,,,   அல்லது எம் ஜி ஆர் குழந்தையாக!   ஹிஹிஹிஹி....

   நீக்கு
 7. மனம் நல்லதாக அமையாமற்போனதால்
  நாயிடம் (!) கற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று...

  நல்ல கதை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாற்பது வயது நாய் குணம் என்பார்கள்...   அது நாய்க்குச் செய்யும் இன்சல்ட்!!!!

   நீக்கு
  2. 60,70 வயதுகளெல்லாம் என்ன குணம் ஶ்ரீராம்?:)... கொஞ்சம் சொல்லுங்கோ இங்கின நிறையப் பேருக்கு பிறந்தநாள்:).... ஹா ஹா ஹா
   ஹையோ மீக்கு சுவீட் 16:).

   நீக்கு
  3. ஏன் அதிரா, அந்தப் பாட்டு கேட்டதில்லையா....   பாரத விலாஸ் படத்தில் இந்த வரிகளை போட்டு தேடுங்கள்...  கிடைக்கும்!   அடுத்த வரியும் தெரியும்!  ஹா...   ஹா...  ஹா....

   நீக்கு
 8. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இன்றைய நாள் இனிதான நானாக அமையவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  சுவையான கதம்பமாக இருக்கிறது. படித்து விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...    வணக்கம், இனிய பிரார்த்தனைகளுக்கு  நன்றி.

   நீக்கு
 9. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 10. கதை அருமை.
  //வண்ணத்துப்பூச்சிகள் பறப்பதைக் கண்டால் உவகை ஆகி விடுவாள். மெல்லிய குரலில் பேசியபடியே செடிகளின் அருகே நிற்பாள். சமயங்களில் மெல்லிய குரலில் பாடியபடியே ஸ்கர்ட்டைப் பிடித்தபடி சிறு நடனம் ஆடுவாள்.//

  குழந்தையின் செயல் மகிழ்ச்சியை வரவழைத்து விட்டது. குழந்தை செய்வது கண்முன் காட்சியாக விரிந்தது.

  //இங்கும் அங்கும் திரும்பி ஓடுவதும் என்று, தான் விளையாடுவதை குழந்தைக்கு உறுதி செய்தது.//

  நாய் குழந்தையிடம் நட்பு கொள்ள செய்த சாகஸங்கள் அருமை.அன்பை , நட்பை நாடும் நாயின் செயல்பாடு அவரை திருத்தி விட்டது.
  இனி அந்த வீட்டு மனிதரும் அக்கம் பக்கத்து நட்புகளை பெறகாரியங்கள் செய்வார். அக்கம் பக்கத்து நட்புகளை பெறுவார் என்று நம்புவோம்.

  பதிலளிநீக்கு
 11. நாயிடம் மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியதும் உள்ளது.

  பதிலளிநீக்கு
 12. //தமிழ் சினிமா பற்றி வடநாட்டுக் காரர்கள் என்ன நினைக்கிறார்களாம்? தேசிய விருது தேர்வுக் கமிட்டியில் மூன்றுமுறை அங்கம் வகித்த வெண்ணிற ஆடை நிர்மலா அதுபற்றிச் சொல்லியிருக்கிறார். //

  படித்தேன்

  பாலசந்தரைப்பற்றி கல்யாணராமன் அவர்கள் சொன்னதை படித்தேன். அரசாங்க வேலையை விட தைரியம் வேண்டுமே! தன் மேல் ந்மபிக்கை வைத்து வேலையை விட்டு இருக்கிறார்.

  உங்கள் முகநூல் பகிர்வு சிரிப்பை வரவழைத்து விட்டது. இரு பக்க படியை பார்த்ததும் வந்த கற்பனை அருமை.

  பதிலளிநீக்கு
 13. சினிமாவைப் பற்றி மட்டுமல்லாமல் பொதுவானவை வடநாட்டு காரர்களுக்கு தென்னாட்டு காரர்களை குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ளவர்களை அறவே பிடிக்காது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிடிக்காது என்பதை விட இளப்பமாக நினைப்பார்கள்!   நன்றி ஜோஸப் ஸார்.

