ஞாயிறு, 24 நவம்பர், 2019

மஞ்சள் மலரே... கொஞ்சம் திரும்பு...



'தீம் பார்க்'கின் எதிர்புறம் இருக்கும் இந்த மரங்களின் அடர்த்தி பார்த்தால் ....


எத்தனை மரங்களை அழித்தார்களோ என்று தோன்றினாலும்


அவர்கள் நட்டிருக்கும் புது மரங்களை  பார்க்கும்போது


பக்கத்தில் இருக்கும் இடம் சமவெளி போலிருப்பதையும் பார்த்தால்


நாம் அடுத்த முறை வந்தால் அடையாளம் தெரியாமல் வளர்ந்திருக்குமோ?


 வருது வருது ...மேகம் வருது



வந்த மேகம் வழிந்தோடி விட்டதோ?!



இல்லை!  கலந்து விரவி நிற்பதால் கதிரவனும் களையிழந்து போனான்!


மேகங்களில் அமர்ந்து ஓடங்கள் போல் செல்ல முடிந்தால்...






மேகத்தை எட்டிப் பிடித்து விடுவாரோ?



உந்தும் வேகத்தில் உயரங்களை எட்டலாம்...

அபராதம் எதற்கு என்ற பகுதியை தனியே படம் எடுத்திருந்தோம்
இப்போ காணோம்.


அழகாய் இருந்தாலும் வழியில் இருந்தால் இடைஞ்சல்தான்!


மஞ்சள் மலரே...  கொஞ்சம் திரும்பு...


காத்திருப்பு எதற்கு? 'ஒரு' விஷயமாய்ச் சென்றிருப்பவர்களுக்காகத்தான்...


நாற்கடையில் இருகடை சாத்தியிருக்க, ஒருகடையில் ஏற்கெனவே இருவர் காத்திருக்க...  கவலையில்லை..   நாங்கள் செல்வது அங்கில்லை...




இங்கே


வரோம்....  அடுத்த முறை வரும்போது மரங்கள் நல்லா வளர்ந்திருக்கணும்... சரியா....


43 கருத்துகள்:

  1. மறவற்க மாசற்றார் கேண்மை..

    வாழ்க நலம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .....துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு


      வாழ்க நலம்.

      நீக்கு
  2. அனைவருக்கும் அன்பின் வணக்கம்... ம்

    பதிலளிநீக்கு
  3. மஞ்சள் மலரே மெல்லத் திரும்பு...
    நெஞ்சில் இனிக்கும் செல்லக் கரும்பு..

    கவித... கவித...

    பதிலளிநீக்கு
  4. மஞ்சள் மலரே
    மெல்லத் திரும்பு - எந்தன்
    நெஞ்சினில் இனிக்கும்
    செல்லக் கரும்பு..
    செவ்விதழ் அழகில்
    வையம் துரும்பு - தமிழ்
    சொல்லச் சொல்ல
    மல்லிகை முல்லை அரும்பு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் துரை சகோதரரே

      கவிதை அழகாக வந்துள்ளது. தலைப்புடன் சேர்ந்த வரிகளையும், தனித்துவம் பெற்ற வரிகளையும் ரசித்தேன்.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    2. விடியற்காலையில் சும்மா எழுதி வைத்தேன்...

      கவிதை அழகாக வந்துள்ளது என்று தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி...
      நன்றி...

      நீக்கு
    3. நல்ல ரசனையோடு எழுதி இருக்கிறார் துரை. கவிதைக்குப் பாராட்டுகள்.

      நீக்கு
    4. கலக்கிட்டீங்க துரை செல்வராஜூ ஸார்...   ஸூப்பர்.

      நீக்கு
  5. அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம்,வாழ்த்துகள், பிரார்த்தனைகள். ஆறரை மணிக்கு (உங்களுக்கு ஆறு மணி) வர இருந்தேன். கணினியில் சார்ஜ் இல்லை. ரேவதி கூப்பிட்டுப் பேசினாங்க! அதான் வர முடியலை!

    பதிலளிநீக்கு
  6. ஒரு வழியா இந்தப் பயணம் முடிஞ்சாச்சு போல. அடுத்து எங்கே பயணம் அடுத்தவாரம் என்ன வரும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பயணம் முடிஞ்சாச்சு போல.//

      நீங்களாக நினைத்துக் கொள்ளும் விஷயங்களுக்கு நான் பொறுப்பல்ல!

      நீக்கு
    2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இங்கே வடகிழக்கு மாநிலங்களின் சுற்றுப்பயணப் படங்கள் இந்த வாரத்தோடு முடிந்தது என்பதைத் தான் அப்படிச் சொன்னேன். உங்களை இல்லை! கடைசியில் பை, பை சொல்லி இருக்காரே. அதான் சிரபுஞ்சிப் பயணம் முடிஞ்சு அடுத்த வாரம் வேறே வருமா எனக் கேட்டிருந்தேன். தெளிவாய்ச் சொல்லாதது என் தப்பு! :))))))

      நீக்கு
    3. //வரோம்.... அடுத்த முறை வரும்போது மரங்கள் நல்லா வளர்ந்திருக்கணும்... சரியா....// இதைக் குறிப்பிட்டிருந்திருக்கணும். எப்படியே விட்டுப் போய்விட்டது.

