சனி, 30 நவம்பர், 2019

சித்தார்த் 


1)  தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள கணினி மென்பொருள் நிறுவனத்தில், 12 வயது சிறுவன்  சித்தார்த் ஸ்ரீவத்சவ் பில்லி, 'டேட்டா சயின்டிஸ்ட்' ஆக பணியில் சேர்ந்து உள்ளது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது....




2)  28 ஆண்டு பணிக்காலத்தில், 53வது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டும் விடாமல் நேர்மையைக் கைவிடாத ஐ.ஏ.எஸ்., அதிகாரியான அசோக் கெம்கா.




====================================================================================


இந்தக் கட்டுரையை எழுதி இருப்பது திருமதி ரமா ஸ்ரீநிவாசன்.  இவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அடிக்கடி கட்டுரைகள் எழுதுபவர்.  எங்கள் பிளாக்குக்காக அவர் எழுதித்தந்த கட்டுரை இங்கே...   ஆங்கிலத்தில் அவர் அனுப்பியிருந்த கட்டுரையை தமிழ் மொழியாக்கம் செய்திருப்பவர் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள்.  இருவருக்கும் நன்றி.


மகளிர் மேம்பாடு
ரமா ஸ்ரீநிவாசன் 
(மொழிபெயர்ப்பு :  திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன்)


  இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை சமூகத்தின் பல பகுதிகள் பெரும்பாலும் ஆண்களின் உலகமாகத்தான் இருந்தன. ஏறத்தாழ 5000 ஆண்டுகளாக சமைப்பதையும், குழந்தைகளை வளர்ப்பதையும் தவிர வேறு எதையும் பெண்கள் செய்யவில்லையா? தொழில்நுட்பத்தை மேம்படுத்தினார்கள், கலை, இசை, நடனம் இவைகளில் புதுமையை புகுத்தினார்கள், இலக்கியத்தில் தங்கள் பங்களிப்பை செய்தார்கள்,புதிய இடங்களை கண்டு பிடித்தார்கள், போர்க்களத்தில் படைகளுக்கு தலைமை ஏற்று நடத்திச் சென்றார்கள், பிரமிக்கத்தக்க தலைவிகளாக விளங்கினார்கள். இவை எல்லாவற்றையும் நிறைவேற்ற கடுமையான தடைகளை அவர்கள் தாண்ட வேண்டியிருந்தது. 

இன்றைய பெண் வெறும் ஹோம் மேக்கர் என்னும் நிலையிலிருந்து ட்ரீம் மேக்கர் என்னும் நிலைக்கு உயந்திருக்கிறாள். சென்ற நூற்றாண்டு வரை அவளை விட ஒரு படி உயர்ந்தவனாக கருதப்பட்ட ஆணுக்கு இணையாக பல துறைகளிலும் கோலோச்சுகிறாள். இதை நான் சுய லாபம் கருதியோ, அல்லது ஆண்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதற்கோ கூறவில்லை. இத்தனை காலங்களாக அவளுக்கு மறுக்கப்பட்ட முன்னுரிமையை தகர்த்து, ஆண் செய்யம் பெரும்பாலான காரியங்களை தானும் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறாள் என்பதுதான் விஷயம்.

அதே நேரத்தில் இன்றும் பெண்கள் ஒரு தாயாகவும், குடும்பத் தலைவியாகவும், குடும்பம் என்னும் நிறுவனத்தையும், சமூகத்தையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க தங்கள் பங்களிப்பை தருவதில் எந்த குறையும் வைக்காமல், தங்கள் தனித்தன்மையை காப்பாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். காலம் காலமாக சமுதாயம் அவளுக்களித்த காயங்களின் வடுக்கள் அவள் முன்னேறுவதை சற்று தாமதப் படுத்தினாலும்   இன்றைய ஆணுக்கு அலுவலகத்தில் அவள் கொஞ்சம் பயம் கொடுப்பவளாகத்தான் இருக்கிறாள். தான் கொஞ்சம் சறுக்கினால் அந்த இடத்திற்கு ஒரு பெண் வந்து விடுவாள், அதையும் சிறப்பாக செய்யும் பெண்  என்னும் பயம்.  