   நீக்கு
  2. அதே நேரம் அவர்கள் குருவாக நினைப்பது நம் சங்கரரையும், ராமானுஜரையும் தான். முக்திநாத்தில் ராமானுஜர் சந்நிதியில் இடம் பெற்றிருப்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். இருவரையும் ஆன்மிக குருவாக இரு கண்களாக நினைக்கும் வட இந்தியர் பலர் உண்டு.

   நீக்கு
  3. அந்நியப் படையெடுப்புக்களின் போது வீர சிவாஜியும் தென் தமிழகமுமே நம் சநாதன தர்மத்தையும், பல கோயில்கள், பல சுவடிகள், அறிஞர்களின் எழுத்துகள் எனக் காப்பாற்றிக்கொடுத்திருக்கிறது என்பார்கள். இவர்கள் இல்லை எனில் இந்த அளவுக்குக் கூட இந்த தர்மம் தழைத்திருக்காது என்பவர்கள் உண்டு. அவங்க சொல்லுவது அப்படி இருந்த நாடு/தென்னாடு இப்போது மாறி விட்டதே என்பதே! அதுவும் காலத்தின் கோலம் தானே! நல்லதொரு தலைவன் வந்தால் மீண்டு வரும்.

   நீக்கு
  4. மதராசிகள் சொல்வதும் செய்வதும் வேறு என்று வடக்கத்திகாரர்கள் சொலவார்கள் உ- ம் இந்தி யை எதிர்ப்பார்கள் ஆனால் ஹிந்தியில் தேர்ச்சி பெற்றி ருப்பார்கள்

   நீக்கு
  5. குழந்தை எம்ஜீஆர் என்று நம்புவோம் ஸ்ரீராம்சொல்கிறாரே சரியா

   நீக்கு
 14. சிறுகதை என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கதை என்பதால் அவர் திருந்தி விட்டதாக எழுதி விட்டீர்கள், நிஜத்தில் அப்படிப்பட்ட மனிதர்கள் திருந்தவே மாட்டார்கள். நாயை அடிக்காமல் விட்டதே பெரிய விஷயம். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருந்தும் மனிதர்களும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.  திருந்த வேண்டும் என்பது ஆசை!

   நீக்கு
 15. ஆஆவ்வ்வ் கதையில் அவர் திருந்தி விட்டார்ர்., ஶ்ரீராமின் கதைதானே அது. காட்சிகள் கண் முன்னே விரியும்படி எழுதியிருக்கிறீங்க மிக அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அவர் திருந்தி விட்டார்ர்., ஶ்ரீராமின் கதைதானே //

   மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் மதன் கமலும் நாகேஷும் பேசும் ஜோக் நினைவுக்கு வருகிறது!

   வாங்க அதிரா....  நன்றி.

   நீக்கு
 16. உங்கள் கதையைப் படித்ததும், பள்ளியில் ஆங்கில பாடமாக வந்த ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு தனவந்தர் பெரிய தோட்டத்திற்கு நடுவே வீடு கட்டிக்கொண்டு குடியிருப்பார். ஆனால் யாரிடமும் சிநேகம் கிடையாது, யாரையும் அண்ட விட மாட்டார். அவருடைய தோட்டத்தில் இருக்கும் மரங்கள் ஒன்று கூட பூக்காது, காய்க்காது. ஒரு நாள் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளின் பந்து இவருடைய தோட்டத்தில் வந்து விழுந்து விடும். அதை எடுக்க வந்து குழந்தைகள் அங்கு கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு செல்வார்கள். சத்தம் கேட்டு இவர் வழக்கம் போல் அவர்களை விரட்டி விட்டு விடுவார். ஆனால் அந்த வருடம் வசந்த காலத்தில் அவருடைய வீட்டு தோட்ட மரங்கள் முதல் முறையாக பூக்கும்.   

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஆவ்வ்வ்வ் இதுவும் நல்ல கதை.... மரங்களோடு பேசினால் பூக்காத மரமும் பூக்கும். அதனாலதான் நான்போனில பாட்டைப்போட்டு எங்கட அப்பிள் பெயார்ஸ் மரங்களில் கொழுவி விடுறனான்.

   நீக்கு
  2. ஓ...   நான் படித்ததில்லை.   