      நீக்கு
    4. //அடுத்தவாரம் என்ன வரும்?// இதிலே இருந்து புரிஞ்சிருக்கலாமோ? :))))))))))))))))))))))) க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

      நீக்கு
  7. //மேகங்களில் அமர்ந்து ஓடங்கள் போல் செல்ல முடிந்தால்...மேகத்தை எட்டிப் பிடித்து விடுவாரோ?// சரியா வரலையே! மற்றப் படங்களும், அதற்கான தலைப்புக்களும் நன்றாக வந்திருக்கின்றன. சில ஸ்ரீராம் போல, சில கேஜிஎஸ்! அப்படினு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே ஸ்ரீராமைக் காணோம்? கேஜிஜி, புதன்கிழமை மட்டும் வருகிறார். நடுவில் கொஞ்சம் வியாழக்கிழமை எட்டிப்பார்ப்பார்! யாரையும் காணோமே!

      நீக்கு
    2. ஆமாம்.  கூட்டு முயற்சிதான்.  ஓடங்களை மேலே அனுப்ப முயற்சித்தேன்.

      //எங்கே ஸ்ரீராமைக் காணோம்?//

      ஆபீஸ் வேலை கொல்கிறது  என்றால் மிகையல்ல...  வடிவேலு மாதிரி "சாவடிக்கிறாங்களே..." என்று சொல்லாத குறை!

      நீக்கு
  8. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் மனப்பூர்வமாக ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

    அத்தனைப் படங்களும், அதற்கு பொருத்தமாக வாசகங்களும் நன்றாக உள்ளது.

    மேகப்படங்கள், மலர் படங்கள் மரங்கள் இல்லா படங்கள், அடுத்த முறை வரும் வரும் போது மரங்கள் வளர்ந்து செழிப்பாக இருக்கும் என நம்பிக்கை கொண்ட படங்கள் என அனைத்தும் அருமையாக உள்ளது.

    உண்மைதானே! உந்துதல் இல்லாவிடில் வாழ்வில் உயரத்தை எட்ட இயலாதே ! அதை ஊஞ்சல் படமும் உறுதி செய்கின்றது.

    "நாற்கடையில் இரு கடை சாத்தியிருக்க" இந்த வரிகள் கவிதை மாதிரி அழகாக வந்திருக்கிறது. ரசித்தேன்.

    இறுதியில் விடை கொடுத்த படமும் அழகு. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. கொஞ்சம் தாமதமாகி விட்டது. மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   எழுதியவற்றைப் பாராட்டியதற்கு நன்றி. 

      நீக்கு
  9. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  10. படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது . அதன் கீழ் கொடுக்கப்பட்ட வாசகங்களும் ரசிக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. பதில்கள்
    1. ஞாயிறு வணக்கம். படங்கள் மிக அழகு. வழக்கம் போல் தலைப்புகள் உயிரூட்டுகின்றன.
      அன்பு துரையின் குறளும் ஸ்ரீராமின் மறு வரியும் அருமை.
      துரையின் கவிதைக்கு ஏது இணை.

      இந்தப் பயணம் பூர்த்தியாகிறதா படத்தில் நிற்பவர் யாரோ.
      குழந்தைகள் அருமை.நம் மகிழ்ச்சிக்கு அவர்களே காரணம்.

      நீக்கு
    2. சின்னச் சின்ன வார்த்தைகளைக்
      கவிதை என்று பாராட்டியதற்கு மகிழ்ச்சி... நன்றியம்மா...

      நீக்கு
    3. வாங்க வல்லிம்மா...   வணக்கம்.   இனிய பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. படங்களுக்கு தலப்பு எழுதுவதுசிரமம்தான் அதுவும் படங்கள்ப்பெரும்பாலும் மலைகளாகவும் மடுவுக்ளாகவும் இருந்தால் சிரமம் அதிகரிக்கும்

    பதிலளிநீக்கு
  13. மலைகளாகவும் முகடுகளாகவும் என்று இருந்திருக்க வேண்டுமோ

    பதிலளிநீக்கு
  14. அழகாயிருந்தாலும் வழியில் இருந்தால் இடைஞ்சல் தான்.

    எதைச் சொல்கிறீர்கள்?.. அபராத விதிப்பு அறிவிப்பு பலகையையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மலர்கள் மலர்ந்திருக்கும் செடிகளை ஜீவி ஸார்...   படிக்கட்டுகளில் இருப்பது போல தெரிந்தது.

      நீக்கு
  15. மஞ்சள் மலர்களை விட இங்கு காணும் சுத்தம் தான் கண்ணைக் கவருகிறது!.. அதனால் மஞ்சள் மலரே-- கொஞ்சம் திரும்புக்கு மாற்றாக --

    அலம்பி விட்டாற் போன்ற வெண் தரையே!
    அழுக்காமலிருக்க வரம் பெற்றாயோ, பெண்ணே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுத்தமாகப் பராமரிக்கிறார்கள் போல...   இதில் பொதுமக்கள் ஒத்துழைப்பும்முக்கியம் இல்லையா ஜீவி ஸார்?

      நீக்கு
  16. அழகிய காட்சிகள்.

    மஞ்சள் மலர்களில் ஆரஞ்சு வண்ணமே அதிகம் உள்ளது :)!

    இளவரசர் உயரங்களை எட்டட்டும்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!