வீடு, வேலை செய்யும் இடம் இந்த இரு இடங்களிலும் தங்கள் திறமையை நிரூபிக்க வேண்டும் என்பது மிகவும் சோர்வளிக்க கூடிய ஒன்று. அதிலும் குறிப்பாக இவை இரண்டையும் ஒரு குறிப்பிட்ட கால கெடுவுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்பது கயிற்றின் மேல் நடக்கும் வித்தை போன்றது. ஒரு பெண்ணிடமிருந்து வீடு மிக அதிகமாக எதிர்பார்க்கிறது. குழந்தைகளை கவனிக்க வேண்டும், வீட்டில் முதியவர்கள் இருந்தால், அதுவும் நோயாலோ, தனிமை உணர்வாலோ பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தேவையான கவனிப்பையும் அளிக்க வேண்டும். இது ஒரு வகை என்றால் குடும்ப 
உறுப்பினர்களால் அவளுடைய முன்னேற்றத்தை சகிக்க முடியாததால் ஏற்படுத்தப்படும் தொந்தரவுகள் மறுபுறம். எது எப்படியோ, குடும்பம் என்னும் சக்கரம் சரளமாக ஓடச்செய்ய வேண்டியதில் பெண்ணின் பங்கு இன்றும் மகத்தானதாகத்தான் இருக்கிறது.

அலுவலகத்தை எடுத்துக் கொண்டால் பல நாட்களாக பணியாற்றியதால் ஆண்களுக்கு கிடைக்கும் அனுபவம், மற்றும் ஒத்துழைப்பு பெண்களுக்கு அத்தனை சுலபமாக கிடைக்காது. அவள் ஒவ்வொன்றையும் கற்றுத் தேற வேண்டும். தனக்கு நிகரான அந்தஸ்தும், புகழும் பெண்ணுக்கு கிடைப்பதை சகித்துக் கொள்ளும் மனப்பாங்கு ஆண்களுக்கு இல்லாமலிருந்தது. நவீன சமூக கட்டமைப்பில் இது மாறிக்கொண்டு வருகிறது. மாறி வரும் காலத்தில் பணியிடத்தில் பாலின வேற்றுமை குறைந்தாலும் பணி புரியும் இடத்தில் அவள் பாலியல் துன்பத்திற்கு மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமாகவும், மனதளவிலும் பாதிக்கப்படுவது குறைந்தபாடில்லை. உடலாலும், மனதாலும், உணர்வாலும் பெண் தினம் தினம் பாதிக்கபட்டுக் கொண்டுதான் இருக்கிறாள். 

பெண்கள் பல தடைகளை தண்டி,வெறும் வீட்டு வேலை செய்பவளாக, குழந்தைகளை வளர்பவளாக மட்டும் இருந்த நாட்களை கடந்து உயரே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்லும் நேரத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுள்ளது, பெண்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த சுதந்திரத்தை தவறாக கையாண்டு விடக்கூடாது. பெண்களின் சிறப்பு அவர்களுடைய திடமும், உறுதியும். இவற்றை ஒரு போதும் அவர்கள் கை விட்டு விடக்கூடாது. இந்த சமூகம் அவர்கள் ஏதாவது தவறு இழைக்க மாட்டார்களா என்று அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிறிய தவறு இழைத்தாலும் ,"நான்தான் அப்பொழுதே சொன்னேனே, பெண்களே இப்படித்தான்". என்று இகழ காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு இடம் கொடுத்து விடாமல், ஆண்களுக்கு துணையாகவும், ஈடாகவும் நின்று, முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். அப்பொழுதுதான் பால் வேறுபாடற்ற நவீன சமூக சூழலை உருவாக்க முடியும். இப்படிப்பட்ட மாறுதலுக்கு சுய பரிசோதனை, மாறுதலுக்கு தயாராக இருப்பது, வீட்டிலும், பணி இடத்திலும் சுமுகத்தையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்துவது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்துவது போன்றவை அவசியம்.

39 கருத்துகள்:

  1. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. Home Maker எனப்பட்ட பெண்களால் ஆகிய வீடுகளே நின்று வாழ்ந்து கொண்டிருக்கின்றன...

    ஏனெனில் அவளே இல்லாள்..

    பேருடைய பெண்மை வாழ்க....

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு கட்டுரையை வழங்கிய ஸ்ரீமதி ரமா ஸ்ரீ நிவாசன் அவர்களுக்கும் ஸ்ரீமதி பானுமதி அவர்களுக்கும் பதிவு செய்த எபி குழுவினருக்கும் நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. மன்னித்துக் கொள்ளவும்..