   மரங்களிடம் சென்று அன்பாகப் பேசினால் அது நல்ல பலனைக் கொடுக்கும் என்பார்கள்.  நாங்கள் தஞ்சாவூரில் ஒரு அவுட் ஹவுஸில் குடியிருந்த காலத்தில், அந்த வீட்டு ஓனர், டாக்டர் அனந்தநாராயணன், அப்போதே அவருக்கு வயது 80 இருக்கும், தினமும் காலை தோட்டத்தில் கைத்தடியுடன் நடந்து வருவார்.  ஒவ்வொரு செடியிடமும் நின்று ஏதோ பேசுவதைப் பார்த்திருக்கிறேன்!

   நீக்கு
 17. வெண்ணிற ஆடை நிர்மலாவின் பேட்டியை நானும் படித்தேன், ஆனால், எனக்கு பகிர வேண்டும் என்று தோன்றவில்லையே..!? அங்குதான் ஸ்ரீராம் நிற்கிறார். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...    ஹா...   ஹா...    நன்றி பானு அக்கா.    படிப்பதற்கு சுவாரஸ்யமாய் இருந்தது...   அதுதான் பகிர்ந்தேன்!

   நீக்கு
 18. கீதா ரங்கனுக்கு கணினி பிரச்சனை. வெங்கட் ஏன் வருவதேயில்லை? பதிவுகளையும் காணோம்? நலம்தானே? அலுவலகத்தில் அதிக வேலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிதான் சொன்னார். அவர் பதிவும் போடவில்லை.  எங்கும் வருவதும் இல்லை.   நெல்லை கூட சென்று விசாரித்திருந்தார்.   எப்போது வரமுடியும் என்று தெரியவில்லை என்பது போல வெங்கட் பதில் அளித்திருந்தார்!

   நீக்கு
 19. தேசியவிருதைக் கொடுப்பதற்கு அவர்கள் எவ்வளவு கஸ்டப்படுகிறார்கள் என்பது இப்போதான் புரிகிறது... பாடல் எழுதியவர்கள் அல்லது படத்தில் அமைத்தவர்கள்தானே போட்டிபோட்டுப் பாட்டுக்களை தேர்வுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
  ஆளையும் தெரியும் பெயரையும் தெரியும் ஆனா இவவுக்குத்தான் இப்பெயர் என இப்போதான் தெரியுமாக்கும் நேக்கு.. வெ நி:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெண்ணிற ஆடை நிர்மலா இப்போது பார்த்தால் அடையாளம் தெரிகிறதா?   படங்களில் வித்தியாசமாய் இருப்பார்-  கொஞ்சம்.

   நீக்கு
  2. அவ்வப்போது தொலைக்காட்சித்தொடர்களில் தலை காட்டி வருகிறார். இப்போக் கொஞ்ச நாட்களாகக் காணோம்.

   நீக்கு
  3. நான் தொலைக்காட்சித் தொடர்கள் பார்ப்பதில்லை கீதா அக்கா.

   நீக்கு

 20. எம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன்! நீங்களும் பாருங்களேன்...////

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நோஓஓ இது ஆரு பெத்த பிள்ளையோ:) ஹா ஹா ஹா நான் நம்ப மாட்டேன்ன்ன்ன்ன் என்னை ஆரும் பேய்க்காட்ட முடியாது:)😸😸

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா...  ஹா... ஹா...    ஆர்வமுடன் வந்து பார்த்த அண்ணன் மகன் வெறுப்புடன் திரும்பிப் போனது நினைவுக்கு வருகிறது!

   நீக்கு
 21. யாரது பேப்பரில் எழுதி விளையாடியிருப்பது?:), கொம்பியூட்டர் வரும்போது படிக்கிறேன்.
  அது ஆர் கனகா?:) அமலா?:)... ஓ இவர்கள் அனுக்காவுக்கு முன்போ?:) ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகம் வந்த உடன் பேனா நன்றாக எழுதுகிறதா என்று கிறுக்கிப் பார்த்திருப்பார்கள்! கனகா தெரியாது?  நம்ம தேவிகாவோட பொண்ணு...!

   நீக்கு
 22. எதுக்கு இரவில கோயிலுக்குள் போறீங்க கர்ர்ர்ர்ர்ர்:)... 🙀


  சரி சரி கீசாக்கா பொயிங்கப்போறாக:)
  கோமதி அக்கா தேடப் போறாக:)
  கெள அண்ணன் ஓசிக்கப் போறார்ர்:)
  எல்லோரிடமும் வருவேன் கொஞ்சம் மத்தியானத்துக்கு மேல்தான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுற்றுப்பயணத்தில் அங்கு சென்ற நேரம் மாலையாகி விட்டது.   அதுதான்!

