மறதி பற்றி ஓரிரு வாரங்களுக்கு முன் சிறு போட்டி வந்தது. என் மறதி பற்றிச் சொன்னபோது, கீதா கூட மறதியில் தன்னை அடிச்சுக்க முடியாது என்று பெருமைப்பட்டுக் கொண்டார். அப்போது நினைவுக்கு வந்த சில விஷயங்கள்....
சாப்பிடும்போது என் கைக்கு அருகிலேயே மொபைலை வைத்துக் கொண்டு சாப்பிடுவது வழக்கம். மேஜர் சந்திரகாந்த் மேஜர் போல எனக்கு என் பொருட்கள் எல்லாம் வைத்தது வைத்த இடத்தில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் படத்தில் அவர் உருண்டு விழுவார். நிஜத்தில் நான் மறந்து விடுவேன்! சாவியா, வலது பாக்கெட், செல்லா இடது பாக்கெட், அதது அதனதன் இடத்தில்... என் அம்மா கற்றுத் தந்தது! சின்ன வயதிலிருந்தே அப்படிதான்! சாப்பிடும்போது நண்பரிடமிருந்து அலைபேசி வந்தது. சாப்பிடும்போது அலைபேசினால் பாஸுக்குப் பிடிக்காது. கைஜாடை காட்டி இன்னும் வேணும்... போதும் என்றெல்லாம் காட்டினால் கோபம் வரும்.
சாப்பிட்டு எழுந்து தேடுகிறேன் தேடுகிறேன் என் செல்லைக் காணோம்... பேச்சில் கவனமில்லாததால் நண்பர் 'என்ன, எங்கேயோ கவனமாயிருக்கே' என்று கேட்டார். சொன்னேன். "நல்லாத் தேடு... கிடைச்சுதா?" என்றார். "அட... இல்லப்பா... அதைதான் தேடறேன்..." என்று சொல்லிக்கொண்டே வரும்போதே அசடு வழிந்தேன்!
இப்படிதான் என் அப்பா காலை செய்தித்தாள் படிக்கும்போது இரண்டாம் பக்கத்தைக் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தது எங்கள் வீட்டில் ரொம்ப பிரபலம். அப்புறம் ஒருமுறை மூக்குக்கண்ணாடியை தேடிக் கொண்டிருந்தார். நாங்களும் தேடிக் கொண்டிருந்தாலும் (!) சரியாய் கவனிக்கவில்லை. அம்மா ஈஸிசேரில் உட்கார்ந்துகொண்டு அவரையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தவர் "கண்ணாடியைக் கழட்டி விட்டு தேடிப் பாருங்களேன்" என்றார்! அப்பா சிரித்து விட்டார்.
=================================================================================================
எதில் படித்தேன் என்று நினைவில்லை. எங்கேயோ படித்து விட்டு பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன்.
அது இருக்கும் ஆறு வருஷம்! அதற்கு வந்த பதில்களுடன் கொடுத்திருக்கிறேன்! மஞ்சுபாஷிணி சம்பத்குமார் பின்னூட்டம் கொடுப்பதில் கீதா ரெங்கனுக்கெல்லாம் அக்கா! நீளநீளமாக பின்னூட்டம் கொடுப்பார். இப்போ அவர் பிளாக் பக்கமே வருவதில்லை!
=======================================================================================
தாங்க முடியாத காதல்!
===================================================================================
வாயுபுத்திரன்? யார் இந்த எழுத்தாளர்? ஜீவி ஸாரோ, கிருஷ் ஸாரோ சொல்லக் கூடும்! எனக்கு யார் என்று தெரியவில்லை.
ஃபேஸ்புக்கில் போட்டபோது ரிஷபன் ஸாரோ, கணேஷ் பாலாவோ சொல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். இருவருமே தெரியவில்லை என்பது மாதிரி சொல்லி விட்டார்கள்!
இதற்கு ஃபேஸ்புக்கிலேயே பதில் சொன்ன மோகனா ராஜன் என்னும் நண்பர் இதை அடிப்படையாக வைத்துதான் 'கெளரவம்' திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லியிருந்தார். ஆச்சர்யப்பட்டுப்போய் யூடியூபில் படத்தின் பெயரில் தேடினால் அப்படி எல்லாம் ஒன்றும் அவர்கள் க்ரெடிட்டே கொடுக்கவில்லை.
கதையை லேசாக மேய்ந்தபோது கதையும் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.
ஆக, நெட் ரிஸல்ட் வாயுபுத்திரன் என்கிற எழுத்தாளர் யாரென்று தெ..ரி..ய..வி..ல்..லை! பானு அக்காவை விட்டு விட்டேன்.அவர்கள் கூட சொல்வார்களோ என்னவோ...
இதற்கு ஃபேஸ்புக்கிலேயே பதில் சொன்ன மோகனா ராஜன் என்னும் நண்பர் இதை அடிப்படையாக வைத்துதான் 'கெளரவம்' திரைப்படம் எடுக்கப் பட்டிருக்கிறது என்று சொல்லியிருந்தார். ஆச்சர்யப்பட்டுப்போய் யூடியூபில் படத்தின் பெயரில் தேடினால் அப்படி எல்லாம் ஒன்றும் அவர்கள் க்ரெடிட்டே கொடுக்கவில்லை.
கதையை லேசாக மேய்ந்தபோது கதையும் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை.
ஆக, நெட் ரிஸல்ட் வாயுபுத்திரன் என்கிற எழுத்தாளர் யாரென்று தெ..ரி..ய..வி..ல்..லை! பானு அக்காவை விட்டு விட்டேன்.அவர்கள் கூட சொல்வார்களோ என்னவோ...
=====================================================================================================
அப்பாவி மாணவன்! இதைப் படித்ததும் நினைவுக்கு வரும் பழைய ஜோக் ஒன்று!
உலக மேப்பில் ஆஸ்திரேலியாவைக் காட்டச் சொன்னாராம் ஆசிரியர். புத்திசாலி மாணவன் காட்டினான்.
அடுத்ததாக இன்னொரு மாணவனை வரைபடத்தில் இந்தியாவை காட்டச் சொன்னாராம். சுமாரான அந்த மாணவன் "நோ... இந்தியாவை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்று சமாளித்தானாம். அதுவும் ஒரு ஜோக்!
உலக மேப்பில் ஆஸ்திரேலியாவைக் காட்டச் சொன்னாராம் ஆசிரியர். புத்திசாலி மாணவன் காட்டினான்.
அடுத்ததாக இன்னொரு மாணவனை வரைபடத்தில் இந்தியாவை காட்டச் சொன்னாராம். சுமாரான அந்த மாணவன் "நோ... இந்தியாவை நான் காட்டிக்கொடுக்க மாட்டேன்" என்று சமாளித்தானாம். அதுவும் ஒரு ஜோக்!
=============================================================================================
அறிவிப்பு!
பிலஹரி எழுதிய "ப்... பூ" கதை அடுத்த வாரமும், அதற்கும் அடுத்த வாரமும் இரு பகுதிகளாய் வெளி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
======================================================================================
பெட்டர் லேட்.... அப்பவும் கேஜிஜிதான் நினைவு படுத்தி இருந்தார்! என்னைவிட அவர் ரொம்ப ஆர்வமாய் இருக்கார் போல!!!!
அறிவிப்பு!
பிலஹரி எழுதிய "ப்... பூ" கதை அடுத்த வாரமும், அதற்கும் அடுத்த வாரமும் இரு பகுதிகளாய் வெளி வரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
======================================================================================
பெட்டர் லேட்.... அப்பவும் கேஜிஜிதான் நினைவு படுத்தி இருந்தார்! என்னைவிட அவர் ரொம்ப ஆர்வமாய் இருக்கார் போல!!!!
நலம் வாழ்க...
பதிலளிநீக்குவாழ்க நலம்...
நீக்குஅனைவருக்கும் அன்பின் வணக்கம்..
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார்.. வாங்க...
நீக்குஅங்காங்கே அள்ளித் தெளிக்கப்பட்ட மல்லிகைப் பூக்களின் வாசமாக நகைச்சுவை...
பதிலளிநீக்குநன்றி துரை செல்வராஜூ ஸார்.
நீக்குகண்ணாடியைக் கழற்றி விட்டுத் தேடுதல்....
