ஞாயிறு, 3 நவம்பர், 2019

திடீரென்று குறுக்கே வந்த கார்



உலகிலேயே மிக அதிகமான மழை பொழியும் இடத்துக்கு செல்கிறோம் என்று குடை ரெயின் கோட் எல்லாம் எடுத்து சென்று காரில் உட்கார இடம் இல்லாமல் ..........................................................


7 சகோதரிகள் எனப்படும் 7 நீர்வீழ்ச்சிகள் இருக்குமிடத்துக்கு....



போய் பார்த்தோம் 2 நாட்களாகவே மழை இல்லாது கொஞ்சம் சோகையான நீர்வீழ்ச்சிகளையே பார்க்க முடிந்தது

வழக்கமான உள்ளூர் கைவினைப் பொருள் விற்பனை நிலையம்

எப்போதும் மழையாக இருப்பதால் வண்டலாக மண் சேர்ந்த இடத்தில் மட்டும் தாவரங்கள் 




ஆங்காங்கே சில குடியிருப்புகளும்

பாருங்களேன் ..  மரச்சட்டங்களினால் ஆன வேலிகளை பெயிண்ட் அடித்துப் பராமரித்தல் அவ்வளவு கடினம் என்று..

உயர்ந்த இடத்தில் அமைந்த பள்ளியின் தரமும் அப்படியே என்கிறார்கள்


இஸ்மாயில் தேர்ந்த ஓட்டுநர் என்பதற்கு 

இந்தப் பாதையும்

திடீரென்று குறுக்கே வந்த இந்தக்காரும்

பள்ளி மாணவர்களும் சான்று.

அட நம்ம பேங்க்!


உயரத்திலிருந்து சற்றே கீழே வந்தால் மீண்டும் தாவரங்கள்

அருவியின் தோற்றம்.  வேறு காமெரா வழி

இடத்தின் பெயர்?


 வண்டிகள் நிறுத்தப் பல வருடங்களுக்கு இ ட நெருக்கடி வராது

பள்ளி  இருக்கும் மலையிலிருந்து வந்த பாதை

ஆரஞ்சு ரூட் எனும் பிரபலமான உணவகம்

உணவகத்துள் மூங்கில் தட்டிக் கூரை

ஆர்டர் செய்த உணவு வந்து, உண்ணும் வரை எல்லோருடைய கைப்பேசியையும் சார்ஜ் செய்ய முடிந்தது

40 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...   வாங்க..  வாங்க...

      நீக்கு
  2. காலை வணக்கம் அனைவருக்கும்,

    படங்கள் எப்போதும்போல் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் நெல்லை.

      'எப்போதும்போல' உங்கள் பின்னூட்டத்துக்கு  நன்றி!!

      :))

      நீக்கு
  3. அனைவருக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள். படங்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கின்றன. காருக்குள் ஏதோ உம்மாச்சி படம் மாதிரித் தெரியுதே? சோகையாய்த் தெரியும் அருவி மற்றொரு காமிரா மூலம் நன்றாக வருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது உம்மாச்சி படம் இல்லை. அது யந்திரம் படம் (சுதர்சன எந்திரமோ?)

      நீக்கு
    2. வாங்க கீதாஅக்கா...  வணக்கம்.   நல்வரவும், நன்றியும்.

      நீக்கு
  4. உயர்ந்த இடத்தில் இருக்கும் பள்ளிக்கட்டிடம் நன்றாகவே இருக்கிறது. தாவரங்கள் எல்லாம் பசுமையாகத் தெரிகின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சி! சாலை சுத்தமாக இருப்பது மனதில் சந்தோஷத்தைத் தந்தாலும் நம்ம ஊர்ப்பக்கத்துச் சாலைகளை நினைத்தால் கோபமும் வருகிறது.

    பதிலளிநீக்கு
  5. இன்னிக்குப் படங்களுக்குக் காப்ஷன் யாரு? என் டாஷ் போர்டில் நேற்றைய பதிவின் தலைப்பு மாறித் தெரிகிறதோ என்று சந்தேகம்! நேற்று வேறு ஏதோ தலைப்பு அல்லவோ இருந்தது! இங்கே வந்து பார்த்தால் தலைப்பு மாறி உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இன்னிக்குப் படங்களுக்குக் காப்ஷன் யாரு?/

      நான் இல்லை!