   நீக்கு
  2. தாராசுரம் தானே? காமிரா வாங்கியதும் இந்தக் கோயிலிலும், குடந்தை ராமசாமி கோயிலிலும் தான் முதல் முதல் படங்கள் எடுத்தேன்.

   நீக்கு
  3. ஓ...    தாராசுரத்தில் படங்கள் எவ்வளவு எடுத்தாலும் திருப்தியே வராது!

   நீக்கு
 23. வணக்கம் சகோதரரே

  "நாய்" சிறுகதை நன்றாக இருந்தது. ஆறரறிவு பெற்ற மனிதன் தனக்கு முன்னால் குறைந்த அறிவு உள்ளவர்களிடம் கற்க வேண்டியது நிறைய உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் கதை. அருமையாக இருக்கிறது. அவர் திருந்த காத்திருக்கும் போது எவரும் வரவில்லை. ஆனால் திருந்த நினைப்பவர் சமயங்கள் வரும் போது திருந்தி விடுவார் எனவே நம்புவோம். அந்த வகையில், தன் நன்றியை மட்டுமே எப்போதும் காட்டும் அந்த நாலு கால் பிராணிக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா அக்கா.  கற்றுக் கொடுத்த அந்த நாய்க்கு குரு என்று பெயர் வைத்துவிடலாம்!   ஹா... ஹா...  ஹா...

   நீக்கு
  2. ஹா ஹா ஹா. பேசாமல் "குரு சிஷ்யன்" என பெயர் வைத்திருக்கலாம். கதை மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இரண்டாம் முறையும் படித்து ரசித்தேன்.

   நீக்கு
  3. குரு சிஷ்யன் கூட தலைப்பு நல்லாதான் இருக்கு!

   நீக்கு
 24. வணக்கம் சகோதரரே

  வெண்ணிற ஆடை நிர்மலா அவர்கள் சொன்னது முற்றிலும் சரியாகவே தோன்றுகிறது. அவர் கூறுவது போல் தமிழ் சினிமாக்கள் எளிதில் விருதுகளை பெற இயலவில்லை. சொல்லாமலே படம் நன்றாக இருக்கும்.

  உண்மையில் அது எம்ஜிஆர் என்றால், குழந்தையிலும், அவர் அழகாக உள்ளார்.

  பாலசந்தர் கூறியது கனகா எவ்வளவு இடையூறு தந்திருந்தாலும் படிக்க முடிந்தது. அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது. அவரின் திறமைக்கு தெய்வமும் துணையாக இருந்திருக்கிறது. அதனால்தான் அவரின் அரசு வேலையையும் தைரியமாக விட வைத்திருக்கிறது.

  கோபுர கோவில் நன்றாக உள்ளது. படிகள் அவ்வளவா? இடப்பக்கம் ஏறி வலப்பக்கம் இறங்குவதற்குள் காலை தொடங்கி மாலை முடிந்து விடுமா? தங்கள் கற்பனை அருமை.. .

  ஆமாம்..! அங்கு வருகைக்கு காத்துக் கொண்டு வீற்றிருப்பவர் விநாயகரா? அப்படியென்றால், இதுவும் உண்மைதான்... எல்லா கோவிலுக்குள் செல்லவும் எப்போதுமே இவரிடம் லேட்டாக வந்ததற்கும்,லேட்டஸ்டாக வருவதற்கும் தலையில் குட்டிக் கொண்டு அட்டெண்டனஸ் வைத்துதானே ஆக வேண்டும்.ஹா ஹா ஹா. எல்லாமே நன்றாக இருந்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 25. கதை மிக அருமை. எஜமானரே ஏவி விட்டாலும் குழந்தையிடம் அன்பைக் காட்டி நெகிழ வைத்து விட்டது. அந்தக் காட்சியைக் கண் முன் கொண்டு வந்தன தங்கள் வரிகள்.

  எம்ஜிஆரின் குழந்தைப் பருவப் படம் இதுவரைக் காணாதது.