பதிலளிநீக்குஆகா!...
அதற்கெல்லாம் ஈடு இணையில்லை.....
கே ஜே ஜியின் அக்கா அல்லவா? அம்மா இதில் எல்லாம் ஸ்பெஷல்!!!
நீக்குஇனிய மகிழ்வான காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா மற்றும் தொடரும் அனைவருக்கும்.
பதிலளிநீக்குகவிதை சூப்பர் ஸ்ரீராம் மிகவும் ரசித்தேன்.
அறிவுப்பு!! ஆஹா! காத்திருக்கிறோம்..
மறதி பற்றி ஓரிரு வாரங்களுக்கு முன் சிறு போட்டி வந்தது. என் மறதி பற்றிச் சொன்னபோது, கீதா கூட மறதியில் தன்னை அடிச்சுக்க முடியாது என்று பெருமைப்பட்டுக் கொண்டார். //
ஹா ஹா ஹா !! இருங்க உங்க மறதி என்னன்னு பார்த்துட்டு அது என்னை விட ஜெயிச்சுடுச்சான்னு சொல்றேன்!! ஹிஹிஹி
கீதா
மகிழ்வான காலை வணக்கம் கீதா... வாங்க...
நீக்குநன்றி.
கீதா ரங்கன்... உங்க மறதி ஶ்ரீராமைவிட குறைவுதான். பாருங்க... இதோ பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு உடனேயே பதிலும் எழுதிட்டீங்களே.
நீக்குபதில் எழுத மறந்திருந்தால் நீங்க ஜெயிச்சிருப்பீங்க.
அதுமட்டும் இல்லை நெல்லை - இன்றைக்கு முப்பத்துஒன்பதாவது பிறந்தநாள் காணும் அவருடைய அபிமான நடிகை பற்றி குறிப்பிடவும் மறந்துவிட்டார், ஸ்ரீராம். ஆக, ஸ்ரீராம்தான் மறதி மன்னர்.
நீக்குநாற்பத்தி ஒன்பது என்று எங்கோ படித்த ஞாபகம்...
நீக்கு59 என ஆரோ ஜொன்னதா நினைவு:)... என்பங்களிப்பும் இருக்கட்டுமே:)
நீக்குஅனுஷ்கா வயதில் இப்படி எல்லோரும் ஏலம் போட ஆரம்பித்துவிட்டீர்களே! ஸ்ரீராம் ஒருதரம், ஸ்ரீராம் ரெண்டுதரம், ஸ்ரீராம் மூன்றுதரம் (தரம்தான் - யாரும் தாரம் என்று படிக்காதீர்கள்.)
நீக்கு69 என்று கூட சொல்லுங்கள்! ஆனால் மறதி மறதிதான்! ஏதோ ஒவ்வொரு வருடமும் கேஜிஜி நினைவு படுத்துகிறாரோ, நானும் சரிசெய்து விடுகிறேன். இப்போகூட பதிவில் சேர்த்து விட்டேன் பாருங்க!
நீக்குஅதானே! இந்த ’அபிஷ்டு’-க்கா பின்னூட்டம் இப்படி எகிறுதுன்னு பாத்தேன்..
நீக்குஅபிஷ்டுக்கா படத்தினாலதானா! ஐ மீன்..அனுக்கா, அனுஷ்கா, ஆவக்கா.. சரி விடுங்க..
அபிஷ்டுக்கா! ஹா... ஹா.. ஹா....
நீக்குஇதோ பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு உடனேயே பதிலும் எழுதிட்டீங்களே.//
நீக்குஹா ஹா ஹா நெல்லை அது ஏனோ இன்னிக்கு எடக்கு மடக்கா மாட்டிடுச்சு! எபில பல சமயத்துல கருத்து போடும் போது கரன்ட் போயிடும் இல்லை வேறு ஏதேனும் காரணம்.. அப்ப மீண்டும் வரும் போது அந்தக் கமென்ட் போட மறந்தே போயிருக்கும் யாராவது அதே போல போட்டுருப்பாங்க நான் உடனே ஹைஃபைவ் சொல்லி இப்பூடி மறந்துபோச்சுனு வழிஞ்சுட்டு போயிருக்கேன் பல சமயத்துல.!!
கீதா
ஏகாந்தன் அண்ணா!!!! ஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடில!!!
நீக்குபாருங்க இப்பத்தான் அனுஷ் படம் வந்தப்புறம்தான் அந்த சிரிப்புனால பதிவே ஒளிமயமா இருக்கு பாருங்க என்னா சிரிப்பு அது!!!!!!!! காலைல இந்தப் படம் இல்லை இப்ப வந்ததும் தான் என்ன இது புதுசா ஒளிருதேன்னு பார்த்தா மேட்டர் புரிஞ்சுச்சு!!
ஸ்ரீராம் 2015 ல மட்டும்தான் மறந்துவிட்டார்னு நினைச்சு கீழ கமென்ட் போட்டு மேல வந்தா ஹா ஹா ஹா இன்றும் மறந்துவிட்டார்னு இப்பத்தான் தெரிந்தது!!!
கௌ அண்ணா வாழ்க! அப்ப இனி பாரம விலிருந்து மாற்றப்படுகிறீர்கள்!!! நீங்கதான் அரம மன்ற தலைவர்!!! ஸ்ரீராமை உப பதவிக்கு மாற்றிடுவோம்!!!!!!!!!!!!!!!
கீதா
// அந்த சிரிப்புனால பதிவே ஒளிமயமா இருக்கு பாருங்க என்னா சிரிப்பு அது!!!!!!!! காலைல இந்தப் படம் இல்லை இப்ப வந்ததும் தான் என்ன இது புதுசா ஒளிருதேன்னு பார்த்தா மேட்டர் புரிஞ்சுச்சு!!//
நீக்குஹா... ஹா... கீதா... ஆஹா... மொபைல்ல பார்த்தீங்களா? கம்பியூட்டர்லயா? பிரைட்னெஸ் கூட்டிட்டீங்களோ!!
எனக்கு என் பொருட்கள் எல்லாம் வைத்தது வைத்த இடத்தில் இருக்கவேண்டும்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா எனக்கும் இதே பழக்கம் உண்டு. இடம் மாறினால் (நானே கூட சில சமயம் வீட்டைத் துப்புறவு செய்யும் போது!! சில டப்பாக்களில் இருக்கும் பொருட்களின் கொள்ளளவுக்கு ஏற்ப மாற்றி போட்டுவிட்டு தேடுவேன் தேடுவேன்...ஹிஹிஹி) கஷ்டப்படுவேன். ஆனால் வீட்டில் அதற்கும் திட்டு விழும். சில சமயங்களில் எந்த இடத்தில் வைத்தாலும் அதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும், இப்படி அப்செசிவ்வா இருக்கக் கூடாது என்று அதனால் என்னை மாற்றிக் கொண்டுவருகிறேன் சில வருடங்களாக. ஆனால், அதே சமயம் பொருட்களை ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்றும் சொல்லப்படும்!!!! ஆஆஆஆஆஆஆஆஆஆ எங்கே சொல்வேன் இதை?!!!!!!!!!!!! ஹா ஹா ஹா
கீதா
நான் அலுவலகத்தில் அப்போதுதான் கையில்கொண்டு வந்த பேபறைஎங்காவது வைத்துவிட்டுத் தேடுவதைப் பார்க்கும் நண்பர்கள் புன்னகைப்பார்கள். "இதே வழக்கமா போச்சு" "வேணும்னே பண்றாரோ" "உங்களோட பழகி உங்க வியாதி எனக்கும் வந்துடுச்சு... சாவியை எங்க வச்சேன்னு தெரியலை" என்றெல்லாம் சொல்வார்கள்! நிறைய இலவச யோசனைகளும் சொல்வார்கள்!
நீக்குஎனக்கு எந்தப் பொருளும் வைத்த இடத்தில் இருக்கணும், அதிலும் கிச்சனில். அப்படி இல்லைனா நான் சமையல் செய்யும்போது திட்டிக்கிட்டே இருப்பேன்.
நீக்குகண்ணை மூடி கையை நீட்டி பொருளைக் கண்டுபிடிக்கணும் என்பது என் கான்சப்ட். இப்படி இருந்தால் யாருக்குப் பிடிக்கும்?