      விடியற்காலையில் (3:30) முழு இருட்டில் கைத்தொலைபேசியில் தட்டச்சு செய்வதில் பற்பல சிரமங்கள்...

      ஸ்ரீமதி பானுமதி வெங்கடேஸ்வரன்
      என்பதற்கு ஸ்ரீமதி பானுமதி என்று தட்டச்சு ஆகியுள்ளது..

      இப்போது தான் கவனித்தேன்...

      மன்னித்துக் கொள்க..

      அன்புடன்.. துரை செல்வராஜூ...

      நீக்கு
  4. அதிகாரிகளை அங்குமிங்கும் மாற்றியடிப்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றுதான் என்பது திரு அசோக் அவர்கள் விஷயத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது...

    பதிலளிநீக்கு
  5. சித்தார்த் பற்றி தினமலரில் படித்தேன்....

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் நன்மைகள் நிறைந்த நாளாய் அமைந்திட மனப்பூர்வமாக பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா...   இனிய ரார்தனைகளுக்கு நன்றி.  காலை வணக்கம்.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

    குறைந்த வயதில் சாதித்திருக்கும் சித்தார்த் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    பணியிட மாற்றத்தை சாதாரணமாக எடுத்துக்கொண்டு, நேர்மையாக இருக்கும் அதிகாரியின் நேர்மைக்கு தலை வணங்குவோம்.

    மகளிர் மேம்பாடு கட்டுரை அருமை.

    இந்தச்சிறப்பு கட்டுரையை தந்த திருமதி ரமா ஸ்ரீநினிவாசன் அவர்களுக்கும், அதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து தந்திருக்கும் திருமதி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு எதற்கு நன்றி? என்னால் இதை செய்ய முடியும் என்று நம்பி இந்த பொறுப்பை ஒப்படைத்த ஸ்ரீராம் அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். 

      நீக்கு
  8. ரமா ஸ்ரீநிவாசன் திருமதி. பானுமதி அவர்களின் உறவா ?

    கட்டுரை சிறப்பாக இருக்கிறது அதேபோல் கட்டுரையில் சொன்னதுபோல் இறுதிவரை கயிற்றின் மேல் நடப்பது..... உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //ரமா ஸ்ரீநிவாசன் திருமதி. பானுமதி அவர்களின் உறவா ?// இல்லை, வல்லி அக்கா தயவால் பூத்த நட்பூ   

      நீக்கு
    2. அன்பு தழைக்கும்போது நமக்கு ஏது குறை பானுமா.

      நீக்கு
  9. திறமைக்கும் நேர்மைக்கும் பாராட்டுகள்... வாழ்த்துக்கள்...

    கட்டுரை சிறப்பு...

    பதிலளிநீக்கு
  10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  11. பாஸிடிவ் செய்திகள் இரண்டும் அருமை.
    திறமைக்கும், நேர்மைக்கும் வாழ்த்துக்குள்.

    பதிலளிநீக்கு
  12. // பெண்களின் சிறப்பு அவர்களுடைய திடமும், உறுதியும். இவற்றை ஒரு போதும் அவர்கள் கை விட்டு விடக்கூடாது. இந்த சமூகம் அவர்கள் ஏதாவது தவறு இழைக்க மாட்டார்களா என்று அவர்களை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிறிய தவறு இழைத்தாலும் ,"நான்தான் அப்பொழுதே சொன்னேனே, பெண்களே இப்படித்தான்". என்று இகழ காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு இடம் கொடுத்து விடாமல், ஆண்களுக்கு துணையாகவும், ஈடாகவும் நின்று, முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். //

    நன்றாக சொன்னார் ரமா ஸ்ரீநிவாசன் . அவர்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது.
    பானுமதி வெங்கடேஸ்வரன் மொழிபெயர்ப்பு அருமை.


    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  13. சிறுவன் சித்தார்த்தின் சாதனை வியக்க வைக்கிறது. இருந்தாலும் அவன் ஒரு நல்ல மனிதனாகவும் உயர்ந்து தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். சிறு வயதில் நிறைய கற்றுக் கொண்டு விடும் பொழுது ஒரு காலத்தில் கற்றுக்கொள்ள எதுவும் இல்லை என்று தோன்றி விடும். அது சோர்வையும், தீய பழக்கங்களுக்கும் ஆளாக்கி விடும். இப்படிப்பட்ட பாதிப்புகள் சித்தார்த்துக்கு ஏற்படாமல் இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  14. அசோக் கெம்காவின் அனுபவங்கள் அவர் மற்றொரு சகாயம் என்று தோன்ற வைக்கின்றன. அரசியல்வாதிகள் திருந்தவே மாட்டார்களா? 