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 26. சிறுகதை உளவியல் ரீதியான கதை. அதனால் தானோ பின்னூட்டங்களில் சுணக்கம். வாசித்தவர்களையும் அந்த நாயைப் பற்றியே நினைக்க வைத்து அந்த 'அவரை' மறக்கடித்ததில் உங்கள் சாமர்த்தியம் தெரிகிறது. கு. அழகிரிசாமியைப் படித்ததில்லை என்று சமீபத்தில் நீங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது. கு.அ.வும் இப்படித் தான். முழுக்கதையை முழுசாகப் புரிந்து கொள்ள முடியாமல் எழுதுவதில் வல்லவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஜீவி ஸார்... பாராட்டு(தானே)க்கு நன்றி. கு அழகிரிசாமி படிக்க வேண்டும்!

   நீக்கு
  2. சந்தேகமே இல்லாமல் அது பாராட்டு தான். அதனால் தான் கு.அ.-- வே இங்கு உதாரணமானார்..

   நீக்கு
 27. ஆனந்த விகடனில் 'நான் ஏன் பிறந்தேன்' என்று எம்ஜிஆரே தன்னைப் பற்றிய எழுதிய தொடர் கட்டுரையின் பைண்டிங் கிடைத்தால் நிஜப் படமே கிடைக்கலாம் என்று தேசலான ஒரு நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி. எம் ஜி ஆர் படம் பற்றி புரிந்து கொண்டுள்ளீர்கள்! 'நான் ஏன் பிறந்தேன்' என்னிடம் இருக்கிறதா என்று நானே அறிய மாட்டேன்!!!

   நீக்கு
 28. 'தினமலரை' அந்த ஏழு ரூபா காசுக்கு சக்கையான பயன்படுத்திக் கொள்வதில் எனக்கு மஹா திருப்தி.

  'குப்பண்ணா என் நண்பர். பக்கத்துத் தெரு டீக்கடையில் நாங்கள் சந்திப்பது வழக்கம். டீயோ, கடையோ எங்களுக்கு முக்கியமல்ல. காலை செய்தித் தாளை மேய்ந்தவுடன் மனசில் பட்ட எண்ணங்களை பரிமாறிக் கொள்ள ஒரு இடமும், நமக்கேத்த நட்பும் வேண்டும் என்ற விருப்பத்தில் விளைந்த எங்களுக்கான பழக்கம் இது'....

  -- இப்படியாக ம.உ.உடலில் ஒரு குப்பண்ணா வந்தாரே, நினைவு இருக்கிறதா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ம.உ.உடலில்//

   யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை ஜீவி ஸார்.

   நீக்கு
  2. ம.உ.உடலில்...

   மனம் உயிர் உடல்.. 18-வது பகுதியில்..

   நீக்கு
 29. புதிதாய் பேனா வாங்கினால் நன்றாக எழுதுகிறதா என்று டெஸ்ட் பண்ணிப் பார்க்க்கும் பொழுது பலர் தங்கள் பெயரைத் தான் எழுதிப் பர்ப்பார்கள் என்று தமிழ்வாணன் சொன்னதைப் படித்ததிலிருந்து
  பேனா வாங்கி சோதனையோட்டம் பார்க்கும் பொழுது,
  'கண்ணதாசன்' - ஜெயகாந்தன் -- என்று எழுதிப் பார்ப்பது தான் என் நெடுநாளைய பழக்கம்.

  தமிழ்வானனின் கூற்றுப்படி நிச்சயம் அது கனகாவின் எழுத்தாயு தான் இருக்கும். இங்க் பேனாவில் எழுதியதா, பால் பாயிண்ட் பேனாவா என்று வாசகரை யோசிக்க வைத்திருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் புதிதாய் பேனா எடுத்தால் அல்லது நாளின் தொடக்கத்தில் பேனா உபயோகிப்பதாய்  இருந்தால் முதலில் 'ஓம்' என்று எழுதி விட்டு அப்புறம் செய்ய வேண்டிய வேலையைச் செய்வது வழக்கம்.   பல வருடங்களாய் மாற்றிக் கொள்ள முடியாமல் படிந்து விட்ட வழக்கம்!