எனக்கும் என் பொருட்கள் எங்கிருப்பினும் இருட்டில் போய் எடுத்துவருவேன்.. கிச்சினில் மட்டுமென்றில்லை, எங்கள் வீட்டிலும் ஒரு பழக்கம் ஆராட்சி பண்ணமாட்டினம் , தம்முடையது இல்லை எனில் கேட்டுவிட்டே எடுப்பார்கள். அதனால வைத்தபொருள் வைத்த இடத்திலேயே இருக்கும்.
நீக்குஎனக்கு கிச்சன் என்றில்லை நெல்லை.. எல்லா இடத்திலுமே அப்படியிருந்தால்தான் இயங்க முடியும்!
நீக்குஆனா ஸ்ரீராம், அதுக்கு வீட்டில் உள்ளவர்களோட ஒத்துழைப்பு வேணும். அவங்க 'வீடுன்னா அது மியூசியம் மாதிரி அழகா இருக்கக்கூடாது' என்ற கான்சப்டில் நம்பிக்கை உள்ளவங்க. அதுனால சொல்லிச் சொல்லி நம்ம அமைதிதான் போகும் ஹா ஹா.
நீக்குநெல்லை! நான் தொலைப்பவன் என்று நானே சொல்லிக்கொண்டு பெயர் எடுத்து விட்டதால் எது காணாமல் போனாலும் ஆபீஸ்லயும் சரி, வீட்டிலும் சரி... என்னைதான் முதலில் சொல்வார்கள்! ஆனால் நான் வைத்த பொருள் மேலே வேறு எதையாவது யாராவது போட்டு மூடி இருப்பார்கள்.
நீக்குஹையோ நெ தமிழன், என் கணவரும் சொல்லும் வாக்கியம் வீடெனில் வீடுபோல இருக்கோணும் மிசூசியம்போல இருக்கக்கூடாது என ஹா ஹா ஹா... எங்கள் வீடு மிசூசியம் மாதிரி இருக்காது:), ஆன ஒன்று எனக்கு நிறைய ஞாபக சக்தியும் நிதானமும் அதிகம் என்பதால, எள் என்னுமுன் எண்ணெயாகி எடுத்துக் குடுத்திடுவேன் ஹா ஹா ஹா,
நீக்குவீடுன்னா ம்யூசியம் மாதிரி இருக்க வேண்டாம். வீடு மாதிரி இருக்கலாம் அல்லவா? வீட்டு ஹாலில் போட்டிருக்கும் நாற்காலிகளிலோ, சோஃபாக்களிலோ நாம் உட்கார முடியாது. துணிகள்/புத்தகங்களாக இருக்கும். டைனிங் டேபிள்னு பெயர்தான். அதிலே உட்கார்ந்து சாப்பிட முடியாமல் பாத்திரங்கள்,மற்ற வேண்டாத பொருட்கள் அணி வகுக்கும். இதை எல்லாம் சுத்தம் செய்யக் கூடாதா எனில் வீடுன்னா இப்படித்தான் என்பார்கள். குளியலறையில் இருக்கும் கொடியில் நம் துணிகளைப் போட்டுக் கொண்டு குளிக்க முடியாது. அவங்க துணிகள், கை துடைக்கும், வீடு துடைக்கும் துணிகள் எனத் தாறுமாறாகத் தொங்கும். அதை எல்லாம் கேட்டால் பிரச்னை தான் பெரிசாகும். :)))) ரொம்பவே நொந்து போயிடும்.
நீக்குஎனக்கும் அந்தந்த பொருள் சரியான இடத்தில் இருக்கணும்.
பதிலளிநீக்குஇல்லாவிட்டால் வீட்டில் பிரச்சனைதான் காரணம் நானும் மேஜர் போலவேதான்.
ஹா...ஹா...ஹா...
நீக்குஸேம் ப்ளட்... நன்றி ஜி.
உங்களுக்கு மறதி இருக்கும்போது, வீட்டிலுள்ளோரோடு சண்டைக்குப் போவது டப்பூஊஊஊ கர்ர்ர்ர்:)
நீக்குஅவர்கள் மாற்றி வைப்பதால்தானே பிரச்னை அதிரா?!!
நீக்கு"கண்ணாடியைக் கழட்டி விட்டு தேடிப் பாருங்களேன்" என்றார்! அப்பா சிரித்து விட்டார்.//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா நான் கையில வைச்சுக்கிட்டே தேடுவேனே!!!! (இந்த ஒரு வரிக்கு ஒரு பிரசங்கமே செஞ்சிடலாம்!!!!! பல அர்த்தங்களில்!)
கீதா
நானும் செல்லை கையில வச்சுக்கிட்டுதானே தேடிக்கிட்டிருந்தேன்!!!!
நீக்குஹா ஹா ஹா ஹா ஸ்ரீராம் அப்ப சரி நோ போட்டி நமக்கிடையில்!!
நீக்குகீதா
ஸ்ரீராம், நான் முக்கால்வாசி அபிஷ்டு!!!!!!!!!!!
பதிலளிநீக்குமஞ்சு! ஆஹா! எனக்கு அக்காவா கருத்து போடுவதிலும்..பேசறதுலனு நினைச்சேன் என்னைப் போல!!!.!! பார்த்திருக்கிறேனே நேரில்! அது சரி ஸ்ரீராம் நம்ம கிளவியை விட்டுட்டீங்களே!! இதுக்கும் சண்டை போடப் போறார் பாருங்க! பஞ்சாயத்துக்கு நான் ரெடி! நீங்க?!
கீதா
அபிலாஷைகள் இல்லாதவர்களும் அபிஷ்டு?!!!!!?????? சொல்லலாமோ?
நீக்குகீதா
ஓ...நீங்க அவங்களை நேரிலேயே பார்த்திருக்கிறீர்கள் இல்லையா? புலவர் ராமானுஜம் வீட்டிலோ, அடையாறு அஜித் வீட்டிலோ!
நீக்கு//அபிலாஷைகள் இல்லாதவர்களும் அபிஷ்டு?!!!!!?????? சொல்லலாமோ?//
நீக்குல்வோமே... நம்ம இஷ்டம்தானே?!!
ஆமாம் ஸ்ரீராம் மஞ்சுவை நேரிலேயே பார்த்திருக்கிறேன் அட கரெக்ட்டா நினைவு வைச்சிருக்கீங்களே!!!!! புலவர் ராமானுஜம் ஐயா வீட்டிலதான்...
நீக்குஎன்னது அடையாறு அஜித்?! அதாரு?!! தல? அவர் பெசன்ட்நகர்ல தானே இருக்கிறார்!!!!!!!!!
கீதா
சென்னைப் பித்தன் ஸாரை அப்படிதான் சொல்வார்கள்! முதலில் அவர் அங்கே இருந்தார் போலும்!
நீக்குகாலை வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅனைவருக்கும் வணங்கங்கள்.. அனைவருக்கும் இந்த நாள் இனிதாக அமைய இறைவனிடம் பிராத்தனைகள் செய்கிறேன்.
கதம்பம் சுவையாக உள்ளது. மறதி பக்கம் வெகு அருமை. எப்போதுமே அந்தந்த இடத்தில் பொருட்கள் இருந்து விட்டால், இந்த பிரச்சனை வராது. ஆனால் "இடுப்பில் பிள்ளையை வைத்துக் கொண்டு ஊரெல்லாம் தேடிய கதையை" தாங்கள் மறதி நினைவூட்டியது சுவையாக இருந்தது.
நான் ஏதாவது ஒன்றை ஒரிடத்தில் நின்றிருக்கும் போது சொல்ல/செய்ய வேண்டுமென்பதை மறந்து விட்டால், மீண்டும் அதே இடத்துக்கு வந்து யோசித்தால் நினைவுக்கு வந்து விடும். செயல் பரவாயில்லை. ஆனால் மீண்டும் சொல்லப் போகும் விஷயங்களை கேட்க அங்கிருக்கும் ஆட்கள்தான் இருக்க மாட்டார்கள். ஹா. ஹா. ஹா.
எல்லாவற்றையும் படித்து விட்டு வருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா அக்கா... காலை வணக்கம், பிரார்த்தனைகளுக்கு நன்றி.