      //நேற்று வேறு ஏதோ தலைப்பு அல்லவோ இருந்தது! இங்கே வந்து பார்த்தால் தலைப்பு மாறி உள்ளது.//

      நேற்று நீங்கள் பார்த்தது நேற்றைய பதிவின் தலைப்பு.  இன்று நீங்கள் பார்ப்பது இன்றைய பதிவின் தலைப்பு.  மாறிவிடும் அல்லவா நித்தமும்!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், சனிக்கிழமைப் பதிவின் தலைப்புத் தான் வேறே ஏதோ இருந்ததாக நினைவு. ஆனால் டாஷ்போர்டில் வேறே தலைப்பு வருது! :))))))
      படங்களின் விளக்கங்கள் நீங்க இல்லைனு புரிஞ்சது. அதான் கேட்டேன்.

      நீக்கு
  6. தங்களால் நானும் கண்ணுக்கு அழகிய காட்சிகளைக் கண்டேன்..

    மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
  7. காலை வணக்கம்
    சிரபுஞ்சியா...? அமைதியாய்,அழகாய் இருக்கிறது. தினமும் மழை என்பதால் பெயிண்ட் அடித்து மெயின்டெயின் செய்வது கஷ்டம் தான்...போல...
    நீர்வீழ்ச்சி ஆழமான இடத்தில் வீழ்கிறது.அருகில் செல்ல முடியாது.வரிசையாய் 7 நீர் வீழ்ச்சியும் விழும் போது கண்களுக்கு விருந்தாகும்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை மனதாற பிரார்த்திக்கிறேன்.

    அத்தனைப படங்களும் அழகாக இருக்கின்றன. மழை இல்லை என்பதினால் ஏழு நீர்வீழ்ச்சி படங்களை சேர்ந்தாற்ப் போல் எடுக்க முடியவில்லை.இல்லையா? அவ்வளவு தூரம் பார்ப்பதற்காக சென்று விட்டு அதை பார்க்க முடியவில்லை என்றால் கஸ்டந்தான்...!

    வேறு காமிரா மூலமாக எடுக்கப்பட்ட ஒற்றை நீர்வீழ்ச்சி படம் மிகவும் அழகு.

    குறுகிய இடத்தில் கவனமாக வண்டியை செலுத்தும் ஓட்டுனரின் திறமையை பாராட்ட வேண்டும்.

    உணவகத்தில் மூங்கில் கூரை... ஏன் அப்படி அழகுக்காகவா? மழைக்கு பாதுகாப்பாகவா? படங்களும் அதற்குரிய வாசகங்களும் நன்றாக உள்ளது. படங்களை பார்த்து ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  9. வண்டிகள் நிறுத்தப் பல வருடங்களுக்கு இ ட நெருக்கடி வராது//

    சென்னைவாசிகளுக்கு இதை பார்த்தால் பொறாமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  10. படங்கள் அனைத்தும் அருமை...

    அருவி செம...!

    பதிலளிநீக்கு
  11. படங்கள் அழகு. உணவகம் பற்றிய எனது பகிர்வு....

    http://venkatnagaraj.blogspot.com/2016/12/orange-roots.html?m=1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி வெங்கட்.  மறுபடியும் அங்கு சென்று பார்த்து வந்தேன்.

      நீக்கு
  12. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  13. இஸ்மாயில் தேற்ந்த ஓட்டுனர் தான்.
    சந்துகள், பாதை நன்றாக இல்லாத இடத்திலும் கவனமாய் ஓட்டி சென்று இருப்பது தெரிகிறது.
    அருவியில் தண்ணீர் கொஞ்சமாய் விழுவது ஏமாற்றமாய்தான் இருந்து இருக்கும்.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் சொல்லித்தான் தெரிய வேண்டும் அதிகமழை பொழியும் இடம் என்று

    பதிலளிநீக்கு
  15. பயணக் காட்சிகள் அருமை.

    நீர் வீழ்ச்சி மிக அழகு.

    பதிலளிநீக்கு
  16. போகவேண்டும் என்ற ஆசையைத் தூண்டும் படங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!