   நீக்கு

 30. //எம் ஜி ஆரை குழந்தை பருவத்தில் பார்த்திருக்கிறீர்களா?///


  ஆமாம் என் குழந்தை பருவத்தில் எம்ஜியாரை பார்த்து இருக்கிறேன் ஆனால் அவரின் குழந்தை பருவத்தில் நான் பார்க்க நான் ஒன்றும் அவ்வளவு வயதானவன் அல்ல

  பதிலளிநீக்கு
 31. எங்கே இந்த நெல்லைத்த தமிழனைக் காணோம்?  என்னதான் பயணம் என்றாலும் ஒரு கமெண்ட்டாவது வந்திருக்க வேண்டுமே...   "நெல்லை....    நெல்லை..."

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மொபைல்ல பார்த்துப் படிப்பேன். பதில் எழுத நேரமே இருக்காது. பிறகு எழுத நினைத்தபோது, வெள்ளி தாண்டியாயிற்று..இனி யார் வியாழன் கமெண்டைப் பார்த்து பதில் அளிக்கப்போகிறார்கள் என்று இருந்துவிடுவேன். இன்று சென்னை வந்தேன்.

   நீக்கு
  2. வாங்க நெல்லை...  பயணத்தில் இருந்தாலும் ஒரு கமெண்ட்டாவது வருமே என்று பார்த்தேன்.

   நீக்கு
 32. கதை நம்பும்படி இல்லை. நாய், எஜமானன் சொல்வதை மட்டும்தான் செய்யும். இந்தக் கதையின் சாயலில் புகழ்பெற்ற கதை இருக்கு. அதில், ஒரு தாத்தா, தன் வீட்டு வாதா மரத்தில் வாதாங்காய்களைப் பறிக்க வரும் சிறுவர்களைத் துரத்திக்கொண்டே இருப்பார், திட்டுவார், தடியை அவர்களை நோக்கி எறிந்து, கீழே விழுந்துகிடக்கும் வாதாங்காய்களை (வாதாங்கொட்டை) தன் வீட்டுக்குள் சென்று வைப்பார். ஒரு நாள் அவர் இறந்ததும், அவரது மனைவி, சிறுவர்களைக் கூப்பிட்டு, வீட்டில் ஒரு அறை முழுவதும் கிடக்கும் வாதாங்கொட்டைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லுவாள் என்பதுபோன்ற கதை.

  இருந்தாலும் கதை ஏதோ ஒரு நீதியைத் தன்னுள்ளே வைத்துள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள்சொல்லும் கதை பற்றி நான் கேள்விப்பட்டதில்லை நெல்லை.  என்னதான் எஜமானன் கொடூரமானவனாக இருந்தாலும் நாயும் அப்படியே இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லையே...

   நீக்கு
 33. நான் படித்தபோது அந்தக் கையெழுத்து என் கண்ணில் படவில்லை. பிறகுதான் 'கனகா' என்ற கையெழுத்துகளைப் பார்த்தேன். இதுவும் நம் மூளை சம்பந்தப்பட்டதோ?

  பாலசந்தர் மிகவும் கஷ்டப்பட்டு சிற்பி போல திரைக்கதை வடிப்பார். ஆனால் அபூர்வமான நிகழ்வை, ரசனைக்குறைவாக தன் படங்களில் அவர் பயன்படுத்திக் கதை எழுதினார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் அர்ஜுனன் மாதிரி...   தேவைப்படுவது மட்டுமே கண்ணிலும் கருத்திலும் படுமென்று நினைக்கிறேன்.

   நீக்கு
 34. வெ.ஆ.நிர்மலா சொல்லுவதில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை கிடையாது. தமிழர்களிடத்தில் காலை வாரும் போக்கும், இவனுக்குக் கிடைக்கக்கூடாது என்ற போக்கும் நிறைய உண்டு. அதை வெளியே வந்து ஒத்துக்கொள்ளப் பிரியப்படாமல் இந்த மாதிரி சொல்லிடுவாங்க.

  குவாலிட்டில மற்ற மொழிப்படங்களும் நல்லாவே இருக்கு. தமிழ்ல ராசி மாதிரி வந்த படம் என்ன இருக்கு?

  பதிலளிநீக்கு
 35. சொல்லாமலே படத்தை நான் ரசித்திருந்தபோதும், கதாநாயகன் ஆஹா ஓஹோன்னு நடிக்கலை. அதுவும் முத்தின மூஞ்சிதான். அப்படி விமர்சித்ததில் என்ன தவறு?

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!