நீக்கு//நின்றிருக்கும் போது சொல்ல/செய்ய வேண்டுமென்பதை மறந்து விட்டால், மீண்டும் அதே இடத்துக்கு வந்து யோசித்தால் //
எனக்கும் அந்தப் பழக்கம் உண்டு என்றாலும், இங்கு இதைப் படிக்கும்போது பஞ்சதந்திரம் ஜோக் நினைவுக்கு வருகிறது!
சாப்பிடும்போது அலைபேசினால் பாஸுக்குப் பிடிக்காது. கைஜாடை காட்டி இன்னும் வேணும்... போதும் என்றெல்லாம் காட்டினால் கோபம் வரும்.//
பதிலளிநீக்குகரீக்டுதான். மீ டூ. ஆனால் மகனிடம் பேசும் போது மட்டும் இது எக்செப்ஷன். நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவன் கூப்பிட்டால் பேசிவிடுவேன். அப்புறம் அவனைப் பிடிப்பது கஷ்டம் என்பதால். லோக்கல் கால் என்றால் இல்லை. அப்படி மிஸ்ட் காலை சில சமயம் திரும்ப அழைக்க மறப்பது ஹிஹிஹிஹி....அதுக்காகவே நான் எடுக்கலைனா வாட்சப்பில் மெசேஜ் விடச் சொல்லுவதும் வழக்கம். நானும் அப்படித்தான் இப்பல்லாம் நான் அழைப்பவர் எடுக்கலைனா வாட்சப் இருந்தா மெசேஜ் விட்டுருவேன். இல்லை எஸ் எம் எஸ் அனுப்புவது வழக்கம் முக்கியமாக இருந்தால்.
கீதா
சாப்பிடும்போது சாப்பிடும் வேலை மட்டும் இருந்தால்தான் சரி! எனக்கும் அதுதான் சரி என்று தோன்றும்.
நீக்குவியாழன் கதம்பம் எப்பவுமே ரசிக்கும்படி இருக்கும்.
பதிலளிநீக்குயாராவது கிஃப்ட் பண்ண நினைத்தால் நல்ல நிலையிலிருக்கும் பைண்ட் செய்யப்பட்ட பழைய பத்திரிகை நாவல் தாங்க. நிறைய துணுக்குகள், நகைச்சுவை என பலவற்றை ரசிக்கலாம் (ஶ்ரீராம்ட இருந்து தேறாது. அவருக்கு வியாழன் பகுதிக்கு வேணும். ஹா ஹா)
ஹா ஹா ஹா நெல்லை.....எங்கிட்டயும் இருக்கு நானும் போடணுமே...முன்பு இரு முறை (ரெண்டு வருஷன் ஆயிருக்கும்னு நினைக்கிறேன்...என் தொகுப்பிலிருந்து கொஞ்சம் பகிர்ந்தேன் தளத்துல...இப்ப சமீபத்துல கொஞ்சம் பகிர்ந்தேன் அடுத்தததுக்கு எடுத்தும் வைச்சுட்டேன்.. ஆனால் இனிதான் போட வேண்டும்...
நீக்குகீதா
//வியாழன் கதம்பம் எப்பவுமே ரசிக்கும்படி இருக்கும்.//
நீக்குநன்றி... ஆனால் இப்போ இன்றைய பதிவு பற்றி என்ன சொல்ல வர்றீங்க?!!
பிடித்திருந்தது ஸ்ரீராம். எல்லாம் கலந்து எழுதும்போதும், எழுத்து ரசிக்கும்படி இருக்கும்போதும் அந்த இடுகை நல்லா வந்திடும். எப்போதும்போல் வியாழன் இடுகைதன் முதல் ரேங்க்.
நீக்குஅப்பாடி... கன்பார்ம் ஆனபிறகுதான் திருப்தி! தேங்க்ஸ்!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்த்துகள், நல்வரவு, பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் வாங்க அக்கா... நான் பதில் சொல்லும் நேரம் நீங்க ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பீர்கள்!
நீக்குஎன்னோட பிரச்னையே மறக்காமல் இருப்பது தான். கிழமைக்குழப்பம் தனி! அது சில சமயம் காலம்பர எழுந்திருக்கிறச்சேயே இன்னிக்கு சனிக்கிழமை என்றோ ஞாயிறு என்றோ மனம் பதிவு செய்துவிடுவதால் வரும் குழப்பம். இஃகி,இஃகி, ஆனால் போன ஜன்மத்து நினைவு கூட இருப்பதால் ரங்க்ஸுக்கு ஒரே கவலை!
பதிலளிநீக்குதாங்கள் கொடுத்து வைத்தவர்கள் சகோதரி...
நீக்குசில விஷயங்கள் மறக்காது. எல்லா விஷயமும் மறக்காமல் இருக்கிறீர்களா நீங்கள்?
நீக்குகீதா அக்கா சொல்வதை நான் பொறாமையுடன் மறுக்கிறேன் கமலா அக்கா!
நீக்குஅநேகமாகச் சின்ன வயது ஞாபகங்கள், பள்ளி நாட்கள், பின்னர் சித்தப்பா வீட்டில் கழித்த நாட்கள், திருமணம் ஆன வாழ்க்கை என எல்லாமும் நினைவில் வரும் ஸ்ரீராம். தேதிவாரியாக வரது இல்லைனு வேணா வைச்சுக்கலாம். :))))))
நீக்குநீங்கள் சொல்லும் சில விஷயங்கள் எனக்கும் மறக்காது அக்கா. உதாரணமாக நான் மறதியில் எதைத் தேடினேன் என்று ஞாபகம் வச்சிருக்கேன் பாருங்க... அப்பா அடிச்ச கூத்தையும் ஞாபகம் வச்சிருக்கேன் பாருங்க... அப்போ எதை மறக்கறோம்?
நீக்குவாயுபுத்திரன் யார் என்பது மனசில் இருக்கு. இந்தக் கதையும் படிச்ச நினைவு. வெளியே தோண்டி எடுக்கணும். உங்க காதல் கவிதை நன்றாக இருக்கிறது அபிஷ்டு! :)))))))
பதிலளிநீக்குகவிதையைப் பாராட்டியிருபப்தற்கு நன்றி. வாயுபுத்திரன் யாருன்னு நினைவுக்கு வந்ததும் சொல்லுங்க. கோமதி அக்கா சொல்லி இருப்பது சரியோ என்று தோன்றுகிறது.
நீக்குmmmmmmmm? chavi?
நீக்குஇருக்க....
நீக்குலாம்!
மஞ்சுபாஷிணி யார்னு சொல்லாமலேயே ஒரு நாள் திடீரென வாட்சப்பில் பேச ஆரம்பித்தார். நான் திரு திரு! அப்புறமா சாவகாசமாகச் சொல்றார், நான் மஞ்சு, அம்மா ஒரு சந்தேகம் கேட்டதால் உங்களைக் கூப்பிட்டேன் என்று! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பதிலளிநீக்குவட்சப்பில ஆர் வந்து பேசினாலும் பொழுது போகட்டுமே என உடனேயே பேசத் தொடங்கிடுவீனகளோ ஊர் பேர் கேளாமல் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... அம்பேரிக்காவில ஆராவது கூப்பிட்டால் ஓடிப்போய்க் காரில ஏறிடாதீங்கோ கீசாக்கா ஹையோ ஹையோ:)
நீக்குஹா... ஹா...ஹா.... உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்பிப் பேச ஆரம்பித்திருப்பார்!
நீக்குஅக்கா ரொம்ப உஷார் அதிரா... வாட்ஸாப்பில் ஏதாவது அனுப்பினால் இரண்டு நாட்கள் கழித்துதான் பார்ப்பார்!
நீக்குஇஃகி,இஃகி, ஸ்ரீராம் சொல்வதற்கு நேர்மாறாக எங்க வீட்டில் சொல்வார்கள். ஆனால் நான் காலை எழுந்ததும் முக்கியமான தகவல்கள் உண்டானு ஒரு முறை பார்ப்பேன். பின்னர் மதியம், மாலை ஒரு சின்ன பார்வை. இரவு படுக்கும் முன்னர் ஒன்பது மணி அளவில் பார்த்துட்டுப் பின்னர் அங்கே ஸ்ரீரங்கத்தில் மோடத்தையே அணைச்சுடுவோம். ஆகவே யாரிடமிருந்து வந்தாலும் மறுநாள் காலை தான்! நான் வாட்சப்பில் இருக்கும்போது உடனுக்குடன் சாட் செய்யும்படி வரும் செய்திகள் குறைவு.