    பதிலளிநீக்கு
  15. மனித குலத்தில் ஆண்கள் - பெண்கள் என்ற வித்தியாசமில்லை. அப்படியாகப் பிரித்துப் பார்க்காத சமூகத்தைக் கட்டுவது தான் சமூக நலன்களுக்கு ஆரோக்கியமானது.

    பதிலளிநீக்கு
  16. அன்பு ஸ்ரீராம்,
    அருமையான குழந்தை சித்தார்த் பற்றி அறிய மிக மிக மகிழ்ச்சி.
    நன்கு வளர்ந்து நிறைய முன்னேற்றம் காண வேண்டும்.

    அதே போல இத்தனை அலுவலக மாற்றங்களைத் தாங்கி
    பொறுமையுடன் தாங்கி வரும் அதிகாரி, அஸோக் அவர்களுக்கும்
    இறைவன் இன்னும் அதிக பொறுமையையும், அவருக்கு உரித்தான
    நற்பலன்களையும் அளிக்க வேண்டும் என்னும் பிரார்த்தனையும்
    செய்கிறேன்.
    திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களின் பெண்களின் மேம்பாட்டுக்கான
    கட்டுரை மிக மிக அருமை. அத்தனையும் உண்மை.

    என் தம்பி ரங்கனின் மனைவியும் சொல்வார். இப்போது ஓய்வு பெற்றுவிட்டாலும்
    வாழ்க்கையில் பணி செய்த இடத்தில் சந்தித்த சவால்களை
    சந்த்தித்து வெற்றி பெற்றவர்.

    திருமதி ரமா, குடும்ப சூழ்னிலைகளையும் அழகாக சித்தரித்திருக்கிறார்.
    பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்க வேண்டும்.

    பொருத்தமாக மொழி பெயர்த்த பானுமதி வெங்கடேஸ்வரனுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
    திருமதி ரமா ஸ்ரீனிவாசன் இன்னும் இதே போல நல்ல கட்டுரைகளை
    புது வலைத்தளம் ஆரம்பித்து அவரது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள வாழ்த்துகள்.
    நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  17. இன்றைய பாசிடிவ் செய்திகள் அருமை. இளம் டேட்டா சயின்டிஸ்ட் பற்றி பரவலாகவும் இந்திய மாணவர்கள் அனைவரையும் சென்று அடைய வேண்டும். மற்ற செய்திகளும் அருமை.

    பதிலளிநீக்கு
  18. இரண்டு செய்திகளும் சிறப்பு. பெண்மை போற்றுவோம்... நல்ல கட்டுரை. பாராட்டுகள்...

    பதிலளிநீக்கு
  19. ரமா ஸ்ரீநிவாசன் அவர்களது கட்டுரை மிக அருமை. (மொழிபெயர்ப்பு சிறப்பு... அதனால்தான் கட்டுரை அருமையாகத் தெரிகிறது).

    //இன்றைய பெண் வெறும் ஹோம் மேக்கர் என்னும் நிலையிலிருந்து ட்ரீம் மேக்கர் என்னும் நிலைக்கு உயந்திருக்கிறாள்// - இது டூ டூ மச் இல்லையோ? இப்போது டிரான்சிஷன் பீரியட் தான். இன்னும் பலவருடங்களில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இருக்கும் நிலைமையை (ஆண், பெண் பேதமின்மை) இந்தியாவிலும் பெண்கள் அடைவர்.

    //அதையும் சிறப்பாக செய்யும் பெண்// - இது உண்மைதான். ஆணைவிட பெண்கள் எந்த அலுவலக விஷயத்தையும் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும். அதற்கான திறமை அவர்களுக்கு அதிகம் உண்டு.

    //உடலாலும், மனதாலும், உணர்வாலும் பெண் தினம் தினம் பாதிக்கபட்டுக்// - ஆமாம். அவளது திறமையை சீரணிக்க முடியாமல், பொறாமையினால் அவளைக் காயப்படுத்துபவர்கள் (அலுவலகத்தில் மற்றும் வீட்டில்) அதிகம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!