நீக்குஎதற்கு நைட்டில் மோடம் அணைத்து விடுகிறீர்கள்? சிக்கனம்? பாதுகாப்பு?
நீக்குகரண்டை மிச்சப்படுத்துறாவாமாம் கீசாக்கா மேடத்தை சே சே மோடத்தை அணைச்சு கர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஏதோ வள்ளிக்கு வைரமூக்குத்தி வாங்க காசு சேர்ப்பதென்றால்கூட பறவாயில்லை:)
நீக்குஆனால் ஒன்று சொல்லவேண்டும் அதிரா... சென்ற வாரம் ஒருநாள் இரவு இங்கு இடித்த இடியில் ஏகப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், டெலிபோன்கள், மோடம் ஆகியவை வீணாய்ப் போயின என்று சொன்னார்கள்!
நீக்குஓஓ நீங்க ஓவரா கீசாக்காவுக்கு சப்போர்ட் பண்றீங்க கர்ர்ர்ர்:) ஆனா என்னதான் சப்போர்ட் பண்ணினாலும் அவ அம்பேதிக்காவில இருந்து ஒண்ணும் வாங்கிவரமாட்டா:) என்னால எதுவும் தூக்க முடியல்ல கை நோ எனச் சொல்லுவா ஹா ஹா ஹா
நீக்கு//வாட்ஸாப்பில் ஏதாவது அனுப்பினால் இரண்டு நாட்கள் கழித்துதான் பார்ப்பார்!// - அப்படி இல்லை. சில சமயங்களில் ஆன்லைனில் இருந்தால் உடனே படித்து ரெஸ்பான்ஸ் பண்ணுவார் (ஓரிரு வார்த்தைகளில், OK என்பது போல). ஹா ஹா
நீக்கு//சிக்கனம்? பாதுகாப்பு?// சிக்கனம் என்பதை விடப் பாதுகாப்பு என்று சொல்லலாம். இங்கே அம்பேரிக்காவிலும் பையர் வீட்டில் இரவில் மோடத்தை அணைச்சுடுவாங்க. இடின்னா இடி அப்படி ஓர் இடி இடிக்கும் இங்கே ஹூஸ்டனில். அதே போல் சென்னையிலும் திடீர் திடீர் என இடி இடிக்கும். பிஎஸ் என் எல். டாடா இன்டிகாம் ஆகிய சேவை அளிக்கும் நபர்கள் இரவில் மோடத்தை அணைச்சுடுங்க என்று சொல்லியே இணைப்புக் கொடுப்பார்கள். மோடத்தை அணைக்காட்டியும் அதில் சொருகி இருக்கும் வைஃபை வயரையாவது எடுக்கச் சொல்லுவாங்க. எங்க மோடம் வீடு முழுசும் வரணும்னு பத்தாயிரத்துக்கு மேலே கொடுத்து வாங்கி இருக்கோம்! ரவுட்டர்? மோடம்? இரண்டும் சொல்றாங்க. எதுவானாலும் வாங்கியதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். இடி இடித்தால் தொலைக்காட்சிப் பெட்டியும் போடுவதில்லை. செல்லைப் பயன்படுத்த மாட்டோம். கிரண்டர், மிக்சி போடுவதில்லை. இதைப் பார்த்து யார் சிரித்தாலும் கவலை இல்லை. :)))))
நீக்குஇந்தியாவில் இருந்து வரும் வாட்சப் அழைப்பையே இங்கே மறுநாள் தான் பார்க்கிறாப்போல் ஆகிறது. கூப்பிடும் நபர்கள் இங்கே இரவு பத்தரைக்கு மேல் கூப்பிடுகிறார்கள். போன மாச நேரப்படி அப்போ இந்தியாவில் காலை ஒன்பது மணி இருக்கும். இப்போது மாறிய நேரம்படி இந்தியாவில் காலை பத்து மணி ஆகும். ஆனால் எங்களுக்கு இரவு பத்தரை! பல சமயங்களிலும் தெரிவதில்லை. :(
நீக்குதிரைப்படக்கதை எழுத்தாளர்கள் அதுவும் தமிழ்ப்படக் கதை எழுத்தாளர்கள் நாங்க இந்தக் கதையை ஒட்டி எடுத்தோம்னு எப்போ ஒப்புக் கொண்டிருக்காங்க. வாய்ப்பே இல்லை. அந்த விஷயத்தில் ஹிந்தியில் பரவாயில்லை ரகம். எந்தக் கதையின் தழுவல் என்பதைச் சொல்லிடறாங்க.
பதிலளிநீக்குஅது என்னவோ உண்மைதான். இப்போதான் கோர்ட்ல கேஸாபோட்டுக்கொண்டு இருக்கிறார்களே....
நீக்குகீசா மேடம்... நான் 'கண்ணா லட்டு திங்க வா' பட டிரைலரைப் பார்த்துவிட்டு, பாக்கியராஜின் படக் கதையைத் திருடி, பாக்யராஜுக்கு கிரெடிட் கொடுக்காமல் ஏமாத்தினாங்க என்று நினைத்துட்டு அந்தப் படம் பார்க்காமயே இருந்தேன் (எதிக்ஸ் இல்லாதவங்களா இருக்காங்களேன்னு). ஓரிரு மாதங்கள் முன்னால, சித்ராலயா கோபு பேட்டி பார்த்துட்டு (அவருடைய அனுபவங்கள் பேட்டி) உத்தரவின்றி உள்ளே வா படம் பார்க்க யூடியூபில் தேடிப் பார்த்தால், அதைத் தழுவித்தான் பாக்கியராஜே அவருடைய இன்று போய் நாளை வா படத்தை எடுத்திருக்கிறார்னு புரிஞ்சுக்கிட்டேன். சுந்தர் சி யும், உள்ளத்தை அள்ளித்தாவில் வகை தொகையில்லாமல் பழைய படங்களின் நகைச்சுவையைக் கையாடியிருப்பார். சினிமா உலகில் இது சகஜம்தான்.
நீக்குநான் எதையுமே எடுத்த இடத்தில் திரும்ப வைக்கும் வழக்கம் உள்ளவள் என்பதால் அதிகம் தேட மாட்டேன். சில சமயங்களில் எனக்கு உதவுகிறேன் பேர்வழினு ரங்க்ஸ் எங்கேயானும் தூக்கி வைச்சுடுவார். அப்போத் திருதிரு! :)))))
பதிலளிநீக்குஆம்... எப்போதுமே நாம் வைப்பதை இன்னொருவர் மாற்றி வைப்பதால்தான் பிரச்னை!
நீக்குஅனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... வணக்கம்.
நீக்கு//அம்மா ஈஸிசேரில் உட்கார்ந்துகொண்டு அவரையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தவர் "கண்ணாடியைக் கழட்டி விட்டு தேடிப் பாருங்களேன்" என்றார்! அப்பா சிரித்து விட்டார்.//
பதிலளிநீக்குபடிக்கவே நன்றாக இருக்கிறது. அம்மா சொல்லியவிதம்
நன்றி கோமதி அக்கா.
நீக்குவாயுபுத்திரன் சாவி என்று நினைக்கிறேன். அவர் நிறைய பேரில் எழுதி இருக்கிறார் கதைகள் என்று படித்த நினைவு.
பதிலளிநீக்கு12:45
நீக்குஇப்படித்தான் என்னமோ ஒரு புரோகிராம் பார்த்தேன்..
நீங்கள் சொல்லியபிறகு அப்படியும் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. 1960 விகடன்.
நீக்கு//12:45
நீக்குஇப்படித்தான் என்னமோ ஒரு புரோகிராம் பார்த்தேன்..//
அபுரி அதிரா!
கோமதி அக்கா சொன்னதைப்போல ஏதோ ஒரு புத்தக வெளியீடோ என்னமோ ஒரு நிகழ்வில் யூ ரியூப்பில் இந்த வாயுபுத்திரன் என பெயர் கேள்விப்பட்டது போல எனக்கும் மனதில் வருது என்றேன் ஶ்ரீராம்
நீக்குமறுபடி கிடைத்தால் கண்டுபிடித்துச் சொல்லுங்கள் அதிரா...
நீக்குஅபிஷ்டு அர்த்தம் அருமை.
பதிலளிநீக்குஅதற்கு வந்த மஞ்சுபாஷிணி, கீதா பின்னூட்டங்கள் ரசிக்க வைத்தது.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குஆம். அதனால்தான் பகிர்ந்து கொண்டேன். நன்றி அக்கா.
நீக்குஆசிரியர், மாணவன் ஜோக் நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குபிலஹரி அவர்கள் கதை படிக்க காத்து இருக்கிறேன்.
நன்றி... இன்னும் ஏழே நாள்!
நீக்குமறதியும், மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு வரம்...!
பதிலளிநீக்குகவிதை அருமை... அனுஷ் கண்...?
எழுத்தாளர் வாயுபுத்திரன் https://tamil.pratilipi.com/-ல் ஒரு கட்டுரையில் வாசித்த ஞாபகம் உள்ளது... மற்றபடி எனக்கு தெரிந்தது அனுமன்...!
ஆஆஆ அப்போ கம்பராமாயண சொற்பொழிவில்தான் மீயும் கேட்டேனோ ஹா ஹா ஹா
நீக்குஅனுமன் தான் எனக்குத் தெரியுமே... இவர் யார் என்று தெரியவில்லையே... நன்றி DD.
நீக்குடிடி யெஸ் மறதி பல சமயங்களில் நான் வரப்பிரசாதம் என்றே நினைப்பேன்!!! அப்படி நினைத்து என்னை நானே உற்சாகப்படுத்திக் கொள்வேன்.
நீக்குபின்னெ இந்த மறதி இருப்பதால்தான் ...1990ல ........இந்தக் கலர் புடவை கட்டிட்டு.....அந்த ஜன்னல்ல உக்காந்துகிட்டு இப்படிப் பேசினாங்க..யார் என்ன சொன்னாங்க.ன்னு எல்லாம் வருஷக் கணக்கா மனசுல சுமந்துக்கிட்டு, சண்டை போடாம, மனத்தாங்கல் இல்லாம ராத்திரி படுத்தா நிம்மதியா உறங்க முடியுது!!!!!!!!! அந்த நிமிடத்தோடு சரி அப்புறம் எல்லாம் புஸ் வானம் தான்!!!!!!!!!
கீதா
உண்மை, உண்மை கீதா. நன்றல்லது அன்றே மறப்பது நன்று. ஆனால், கூடவே நன்றும் மறந்து போகிறதே!
நீக்கு//மறதி பல சமயங்களில் நான் வரப்பிரசாதம் என்றே நினைப்பேன்!!//
நீக்குநன்றி மறத்தல் நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
அதுனால மறதி எப்போ எப்போ நல்லதுன்னு இருக்கு. இன்னொண்ணு, ஒருத்தருக்கு நாம செஞ்ச கெடுதலை அவங்க மறந்துடறாங்க, மனசுல வச்சுக்கலை என்றால், கெடுதல் செஞ்சவங்க மீண்டும் மீண்டும் கெடுதலைச் செய்யத் துணிவாங்க.
என் பின்னுட்டம் காக்கா ஊச்இருந்தாலும் மறுபடியும் . மறதி என்பது நமக்கு ஈடுபாடு இல்லா விட்டல் வரும் மற்றபடி வயதாகும்போதும் வர்லாம் age activated attention deficit diaorder ஒரு பதிவே எழுடி இருக்கிறேன் பார்க்கhttps://gmbat1649.blogspot.com/2013/05/
பதிலளிநீக்கு// என் பின்னுட்டம் காக்கா ஊச்இருந்தாலும் //
நீக்குஅபுரி ஜி எம் பி ஸார். இப்பொப்பின்னூட்டம் போட்டு அது காக்கா உஷ் ஆச்சு?
AAADD பற்றி படித்து ரசித்து வந்தேன்.
// இப்பொப்பின்னூட்டம் போட்டு//
நீக்கு*எப்போ பின்னூட்டம் போட்டு?
இம்முறை இது வியாழன் பதிவோ என மயங்கிட்டேன் தலைப்பு பார்த்து:) அவ்ளோ குட்டி ஹா ஹா ஹா.
பதிலளிநீக்குஅப்பாவுக்குப் பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறார் என்பது சரிதான் ஸ்ரீராம் வீட்டில்:)..
கண்ணாடியைப் போட்டுக்கொண்டே தேடுவதும், பொக்கட்டிலேயே மொபைலை வைத்துக்கொண்டு தேடுவதும் பெரும்பாலும் நடப்பவைதான் அனா ஶ்ரீராம் மொபைலில் பேசிக்கொண்டே தேடியிருக்கிறாரே:) அப்போ நீங்கதான் ரொப்பூஊஊஊ கீதா ரெங்கன் உங்களுக்குப் பிறகுதான் ஹா ஹா ஹா.
இவ்வளவு சின்னத்தலைப்பு வைத்ததில்லையோ நான்? அப்பாவின் ஜீன் என்னிடமும் இருக்கும்தானே? நானே நிறைய உணர்வேன்!
நீக்குபாவம் ஏமாற்றப்பட்ட “காதல்” ஹா ஹா ஹா:).
பதிலளிநீக்குவாயுபுத்திரன் பற்றி நானும் எங்கோ யூரியூப்பில் பார்த்த நினைவு... அது என்ன நிகழ்வு என நினைக்க வருகுதில்லை.
யு டியூபில் வாயு புத்திரனா? அது அக்னிபுத்திரனாய் இருக்கும்!
நீக்குவாயுபுத்திரன் பற்றி நானும் எங்கோ யூரியூப்பில் பார்த்த நினைவு... அது என்ன நிகழ்வு என நினைக்க வருகுதில்லை//
நீக்குஹா ஹா அதிரா அப்ப நீங்களும் எங்க லிஸ்டா?!!!
நீங்க பாத்திருப்பது அர்ஜுன் சார்ஜா நடித்த படமாக இருக்கும் ஹிஹிஹி...அவர் நடித்த ஒரு படத்தில் வாய்புத்திரன்னு கேரக்ட்டர்னு இப்ப வாயுபுத்திரனை தேடிய போது கூகுள் மாமி சொல்லியது!!!!!வாயுபுத்திரன்னு போட்டாலே அர்ஜுன் சார்ஜா வல்லக்கோட்டை (அப்படி ஒரு படம் போல!!!) தான் வருது!!
கீதா
அப்படியா? அந்தப்படத்தில் அர்ஜுன் பெயர் வாயுபுத்திரனா? விக்ரம் படத்தில் ஏவுகணை பெயர் அக்னிபுத்திரன்!
நீக்குஓ ஊடிக்குறிப்புக்காக மீயும் வெயிட்டிங்:).. தொடரப்போகும் கதைக்குச் சொன்னேன்:)
பதிலளிநீக்குகாத்திருங்கோ... காத்திருங்கோ... வரும்!
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குமனோபிஷ்டம் என்ன வார்த்தைக்கு அர்த்தம் நானும் அந்த காலத்தில் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால் அபிஷ்டுவின் அர்த்தம் புதியதானது. பொதுவாக ஒன்றும் தெரியாமல், புரியாமல் "நே" என்று இருப்பவர்களை "போடா அபிஷ்டு இது கூட தெரியாதா?" என்று சொல்வார்கள். ஒரு வேளை எதையும் கடந்த நிலையில் இருப்பவர்கள்தான் அப்படி மெளனம் காப்பார்களோ.. ? மெளனம் ஒரு மோனநிலைக்கு சமானந்தானே..! அதனால்தான் பெரியவர்கள் "எதையும் பேசிக் கெடுப்பதை விட மெளனமாக, அமைதியாக இரு" எனச் சொல்வார்கள்.போலும்..! இன்று நல்ல சிந்தனைக்கு தங்கள் பதிவு உதவியது.
அதற்கு வந்த கருத்துரைகளும் அழகாக உள்ளது.
கவிதை அருமை.. காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். ஆனால் கண் விழி வழியாக வந்த காதல்தான், காதல் மனங்கள் பிரிந்து சென்ற பின்னும். அந்த காதலுக்காக கசிந்துருகி கொண்டிருக்கின்றன. கவிதை நன்றாக உள்ளது.
வாயு புத்திரன் என்ற எழுத்தாளர் கதைகளை நானும் படித்ததாக நினைவு. அது யாருடைய புனைப் பெயர் என்று தெரியவில்லை. யாராவது இப்பதிவில் கூறினால் நன்று.. நானும் அறிந்து கொள்ள காத்திருக்கிறேன்.
மாணவன் நகைச்சுவை அருமை. யதேச்சையாக தப்பிக்க கூறினாலும், யதார்த்தமாகத்தான் சொல்லியுள்ளான்.
பிலஹரி அவர்கள் எழுதிய கதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வியாழன் கதம்பத்தில் தலைப்பிடாத தாங்கள் எழுதிய கதைக்கு என்ன தலைப்பு வைத்தீர்கள் என நாங்களும், இதுவரை கேட்கவில்லையே.. !ஒருவேளை கதையின் முடிவு அன்றைக்கு நீங்கள் பின்னூட்டங்களில் தெரிவித்து விட்டீர்களோ? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலாக்கா... நீங்கள் சொன்னபிறகு அந்த மனோபீஷ்டம் என்கிற வார்த்தை கேட்டது போலதான் தெரிகிறது. ஆனால் அதற்கு அழகாய் விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்.
நீக்குகவிதைப் பாராட்டும் அதற்கான விளக்கமும் ரசித்தேன். வாயுபுத்திரனின் வேறு கதைகளை படித்திருக்கிறீர்களா?
நகைச்சுவையை ரசித்ததற்கு நன்றி.
பிலஹரி கதை அடுத்த வாரம் எதிர்பாருங்கள். நீங்கள் சொல்லும் அந்தக் கதைக்குகடைசி வரை நான் தலைப்பே வைக்கவில்லை!
நான் சாதாரணமாக வைப்பது போல வைத்து விட்டால் கவலை இல்லை, பத்திரமாக வைக்க வேண்டும் என்று நினைத்து வைத்த பொருள்களைத்தான் எங்கே வைத்தேன் என்று தெரியாமல் தேடோ தேடு என்று தேடுவேன். டூ வீலரில் செல்லும் பொழுது சில சமயங்களில் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கிறேனா என்று சந்தேகம் வந்து விடும்(கண்ணாடியை அப்படி சுத்தமாக வைத்துக் கொண்டிருக்கிறேன்) சற்றே தலையை சாய்த்து உறுதி செய்து கொள்வேன்.
பதிலளிநீக்குவாங்க பானு அக்கா... நீங்கள் சொல்வதுபோல சும்மா வைக்கும் பொருள்களை கூட உடனே தேடி எடுத்து விடுவேன். கவனமாக பத்திரமாக வைத்த பொருளைதான் ரொம்பத் தேடவேண்டும்!
நீக்குஹையோ அதே தான் ஸ்ரீராம். கண்டிப்பாக நம்ம ரெண்டு பேருக்கும் பெரிய போட்டியே வைத்துவிடலாம்னு தோணுது. ஹா ஹா ஹா ஹா...
நீக்குஆனா தளத்துல வாசிப்பது பெரும்பாலும் நினைவு இருக்குதே!!!! ரொம்ப தெளிவாக இல்லைனாலும்!!!!!!
கீதா
@பானுமதி வெங்கடேச்வரன் - நல்லவேளை கண்ணாடி சந்தேகம்தானே வந்தது. டூ வீலர் எங்க வச்சோம்னு சந்தேகம் வரலையே. அப்படி வந்தால்தான் ஆச்சர்யமா இருந்திருக்கும்.
நீக்குஆமாம் கீதா... நாம் எதெதை மறக்கிறோம்? எதெதை மறப்பதில்லை?
நீக்குஹா... ஹா... ஹா... நெல்லை... பயங்கரமா சிரித்து விட்டேன். முன்னால் குமுதத்தில் "சஞ்சீவியின் சந்தேகங்கள்" என்ற ஒரு ஜோக் செக்ஷன் வருமே, நினைவிருக்கா?
நீக்குகாதல் கவிதையை முன்னரே படித்தது போல இருக்கிறது. வாயுபுத்திரன் யார் என்று தெரியவில்லை.
பதிலளிநீக்குகாதல் கவிதையை ஒருதரம் அதிரா தளத்தில் சொன்னது போல நினைவு.
நீக்குஸ்ரீராம் பாஸ்வேர்டை மறக்க மாட்டீர்களா?
பதிலளிநீக்குஅந்த ரகசியத்தை நான் சொல்ல மாட்டேன்!
நீக்குஅனுஷ்காவிற்கும் இன்றுதான் பிறந்த நாளா? வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஆமாம். கேஜிஜிதான் ஞாபகப்படுத்தினார்.
நீக்குகமலுக்கும் அனுக்காவுக்கும் பிறந்தநாளா இன்று !
நீக்குஆமாம் ஏகாந்தன் ஸார்...
நீக்குஞாபக மறதி ஒரு வியாதியா என்று ஒரு பதிவு எழுதி வைத்திருந்தேன். அதை வலையேற்ற மறந்தே போனேன். உங்கள் பதிவைப் பார்த்ததும் அதை வலையேற்றவேயில்லையே என்பது நினைவுக்கு வந்தது. மறக்காமல் விரைவில் வலையேற்றவேண்டும்!
பதிலளிநீக்குஎடுத்ததை வைத்த இடத்தில் தான் தேடணும் என்பார்கள். அது தெரிந்தால் தேடவே தேவையில்லையே!
வாங்க ஜோஸப் ஸார்...
நீக்குஉங்கள் முதல் பாராவுக்கு ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.
"மறதிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்னு சொன்னீங்களே... இப்போ பரவாயில்லையா?"
"ரொம்பப் பரவாயில்லை"
"அப்படியா? சந்தோஷம்... அந்த மாத்திரை பெயர் என்ன?"
"அதுதான் மறந்து விட்டது"
மறதி பற்றி எழுதி வைத்த பதிவே மறந்து விட்டது விசேஷம் ஜோஸப் ஸார்... உங்கள் இரண்டாவது பாராவுக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.. "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி..."
நீக்கு/"அப்படியா? சந்தோஷம்... அந்த மாத்திரை பெயர் என்ன?"//
நீக்கு"எந்த மாத்திரை?"
"அதான் மறதிக்கு சாப்பிடறேன்னு சொன்னீங்களே"
"யாருக்கு மறதி? புரியலையே"
ரெண்டு பேர் பேசிக்கற மாதிரி ஜோக் அது நெல்லை. முதலாமவர் மறதிக்கு மாத்திரை சாப்பிடும் நபரிடம் விசாரிக்கிறார். அதற்கும் வரும் பதில் அது... ஆண்டவா... இப்படி நோட்ஸ் போட்டால் ஜோக் என்னாகும்?!!
நீக்குமுழு ஜோக் கீழே
நீக்கு"மறதிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன்னு சொன்னீங்களே... இப்போ பரவாயில்லையா?"
"ரொம்பப் பரவாயில்லை"
"அப்படியா? சந்தோஷம்... அந்த மாத்திரை பெயர் என்ன?"
"எந்த மாத்திரை?"
"அதான் மறதிக்கு சாப்பிடறேன்னு சொன்னீங்களே"
"யாருக்கு மறதி? புரியலையே"
ஹா ஹா ஹா:)).. இதுதான் நான் போட்டது போலவும்,
நீக்கு*எனக்கு எந்தப் பிரச்சனையானாலும் உடனே மறந்து போயிடுது டொக்டர், என் பிரச்சனைக்கு ஏதும் மருந்து குடுங்கோ?
அப்படியா உங்கட பிரச்சனை என்ன?
எந்தப்பிரச்சனை டொக்டர்?..
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவில் இணைப்பாக கூட வந்து இணைந்திருக்கும் பிறந்த நாள் செய்தியை இப்போதுதான் பார்த்து அறிந்து கொண்டேன். இன்று நவம்பர் ஏழு இல்லையா? என் ஏழும் சமயத்தில் எனக்கு மறந்து விடும். அனுஷ்கா அவர்களுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள். அவருக்கு வலைத்தளங்கள் மூலமாக இப்படி வாழ்த்துகள் வருவது அறிந்தால் சந்தோஷமடைவார். ஆனால் அறிவாரா?
தங்கள் பாஸுக்கும் நேற்று பிறந்த தினமென்றும் பின்னூட்டங்களை படித்து அறிந்தேன். என்னுடையது தாமதமான வாழ்த்துகள் என்றாலும், என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்களை அவருக்கும் தெரிவியுங்கள். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
//என் ஏழும் சமயத்தில் எனக்கு மறந்து விடும். //
நீக்குகமலா அக்கா....ஓ... உங்கள் பிறந்த நாளும் ஒரு ஏழாம் தேதிதான் வருமா? என் அம்மாவின் பிறந்த நாளும் ஏழாம் தேதிதான். ஏப்ரல் ஏழு.
உங்கள் வாழ்த்துகளை பாஸுக்கு சொல்லி விட்டேன்.
எனக்கும் அதே ஏப்ரல் ஏழுதான்..
நீக்குக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நானும் நேத்திய பதிவிலேயே பாஸுக்கு வாழ்த்துச் சொல்லி இருந்தேன். :))))
நீக்குவாயுபுத்திரனை நானும் கூகுளில் தேடினேன் ஸ்ரீராம் எனக்குக் கிடைத்த ஒன்றே ஒன்று இதுதான். எர்ணாகுளம் பொது நூலகத்தில் கூட இப்புத்தகம் இருக்கிறது.
பதிலளிநீக்குNEETHI THOONGATHU
by Vayuputhiran.
Edition: 0
Publisher: Amudham ; 1987/04/17
Availability: Items available for loan: Ernakulam Public Library [TA VAY/NE] (1).
இந்தத் தகவல்மட்டுமே கிடைத்தது.
கீதா
ஓ... அங்கு கூட கிடைக்கிறதா?
நீக்குஅட..கடைசிப் பகுதி (அனுஷ்கா) இப்போதான் பார்க்கிறேன். காலையில் இருந்த மாதிரி நினைவில் இல்லையே.... ஜொள்ளுக்கு அளவில்லையா?
பதிலளிநீக்கு:))
நீக்குநெல்லை!!! கௌ அண்ணா ஸ்ரீராமை நினைவு படுத்தி!!!! வாழ்க கௌ அண்ணா!! ஹா ஹா ஹா ஹா
நீக்குஉங்களுக்குப் பொற்ற்ற்றாமை!!! பதிவு கூடுதலா ஒளிருது பாருங்க அந்தச் சிரிப்புலன்னு!!!!! ஹா ஹா ஹா தமன்னாக்கா பிறந்த நாள் எப்பன்னு கௌ அண்ணாகிட்ட சொல்லிவைங்க!!!!!!!!!!!!!!!!
ஹையோ நெல்லை என்னைத் துரத்த வரதுக்குள்ள மீ ரன்னிங்க்!
கீதா
ஞாபகப்படுத்தியதும் தவறை நேர் செய்தது ஜொள்ளில் சேருமா? கிர்ர்ர்ர்.....
நீக்குகேஜிஜி தயவில் இன்னிக்கு ஸ்ரீராம் அனுக்கா/அபிஷ்டுக்கா? படம் போட்டு ஜென்ம சாபல்யம் அடைஞ்சுட்டார் போல!
நீக்குஆ ஆ ஆ இன்று அனுஷ் பிறந்தநாளா?!! அதுவும் பா ரசிகர் கௌ அண்ணா நினைவு படுத்தி!!!! இட்ஸ் டூ பேட்...அரம வின் ஆஸ்தான தலைவர் ஸ்ரீராம் இதை மறப்பது நியாயமா?!!! (அது 2015 நு தெரியுது...அதான் இப்ப ஞாபகமா போட்டுட்டீங்களே!!! இதெல்லாம் நமக்குமறக்காது பாருங்க ஸ்ரீராம்!!!!!!!!!
பதிலளிநீக்குகீதா
haa haa 100/100 !
நீக்குநான் என் அரம பதவியை ராஜினாமா செய்கிறேன்!
நீக்குநவம்பரில் (1-20ம் தேதிக்குள்) பிறந்தவங்க தனிதான். அந்த குரூப்பில் அனுஷ்காவும் இருப்பது மகிழ்ச்சி. ஹா ஹா.
பதிலளிநீக்குநெல்லை இன்னா சம்ம்மாளிப்பு!!!!!!!
நீக்குகீதா
அதுக்காக டிசம்பர்ல பிறந்தவங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது. என் பையனும் டிசம்பர்தான் (பெண் நவம்பர்). ஹா ஹா
நீக்குடிசம்பர் ஒன்று எபி தலைமை ஆசிரியர் பிறந்தநாள்!
நீக்குயாரு? கேஜிஒய்?
நீக்குகண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டுத் தேடுங்களேன்
பதிலளிநீக்குவயதானால் இப்படித்தானே
ஆமாம் நண்பர் கரந்தை ஜெயக்குமார் ஸார்... நன்றி.
நீக்குபொதுவாக மறதி இல்லை எனக்கு. அதுவும் ஆசிரியப் பணியில் இருப்பதால். என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் குறித்து வைத்துக் கொண்டு விட்டு அது நடக்கும் வரை மனம் வேறு எதிலும் செல்லாமல் வைத்துக் கொண்டுவிடுவதால் காரியங்கள் மறப்பதில்லை.
பதிலளிநீக்குஆனால் சின்ன சின்ன விஷயங்கள் நான் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போகும் சமயங்களில் மறந்து போவதும் உண்டு. ஆனால் அது எப்போதேனும். பொருட்களுக்கும் அதே தான்.
காதல் கவிதை அம்சமாக இருக்கிறது ஸ்ரீராம்ஜி! மிகவும் ரசித்தேன்.
அபிஷ்டு என்பதன் அர்த்தம் இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
ஜோக்கையும் ரசித்தேன். கதை அடுத்த வாரம் தொடங்குகிறது இல்லையா? வாசிக்கக் காத்திருக்கிறேன்.
துளசிதரன்
ஆசிரியர் மறதியாய் மாற்றி பாடம் எடுக்கலாம்!
நீக்குகவிதையை(யும்) ரசித்ததற்கு நன்றி துளஸிஜி.
மறதி குறித்து கேள்விகள் நேற்று கேட்டிருந்தேன். இன்று உங்கள் பதிவில் ஆரம்பமே மறதி குறித்து எழுதியிருக்கின்றீர்கள்! கோஇன்சிடென்ஸ்.
நீக்குதுளசிதரன்
அடடே....
நீக்கு//சாப்பிடும்போது அலைபேசினால் பாஸுக்குப் பிடிக்காது. கைஜாடை காட்டி இன்னும் வேணும்... போதும் என்றெல்லாம் காட்டினால் கோபம் வரும். //
பதிலளிநீக்குயாருக்குத்தான் பிடிக்கும் சாப்பிடும்போது அதுவும் வீட்டம்மா அன்பா அருமையா அனுசரணையா சமைச்சி இருப்பாங்க அந்த நேரம்பார்த்து யாராவது தொல்லை பேசினா :) கோபம் வரத்தானே செய்யும் .அஃதில்லாமா சாப்பிடும்போது பேசுவது நல்ல பழக்கமுமில்லை .ஆரம்ப காலத்தில் சொல்லி பார்த்தேன் என் கணவருக்கு பிறகு நானே ஆக்ஷனில் இறங்கிட்டேன் :) அது லாண்ட்லைனை இவர் சாப்பிட்டு முடியும் வரைக்கும் மெயின் சுவிட்ச் அணைச்சு வச்சிடுவேன் :)அலைபேசில்லாம் தொட மாட்டார் இவர் .
/ "கண்ணாடியைக் கழட்டி விட்டு தேடிப் பாருங்களேன்" என்றார்! அப்பா சிரித்து விட்டார்./
பதிலளிநீக்குஹாஹா செம :)
மஞ்சுசுபாஷிணி ..அறிவேன் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் ரசித்து விவரித்து எழுதியிருப்பார்
கவிதை ..சூப்பர் ..
வாயுப்புத்திரன் எழுத்தாளர் எனக்கும் கண்டுபிடிக்க முடியலை .
திருமதி ஸ்ரீராமுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .